மரணத்திற்கு முன்னைய வாக்குமூலம் - அமீருடனான நேர்காணல் : ரி கொன்ஸ்ரன்ரைன்
Thanks
http://thesamnet.co.uk/?p=29
படுகொலைகள், அழிவுகள் என தமிழினம் நாளாந்தம் இருளை நோக்கத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. இருபது வருடங்களுக்கு முன் 1987 யூலை 21ல் கைச்சாத்திடப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தமே தமிழ் மக்களுக்கு கூடுதல் அதிகாரத்தை சட்டபூர்வமாக வழங்கிய ஒப்பந்தமாக உள்ளது. அதiயாவது நடைமுறைப்படுத்தக் கூடாதா என தமிழ் மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் ஒப்பந்தத்தை எதிர்த்தனர். இந்தியப் படைகளுடன் மோதினர். 1,300 வரையான இந்தியப் படையினர் கொல்லப்பட்டனர். பல நூற்றுக் கணக்கான போராளிகளும், பல்லாயிரக் கணக்கான பொது மக்களும் கொல்லப்பட்டனர். 1990 மார்ச்சில் இந்தியப் படையினர் இலங்கையைவிட்டு வெளியேறினர். ஒப்பந்தத்தை உருவதக்கிய ராஜீவ்காந்தியையும் விடுதலைப் புலிகள் 1991 மேயில் படுகொலை செய்தனர். 2002ல் அதனை துன்பியல் சம்பவம் என்றனர். 2006ல் அன்ரன் பாலசிங்கம் அதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். இன்று 20 வருடங்களுக்குப் பின் இந்தியா உதவ வேண்டும் என விடுதலைப் புலிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் ஈரோசையும் தூதுவிடுகின்றனர்.
ஒரு காலத்தில் ‘அமீர் அண்ணா! தம்பி பிரபா!’ என்றிருந்தவர்கள்; 1989 யூலை 13ல் தம்பியின் படைகள் அமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்டினர். அமிர்தலிங்கத்தை இல்லாமல் செய்தவர்களால் அவர் விட்ட இடத்தில் இருந்து முன்நோக்கிச் செல்ல முடியாவிட்டாலும் அவ்விடத்திலே யாயினும் நின்று பிடிக்க முடியவில்லை. படுகொலை செய்யப்படுவதற்கு எட்டு மாதங்களுக்கு முன் அமிர்தலிங்கம் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் 20 வருடங்கள் ஆகும் நிலையில் இன்று நிஜமாகி வருகிறதா?
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய தலைவர் அமிர்தலிங்கத்துடனான இப்பேட்டி முன்னர் யாழ்ப்பாணத்தில் வெளியாகிய ஈழமுரசு பத்திரிகைக்காக 11 நவம்பர் 1988ல் அமிர்தலிங்கம் லண்டன் வந்திருந்தபோது எடுக்கப்பட்டது. நான் ஈழமுரசு முதற் தடவையாக வாரப்பத்திரிகையாக யாழ்ப்பாணத்தில் வெளியாகியபோது பணியில் சேர்நதேன். லண்டன் வந்த பின்னரும் தொடர்ச்சியாக எழுதி வந்தேன். ஈழமுரசு பத்திரிகை பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் பலாத்காரமாகக் கையகப்படுத்தப்பட்டு அவர்களால் நடத்தப்பட்டது. புலிகள் அப்பத்திரிகையைக் கையகப்படுத்தும் வரை அதன் சிறப்பு நிருபராகக் கடமையாற்றினேன். ஈழமுரசு பத்திரிகையை கையகப்படுத்திய விடுதலைப் புலிகள் அப்போது எடுக்கப்பட்ட இந்த நேர்காணலை வெளியிட மறுத்ததால் அது இதுசரை எங்கும் பிரசுரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈழமுரசு பத்திரிகையின் உரிமையாளர் திரு மயில் அமிர்தலிங்கம் அவர்கள் பின்னர் விடுதலைப் புலிகளினால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். மயில் அமிர்தலிங்கம் (TULF தலைவர் அ. அமிர்தலிங்கத்துக்கு எந்தவிதத்திலும் சொந்தம் இல்லாதவர்). அப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட உறுப்பினராக இருந்ததுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஊர்காவற்றுறையில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியும் கண்டவர்.
அப்போது ஈழமுரசுவின் பிரதம ஆசிரியராக எஸ்.தி. என்றழைக்கப்பட்ட எஸ்.திருச்செல்வம் அவர்கள் கடமையாற்றினார். பின்னர் இவர் முரசொலி பத்திரிகையின் ஆசிரியராக்க கடமையாற்றினார். அப்போது இந்தியப்படையின் ஆதரவுடன் செயற்பட்ட EPRLF அமைப்பினர் எஸ்.திருச்செல்வத்தின் ஒரே மகன் அகிலனை மனிதநேயமின்றிச் சுட்டுக்கொன்றனர். EPRLF இனர் எஸ்.திருச்செல்வத்தைக் கொலைசெய்ய அவரது வீட்டுக்கு வந்தபோதே, அங்கு அவர் இல்லாத காரணத்தினால் அவரது மகனை அழைத்துச் சென்று சித்திரவதை செய்து கொலைசெய்தனர். தற்போது திருச்செல்வம் தம்பதியினர் கனடாவில் ரொரன்ரோவில் தமிழர் தகவல் என்ற மாத இதழை நடத்திவருகிறனர்.
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
கொன்ஸ்: அண்மையில் நடந்து முடிந்த மாவட்ட சபைத் தேர்தல் முடிவுகளை ஒரு ஜனநாயக முடிவாக நீங்கள் ஏற்றக்கொள்கின்றீர்களா?
அமீர்: இம்முடிவுகளை ஒரு முழுமையான ஜனநாயக முடிவாக ஏற்க முடியாவிடினும் ஒரு ஜனநாயக அமைப்பு முறைக்குள் செல்லக்கூடிய ஒரு சந்தர்ப்பமாகவே கருதுகின்றேன். எது எப்படி இருப்பினும் இந்தத் தேர்தலை நாங்கள் தவிர்த்திருக்க முடியாது. அது யதார்த்தமில்லை.
கேள்வி: எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் கலந்துகொள்ள வேண்;டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?
கொன்ஸ்: ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் கலந்து கொள்வதைப் பற்றிய ஒரு முடிவிற்கு நாம் இன்னமும் வரவில்லை. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் SLFP சார்பில் போட்டியிடும் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா எங்களைச் சந்தித்த போதிலும் தமிழரின் பிரச்சினை குறித்த தனது நிலைப்பாட்டை விரிவாகத் தெளிவுபடுத்தவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் பிரேமதாசா இன்னமும் எங்களைச் சந்திக்கவில்லை. கூட்டு முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஒசி குணவர்த்தனா மட்டுமே என்னுடன் அக்கறையுடன் விரிவாகப் பேச்சில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலைமையில் நாங்கள் தேர்தலில் பங்குபற்றுவதைப் பற்றியோ அல்லது யாரை ஆதரிப்பது என்பது குறித்தோ எவ்வித முடிவுக்கும் வரமுடியாதுள்ளது.
கொன்ஸ்: புதிய ஜனாதிபதி தேர்வுசெய்யப்பட்டதும் இந்திய இராணுவம் இலங்கையிலிருந்து வெளியேற வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்படுமா?
அமீர்: பிரேமதாசா அவர்களும் திருமதி பண்டார நாயக்காவும் தற்போது இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இந்த உறுதி தேர்தலின் பின்பும் நிலைக்குமா என்பது எனது சந்தேகமே. நான் முக்கிய இந்திய இராஜதந்திரி ஒருவருடன் பேசியபோது, ‘தமிழ் மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் இந்திய இராணுவம் தொடர்ந்து இங்கு இருக்கவேண்டும் என்று உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் விடுத்தால் இந்திய இராணுவம் தொடர்ந்தும் இருக்கும்’ என்று குறிப்பிட்டார். ‘ஜுலை 87இல் கைச்சாத்திடப்பட்ட ராஜீவ் - ஜே.ஆர். ஒப்பந்தப்படி தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா தமது பூரண உத்தர வாதத்தை அளித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழ் முதலமைச்சரின் உத்தியோகபூர்வமான கோரிக்கைக்கு நாம் கட்டாயம் கடமைப்படுவோம்.’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொன்ஸ்: இந்திய இராணுவம் வெளியேறுவதைப் பற்றிய உங்களின் தனிப்பட்ட அபிப்பிராயம் என்ன?
அமீர்: இந்திய இராணுவம் வெளியேறினால் சிறிலங்காவின் இராணுவத்தினரின் அட்டகாசம் மீண்டும் தலைதூக்கும். தமிழர்கள் கட்டாயம் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவர். இது குறிப்பாக வவுனியா, திருகோணமலைப் பகுதியில் அதிகமாக இடம்பெறும். இந்திய இராணுவம் தற்போது வெளியேறக்கூடாது என்பதில் நாம் மிக மிக உறுதியாகவும் இருக்கிறோம். தமிழ்; பகுதிகளின் பொலிஸ் பிரிவு தமிழ் மக்களால் எற்படுத்தப்பட வேண்டும். தமிழர்களுக்கான பூரண பாதுகாப்பை உறுதி செய்துவிட்டே இந்திய இராணுவம் வெளியேற வேண்டும். எங்களால் சிங்கள அரசாங்கத்தையும் அதன் இராணுவத்தையும் நம்பவே முடியாது.
கொன்ஸ்: இந்திய இராணுவத்தை ஸ்ரீலங்காவில் வைத்திருப்பதைப் பற்றி இந்திய அரசாங்கத்தின் நிலையில் ஏதும் மாற்றம் வரச் சாத்தியமுள்ளதா?
அமீர்: ஆம் உங்களின் கேள்வி எனக்குப் புரிகின்றது. எதிர்வரும் இந்தியப் பொதுத் தேர்தலை மனதில் வைத்து ராஜீவ் காந்தி சிறிலங்காவுக்குள் சென்ற விடயத்தை கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது. சகல இந்திய எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் நான் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை அனைத்துக் கட்சிகளும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு தமது பரிபூரண ஆதரவை தெரிவித்து உள்ளனர். ஆகவே, இந்தியாவின் ஆட்சி மாறினாலும் தற்போதுள்ள நிலைமையில் எதுவித மாற்றமும் இருக்காது.
கொன்ஸ்: தற்போது தமிழ் நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் மு.கருணாநிதி இந்திய இராணுவத்தின் இலங்கை நிலைப்பாட்டைக் கடுமையாகக் கண்டித்து வருகிறாரே. கருணாநிதி பதவிக்கு வந்தால் இதே நிலைப்பாட்டைத் தொடர்ந்து கடைப்பிடிப்பாரா?
அமீர்: தற்போது கலைஞர் கருணாநிதி கூறும் வேகத்தில் அவர் பதவிக்கு வந்ததும் கூறமாட்டார். அவரை நான் பல முறை சந்தித்துவிட்டேன்.
கொன்ஸ்: ஜேவிபி இனுடைய அண்மைய போக்குப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்;?
அமீர்: தேர்தல் முறையை பகிஸ்கரித்து தனிக் கட்சி ஆட்சியை நிறுவுவதே அவர்களுடைய நோக்கம். தமிழர்களைப் பொறுத்தவரை இவர்கள் ஆபத்தானவர்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு எதிராகவும் தவிகூட்டணிக்கு எதிராகவும் இவர்கள் அண்மைக்காலமாகச் செய்துவரும் பிரச்சாரம் மோசமானது.
கொன்ஸ்: தமிழ் பகுதிகளில் இலங்கை அரசாங்கம் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை தற்போது ஏற்படுத்தி வருகின்றது என்ற தமிழ் ஆயுத அமைப்புகளின் குற்றச்சாட்டை உங்களால் உறுதிப்படுத்த முடியுமா?
அமீர்: எங்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி இந்தியப் படைகள் இலங்கைக்கு வந்தது முதல் எந்தக் குடியேற்றமும் நிகழவில்லை. தற்போது விரிவாகக் கதைக்கப்படும் குடியேற்றம் 1984 காலப்பகுதிகளில் மன்னார் - அம்பாறை மாவட்டங் களில் இடம்பெற்ற குடியேற்றமாகும். தற்போது அப்படி எந்தக் குடியேற்றமும் இடம்பெறவில்லை.
கொன்ஸ்: இந்திய இராணுவம் விடுதலைப் புலிகளை அழித்துவிடும் என நினைக்கிறீர்களா ?
அமீர்: சிலருடைய பிரச்சாரத்தைப் போல் இந்திய இராணுவம் புலிகளை அழித்துவிடும் நோக்குடன் இங்கு வரவில்லை. அவர்கள் புலிகளை அழித்துவிட முயற்சிக்கவும் இல்லை. அவர்கள் புலிகளுக்கு அழுத்தத்தையே வழங்கி வருகிறார்கள்.
கொன்ஸ்: வுருடுகு _ டுவுவுநு இணைந்து செயற்படுவதற்கான வேலைத்திட்டங்கள், இணையும் உடன்பாட்டுக்கான சாத்தியப்பாடுகள் உண்டா?
அமீர்: புலிகளுடனான உடன்பாடு மட்டும் தமிழ் சமூகத்திற்குள் ஒற்றுமையை ஏற்படுத்தும் என்று நான் நம்பவில்லை. அனைத்து தமிழ் அமைப்புகளுடனான புரிந்துணர்வும் நட்புமே உண்மையான ஜனநாயகத்திற்கான வழியாக இருக்கும். சிலர் நம்புவது போல் வுருடுகு _ டுவுவுநு உடன்பாடு தமிழ் சமூகத்திற்கு நன்மையாக முடியாது. மாறாக இப்போது உள்ள உட்குழு மோதலை தூண்டுவதாகவே இருக்கும்.
கொன்ஸ்: இப்போதுள்ள இலங்கை நிலைமையை கருத்திற்கொண்டு புலிகளுக்கு என்ன ஆலோசனை சொல்ல விரும்புகிறீர்கள்?
அமீர்: எங்களுடைய நண்பர்கள் யார்? எதிரிகள் யார் என்பதை நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்தியாவின் எதிர்ப்புடன் எங்களால் எதனையும் சாதிக்கவியலாது என்ற யதார்த்தத்தை புலிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில் புலிகள் இந்திய அரசுடன் ஒரு புரிந்துணர்விற்கு வரவேண்டும்.
புதியதோர் உலகம் – PUTHIYATHOR ULAGAM
15 years ago
No comments:
Post a Comment