மாற்றம் என்பது மாறாதது; இங்கே தோழமைதேடி...

Dec 25, 2009

தேசபக்தனுக்கு நன்றி

Thanks


http://thesamnet.co.uk/?p=13380



1. tax on June 29, 2009 7:32 am

சூப்பர் பின்னிட்டிங்க சார். மிக அருமையான கட்டுரை.
2. murali krishna on June 29, 2009 12:24 pm

we grew up with liberation tigers and tigers were jaffna high society boys and all the busines community were loved them.those days not many low income people were in tamil tigers and tigers were called porsuva at that time.military succes of tigers made them heros and they become dominant part.but this end is very sad.
3. நண்பன் on June 29, 2009 1:04 pm

தேசபக்தனுக்கு நன்றி. அருமையான கட்டுரை. பாராட்டுக்கள்.

கட்டுரையின் இறுதிப் பகுதியில் உள்ள //இப்படிப்பட்ட நிலைமையின் கீழ் மாற்று அரசியல் முன்னெடுப்புக்களை முன்னெடுக்க முனைபவர்கள் புலிகள் அமைப்பினுள் இருந்து அதன் கடந்தகால தவறான அரசியல் பாதைகளுடன் முறித்துக் கொண்டு, ஏனைய சக்திகளையும் இணைத்துக் கொண்டு, ஜனநாய பாதையில் போராட்டத்தை தொடர வேண்டுமென நினைப்பவர்கள் எமது இயல்பான நண்பர்களாவர். இந்த போக்கு எதிராக நிற்க முனைபவர்கள் ஒரு வரலாற்று ஓட்டத்தை தடுத்து நிறுத்த முனைபவர்கள் என்பதை வரலாறு விரைவில் நிரூபித்துவிடும். // இங்கே அவதானம் தேவை.

இது உள்ள விட்டு அடி வாங்கிய கதையாக மாறும். இது ஈகோவில் சொல்லும் கருத்தல்ல. நிஜமான அனுபவங்களின் பகிர்தல். அடிப்படை புலி ஆதரவாளர்களை இங்கே நான் குறிப்பிடவில்லை. கடந்த கால நிஜங்களின் நிழல்களும், தழும்புகளும் பலருக்கு தெரிந்திருக்கும் அல்லது தடவினால் வலிக்கும். பல அமைப்புகள் புலத்திலும் தாயகத்திலும் புலிகளது ஊடுருவலால் அழிக்கப்பட்டன.

ஆயுத கலாச்சார நோக்கம் கொண்டவர்கள், ஒரு நொடியில் மகாத்மாவாக முடியாது. அப்பாவிகளாக நினைத்து கை கொடுக்கப் போய் மிகுதியாக இருப்பவர்களும் அழிந்து போவதை விட இருக்கும் நல்ல உள்ளம் கொண்ட சிலர் நேர்மையாக பணியாற்றுவதே நாளைய தமிழருக்கு கை கொடுக்கும்.

இதைவிடுத்து அதிக உறுப்பினர்களை உள் வாங்கி பலம் பெற நினைப்பது என்னவோ பலவீனத்திலேயே முடியும். பின்னர் இதுவும் இன்னொரு நந்திக் கடல் சமாச்சாரமாவிடும். அதற்கும் நீங்களே இது போன்றதொரு இன்னொரு கட்டுரை வரைய வேண்டி வரும். சிலவேளை உங்கள் முடிவுக்காக வேறு யாராவது கட்டுரை வரையவும் நேரலாம். ஒரு மனிதனின் அடிமனதின் எண்ணங்களை உடனடியாக மாற்ற முடியாது. புலிகளோடு மாற்று இயக்கத்தில் பலர் கடந்த காலங்களில் இணைந்து செயலாற்றாததற்கு காரணம், கருத்து மற்றும் கொள்கை முரண்பாடுதான். அதே முரண்பாடு புலிகளது முக்கியமானவர்கள் இணையும் போது மீண்டும் தலைதூக்கி புலிகளிடம் பொல்லுக் குடுத்து அடி வாங்கும் கதையாகிவிடும்.

மாற்று இயக்கத்தில் இருந்தவர்களில் சிலர் புலிகளோடு இணைந்தார்கள் என்றால் , அது பலரது தனிப்பட்ட சுயநலம் மற்றும் ஒரு சிலருக்கு வேறு வழி இல்லாமால் போனது ஆகியவை தவிர்த்து சில இடங்களில் தெரியாமல் மாட்டுப்பட்டுப் போனார்கள் என்பதே உண்மை. தங்களுக்கு பலம் உள்ள போது புலிகள், புலி எதிர்க் கருத்தாளர்களை நடத்திய விதம் எவராலும் மறுக்கவோ அல்லது மறக்கவோ முடியாதது. ஆகக் குறைந்தது ஒரு சிறு விழாவைக் கூட புலிகள் அடுத்தவர்களை செய்ய விடவில்லை என்பது ஒரு மிகக் குறைந்த உதாரணம். அதை செயலிழக்க வைக்க வன்முறையையோ அல்லது பொய் பரப்புரைகளையோ செய்தார்கள். அதுவும் முடியாது போன போது அதை மேவும் விதமாக பெரியதொரு நிகழ்வை செய்து அந்த அப்பாவி நிகழ்ச்சியாளர்களை மண் கவ்வ வைத்தார்கள். இதனடிப்படையிலேயே புலத்திலும் எவராலும் எதையும் செய்ய முடியாமல் போனது. அரசியல் முன்னெடுப்புகள் பற்றியவை குறித்து பேச வேண்டியதில்லை.

கேபீயின் தகவல்கள் காரணமாக கேபீயை ஒதுக்கியவர்கள் அனுப்பிய ஆயுதக் கப்பல்கள் குறித்த தகவல்கள் இலங்கைக்கு சென்றதை நானறிவேன். இதையே கிட்டுவின் சாவுக்கும் செய்தார்கள் என்பது கண்முன் தெரிந்த நிஜங்கள். அவர்களுக்குள்ளேயே அப்படியென்றால் அடுத்தவர்களுக்குள் சொல்லவே தேவையில்லை.

காலம் கடந்து கனிந்த காலத்தை பயன்படுத்துவதை விடுத்து , துன்பியலை நோக்கியதாக ஆகிவிடக் கூடாது. இது இலங்கை தமிழரை இலங்கையில் இல்லாமலே பண்ணிவிடும்.
4. DEMOCRACY on June 29, 2009 5:02 pm

கட்டுரையில் நீங்கள் காப்பாற்ற நினைக்கும் கே.பி. யார்??, “அதை” வைத்து நீங்கள் செய்யும் “டக்கால்டி வேலையும்”, பண & சொத்துப் பிரச்சனையும் உங்கள் பிரச்சனை. இதில், எள்ளளவும் “அரசியல் இல்லை”. ஏன் இவ்வளவு அவசரம்?, முப்பது ஆண்டுக்ளாக சிறுக, சிறுக, கட்டியமைத்த அமைப்பே “பணால்” என்கிற போது, நீங்கள் படுத்தும் அவசரம் சரிவருமா?. எப்படி, வை,கோ.வும், நெடுமாறனும் கே.பி. யின் சமாதான முயற்சியை, பொட்டு, கேஸ்ட்ரோ உதவியுடன் கெடுத்தார்களா?. இதிலிருந்து உங்கள் “அரசியல்? நோக்கம்” எங்கிருந்து வருகிறது என்று தெரிகிறது!.தேர்தலில் மகிந்தாவை “ஆதரிக்கச் சொல்லிய புத்திசாலியை”,”அப்பன் குதிருக்குள் இல்லை என்று” காட்டிக் கொடுத்து விட்டீர்கள்!.ரணிலை விட கலைஞர் புத்திசாலித் தனமாக தப்பித்துக் கொள்வார் என்பதை நினைவில் கொள்க!. இதன் மையம் “ஆப்கானிஸ்தானத்தில்” உள்ளது. திரு,பிரணாப் முகர்ஜி அவர்கள் அம்பானியை ஆதரித்தாலும், திரு.கோயங்கா அவரை எதிர்த்திருந்தாலும்,அவருடைய மருமகன் (நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்)….

/கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது விடுதலைப் புலிகள், தெற்கில் ஒரு மோசமான இனவாத தலைமை தேர்தலில் வெற்றி பெற்று பதவிக்கு வருவதை விரும்பினார்கள். இப்படியாக ஒரு மோசமான தலைமை சிறீலங்காவில் அமையும் போது அது சிறீலங்கா அரசை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்த உதவியாக இருக்கும் என்று நம்பினார்கள். (இங்கு கவனிக்கவும் எல்லா விடய்ஙகளைப் போலவே இங்கும் தமது அரசியலுக்கு எதிரியைத்தான் நம்புகிறார்கள்) இந்த அடிப்படையில் மகிந்தவின் குழுவுடன் புலிகளின் தலைமைக்கு ஓரு உடன்பாடு எட்டப்பட்டது. வழமையாக தென்னிலங்கையில் இரண்டு பிரதான சிங்கள் கட்சிகளும் கிட்டத்தட்ட சமமான வாக்குகளை பெறுமிடத்தில் தமிழரது வாக்குகள் வெற்றி பெறுபவரை தீர்மானிக்கும் நிலைமை இருந்த வந்தது. மிகவும் மோசமான சிங்கள இனவாத கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்த மகிந்தவுக்கு தமிழர் வாக்குகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அறவே இல்லாத நிலையில், அந்த வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சிக்க கிடைக்க விடாமல் தடுப்பது என்பது மகிந்தவின் வெற்றிக்கு மிகவும் அவசியமானதாக இருந்தது. இந்த நோக்கில் தமிழ் மக்களை ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்க செய்ய வேண்டும் எனவும் அதற்கு சன்மானமாக விடுதலைப் புலிகளுக்கு பத்து மில்லியன் டொலர் பணம் உடனடியாக கொடுக்கப்படும் எனவும், மற்றும் ஏனைய விடயங்கள் பற்றி தேர்தலின் வெற்றியின் பின்பு தீர்மானிப்பது என்றும் உடன்பாடானது./

/அண்மைப் போரில் இந்தியா உறுதியாக இலங்கையின் பக்கம் நின்று முழுமையான ஆதரவை வழங்கியது. இது இரகசியமானது அல்ல. சிறிலங்கா தலைவர்களும் இராணுவ அதிகாரிகளும் இந்திய அதிகாரிகளும் பகிரங்கமாக ஏற்றிருந்தனர். எனினும் நாம் இந்தியாவை வெறுக்கவில்லை.
இந்தியாவின் ஏனைய நாடுகளுடனான குறிப்பாக சீனாவுடனான பூகோள அரசியல் போரில் அதற்குத் தமிழ் மக்களின் உண்மையான நம்பகரமான நட்பு இருக்கும் என நாம் கருதுகிறோம். இதனை எதிர்வரும் காலத்தில் இந்தியா உணர்ந்து தமிழ் ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமைப் போரை ஆதரிக்கும் என நாம் உறுதியாக நம்புகிறோம்./–இதிலுள்ள அரசியல் நோக்கம் வேறு. இந்த அரசியல் நோக்கம் “கே.பி. க்கும், புலன் பெயர்ந்த தமிழருக்கும்” இலாபம் உள்ளதாகவே தெரிகிறது
5. மாயா on June 29, 2009 7:00 pm

இறந்த காலம் குறித்தவை உண்மையாக இருக்கலாம். எதிர்காலத்துக்கான ஆதங்கம் தேசபக்தன் எவ்வழியென்பதை சொல்லி, நீங்களும் ஒரு சருகு புலிதான் என அறியத்தந்துள்ளீர்கள். இதைத்தான் நண்பன் ஊடுருவல் என்று அலாட்டாக்கியிருக்கிறார்.
6. chandran.raja on June 29, 2009 10:39 pm

ஆண்டவரே! ஏன் எம் இனத்தை திரும்பதிரும்ப சோதனைக்கு உள்ளாக்குகிறீர். தமக்கே தின்பதற்கு முழுஉரிமை கொண்டாடியவர்கள் டயலக்கை மாற்றி இன்று விரும்பி வரும்படி கேட்கின்றனரே!!.
7. msri on June 29, 2009 11:56 pm

தேசபக்தன்
புலிகளின தோல்விக்கான பலவிடயங்களை சரியாக சொல்லியுள்ளீர்! அதில் முக்கியம்>மாற்ற அரசானதும்> அதிகார வர்க்கமாகியதம்>போர்க்குணாமசத்தை இழந்ததும்! அத்தோடு வெளிநாட்டுக் கருத்துக் கணிப்பை தாரக மந்திரமாக கொண்டதுமே! இதைவிட மக்கள் அபிலாசைகளாகளை கணக்கில் எடுக்காது>அவர்களை போராடும் சக்திகளாக கணிக்காது>புறம் தள்ளி அடக்கி ஒடுக்கியதுமே! இதைவிட எதிர்காலம் பற்றி சிலர் ஆதங்கப்படுகின்றனர்! எதிர்காலம் பற்றி “நாடு கடந்த அரசு என்ற பாங்கில்” கட்டியம் கூறமுடியாது! அரசு இன்னொரு புலியாகவும்> மகிந்தா இன்னொரு பிரபாகரனாகவும் தமிழ்மக்கள் மத்தியில் மாற்றம் பெற்ற நிகழ்வொன்று நடந்தேறி வருகின்றது! இதற்கு இந்தியாபோன்ற நாடுகள் துணை போகின்றன! இப்போது தமிழ் மக்கள் நிலை> சட்டிக்குள் இருந்து நெருப்புக்கள வீழ்ந்த நிலை!
8. மகுடி on June 29, 2009 11:59 pm

ஆண்டவர் போல் உயிர்தெழ புலிகளும் முனைகின்றனர்
9. Indiani on June 30, 2009 6:44 am

இந்த கட்டுரையாளர் ஒரு சிறு துரும்பை எடுத்துள்ளார் இதில் உள்ள பல விடயங்கள் பல தளங்களில்(போர் போராட்டம் அரசியல் தந்pதிரோபாயங்கள்) மேலும் ஆராயப்பட வேண்டியவைகள் இவை யாவுமே விமர்சிக்கப்பட வேண்டியவைகள் கடந்தகால போராட்டம் பற்றிய முழுமையான விமர்சனம்கள் நடாத்தப்பட வேண்டும் இப்படியான விமர்சனங்கள் செய்தே மேலும் மக்களை முன்னாள் போராளிகள் என் கூட்டமைப்புக்கள் உருவாக்க வேண்டும்.

இதற்கு மேலாக நாமத் போராட வேண்டும் என்றால் எதற்காக போராட வேண்டும் எங்கிருந்து தொடர வேண்டும் எது போராட்டத்தின் அடிப்படை என்ற பல கேள்விகளுக்கும் விடைகள் காண முயற்ச்சிக்க வேண்டும்

புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சுப சிங்கப்பூர் போன்ற தமிழீழம் போன்ற கேவலமான கருத்துக்களையும் இவைதான் தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருநததையும் - எமது மக்களிடையேயிருந்த சமூகப் பிரச்சினைகளைப்பற்றி 30 வருட போராட்டம் அக்கறைபட்டதே இல்லை என்பதையும் போராட்டத்திற்கு சமூக மாற்றத்திற்கு புதிய பிற்போக்குத்தனமான கருத்துக்களை முன்வைத்தே போராட்டம் நடைபெற்றுள்ளதையும் நாம் கவணத்தில் கொள்ள வேண்டும்.

முன்னாள் பேராளிகள் என்று பார்ககாமல் புதிய வழியில் சிந்திக்கத் தெடங்க வேண்டும் புதிய வழியில் செயற்ப்பட வேண்டும்.

பெரும்பான்மை மக்களிடமிருந்து எமது சிறுபான்மையினருக்கு விடுதலை என்ற பதம் பற்றி……..
10. Karan on June 30, 2009 9:02 am

//இன்று எம்முன்னுள்ள வரலாற்று கடமைகளை நாம் சரிவர செய்வதற்கு முதலில் நாம் அந்த வரலாற்றுக் கடமைகளை சரிவர இனம் கண்டு கொள்வது அவசியமாகிறது. இலக்குகளை இனம் கண்ட பின்னர் அந்த இலக்லை நோக்கி பயணிக்க தயாராக இருக்கும் அனைவரையும் எம்மோடு இணைத்துக் கொள்வதில் அதிகம் கவனத்தை செலுத்தியாக வேண்டியுள்ளது.// தேசபக்தன்

இலக்குகளை இனம்கானம் காண்பது முக்கியமானது. புலிகள் உட்பட தமிழ் இயக்கங்கள் அனைத்துமே தமிழீழம் என்ற கோசத்தை வைத்து ‘போராடப்’ புறப்பட்டனர். இந்த தமிழீழம் என்ற இலக்கின் சாத்தியமின்மை பற்றி 1976 களில் தமிழீழக் கோசம் வைக்கப்பட்ட போதே இடதுசாரிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

போராட்ட முறையினால் மட்டுமல்ல தவறான இலக்குகளாலும் தான் இவ்வளவு பெரிய மனிதப் பேரவலம் நடந்தது. அதனால் எமது இலக்குகளை ஐக்கிய இலங்கைக்குள் இலங்கையில் உள்ள அனைத்து மக்களையும் இணைத்துக் கொள்ளக் கூடிய ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும.
11. palli. on June 30, 2009 10:48 am

என்னது போராட்டமா.?
அடபாவிகளா மீண்டும் ஒரு சதிராட்டமா??
திருந்தவே மாட்டீர்களா???
மக்களை வாழவிட மாட்டீர்களா??
12. DEMOCRACY on June 30, 2009 6:04 pm

வெளிநாட்டுச் செய்திகள், தமிழீழத் தனி நாட்டுக் கோரிக்கை கை விடல் முதல் அனைத்தையும் பிரபாகரன் தவிர்ந்த ஏனைய சக்திகள் தான் கிழித்தெறிந்தன, தடையாக இருந்தன என்று பிரபாகரனைக் காப்பாற்றும் நோக்கில் புலி விசுவாசிகள் பேச முன் வருவார்களேயானால் நாம் ஏலவே பல இடங்களில் குறிப்பிட்டுக் காட்டியபடி பிரபாகரன் என்பது “தமிழீழ” வியாபாரிகளுக்கு இலாபமீட்டுக் கொடுத்த ஒரு சந்தைப்பொருள், மதிப்பிருந்த விளைபொருள் மாத்திரமே.

மற்றவர்களால் ஆட்டுவிக்கப்பட்டு, இனித் தேவையில்லை என்று வரும் போது தூக்கி வீசப்பட்ட அல்லது காட்டிக்கொடுத்துக் கொல்லப்பட்ட தலையாட்டி பொம்மைதான் அது.

இதைச் செய்தவர்கள்,செய்து கொண்டிருப்பவர்கள் தான் அன்று தமிழ்ச்செல்வனையும் காவு கொடுத்தார்கள், அது தலைவரின் ஆசியுடன் நடைபெற்றிருந்தால் தலைவர் தன்னை மிஞ்சிய சிஷ்யன் ஒருவன் வெளி நாட்டில் இருப்பதை மறந்திருக்க வேண்டும், அது தலைவருக்கும் தெரியாமல் நடந்திருந்தால் தலைவர் வெரும் தலையாட்டி பொம்மையாகவே இருந்திருக்க வேண்டும்.

எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் தம் சொந்த நிலங்களை விட்டுச் சிதறுண்டு உலகமெல்லாம் பரந்து வாழும் ஈழத் தமிழர்களும் சரி, சொந்த நாட்டிலேயே அகதிகளாகத் தவிக்கும் ஈழத் தமிழர்களும் சரி, இவர்கள் இரு சாராரும் “தமிழீழம்” எனும் மாய மான் கொண்டு ஏமாற்றப்பட்டார்கள் என்பதே இறுதியில் நிலைக்கும் உண்மையாகும்.

நிலைமை கட்டுப்பாட்டை மீறி் தலைவர் செத்துப் போனார் என்பதை நக்குணர்ந்து கொண்டு விரக்தியடைந்திருக்கும் எஞ்சியிருக்கும் திவிர புலி ஆதரவாளர்களுக்கு இரண்டு குழப்பங்கள் இருக்கின்றன.

1. தலைவர் நமக்குக் காட்டிக்கொண்டிருந்த தமிழீழ இராணுவ பிலிம் என்ன ஆனது?

2. தலைவர் இறந்தது உண்மையென்றால் அவரைக் காப்பாற்ற முடியாது போனது எதனால்? என்று இரு பெரும் குழப்பங்களாகும்.

வெறும் இரும்புத் துண்டங்களை வாங்கிக் குவித்த தமிழீழத் தேசியத் தலைவருக்கு மனோ தைரியம் உள்ள விடுதலைப் போராளிகளை உருவாக்கவோ, அல்லது இருந்தவர்களைத் தக்க வைக்கவோ முடியாமல் போனதுதான் முதலாவது குழப்பத்திற்கான தெளிவான விடை.

அதன் உப காரணம் என்னவென்று பார்த்தால் அங்கே தலைவரின் சுயநலமும்,வங்குரோத்து புத்திசாலித்தனமும் தெளிவாக வரும். எனவே அதை தீவிர புலி ஆதரவாளர்கள் இப்போதைக்கு செய்ய மாட்டார்கள்.

இரண்டாவது காரணத்தில் தீவிர புலி ஆதரவாளர்களுக்கு நாட்டம் அதிகம் இருக்கிறது, காரணம் சூப்பர் மேன் பிரபாகரனை யாராவது காட்டிக்கொடுத்து, அருகில் இருந்து முட்டாளாக்காமல் அவர் செத்திருக்க மாட்டார் என்பது அவர்கள் அடிப்படை நம்பிக்கை.

அந்த நம்பிக்கைக்கு வலுச் சேர்க்கும் விதமாக தலைவரின் மண்டையில் பெரிய வெட்டுக் கொத்து வேறு காணப்படுகிறது, எனவே தலைவரை “இருங்கோ நாங்க காப்பாற்றுவோம் என்று சொல்லி யாரோ மாட்ட வைத்து விட்டான்” என்று முட்டிக்கொள்ளலாம்.

அதற்குக் கிடைக்கும் ஒரே இலக்கு பத்மநாதன், எனவே நம்ப வைத்துக் கழுத்தறுத்த பதமநாதன் துரோகி தான் என்று தம் நிலையைப் பலப்படுத்திக்கொள்ளலாம்.

ஆனால் பத்மநாதனை ஆதரிக்கும் வழுதி சார்ந்த புதினங்களோ யார் என்னதான் சொன்னாலும் தலைவன் தான் அடம் பிடித்தான் அவன் மேல் மாடிதான் காலியாக இருந்தது, மாறி வரும் உலகை அவதானிக்கத் தவறியது, தன் சொகுசு வாழ்க்கையை விட்டுக்கொடுக்க மறுத்தது என்று அடித்துக் கூறுகிறது.—தேனிவெப்.
13. உழவன் on June 30, 2009 6:43 pm

போராட்டம் என்றவுடன் என்ன பல்லி இப்படி பயப்பிட்டமாதிரி தெரியுது ஒருகாலத்தில் நாங்கள் மக்களின் விடுதலையை போராடிப் பெறுவோம் என்ற இயக்கம் இன்று களம் இறங்கி வாக்குப்போராட்டத்திற்கு இவைகளும் போராட்டம் தான் என்பதை மறந்து ஆயுதப் போராட்டம் என்ற நினைப்பில் பல்லி நல்ல விடயங்களை போட்டு உடைச்சுப் போடாதேங்கோ.

ஆனால் நாட்டிலுள்ள மக்களின் அபிப்பிராயம் கேட்கப்பட்டே ஒவ்வோரு விடயமும் இனிமேல் நகரும் அதை உழவன் உறுதியாக நம்புகிறேன்.

புலம்பெயர்ந்தோர் தாமும் பல நாடகளிலும் ஒன்று கூடி பல நிகழ்வகள் நடாத்தப்பட்டு கருத்து ஒருமித்த உடன்பாடுகள் எட்டப்பட வேண்டும் இதைநான் தற்போது பிரிஎப் சொல்லும் எல்லோரும் தங்களுடன் தான் இணைய வேண்டும் தலைவர் கனவில் வந்து புத்திமதி சொல்வார் பிரிஎப் தான் ஏகபோக… என்ற கருத்துகள்போல வாசித்துவிடவேண்டாம்.

இப்படியான பிரிஎப் ஏகபோக பிரதிநிதித்துவ அறை கூவல் உடைத்தெறிய வேண்டும் இப்படியான கருத்துக்கள் அடி மட்டத்தில் இன்றே உடைத்தெறியப்பட வேண்டும்.
14. Pothu on June 30, 2009 9:06 pm

நல்ல ஒரு ஆய்வு. கட்டுரையாளர் குறிப்பிட்ட போராட்டம் வெறும் ஆயுத போராட்டம் என்று எண்ணத் தேவையில்லையென்றே நினைக்கிறேன்.
15. மகுடி on June 30, 2009 10:10 pm

// இப்படியான பிரிஎப் ஏகபோக பிரதிநிதித்துவ அறை கூவல் உடைத்தெறிய வேண்டும் இப்படியான கருத்துக்கள் அடி மட்டத்தில் இன்றே உடைத்தெறியப்பட வேண்டும். - உழவன்//

புதினத்தில் புழுதி எழு(து)வது போல , அதை அவர்களே உடைத்தெறிவார்கள். இதெல்லாம் கால விரயம். வேஸ்ட்.

No comments:

Post a Comment