மாற்றம் என்பது மாறாதது; இங்கே தோழமைதேடி...

Dec 25, 2009

உமக்கு எதாவது சொல்ல வேண்டுமே

தலித் மாநாட்டைத் தொடர்ந்து…. : சபா நாவலன்.


Many thanks for

http://thesamnet.co.uk/?p=523



1. varnan on February 29, 2008 7:29 am

// நடுத் தெருவில் “நாய்” போல புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சோவியத் கம்யூன்ஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான விஜயானந்தனை பல பேருக்குத் தெரிந்திருக்கும். சரியாக நினைவில்லை. 1985 இன் இறுதிப் பகுதியாக இருக்கலாம். வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியங்களின் தலைவராக இருந்த அவர் பலாலி வீதியில் அமைந்திருந்த அவர்களின் அலுவலகத்தில் வெகுஜன அமைப்புகளின் கூட்டத்தை தலமைதாங்கி உரையாற்றிய போது சகல இயக்கங்களின் - புலிகள் ஈறாக - வெகுஜன அமைப்புக்களின் பிரதினிதிகளும் வந்திருந்தனர்.

கூட்டத்தின் இறுதிப் பகுதியில் புலிகள் “ஏகாதிபத்தியம் என்று பேசியே எமது போராட்டத்தைத் திசைதிருப்பும் துரோக வேலைகளைச் செய்கிறீர்கள்” என்று குற்றம் சாட்டியதிலிரிந்து ஆரம்பித்த பிரச்சனை கூட்ட முடிவில் நச்சு அரசியல் நடத்தும் கம்யூனிஸ்ட்டுக்கள் களையப்பட வேண்டும் என்றும் மிரட்டப்பட்டார். மறு நாள் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். //

ஏதாவது கோஷத்தின் கீழ் ஒன்றிணையும் கம்யூனிஸ எதிர்ப்பாளர்கள் - ஜனநாயக விரோதிகள் பல சந்தர்ப்பங்களில் தம்க்கு எதிரான கருத்துக்கள் உருவாகும் போது சேறடித்தல் மிரட்டல் என்று கொலை வரை யாருக்கெதிராகவும் தமது மிலேச்சத்தனமான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். தெருத்தெருவாக சக இயக்கப் போரளிகளைக் கொலை செய்ய அலைந்தவர்களெல்லாம் ….
2. Rathan on February 29, 2008 10:15 am

//வெறும் உணர்ச்சிகளின் அடிப்படையில் சிங்கள மக்களுக்கு எதிரான போராட்டமாக அது பாசிசமாக வளர்ந்து தோல்வியைத் தழுவிக் கொண்டிருக்கிறது.//
கொம்முனிச முகமூடி கிழிந்து மக்களால் புறம்தள்ளபட்டவர்கள். இன்று இனங்களின் சமத்துவத்திற்கும் சமாதானத்திற்குமான குழு என்ற முகமூடியுடன். ஆரூடம் சொல்லி திருப்திபடுகிறார்கள். உணர்வுள்ளவானல் தான் போராட முடியுமென்ற அடிப்படையே விளங்காதவர்கள் போராட்டம் பற்றி கதைக்கிறார்கள்.

// இவ்வாறு எந்த தத்துவார்த்த அடிப்படையுமின்றி ஆரம்பித்த தேசவிடுதலைப் போராட்டம் என்பது மிகக்குறுகிய காலத்திலேயே இனவாத அரசியலை முன் நிறுத்தியது//
சரி சமூக பொறுப்புள்ளவராக நீங்கள் இருந்திருந்தால் இனவாத அடிப்படையில்லாத ஒரு போராட்ட அமைப்பை அப்போது ஆரம்பித்திருக்கலாமே.

//ஏகாதிபத்திய பிரந்திய வல்லரசுக்களின் பயன்பாட்டுக்குத் துணைபோனது.// கொம்முனிசம் பேசிய புளொட்டும் ஈபிஆர்எல்எப் ம் இந்திய நலனுக்காகவே இயங்கின. மிகச்சரியாய் சொல்லுகிறீர்கள்.

//மார்க்ஸிஸ்டுக்களில் பெரும்பாலானவர்கள் போராட்டத்திற்கு எதிரானவர்களாக இருந்ததில்லை. ஆனால் இனவாத அடிப்படையிலான அரசியலற்ற போராட்டம் ஏகாதிபத்தியங்களாலும் உளவு அமைப்புக்களாலும் பயன்படுத்தப்படும் வெளியை ஏற்படுத்திக் கொடுக்கும் என்ற அபாயக் குரலையே எழுப்பினர்.//
சரி இவ்வளவு தெளிவாய் இப்ப கதை சொல்லும் நீங்கள், ஏன் முன்மாதிரியாய் செயல்ப்பட்டு காட்டவில்லை. எனென்றால் நீங்கள் வெறும் வாய்ப்பந்தல் காரர்கள்.

//எஸ்.ஜே.வி செல்வநாயகமும் ஆறுமுக நாவலரும் தான் தமிழ் மக்களின் ஆதஷ புருஷர்களாகச் சித்தரிக்கப்பட்டார்கள். இவர்களெல்லம் ஏகதிபத்தியங்களதும் நிலப்பிரத்துவத்தினதும் பிரதிநிதிகள் எனச் சுட்டிக்காட்டிய போது யாரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை.//
சைவசமயத்தை பாதுகாக்கின்ற செயல்பாட்டால் அவர் சாதீயத்தை பேணி விட்டார் சரி உங்கள் காலத்திற்கும் அவரின் காலத்திற்கும் என்ன தொடர்பு? இப்போ யார் ஆறுமுகநாவலரை தூக்கி பிடிக்கிறார்கள். நேரகாலம் விளங்காமல் நிற்கிறீர்கள். எஸ்.ஜே.வி செல்வநாயகமும் தமிழ்தேசியத்தை முன்னிலைபடுத்தி செயல்பட்ட சாத்வீகத்தலைவர். யதார்தம் விளங்காத போலி கொம்முனிசிட்களை விட அவரின் செயற்பாடு மிகச் சரியானது. அதனால் தான் அனைத்து தமிழருக்கும் தந்தை செல்வா. அவர் ஒரு கிறிஸ்தவாரக இருந்தபடியால் சைவவேளாள.. என்ற நீட்டி முழக்களிலிருந்து தப்பிவிட்டார்.

//மாவோசார்புக் கம்யுனிஸ்ட் கட்சிகளும் ஈழ மக்கள் விடுதலை முன்ன்ணி போன்ற ஒப்பீட்டளவில் முற்போக்கான தேச விடுதலை இயக்கங்களும் பாசறை போன்ற அமைப்புக்களும் இதற்கான வேலைத்திட்டத்தை முன்வைத்து நடைமுறை வேலைகளில் குறித்தளவு வெற்றியும் கண்டிருக்கின்றன.//
மாவோசார்புக் கம்யுனிஸ்ட் கட்சியின் செயல்பாட்டு காலம் எனக்கு சிறுவயதுப்பராயம் கருத்துச் சொல்ல முடியவில்லை. ஈபிஆர்எல்எப் க்கும் தேசவிடுதலைக்கும் என்ன சம்மந்தம்? அமெரிக்கர்களை கடத்தி கொலை அச்சுறுத்தல் விடுத்து ஈழப்போராட்டத்திற்க கொம்முனிச சாயம் பூசி மேற்குலகின் வெறுப்பை ஈழப்போராட்டத்தின் பால் திருப்பியது தொடங்கி;

இந்தியாவின் சுயநலத்திற்கு ஈழநலனை பலியிட்டு மாகணசபையில் பதவிபெற்று சொத்துசுகங்கள் சேர்த்தும் அல்லாமல் துணைக்குழு அரசியலின் ஆரம்ப கர்த்தாக்கள். எங்கள் கண்முன்னே இவ்வளவையும் நடத்தி முடித்த ஒரு துணைக்குழு அமைப்பை முன்னோடி அமைப்பென வர்ணிக்கும் உங்களிடமிருந்து ஆக்கமான செயல்பாட்டை எதிர்பார்ப்பது அபத்தமே.
3. Rathan on February 29, 2008 10:28 am

//கூட்டத்தின் இறுதிப் பகுதியில் புலிகள் “ஏகாதிபத்தியம் என்று பேசியே எமது போராட்டத்தைத் திசைதிருப்பும் துரோக வேலைகளைச் செய்கிறீர்கள்” என்று குற்றம் சாட்டியதிலிரிந்து ஆரம்பித்த பிரச்சனை கூட்ட முடிவில் நச்சு அரசியல் நடத்தும் கம்யூனிஸ்ட்டுக்கள் களையப்பட வேண்டும் என்றும் மிரட்டப்பட்டார். மறு நாள் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். // சிவராசாவின் குற்றசாட்டை வர்னன் மீள்பதிவு செய்துள்ளார்.

மத்திய கல்லூரி அதிபர் அமரர் இராஐதுரை ஒரு புனிதர். அவர் தலித்தாக இருந்தற்காககே சுட்டுக் கொல்லப்பட்டார் என்று கொம்முனிச தோழர் சி கா செந்தில்வேல் சொன்ன அறிபூர்வமான குற்றச்சாட்டு ஞாபகத்திற்கு வந்து தொலைக்குது. மற்றப்படி சோவியத் கம்யூன்ஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான விஜயானந்தனை பற்றியும் அவரது கொலைபற்றியும் எனக்கு தனிப்பட்ட அபிப்பிராயம் எதுவுமில்லை. எனெனில் அவர் பற்றி முன்னர் நான் அறிந்திருக்கவில்லை.
4. Vanni Mainthan on February 29, 2008 11:53 am

தமிழ் தேசியப் போராட்டத்துக்கு அபத்தமான விளக்கம் சொல்லும் நாவலனின் அரசியல் அரைவேக்காட்டுத்தனமானது. தன்னை ஒரு மார்க்சிஷ்ட்டாக உருப்பெருக்கிய விம்பத்தை எம்மில் திணிக்க முயலும் வீண் விளையாட்டே தமிழர் தேசியத் தலைமை மீது அபத்தமான அரசியல் விமர்சனமாக வருகிறது. மாற்று அரசியல் கதைக்கும் துணைப்படை ஜனநாயகவாதிகளை விட நாவலன் போல் … பகுதி நேர மார்க்சிஷம் கதைக்கும் பேர்வழிகள் ஆபத்தானவர்கள்.

புலிகளை விட மக்கள் உங்களை நன்கு தெரிந்து வைத்துள்ளார்கள்.
5. nanatha on February 29, 2008 12:31 pm

” விஜயானந்தனை பற்றியும் அவரது கொலை பற்றியும் எனக்கு தனிப்பட்ட அபிப்பிராயம் எதுவுமில்லை. ”
ஓமோம் உங்கட அபிப்பிராயம் வலு முக்கியம்..
6. Rathan on February 29, 2008 1:18 pm

//ஓமோம் உங்கட அபிப்பிராயம் வலு முக்கியம்..// nanatha
அப்படியா நண்பரே! அமரர் விஜயானந்தனை பற்றியும் அன்னாரின் அருஞ்செயல் புரட்சிகர நடவடிக்கைகளையும் அறியா மாபாவி ஆகிவிட்டேனே. சரி நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.
7. rajeev on February 29, 2008 2:13 pm

//”ஈபிஆர்எல்எப் க்கும் தேசவிடுதலைக்கும் என்ன சம்மந்தம்? அமெரிக்கர்களை கடத்தி கொலை அச்சுறுத்தல் விடுத்து ஈழப்போராட்டத்திற்க கொம்முனிச சாயம் பூசி மேற்குலகின் வெறுப்பை ஈழப்போராட்டத்தின் பால் திருப்பியது தொடங்கி;”//
அப்ப நீங்கள் ராஜிவைக் கொன்றது….? அமெரிக்கா மீது இவ்வளவு விசுவாசமா? இவ்வளவு நம்பிக்கையா?
8. ரகு on February 29, 2008 3:08 pm

//மாவோசார்புக் கம்யுனிஸ்ட் கட்சிகளும் ஈழ மக்கள் விடுதலை முன்ன்ணி போன்ற ஒப்பீட்டளவில் முற்போக்கான தேச விடுதலை இயக்கங்களும்…//
இங்கே கவனிக்கப்பட வேண்டிய சொல், “ஒப்பீட்டளவு” தூய சோசலிசம், மக்கள் போராட்டம், மனிதாபிமானம்….இப்படி இன்னோரன்ன பம்மாத்துகள் கதைத்து இயக்கம் நடத்தியவர்கள் கடைசியில் ஒப்பீட்ட்டளவில் வந்து நிற்கிறார்கள்.

இதைத்தான் 1984 இல் கழகத்தின் பிரச்சாரப் பிரிவினரை ஒரு வயது முதிர்ந்தவர் கேட்டார் ‘தம்பி எல்லாம் கதைக்கிறியள், அப்பப்ப புலியளையும் போற போக்கில குறை சொல்லுறியள். ஆனால் பார்த்தால் அவன்களாவது ஏதாவது செய்து கொண்டிருக்கிறாங்கள். நீங்கள் ஒண்டும் செய்யுமாப்போல இல்லை’ எண்று. அப்போது கழகத்தோழர் வழமைபோல் அந்த வயது முதிர்ந்தவரை ப்பற்றி பூர்ஷ்வாவோ மென்ஷ்வாவோ என குறை சொல்லியது ஞாபகம்.
1983 இல ஒரு முதியவர் கூறியதும் ‘ஒப்பீட்டளவில்’ புலிகள் பரவாயில்லை என்பது தான்.

//..பாசறை போன்ற அமைப்புக்களும் இதற்கான வேலைத்திட்டத்தை முன்வைத்து நடைமுறை வேலைகளில் குறித்தளவு வெற்றியும் கண்டிருக்கின்றன.//
‘குறித்தளவு’ எண்டு சொல்லாமல் என்ன எண்டு விளக்காமாக சொல்லமாட்டியளோ? நாவலனுக்கே தெரியும் அங்க விளக்கமா சொல்ல ஒண்டுமில்லை. சும்மா குறித்தளவு, ஒப்பீட்டளவு எண்டு வழமையான கதை தான். வெறும் கொள்கை அளவிலேயே ஒண்டும் நடக்கேல்லை இதில நடைமுறை வேலயில வெற்றி கண்டவையாம்.

//மார்க்ஸிஸ்டுக்களில் பெரும்பாலானவர்கள் போராட்டத்திற்கு எதிரானவர்களாக இருந்ததில்லை. //
இப்ப ஜே.வி.பி இக்குதெல்லே.. அதுதான் ‘பெரும்பாலானவர்கள்’ எண்டு சொல்லி தப்புறார். இந்த ‘சிறுபாலானவர்கள்’ குரல் தான் ஸ்ரீலங்காவின் பெரும்பாலானவர்களின் குரல் என்றது தமிழரின் பட்டறிவு. இது கூட புரியாதவர்கள் எமக்கு பாடம், பாசறை ந்டத்துகின்றனர்.

//ஆனால் இனவாத அடிப்படையிலான அரசியலற்ற போராட்டம் ஏகாதிபத்தியங்களாலும் உளவு அமைப்புக்களாலும் பயன்படுத்தப்படும் வெளியை ஏற்படுத்திக் கொடுக்கும் என்ற அபாயக் குரலையே எழுப்பினர்.//
சும்மா அபாயக்குரல் எழுப்புறது. பிறகு அந்த க்குரலை வைத்து உரிமையைப் பறிக்கிறது. இவ்வளவும் க்தைக்கும் மார்க்சிச வாதிகள் ஸ்ரீலன்காவின் மார்க்சிச வாதிகளும் அவர்களின் தமிழருரிமை விரோத அரசியலும் பற்றிப் பேசத்தயங்குவதேன்.

அன்றிய கொல்வின்.ஆர்.டி.சில்வாவில் இருந்து இன்றைய திஸ விதாரண வரை எவருமே ஸ்ரீலங்காவின் பெளத்த சிங்கள மேலாதிக்கத்தை வைத்து அரசியல் நடத்தியோர் தான். கொல்வின் காலத்தில் நடந்தது பலர் சொல்லக்கேட்டு அறிந்தது தான். ஆனால் இன்று திஸ்ஸ விதாரண நடந்து கொண்டது கண்முன்னால் நடந்தது!
9. ரகு on February 29, 2008 3:39 pm

rajeev, //அப்ப நீங்கள் ராஜிவைக் கொன்றது….? ?// இதையே தான் நானும் கேட்கிறேன். இந்த ‘மாற்றுக் கருத்து / கட்சி’ காரர் எல்லாம் தாங்கள் செய்ததை மறந்து மற்றவனை குறை சொல்வார்கள். 1980 களிலேயே ‘கடத்தல்’ செய்தவர்கள் 1990 களில் நடந்த ராஜீவ் கொலைக்கு அழுத்தது வேடிக்கை!!!!
10. aruran on February 29, 2008 4:33 pm

ரகு ரதன் ஆகியோரின் பின்னூட்டங்களையும் சாதி வாதிகளின் பின்னூட்டங்களையும் மறுபடி ஒருமுறை ஒப்பிட்டுப் பாருங்கள். என்னே ஒற்றுமை!

இது ஒரு லைவ் சோதனைக்கூடம்!!
11. siruvan on February 29, 2008 5:23 pm

//பொதுவாக மார்க்ஸியத்திற்கு எதிரான இனவாத அமைப்புகளில் இருந்தவர்கள் மட்டுமே புலம்பெயர் நாடுகளில் சாதிவாதத்தை முன்வைக்கிறார்கள். இவர்களெல்லாம் இன்று தலித்தியத்தைக் கையிலெடுத்து முரண்பாடுகளைத் திட்டமிட்டுக் கூர்மைப்படுத்தும் ஆபத்தான பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.//

அப்ப நாவலற்றை டெலோ மாக்சிய தத்துவத்தை தூக்கி பிடிச்சதெண்டே இவர் கதை சொல்லுறார். ஆர் என்ன சொனனாலும் உடனை ஏகாதிபத்திய் ஆதரவெண்டு சொல்லுறது சரியான சுகமான வேலை. இவற்றை கட்டுரையிலை அந்த சொல்லுகளை வெளியிலை எடுத்தா மிஞ்சுறது ஒண்டுமில்லை.
12. sam on February 29, 2008 6:03 pm

ரகு, ரதன், குஞ்சுகளா, நீங்கள் எழுதவேணுமப்பு. எனென்டால் உஙளை பொதுவா எல்லாருக்கும் தெரியும் அப்புகள்!
ஆனால், நீங்கள் எழுதினால் தான், புலி எதிர்ப்பு, ஜனனாயகம், தலித்தியம் எண்டு கதைக்கிறவேயும் உங்களைப் போலவே சிந்திக்கிறவே என்டு தெரியவரும்.
13. Thakshan on February 29, 2008 6:24 pm

ஒரிஜினல் புலி ஆதரவாளர்களின் கருத்துக்களில் பிழை கண்டுபிடிப்பது அபத்தம். அவர்களுக்கு இராணுவ சாகசங்களில் கொலைகளில் நம்பிக்கை இருப்பது இயல்பு. ஆனால் வேற கட்சிகளில் இருந்துவிட்டு புலி ஆதரவு காட்டுறவை தான் டேஞ்சர். அறைகுறை அரசியல் தெரிஞ்சு வைச்சுக்கொண்டு தாங்களும் திரும்ப சமூகத்தில் பேசப்பட வேண்டுமென்டு ஆள்ப்பத்துறவை பரிதாப பிறவியள். விளக்கமும் இல்லாம விசயமுமில்லா சும்மா நேரத்தை போக்காட்ட பின்னூட்டம் விடுகினம். வாசிச்சு தொலைக்க வேண்டியது வாசகனின் விதி.
14. sam on February 29, 2008 6:28 pm

நீர் சிறுவனேதான். //தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்பான மார்க்ஸிய அடிப்படையிலான வேலைத் திட்டங்களை முன்வைத்துப் போராடிய இடதுசாரி அமைப்புக்களில் தம்மை அடையாளப்படுத்திய பல தோழர்களும் இனவாத அமைப்புக்களில் உட்கட்சி - ஜனனாயகப் போராட்டங்களை நடத்திய தோழர்களும் இவர்களை விமர்சிக்கும் போது இந்த விமர்சனங்களைக் கூட ஆரோக்கியமானவையாக உள்வாங்கிக் கொள்ளும் நிலையில் கூட இவர்களில்லை என்பது வேறு விடயம்.//

//84ம் ஆண்டிற்குப் பின்னர் பாசறை அமைப்பின் கருத்தியலுடன் இணைந்து கிராமிய உழைப்பாளர் சங்கம் போன்றவற்றால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட சாதீயப் போராட்டங்களும், வறிய கூலி விவசாயிகளின் போராட்டங்களும் பல வெற்றிக்கான சான்றுகளை எம்முன் விட்டுச் சென்றிருக்கின்றன//

சரி வுடும் உமக்கும் ரகு ரதனுக்கும் உள்ள ஒற்றுமையைப் பாரும்! தொடரும் சிறுவா தொடரும்! உங்கள் அம்பலப்படும் சேவை மக்களுக்குத் தேவை!!
15. ரகு on February 29, 2008 8:02 pm

//…ரகு ரதன் ஆகியோரின் பின்னூட்டங்களையும் சாதி வாதிகளின் பின்னூட்டங்களையும் மறுபடி ஒருமுறை ஒப்பிட்டுப் பாருங்கள். என்னே ஒற்றுமை!…//
இப்பிடித்தானே கேள்வியளுக்கு மறுமொழி சொல்லேலாதவை கதை விடுகிறது. குத்தி முறிஞ்சு ‘ஒற்றுமை’ கண்டு பிடிக்கிறது மட்டும் தான் அவையளால செய்ய முடிஞ்சது. சரி அப்பிடி என்ன ஒற்றுமையை கண்டு பிடிச்சிட்டார் எண்டு ஒர்ரு உதாரணம் காட்டினாரா? இல்லை. சாதி-எதிர்ப்பாளருக்கும் ஸ்ரீலங்கா இன விரோதிகளுக்கும் என்னே ஒற்றுமை என்று என்னாலும் பொதுமையாக சொல்ல முடியும்!!!!

//….இது ஒரு லைவ் சோதனைக்கூடம்!!….//
சோதன்னைக்கூடம் லைவ் ஆகத்தான் இருக்க வேண்டும். இல்லாமல் பழைய கொள்கைகளை வச்சு இயக்கம் நடத்தினவை கொலைக் கூடமாக மாறி கன நாளாச்சுது!!!
16. sugan on February 29, 2008 8:31 pm

மானிப்பாய் வெள்ளாளத் திமிரைத்தவிர வேறையொண்டும் தெரியயில்லை, நாவலனை விட அம்பேத்கர் படிச்சது குறைவுதான்.
சுகன்
17. sugan on February 29, 2008 8:40 pm

வெள்ளாளர் வெள்ளைக்காறனிட்டை படிச்சுப்போட்டு மானிப்பாயிலைதான் மதிலேறீக்குதிச்சு ஓடினவங்கள்.
18. Rathan on February 29, 2008 8:45 pm

//ரகு ரதன் குஞ்சுகளா நீங்கள் எழுதவேணுமப்பு. எனென்டால் உஙளை பொதுவா எல்லாருக்கும் தெரியும் அப்புகள்!//சாம்.
உங்கள் ஆதங்கம் நல்லாய் விளங்குது. இனங்களின் சமத்துவத்திற்கும் சமாதானத்திற்குமான குழு என்ற போர்வையிலை மார்க்சிசம் கொம்முனிசம் என்று ஒரு புலியெதிர்ப்பு தளத்தை சுலமாய் நிறுவி விடலாமென கணக்கு போட்டிங்கள். தலித்மேம்பாட்டு முன்னனிகாரர் உங்களை முந்திவிடுவாங்கள் என்ற ஆதங்கத்திலை புகையிறீங்கள். என்ன செய்வது. இதுவொரு போட்டி உலகம். இலங்கையிலை தனிபுலியை எதிர்ப்பதில் 5 துணைக்குழு இயங்கிற மாதிரித்தான் இலண்டன் நிலைமையும்.
19. Danu on February 29, 2008 9:20 pm

அமெரிக்கா இந்திய அயல் நாட்டடில் இந்தியாவிற்கு ஒரு தலையிடி கொடுக்கும் வேலையை பார்த்து முடிந்து விட்டது. தற்போது தான் பாவித்தவர்களை கைவிட்டும் விட்டது. (பாலசிங்கத்தடன் மறைவுடன் பல விடயங்கள் புதைந்து விட்டது.) இதனிடையே இந்தியா தன்னை சமாளிக்க உங்கள் எல்லோரையும் பாவித்தும் விட்டது. ஆனால் தற்போது தனது அபிவிருத்தியில் அக்கறையின் ஒரு பகதியாக ஈழப் போராட்டம்………….. ஏகாதிபத்தியம் புலிகளை பாவித்து முடிந்து விட்டது. இனி என்ன? —–சதா……..ம் - -

இதை ஜெயபாலு பிரசுரிக்காது விட்டால் என்னால் தொடர்ந்து எழுத முடியாது போய்விடும் காரணம் எனது பல எழுத்துக்களை ஜெயபாலு பிரசுரிப்பதில்லை?
தனுராஜ’
-.-.-.-.-.-.-.-.-

குறிப்பு: எழுந்தமானமாக கருத்துக்களை நீக்க ஜெயபாலனுக்கும் உரிமையில்லை. நீங்கள் குறிப்பிடும் பெயரில் கருத்துக்கள் வந்ததாகத் தெரியவில்லை. மேலும் யாருடைய கருத்தையும் நீக்க வேண்டும் என்ற நோக்கம் தேசம்நெற்றிற்கு இல்லை. தேசம்நெற்றில் கருத்துப் பதிவை செய்துவருபவர்கள் அதனை நன்கு அறிவார்கள்.
தேசம்நெற்
20. ENB on February 29, 2008 9:43 pm

சாதியமும் வர்க்கமும் தேசியமும்
சாதியம் தொடர்பாக எழுந்துள்ள கோட்பாடு மற்றும் நடைமுறைப் பிரச்சனைகளில் நமது அணுகுமுறை.
புரட்சிப் பண்பாட்டு இயக்கம்- தமிழ் நாடு.(1987 ஓகஸ்ட் 15-16)

சாதியம் நீண்ட நெடுங்காலமாகவே தமிழகத்தில் வேரூன்றிப் படர்ந்துள்ளது. ஏனைய நாடுகளில் பொதுவுடமைப் புரட்சியாளர்கள் எதிர் கொள்ளாத ஒருசமூகவியல் அம்சமாக சாதியம் தமிழகத்தில் - இன்னும் விரிவாகச் சொன்னால் இந்தியப்பகுதிகளில் உள்ளது. சாதியின் தோற்றம் வளர்ச்சி குறித்து விரிவான ஆய்வுகள் உள்ளனவெனினும், அவை பற்றி இறுதியானதும் தீர்க்கமானதுமான ஆய்வு முடிவுகளை வகுத்துக் கொள்வதில் பல சிக்கல்கள் உள்ளன. இந்த அணுகுமுறைக் கட்டுரையில் சாதியம் தொடர்பாக எழுந்துள்ள கோட்பாடு, நடைமுறைப் பிரச்சனைகள் குறித்து நமது கருத்துக்கள்தொகுக்கப்பட்டுள்ளன.

சாதி அமைப்பின் தனிக் குறிப்பான இயல்புகள்:

சாதிக்கும் வர்க்கத்துக்கும் இடையிலான உறவு:

வர்க்கப் போராட்டத்துக்கும் சாதியத்துக்கும் இடையிலான உறவு:

சாதியின் தோற்றமும் வளர்ச்சியும்:
சமயத்துக்கும் சாதிக்கும் உள்ள உறவுப் பிரச்சனை:
அரசியல் சமூகத்துறையில் சாதியம்:
சாதியமும் தேசியமும்:
சாதியமும் இடஒதுக்கீடு எனும் சீர்திருத்த சலுகையும்:
சாதியம் தொடர்பான மூன்று வர்க்கங்களின் முவ்வேறு அணுகுமுறைகள்:
அ) ஆளும் வர்க்கங்களின் அணுகுமுறை:
ஆ) இடைத்தட்டு வர்க்கங்களின் அணுகுமுறை:
இ) பாட்டாளி வர்க்க அணுகுமுறை:
அ) நீண்டகாலத் தீர்வு:
ஆ) உடனடித்தீர்வு:

http://enbtamil.blogspot.com/
21. NERUPPU on February 29, 2008 10:03 pm

ரகு 1980 கடத்தல் செய்தது யார் தெரியுமா? குட்டிமணி, பிரபாகரன்? பாண்டி செல்வா. இந்த காலத்தில் எந்த ஒரு
அமைப்பும் நீர் சொல்லிய கடத்தக்ல் தொழில் செய்யவில்லை. ஆக உமக்கும் பிராபாமீது கோபம் உள்ளது. வெழிகாட்ட தெரியவில்லை.

ரகு கோபத்தை அடக்க கூடாது அது சிறுநீரகத்தை பாதிக்குமாம். இதை கழகம் சொல்லவில்லை மருத்துவம் சொல்லுகிறது. ரகுநீர் யாரை வேண்டுமானாலும் ஆதரியும் அது உமது உரிமை. ஆனால் கொலையை மட்டும்
தயவு செய்து ஆதரிக்க வேண்டாம்.
நட்புடன் நெருப்பு அல்ல நெருப்பு.
22. Rathan on February 29, 2008 10:05 pm

//அப்ப நீங்கள் ராஜிவைக் கொன்றது….? அமெரிக்கா மீது இவ்வளவு விசுவாசமா? இவ்வளவு நம்பிக்கையா?// ராஜிவ்.
இந்திய நலனுக்காக ஈழத்தமிழர் நலனை பலிகொடுப்பாராம். அந்த தவறை சுட்டிக்காட்டினால் கொடும்படை கொண்டு ஈழத் தமிழரை அழிப்பாராம். சிதைப்பாராம். இவ்வளவு கொடுமைகளையும் தமிழர் வாய்பொத்தி ஏற்கவேணுமாம். கோழிகூட தன்குஞ்சுகளை பாதுகாக்க பறந்தெழும் போது, தமிழன் என்ன விதிவிலக்கா?

ஈழத்தமிழனுக்கு தன் மண்ணின் மீதும் புலிகள் மீதும்தான் விசுவாசமும் நம்பிக்கையும். எல்லோருடைய நட்பும் தேவை நட்பு கிடைக்கவிட்டாலும் பகையை வளர்க்காமலிருப்பதுதான் புத்திசாலித்தனம்.
23. NERUPPU on February 29, 2008 10:21 pm

ரதன் எனது ரானுவ அறிவு சம்பந்தமாக கவலை கொண்டீர் மகிழ்ச்சி. நான் ராணுவம் சம்பந்தமாக படிக்கவில்லை. ஆனால் படித்த பலர் எனது நண்பர்களக உள்ளனர். அவர்கள் சொன்னார்கள் ஒரு இடத்தை பிடிக்கும் போது அந்த இடத்தை பாதுகாக்கும் பலம் (ராணுவம், பொருளாதாரம், மருத்துவம், மக்களாதரவு, நிலப்பரப்பின் கணிப்பு, தேவையான ஆமினேசன், ஆள்பலம்; எதிரியின் பலம் எமது பலவீனம் இவை அனைத்தும் மிக நிதானமாக அறியபட வேண்டுமாம்.

அப்படி புழி செய்திருந்திருந்தால் பிடித்த இடத்தை (தனியாகால்ல) விட்டு விட்டு ஓடியிருக்க வேண்டாமென ராணுவஅறிவு இல்லாத நெருப்பு நினைக்கிறது.

… குரலுக்கு இன்று தேசத்தின் குரல் பட்டமா?
24. sinamay on February 29, 2008 10:51 pm

நாவலா நாங்க ஆளுக்காள் வீணாக சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறோம். மறுபக்கம் தலித் கொம்பனி தங்கட விசயத்தில மிகவும் கெட்டித்தனமாக லண்டனிலும் கூட்டத்தை வைத்து பாரிசில் இயங்கும் … வெகு கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். நாங்கள் வெட்டித்தனமாக …. இந்த இணையத்தில் மல்லுச்சண்டை பட்டுக் கொண்டிருக்கிறோம். நமக்கு வேறு வேலை இல்லையா? இலங்கையில் வாழும் நமது தலித் மக்களுக்காக ஏதாவது நேர்மையாக செய்ய முடியுமென்டால் யோசிக்கவும் நிறையப்பேர் ஆதரவு தர காத்திருக்கிறார்கள்.
25. sam on February 29, 2008 11:42 pm

//மானிப்பாய் வெள்ளாளத் திமிரைத்தவிர வேறையொண்டும் தெரியயில்லை-சுகன். // உது சாதி வாதமில்லையப்பு சாதி வெறி எண்டாலும் நீங்கள் முந்தீட்டியள்.. வரவேண்டிய இடத்தூக்கு வந்தூட்டியள்.. எனி என்ன வெட்டு, குத்து, ரத்தம்.. பாவம் மக்கள்…
26. sam on February 29, 2008 11:50 pm

இ) பாட்டாளி வர்க்க அணுகுமுறை: இது சாதி அமைப்பை ஒழித்துக்கட்ட விரும்புகிறது. அனைத்து ஒடுக்குமுறைகளின் ஒரு பகுதியாகச் சாதிய ஒடுக்கு முறையை காண்கிறது.

இதில் பாட்டாளி வர்க்க அணுகுமுறையைக் கொண்டுள்ள புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் தீர்வு என்ன?
சாதி ஒழிப்பு என்பதில் இது முனைப்பாக இருக்கிறது. இப்போராட்டத்தை இரு கட்டங்களாக அணுகுகிறது;

அ) நீண்டகாலத் தீர்வு: சாதியின் பொருளாதார கலாச்சாரக் கூறுகள் ஒழிக்கப்படும்போதே சாதி ஒழிப்பு சாத்தியமாகும். மக்கள் ஜனநாயகப் புரட்சி என்பது அரசியல் அதிகாரக் கைப்பற்றலாகும். பொருளாதார அடிப்படையை ஒரு உடனடிப் போராட்டத்தின் மூலம் மாற்றியமைத்துவிட முடியும். ஆனால் அப்பொழுதும் சாதியின் கருத்தியல் ஆதிக்கம் இருந்து கொண்டுதான் இருக்கும். அக்காலத்தில் சாதிகளை ஒழித்து மக்களிடையே சமத்துவத்தை நிலைநாட்டக்கூடிய கலாச்சாரப் போராட்டத்தை தொடராவிடின், புரட்சியின் பயன்கள் நீடித்து நிற்காது. இந்த நீண்ட காலப் போராட்டத்தின் விளைவாகவே சாதியின் கலாச்சார ஆதிக்கம் ஒழிக்கப்படும்.

ஆ) உடனடித்தீர்வு: மக்கள் ஜனநாயகப் புரட்சி ஏற்பட்டாலே சாதியை ஒழிக்க இயலும் என்று சொல்லும் போது தீண்டாமை ஒழிப்பு, கல்வி இட ஒதுக்கீடு, வேலை ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளையும் நாம் ஆதரிக்க வேண்டும். இவை நிரந்தரத்தீர்வு ஆகாதெனினும் இவற்றில் ஈடுபட்டுள்ள அடிப்படை மக்களை நியாயமான போராட்டத்தில் ஈர்க்க இவை பயன்படும். அடிப்படையாக சீர்திருத்தவாதத்தை எதித்துக்கொண்டே அடிப்படை மக்களின் உடனடியான சமூக, பொருளாதார, அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து மக்களைத் திரட்ட வேண்டும்.
நன்றி:http://enbtamil.blogspot.com/
27. ரகு on February 29, 2008 11:59 pm

நெருப்பு, பெயருக்கேற்ற நடவடிக்கை இருக்கத்தான் வேணும். ஆனால் அவசரப்பட்டு ‘பற்றிக்கொள்ள’ கூடாது. கீழே இருக்கும் கருத்தையும் அதற்கான மறுமொழிகளையும் பற்றியதை ‘அணைத்து’ விட்டு ஆறுதலாக மீண்டும் மீண்டும் படித்து அவை எச்சந்தர்ப்பத்தில் யாரால் யாருக்கு கூறப்பட்டவை என சிந்திக்கவும். தேவை எனில் 5ம் வகுப்பில் சமய / தமிழ் இலக்கியப் பாடத்தில் “இந்த அசரீரி எச்சந்தர்ப்பத்தில் யாரால் யாருக்கு கூறப்பட்டது” என்ற கேள்விகளுக்கு சொன்ன விளக்கங்களையும் ஆசிரியர் கற்பித்த முறைகளையும் ஒருமுறை இரைமீட்டுக் கொள்ளவும்…. (ஆடு மாடு ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல)

முதலில் கீழ்வரும் rajeev on February 29, 2008 2:13 pm எழுதிய பந்தியைப் படிக்கவும்.
//”ஈபிஆர்எல்எப் க்கும் தேச விடுதலைக்கும் என்ன சம்மந்தம்? அமெரிக்கர்களை கடத்தி கொலை அச்சுறுத்தல் விடுத்து ஈழப்போராட்டத்திற்க கொம்முனிச சாயம் பூசி மேற்குலகின் வெறுப்பை ஈழப்போராட்டத்தின் பால் திருப்பியது தொடங்கி;”// அப்ப நீங்கள் ராஜிவைக் கொன்றது….? அமெரிக்கா மீது இவ்வளவு விசுவாசமா? இவ்வளவு நம்பிக்கையா?//
இங்கே வரும் கடத்தி என்ற சொல்லைக் கவனித்தீர்களா?? கடத்தி என்ற சொல்லுக்கு முன்னாலும் பின்னாலும் வரும் சொற்களை ஞாபகத்தில் கொள்ளவும். இனி அடுத்த வசனங்களைப் பார்ப்போம்.

இங்கே ரகு on February 29, 2008 3:39 pm சொன்னதை கவனமாக வாசிக்கவும்: rajeev, //அப்ப நீங்கள் ராஜிவைக் கொன்றது….? ?// இதையே தான் நானும் கேட்கிறேன். இந்த ‘மாற்றுக் கருத்து // கட்சி’ காரர் எல்லாம் தாங்கள் செய்ததை மறந்து மற்றவனை குறை சொல்வார்கள். 1980 களிலேயே ‘கடத்தல்’ செய்தவர்கள் 1990 களில் நடந்த ராஜீவ் கொலைக்கு அழுத்தது வேடிக்கை!!!!//

வாசித்து விட்டீர்களா. இங்கே கடத்தல் என்ற சொல் அடைப்புக் குறிக்குள் இருப்பதை அவதானித்தீர்களா? ஒரு சொல் அடைப்புக்குறிக்குள் வரும்போது அதன் அர்த்தம் சாதாரண நிலையில் இருந்து மாறுபடும். அத்துடன் மேற்கோள் காட்டிய கருத்துடனே அதை ஒப்பிட்டு வாசித்து விளங்க வேண்டும் அவதானம் முக்கியம்! அதாவது 1980 களில் ‘கடத்தல்’ (ஆட்கடத்தல்) செய்தவர்கள் என பொருள்படும். (1984 வைகசி 14ம் திகதி என நினைக்கிறேன்)

இனி உங்களின் பதிலுக்கு வருவோம். NERUPPU on February 29, 2008 10:03 pm
//ரகு 1980 கடத்தல் செய்தது யார் தெரியுமா? குட்டிமணி, பிரபாகரன்? பாண்டி செல்வா. இந்த காலத்தில் எந்த ஒரு
அமைப்பும் நீர் சொல்லிய கடத்தக்ல் தொழில் செய்யவில்லை. ஆக உமக்கும் பிராபா மீது கோபம் உள்ளது. வெழிகாட்ட தெரியவில்லை.

ரகு கோபத்தை அடக்க கூடாது அது சிறுநீரகத்தை பாதிக்குமாம். இதை கழகம் சொல்லவில்லை மருத்துவம் சொல்லுகிறது. ரகுநீர் யாரை வேண்டுமானாலும் ஆதரியும் அது உமது உரிமை. ஆனால் கொலையை மட்டும்
தயவு செய்து ஆதரிக்க வேண்டாம். நட்புடன் நெருப்பு அல்ல நெருப்பு.//

மாட்டைப்பற்றி 10 வசனம் எழுதவும் என்றால் மாட்டைப்பற்றி தெரிந்த 5 வசனம் எழுதி பின்னர் மாட்டைக் கொண்டுபோய் மரத்தில் கட்டி மரத்தைப்பற்றி மிகுதி 5 வசனம் எழுதும் விளையாட்டை இனி ஆவது விடுங்கள்!!!

நெருப்பு சிறுநீரகம் போனால் ஆள் தொலைந்தார், பரவாயில்லை. கருத்தை மாற்றி வலிந்து கருத்தைத் திணித்தால் சமுகமே தொலைந்தது. இது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை கழகத் தோழரே!!!!
28. ரகு on March 1, 2008 12:05 am

///….ரகு 1980 கடத்தல் செய்தது யார் தெரியுமா? குட்டிமணி, பிரபாகரன்? பாண்டி செல்வா……நட்புடன் நெருப்பு அல்ல நெருப்பு….//
எழுத்து உத்தமம். அவதானம் மத்திமம். அவசரப்பட்டு விடை எழுதுவது தவிர்க்கப்பட வேண்டும். மேலும் திருந்த இடமுண்டு. வகுப்பேற்றப்பட்டுள்ளீர்.
29. navalan on March 1, 2008 12:24 am

சின்னமே, பல சமூக அரசியல் காரணங்களால் சாதியமைப்புகெதிரான போராட்டங்கள் இந்தியாவை விட இலங்கையில் வெற்றியளித்துள்ளது என்பது என்னவோ உண்மையே. ஷண் காலத்திலிருந்த்து முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் பல சமூகக் கட்டமைப்புக்களைத் தகர்த்திருக்கிறது. 84-85 களில் கிராமிய உழைப்பாளர் சங்கத்தால் அரங்கேற்றப்பட்ட “சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்” என்ற நாடகம் 100 மேடைகள் வரை காட்சியளித்து வெற்றி கொண்டது. “சாதியின் கொடுமை எங்களை இங்கு சவுக்காலடிக்கிறது” என்ற பாடல் சினிமாப் பாடல் போல பிரபலமாகிக் கொண்டிருந்த்தது.

இது போன்ற கோட்பாட்டுடன் கூடிய பல தாழ்த்தப்பட்ட மக்களை அணிதிரட்டிய அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் இன்றும் தமது புரட்சிகர வேலைத் திட்டங்களை சிறிய அளவிலாவது மேற்கொள்கிறார்கள். ஜனநாயகமற்ற சூழலில் அவர்களால் ஒரு எல்லைக்கு மேல் நகர முடிவதில்லை.

இவர்களுக்கெல்லாம் தார்மீக ஆதரவிலிருந்து தத்துவார்த்தப் பரிமாறல்கள் உள்பட அனைத்து வைகையிலும் உதவி புரிய வேண்டும். இன்றய அரசியல் சூழ்னிலை இதற்கான ஆரம்பத்திற்கு சிறிய வெளியை ஏற்படுத்தியுளது.

சீர்திருத்த வாத இந்திய பாணி தலித்-சாதி வாத அமைப்புக்கள் நிதிநிறுவனங்களால் உள்வாங்கப்பட்டு தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டு ஏகாதிபத்தியங்களின் பயன்பாட்டிற்கு உட்படும் போது இந்த்த அலையில் இவ்வமைப்புகள் அடித்துச் செல்லப்படமுன் நாம் அனைவரும் விழித்துக் கொள்ள வேண்டும். சாதி வெறியர்களுக்கும் சாதிவாதிகளுக்குமெதிராக நாம் விழிப்படைய வேண்டும்.
30. London Suthakini on March 1, 2008 12:48 am

நன்றி நாவலன், யார் ஏதை சொன்னாலும் உண்மை என்ற ஒன்று இருக்கிறது. திட்டமில்லாத தேவையற்ற ஓர் திசை திருப்பு தேசவிடுதலைப் போராட்டம் என்ற கோசத்தை தம்பி எண்டவன் கள்ளக் கடத்தல் அண்ணையளோட சேர்ந்து ஸ்ரண்ட் றெண்ட்டுல செய்ய தொடங்கி சேதாரமாய் எங்கட மக்கள் செத்ததும் அகதியாகி அன்னிய தேசங்களில அடைக்கலம் புகுந்து வாழ்வகளை சிதைத்துதும் தான் மிச்சம்.

அது மாதிரி இல்லாம ஏதோ ஊரில மாதிரி என்ன சாதியெண்டு தெரிஞ்ச மாதிரி எண்டு இல்லாம வெளிநாடுகள்ள ஏதோ அப்பிடி ஒரு பிரச்சனை இல்லாம கொஞ்சம் காசு இருந்தா நல்லசாதி எண்டு நிலமை கொஞ்சம் தானாய் மாறிவரேக்கை சாதிவெறி பிடிச்ச ஆக்கள் இந்த பிரச்சனையை அதாவது தலித்துக்களை தாங்கிறம் எண்டு வெளிக்கிட்டு தங்கட ஆதாயத்துக்காக தம்பியும் அண்ணையளும் தமிழரை அழிச்ச போல இவையளும் தங்கட ஆதாயத்துக்காக இந்த மக்களை யும் அவர்களின் முன்னேற்றத்தையும் குளிதோணடடிப் புதைக்கப் போகினம் இதுல சம்பந்தப் பட்ட ஆக்கள் தான் வலு கவனமாக இருக்கோணும்.
இலண்டன் சுதாகினி
31. sam on March 1, 2008 1:13 am

“NGOs selling the nation and their souls to foreigners”
H. L. D. Mahindapala reviews Dr. Susantha Goonatilake’s scholarly guide to the hidden politics of NGOs in Sri Lanka

In an incredible twist of events, leading members of the Sri Lankan civil society went all out to suppress the publication of Dr. Susantha Goonatilake’s book Recolonisation, Foreign Funded NGOs in Sri Lanka without even sighting or reading the contents. They jointly petitioned SAGE, India’s outstanding publishers of academic titles, shortly after they read a pre-publication advertisement in SAGE’s catalogue. That brief ad was enough for the members of “the civil society”(they are inseparable from NGOs) who are supposed to be the champions of freedom, liberty, democracy, to launch a concerted campaign to suppress Dr. Goonatilake’s book.

Kumari Jayawardena, a civil society activist from the Colombo University, Kumar Rupesinghe, a top NGO mudalali who refused to reveal his dollar income in public, Jayadeva Uyangoda who theorises on dividing Sri Lanka and the rest of the world into micro states based on his half-baked, pseudo-Marxist political science, are some of the signatories who had no qualms in suppressing the publication of a book that exposed their uncivil society. Rupesinghe even threatened to take legal action if the book was published. To gang up against a fellow-academic simply because the book was not to their liking reveals, among other things, the depth of moral corruption in Sri Lankan civil society. To be continued
- Asian Tribune -
32. அப்பு on March 1, 2008 8:25 am

//இங்கு தேச விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்ட எந்த மார்க்ஸிய கம்யூனிச அரசியலுடனும் தொடர்பற்றிருந்த, பொதுவாக மார்க்ஸியத்திற்கு எதிரான இனவாத அமைப்புகளில் இருந்தவர்கள் மட்டுமே புலம்பெயர் நாடுகளில் சாதிவாதத்தை முன்வைக்கிறார்கள். இவர்களெல்லாம் இன்று தலித்தியத்தைக் கையிலெடுத்து முரண்பாடுகளைத் திட்டமிட்டுக் கூர்மைப்படுத்தும் ஆபத்தான பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.//
Note:it`s true.talitism should be removed among the tamils.
33. சுப்பு on March 1, 2008 8:55 am

//மானிப்பாய் வெள்ளாளத் திமிரைத்தவிர வேறையொண்டும் தெரியயில்லைஇ நாவலனை விட அம்பேத்கர் படிச்சது குறைவுதான். // வெள்ளாளர் வெள்ளைக்காறனிட்டை படிச்சுப்போட்டு மானிப்பாயிலைதான் மதிலேறீக்குதிச்சு ஓடினவங்கள்.// சுகன்
யாழ்மாவட்டத்தில் எண்பது விகிதமானவர்கள் சாதி மாறியவர்கள். இதன் வரலாற்றாதாரங்கள் அதிகமாகவே இருக்கின்றன. சாதி மாறியவர்களை திரு.சுகன் போன்றவர்கள் இன்னும் வெளளாளர்கள் என்று எழுதுவதேன்?
சுப்பு
34. Rathan on March 1, 2008 8:57 am

//வகுப்பேற்றப்பட்டுள்ளீர்.//ரகு
சித்தா நெருப்பண்ணை பாஸாயிட்டார்.
35. Rathan on March 1, 2008 9:41 am

கட்டுரையின் தேசியவிடுதலை போராட்டம் பாசிசமாக வளர்ந்து தோல்வியை தழுவிக் கொண்டிருப்பதாக சொல்லும் கட்டுரையாளர் //இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் மீதான பேரினவாத அடக்குமுறை என்பது 80களின் ஆரம்பத்தில் நேரடியான ராணுவ அடக்குமுறை என்ற நிலையை அடைந்தபோது வெறும் உணர்ச்சிகளின் அடிப்படையில் சிங்கள மக்களுக்கு எதிரான போராட்டமாக அது பாசிசமாக வளர்ந்து தோல்வியைத் தழுவிக் கொண்டிருக்கிறது.// நாவலன்.

இறுதியில் தேசியபோராட்டம் என்பது தவிர்க்க முடியாதது. இந்நிலையில் சாதீய போராட்டத்தை முன்னெடுத்தால் அதை எதரி தனக்கு சார்பாக கையாண்டு தேசியவிடுதலை போராட்டத்தை முறியறியடித்து விடுவான் என்கிறார். //இன்று பிரதான முரண்பாடென்பது தேசிய முரண்பாடாகும். தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான ஒடுக்கப்பட்ட தமிழ் தேசிய இனத்தின் போராட்டமென்பது தவிர்க்க முடியாததாகும். பிரதான முரண்பாடைப் புறக்கணித்து சமூக முரண்பாடுகளான சாதீய மற்றும் பிரதேச முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்துவது என்பது பேரினவாதத்திற்குச் சார்பானதே.// இக்கருத்துடன் நான் தனிப்பட்ட ரீதியில் உடன்படுகிறேன்.

இப்போ எனது வினா என்னவெனில் பாசிச தனத்தால் தேசியவிடுதலை போராட்டம் தோற்பது உண்மையானால்(?) சாதீய போராட்டத்தால் தேசீயவிடுதலை போராட்டம் தோற்கடிக்கபட்டுவிடுமென சொல்வது பொய்தானே?
ஆக வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் தேசவிடுதலை போராட்டத்தை எதிர்ப்பதன் மூலம் நீங்கள் அடைய நினைக்கும் சுயலாபத்தை சாதீயபோராட்டம் இடைஞ்சல் படுத்துகிறது என்பதுதான் உண்மை.
36. NERUPPU on March 1, 2008 9:54 am

ரகு நான் 5ம் வகுப்புவரை படிக்கவில்லை. அதனால் எனக்கு நீர் எழுதியது புரியவில்லையோ தெரியாது. ஆனால் உம்முடைய கேள்வி எதுவாயினும் எனது பதில் சரியென நினைக்கிறேன்.

மாட்டைப் பற்றி 10 வசனம் எழுதவும் என்றால் மாட்டைப்பற்றி தெரிந்த 5 வசனம் எழுதி பின்னர் மாட்டைக் கொண்டுபோய் மரத்தில் கட்டி மரத்தைப்பற்றி மிகுதி 5 வசனம் எழுதும் விளையாட்டை உதாரனத்துக்கு நாம் புலி பற்றி கேட்டால் அதற்க்கு ப்தில் சொல்லாமல் மற்றவர்கழும் இதைசெய்வதாகவும் புருடா விடுவது போல்தானே?

//1980 களிலேயே ‘கடத்தல்’ செய்தவர்கள் 1990 களில் நடந்த ராஜீவ் கொலைக்கு அழுத்தது// 5ம் வகுப்புவரை படித்த நீங்க 1980ல் நடந்ததையும், 1990ல் நடந்ததயும் ஒப்பிடுவது நல்லாவா இருக்கு. அப்படி பார்த்தாலும் இரண்டும் புலிதானே.

//அமெரிக்கர்களை கடத்தி கொலை அச்சுறுத்தல்// புலிகள் கடத்தி கடத்தி கொலை செய்தனர்; செய்கின்றனர்; செய்வார்க புலிகள்.?????????

இறைவன் தமிழைரை படைத்தானா? அவந்தான் புலிகளை படைத்தானா? புலிகளை படைத்தது அவனென்றால் இறைவன் என்பவன் புலிதானோ?
37. NERUPPU on March 1, 2008 10:25 am

நாவலரின் கருத்துடன் எனக்கும் உடன்பாடு உண்டு. காரணம் இந்தியாவின் சாதிய பிரச்சனை வேறு. எமது நாட்டின் சாதி என்பது வேறு. இந்தியாவில் சாதி பிரச்சனையை வழர்ப்பது அந்தந்த சாதியின் தலமையே. அவர்களை பின்பற்றி எம்மிலும் சிலர் தம்மை ஒரு தலமையாக கொண்டு சில பிரச்சனைகளை உருவாக்க முயற்ச்சி செய்கின்றனர்.

எம்மை மதிப்பவரை மதிப்போம். எம்மை மிதிப்பவரை வெறுப்போம். எந்த சாதியாக இருந்தாலும் கஸ்ற்றபடும் மனிதருக்கு உதவ முயற்ச்சிப்போம். இந்தியாவின் முட்டாள்தனமான சாதிபாகுபாட்டில் நாமும் விழவேண்டாம். சுகன் நீங்க முதல் உம்மிடம் இருக்கும் சாதி திமிரை அடக்கி (எந்த சாதியென்றாலும்) மனிதனாக சமுதாய முன்னேற்றத்துக்கு உமது கருத்தை சொல்லுவது நன்று.

சாதி போராட்டத்தை விட ஏழை மக்களின் (அனைத்து) வாழ்வே உடனடியாக தீர்க்கபட வேண்டும்.
38. mukunthan on March 1, 2008 10:34 am

//”நாங்கள் தலித்துகளிற்கு விடுதலை பெற்றுக் கொடுத்துவிடுவோம் அதற்கான வேலைத் திட்டம் எங்கள் கையிலிருக்கிறது’ என்றெல்லாம் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியோ அதன் ஆதரவாளர்களோ ஒருபோதும் சொன்னதில்லை. “// சோபாசகதி.
அரசியல் அற்ற வெற்றுக் கோம்பைகள் எப்போதும் ஆபத்தானவர்கள். மக்களே விழிப்பாயிருங்கள்.
39. Suman on March 1, 2008 10:50 am

நாவலன் அண்ணை இனங்களின் சமத்துவத்துக்கும் சமாதானத்துமான குழுவுக்கு யாரிட்டையிருந்து காசு வருது ?.
40. thurai on March 1, 2008 11:10 am

//சாதி போராட்டத்தை விட ஏழை மக்களின் (அனைத்து) வாழ்வே உடனடியாக தீர்க்கபட வேண்டும்.//Neruppu
மிகவும் முக்கியமான் விடயம். இலங்கை வாழ் மக்கள் அனைவரும் இதனைப் பற்றி சிந்தித்து செயற்பட்டால்
சாதிப் பிரச்சினயும்,மொழிப் பிரச்சினயும் காலப்போக்கில் இல்லாமல் போய்விடும்.
துரை
41. Rathan on March 1, 2008 12:39 pm

// யார் ஏதை சொன்னாலும் உண்மை என்ற ஒன்று இருக்கிறது// இலண்டன் சுதாகினி.
நாங்களும் இதைதான் சொல்லுகிறோம் மண்ணில் மக்களிடன் நின்று போராடும் அமைப்பு புலிகள் மட்டுமே: மற்றவை சும்மா சவுண்ட் பார்ட்டிகள். அதிலும் போலியாய் மார்க்சிசத்தை பிளந்து கட்டுறவை வெத்து வேட்டுக்கள்.

//திட்டமில்லாத தேவையற்ற ஓர் திசை திருப்பு தேசவிடுதலைப் போராட்டம்// தேசவிடுதலை போராட்டத்தின் தேவையை திரு நாவலன் மறுக்கவில்லை. உங்கடை தமிழ் தேசிய எதிர்ப்பை ஏன் அவரின் தலையில் சுமத்துகிறீர்கள்.

//தம்பி எண்டவன் கள்ளக் கடத்தல் அண்ணையளோட சேர்ந்து ஸ்ரண்ட் றெண்ட்டுல செய்ய தொடங்கி சேதாரமாய் எங்கட மக்கள் செத்ததும் அகதியாகி அன்னிய தேசங்களில அடைக்கலம் புகுந்து வாழ்வகளை சிதைத்துதும் தான் மிச்சம்.//
இந்தியாவிற்கு பயிற்சிக்கு போனவர்கள் அத்தனை பேரும் கள்ள கடத்தலாய்தான் போனாவை. மேற்குலகிற்கு அகதியாய் வந்தவையின் நிலையும் அதுதான். 1956ல் தொடங்கி 1977 வரை நடந்த தமிழின அழிப்புக்கு யாராம் காரணம்? எஐமான சேவகத்திற்கு உங்களை மிஞ்ச ஆட்களில்லை. வெளிநாட்டிற்கு வந்து வாழ விரும்பினவை நல்லாய்தான் வாழியினம். கெட்டு போனவைக்கு அவர்களின் தனிமனித நடத்தைதான் காரணமே தவிர தேசிய விடுதலைப் போராட்டமில்லை.

// சாதிவெறி பிடிச்ச ஆக்கள் இந்த பிரச்சனையை அதாவது தலித்துக்களை தாங்கிறம் எண்டு வெளிக்கிட்டு தங்கட ஆதாயத்துக்காக..// இவை மாதிரிதான் மாற்று கருத்துகாரர்களும் தங்கட சொந்த ஆதாயத்திற்கு புலியெதிர்ப்பை செய்யினம். இவையும் தமிழ்தேசிய விடுதலைக்கு மிக ஆபத்தனவர்கள்.
42. sam on March 1, 2008 1:16 pm

தேசத்திற்கு ஒரு ஆலோசனை: இலங்கையில் இந்த ஆபத்தான தன்னார்வ நிதி நிறுவனங்களின் காலடிகுள் நசிந்து விடாமல், சாதிவாதத்தையும் சாதி வெறியையும் தூண்டாமல் தோழர் செந்தில்வேல் போன்ற ஒரு சிலர் மக்கள் மத்தியில் வேலைசெய்கிறார்கள். இவர்களை ஊக்குவிக்க வேண்டும். இல்லையெனில் சாதிவாதிகள் நிதி நிறுவனங்களோடு இலங்கை வரை வியாபித்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தலித் பட்டமளிப்பு விழா நடாத்தி தனிமைப்படுத்தி அதில் அவர்கள் லாபம் சம்பாதித்துக் கொள்வார்கள்.

(ஈராக்கைப் பாருங்கள் இந்த சாதிவாதிகள் போன்று அன்னிய தேசங்களில் முரண்பாடுகளைத் தூண்டிவிடும் வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்களே இன்று ஈராக்கின் ஆட்சியாளார்களும் புதிய குழப்பங்களின் பிரம்மாகளுமாயி இருக்கிறார்கள்.) நாம் அனைவரும் செந்தில்வேல் போன்றவர்களுக்கு எம்மாலான ஆதரவுத் தளத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

இதன் ஆரம்பமாக தேசம் வாசகர்களிடம் அவர்களின் பத்திரிகையான புதிய பூமிக்கு ஏன் சந்தா சேர்த்து அனுப்பக் கூடாது? இதற்கான அறிவிப்பை சொக்கனிலிருந்து சிறுவர்கள் வரை தெரிந்துகொள்ளும்படி தேசம்னெற்றில் ஏன் பதிவிடக்கூடாது?

ஜெயபாலன், உங்கள் அபிப்பிராயமென்ன?
43. Rathan on March 1, 2008 1:33 pm

//நாவலன் அண்ணை இனங்களின் சமத்துவத்துக்கும் சமாதானத்துமான குழுவுக்கு யாரிட்டையிருந்து காசு வருது ?.// என்ன சுமன் அடிமடியிலேயே கையைவைச்சிட்டிங்கள். நதிமூலம் ரிசிமூலம் ரகசியமானது. தலித் மேம்பாட்டு முன்னனிகாரங்கள்தான் தொழிலிக்கு இடைஞ்சலாய் இருக்கெனப் பார்த்தால் சுமன் போன்றோரும் சிக்கலை தந்துவிடுவார்கள் போலை.

ம்ம் இனங்களின் சமத்துவத்துக்கும் சமாதானத்துமான குழு எதற்கும் கண்ணூறு நாவூறிற்கு ஒரு பரிகார பூசையொன்று வையுங்கோ. ஈழபதீசுவரர் இதற்கு விசேடமானவர். எதோ யோசிச்சு செய்யுங்கோ.
44. Nruppu on March 1, 2008 1:48 pm

ரதன் உலகத்தில் எந்த நாடாக இருந்தாலும் ஒரு எதிர் கட்ச்சி இருக்கும். ஆனால் தமிழீழம் (கிடைக்காது) கிடைத்தால் அதற்க்கு எதிர் கட்ச்சி உண்டா? அப்படியாயின் அது யார்? இந்த ஜரோப்பாவுக்கு வந்த பின்னும் ஏன் அராசக போக்கை ஆதரிக்கிறீரோ தெரியவில்லை.

ரதன் எமக்கு உமது கருத்து மாற்று கருத்து… உமக்க எமது கருத்து மாற்று கருத்து…..

எந்த நிலையில் இருந்து பார்க்கிறீரோ அப்படிதான் மாற்று கருத்தோ மாட்டு கருத்தோ தெரியும். எமது கருத்து மாறாது
காரனம் அது எம்முடையது.. உமது கருத்து அடிக்கடி மாறும். ஏனென்றால் அது உமது கருத்தல்ல..

நேற்றய கருனா அம்மான் இன்றய துரோகி…… இன்றய பொட்டு அம்மான் நாளைய துரோகி….. வாய்ப்பு இருக்கே.
45. Varathan on March 1, 2008 5:19 pm

இந்தியாவின் சுயநலத்திற்கு ஈழநலனை பலியிட்டு மாகணசபையில் பதவிபெற்று சொத்துசுகங்கள் சேர்த்தும் அல்லாமல் துணைக்குழு அரசியலின் ஆரம்ப கர்த்தாக்கள். எங்கள் கண்முன்னே இவ்வளவையும் நடத்தி முடித்த ஒரு துணைக்குழு அமைப்பை முன்னோடி அமைப்பென வர்ணிக்கும் உங்களிடமிருந்து ஆக்கமான செயல்பாட்டை எதிர்பார்ப்பது அபத்தமே.”

தமிழர்களின் சுயாதிபத்தியத்தை இழந்த அரசியல் நடத்தைக்கும் ஈபிஆர்எல்எவ் (1986) தடைசெய்ய முன்பாக உடைவதற்கு முன்னர் பல திசைகளில் முற்போக்கு சக்திகள் செயற்பட்டன அவை வலதுசாரிகளால் கைப்பற்றப்பட்டது. இது வரலாறு ஆக; வரலாறு பற்றி எழுதுகின்ற போது காலங்களும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியாதாகும்.

வரதர் சுரோஸ் குழுவினர் தலைமையை கைப்பற்றும் முன்னர் பல காத்திரமான அரசியல் திட்டங்களை கொண்டிருந்தது. அதனை செயற்படுத்த முடியாது போனது வர்க்கச் சக்திகளின் பலவீனம்தான். ஆக இபிஆர்எல்எவ் வலது சாரியத்தின் பக்கம் சென்று சிதைந்து போய்விட்டது. அதே வேளை இன்று எவருக்கும் ஈபிஆர்எல்எவ் என்று அழைக்கும் தகுதியில்லை.

புத்தூர் என பல இடங்களிலும் முன்னர் சாதியப் எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டது கவனத்தில் எடுக்க வேண்டும். இன்று சாதிய அமைப்புக்களும் சரி புலியெதிர்ப்பு பிரிவினரும் சரி இனமுரண்பாடே முக்கிய பிரச்சனை என்று ஏற்றுக் கொள்ளாதவரை பிற்போக்கு அரசியல் சார்ந்த நிலையைத் தான் எல்லோரும் பின்பற்றுகின்றனர்.
46. Rathan on March 1, 2008 5:47 pm

//தேசத்திற்கு ஒரு ஆலோசனை: இலங்கையில் இந்த ஆபத்தான தன்னார்வ நிதி நிறுவனங்களின் காலடிகுள் நசிந்து விடாமல்இ சாதிவாதத்தையும் சாதி வெறியையும் தூண்டாமல் தோழர் செந்தில்வேல் போன்ற ஒரு சிலர் மக்கள் மத்தியில் வேலைசெய்கிறார்கள். இவர்களை ஊக்குவிக்க வேண்டும். இல்லையெனில் சாதிவாதிகள் நிதி நிறுவனங்களோடு இலங்கை வரை வியாபித்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தலித் பட்டமளிப்பு விழா நடாத்தி தனிமைப்படுத்தி அதில் அவர்கள் லாபம் சம்பாதித்துக் கொள்வார்கள்//

இப்ப சாம் என்ன சொல்ல வாறார் என்றால் திரு சி கா செந்தில்வேல் இலங்கையில்தான் இருக்கிறார் அவரால் இனங்களின் சமத்துவத்திற்கும் சமாதானத்திற்குமான குழுவின் பிழைப்புக்கு எந்த இடைஞ்சலும் வராது ஆனால் தலித்மேம்பாட்டு முன்னனிகாரர்கள் தான் பிழைப்பில் பங்கு போட வருகிறார்கள். இதற்கென்ன செய்யலாம். ஒரு பெரியகோட்டிற்கு அருகில் அதைவிடபெரிய கோடு வரைந்து விட்டால் முதல்கோடு சின்னன் ஆகிவிடும் என்ற தந்திரம்தான் இதற்கு சரிப்பட்டு வருமென்பதால் புதிய பூமியை இலண்டனுக்கு இறக்கிவிட்டால் தலித்மேமம்பாட்டு முன்னனிக்கு ஆப்பாகும்.

இனங்களின் சமத்துவத்திற்கும் சமாதானத்திற்குமான குழுவின் தொழிலுக்கு எந்த இடைஞ்சலுமில்லை. ஐடியா எப்படி? சூப்பருங்கோ.
47. Rathan on March 1, 2008 6:14 pm

//இன்று சாதிய அமைப்புக்களும் சரி புலியெதிர்ப்பு பிரிவினரும் சரி இன முரண்பாடே முக்கிய பிரச்சனை என்று ஏற்றுக் கொள்ளாதவரை பிற்போக்கு அரசியல் சார்ந்த நிலையைத் தான் எல்லோரும் பின்பற்றுகின்றனர்.//
மிகச் சரியான பார்வை வரவேற்கிறேன். இதை இனங்களின் சமத்துவத்திற்கும் சமாதானத்திற்குமான குழுவினரும் விளங்கொள்ளனும் தலித்மேம்பாட்டு முன்னனிகாரர்களும் விளங்கி கொள்ளனும். காலமறிந்து பயிரிடுவதால்தான் நிறைவான பலனை பெறலாம்.
48. Rathan on March 1, 2008 6:28 pm

//ஆனால் தமிழீழம் (கிடைக்காது) கிடைத்தால் அதற்க்கு எதிர் கட்ச்சி உண்டா// நெருப்பு உங்களவில் கிடைக்காத ஒன்றை பற்றியேன் அக்கறைப்படுகிறீர்.

//உமது கருத்து அடிக்கடி மாறும். ஏனென்றால் அது உமது கருத்தல்ல..// ஆஆ அப்படியா சோதிடமேதை நெருப்பு.

//இன்றய பொட்டு அம்மான் நாளைய துரோகி….. வாய்ப்பு இருக்கே.// நெருப்பு சாத்திரியார் சாத்திரம் அப்படிச் சொல்லுதோ.
49. sam on March 1, 2008 7:18 pm

வரதன்: ஈ.பீ.ஆர்.எல்.எப் என்ற அமைப்பின் 1984 இற்குப் பின்னான மாற்றம், அதன் ஆரம்ப அமைப்பு முறை என்பன உடபட பல விடயங்கள் மறு ஆய்விற்குட்படுத்தல் என்பது எதிர்காலத்தில் தேச விடுதலை இயக்கங்களுக்கு பெரும் படிப்பினையாக அமையும். இந்த அமைப்பிலிருந்த தோழர்கள், நடைபெற்ற உட்கட்சிப் போராட்டங்கள் தொடர்பாகவும், எவ்வாறு சுரேஷ் போன்ற நயவஞ்சகர்கள் தலைமையைக் கைப்பற்றினார்கள் என்பதையும் குழுவாதப் போக்குகளுக்கப்பால் முன் கொண்டுவர வேண்டும்.

சிறுப்பிட்டி, புத்தூர், புன்னாலைக்கட்டுவன், சங்குவேலி போன்ற பல கிராமங்களில் கூலி மற்றும் சாதிப் போராட்டங்களில் இவ்வியக்கம் பெற்ற வெற்றியை யாரும் மறந்துவிட மாட்டார்கள். வரதன், நீங்கள் அதன் உறுப்பினராயின் தேசத்தில் இது தொடர்பான கட்டுரை ஒன்றைக் கொண்டுவர முயற்சிக்கவும்.

ரதன், ரகு, தயவு செய்து புலிகளை விமர்சிபதிலிருந்து அவ்வியக்கதைச் செழுமைப் படுத்தமுடியுமா எனச் சிந்தியுங்கள். மாற்றுக் கருத்து கொண்டவர்களை எதிரியாகப்பதை விடுத்து ஒரு புதிய கருத்தை உருவாக்குவதில் எவ்வாறு பங்காற்ற முடியும் எனச் சிந்தியுங்கள்.
50. MILLAR on March 1, 2008 8:51 pm

//”நாவலன் அண்ணை இனங்களின் சமத்துவத்துக்கும் சமாதானத்துமான குழுவுக்கு யாரிட்டையிருந்து காசு வருது ?”.//
சுமன் இந்த ஆட்கள் எழுதுறதை பாத்தா இவஙகளுக்கு ஆரும் காசு கொடுப்பாங்கள் மாதிரி தெரியேல்லை. இவைக்கு அடிபோட சொல்லித்தான் ஆரும் காசு கொடுக்க சானஸ் இருக்கு.
51. Suman on March 1, 2008 8:57 pm

நாவலன் அண்ணை திருப்பியும் கேக்கிறன். உங்கடை கொம்பனிக்கு ஆரிட்டையிருந்து காசு வருது? நீங்கள் இன்ன இன்ன கொம்பனியளுக்கு ஆர் ஆரிட்டையிருந்து காசு வருது எண்டு விலாவாரியா வெளிப்படுத்தியிருந்தியள். ஆனால் உங்கட கொம்பனிக்கு ஆரிட்டையிருந்து காசு வருது எண்டு இன்னும் சொல்லிறியளில்லை.

அண்ணை நீங்கள் பழைய டெலோ எண்டு சொல்லினம். உணமையோ அண்ணை? நீங்கள் டெலோ எண்டதை மறைச்சு பாசறை எண்டு கதை விடுறியள் எண்டும் கதைக்கினம். உண்மையோ அண்ணை? மண்டான் பிரச்சனையிலை நீங்கள் என்ன நிலைப்பாடு எடுத்தனியளண்ணை? நீங்களும் ஒரு பழைய என்.ஜி.ஓ. எண்டது உண்மையோ அண்ணை?
52. Rathan on March 1, 2008 9:06 pm

//ரதன், ரகு, தயவு செய்து புலிகளை விமர்சிபதிலிருந்து அவ்வியக்கதைச் செழுமைப் படுத்தமுடியுமா எனச் சிந்தியுங்கள். மாற்றுக் கருத்து கொண்டவர்களை எதிரியாகப்பதை விடுத்து ஒரு புதிய கருத்தை உருவாக்குவதில் எவ்வாறு பங்காற்ற முடியும் எனச் சிந்தியுங்கள்.//
சாம்! 20 வருசமாய் மாற்று கருத்து என்ற போர்வையில் புலியெதிர்ப்பு துணைக்குழு அரசியலால் நாம் (பொதுமக்கள) பட்ட இழப்புகளும் வேதனைகளும் உங்களுக்கு தெரியாது. போன காலம் போகட்டும் எனியாவது மாற்று கருத்தென்ற போர்வையில் ஈழ விடுதலைக்கெதிரான அனைத்து செயல்பாட்டையும் நிறுத்துவீர்கள் ஆனால் நாங்கள் நண்பர்களே.
53. ரகு on March 1, 2008 10:14 pm

//….ரகு நான் 5ம் வகுப்புவரை படிக்கவில்லை. அதனால் எனக்கு நீர் எழுதியது புரியவில்லையோ தெரியாது. ..// அட ..பரவாயில்லையே!!! 8ம் வகுப்பு பாஸ் பண்ணாதது புலிக்கு தலமை தாங்குது எண்டு சொல்லி ‘அரசியல் ஞானம்’ படிப்பிச்ச கழகம் 5ம் வகுப்பு பாஸ் பண்ணாததுகளையே வச்சிருந்தது. நான் நினைச்சது சரியாத்தான் போச்சு.

//1980 களிலேயே ‘கடத்தல்’ செய்தவர்கள் 1990 களில் நடந்த ராஜீவ் கொலைக்கு அழுத்தது// 5ம் வகுப்புவரை படித்த நீங்க 1980ல் நடந்ததையும், 1990ல் நடந்ததயும் ஒப்பிடுவது நல்லாவா இருக்கு. அப்படி பார்த்தாலும் இரண்டும் புலிதானே. // இன்னும் 5ம் வகுப்பு கழக எலிக்கு விளங்கவில்லை. அதைச் சொல்லி என்ன பிரயோசனம். தான் 5ம் வகுப்பே படிக்கேல்ல எண்டு!
54. NERUPPU on March 1, 2008 10:19 pm

ரதன் எனது கேள்விக்கு என்ன பதில்? நான் சாமியோ சாத்திரியோ எனது பிரச்சனை. அம்மான் என புகழ்ந்த நீங்க தானே துரோகி என மல்லுகட்டிறியள்.

இதுக்கு சாத்திரம் தேவையில்லை சின்னதாய் புத்தி இருந்தாலே போதும். அது சரி ஈழம் கிடக்குமா கிடையாதா?
55. navalan on March 1, 2008 11:57 pm

சுமன், கட்டுரையில் குறிப்பிட்டது போல் சொக்கன் சிறுவன் போன்ற முகமூடிகள் கருத்துக்களுக்கு முகம் கொடுக்க முடியாத நிலையில் தனிப்பட்ட தாக்குதல்களை மேற்கொள்ளுவார்கள் என்பதை நான் முன்னமே எதிர்பார்த்துத் தான் கட்டுரையைப் பதிவு செய்திருந்தேன். இதில் வேடிக்கை என்னவென்றால் ரகு ரதன் போன்ற புலி சார்பான கருத்துக்களை முன்வைப்பவர்களே அநாகரீகமான தனிமனித தாக்குதல்களை மேற்கொள்வதில்லை. நான் அரசியலை வியாபாரமாக்கும் ஒரு வியாபாரியோ; இல்லை கார் மோதிய காரணத்திற்காக தலைவருடன் பிரச்சனைப்பட்டுக் கொண்டு மாற்று அர்சியலுக்கு வந்த்தவனோ இல்லை. தவிர நான் தனிப்பட்ட ரீதியில் யாரையும் தாக்கியதுமில்லை. எனக்கு போதியளவு கருத்துப் பலமும் தன்நம்பிக்கையுமுண்டு நண்பர்களே!

உங்களுடைய கடந்தகால அரசியல் வரலாற்றின் தொடர்ச்சியான இசைவாக்கமடைந்த மனோபவத்தினூடான அனுமானங்களில் அடிப்படையில் என்.ஜீ.ஓ களில் பணம் பெறுவதாக நான் எழுதியதாகவே ஊகித்துக் கொண்டிருக்கிறீர்கள். இது தொடர்பான எனது கருத்து கட்டுரையில் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது. சில சமையங்களில் நகைச் சுவையுடன் தனிப்ப்ட்ட தாக்குதல்களை மேற்கொள்ளாமல், கருத்துக்களை முன்வைத்ததுண்டு, பின்னர் இது தொடர்பான நபர்களிடமும் அது என்னுடைய கருத்துக்கள் என்பதையும் நேரடியாகத் தெரிவித்திருந்தேன். தலித் முன்னணி - புலியெதிர்ப்பு ஆதரவாளர் ஒருவர் எனது கருத்துக்களை மாற்றிக்கொள்ளுமாறு நேரில் மிரட்டிய போதும் - நான் அதுபற்றி இங்கு மேலும் குறிப்பிட விரும்பாத போதும் - இதே கருத்துக்களைத் தான் அனுமானங்களடிப்படையில் முன் வைத்தார். தொடர்ந்து முகமூடிகள் எனக்கெதிராக தனிப்பட்ட தாக்குதல்களை முன்வைக்கின்றனர்.

மேலும், எனது நூல் வெளியீட்டின் போதுமட்டும் நான் ரெலோ என்ற அமைப்புடன் செயற்பட்டதாகக் கூறியிருந்தேன், தவிர வேறு எந்த அமைப்புக்களிலும் செயற்பட்டதாக நான் எந்த சந்தர்ப்பத்திலும் கூறியதாக நினைவில்லை.

இனங்களுக்கும் சமத்துவத்திற்கும் நீதிக்குமான குழு என்பது எந்த நாட்டிலும் பதிவுசெய்யப்பட்ட அமைப்பல்ல. பதிவு செய்யும் நோக்கமும் எமக்கில்லை. எனவே உங்களிடம் பணம் இருந்தால் அனுப்பிவைக்கவும்.
எனக்கும் என்.ஜீ.ஓ இற்கும் எப்போதும் எந்தத் தோடர்பும் இருந்ததில்லை.

உங்களுக்கு கருத்திற்கு முகம் கொடுக்க முடியாத நிலையில் தனிநபர் தாக்குதல்களை மேற்கொள்கிறீர்கள். நீங்கள் இதில் அம்பலப்படுத்தப் படுகிறீர்கள் என்பது வேறு விடையம். கலை என்ற ஒருவர் முன்னர் தனது பின்னூட்டத்தில் குறிப்பிட்டதுபோல், நானும் உங்களைக் கேட்டுக்கொள்வது இதுதான் ” எப்போது மனிதர்களாக மாறப் போகிறீர்கள்”?

உங்களிடமிருந்து நேரடி மிரட்டல்களையும் இணைய ரவுடித் தனத்தையும் நான் சந்திக்கத் தயார்!
56. sakunthalan on March 2, 2008 12:19 am

Dear Suman, While the writers views should be intellectually contested at an intellectual level, attacking him on a personal level is stooping down to hitting below the belt and only reflects on the low incapacitated childlike intellect of attacker!! i think that your high skilled political business is disturbed by navalan’s views?!
Sakunthalan
57. Rathan on March 2, 2008 8:47 am

//இதுக்கு சாத்திரம் தேவையில்லை சின்னதாய் புத்தி இருந்தாலே போதும்// நெருப்பு.
நீங்கள் சின்னப் புத்தியுள்ள மனிதர்தான் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம்தான்.

//அது சரி ஈழம் கிடக்குமா கிடையாதா?// எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவது இழுக்கு. இந்தப் பொலிசியுள்ள எங்களிற்கு கைக்கெட்டிய தூரத்தில் தமிழீழம். துணைக்குழு பொலிசியுள்ளவர்களுக்கு “கலியாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் கெளரவ பிரசாதம் இதுவே எமக்கு போதும்” தமிழீழம் எதற்கு?
58. NERUPPU on March 2, 2008 9:33 am

என்ன கொடுமை சார் இது. புலியே பல இடங்களில் (பேச்சுவார்த்தையில்) தமிழீழம் இல்லாத சில தீர்வு திட்டங்களை முன் வைத்ததாக படித்தேன். அதுசரி அவைக்கு தெரியுமா ரதன் நிலைபாடு. நடேசர் பொறுப்புக்கு வந்த பின் கூட ஒரு பேட்டியில் நாம் தனி தமிழீழம்தான் வேண்டுமென கேத்கவில்லை. ஆனால் தமிழ் மக்கள் சுகந்திரமாக வாழ ஒரு தீர்வு திட்டத்தை இந்தியா முன் வைத்தால் தாம் அந்த பேச்சுவார்த்தயில் கலந்து கொள்ள காத்திருக்கிறோம் என சொன்னாரே?

சரி அதை விடுவோம். புலியும் அரசும் பல பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதை இந்த உலகமே அறியும். எதாவது ஒரு பேச்சுவார்த்தையில் தமிழீழம் தான் எமது ஒரே நிலையென புலி சொல்லியதா? ஆக புலியே கைவிட்ட ஒன்றை ரதன் பிடித்திருப்பது சரியல்ல.

தமிழீழம் கேட்டது உன்மை, தமிழீழம் கேட்டு போராடியது உன்மை. தமிழீழத்தை அனைவரும் நேசித்தது உன்மை. அத்தனையையும் புலிகள் அழித்தது உன்மை.

இன்று…..
தமிழீழம் என்பது ரதனின் கற்பனைதான்….
இல்லை என்பது நெருப்பின் எதார்த்தமோ…….
59. NERUPPU on March 2, 2008 9:43 am

ரகு படிக்கத எமக்கு. படித்த நீங்க புரியுபடி எழுத வேண்டாமா? ரயாவின் காட்டுரகள் அடிகடி படிக்கும் பழக்கம் உண்டோ. ரகு என்னதான் சொல்லும்: புலி புழி ஆகி பல காலம், புலி புழி ஆகும் பார்த்தோமே… புழி புலி ஆகுமா பார்ப்போமே…..
60. Rathan on March 2, 2008 10:06 am

// 1980 கடத்தல் செய்தது யார் தெரியுமா? குட்டிமணி பிரபாகரன்? பாண்டி செல்வா. இந்த காலத்தில் எந்த ஒரு அமைப்பும் நீர் சொல்லிய கடத்தக்ல் தொழில் செய்யவில்லை// நெருப்பு
நெருப்பண்ணா, ரகு சொன்னது 1980களில் தாயகத்தில் நடந்த ஆள் கடத்தல்கள் பற்றி நீங்கள் கள்ளக் கடத்தலிலை நிற்கீங்கள். நெருப்பு எனிமேலைக்கு காலைப் பொழுதிலை கருத்து களத்திலுள்ளதை வாசியுங்கோ. குழப்பம் வராது.

//ஆனால் படித்த பலர் எனது நண்பர்களக உள்ளனர். அவர்கள் சொன்னார்கள் ஒரு இடத்தை பிடிக்கும் போது அந்த இடத்தை பாதுகாக்கும் பலம் (ராணுவம் பொருளாதாரம் மருத்துவம் மக்களாதரவு நிலப்பரப்பின் கணிப்பு தேவையான ஆமினேசன் ஆள்பலம்; எதிரியின் பலம் எமது பலவீனம் இவை அனைத்தும் மிக நிதானமாக அறியபட வேண்டுமாம்.//
இவர்களின் கதையை இப்பவும் கேட்கிறீங்களோ. பட்டும் உங்களிற்கு புத்தி தெளியவில்லை. புளொட்டின் தோல்விக்கு இந்த வெறும் இராணு தியறிகாரர்களும் ஒரு காரணம். தியறிகள் எப்போதும் நடைமுறை சாத்தியப்படாது. சும்மாவே சொன்னவை ஏட்டுச்சுரக்காய் கறிக்குதாவதென்று. அந்த இராணுவநிபுணர்களிடம் கேளுங்கோ மக்கள் ஆதரவை(?) பெருமளவில் கொண்டிருந்தாக பிலிம் காட்டியதுணைக்குழுக்களின் உதவியுடன் வந்த 120 000 இந்திய இராணுவம் ஏனாம் புலிகளிடம் தோல்வி கண்டவர்களாமென? .
61. Rathan on March 2, 2008 10:57 am

// புலியே பல இடங்களில் (பேச்சுவார்த்தையில்) தமிழீழம் இல்லாத சில தீர்வு திட்டங்களை முன் வைத்ததாக படித்தேன். அதுசரி அவைக்கு தெரியுமா ரதன் நிலைபாடு. நடேசர் பொறுப்புக்கு வந்த பின் கூட ஒரு பேட்டியில் நாம் தனி தமிழீழம்தான் வேண்டுமென கேத்கவில்லை. ஆனால் தமிழ் மக்கள் சுகந்திரமாக வாழ ஒரு தீர்வு திட்டத்தை இந்தியா முன் வைத்தால் தாம் அந்த பேச்சுவார்த்தயில் கலந்து கொள்ள காத்திருக்கிறோம் என சொன்னாரே?

சரி அதை விடுவோம். புலியும் அரசும் பல பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதை இந்த உலகமே அறியும். எதாவது ஒரு பேச்சுவார்த்தையில் தமிழீழம் தான் எமது ஒரே நிலையென புலி சொல்லியதா? ஆக புலியே கைவிட்ட ஒன்றை ரதன் பிடித்திருப்பது சரியல்ல//நெருப்பு

நீங்கள் அண்ணை அரைகுறை அவதானிப்புகாரர். சமாதான(?) மூடாக தமிழரின் விடுதலைக்கு சாவு மணியடிக்க நிற்கிறவைக்கு அவையின்ரை பாணியிலை பதில் சொல்வதுதான் புத்திசாலித்தனம். எதை சொன்னாலும் கடைசியாய் ஒரு வரியை புலி ஒருபோதும் மாற்றுவதில்லை “புலிகளின் தாகம் தமிழீழதாயகம்” இதுதான் புலிகளின் இலட்சிய தாரகமந்திரம்.

//தமிழீழம் என்பது ரதனின் கற்பனைதான்…இல்லை என்பது நெருப்பின் எதார்த்தமோ……..// தமிழீழம் என்பது ரதன் போன்ற தமிழரின் தாயகம் அதை இல்லையென எதிர்ப்பது எட்டப்பர்களின் எத்தனம்.
62. thurai on March 2, 2008 11:10 am

//120 000 இந்திய இராணுவம் ஏனாம் புலிகளிடம் தோல்வி கண்டவர்களாமென? .//ரதன்

புலிகளை விட்டு வைத்தால் தான் தமிழீழப் போர் பலவீனமடைய உதவியாக இருக்குமென இந்தியா முன்கூட்டியே அறிந்திருந்தது. புலியிடம் இந்திய ஆமி தோற்றதை விட புலியை வன்னிக்குள் முடக்கி தமிழீழப் போரை புலியின் உயிர்மீட்கும் போராக்கி விட்டதில் வெற்றி பெற்றுவிட்டது.
துரை
63. Varathan on March 2, 2008 12:13 pm

சிறுப்பிட்டி புத்தூர் புன்னாலைக் கட்டுவன் சங்குவேலி போன்ற பல கிராமங்களில் கூலி மற்றும் சாதிப் போராட்டங்களில் இவ்வியக்கம் பெற்ற வெற்றியை யாரும் மறந்துவிட மாட்டார்கள். //வரதன் நீங்கள் அதன் உறுப்பினராயின் தேசத்தில் இது தொடர்பான கட்டுரை ஒன்றைக் கொண்டுவர முயற்சிக்கவும்.// இங்கு கடந்த இயக்கங்களில் இருந்தவர்கள் தான் வரலாற்றை எழுத வேண்டும் என்பதில்லை. நான் அதன் இயக்கத்தை சேர்ந்தவன் அல்ல.

அனைத்து இயக்கங்களிலும் பல நேர்மையான சக்திகள் இருந்து வந்திருக்கின்றன. புளொட்டில் உட்கட்சி ஜனநாயகத்திற்காக போராடி மடிந்தவர்கள்; ஒதுங்கி வாழ்பவர்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள. இன்று வரலாறு எழுதும் போது தமது பல சாதகமான வரலாற்று தரவுகளை புலிகளுக்கு எதிராக பயன்படுத்தவே செய்வர்.
இங்கு வரலாறு எழுதுவதல்ல தற்பேுhதையை பிரச்சனை. இன்று அரசியல் வியாபாரிகளிடத்தில் இருந்து மக்களை மீட்டெடுப்பதுதான் முக்கிய பிரச்சனையாக இருக்கின்றது.

புலிகள் எமது மக்களை காட்டிக் கொடுக்க இதற்கு இணையாக புலியெதிர்ப்பு அணியினர் தமது காட்டிக் கொடுப்புகளை செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.

இதில் தன்னியல்பான வேலை முறைகளை புகுத்தி அதற்குள் குளிர்காயும் அதிதீவிரவாதம் பேசும் வலதுசாரிகளின் ஒரு பிரிவினர் தமது பசியைப் போக்கிக் கொள்ள வகுப்புவாதிகளாக உருப்பெற்றுக் கொண்டு வருகின்றனர்.
அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டுமென்று வலியுறுத்தியே றறற.வயஅடைஉசைஉடந.நெவ மற்றும் hவவி://றறற.ளசளையபயதயn.டிடழபளிழவ.உழஅ/ போன்ற தளங்கள் எழுதிக் கொண்டு வருகின்றன இவற்றை இன்றும் ஆளமாக கருத்துருவாக்கத்தை உருவாக்கிக் கொள்ள அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.
64. Varathan on March 2, 2008 12:21 pm

சாதிய ஆதிக்கம் இதோ ஒரு உதாரணம்
தடுத்த தீக்ஷிதர்கள்-சிதம்பரத்தில் பரபரப்பு!
சிதம்பரம்: தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிற்றம்பல மேடையில் இருந்து தேவாரம் திருமறை ஆகியவற்றைப் பாடியவர்களை தடுத்த தீக்ஷிதர்களை போலீஸார் குண்டுக் கட்டாக தூக்கி வந்து வெளியே விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருச்சிற்றம்பல மேடை உள்ளது. இந்த மேடையில் இருந்தபடி பக்தர்கள் தேவராம் திருமறை ஆகியவற்றைப் பாடுவார்கள். ஆனால் இதற்கு கோவில் தீக்சிதர்கள் தடை போட்டனர்.

இதையடுத்து உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தமிழக அரசு முடிவெடுத்து அறிவிக்கலாம் என தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து சிற்றம்பல மேடையில் இருந்து தேவாரம் திருமறை பாடலாம் என அரசு மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் உத்தரவைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் தொடர்ந்து போராடி வரும் சிதம்பரத்தைச் சேர்ந்த ஓதுவார் ஆறுமுகச்சாமி உள்ளிட்ட பலரும் கோவிலுக்கு திரண்டு வந்தனர்.

கோவிலில் மாவட்ட எஸ்.பி. பிரதீப் குமார் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆறுமுகச்சாமி தலைமையில் உள்ளே சென்ற ஓதுவார்கள் திருச்சிற்றம்பல மேடையில் நின்றபடி தேவாரம் பாட முயன்றனர். ஆனால் அவர்களை தீக்சிதர்கள் கும்பலாக வந்து தடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து எஸ்.பி. பிரதீப் குமார் உள்ளிட்ட காவல்துறையினர் உள்ளே நுழைந்தனர். அவர்களையும் தீக்சிதர்கள் தடுத்தனர். மேல் சட்டையைக் கழற்றி விட்டுத்தான் போக வேண்டும் என்று கூறினர். இதையடுத்து மேல் சட்டையைக் கழற்றி விட்டு உள்ளே புகுந்த போலீஸார் அங்கு தகராறு செய்த தீக்சிதர்களை குண்டுக் கட்டாக தூக்கி வந்து கோவிலுக்கு வெளியே விட்டனர்.

இதைத் தொடர்ந்து ஆறுமுகச்சாமி உள்ளிட்டோர் மகிழ்ச்சியும் பக்திப் பரவசமுமாக தேவாரம் திருமறை ஆகியவற்றைப் பாடி மகிழ்ந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.
65. Varathan on March 2, 2008 12:26 pm

சிதம்பரம் கோவில் பற்றி தொடர்ச்சியாக பல கட்டுரைகள் உரைகள் வந்திருக்கின்றன. பின்வரும் இணைத்தில போய் பாருங்கள் www.tamilcircle.net
66. Rathan on March 2, 2008 12:55 pm

//புலிகளை விட்டு வைத்தால் தான் தமிழீழப் போர் பலவீனமடைய உதவியாக இருக்குமென இந்தியா முன்கூட்டியே அறிந்திருந்தது.//
இந்தியஇராணுவ தலையீட்டுக்குப் பின் தமிழீழத்தை வேண்டிநிற்கும் ஒரே அமைப்பு புலிகள்தான். அவர்களை தோற்கடித்தாலே தமிழீழகோசம் இல்லாமல் போகும். இவ்வளவு சுலபமான வழியிருக்க இந்தியா நனைச்சு சுமப்பதாக உங்கள் மாற்றுக்கருத்து பேரறிவு சொல்லுது.
67. NERUPPU on March 2, 2008 1:36 pm

இந்தியா ஏன் புலியிடம் தோத்தது ? புலி ஒட்டுகுழு ஆனதால் (உங்கள் பாசையில்) இந்தியா இலங்கை பிரச்சனையில் இருந்து விலகியதே ஒழிய தோற்றுவிட்டது என்பது சிறுபிள்ளை தனம்.
68. Rathan on March 2, 2008 2:27 pm

இந்திய எஐமானுக்கு விழுந்தாலும் மீசையிலை மண் ஒட்டவில்லை என்கிறீர்கள். அது ஒருபக்கமிருக்கட்டும். ஏன் புலித்தலைமையை ஒழிக்க முடியவில்லை. அதாவது நீங்கள் சொன்ன கீழுள்ளவற்றில் எதில்குறைவு இருந்தது (ராணுவம் பொருளாதாரம் மருத்துவம் மக்களாதரவு நிலப்பரப்பின் கணிப்பு தேவையான ஆமினேசன் ஆள்பலம்; எதிரியின் பலம் எமது பலவீனம் இவை அனைத்தும் மிக நிதானமாக அறியபட வேண்டுமாம்.)

உங்களுடைய இராணுவ நிபுணத்துவ நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கோ?
புலித்தவைர் என்ன சொல்லுகிறர் என பாருங்கோ தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து …. ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ ஆயுதபலமோ அல்ல் அசைக்கமுடியாத மனவுறுதியும் வீரமும் விடுதலைப் பற்றமே வெற்றியைத் தீர்மானிக்கும் குணாம்சங்கள். பதிவு.கொம்
69. NERUPPU on March 2, 2008 3:17 pm

தப்பி ரதன் நீங்கள் புழியில் இருந்தாலோ அல்லது புலியில் இருந்த யாரயாவது தெரிந்தாலோ னான் சொல்லும் சம்பவம் உன்மையா? பொய்யா? என கேட்டு அறிந்த பின் உமது புராணத்த தொடர்க…

இந்தியன் அமைதிபடையுடன் புலிகள் போரிட்ட போது புலி அமைதி படையை தாக்கினாலும் அமைதிபடை பின் நோக்கி சொல்லவில்லை. இது அனைத்து மக்கழுக்கும் தெரியும். அதன் படி முனேறிய அமைதிபடை பிரபா இருந்த
(முல்லைத்திவில் இருந்து திருகோனமலை செல்லும் வழியில்) இனம் கண்டு அதை தாக்க இருந்த போது புலி
ஒட்டுகுழுவாக பிரேமதாசாவின் காலில் விழுந்து ‘ரானுவ சூத்திரம்) வேண்டாமே…… பிரேமதாசா இந்திய ரானுவத்தை அனுப்பியது உமக்கு தெரிந்தும் ஏன் இந்த புருடா?

பிரபாவை காப்பற்ற அந்த நேர தலைபதிகள் பட்ட பாடு இருக்கே. இன்றுவரை ஆனந்த சஙரிகூட இப்படி அரசின் காலைநக்க வில்லை என்பதுதான் உன்மை. பல புலியோ புழியோ நாட்டை விட்டு ஓடியதும் அந்த நேரத்தில் தான் அது ரதனுக்கு தெரியாதா?

இந்தியாவிடம் இருப்பது ராணுவம். புலிகளிடம் இருப்பதோ ஆணவம். அது வெல்லும். (போரை) இது கொல்லும்.(தமிழரை)
70. NERUPPU on March 2, 2008 3:25 pm

ஒட்டுகுழு என்பது ரதன் புரிவதற்க்காக சொன்னேன். அந்த வார்த்தையில் எனக்கு உடன்பாடு இல்லை. அந்த சொல்லை பாவித்ததற்க்கு சம்பந்தபட்டவர்கள் மன்னிக்கவும்.
71. sam on March 2, 2008 4:52 pm

நேருப்பு, ரதன், ரகு, உங்கள் பரந்த தேடலும் அவற்றை வெளிக் கொணருவதற்கான ஆர்வமும் பாராட்டத்தக்கது. ரதன், ரகு என்போர்களைப் பொறுத்தளவில் புலிகளுக்கு எதிரான பகுதிகள் ஒரு கட்டுரையிலிருந்தால் அவற்றிலிருந்து புலிகளை நியாயப் படுத்துவது தான் உங்கள் பின்னூட்டங்கள்.

நெருப்பு, இதற்கு மாறாக புலிகளுக்கு எதிரான எதையும் ஆயுதமாக்கிக் கொள்கிறார். உங்களின் தேடலையும் கருத்தையும் மேலும் செழுமைப்படுத்த விமர்சன அடிப்படையில் ஒரு கட்டுரை தொடர்பாகக் கருதுக்களை முன்வைப்பதே ஆரோக்கியமானது.
72. thurai on March 2, 2008 5:08 pm

//தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து …. ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ ஆயுதபலமோ அல்ல் அசைக்கமுடியாத மனவுறுதியும் வீரமும் விடுதலைப் பற்றமே வெற்றியைத் தீர்மானிக்கும் குணாம்சங்கள். பதிவு.கொம்//
ஒற்ருமையுடன், ஏற்ரத் தாழ்வின்றி வாழும் ஓர் இனத்தை இன்னோர் இனம் அடக்கி ஆழும்போதே, அடக்கப்படும்
இனத்திற்கு விடுதலைப் பற்று தோன்றும்.

சிங்களவர்களிடமிருந்து தமிழர்களிற்கான உரிமை கிடைக்கு முன்னே, ஈழவிடுதலைப் போராட்டம், தமிழர்களையே சுக்கு நூறாகப் பிரித்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம் தமிழரின் நலன்களில் அக்கறை கொண்ட தமிழரை விட தமிழர்மேல் ஆதிக்கம் செலுத்த ஆசைகொண்டவர்கள், சமூக ஏற்ரத்தாழ்வுகளைப் பற்றிப் பேசவோ, தலயிடவோ விரும்பாதவர்கள், தமிழரின் உரிமைபற்ரியும், ஈழவிடுதலை பற்ரியும் பேசிக்கொண்டிருப்பதுதான்.
துரை
73. ரகு on March 2, 2008 5:23 pm

நாவலன், //..இதில் வேடிக்கை என்னவென்றால் ரகு ரதன் போன்ற புலி சார்பான கருத்துக்களை முன்வைப்பவர்களே அநாகரீகமான தனிமனித தாக்குதல்களை மேற்கொள்வதில்லை..//
புலி ஆதரவு நிலை எடுப்பவர் எல்லோருமே தனிமனிதத் தாக்குதல் காரர்கள், அவ்வாறு செய்யாமல் விட்டால் அது ‘வேடிக்கை’ என தீர்மானித்துவிட்ட ‘மாற்றுக்கருத்து’ ,’நடுநிலை வாதி’ தான் நீங்கள் என காட்டியதற்கு நன்றிகள்.

நாவலன் அவர்களே புலி நேரடியாக மோதும் ஆனால் இந்த புலிக்காச்சல் கோஷ்டி இருக்கிறதே தமக்குப் பிடிக்ககதவர்களை “மார்க்சிசம் மறுத்த கருத்து”, ” மாற்றுக்கருத்து மறந்த கருத்து’ என வலிந்து நியாயப்படுத்தி போர்வைக்குள் ஒழிந்து தனிநபர் தாக்குதல் நடத்துவார்கள். எப்படி எனக்குத் தெரியும் என நினைக்கிறீர்களா? இவர்களுடன் ‘இழுபட்டு’ திரிந்தவன் நான்.
74. NERUPPU on March 2, 2008 6:33 pm

கிளினொச்சியில் பத்திரிகை மகாநாட்டில் தலைவர் பிரபாகரனிடம் இன்டியன் டுடே நிருபர் கேட்டார்.
கே: நீங்கள் தமிழீஈழத்தை கை விட்டால் யராவது ஒரு தமிழன் எனது துப்பாக்கியாலேயே என்னை சுட்டு கொல்லலாமென சொல்லியுள்ளீர்கள். அப்படியானால் இன்று தமிழீழம் அற்ற ஒரு தீர்வை முன்வைத்ததுள்ளீகள். ஆகவே அன்று சொல்லியது சரியா? இன்று சொல்லுவது சரியா?

பிரபா: அன்று சொன்னதும் அப்படியேதான் இருக்கு. மிகுதி சிரிப்பு….

இதை அன்றய பத்திரிகைகள் இது ஒரு அர்த்தமற்ற பதிலே என கூறினார்கள். ஒரு முழு குறை? ஒரு அரை குறை? புரியுதா ரதன்.

சாம் விமர்சனத்துக்கு நன்றி. முடிந்தவரை முயற்ச்சி செய்கிறோம்.
75. ammu on March 2, 2008 6:54 pm

சிங்களவர்களிடமிருந்து தமிழர்களிற்கான உரிமை கிடைக்கு முன்னே, ஈழவிடுதலைப் போராட்டம், தமிழர்களையே சுக்கு நூறாகப் பிரித்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம் தமிழரின் நலன்களில் அக்கறை கொண்ட தமிழரை விட தமிழர்மேல் ஆதிக்கம் செலுத்த ஆசைகொண்டவர்கள், சமூக ஏற்ரத்தாழ்வுகளைப் பற்றிப் பேசவோ, தலயிடவோ விரும்பாதவர்கள், தமிழரின் உரிமைபற்ரியும், ஈழவிடுதலை பற்ரியும் பேசிக்கொண்டிருப்பதுதான்.
துரை

Note:perfectly all right.
76. ரகு on March 2, 2008 6:58 pm

//…கே: நீங்கள் தமிழீஈழத்தை கை விட்டால் யராவது ஒரு தமிழன் எனது துப்பாக்கியாலேயே என்னை சுட்டு கொல்லலாமென சொல்லியுள்ளீர்கள். அப்படியானால் இன்று தமிழீழம் அற்ற ஒரு தீர்வை முன்வைத்ததுள்ளீகள். ஆகவே அன்று சொல்லியது சரியா? இன்று சொல்லுவது சரியா?

பிரபா: அன்று சொன்னதும் அப்படியேதான் இருக்கு. மிகுதி சிரிப்பு….//

அது இன்னும் அப்படியே இருக்கு என்பதுதான் உண்மை. புலிகள் சொல்லியதில் இரண்டு பகுதி உண்டென நினைக்கிறேன் முதலாவது…

1. ஈழத்துக்கு பதிலாக ஒரு தீர்வை ஸ்ரீலங்கா முன்வைக்கும் பட்சத்தில் (சமஷ்டிக்கு குறையாத) அதைப் ‘பரிசீலிக்க’ புலிகள் தயார் என்பது.
2. அவ்வாறான ஒரு தீர்வை வைக்கத்தவறும் பட்சத்தில் புலிகளுக்கு ஈழம் நோக்கிய போரில் தர்மீக ஆதரவை வழங்கவேண்டும் என்பது.
இதில் புலிகள் தம்மை சரி என நிரூபித்துள்ளனர். இன்று வரை ஸ்ரீலங்கா எதையும் முன்வைக்கவில்லை (13வது திரூத்தம் இந்தியாவுடையது).

அடுத்தது பிரபாகரனை சுட்டுக்கொல்லுதல் சம்பந்தமானது. இது பிரபாகரனுக்கும் சுட்டுக் கொல்லுபவருக்கும் உள்ள உடன்படிக்கை. அதை புலிகள் ஈழம் கைவிடப்பட்டது என தீர்க்கமாக அறிவிக்கும் போது வந்து கேளுங்கள்!

நெருப்பு, இவ்வகையான ஆக்கபூர்வமற்ற விவாதங்களை 1984இல் நிகழ்த்தியனாலேயெ மக்கள் கழகத்துக்கு பல பட்டங்களை வழங்கினர். 125000 மக்களுக்கு உணவுக் கையிருப்ப்பு வேண்டும். மக்கள் தொகையை கணக்கிடுங்கள் என ‘பின் தளம்’ கட்டளையிட்டபோது 10 வருடங்களின் பின் ‘சோத்துப்பாசல்’ பட்டம் கிடைக்கும் என நினைத்திருப்பீர்களா?

//…இதை அன்றய பத்திரிகைகள் இது ஒரு அர்த்தமற்ற பதிலே என கூறினார்கள்….//
இன்று அது ஒரு அர்த்தம் மிக்க பதில் என்று சொல்கிறார்களா இல்லையா? 13வது திருத்தத்தைப் பற்றி சங்கரியே வாய்திறக்க இயலாத நிலமை உள்ளது. வாய்திறப்பதற்குகூட புலிகளின் மாவீரர் உரையை துணைக்கு கூப்பிட்டு மஹிந்தவிடம் வாங்கிக்கட்டியது அறிந்திருப்பீர்கள் தானே?
77. Rathan on March 2, 2008 9:47 pm

நெருப்பு அண்ணாச்சி உங்கடை செஞ்சோற்று கடன் தீர்க்கிறதற்காக இப்படி கேவலமான பொய் சொல்லாதிங்கோ. இந்திய இராணுவ வருகைக்கு முன் தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் சிலவேளை உங்கள் புழுகை நம்பலாம். எனக்கு கதை சொல்லாதிங்கோ. இந்திய இராணுவம் புலிகளுக்கெதிரான நடவடிக்கையை தொடங்கின உடனேயே யாழ் பல்கலைகழக்கத்திற்கு அருகிலிருந்த பிரபாகனின் முகாமை கொமாண்டோ பாணியிலை ரம்போ நினைப்போடை அவர்களின் அதி உச்ச வலுக்கொண்ட அதிரடிபடையினரை கெலி மூலம் தரையிறக்கி முற்றுகையிட முற்பட்டு படுமோசமான தோல்வியை சந்தித்தார்கள். அவர்களது முதல் முயற்சி எவ்வளவு கேவலமாக தோல்வியை சந்தித்ததோ அப்படியே கடைசி வரைக்கும் தொடர்ந்தது.

தமிழகத்திலிருந்த மாவீரர் யொனி அவர்களை இந்தியாவுடன் சமாதானம் பேசுவதற்கு திரு பிரபாகரனின் முடிவை அறிவதற்காக மாவீரர் கிட்டு அனுப்பியபோது யொனியின் நடமாட்டத்தை வைத்து பிரபாகரனின் இருப்பிடத்தை அறிந்து கொண்ட இந்தியப் படை பெருமெடுப்பில் திட்டம் தீட்டீ இதற்கென விசேட பயிற்சிபெற்ற கூர்க்க கொமாண்டோ படையையும் வரவழைத்து நீண்ட பாரிய முற்றுகைச் சமரை நித்திகைக்குளம் பகுதியில் நிகழ்தியபோது யொனி மிதிவெடிகளின் துணையுடன் கூர்க்க படை கேணல்; உட்பட 150ற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட நுhற்றுக் கணக்கானவர்களின் கால்கள் பறிக்கப்பட துண்டை காணோம் துணியை கானோமென இந்தியப்படை ஒடியதுதான் வரலாறு. சரி எனி உங்கடை புலுடாவை பார்ப்போம்.

//ஒட்டுகுழுவாக பிரேமதாசாவின் காலில் விழுந்து (‘ரானுவ சூத்திரம்) வேண்டாமே…… பிரேமதாசா இந்திய ரானுவத்தை அனுப்பியது உமக்கு தெரிந்தும் ஏன் இந்த புருடா?// இந்தியப்படை 2 1/2 வருடமாய் புலியோடை மோதியது முதல் ஒருவருடம் யெயவர்த்தான ஆட்சி. அப்போ இந்தியப் படை என்ன செய்தது? உங்கள் வாதப்படி புலிகள் பிரேமதாசாவிடம் ஆயுத உதவி பெற்றது உண்மையென கொன்டால் கூட இந்தியாவை விட சிறிலங்காவிடம் அப்படி என்ன அதிநவீன ஆயுதமிருந்தது? 2 1/2 வருட காலமும் திரு பிரபாகரன் முல்லை காட்டில்தானே இருந்தார். இந்தியாவால் ஏன் பிரபாகரனை அழிக்க முடியவில்லை?

புலி - இந்திய மோதலில் 650 புலிதான் மாவீரர் ஆனார்கள். 1500 இந்தியன் ஆமி 2000 மேற்பட்ட துணைக்குழு பலியாகினர். இதிலிருந்தே விளங்கவில்லையா புலியின் பலமும் இந்தியனின் பலவீனத்தையும். எப்படியடா புலியின் அடியிலிருந்து தப்பலாமென காந்திருந்த இந்தியாவிற்கு பிரேமதாசா காட்டிய சிறு எதிர்ப்பை சாட்டாய் வைத்துக் கொண்டு இந்தியப்படை மூட்டை முடிச்சுக்களுடன் தப்பி ஒடியதுதான் வரலாறு.

புலிகள் இந்தியப் படையுடன் மோதுவதென முடிவெடுத்ததுடன் தனது அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து நாங்கள் இந்தியப் படையுடன் மோதப் போகிறோம் இது வாழ்வா சாவா என்பதை முடிவுசெய்யும் போராட்டம் இதில் விருப்பமில்லாதவர்கள் விலகலாமென சொன்னார்கள். பலர் விலகினர். அதற்கு புலிகள் தாரளமாய் அனுமதித்தார்கள்.

1988ன் இறுதிப் பகுதியில் மன்னார் மாவட்ட போராளிகள் இந்தியவுடனான மோதல் தேவையற்றது என பிரபாகரனிடம் சொன்ன போது இந்திய அரசு புலிகளை அழிப்பதில்தான் குறியாய் இருக்கு அதனால் மோதலை நிறுத்த முடியாது. உங்களிற்கு விருப்பமில்லையெனில் இயகத்திலிருந்து விலகலாமென சொன்னார். ஒரே தடவையில் 60 ற்கு மேற்ப்பட்டவர்கள் விலகினார்கள் அதற்கு புலிகள் கலங்கவும் இல்லை தடுக்கவுமில்லை. புலி முடிவெடுத்தால் அதுதான் முடிவு.

சரி மீண்டும் அதே கேள்வி புலுடா விடாமல் பதிலை சொல்லும். இந்தியப் படையால் ஏன் புலித் தலைமையை ஒழிக்க முடியவில்லை. அதாவது நீங்கள் சொன்ன கீழுள்ளவற்றில் எதில் குறைவு இருந்தது (ராணுவம் பொருளாதாரம் மருத்துவம் மக்களாதரவு நிலப்பரப்பின் கணிப்பு தேவையான ஆமினேசன் ஆள்பலம்; எதிரியின் பலம் எமது பலவீனம் இவை அனைத்தும் மிக நிதானமாக அறியபட வேண்டுமாம்.)

//இதை அன்றய பத்திரிகைகள் இது ஒரு அர்த்தமற்ற பதிலே என கூறினார்கள். ஒரு முழு குறை? ஒரு அரை குறை? புரியுதா ரதன்// அவசரப்பட்டு கதை விடாதீர்கள் அன்று பிரபாகரன் சொன்னது எவ்வளவு அர்த்தம் நிறைந்தது என இன்று புரியவில்லையா? இதற்கு பெயர்தான் தூரநோக்கு. இது விளங்கிகொள்ளுகிற ஆற்றல் இருந்தால் புளொட்டில் சேர்ந்திருக்கவும் மாட்டீர் இப்ப புலியெதிர்ப்பு செய்யவும் மாட்டீர்.
78. NERUPPU on March 2, 2008 10:29 pm

அர்த்தம் மிக்க பதில் என்று சொல்கிறார்களா இல்லையா. இல்லை என்ன்பது எனது கருத்து. ரகு ஈழம் என்பது சாத்தியமற்ற ஒன்று என்பது எனக்கு மட்டுமல்ல புலி தலமைக்கும் தெரியும். சமஸ்டி ஆட்ச்சி கிடைக்குமாயின் அதை புலிகள் நிர்வாகம் செய்ய முடியும். ஆனால் ஈழத்தை நிர்வாகம் செய்வது சுலபமல்ல. அதற்க்கு உரிய எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் அவர்கள் மெற்க்கொள்ளவில்லை. ஒரு இயக்கத்தை நிர்வாகம் செய்வது போல் ஒரு நாட்டை நிவாகம் செய்ய முடியாது.

அயல் நாடுகளும் நட்ப்பு நாடாக இருக்க வேண்டியவை இன்று எதிரியாக மாறுமோ என்ற சூழல். இன்றுவரை பொருளாதார ரீதியாக எந்த ஒரு செயல்பாடும் இல்லை. எம்மினத்தில் ஒற்றுமை இல்லை. எப்படி பார்த்தாலும்
ஈழம் கற்பனைதான்.

சோத்துபசல் ஒன்றும் தவறான செயல் அல்ல. மக்கள் சாப்பிட்டதில் நாமும் கை ஏந்தி சாப்பிட்டோம். மக்கள் கழகம்தானே. ஆகவே எனக்கு வெத்கமில்லை. உமக்கு இப்போது புலியானாதால் வெக்கமாக இருக்கலாம். வீட்டுக்கு ஒரு பவுண் தர வேண்டும்……………. இவர்கள் தான் வெக்கபட வேண்டும்.

ஆனந்தசஙரி போன்றோரிடம் நாடு போனால் எமது இனம் கேவலம் கெட்டு வாழ வேண்டும். அப்படி ஒரு நிலை வந்தாலும் அதற்க்கும் புலியேதான் பொறுப்பு ஏற்க்க வேண்டும். ஆகாவே எதுவானாலும் மக்கள்நலன் கருதி செய்ய வேண்டுமே ஒழிய இயக்கம் சார்ந்ததாக இருப்பது சரியல்ல.
79. ரகு on March 2, 2008 10:55 pm

//….எப்படியடா புலியின் அடியிலிருந்து தப்பலாமென காந்திருந்த இந்தியாவிற்கு பிரேமதாசா காட்டிய சிறு எதிர்ப்பை சாட்டாய் வைத்துக்கொண்டு இந்தியப்படை மூட்டை முடிச்சுக்களுடன் தப்பி ஒடியதுதான் வரலாறு….//
இஞ்ச ஒரு சீக்கிய ஆள் இருக்கிறார். நான் ஈழத்தமிழன் எண்டு தெரிஞ்ச உடன தமிழில தனக்கு ஒரு வசனம் தெரியும் எண்டு “புலி ஓட ஓட சுட்து’ எண்டு சிரிச்ச்சுக்கொண்டு சொன்னார். எனக்கு முதலில விளங்கவில்லை. பின்னர்தான் சொன்னார் அவரின்ர ஊர்க்காரன் ஐ.பி.கே.எஃப் இல இருந்து திரும்பி வந்து தமக்கு சொன்ன வசனம் தான் இது எண்டு!
80. Nruppu on March 2, 2008 11:04 pm

ரதன் நன்றி உமது தூர நோக்குக்கு. ஆனால் இப்பொது உமது வரலாறு வேண்டுமா? வரலாறு என்பது என்ன? அப்படியானால் நீர் சொல்லுவது வரலாறு. நாம் சொல்லுவது நிஜ கதை போதுமா? தம்பி நாமும் அமைதி படை காலத்தில் உமது புலியின் நாட்டில் தான் இருந்தோம். இந்தியனுடன் எப்படி போரிட்டார்கள் என்பது நமக்கும் தெரியும்.

புலிகள் தமது புலி உடுப்பை மாற்றி சாரத்துடன் திரிந்த கதையும் தெரியும். கேட்டதற்க்கு போர் தந்தரமாம். முடாளுகள். அதனால் எத்தனை ஒன்றும் அறியாத தமிழை உயிரை விட்டனர். மக்களோடு மக்களாக நின்று மக்களை அழ்த்தார்களா? ஆமியை அழித்தார்களா?

இந்தியாஅமியின் பலத்தை தான் மதிப்பிட்டதில் இருந்து உமது புலி விசுவாசம் தெரியுது. அது சரி புலிகள் சொன்னார்கள் ஒட்டு குழு 700 பேர் கூட இல்லையென (அப்போது) அப்படியானால் இன்டியன் ஆமி சுட்டது 2000 என்பது உமது கணக்கு இதில் நீர் சொல்லுவது வரலாறா (பொய்) புலி சொல்லுவது வரலாறா?

தமது கட்டுரயில் எனக்கு பிடித்தது சோத்துகடன். அதை ரகு போல் மறக்க முடியுமா? அழகை வைத்து அம்மா என
சொல்ல முடியாது (புலிபுரானம்) அம்மாவை அழகு இல்லை என்பதால் ஒதுக்க முடியாது. (சோறு)
81. Rathan on March 3, 2008 10:20 am

நெருப்பண்ணா எனது கேள்விக்கு நீங்கள் இன்னமும் பதில் சொல்லுறீங்கள் இல்லை. உண்மையை ஒத்துகொள்ளுங்கோ இல்லாவிட்டால் உங்கள் நாசா தோழர்மாரிட்டை கேட்டுப் பாருங்கோ. அவையேதும் சலப்பால் ஐடியா தருவினம். புளொட்காரர்களிடம் அரசியல் அறிவும் இல்லை இராணுவ அறிவும் இல்லை என்பதற்கு சிறந்த உதாரணம் நீங்கள்தான்.

செஞ்சோற்று கடனுக்குதான் உங்கள் உயிர் பொருள் ஆவி அத்தனையையும் ஒப்படைத்த நீங்கள் தமிழீழ போராளியென என சொல்லாதீங்கோ அது எங்கள் தமிழீழ போராட்டத்திற்குதான் இழுக்கு. புளொட்காரர்களிடம் சொல்லி தமிழீழ விடுதலை என்ற சொல்லை அவர்களின் கட்சியில் இருந்து எடுத்து விட்டு செஞ்சோற்று கடன் என்ற சொல்லை சேர்க்க சொல்லுங்கோ. ஆனந்தசங்கரியோடை முக்கூட்டு முன்னனியில் புளொட் இருக்குதென்பதை மறந்து விட்டீர்கள் போலை. சேம்சைற் கோல் நல்லாய் போடுறீங்கள். அதுசரி ஆனந்தசங்கரியை விட்டால் யார்தான் புளொட்டோடை கூட்டுவைக்கப் போறங்கள். செஞ்சோற்று கடனுக்காக இயங்குபவர்களுக்கு மக்கள் நலன் எங்கிருக்கும். ஒன்லி எஐமான சேவகம்மட்டும்தான்.

//ஈழம் என்பது சாத்தியமற்ற ஒன்று….எப்படி பார்த்தாலும் ஈழம் கற்பனைதான்// உங்களால் சாதிக்க முடியாவிட்டால் யாரலுமே சாதிக்கமுடியாதென வீம்பு பண்ணாதிங்கோ.

//மக்கள் சாப்பிட்டதில் நாமும் கை ஏந்தி சாப்பிட்டோம். மக்கள் கழகம்தானே.// இந்தியாவின் சோற்றுக்கு கடமைப்பட்ட புளொட் மக்கள் தந்து சோற்றை மறந்து கொள்ளையும் கொலையுமென அவர்களை அழிப்பது ஏனோ?

//அயல் நாடுகளும் நட்ப்பு நாடாக இருக்க வேண்டியவை இன்று எதிரியாக மாறுமோ என்ற சூழல்.// ஈழப் போராட்டத்தில் சிறிலங்காவின் பகையை தவிர்க்க முடியாது. இந்தியாதான் வலிந்து தமிழர் மீது பகைமையை திணிக்குது இதற்கு நாம் என்ன செய்ய முடியும். தமிழரின் தாகம் தமிழீழமெல்லோ செஞ்சோற்று கடனில்லையே. அதுசரி இந்தியாவிற்கு அருகில் ஏதாவதொரு நாடு இந்தியாவின் நட்பு நாடாக இருக்குதா?

// எம்மினத்தில் ஒற்றுமை இல்லை// இறைகுமாரன் இயேசுவை அவரின் சீடர்களில் ஒருவனனா யூதாசே காட்டிகொடுத்த போது ஈழதமிழரரை அவர்களின் உடன்பிறப்புக்களில் சிலது காட்டி கொடுப்பது அதிசயமில்லையே.

//அது சரி புலிகள் சொன்னார்கள் ஒட்டு குழு 700 பேர் கூட இல்லையென (அப்போது) அப்படியானால் இன்டியன் ஆமி சுட்டது 2000 என்பது உமது கணக்கு இதில் நீர் சொல்லுவது வரலாறா (பொய்) புலி சொல்லுவது வரலாறா?//
உங்கள் புலுடா கணக்கிற்கு புலியை கூப்பிடாதீர். நீங்கள் 1990 வரை புளொட்டில் இருந்தீர்கள் எல்லவோ. செட்டிகுளம் வில்பத்து காடுகளிற்குள் இருந்த1987-1990 புளொட்காரர்களின் தொகை எவ்வளவு? ஈபிஆர்எல்எப் ரெலோ ஈஎன்டிஎல்எப் காரர்களின் தொகை? அவர்களால் கட்டாய ஆள்சேர்பிற்குள்ளனவர்களின் தொகை? ஊருக்குள்ளிருந்து காட்டி கொடுத்தவையின் தொகை? உங்களிற்கு கணக்கும் கொஞ்சம் இடக்குப் பண்ணுது போலை. அது சரி புளொட்காரர்களிடம் இறந்துபோன தங்களவர்களின் ஏதாவது விபரமிருக்க?

//புலிகள் தமது புலி உடுப்பை மாற்றி சாரத்துடன் திரிந்த கதையும் தெரியும்.// தலைமறைவு இயக்கமாக(கெரில்லாவாக) இருந்தவர்கள் எப்படி ஐயா சீருடையுடன் திரிய முடியும். எனக்கு இப்ப ஒன்று மிகச் சரியாய் விளங்குது புளொட்டை துணைக்குழுவாய் வைத்திருக்கும் மட்டும் இந்திய சிறிலங்கா இராணுவங்கள் உருப்பட்ட மாதிரிதான். உங்களிடம் ஒரு சிறிய கேள்வி புளொட்டிடம் இராணுவ அரசியல் பிரிவு இருந்தது உண்மையா? வருசகணக்காய் இந்தியவிலும் லெபனானிலும் என்ன ஐயா செய்தீர்கள்.

//ஆமியை அழித்தார்களா?// இதற்குதான் நான் கேட்ட கேள்விக்கு பதிலை கேட்கிறேன். அந்தப் பதிலில் இதற்கான விடையிருக்கு.

// “புலி ஓட ஓட சுட்து’…… அவரின்ர ஊர்க்காரன் ஐ.பி.கே.எஃப் இல இருந்து திரும்பி வந்து தமக்கு சொன்ன வசனம் தான் இது எண்டு!// ரகு.
எனது சொந்த அனுபவமிது. 1990ன் ஆரம்பகாலம் இந்திய ஆமி மூட்டை முடிச்சுகளை கட்டி கப்பலேறும் காலம். எங்கள் வீட்டிற்கு ஒரு தமிழ் நாட்டுகாரர் வந்து தனக்கு ஈழ நினைவாக ஒரு தென்னம்கன்று தரும்படி கேட்டார். சரி வாங்கி தருகிறோமென சொல்லிவிட்டு அவரின் மறக்க முடியாத ஈழப்போர் அனுபவம் பற்றி கேட்டோம். தங்கள் பொறுப்பான அதிகாரி தனது வீரதீர செயல்களை சொல்லி தன்னைபற்றி பெரியவீரன் என்று இமேயை ஏற்படுத்தியிருந்தாராம்.

ஒருநாள் அச்சுவேலியில் ஒரு ஒழுங்கையால் சுற்றுகாவலுக்கு சென்ற போது எதிர்பார விதமாய் புலியை எதிர்கொள்ள வேண்டி வந்துவிட்டதாம். நடந்த சண்டையிலை தமது தரப்பில் இருவர் பலி இருவருக்கு காயம். தான் உயிர் பயத்தில் ஒரு வீட்டின் குசினிக்குள் ஒடியபோது சமையல் கட்டிற்கு கீழை தனது பொறுப்பதிகாரி ஒழிந்திருந்தாராம். அன்றிலிருந்து தனக்கு தனது நாட்டு இராணுவத்தின் வீரம் தெரிந்து விட்டதாம். ஈழத்திற்கு வந்த பிறகுதான் தானுமொரு தமிழன் என்று சொல்வதில் பெருமைபடுகிறேன் என்றார். இதில் பரிதாமென்னவெனில் இந்திகாரனின் செஞ்சோற்று கடன் தீர்ப்பதில் நெருப்பு காட்டும் பெருமிதம் ஈழத் தமிழரக்கே கேவலம்.
82. NERUPPU on March 3, 2008 10:21 am

ரகு இந்தியாவை மிக குறைவாக எடை போடக்கூடாது. இந்தியாவை வெற்றி கொண்ட புலிகள் (உமது எண்ணபடி)கருனாவிடமும் இன்று இலங்கை ராணுவத்திடமும் தோற்க்கவில்லையா? சந்தர்ப்பம் மிக முக்கியமில்லையா? இந்தியாவை புலி வென்றது. புலியை கருனாபுலி வென்றது. கருனாவை குழந்தை வென்றது. அப்போ வல்லரசு நாட்டு ரானுவத்துடன் குழந்தையை ஒப்பிடலாமா? புலிகளின் திறமையை நான் குறைவாக மதிக்கவில்லை. ஆனால் அவர்கள் பலமே கரும் புலியாகதான் உள்ளது. இது ஒரு சரியான நிலைபாடா?

ரகு இன்று நிலை என்ன. ஆனந்த சஙரியிடம் எதாவது ஒரு தீர்வு திட்டத்தை கொடுத்து அதை அவர் ஏற்று கொண்டு அரசின் அடிமையாகி இப்படிதானே நடக்க போகிறது.

இந்தியாவின் சுகந்திர போராட்டத்தில் காந்தியைவிட சுபாஸ் சந்திரபோஸ் அவர்களின் படை பல போராட்டஙளை நடத்தியதாக அதில் கலந்து கொண்ட சிலரே சொல்ல கேள்விபட்டுள்ளேன். அவர்கள் நிலை இன்றும் பரிதாபமே. இது பற்றி பின்பு பேசுவோம். அதே போல் சங்கரி போன்றோரிடம் எதாவது கொடுத்து சர்வதேசத்துக்கு நாம் தமிழருக்கு நல்லது செய்து விட்டோம் என அரசு சுட்டி காட்டாதா?

ஆகவேதான் எனது தொடர்ச்சியான வாதம் புலி இல்லாமல் தமிழர் பிரச்சனை தீராது ர்க்கவும் கூடாது. அதேபோல் புலிமட்டும் தமிழர் பிரச்சனையை தனியாக போராடி தீர்க்கவும் முடியாது. நாம் அனைவரும் தற்போது செய்யும் அனைத்து செயலும் அரசுக்கே வெற்றியை கொடுக்கும். தமிழரது வாழ்க்கையை கெடுக்கும்.
83. Rathan on March 3, 2008 5:02 pm

//இந்தியாவை வெற்றி கொண்ட புலிகள் (உமது எண்ணபடி) கருனாவிடமும் இன்று இலங்கை ராணுவத்திடமும் தோற்க்கவில்லையா? // நெருப்பு
2004 உயிர்த்த வெள்ளி காலப் பகுதியில் புலி வெருகலை கடந்துவிட்டதென அறிந்த கருணா கொழும்பிற்கு ஒடி சிறலங்காவின் துணைக்குழுவாய் மாறிவிட்டது. கருணாவிடம் புலிதோற்றதாக புலுடா கதைவிடிறீங்கள். நீங்கள் லண்டனில் இருந்தாலும் திவயின லக்பிம தினசரிகளையோ வாசிக்கிறீர்கள். புலி சிறிலங்காபடையிடம் தோற்று விட்டதாக யாருமறியாத புதினத்தை சொல்லுறீங்கள் .

//ஆனந்த சஙரியிடம் எதாவது ஒரு தீர்வு திட்டத்தை கொடுத்து அதை அவர் ஏற்று கொண்டு அரசின் அடிமையாகி இப்படிதானே நடக்க போகிறது// புளொட்காரர் சங்கரியின் தோஸ்து அவரை அடிமையென சொல்லுறீங்கள் அப்ப நீங்களும் அதுதான் என்கிறீர்கள்.

//நாம் அனைவரும் தற்போது செய்யும் அனைத்து செயலும் அரசுக்கே வெற்றியை கொடுக்கும். தமிழரது வாழ்க்கையை கெடுக்கும்.// நாம் என்று விளிப்பதன் மூலம் எங்களையும் உங்களிலொருரென அர்த்தப்படுத்த வேண்டாம்.
84. Rathan on March 3, 2008 7:44 pm

//ரதன், ரகு என்போர்களைப் பொறுத்தளவில் புலிகளுக்கு எதிரான பகுதிகள் ஒரு கட்டுரையிலிருந்தால் அவற்றிலிருந்து புலிகளை நியாயப்படுத்துவது தான் உங்கள் பின்னூட்டங்கள்.// சாம்

ஐயா புலிகளை வலிந்து நியாயப்படுத்த வேண்டிய தேவை யாருக்குமில்லை புலிகள் பற்றிய அவதூறு பிரச்சாரம் முன்னெடுக்கப்படும் போது அதிலுள்ள நியாயமற்ற காழ்புணர்வு கருத்தையே எதிர்க்கிறோம். அது நியாயமான விமர்சனமே. அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். உங்களிற்கு உண்மைகள் கசக்கின்றன. உங்கள் கபடமுகம் வெளித்தெரிகிறதே என்ற பதைகளிப்பில் எதிர்விமர்சனத்தை எதிரியாக பார்க்கிறீங்கள். விமர்சனத்தை ஆரோக்கியமான பார்வையில் நோக்குங்கள்.

உயிரையும் உதிரத்தையும் காணிக்கையாக்கி முன்னெடுக்கப்படும் ஈழவிடுதலைப் போராட்டத்தை மாற்று கருத்து என்ற போர்வையில் கொச்சைதனமாக கேவலப்படுத்தி கட்டுரை எழுதிவீங்களாம் அதை ஆதரித்து நாங்கள் யல்ரா போடவேணும். அது உங்கள் அளவில் கட்டுரையை செழுமைப்படுத்தல். உங்களின் கருத்திற்கு உடன்படாததை உங்களால் சகிக்க முடியவில்லை நீங்கள் ஈழவிடுதலைக்கெதிரான விசம கருத்தை முன் வைக்கும் போது எப்படி எங்களால் ஏற்கமுடியும்.

உங்களிற்கு உண்மையிலேயே ஈழமக்கள் நலனில் அக்கறை இருந்தால் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு பாதகமில்லா முறையில் கருத்தை முன்வையுங்கள் செயல்படுங்கள் அப்போ உங்களிற்கிசைவான விதத்தில் கருத்தெழுதுகின்றோம். அதைவிடுத்து ஈழவிடுதலை போராட்டத்திறகு பாதகமாக உங்கள் கருத்திருந்தால் எங்கள் விமர்சனம் உங்கள் கருத்துகளிலுள்ள வஞ்சகதனத்தை எதிர்க்கும்.

அண்மையில் லோட் நேஸ்பி எனும் பிரித்தானிய பிரசையும் ஆனந்தசங்கரியும் சிறிலங்காஅரசின் தமிழின படுகொலையை நியாயப்படுத்தும் போது எங்கை போச்சாம் உங்கள் இனங்களின் சமத்துவத்திற்கும் சமாதானத்திற்குமான குழு.
85. ரகு on March 3, 2008 7:51 pm

//…ரகு இன்று நிலை என்ன. ஆனந்தசஙரியிடம் எதாவது ஒரு தீர்வு திட்டத்தை கொடுத்து அதை அவர் ஏற்று கொண்டு அரசின் அடிமையாகி இப்படிதானே நடக்க போகிறது…..//
அப்படி அல்ல. அவர் அரசின் அடிமையாகிய பின்னர் தான் தீர்வுத்திட்டம் (?) கொடுக்கப்பட்டது. இது வழமையான நிகழ்வுதான். முதலில் அடிமை பின்னர் ரொட்டி.
86. thurai on March 3, 2008 8:55 pm

//புலி சிறிலங்காபடையிடம் தோற்று விட்டதாக யாருமறியாத புதினத்தை சொல்லுறீங்கள் //ரதன்
இந்திய இராணுவத்தை வெற்றி கொண்டவர்கள் புலிகள், தற்சமயம் வன்னிக்குள் முடக்கப்பட்டு கிடப்பதன் காரணம் இந்திய இராணுவத்தை விட இலங்கை இராணுவம் பலம் பொருந்தியதா அல்லது புலிகளின் யுத்ததந்திரமா அல்லது மகிந்தாவுடன் இரகசிய ஒப்பந்தமா?.

//நாம் என்று விளிப்பதன் மூலம் எங்களையும் உங்களிலொருரென அர்த்தப்படுத்த வேண்டாம்.//ரதன்
புலிகள்வேறு தமிழ் மக்கள் வேறு என மேற்குலகமும் சிங்கள மக்களும் அடயாளம் கண்டுவிட்டார்கள். மேற்குலகில் புலியை வளர்ப்பவர்களிற்கும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. புலியும் அவர்களின் வானொலிகளும், தொலைக்காட்சிகளும், கொலைக் காட்சிகளக் காட்டி பணத்தை மேற்குலகில் வசூலிப்பதற்கு மட்டுமே உள்ளது.

புலியின் ஆதரவாளர்கள் வாழ்வது பயங்கரவாத உலகத்தில். பலர் மனித சுதந்திரத்தைப் பற்றி அறியாதவர்களும், கொலைகளை ஊக்கிவிப்பவர்களும், கொலைகாரர்களும்தான். நாம் என்று சொன்னது நிச்சயமாக புலியின் ஆதரவாளர்களை அல்ல. ஈழத்தில் வாழும் அமைதி வேண்டினிற்கும் தமிழரும் அரசியல்வாதிழும் அவர்களின் மேற்குலக ஆதரவாளர்கழுமேயாகும்.
துரை
87. ரகு on March 3, 2008 9:10 pm

//..ரகு இந்தியாவை மிக குறைவாக எடை போடக்கூடாது…// நெருப்பு, கரிசனை மிக்க உங்கள் ஆலோசனைக்கு நன்றிகள். கழகம் வெளியிட்ட ‘வங்கம் தந்த பாடம்’ வ்வ்சித்த பின்ன்னர் இந்தியா பற்றிய மாயை போய்விட்டது. எனது மாயை நீக்கியவர்கள் மாலைதீவில் மாட்டுப்பட்டதை என்ன என்று சொல்வது. புலிகளும் மக்களும் அதை ‘வங்கம் தந்த பாடம்- பாகம் 2′ என பெயரிட்டுள்ளனர்.

//..இந்தியாவின் சுகந்திர போராட்டத்தில் காந்தியைவிட சுபாஸ் சந்திரபோஸ் அவர்களின் படை பல போராட்டஙளை நடத்தியதாக அதில் கலந்து கொண்ட சிலரே சொல்ல கேள்விபட்டுள்ளேன்…அவர்கள் நிலை இன்றும் பரிதாபமே…//
இல்லை பரிதாபமல்ல. மாறாக சுபாஸ் சந்திரபோசின் புகைப்படங்களை யாழ்ப்பாணத்தில் எனது ஊரில பல வீடுகளில் பார்த்துள்ளேன். சொல்லப்போனால் பழைய வீடுகளில் முன்னர் சுவரில் இரண்டு இடங்களில் படங்கள் வைத்திருப்பர். அவற்றில் ஒரு இடம் அவர்களின் இறந்த உறவினர் படங்களாக இருக்கும். (இப்போது போல் பரதநாட்டிய, சாமத்தியச் சடங்கு படங்களாக இருக்காது.)

மற்றைய இடத்தில் 3 படங்கள் இருக்கும். அவற்றில் சிலர் வீடுகளில் அண்ணா, காந்தி, சுபாஸ் சந்திரபோஸ் படங்கள் இருக்கும் அல்லது சிலர் வீடுகளில் எம்.ஜி.ஆர், காந்தி , சுபாஸ் சந்திரபோஸ் படங்கள் இருக்கும். இவற்றில் சுபாஸ் படங்கள் ராணுவ உடையில் இருப்பதனால் இவர் யாராக இருக்கும் என்று நினைத்துக்கொள்வேன். பின்னாளில் அறிந்து கொண்டேன் உண்மை !

எனவே எப்போதும் அவர்களைப் பற்றி உயர்வான எண்ணமுண்டு. இன்று வரை காந்தி மட்டுமே சுதந்திர தந்தை என ஏற்றதில்லை. சுபாஸ் போஸ் தனது சுதந்திரப் போரில் ஹிட்லர், முசோலினி, ஜப்பானிய பேரரசர் ஹிரஹீட்டோ போன்றோருடன் நட்புக்கொண்டிருந்தார். இதை இன்று புலிகள் செய்தால் கழகம் முதற்கொண்டு சகல மாற்று இயக்கங்கள் எல்லாம் என்ன பிரச்சாரம் செய்து கொண்டு திரிந்திருப்பார்கள் என எண்ணிப்பார்க்கிறேன்!

//..இது பற்றி பின்பு பேசுவோம். …// நிச்சயமாக பேச வேண்டும்!

//…அதே போல் சங்கரி போன்றோரிடம் எதாவது கொடுத்து சர்வதேசத்துக்கு நாம் தமிழருக்கு நல்லது செய்து விட்டோம் என அரசு சுட்டி காட்டாதா? …// அப்போ சங்கரியை என்ன செய்யலாம் என்கிறீர்கள்? நீங்கள் அன்பு செலுத்தும் உங்களின் சகோதரத் தமிழருக்காக நீங்கள் சங்கரியின் கதை எல்லாம் பொய் என ஏன் வாதிட மறுக்கிறீர்கள். ஏன் இன்னும் பழைய புலிக்காச்சலுடன் திரிகிறீர்கள். உண்மை உணர்ந்த பின்னும் வீம்புக்கு முரண்டு பிடிப்பது நல்லதல்ல.

//….ஆகவேதான் எனது தொடர்ச்சியான வாதம் புலி இல்லாமல் தமிழர் பிரச்சனை தீராது ர்க்கவும் கூடாது. அதேபோல் புலிமட்டும் தமிழர் பிரச்சனையை தனியாக போராடி தீர்க்கவும் முடியாது….// அதற்காகத் தானே புலிகள் சமாதான உடன்படிக்கை கையெழுத்திட்ட போது எல்லோரும் ஒன்றாக சேருங்கள் என கேட்டார்கள். இங்கே புலம் பெயர் நாடுகளிலும் அதைத்தானே செய்தனர். மாற்று இயக்கங்கள் என்ன நக்கல், கிண்டல் விட்டவர்கள் என பார்த்தோம் தானே. 9/11 க்கு முன்னர் சமாதானத்துக்காக ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்தத்தை அறிவித்த புலிகளை 9/11 இனால் தான் பயந்து நடுங்குகின்றனர் என்றும், புலிகள் கழுகுகளுக்கு (அமெரிக்கா) பயந்து விட்டனர் எனவும் பேசியது காதில்/கண்ணில் விழவில்லையா????

//…நாம் அனைவரும் தற்போது செய்யும் அனைத்து செயலும் அரசுக்கே வெற்றியை கொடுக்கும். தமிழரது வாழ்க்கையை கெடுக்கும்….// இதை மாற்றுவதற்கு முதலில் ஒவ்வொருநாளும் காலை எழுந்தவுடன் புலிக்கஞ்சி குடிப்பதை நிறுத்துவது முதல் படி.

சில வருடங்களுக்கு முன்னர் பழைய வவுனியா எம்.பி யின் வீட்டில் அமைந்திருந்த கழக அலுவலகத்தில் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலங்கள் அரசபடையினால் கைப்பற்றப்படுவது பற்றி கவலைப்பட்டார். எனது காதுகளை நம்ப முடியவில்லை. நான் கேட்டேன் ஏன் கவலைப்படுகிறீர்கள் உங்களுக்கு சந்தோசம் தானே என. இல்லை இல்லை என சொன்னார். அரசு வென்றால் கழகமும் கோவிந்தா என அவருக்கு தெரியும்.

நெருப்பு, பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என இதைத்தான் சொல்வார்களோ?
88. guna paris on March 3, 2008 9:17 pm

நாஙகள் எதையும் எழுதலாம் பேசலாம் ஆனால் மனித உயிரின்n பெறுமதியைகொய்சம் நினைத்தால் ? நல்தாய் இருக்கும். நன்றி.
89. guna paris on March 3, 2008 9:32 pm

வாழ்க தமிழ்இனம் அழிக மனித இனம் !
90. guna paris on March 3, 2008 9:56 pm

மனிதருக்கு உயிர் எவ்வளவு முக்கியம் சும்மா ???? இரத்தவெள்ளத்தில் விவாதம்
91. NERUPPU on March 3, 2008 10:03 pm

ரதன் நீர் சொல்லிய விடயம் யாவும் என்ன படத்தில் வந்தது. அதை சொன்னால் அந்த படத்தை எடுத்து ஒருக்கா பார்க்கலாம். நீர் சொல்லிய விடயம் யாவையும் யாராவது ஒரு புலி பொறுப்பாளர் சொன்னால் அவர்களுடன் விவாதிக்கலாம்.

நான் கழகத்தில் இருந்தேன். அவர்கள் விட்ட தவறை உனர்ந்து விலகிவிட்டேன். இன்றுவரை நான் எந்த அமைப்பயும் சார்ந்தவனல்ல. யாரையும் நேரிலும் எழுத்திலும் விமர்சிக்க தயங்கவும் இல்லை.

உமது வரலாறு ,….. புலிகேசியில் வடிவேலு சொல்லுவது போல் உள்ளது. வடிவேலு தனது முகத்துக்கு என்னொருவர் உடம்பை சேர்ப்பார். கேட்டால் வருங்கால சந்ததிக்கு இதுதான் வரலாறு என்பார்… அதுபோல் உமது கற்பனையும் ஓடுது அதை தடுக்க நான் விரும்பவில்லை.

நண்பா….
நீங்க தேசம் விட்டு ஓடியது உன் பசி போக்க (உழைக்க)
நாம் தேசம் விட்டு விலகியது எம் உயிர் காக்க (பாதுகாக்க)

இறந்த காலம் உமக்கு நகைசுவை.
எதிகாலம் தமிழருக்கு சோகமயம்.
92. NERUPPU on March 3, 2008 10:07 pm

நான் நாம் என்று சொன்னது மனிதர்களை மட்டுமே. நீங்க தவறாய் புரிந்தது என் குற்றமா?
93. ரகு on March 4, 2008 12:17 am

//….ரதன் நீர் சொல்லிய விடயம் யாவும் என்ன படத்தில் வந்தது. அதை சொன்னால் அந்த படத்தை எடுத்து ஒருக்கா பார்க்கலாம்….// மொத்தமான ரஷ்யப் புத்தகங்கள் படிச்சு பழக்கப்பட்டவைக்கு சினிமாப் படம் மாதிரி ஏதும் காட்டினால் தான் விளங்கும்.

//.. நீர் சொல்லிய விடயம் யாவையும் யாராவது ஒரு புலி பொறுப்பாளர் சொன்னால் அவர்களுடன் விவாதிக்கலாம்….// கழகப் பொறுப்பாலர்களுடன் விவாதித்து முடித்து விட்டனர். இப்போ புலிப் பொறுப்பாலருடன் விவாதிக்கப் போயினம்!!! கூரை ஏறிக் கோழி பிடிக்கப்பாருங்கோ, பிறகு வானம் ஏறி….

//…நான் கழகத்தில் இருந்தேன். அவர்கள் விட்ட தவறை உனர்ந்து விலகிவிட்டேன். இன்றுவரை நான் எந்த அமைப்பயும் சார்ந்தவனல்ல. யாரையும் நேரிலும் எழுத்திலும் விமர்சிக்க தயங்கவும் இல்லை…// முதலில நீங்கள் சார்ந்திருந்த கழகம் விட்ட பிழையளையும் அவற்றால் ஈழப் போராட்டத்துக்கு வந்த வினையளையும் சொல்லுங்கோ. அடுத்தது புலியின்ர திட்டத்துக்கு மாற்றீடாக என்ன வச்சிருக்கிறியள் எண்டு சொல்லுங்கோ. சங்கரி, தோழர், சிதண்னை, வரதர் எண்டு லைனில இருக்கிறவையிட்ட சொல்லுங்கோ திட்டத்தைக் காட்டச்சொல்லி. அண்னை நெருப்பு தமிழில ‘கொப்பு தட்டுதல்’ எண்டு ஒரு சொல்லாடல் இருக்கு அதுக்கு அர்த்தம் தெரியுமோ? அந்த வேலை செய்யுறதை நிப்பாட்டுங்கோ.

//…உமது வரலாறு ,….. புலிகேசியில் வடிவேலு சொல்லுவது போல் உள்ளது. வடிவேலு தனது முகத்துக்கு என்னொருவர் உடம்பை சேர்ப்பார். கேட்டால் வருங்கால சந்ததிக்கு இதுதான் வரலாறு என்பார்… ….//
பழைய கழகத்தோழர் இப்ப நல்லாப் படம் பாக்கிறார் போல இருக்கு. எல்லாம் பழைய பழக்கம் தானே! கழகத்தோழர் ஒருவர் சொன்னார் தாங்கள் பக்கத்து வீடுகளில வீ.சீ.ஆர் இரவல் வாங்கி இரவிரவா படம் பாக்கிறது எண்டு. அந்தப் பழக்க தோசத்தில நெருப்புத் தோழர் வடிவேலுவை துணைக்கு அழைக்க வேண்டிய நிலைக்கு வந்து விட்டார். அதுவும் நல்லதுக்குத்தானே இல்லாட்டி ரஷ்யப் புத்தகங்களில வாசிச்சதை இஞ்ச எடுத்து விட எங்களுக்கும் தலை குழம்பி அதால நாங்கள் அவையளுக்கு அறிவுஜீவிப் பட்டம் கொடுத்து ஊர்ச்சனத்திட்ட வாங்கிக்கட்ட வேண்டி வரும்!

//…நண்பா….
நீங்க தேசம் விட்டு ஓடியது உன் பசி போக்க (உழைக்க)
நாம் தேசம் விட்டு விலகியது எம் உயிர் காக்க (பாதுகாக்க)…//
கவிதைத்தனமாக எழுதவும் ஆசை. எழுதிப்போட்டு பின்னர் அதுக்கு விளக்கமும் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார். பாவம் விடுங்கோ ரதன். பழைய நோட்டீஸ் கனவில இன்னும் இருக்கிறார்!!!

//…இறந்த காலம் உமக்கு நகைசுவை.
எதிகாலம் தமிழருக்கு சோகமயம்…//
“இறந்த காலம் உமக்கு நகைசுவை.
எதிர் காலம் நமக்கு மிகச்சுமை.”
எண்டு எழுதி இருந்தால் இன்னும் கவிதைத்தனமாக இருந்திருக்குமே!!!!! அறிவுஜீவிப் பட்டமும் கிடைதிருக்குமே!!! அடுத்தமுறை ட்ரை பண்ணுங்கோ!!!!
94. Rathan on March 4, 2008 8:38 am

நெருப்பு //ரதன் நீர் சொல்லிய விடயம் யாவும் என்ன படத்தில் வந்தது//
நெருப்பின் செஞ்சோற்றுக்கடன். ஆனந்தசங்கரியும் அறுபது புளொட்காரர்களும். மாலைதீவும் மக்கள்புரட்சியும். ஒரத்தநாட்டில் மக்கள் விடுதலை. சோத்துக் கழகம்.

//நீர் சொல்லிய விடயம் யாவையும் யாராவது ஒரு புலி பொறுப்பாளர் சொன்னால் அவர்களுடன் விவாதிக்கலாம்.//
வன்னிக்கு போனீரென்றால் விலாவாரியாக விவாதிக்கலாம். வசதி எப்படி.

//நான் கழகத்தில் இருந்தேன். அவர்கள் விட்ட தவறை உனர்ந்து விலகிவிட்டேன்// முசல்குத்தியில் வாங்கிய அடியோடையோ. அந்த தவறில் உங்கள் பங்கு என்ன?

//இன்றுவரை நான் எந்த அமைப்பயும் சார்ந்தவனல்ல.//நான் கழகத்தில் இருந்தேன். அப்ப இதுவென்னவாம்.

//யாரையும் நேரிலும் எழுத்திலும் விமர்சிக்க தயங்கவும் இல்லை.// எழுத்தில் விமர்சிப்பது சரி. பிரபாவையும் பொட்டு அம்மானையும் எப்ப போய் நேரில் விமர்சித்தீர்?

//வடிவேலு தனது முகத்துக்கு என்னொருவர் உடம்பை சேர்ப்பார். கேட்டால் வருங்கால சந்ததிக்கு இதுதான் வரலாறு என்பார்…// வடிவேலு என்ன வடிவேலு. உங்களின் கொம்முனிசமுகம் மக்கள் புரட்சிமுகம் ஒரத்தநாடுமுகம் மாலைதீவில் மக்கள் புரட்சி…….. இதுகளை மிஞ்சுமா வடிவேலுவின் நகைச்சுவை. படு குசும்புகாரன் ஐயா நீங்கள்.

//நீங்க தேசம் விட்டு ஓடியது உன் பசி போக்க …….//துரையின் பாதிப்பு.

//நான் நாம் என்று சொன்னது மனிதர்களை மட்டுமே. நீங்க தவறாய் புரிந்தது என் குற்றமா?//
புளொட் முக்கூட்டு முன்னனி மாற்றுக் கருத்து….. இவர்களைதானே அர்த்தப்படுத்திறீர் ஒகெ ஒகே அப்பசரி.
95. NERUPPU on March 4, 2008 11:57 am

// பிரபாவையும் பொட்டு அம்மானையும் எப்ப போய் நேரில் விமர்சித்தீர் // இதை அவர்களிடம்நேரம் கிடக்கும் போது கேழும். சிவேளைகளில் ரகுவுக்கும் தெரிந்து இருக்கலாம்.

// வன்னிக்கு போனீரென்றால் விலாவாரியாக விவாதிக்கலாம். வசதி எப்படி. // இந்த புழி குணம்தான் இன்று
தமிழர் அவதி யுற காரணம். பாலாவில் இருந்து ரதன் வரை பதில் தெரியாத பட்ச்சத்தில் வன்னிக்கு அனுப்புவது சகசமே.

//புளொட் முக்கூட்டு முன்னனி மாற்றுக் கருத்து….. இவர்களைதானே அர்த்தப்படுத்திறீர் ஒகெ ஒகே அப்பசரி.// உமது பார்வயில் அவர்கள்தான் மனிதரெனில் உமது ஆசையை நான் நிராகரிக்க விரும்பவில்லை. ஒருவர் சொன்னார் தாங்கள் பக்கத்து வீடுகளில வீ.சீ.ஆர் இரவல் வாங்கி இரவிரவா படம் பாக்கிறது எண்டு இரவல்தானே மக்களிடம் இரவல் வேண்டுவது தப்பா.?.. சொந்தமாக மினி தியேட்டரே பங்கரில் இருப்பதாக புறப்பட்ட புலிகளின் தகவல்.

//2000 மேற்பட்ட துணைக்குழு பலியாகினர்? அறுபது புளொட்காரர்களும்? இதில் எது சரி குழப்பமோ? மொத்தமான ரஷ்யப் புத்தகங்கள் படிச்சு பழக்கப்பட்டவைக்கு. // நன்றி ரகு உன்மையை உழறியதற்க்கு.

முசல்குத்தியில் வாங்கிய …? புலீஈழ தமிழோ.

//எதிர் காலம் நமக்கு மிகச்சுமை…// உன்மைதான் பிணம் பல சுமக்கவேண்டி வருமே. சுமைதான் மிக சுமைதான்

//உங்களின் கொம்முனிசமுகம் மக்கள் புரட்சிமுகம் ஒரத்தநாடுமுகம் மாலைதீவில் மக்கள் புரட்சி…….. இதுகளை மிஞ்சுமா வடிவேலுவின் நகைச்சுவை.// ஆமாம் ஆமாம் பிரிகேடியர் தமிழ்செல்வன்… அறிவுஜீவிப் பட்டமும் .. பட்டங்கள் பல மலிவு விற்பனையில் தற்போது வன்னியி என பேசுகிறார்கள். பணம் இரிந்தால் வேண்டலாம் ஜயோபாவ..

கழகப் பொறுப்பாலர்களுடன் விவாதித்து முடித்து விட்டனர் விவாதித படியால்தான் என்னும் ஒரு புழி கும்பல் காணாமல் போனது….

துரை புலியல்ல ஆகவே அவர் மற்றவர்களிடம் பணம் வேண்ட வாய்ப்பு இல்லை.

சிரியுங்கள் ஆனால் சிந்தியுங்கள். சிந்தியுங்கள் நாம் சிரிக்கவில்லை.
96. Rathan on March 4, 2008 6:18 pm

நெருப்பண்ணா காலைப்பொழுதில் கருத்துகளத்திற்கு வாங்கோ. சொன்னால் கேட்கிறீங்கள் இல்லை வட்டுக்கோட்டைக்கு வழி கேட்பவனுக்கு கொட்டைபாக்கின் விலை சொல்லுறீங்கள்.
97. ரகு on March 4, 2008 6:42 pm

//2000 மேற்பட்ட துணைக்குழு பலியாகினர்? அறுபது புளொட்காரர்களும்? இதில் எது சரி குழப்பமோ? மொத்தமான ரஷ்யப் புத்தகங்கள் படிச்சு பழக்கப்பட்டவைக்கு. // நன்றி ரகு உன்மையை உழறியதற்க்கு.
என்ன சொல்ல வாறியள்? என்ன என்னைக் கேக்க வாறியள்? இதில குழப்பம் எண்டும் சொல்லுறியள்! உழறுற எண்டு வேற சொல்லுறியள்! சரியா குழம்பிபோய்தான் இருக்கிறியள். தயவு செய்து உங்கட மேற் சொன்ன கருத்தை / கேள்வியை ஒருக்கால் விளங்கப்படுத்து மோனை!
98. ரகு on March 4, 2008 6:49 pm

//…இந்த புழி குணம்தான் இன்று தமிழர் அவதியுற காரணம். பாலாவில் இருந்து ரதன் வரை பதில் தெரியாத பட்ச்சத்தில் வன்னிக்கு அனுப்புவது சகசமே..//

ஒமோம்… இந்த பாலா பதில் தெரியாமல் வன்னிக்கு அனுப்ப அவங்கள் வன்னியில இருந்து இஞ்ச திரும்பி வந்து வெட்டுறன் புடுங்கிறன் எண்டு வெளிக்கிட்டு மஹிந்தாவின்ர போன்கோலில மயாங்கி கூட்டம் சேர்த்துக்கொண்டு ஓசி ரிக்கற்றில கொழும்புக்குப் போய் கூட நம்மட இலக்கிய தலித்திய பெண்ணிய வாதியையும் சிக்கலில மாட்டி வெறுங்கையோட வந்தமா எண்டில்லாமல் இப்ப தோழரின்ர விரோதத்தையும் சம்பாதிச்சுக்கொண்டு வந்து திறந்த மடல் எழுதி அவதிப்படுறாங்கள்!!!!! உண்மைதான் நெருப்பு!
99. guna paris on March 4, 2008 9:52 pm

அண்னாமாரே கொஞ்சம் பொருங்கள் ஒருநிமிடம் அமைதி. ………… இனி, முன்பு என்ன நடந்தது என்று யோசிக்கத்தான் 1minute
100. NERUPPU on March 4, 2008 10:07 pm

ஓகே ரதன் நீங்க மூன்றும் நாலும் ஏழு என சொன்னால் அனவரும் நம்பனும். ஆனால் நான் நான்கும் மூன்றும் ஏழு என்பது பொய்யா?

ரதன் நீர் வாழ சில தேடல்….. எனது வாழ்க்கையே தேடல்…
101. thurai on March 4, 2008 10:11 pm

பொன்னான் நேரத்தை மண்ணாக்கும் நாம், ஏதாவது பலன் தரக்கூடிய விவாதங்களை, கருத்துக்களைப் பரிமாறினால் நன்மை பயக்கும்.

ஈழத்தமிழர் என்றால் ஏழைத்தமிழர், உலகமெங்கும் அகதிகளாக வாழ்வோர், இவர்களிற்கு ஓர் ஆன தலவர்
இருந்தால் இவ்வாறு உலகமெல்லாம் அலையமாட்டார் என்பது உலகறிந்த உண்மை.

சுனாமி போலத்தான் ஈழத்தில் நடக்கும் போரும். புலிப்படை ஈழத் தமிழினத்தோடு கூடிப் பிறந்ததுமல்ல, கூடி வரப்போவதுமல்ல. தமிழீழம் கிடைக்காவிட்டால், புலிப்படையும், அதன் தலைமைகளும் ஈழத்தமிழர் வரலாற்றில் கறை படிந்த சரித்திரமாகவே எழுதப்படும்.

ஓர் இனத்தின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது, கடந்த காலமும் நிகழ்காலமுமேயாகும். இதனை இலங்கையில் வாழும் ஈழத்தமிழினமே தீர்மானிக்கும் காலம் வரும்.

மேற்குலகில் இருந்துகொண்டு, தமிழ்மொழி, தமிழ்தேசியம், ஈழவிடுதலை, என்பதெல்லாம் உலகத்தை ஏமாற்ரவே. அதோடு இருந்திருந்தால் பரவாயில்லை, சர்வதேசகுற்ரவாளிகவும், பயங்கரவாதிகளாகவும் பெயர் பெற்றும் விட்டோம். இதில் புலி என்றோ புலி அல்லாதவ்ர்களென்றோ இல்லை.

முதலில் எங்களிற்கு ஏற்பட்டுள்ள, அவப்பெயரை எவ்வாறு அகற்றலாம் என யாவரும், சிந்தித்து செயற்பட்டால், ஈழத் தமிழரிற்கு நன்மை செய்யாவிடினும் தீமையாவது செய்யாதிருக்கலாம்.
துரை
102. NERUPPU on March 4, 2008 10:17 pm

ரகு அதுதானே இன்று புலியை புழியாக்கியது. கணக்கு விபரம் குழப்பமோ? ரதன் + ரகு சேர்த்து படிக்கவும் புரியும்……..

வன்னியில் இருப்பவர் வடமராட்ச்சி போகட்டும். அதன் பின் நாம் வன்னிக்கா அல்லது வவுனியா என்பதை முடிவு செய்வோம்.

பாலுக்குள் தண்ணியை கலப்பதால் தண்ணி பால் ஆகுமா?????????
103. NERUPPU on March 4, 2008 10:21 pm

ரகு நீர் கேட்ட கேள்விக்கு பதில் கழகம் எதோ படித்துள்ளது. நான் சொல்லவில்லை உமது வாக்கு மூலம்……
104. ரகு on March 4, 2008 11:41 pm

//….கழகம் எதோ படித்துள்ளது. நான் சொல்லவில்லை உமது வாக்கு மூலம்……// படிக்க வேண்டியதைப் படிக்காமல் ‘ஏதோ’ படித்ததால் மாலைதீவு என்னும் கூழ்ப்பானையில் விழுந்தது!!! (அற வடித்த அரிசி கூழ்ப்பானைக்குள் விழுந்த கதை)
105. ரகு on March 5, 2008 1:56 pm

//….பொன்னான் நேரத்தை மண்ணாக்கும் நாம், ஏதாவது பலன் தரக்கூடிய விவாதங்களை, கருத்துக்களைப் பரிமாறினால் நன்மை பயக்கும்….// சும்மா விவாதத்தில வந்து ‘சந்தில புலிச்சிந்து பாட’ நினைச்சால் ‘நல்ல’ பதில் கிடைக்கும். இனிமேல் சிந்து பாடுற வேலையை விட்டுட்டு ஒழுங்கா விவாதிக்க பழகுங்கோ. உணர்ந்து ஒத்துக்கொண்டதுக்கு நன்றி!

//..ஈழத்தமிழர் என்றால் ஏழைத் தமிழர், உலகமெங்கும் அகதிகளாக வாழ்வோர், இவர்களிற்கு ஓர் ஆன தலவர்
இருந்தால் இவ்வாறு உலகமெல்லாம் அலையமாட்டார் என்பது உலகறிந்த உண்மை….// பழையபடி வேதாளம் ……

//….சுனாமி போலத்தான் ஈழத்தில் நடக்கும் போரும். புலிப்படை ஈழத் தமிழினத்தோடு கூடிப் பிறந்ததுமல்ல, கூடி வரப்போவதுமல்ல….// சுனாமிபோல் தான் மொழி, சமயம், சாதி , பணம்… எல்லாம் கூடிவராது. அதுக்காக நீங்கள் உடுகளை கைவிட்டிட்டியளோ? சும்மா எழுதவேணும் எண்டுபோட்டு பினாத்தக் கூடாது. மற்றது புலிப்படை உங்களோட தொடர்ந்து வாறேண்டு சொல்லேல்ல. அது தங்கட அலுவல் முடிஞ்ச உடன போயிடும்.

//… தமிழீழம் கிடைக்காவிட்டால், புலிப்படையும், அதன் தலைமைகளும் ஈழத்தமிழர் வரலாற்றில் கறை படிந்த சரித்திரமாகவே எழுதப்படும்….// உங்கட ஆசையை நான் ஏன் குழப்புவான். இதில வந்து எத்தினையோ கருத்து எழுதுறியள். ஆனால் ஒண்டுக்கும் ஒழுங்கான பதில் கிடையாது. ஆனால் மற்ற இயக்கங்கள் மாதிரியோ அதன் தலமைகள் மாதிரியோ காறித்துப்புப்படாது.

//…ஓர் இனத்தின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது, கடந்த காலமும் நிகழ்காலமுமேயாகும். இதனை இலங்கையில் வாழும் ஈழத்தமிழினமே தீர்மானிக்கும் காலம் வரும்…..// இப்ப மட்டும் என்ன வெளிநாட்டு தமிழ் இனமோ தீர்மானிக்குது?

//…மேற்குலகில் இருந்துகொண்டு, தமிழ்மொழி, தமிழ்தேசியம், ஈழவிடுதலை, என்பதெல்லாம் உலகத்தை ஏமாற்ரவே….// எந்த உலகத்தை ஏமாத்துறாங்கள்? ஏனண்ணை எங்கட்ட ஊர் கோயில் மடத்தில இருந்து பெரிசுகள் கதைக்கிற மாதிரி வயித்தெரிச்சல், கையாலாகாத கதை கதைக்கிறியள்?

//….அதோடு இருந்திருந்தால் பரவாயில்லை, சர்வதேச குற்ரவாளிகவும், பயங்கர வாதிகளாகவும் பெயர் பெற்றும் விட்டோம். இதில் புலி என்றோ புலி அல்லாதவ்ர்களென்றோ இல்லை…..// ஓ…நீங்களும் சிக்கல் படுறியளோ? அப்ப ஒற்றுமையா இருக்கவேணும் எண்டு தெரியுதெல்லோ????

//….முதலில் எங்களிற்கு ஏற்பட்டுள்ள, அவப்பெயரை எவ்வாறு அகற்றலாம் என யாவரும், சிந்தித்து செயற்பட்டால், ஈழத் தமிழரிற்கு நன்மை செய்யாவிடினும் தீமையாவது செய்யாதிருக்கலாம்…..//

நீங்க சிந்திச்சு ஒருக்கா சொல்லுங்கோ. சந்தில சிந்து பாடுறதை விட்டிட்டு. மாற்றுக் கருத்து எண்டு கதை விட்டால் என்ன திட்டம் எண்டும் சொல்ல வேணும். அதை விட்டுப்போட்டு ஐயோ எங்கட பேர் பழுதாப்போச்சு எண்டு சங்கரி .. கதை விடக்கூடாது துரையர்!!
106. thurai on March 5, 2008 6:47 pm

//நீங்க சிந்திச்சு ஒருக்கா சொல்லுங்கோ. சந்தில சிந்து பாடுறதை விட்டிட்டு. மாற்றுக் கருத்து எண்டு கதை விட்டால் என்ன திட்டம் எண்டும் சொல்ல வேணும். அதை விட்டுப்போட்டு ஐயோ எங்கட பேர் பழுதாப்போச்சு எண்டு சங்கரி .. கதை விடக்கூடாது துரையர்//ரகு

ஈழத் தமிழர் பிரச்சினையைப் பற்றி ஈழத் தமிழன் ஒருவன் பேச முற்படுவது, அவன் தற்கொலை செய்வதற்கு
ஒப்பானது. இதனைத்தான் பயங்கரவாத நிலை என்பது. இதற்கு காரணம் யாரெனெ புரியாத ரகுவே, இனியாவது
களட்டும் உமது முகமூடியை.
துரை
107. ரகு on March 5, 2008 7:50 pm

//….ஈழத்தமிழர் பிரச்சினையைப் பற்றி ஈழத் தமிழன் ஒருவன் பேச முற்படுவது, அவன் தற்கொலை செய்வதற்கு
ஒப்பானது….// ‘கூழ்ப் பாட்டி’ வச்ச கதை சொல்லுறியளோ? நல்லது நல்லது!

///..இதற்கு காரணம் யாரெனெ புரியாத ரகுவே, இனியாவது களட்டும் உமது முகமூடியை…// முகமூடி இல்லமலே இவ்வளவு காலமும் எழுதுகிறேன், இதில களட்டச்சொல்லி கேக்கிறியள். எல்லாம் சொந்த கதை போல கிடக்கு!!!
108. NERUPPU on March 5, 2008 9:48 pm

…இப்படி சொலிறியள். அற வடித்த அரிசி கூழ்ப்பானைக்குள் விழுந்த கதை)

குரங்கு குட்டி போடுவது செய்தி. ரகு தடுமாறுவது நியதி.
109. NERUPPU on March 5, 2008 9:55 pm

ஒழுங்கான பதில் கிடையாது. இந்த கேள்விக்கு உமது பதிலாவது ஒழுங்காக கிடைக்கட்டும். புழி ஆட்ச்சி அமைத்தால் தலமை யார்???
110. guna paris on March 5, 2008 9:58 pm

நண்பர்களே! எம்மிடம் கொய்சம் அறிவு அதிகம் எங்களெ கொய்சம் யோசிக்க இடம் தாங்கள்.
அன்புடன் குணா paris
111. guna paris on March 5, 2008 10:26 pm

எட எவ்வளவு க ரபடுகிறன் இதைஎழுத இவ்வளவு எல்லோரும் க ரபட்டால் ?எ, எனனா அவதாம் மனிதவா இல் இப்ப எனா சொனலபொகின்ரிகல்.
112. ரகு on March 5, 2008 11:20 pm

//……இப்படி சொலிறியள். அற வடித்த அரிசி கூழ்ப்பானைக்குள் விழுந்த கதை) குரங்கு குட்டி போடுவது செய்தி. ரகு தடுமாறுவது நியதி….// கவிதைத்தனமாக எழுத வெளிக்கிட்டால் சில வேளை அர்த்தமற்றுப் போவது தவிர்க்க முடியாமல் போகலாம் என்பது உண்மையா?

//…ஒழுங்கான பதில் கிடையாது. இந்த கேள்விக்கு உமது பதிலாவது ஒழுங்காக கிடைக்கட்டும். புழி ஆட்ச்சி அமைத்தால் தலமை யார்???…// ‘புழி’ ஆட்சி அமைத்தால் யார் தலமை என இங்கே ஏன் கேட்கிறீர்கள்? ஒரு வேளை ‘புளி’ யைப்பற்றிக் கேட்கிறீர்களா? சந்தையில் போய் கேட்கவும்!

புலி ஆட்சி அமைத்தால் யார் தலமை என உமக்கேன் காணும் அக்கறை? நீர் தானே புலி ஆட்சி அமைக்க முடியாது என சொல்லி விட்டீரே? அம்முடிவிலேயே நின்று கொள்ளும்.

இது இந்திய இலெக்சன் கேள்வி மாதிரி இருக்கிறது. உங்கள் கட்சி வந்தால் யார் பிரதமர் என்பது போல். இனியாவது உந்த இந்திய ‘கொப்பி அடித்தல்’களை மறவுங்கோ. உதுக்குத்தானே வங்கம் தந்த பாடம் 5ரூவாக்கு வித்தனியள். ஒரு கொப்பியை விரிச்சுப் படிச்சிருக்காலாம் தானே!!!!
113. NERUPPU on March 6, 2008 10:05 am

ரகு பதில் தெரியாவிட்டால் பரவாயில்லை. எமக்கு தெரியும் உமக்கு தெரியாதென. அது சரி பிரபாவுக்கே தெரியாத போது உமக்கு எபடி தெரியும். உமக்கு புலியாய் தெரிவது எமக்கு புழியாய் தெரியுது. தாங்கள் துரையிடம் கேள்வி கேக்கலாம். நாம் மட்டும் கேட்டால் தப்பா?. அதுவும் சரிதான் உங்கழுக்கு கேக்க மட்டும்தானே தெரியும்.

கவிதையா? ஜயோ புது புழி சேரன் துடிக்கபோகிறார்.

இது இந்திய இலெக்சன் கேள்வி மாதிரி இருக்கிறது. உங்கள் கட்சி வந்தால் யார் பிரதமர் என்பது போல். அமெரிக்காவில் இருந்து அல்கெய்தா அமைப்பு வரை ஆட்ச்சி அமைக்கு முன் தலமை பொறுப்பை சொல்லி விடுவார்கள்.

வெழி நாட்டு புழிகள் அரசியல் பொறுப்புக்கு இளம்திரையன்; இளம்வழுதி. தயாமாஸ்ரர் இதில் யாராவது வருவார்கள் என தம்பட்டம் அட்டிக்க தற்காலிக பொறுப்பு ஏற்றவரே நிலந்தர பொறுப்பு ஆகிவிட்டார்.

தலமையின் தடுமாற்றம் காரணம் சந்தேகம். வங்கம் தந்தது எமக்கு பாடம். புலிகள் தந்தது தமிழர்க்கு சோகம்.
114. ரகு on March 6, 2008 4:44 pm

//…ரகு பதில் தெரியாவிட்டால் பரவாயில்லை. எமக்கு தெரியும் உமக்கு தெரியாதென…// முதலாவது ஒரு ராணுவக் கட்டமைப்பில் ஒழுங்குமுறை ஒன்று உண்டென்பது யாவரும் அறிந்ததே. அங்கு படிநிலைகள் உண்டு. அவற்றின்படி அது செயற்படும். சில ரரணுவக் கட்டமைப்புகள் ரகசியமமனவை. இன்றும் மிகப்பலம் வாய்ந்த நாடுகளில் ராணுவத்தின் ரகசியங்களும் பல பகுதிகளும் அது கட்டமைக்கப்பட்டுள்ள விதமும் பொது மக்களுக்கு தடை செய்யப்பட்டவையே.

இவ்வாறு யாவரும் அறிந்த ஒன்றை தெரியாமல் இங்கு வந்து கேள்வி கேட்பது கழகத்தோழரின் பிழை அல்ல, மாறாக அவர் சார்ந்திருந்த கழகத்தின் பிழை என வாதிடுவோரும் உண்டு.

இரண்டாவது புலிகள் அமைப்பு ஒரு ஜனநாயக அமைப்பாக மாறும்போது (தேர்தலை அடிப்படையாகக் கொண்ட) அதன் ஜனநாயகத் தலமை பற்றிப் பேசலாம். புலியை ஒரு ‘பாசிச கொலவெறிகொண்ட ராணுவ ‘ அமைப்பு என பாட்டுப்படிப்போர் தலமைக் கேள்வி கேட்பது ஆச்சரியமல்ல மாறாக பழைய பழக்கங்களில் ஒன்று!

//…அது சரி பிரபாவுக்கே தெரியாத போது உமக்கு எபடி தெரியும்….// உண்மைதான் கழகம் ஏன் மாலைதீவுக்குப் போனது என்பது கூட இன்னும் தெரியாத உட்கட்சி - ஜனநாக, மக்கள் போராட்ட, அரசியல் ஞான, படிப்பு, பட்டறை அமைப்பில் வந்தவர்கள் ‘பாசிசப் புலி’ யை எள்ளி நகையாடுவது வேடிக்கைதான்!

//…உமக்கு புலியாய் தெரிவது எமக்கு புழியாய் தெரியுது. …// ஆம் மக்களுக்கு பம்மாத்துக்காரர்கள் எனத் தெரிந்த கழகம் உமக்கு விடுதலை அமைப்பாய் தெரிந்தது தானே? புலி ‘புளி’ யாய் தெரிவதிலென்னெ ஆச்சர்யம்?

//…..தாங்கள் துரையிடம் கேள்வி கேக்கலாம். நாம் மட்டும் கேட்டால் தப்பா?. அதுவும் சரிதான் உங்கழுக்கு கேக்க மட்டும்தானே தெரியும்….// ஐயா கேள்வியின் நாயகன் துரை. இதுக்கு பதில் சொல்லுங்கோ.

//…கவிதையா? ஜயோ புது புழி சேரன் துடிக்கபோகிறார்….// அது நாங்கள் சொல்ல வேண்டியது!!!!

//… அமெரிக்காவில் இருந்து அல்கெய்தா அமைப்பு வரை ஆட்ச்சி அமைக்கு முன் தலமை பொறுப்பை சொல்லி விடுவார்கள். …// அண்ணை நெருப்பு ‘ஆட்சி அமைக்கு முன்’ எண்டு சொல்லி இருக்கிறியள் கவனிச்சனியளே????? நீங்கள் தானே முனுக்கு பின் முரணாக் கதக்கிறனியள். உங்களச் சொல்லி குற்றமில்லை!!!

//…வெழி நாட்டு புழிகள் அரசியல் பொறுப்புக்கு இளம்திரையன்; இளம்வழுதி. தயாமாஸ்ரர் இதில் யாராவது வருவார்கள் என தம்பட்டம் அட்டிக்க தற்காலிக பொறுப்பு ஏற்றவரே நிலந்தர பொறுப்பு ஆகிவிட்டார். ….// இது புலி உங்களுக்குச் சொன்னதோ இல்லாட்டி இளம்திரையன்; இளம்வழுதி. தயாமாஸ்ரர் சொன்னவையோ??
இண்டைக்கும் பாருங்கோ நீங்கள் சொன்ன அமெரிக்காவின்ர போன தேர்தலில இன்றைய உப-ஜனாதிபதி டிக் சேனியை இந்த உப ஜனாதிபதிக்கு பொருத்தமானவரை தேடும் குழுவின்ர தலைவராப்போட்டாங்கள். அவர் வருவார் இவர் வருவார் எண்டு ரி.விக் காரன் எல்லாம் அலம்பினான். கடைசியில அந்தாளே வந்திட்டுது. அது மாதிரி இம்முறை தேர்தலிலயும் இவரைப்போடப்போறாங்கள் அவரைப்போடப்போறாங்கள் எண்டு பி.பி.சி, சி.என்.என் இல ஒரே அலம்பல்!!!!

தற்காலிகப் பொறுப்பு ஏற்றவர் நிரந்தர பொறுப்பு ஏற்பது புதுசோ? இல்லாட்டி ‘உட்கட்சி ஜனநாயகத்துக்கு’ பிழையோ அண்ணை????

//…..தலமையின் தடுமாற்றம் காரணம் சந்தேகம்…..// அஹாஹா…..ஆஹாஹா…கழகத்தோழர் சொல்லுறார் எல்லாரும் ஓடி வந்து கேளுங்கோ!!!!!!

//….வங்கம் தந்தது எமக்கு பாடம். புலிகள் தந்தது தமிழர்க்கு சோகம்….// அந்தப் பாடத்தையே மறந்தது தான் ஈழத்தமிழ மக்களின் சோகத்துக்கு காரணம். அது சரி சித்தண்ணைக்கு ஃபோன் அடிச்சனியளோ?
115. thurai on March 6, 2008 9:21 pm

//அடுத்தது பிரபாகரனை சுட்டுக்கொல்லுதல் சம்பந்தமானது. இது பிரபாகரனுக்கும் சுட்டுக் கொல்லுபவருக்கும் உள்ள உடன்படிக்கை. அதை புலிகள் ஈழம் கைவிடப்பட்டது என தீர்க்கமாக அறிவிக்கும் போது வந்து கேளுங்கள்!// ரகு

ஈழப்போரை தொடர்ந்து நடத்துவதும், கைவிடுவதும் புலிகளிடம் தான் இருக்கிறது, ஈழத்த்மிழர் கைகளில் எதுவுமே இல்லை என்பதை தெளிவாகக் கூறியதற்கு பாராட்டுகள்.

இறுதிப் போரிற்கென்று பணம் கொடுத்தவர்கள், பணம் வாங்கியவர்களை ஈழம் எங்கே என்று கேட்டாலும் உதே பதில்தானோ, அல்லது வாங்கிய பணத்தை திருப்பி கொடுப்பார்களா.

இந்திய எதிர்ப்பும்,சிங்கள அரசிற்கு எதிரான செயற்பாடுகளும் தொடருமா? மன்னிக்கவும், இரகசிய வர்த்தக உறவுகள் தொடருமா?
துரை
116. Nruppu on March 6, 2008 11:13 pm

//அந்தப் பாடத்தையே மறந்தது தான் ஈழத்தமிழ மக்களின் சோகத்துக்கு காரணம்// வங்கம் தந்த பாடத்தை இப்போதாவது ஏற்று கொண்டதுக்கு நன்றி ரகு.உன்மை தூங்காது.

//கழகத்தோழர் சொல்லுறார் எல்லாரும் ஓடி வந்து கேளுங்கோ!!!!!!// பல கழக (அன்றய நண்பர்கள்) தேசத்தை பார்க்கிறார்கள். இதையும் பார்ப்பார்கள். கவலை வேண்டாம்.

//தற்காலிகப் பொறுப்பு ஏற்றவர் நிரந்தர பொறுப்பு ஏற்பது புதுசோ// பழய பொலிஸ் அரசியல்… தமிழன் தலை எழுத்தா?

//இது புலி உங்களுக்குச் சொன்னதோ இல்லாட்டி இளம்திரையன்; இளம்வழுதி. தயாமாஸ்ரர் சொன்னவையோ?// புலம் பெயர் புழி சொன்னது.

//ஆட்சி அமைக்கு முன்’ எண்டு சொல்லி இருக்கிறியள் // நான் ஆட்ச்சியை சொல்லவில்லை. தலமையை சொன்னேன்.

//பம்மாத்துக்காரர்கள் எனத் தெரிந்த கழகம் உமக்கு விடுதலை அமைப்பாய் தெரிந்தது தானே// எனக்கு மட்டுமா? உமக்கும் தான்.

//ராணுவக் கட்டமைப்பில் ஒழுங்குமுறை ஒன்று உண்டென்பது யாவரும் அறிந்ததே. அங்கு படிநிலைகள் உண்டு. அவற்றின்படி அது செயற்படும். சில ரரணுவக் கட்டமைப்புகள் ரகசியமமனவை// அப்ப இந்த விமானம் பட்டம் விட்டு போட்டோ எல்லாம் காட்டியது. ரகு மல்லாக்க படுத்து துப்பினால் இப்படிதான்.

//அது நாங்கள் சொல்ல வேண்டியது!!//!! கழகமா? புலியா? ஏனென்றால் தாங்கள் இப்போது இரண்டும் கெட்டான் நிலை அல்லவா?

//ஐயா கேள்வியின் நாயகன் துரை. இதுக்கு பதில் சொல்லுங்கோ//. இது உங்கள் இயலாமையை காட்டுகிறது.
ரகு…

பட்டத்துக்கு வால் வேண்டும்.
வட்டத்துக்க புள்ளி வேண்டும்.
117. ரகு on March 7, 2008 1:43 am

//அந்தப் பாடத்தையே மறந்தது தான் ஈழத்தமிழ மக்களின் சோகத்துக்கு காரணம்//

//வங்கம் தந்த பாடத்தை இப்போதாவது ஏற்று கொண்டதுக்கு நன்றி ரகு. உன்மை தூங்காது.// மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் ஆனால் அச்சடிச்சு வித்த கழகம் மறந்ததால் தான் இந்த சோகம், அதைத்தான் சொல்ல வந்தேன். சும்மா குதிக்க வேண்டாம்.

//பல கழக (அன்றய நண்பர்கள்) தேசத்தை பார்க்கிறார்கள். இதையும் பார்ப்பார்கள். கவலை வேண்டாம்…// நான் அழைத்தது கழகத்தோழர்களை அல்ல மற்றவர்களை!!!

//இது புலி உங்களுக்குச் சொன்னதோ இல்லாட்டி இளம்திரையன்; இளம்வழுதி. தயாமாஸ்ரர் சொன்னவையோ?// புலம் பெயர் புழி சொன்னது. அப்ப அவரிட்டக் கேளுங்கோ இஞ்ச வந்து ஏன் கேக்கிறியள்?

//ஆட்சி அமைக்கு முன்’ எண்டு சொல்லி இருக்கிறியள் // நான் ஆட்ச்சியை சொல்லவில்லை. தலமையை சொன்னேன்.// அதே தான் சொல்கிறேன். தலைமை வகிப்பது யார் என தேர்தல் வரும் போது தெரியும். ஆடு அறுக்க முதல் **** அறுக்க நிக்கிறியள்!

//பம்மாத்துக்காரர்கள் எனத் தெரிந்த கழகம் உமக்கு விடுதலை அமைப்பாய் தெரிந்தது தானே// எனக்கு மட்டுமா? உமக்கும்தான்.// எனக்கு 1984இல் தெரிந்து விட்டது. அதற்கு முன்னரே மக்கள் கேள்வி கேட்டார்கள். அதனால் தான் சொல்கிறேன் இனியாவது திருந்துங்கள் நண்பரே!

//ராணுவக் கட்டமைப்பில் ஒழுங்குமுறை ஒன்று உண்டென்பது யாவரும் அறிந்ததே. அங்கு படிநிலைகள் உண்டு. அவற்றின்படி அது செயற்படும். சில ரரணுவக் கட்டமைப்புகள் ரகசியமமனவை//

//அப்ப இந்த விமானம் பட்டம் விட்டு போட்டோ எல்லாம் காட்டியது. ரகு மல்லாக்க படுத்து துப்பினால் இப்படிதான்.// அதுவும் ராணுவ நடவடிக்கை ரகசியங்களின் ஒரு அலகுதானே? இல்லையா? அதைப்பற்றி புலிகள் தான் முடிவெடுக்க வேண்டும். நானோ அல்லது நீங்களோ அல்ல! உங்களுக்கு புலிகள் விமானம் காட்டியது மடைத்தனமாக தெரிந்தால் அவர்களின் புலம் பெயர் ‘புழி’ யிடம் சொல்லுங்கள்.

//அது நாங்கள் சொல்ல வேண்டியது!!/!! கழகமா? புலியா? ஏனென்றால் தாங்கள் இப்போது இரண்டும் கெட்டான் நிலை அல்லவா?// இரண்டும் கெட்டானோ இல்லையோ.. ஆனால் கழகம் இல்லை.. கழகம் இல்லை… கழகம் இல்லை!!!!!

//ஐயா கேள்வியின் நாயகன் துரை. இதுக்கு பதில் சொல்லுங்கோ// இது உங்கள் இயலாமையை காட்டுகிறது. இயலாமையினாலா இவ்வளவு நாளும் இங்கே எழுதிக்கொண்டிருக்கிறேன். அஷ்ரப் அலியில் ஆரம்பித்து துரை வரை பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்!!!!

//…ரகு… பட்டத்துக்கு வால் வேண்டும். வட்டத்துக்க புள்ளி வேண்டும்….// வட்டத்துக்க ஏன் புள்ளி? ஓ..சும்மா கவிதைத்தனமாக இருக்க வேண்டும் என சொன்னனியளோ
118. ரகு on March 7, 2008 1:45 am

//..ஈழப்போரை தொடர்ந்து நடத்துவதும், கைவிடுவதும் புலிகளிடம் தான் இருக்கிறது, ஈழத்த்மிழர் கைகளில் எதுவுமே இல்லை என்பதை தெளிவாகக் கூறியதற்கு பாராட்டுகள்…//

அண்னை துரை நீங்கள் கருத்துசொல்லும் போது முன்னர் என்ன பேசப்பட்டது ஏன் அது பேசப்பட்டது என வாசித்துவிட்டு கருத்துச் சொல்லுங்கள்.
119. Rathan on March 7, 2008 10:31 am

//பழய பொலிஸ் அரசியல்… தமிழன் தலை எழுத்தா?//இதைப்பற்றி தமிழர்தான் அக்கறை காட்டவேணும் நீங்கள் ஏன் ரென்சன் ஆகிறீங்கள்

டிபி விஐயதுங்கா என்ற பொலிஸ் கொன்ஸ்ரபில் பிரேமதாசா காலத்தில் சிறிலங்கா பிரதமர் பின்னர் ஐனதிபதியாய் இருந்தவர். அவருக்கு கீழே நீங்கள் புளொட் துணைக்குழுவாய் இருந்தது உங்கள் தலையெழுத்து என்கிறீரா இல்லை செஞ்சோற்று கடனா? என்ன சொன்னாலும் பச்சைமட்டை அடியை ஆயுளுக்கும் மறக்க மாட்டீர்கள்.
120. Nruppu on March 7, 2008 1:05 pm

//மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் ஆனால் அச்சடிச்சு வித்த கழகம்// அப்பாடா கழகம் மக்கழுக்கு ஒரு நல்லது செதுள்ளது.

//சும்மா குதிக்க வேண்டாம்.// 18 ம் மாடியில் இருந்து குதிக்க நான் என்ன கரும் புலியா?

//நான் அழைத்தது கழகத்தோழர்களை அல்ல மற்றவர்களை// யாரைதான் சொல்லுங்களேன்.

//புலம் பெயர் புழி சொன்னது. அப்ப அவரிட்டக் கேளுங்கோ// அப்போ நீங்க புலி இல்லை மகிழ்ச்சி.

//தலைமை வகிப்பது யார் என தேர்தல் வரும் போது தெரியும்// அப்படியானால் தமிழ் ஈழம்….

//1984இல் தெரிந்து விட்டது. அதற்கு முன்னரே மக்கள் கேள்வி கேட்டார்கள். // இப்போது மக்கள் கேள்வி கேக்க
முடியுமா ?இதுதான் பிரச்சனை ரகு.

//நானோ அல்லது நீங்களோ அல்ல// புலியை கேக்க படாது. அப்ப கழகத்தை கேக்க நாம் யார்?

//இயலாமையினாலா இவ்வளவு நாளும் இங்கே எழுதிக்கொண்டிருக்கிறேன்// ஒகோ அப்படியா சரி சரி.

//வட்டத்துக்க ஏன் புள்ளி// வடிவம் சரியாக வருவதற்க்கு.

புலிக்காக தமிழ் ஈழம்….
எதற்க்காக புலிக்கு ஈழம்…
121. Nruppu on March 7, 2008 1:28 pm

ரதன் தமிழர் தலை எழுத்து என்றுதானே எழுதினேன். கழக தலை எழுத்து உம்மட்டை ஏதோ சொல்லு வாங்கப்பா…… புலிக்கு புதிது ரதன்……….. எதுக்கு ரதன் கொலை…………
122. ரகு on March 7, 2008 4:12 pm

//… அப்பாடா கழகம் மக்கழுக்கு ஒரு நல்லது செதுள்ளது…// அது ஒண்டுதான் உருப்படியாச் செய்தது. பிரச்சினை அதுவல்ல அதே சதியில் விழுந்ததுமல்ல அச்சதியினால் சொந்த மக்களை கொன்றொழித்தது தான்!

// 18 ம் மாடியில் இருந்து குதிக்க நான் என்ன கரும் புலியா?// உங்களை எல்லாம் கரும்புலி என நினைப்பேனா? இல்லை மற்றவனை தள்ளி விழுத்தும் கழகம்!

//..அப்போ நீங்க புலி இல்லை மகிழ்ச்சி…// நீங்களாக நான் புலி என முடிவெடுத்து விட்டீர்கள் போல் இருக்கிறது.

//.. அப்படியானால் தமிழ் ஈழம்……// ஏன் ஈழத்தில் தேர்தல் வராதா? உண்மைதான் புலிகள் ஈழம் கிடைத்தவுடன் தேர்தல் நடக்கும் என 1983 இல் சொல்ல கழகக்காரர் ஐயையோ…பழையபடி முதலாளித்துவ பூர்சுவாக்களிடம் ஈழத்தைக் கையளிக்கப் போகிறார்கள் புலிகள்…இவர்களும் குட்டிமுதலாளிக் கூட்டம் தான் என நோட்டீஸ் அடிச்சதை மறந்து விடவில்லையே????

// இப்போது மக்கள் கேள்வி கேக்க முடியுமா ?இதுதான் பிரச்சனை ரகு.// கேட்ட மக்களை திருவடி நிலையிலும் ஒரத்த நாட்டிலும் ‘கொன்று புதைக்காத’ கனாக்காலம் அது !!!!!

//புலியை கேக்க படாது. அப்ப கழகத்தை கேக்க நாம் யார்?// நம்பி அவர்களின் பின்னால் இழுபட்டுத் திருஞ்சவர்கள்!

//வட்டத்துக்க ஏன் புள்ளி// வடிவம் சரியாக வருவதற்க்கு.// ஓமோம்….புள்ளி வச்சு போட்டவை இப்ப நடுத்தெருவில நிக்கினம்!!!
123. Nruppu on March 7, 2008 10:15 pm

// அது ஒண்டுதான் உருப்படியாச் செய்தது.// நண்பா விரலுக்கு ஏற்ற வீக்கம் / மக்களை கொன்றொழித்தது.
புலியை விடவா?

//உங்களை எல்லாம் கரும்புலி என நினைப்பேனா// அது என்ன படித்து வாங்கிய பட்டமா?

//நீங்களாக நான் புலி என முடிவெடுத்து விட்டீர்கள் போல் இருக்கிறது// உம்முடைய பின்னோட்டத்தை பார்க்கவும்.

//ஏன் ஈழத்தில் தேர்தல் வராதா// புலி இருக்கும் வரை வருமா?

//நோட்டீஸ் அடிச்சதை மறந்து விடவில்லையே// இது பாட்டி வடை சுட்ட கதை.

//கேட்ட மக்களை திருவடி நிலையிலும் ஒரத்த நாட்டிலும் ‘கொன்று புதைக்காத’ கனாக்காலம் அது !!!!!// நான் கேட்டது நம் நாடு.

//நம்பி அவர்களின் பின்னால் இழுபட்டுத் திருஞ்சவர்கள்!// இப்போது புழியாச்சே?

//ஓமோம்….புள்ளி வச்சு போட்டவை இப்ப நடுத்தெருவில நிக்கினம்!//!! நடுதானே புள்ளி.

ரகுநீர் எங்கு படித்தீரோ அங்குதான் நானும் படித்தேன். ஆகையால் உமது வினாவுக்கு விடை எனக்கு சுலபமே.
124. ரகு on March 8, 2008 3:29 pm

//.. நண்பா விரலுக்கு ஏற்ற வீக்கம் / மக்களை கொன்றொழித்தது. புலியை விடவா?..// ஓமோம்… 20 துவக்கு வச்சுக்கொண்டே இவ்வளவு ஆடினவையள் ஆட்டிலறி ரேஞ்சுக்கொ போயிருந்தால் ஊரில சனம் இருந்திருக்கேலாது. விரலுக்கேத்த வீக்கம் தான்!!!

//..உங்களை எல்லாம் கரும்புலி என நினைப்பேனா// அது என்ன படித்து வாங்கிய பட்டமா?…// அது நீங்களே உங்களுக்கு கொடுக்க முனைந்தது. நீங்கள் எழுதினதை ஒருக்கா குனிஞ்சு வாசியுங்கோ.
(Nruppu on March 7, 2008 1:05 pm 18 ம் மாடியில் இருந்து குதிக்க நான் என்ன கரும் புலியா?)

//..உம்முடைய பின்னோட்டத்தை பார்க்கவும்….// பின்னூட்டத்தை வைத்துத்தானே என்னை நன்கு தெரியும் என பல கதையள் விட்டனியள். அதே மாதிரித்தான் உங்களின் அரச இந்திய அடிவருடி விசுவாசமும் என நான் சொன்னால் ஒத்துக்கொள்வீர்களாயின் சந்தோசமே!!!!

//…புலி இருக்கும் வரை வருமா?…// இந்திய அடிவருடிகள் இருக்கும் போது வந்த தேர்தல் பார்த்தோம் தானே!

// நோட்டீஸ் அடிச்சதை மறந்து விடவில்லையே// இது பாட்டி வடை சுட்ட கதை.,,,..// உண்ணானை அப்பன் சரியாச்சொன்னாய். உப்பிடித்தானணை கழக்காரரின்ர நோட்டீசில மக்கள் போராட்டம், அரசியல் அறிவு, உட்கட்சி ஜனநாயகம், குட்டி முதலாளி…அப்பிடி இருந்ததுகள வாசிச்ச சனம் சொன்னதணை. ஞாபகப்படுத்தினதுக்கு நன்றியணை!!!!

//கேட்ட மக்களை திருவடி நிலையிலும் ஒரத்த நாட்டிலும் ‘கொன்று புதைக்காத’ கனாக்காலம் அது !!!!!// நான் கேட்டது நம் நாடு.// திருவடிநிலை பின்ன என்ன…… இருக்கு!
மற்றவன்ர நாட்டுல கொலைசெய்யப்பட்டவங்கள் எல்லாம் ‘நம் நாடு’ மக்கள் இல்லையோ! மணிக்கதை விடுறாயப்பு!!

//!! நடுதானே புள்ளி…// ரகுநீர் எங்கு படித்தீரோ அங்குதான் நானும் படித்தேன். ஆகையால் உமது வினாவுக்கு விடை எனக்கு சுலபமே..// இப்பிடியே ‘நடுதானே புள்ளி.. புள்ளிதானே நடு..’நடுதானே புழி.. புழிதானே நடு.நாடுதானே புலி…புலிதானே நாடு…

எண்டு அலம்புங்கோ அதை கவிதை எண்டு விமர்சிக்க ஒரு கூட்டம் வேற இருக்கு..நல்லது. அதுக்கேன்ராப்பா உன்ர பள்ளிக்கூடத்தை இழுத்து அதின்ர மானத்தை வாங்கிறாய். கழகம் தான் கெட்டுப்போச்சு இப்ப பள்ளிக்கூடத்தையும் கெடுக்கப் பாக்கிறியே… வேண்டாமப்பு வேண்டாம்!!!
125. ரகு on March 8, 2008 4:58 pm

//…அது என்ன படித்து வாங்கிய பட்டமா?…//

உயிரைக் கொடுத்தவனை உந்த ‘படிப்பு’, ‘அரசியல் ஞான’ நக்கல்கள் அடிச்சுத்தானே கழகம் வளர்த்தனியள். இப்ப எங்க வந்து நிக்கிறியள்? அவங்கள் மாவீரர், கரும்புலி நீக்கள் ‘சோத்துப்பாசல்’ !!!
அது சரி ‘சோத்துப்பாசல்’படித்து வாங்கின பட்டமா?
126. neruppu on March 8, 2008 6:25 pm

ரகு; //சோத்துப் பாசல்’ படித்து வாங்கின பட்டமா / இல்லையப்பா கேட்டு வாங்கிய பட்டம். // உயிரைக் கொடுத்தவனை / திருத்தி கொள்ளவும் உயிரை எடுத்தவனை.

//ஆட்டிலறி ரேஞ்சுக்கொ போயிருந்தால்// கொலைக்கும் இதுகளை பாவிப்பார்களா? சொல்ல முடியாது தனிமனித கொலைக்கு கரும்புலி போகுதே.

//ஊரில சனம் இருந்திருக்கேலாது// இப்போது என்னவாம்…?

//நோட்டீஸ் அடிச்சதை மறந்து விடவில்லையே// இதுவும் பாட்டி சுட்ட வடதான்.

// 18 ம் மாடியில் இருந்து குதிக்க நான் என்ன கரும் புலியா?)// இது நான் முட்டாள் இல்லை என சொல்லியது.

//திருவடிநிலை பின்ன என்ன உம்மட ****குக்குள்ளயே இருக்கு!// நம்ம நாடு இப்போது வன்னிதானே. கெட்டவார்த்தை சொல்லுகிறார். கோவமா?

//உன்ர பள்ளிக்கூடத்தை இழுத்து அதின்ர மானத்தை வாங்கிறாய்// நான் தான் பள்ளி செல்லவில்லை என்பது உமக்கு தெரியுமே. உமோடு சேர்ந்து கலகத்தில் படித்த பள்ளியை சொன்னேன்.

ரகு உமக்கு எதாவது சொல்ல வேண்டுமே. ரகுவின் வினாதான்…
நெருப்பின் விடையும்…..

No comments:

Post a Comment