மாற்றம் என்பது மாறாதது; இங்கே தோழமைதேடி...

Dec 26, 2009

யமுனாவின் இப்பிரதி தனிநபர் தாக்குதல்

This entry was posted on Sunday, March 2nd, 2008 at 11:09 am and is filed under யமுனா ராஜேந்திரன், ::கலை இலக்கியம். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
117 Comments so far
நான்நானில்லை. on March 2, 2008 12:58 pm
கனநாளைக்குப் பிறகு யமுனா சாரின்ர கட்டுரையை முழுசா படிச்சிருக்கிறன். முதல்ல இந்த பிலிம் காட்டுற கோஸ்டியளின்ட முகத்திரையைக் கிழித்ததற்கு யாமுனாவுக்கு எனது பாராட்டுக்கள். சபாஸ் யமுனா!!!
எனக்கு சின்ன புத்திதான். இந்த அமைப்பியல் பின்னவீனத்துவம் கற்பிதம் பூகோ அன்றசன் உதெல்லாம் என்ன சமான் என்டே எனக்குத் தெரியிறதில்லை. அதால எனக்கு கொஞ்சம் தாழ்வு மனப்பான்மையும் இருந்தது. உதெல்லம் தெரியாம இருக்குறன் என்டு. யமுனான்ட கட்டுரையை வாசிச்சப் பிறகு தான் உதுகளை வாசிக்கிறதிலையும் ஒன்டும் இல்லையென்ற விசயம் வெளியிர வருகுது.
தமிழ்ழ ஒரு பழமொழி சொல்லுவினம் கண்டதும் கற்கப் பண்டிதன் ஆவான் என்று. நான்னைக்கிறன் அது மாத்திச் சொல்ல வேணும். கண்டதும் கற்க பியித்தியம் ஆவான் என்று.
ஊரிலை எங்கட சனம் என்ன உதெல்லாம் படிச்சே கருத்துச் சொல்லுது. சனம் தங்கட அனுபவத்துக்கால கருத்துச் சொல்லுது. அதுதான் சொல்லறது மக்கள் எப்பவும் தெளிவாயே இருப்பார்கள் என்று. உந்த இசங்களை விளங்கிக் கொள்ளிறத விட்டுப் போட்டு சனத்தை விளங்கிக் கொள்ள முயற்சி செய்யுங்கோ.
கவனிக்க:
//புகலிடத்தில் மார்க்சியர்களிடையில் ‘தலித் விராதி’களைக் கட்டமைக்கிற ‘ஜனநாயகவாதிகள்’ அல்லது ‘வன்முறை மறுப்பாளர்கள்’ என வேஷம் போடுபவர்கள் அனைவரும் தலித்தியர் அல்லாதவர்கள்தான்.
ஷோபா சக்தியும் சுகனும் இவர்களது ‘சகபாடிகளும்’ தங்கள் ‘தலித்திய முகமூடி’களை மற்றும் ‘ஒப்பனை’களைக் களைந்துவிட்டு திறந்த விவாதத்திற்கு வருமாறு நான் அழைக்கிறேன். அல்லவெனில்இ இனிமேல் வாயை மூடிக்கொண்டு இருங்கள் எனவும் கோருகிறேன்.//
யமுனா இந்த சகபாடிகளுக்க ராகவனும் சேர்த்தியோ?
//நான் எனது சொந்தப் பெயரில் எனது சொந்த அடையாளத்துடன் விவாதத்திற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் அவர்களது எழுத்துக்கள் மற்றும் நடத்தைகள் போன்றவற்றை ஆதாரபூர்வமாகக் குறிப்பிட்டு இக்கட்டுரையை எழுதியிருக்கிறேன். இதே வகையில் தமது சொந்தப் பெயரில் தமது சொந்த அடையாளங்களுடன் எழுத்து மற்றும் நடத்தை சார்ந்த ஆதாரங்களுடன் வருகிற எவரோடும் திறந்த விவாதத்திற்கு நான் தயாராக இருக்கிறேன்.//
வெல்டன் யமுனா.
நான்நானில்லை.
vanman on March 2, 2008 1:27 pm
Constant writer waged great exposure war against 2 rouges. well done.
babu on March 2, 2008 2:17 pm
சோபாசக்தி இனைங்காட்டியதுக்கு தேசத்திற்கு நன்றி.
RANI on March 2, 2008 3:26 pm
நன்றி யமுனா ராஜேந்திரன். வேறெதுவும் சொல்ல தெரியவில்லை. கண்களை திறந்து விட்டது போலுள்ளது.
அற்புதன் on March 2, 2008 3:40 pm
முகமூடிகளையும் போலிகளையும் இனம் காட்டும் உங்கள் முயற்சி வரவேற்கத் தக்கது. இவர்களின் போலியான பேய்க் காட்டலையும், தலித்தியப் போலி முகமூடிகளையும் நோக்கி எழுப்பப்பட்ட எந்தக் கேள்விகளுக்கும் ஒரு உருப்படியான எதிர்வினை இதுவரை இல்லை. மொவுனமே உங்களின் கேள்விகளுக்கும் பதிலாக அமையும் என எதிர் பார்க்கலாம். எங்காவது தமிழகச் சஞ்சிகைகளில் எதாவது ‘பகிடி’ விடுவார்கள் அவ்வளவு தான்.
இவர்களை நம்பி ஏமாறும் பலர் விழித்து கொள்ள உங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து எழுதுவதும், பகிரங்க விவாதத்தைக் கோருவதன் மூலம் இவர்களை அம்பலப் படுத்துதலும் அவசியமானது.
பார்க்க
http://aatputhan.blogspot.com/2007/11/blog-post_25.html
சோபசக்தியின் கள்ள மௌனமும், இராகவனின் பதில்களும்.
http://aatputhan.blogspot.com/2007/11/blog-post_04.html
தோழர் சோபா சக்தியிடம் சில கேள்விகள்?
http://aatputhan.blogspot.com/2007/10/blog-post_31.html
பின் நவீனத்துவம் என்னும் பேக்காட்டல்.
http://aatputhan.blogspot.com/2007/02/blog-post_20.html
மள்ளர் பேரவை on March 2, 2008 4:14 pm
தலித் என மற்றவர்களை முத்திரை குத்தும் யமுனா ராஜேந்திரன் போன்றவர்களும் சமுக விரோதிகளே.
மள்ளர் பேரவ
செம்பறையன் on March 2, 2008 4:42 pm
//ஷோபா சக்தியும் சுகனும் இவர்களது ‘சகபாடிகளும்’ தங்கள் ‘தலித்திய முகமூடி’களை மற்றும் ‘ஒப்பனை’களைக் களைந்துவிட்டு திறந்த விவாதத்திற்கு வருமாறு நான் அழைக்கிறேன்//
கொஞ்சநாள் டைம் குடப்படா ராசேந்திரமண்ணா. அ.மார்க்ஸை எல்லோ கேட்டுச்சொல்லவேணும். புத்தம் புது லண்டன் தலித் பின்நவீனத்துவத்துவ குறூப்பையும் ரெடி பண்ணியாக வேணும். அ. மார்க்ஸ் எழுதினத விடியப் புறம் 4 மணிக்கு எழும்பி திருவெம்பாவை கசட்டும் போட்டூடு பாடமாக்கினால் தான் தமிழ்-பின்நவீனத்துவம் ஏறும்.
thananji on March 2, 2008 5:59 pm
அப்பாடா நெஞ்சு குளிருது. எனக்கும் ஏதாவது கதையை நாவல எழுதி முன்னுக்கு வரவேணும் எண்டு ஆசை. முடியலயே.. நா என்ன செய்வே..ஆரிட்ட முறையிடவே.
che on March 2, 2008 6:54 pm
யமுனா ஏன் இத்தனை காழ்ப்பு? ஒன்றை மட்டும் நல்லா தெரிந்து கொள்ளவும். இன்று புலம்பெயர் இலக்கியம் செயபவர்களில் விரல்விட்டடு எண்ணத்தக்க ஒருவரில் ஒருவராக-நல்ல படைப்பாளியாக-ஒடுக்கபடுபவர்களுக்கு குரல்கொடுப்பவர்களாக இருப்பவர்களில் ஒருவரை காய்பதில் லாபம் என்ன? இது மாதிரி வேறு நல்ல படைப்பாளிகளை உமக்கு தெரியுமா லிஸ்டு தரவும். அவரது அரசியலுக்கு ஈடாக யாரையும் தெரியுமா ? லிஸ்டு தரவும்.
kannan on March 2, 2008 7:00 pm
/ஸார்த்தர் மார்க்சியத்தை ஏற்றவர். அவர் மீது கடுமையான ஸ்டாலினிஸ்ட் என்ற விமர்சனமும் உண்டு. மார்க்சியத்துக்குப் பிந்திய சிந்தனை என்பது அவருக்குச் சம்பந்தமில்லாத ஒரு விடயம். //
இதென்ன வம்பு ? சாரி சார் சாத்தர பத்தி ஒரு கட்டுரை எழுத முடியுமா? அப்ப தெரியும் தங்கள் அறிவு.
SEKKIZHAR on March 2, 2008 7:02 pm
//நான் திட்டவட்டமாகச் சொல்கிறேன்: காலனிய எதிர்ப்பு இந்துத்துவமும், மேற்கத்திய மற்றும் மார்க்சிய எதிர்ப்பு அரசியல் இஸ்லாமும், நரேந்திர மோடியும் பின்லாடனும் ‘பின்நவீனத்துவ’ உற்பத்திகள்தான்.
மார்க்சியம் வழங்கிய மிகப்பெரும் கொடையே இந்த அடையாளங்களுக்கு அப்பாலான, விடுதலை பெற்றதொரு அடையாளத்தைத் தேர்வதுதான்.//-யமுனா ராஜேந்திரன்.
நான் “காலனிய எதிர்ப்பு இந்துத்துவ வாதிதான்”. இந்தியாவை பொறுத்தவரை, அடையாளங்களுக்கு அப்பாலான விடுதலை என்பது, ஜே.கிருஷ்ணமூர்த்தியின் “உருவகப்படுத்தப்பட்ட ஆன்ம படிமானங்கள்” என்ற “புத்தரை” போன்று, துன்பியல் விடுதலையை நோக்காக கொண்ட, மேற்கத்திய பொருளியல் அல்லது மார்க்சிய அடிப்படையில் உருவான கருத்துருவாக்கம். என் எதிரிகள் இதை தங்கள் சுயநலத்திற்கு பயன் படுத்துகிறார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு போதிப்பதை, தாங்கள் கடைப்பிடித்தால், என் நிலையிலிருந்து மாற, என் அடையாளத்தை விட நான் தயார்.
thoondsa on March 2, 2008 7:04 pm
ஆழுக்காள தூண்டிவிட்டு நாரத வேலைக்கு தேசம்நெற் அகில உலக பட்டம் பெறலாம். என்னே திறமை. என்னே திறமை. ரகு ரதன் இவங்கள பகைச்சு போடாயுதோங்கப்பா -உங்கட புலி பிரச்சாரத்துக்கும் வைப்பாங்கள் ஆப்பு-அது கிடக்க எப்ப தேசம்நெற் ஆசிரியர்மார் புலியில யொயின் பன்ன போகினம
antisho on March 2, 2008 7:10 pm
//அப்புறமாகச் சாருநிவேதிதா. ‘அன்று குடிக்க எவர் வாங்கிக் கொடுக்கிறரோ அவர் பற்றி விதந்தோதி எழுதுவார்’ என்பது ஒரு பிரசித்தமான யாவருமறிந்த விவரம். இதை நான் சொல்லவில்லை. ஒரு காலத்தில் சாருநிவோதிதாவை விதந்தோதிய அ.மார்க்ஸே சொல்லியிருக்கிறார். //
அடக்கடவுளே அ.மார்க்சும் ஷோ’வின் ஷோ’வால் பாதிக்கபட்டுள்ளார் போலிருக்கு.
MILLAR on March 2, 2008 7:35 pm
//”‘தனிநபர் வாழ்வு சார்ந்த நுண் அரசியல் விவாதத்தை’த் துவங்க நினைப்பவர்கள் முதன்மையாகத் தமது பாலுறவுகள குடும்ப வாழ்வு அவர்தம் குடும்ப உறவுகள் அவர்தம் கொடுக்கல் வாங்கல்கள் அவர்களது பூர்வீகச் சாதி அவர்தம் குடும்பத்தவர் மேற்கொள்ளும் சமயச் சடங்குகள் அவர்கள் பிறர் மீது செலுத்திய வன்முறைகள் புத்தக கொடுக்கல் வாங்கல் விவரங்கள் அனைத்தையும் முன் வைத்து இந்த விவாதங்களைத் தொடங்குவார்களானால் அந்த விவாதத்தில் நான் முழு அளவில் ஒத்துழைப்பேன் என உறுதியளிக்கிறேன்.”//
ஏலே அந்தாளு கேக்குதிலே. யெல்லாம் ஒமக்கு பிடிச்ச சங்கதிதா. கிளம்பி வாருமிலே.
sam on March 2, 2008 7:42 pm
//ஸார்த்தர் மார்க்சியத்தை ஏற்றவர். அவர் மீது கடுமையான ஸ்டாலினிஸ்ட் என்ற விமர்சனமும் உண்டு. மார்க்சியத்துக்குப் பிந்திய சிந்தனை என்பது அவருக்குச் சம்பந்தமில்லாத ஒரு விடயம். // - //இதென்ன வம்பு ? சாரி சார் சாத்தர பத்தி ஒரு கட்டுரை எழுத முடியுமா? அப்ப தெரியும் தங்கள் அறிவு.//
ஜோன் போல் சாத்ர் பல சந்தர்ப்பங்களில் ஸ்டாலினிஸத்திற்கு ஆதரவான போக்கைக் கொண்டிருந்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளராகவிருந்தார். விக்கடர் கிர்வ்செங்கோவின் ஷுவா து லிபர்த்தே என்ற ஸ்டாலின் கொலைகள் தோடர்பான நூலுக்குப் பின்னர் சாத்ர் அவரை சீ.ஐ.ஏ இன் ஏஜண்ட் என வர்ணித்ததுடன் மட்டுமல்ல இதற்கெதிரான மேடை நாடகம் ஒன்றையும் அரங்கேற்றினார்.
இந்த ஷோ பிந்னவீனத்துவத்திற்கு இதில்லாம் புரியப்போவதில்லை. பிரான்ஸில் தோன்றிய பின்னவீனத்துவ - மார்க்ஸிய எதிர்ப்புச் சிந்தனைகளை சென்னையிலிருந்த்து இறக்குமதி செய்தவர்கள். இவர்கள் பின்னால் அலையும் சொக்கலிங்கப் பெருமானிலிருந்து சிறுவர்கள் வரை குறைந்த பட்சம் கூகுலையாவது தட்டிப்பார்கலாமே? சாத்ரின் வீடு கூட பரிஸ் 18 மார்கதே புவாசனியெ கடையிலிருந்து வெகுதூரத்திலில்லை.
Ruban on March 2, 2008 7:44 pm
இங்கு சே என்று கருத்துச்சொன்னவர் போல பரிதாபத்திற்கு உரிய சிலர் உண்டு. இவர்கள் சோபாவை மட்டுமே அறிவார்கள். இப்படி ஒருவர் சோபாவின் பெயரை தனது ஆடையில் பதித்தக்கொண்டு திறிந்தார். சொபாவின் கதைகள் உறுவாக்கப்படுபவை. மறைமுக ஐனரஞ்சகமானவ
yamuna rajendran on March 2, 2008 8:22 pm
கண்ணன் தங்களுக்காக ஒரு தகவல்: ஸார்த்தர் குறித்து பிரான்ஸ் ‘உயிர்நிழல்’ சஞ்சிகையில் அவரது நினைவாக மிக விரிவான கட்டுரையை எழுதியிருக்கறேன். நேரமிருந்தால் படித்துப் பார்க்கலாம். யமுனா ராஜேந்திரன்.
sivampuvam on March 2, 2008 8:51 pm
ஐயோ ஜமுனா நீ நல்லாத் தான் எழுதியிருக்கா. சோபாசக்தி வருhன்களா அந்தளவுக்கு இவன்களிட்ட திராணியிருக்கோ என்று நினைக்கிறியா ஏதோ பரிசில தாங்கதான் பெரிய தாதா என்ட நினைப்பு. பரிசில இப்ப இவன்களோட இருந்தவங்கள் கூட இவன்கள எட்டிக்கூட பார்க்கிறதில்ல சுகன் ஊருக்கு உபதேசம் செஞ்சுகொண்டு ஐயருக்கு முன்னாலநிண்டு அட்டாங்க நமஸ்காரம் செய்து சாமத்தியச் சடங்கு செய்து விட்டு தலித்தி மாநாட்டைப் பற்றி அவதூறாகப் பேசி பேட்டி கொடுத்திட்டு தலித் மாநாட்டில வேற கலந்துக்கறார். சோபசக்தி பிரான்சில கொஞ்சக்காலம் ஓடிக்கொண்டு திரிஞ்சார். பேந்து பாருங்கோ இந்தியாவுக்கு ஓடினார். இப்போ லண்டன் கனடா எண்டு ஓடுறார். அங்க எப்ப வண்டவாளம் தெரியப்போகுதோ?
அது சரி யாரடாப்பா சொன்னது சோபாசத்தி தலித் என்று. சுத்த வெள்ளாளன் அதோட அல்லைப்பிட்டியின்ர யாழ் மேலாதிக்க பரம்பரை. ஜமுனா உமக்கு கனக்க விசயம் விளங்கல்ல போல. ஏனப்பு ஜமுனா இவர் சோபாசத்தி பற்றி ஒருமாயை இந்த இந்திய … பத்திரிகைகள் எறபடுத்தினதுக்கு இந்த அப்பு அ. மாக்சை ஏன் மகன வையுறா. அந்த மனுசன் பாவம் இவர் சோபாசத்திக்கு ….. பொறாமை கண்றாவி. ஏன் அப்பு நீ வீணா நேரத்தை செவழிக்கிறா. இந்த சோபாசத்தி இன்னம் இரணடு வருசத்தில பார் உன்னைப் பற்றி திரும்ப எங்காவது கதைப் புத்தகம் விடாட்டி.
…….இவனுக்கு யாராவது விமர்சனம் எழுதிப்பாருங்கோ புலிப்பாணியில பதில் சொல்லுவான்டா ஏண்டா இப்பவும் அவன் புலி எண்டு தானே கதைக்கினம் அசோக் ஒட்டின நோட்சை கிழிச்சவன் அதுமட்டுமா அந்த நோட்டீசைக்கு மேல வேற பேப்பரை ஒட்டினவர். எனக்கு இவர் கலாமோகன் மேல விமர்சனம் இருந்தாலும் அவர் உண்மையான தலித் பிறப்பாலும் தலித். ஆனா இவர்கள விட்டு ஒதுங்கி போய்ட்டார். இவர்ர குணத்தை அவன் நன்றாக எடைபோட்டிட்டார். அவர் மேல இவர்க்கு பொறாமை. இவர் சாருநியும் சோபவும் இப்ப குழந்தைகளைப் பற்றி கதைக்றார்கள். புலிக்கு ஆள்சேர்க்கிறாங்களோ அல்லது ….. பிரான்சுக்கு கடத்தப்போறார்களோ கவனம். உன்ர குழந்தை பேந்து ஒரு கதை போட்டிடுவார்.
ஐயோ ஒருக்கா நாங்க புஸ்பராசா அண்ணை வீட்டு குடிக்கையிக்கை இவர் போதையில சொன்னான் டேய் நான் செத்து பிணமா கூட கிடந்தாலும் இந்த சோபான்ர பெயரைத்தான்டா இந்த உலகம் சொல்லோணும் என்டு இண்டைக்கும் புஸ்பராசா அண்ணை போயட்டார். ஆனா எனக்கு இன்னும் இவர் சொன்னது எனக்கு ஞாபகம் இருக்கு ஜமுனா. இப்படி வெறிபிடிச்சி இருக்கிற ஒருத்தர்பத்தி நீர் என்ன நினைக்கிறா. தண்ணடியடிச்சா எல்லாம் வரும்
நானும் லாச்சப்பலுக்கு போகோணம் புதினம் பார்க்க.
sivaji on March 2, 2008 10:03 pm
//வெள்ளாளர் வெள்ளைக்காறனிட்டை படிச்சுப்போட்டு மானிப்பாயிலைதான் மதிலேறீக்குதிச்சு ஓடினவங்கள்.// சுகன்
//சுகன் ஊருக்கு உபதேசம் செஞ்சுகொண்டு ஐயருக்கு முன்னாலநிண்டு அட்டாங்க நமஸ்காரம் செய்து சாமத்தியச்சடங்கு செய்து விட்டு தலித்தி மாநாட்டைப் பற்றி அவதூறாகப் பேசி பேட்டி கொடுத்திட்டு தலித் மாநாட்டில வேற கலந்துக்கறான்//
அடடடா குமரியில் சிணுங்கல் குழந்தையில் அழுகல் முரண்பாட்டு மூட்டை நீ வாஜீ வாஜீ……
Danu on March 2, 2008 10:11 pm
இவர் சோபா ..- ஜெயபால் - ராகவன் கவனமாயிருங்கோ எல்லாம் தெரியவரும் ஒரு 5 வரடம் பொறுங்கோ -
kunchiyappu on March 2, 2008 10:33 pm
உண்மை தான் இவர் சுகன் … சாமத்தியத்துக்கு வேட்டி கட்டி ஐயருக்கு முன்னால நிண்டு எல்லாம் செய்தவர் நானும் போயிருந்தனான். நான் சும்மாவே சொல்லுறன் டாணு நீ வேண்டுமென்றா ….. கேளு சத்தியமாய்தான் சொல்லுறன் போட்டோ அனுப்பினா போடுவியே சொல்லுடா மவனே. ….
mukunthan on March 2, 2008 10:41 pm
ஜமுனா இதில நீங்களும் வந்து எழுதிறீங்கள். இந்த சோபா குழு லண்டனில தலித்தை …. மாநாடு போட்டே செத்துப்போச்சினம். செத்த பாம்பிற்கு திரும்ப திரும்ப அடிக்கிறது சரியில்லை.
makkan on March 2, 2008 10:46 pm
பொல்லுக்க குடுத்து அடிவாங்கத் தெரியுமோ? அதுவும் ஒரேனேரதில ரெண்டு பொல்லு. ஒண்டு நாவலனிட்ட மற்றது யமுனாட்ட. எடுத்துக் கொடுத்தது செயவாலாச்சார
ரகு on March 2, 2008 10:48 pm
//….சுகன் ஊருக்கு உபதேசம் செஞ்சுகொண்டு ஐயருக்கு முன்னாலநிண்டு அட்டாங்க நமஸ்காரம் செய்து சாமத்தியச்சடங்கு செய்து விட்டு …//
என்னாடா இது. கிணறு தோண்ட பூதம் வெளிக்கிடுது! அப்ப எல்லாரும் ஒரே குட்டைதானா?
massi on March 2, 2008 11:08 pm
யமுனா உந்தக் கட்டுரையெல்லம் சாதிக்கூட்டம் லண்டனுல வந்து “சூ” க்காட்ட.. சீ .. ஷோக்காட முதலே எல்லோ போட்டிருக்க வேணும்?
thilakan on March 2, 2008 11:28 pm
தோழர் யமுனாவுக்கு போலிகளை தோலுரிக்கும் உங்கள் துணிவுக்கு எனது பாராட்டுக்கள். இன்று இப்போலிகளுக்குப் பின்னால் பல போலிகள் ஒன்று சேரும் அபாயம் புகலிடத்தில் உருவாகியுள்ளது. இப்போலிகளின் பிரதான போலி மனிதனை வெளியுலகிற்கு நன்கு தெரியும். இருந்தாலும் மீண்டும் நீங்கள் மறுமுறை அம்பலப்படுத்தியதற்கு நன்றிகள். … கடந்தகாலம் - சமீப காலம் இதை நிரூபிக்கின்றது. எதிர்காலம் விழித்துக் கொள்ளட்டடும்.
thas on March 2, 2008 11:45 pm
சோபாசக்தி பிரான்ஸில் செய்த சதிகளை யமுனா அறியவில்லை போலும். எக்ஸில் உயிர்நிழல் அம்மா என்று மிகவும் தரமாக வெளிவந்து கொண்டிருந்த சஞ்சிகைகளுக்கு எதிராக இவர் செய்த சதிகளையும் இலக்கியச் சந்திப்பையும் நண்பர்கள் வட்டத்தையும் இல்லாமல் ஆக்குவதற்கு இவர் செய்த சதிகளை நண்பர்களிடம் கேட்டுப் பார்த்தால் தெரியும். இவரின் சதிகளை தலித் மகாநாட்டின் ஊடாக லண்டனிலும் தொடங்கிவிட்டதாக அறிகிறோம். நண்பாகளே கவனம்! கவனம்!
sopa on March 3, 2008 7:26 am
ஷோப ஷக்தி பிரான்சிற்கு வாற வழியில் பின்நவீனத்துவமானவர். ராகவன்ஸ் பிறக்கும்போதே பின்னவீனத்துவடன் பிறந்த்தவர்கள். இந்த முரண்பாடு தான் அழகானது.
kunchiyappu on March 3, 2008 7:41 am
மேனே ரகு என்ன நீ நம்புறதா தோணல வேணுமென்டா நீ உன்ர மெயில் அட்ரசை தா போட்டோ அனுப்பித் தாறன் மவனே. சோபாசத்தி பற்றி வளர்மதி - சுகுணாதிவாகர் - அ.மாக்சு - சாரு நி என்ற கூட்டம் ….. அது தான் சுகணா திவாகன்ர புளக்கில போய்ப்பாருடா மேனே ரகு. அது போக ….. இப்ப புலி புல்லுக்கு காஞ்ச மாதிரி இருக்கு. எனக்கு இவன்கள பார்த்து ஒரே சிரிப்பு. முந்தி சொன்னாங்கள் இவன் சோபாசத்தி எக்ஸில் உயிர்நிழல் சஞ்சிகைளய தானும் சேர்ந்து தான் நடத்துவதாக இந்தியாவில விலாசிக்கொண்டாம் என்று. தேசமும் தலித்மகாநாடும் தான் நடத்திறது என்று சொல்லுறாம் உண்மையேடா தம்பி. கொஞ்சம் விளக்கமாத் தான் சொல்லேண்டா மேனே.
yamuna rajendran on March 3, 2008 8:47 am
சேவுக்கு - நான் புகலிட இலக்கியம் பற்றிக் குறிப்பாக இங்கு விவாதத்தை எழுப்பவில்லை. சொற்களுக்கு அர்த்தம் உண்டு. நீங்கள் என எழுத்து தொடர்பாக எழுப்பியுள்ள கேளிவிகளுக்கு அர்த்ததேயில்லை. யாரக்குக் காழ்ப்புணர்வு? ஈழமுரசு கட்டுரை துவங்கி புதுவசை நேர்முகம் சத்தியக்கடதாசி ஊடாக யார் தனிப்ட்ட முறையில் குரொத உணர்வுடன் தாக்குதல் தொடுத்தார்கள்? நானில்லை. அவரது புனைவு எழுத்து பற்றி பாராட்டுணர்வை நான் பதிவு செய்திருக்கிறன். முடிந்தால் நான் ‘குறிப்பிட்ட’ வகையில் எழுதயிருக்கிற என் எழுத்தக்கு நிங்கள் எதிர்விணை செய்ய முயற்சி செய்யுங்கள். யமுனா ராஜேந்திரன்.
yamuna rajendran on March 3, 2008 8:59 am
மசி - இந்தக் கட்டுரையை நான் அப்போது எழுதியிருந்தால் உடனேயே நான் தலித் விரோதி என நான்கெழுத்துதகாரரும் ‘ஷோ’வும் தீர்மானத்தை வழிமொழிந்திருப்பார்கள். எனது நோக்கம் அதுவல்ல. எனது நண்பர்களிடமான இவர்களது அற்பத்தனமான குசும்புகளுக்குப் பதிலாகவே இக்கட்டுரையை நான் எழுத நேர்ந்தது. ஐந்து வருடங்கள் நான் ஷோ பற்றி அக்கறைப்படவேயில்லை. ஆனால் ஷோ என் மீதான அவதூறுகளை திட்டமிட்ட வகையிலான பிரச்சாரமாகவே மேற்கொள்ளத் துவங்கிய வேளையிலும் தனது சொந்த அற்பக் காரணங்களுக்காக அவருடன் கூட்டுச் சேர்ந்த அவரது புதிய சகபாடிகளையும் நோக்கியே இக்கட்டுரை எழுத நேர்ந்தது. இவர்களது நடத்தைகளை நினைக்க சில வேளை எனக்கு அறுவறுப்பாக இருக்கிறது. யமுனா ராஜேந்திரன்.
aruran on March 3, 2008 10:00 am
சாதிக்கூட்டம் கப்சிப். தந்திரோபாய பின்வாங்கலா அல்லது திருந்திவிட்டார்களா? இனிமேல் ஷோ காட்ட மாட்டார்கள் என நம்புவோமாக. சுகனைத் தொடர்பு கொண்டு ஒரு ஐயரைப்பிடித்து திருஷ்டி சுத்திப் போடத்தான் இருக்கு.
navalan on March 3, 2008 10:12 am
நன்றி யமுனா ராஜேந்திரன். எல்லாவற்றிற்கும் முதல் தனிமனித தாக்குதல்களுக்கப்பல் கருத்தை எதிர்கொள்வதென்ற விமர்சனக் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.
denkiri on March 3, 2008 10:33 am
//நடத்தைகளை நினைக்க சில வேளை எனக்கு அறுவறுப்பாக இருக்கிறது. யமுனா ராஜேந்திரன்//
NERUPPU on March 3, 2008 10:45 am
யமுனா அவ்ர்களே நான் சோபாசத்தியை பற்றி எழுதியதை தேசம் சில கட்டுபாடுகள் கருதி தடை செய்து விட்டனர். நீங்கள் இவரை விமர்சிக்க கீழ் இறங்கி வந்தது தேவை அற்றது என்பது என் கருத்து. ஒரு மனிதன் எப்படி வாழக் கூடாது என்பதற்க்கு சோபாசத்தி உதாரனம். ஒரு மனிதன் எப்படியும் வாழுவான் என்பதற்க்கு உதாரனம் சோபாசத்தியே. ஆகவே உங்க நேரத்தை இந்த தேவயற்ற மனிதர்கழுக்காக செலவு செய்ய வேண்டுமா?
குமரன் on March 3, 2008 10:53 am
தோழர்களே! நாங்கள் அதிகமான சக்தியை தனிநபர்கள் குறித்த அக்கறையில் செலவிடுகிறோமோ என்று தோன்றுகிறது. நமக்கு இன்று மிச்சமாகியிருக்கிற அரசயில் இவ்வளவுதானோ என்று அடிக்கடி உறைக்கிறது. மாற்று அரசியலுக்கான வேலையினை இங்கிருந்தா தொடங்கப் போகிறோம் என்கிற பயம் உறுத்துகிறது.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக புலத்தில் ஒன்றையுமே கட்டியெழுப்பவில்லையே என்கிற விரக்தியுடனும் புலம்பல்களுடனும் தான் எஞ்சிய காலத்தையும் கடத்தப்போகிறோமோ? மரணம் வரைக்கும் தற்காலிக சந்தோசங்களையும் அவ்வப்போதைய மனமகிழ்வூட்டுகின்ற சலிப்பு நிறைந்த சண்டைகளிலும் தான் செலவிடப் போகிறோமோ என்று வேதனையாக இருக்கிறது.
magesvaran on March 3, 2008 10:53 am
சோபாசக்தி சக படைப்பாளிகளோடு நட்புடன் பழகுபவர் அல்ல. எப்பொழுதும் சக படைப்பாளிகளின் மேல் காழ்ப் புணர்ச்சியையும் அவர்களை படைப்புலகிலிருந்து அன்னியப்படுத்துவதற்கான அனைத்து சதிகளையும் செய்யக் கூடிய மனநிலையோடு அலையும் ஒரு மனிதன். இவரோடு நட்பு பாராட்டிய பலர் இவரின் கபடத்தனங்களை புரிந்துகொள்வர். இவர் புலிகளை எதிர்த்துக் கொள்வதாக ஒரு பாவனை காட்டி அதே நயவஞ்சக கோழைத்தன புலி அரசியலையே செய்து கொண்டிருப்பவர்.
பரிஸில் இருக்கும் நண்பர் அசோக் இவரைப்பற்றி ஒருமுறை எழுதினார் பின்வருமாறு “கெட்டித்தனமான சாதூரியம் மிக்க ஒரு நயவஞ்சகமான ஒரு இலக்கியவாதி” நானும் சோபாசக்தியோடு பழகியவன் என்ற முறையில் இப்படி கூற முடியும் “கொடூரமான காழ்ப்புணர்ச்சியோடு ஒரு வனத்தினுள் சக மிருகத்தை வேட்டையாடத் தேடி திரியும் ஒரு புலியின் மனக் கட்டமைப்பை கொண்டலையும் ஒரு புலித்தன இலக்கியவாதி”.
Ranjan on March 3, 2008 12:56 pm
இங்க என்னதான் நடக்குது எல்லாருடைய காழ்ப்புணர்வுகளையும் தேசம் குத்தகைக்கு எடுத்துள்ளதா? இலக்கியம் அரசியல் நடக்ககிறதா அல்லது மித்திரன் பேப்பர் நடத்துகிறீhகளா? சீ புலம்பெயர் எழுத்துக்கள் மிகவும் கேவலமாகிவிட்டது.
sri on March 3, 2008 1:37 pm
//தமிழகத்திற்கு உல்லாசப் பயணம் செய்து தண்ணியும் பாரின் கரன்சியும் ஓடவிட்டு நீங்கள் குமுதத்திலும் ஆனந்த விகடனிலும் அ.மார்க்சின் பாசையில் ‘பார்ப்பனப் பத்திரிக்கை’யான இந்தியா டுடேயிலும் நேர்முகம் தருகிறீர்கள். இந்தப் பகாசுரப் பத்திரிக்கைளில் இல்லாத எந்த ‘அதிகார மையத்தை’ வா.கீதாவிடமும் அம்பையிடமும் எஸ்.வீ.அரிடமும் யமுனா ராஜேந்திரனிடமும் நீங்கள் கண்டீர்கள்?//
அய் யமுனா அப்படிபோடுங்க! அங்க மட்டுமா யமுனா இங்கையும் நம்ம ” சோ ” அப்படித்தான்.
Rathan on March 3, 2008 2:15 pm
//அதே மாதிரி ஈழத்தின் வன்முறையினால் மனப்பிறழ்வுற்ற ஒரு நபர் தனது பெற்ற பெண்குழந்தையை கரப்பமாக்கியதனை அப் பெண்குழந்தையின் கண்களில் ‘காதல்’ தெரிந்ததை எழதுகிற ‘ஷோ’வின் ‘ம்’ நாவலது சித்திரிப்பும் குழந்தைகளின் மீதான வன்முறை எனும் அளவில்இ சமூக விரோதமானதுதான்//
//நண்பர் சுகனது திருவிளையாடல்கள் குறித்து இங்கு கொஞ்சம் சொல்ல வேண்டும். புகலிட தமிழர் வாழ்வில் ‘இல்லாத கூட்டுக் கலவி’ பற்றி இவர் கதை எழுதினார். குடிப்பதற்கு என்ன வேண்டும் எனும் விமானப் பணிப்பெண்ணிடம் ‘முலைப்பால் வேண்டும்’ என அவர் கேட்கிற ஒரு ‘புரட்சிகரமான’ கவிதை எழுதினார்//
இவர்களோ பாரிசிலுள்ள படைப்பாளிகள் கவிஞர் தலித் விடுதலைப் போராளிகள். மனபிறழ்வுள்ள இவர்களை உரிய இடத்தில் சேர்ப்பிப்பதை விட்டிட்டு. இவர்களுக்கு விமர்சனம் எழுதுகிறீர்கள். இவர்களின் தோழர்களே உங்கள் குழந்தைகள் பத்திரம். இல்லாவிடில் நீங்களும் இந்த ரகம்தானோ. கறுமம் பிடித்தபயலுகள்.
Rathan on March 3, 2008 3:02 pm
//இவர் புலிகளை எதிர்த்துக் கொள்வதாக ஒரு பாவனை காட்டி அதே நயவஞ்சக கோழைத்தன புலி அரசியலையே செய்து கொண்டிருப்பவர்// மகேசுவரன்.
உங்களின் புலியெதிர்ப்பு நண்பர்கள் தானே சுகனும் சோபாசக்தியும். அவர்களிடம் இப்படியான சிந்தனைகளை தானே எதிர்பார்க்க முடியும்.
yamuna rajendran on March 3, 2008 3:33 pm
நெருப்பு - தங்கள் சொந்த விருப்பு வெறுப்பக்களை அந்த மட்டத்தில் மட்டுமே வைத்துக்கொள்வதில் பிரச்சினையில்லை. இவர்கள் அதற்கு ஒரு தத்துவ மற்றும் கோட்பாட்டு விளக்கத்தையும் கொடுத்து தொடரந்து அவமானப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். எவ்வளவு காலம் வரையிலும் தான் பொறுத்துக்காள்ள முடியும் சொல்லுங்கள். இக்கட்டுரையிலும் நான் கருத்துக்களைத் தான் முன்னிறுத்துகிறேன். இவர்கள் எனக்கு இதைத் தவிரவும் வேறு வழி விட்டு வைக்கவில்லை. யமுனா ராஜேந்திரன்.
yamuna rajendran on March 3, 2008 3:38 pm
ரஞ்ஜன். ஷோபா சக்தயின் மீது எனக்கு என்றுமே காழ்ப்புணர்வு இருந்ததில்லை. அதற்கு எனக்கு அவசியமும் இல்லை. ஆனால் நான் சுட்டிக்காட்டி இருக்கிற 3 சந்தரப்பங்களிலும் அவரது மொழிநடையைக் கவனியுங்கள். ஆத்திர மூட்டல்களை எவ்வளவு காலத்திற்குத் தான் பொறுத்துக்காள்ள முடியும்? என்னால் 10 வருடங்கள் முடிந்தது. யமுனா ராஜேந்திரன்.
yamuna rajendran on March 3, 2008 3:44 pm
நாவலன். நன்றி. அவதூறுக் கலாச்சாரத்திலிருந்து விலகி நிற்க விருப்பம் கொண்டே நான் முன்பாக விவாதங்களில் பங்கேற்க விரும்பி இருக்கவில்லை. மனிதர்கள் பிளவுண்ட ஆளுமைகளாகத் தான் இருக்கிறார்கள். நாம் அவர்களுடன் சமரசத்துடன் தான் அன்றாட வாழ்வில் வாழ முடியும். ஆனால் அவதூறுகளைத் தனிமனிதர்கள் தமது சொந்த ஈடேற்றங்களுக்காக தத்துவ முகமூடிகளுடன் முன்வைக்கும் பேர்து கருத்தளவில் சமரசம் சாத்தியப்படுவதே இல்லை. யமுனா ராஜேந்திரன்.
arun on March 3, 2008 4:25 pm
//தமிழகத்திற்கு உல்லாசப் பயணம் செய்து தண்ணியும் பாரின் கரன்சியும் ஓடவிட்டு நீங்கள் குமுதத்திலும் ஆனந்த விகடனிலும் அ.மார்க்சின் பாசையில் ‘பார்ப்பனப் பத்திரிக்கை’யான இந்தியா டுடேயிலும் நேர்முகம் தருகிறீர்கள்// …..
kusumpu on March 3, 2008 5:15 pm
ஷோ, ரா, நி .. உடாத எட்றா வெட்டருவாள..
mukunthan on March 3, 2008 6:04 pm
ஷோ’வின் ‘ம்’ நாவலது சித்திரிப்பும் தமிழர் வாழ்வில் ‘இல்லாத கூட்டுக் கலவி’ பற்றியும் குடிப்பதற்கு என்ன வேண்டும் எனும் விமானப் பணிப் பெண்ணிடம் ‘முலைப்பால் வேண்டும்’ என அவர் கேட்கிற கவிதையும் பு-மகனே என திட்டுவதும் ரஞ்சனுக்கு என்ன மாதிரி தெரியுது? மித்திரன் பேப்பர் நடத்துகிறீhகளா என்று அங்கையல்லவா கேட்டிருக்க வேணும். அவர்களை காப்பாற்றும் முயற்சியோ?
sam on March 3, 2008 6:42 pm
//தோழர்களே! நாங்கள் அதிகமான சக்தியை தனிநபர்கள் குறித்த அக்கறையில் செலவிடுகிறோமோ என்று தோன்றுகிறது. நமக்கு இன்று மிச்சமாகியிருக்கிற அரசயில் இவ்வளவுதானோ என்று அடிக்கடி உறைக்கிறது. மாற்று அரசியலுக்கான வேலையினை இங்கிருந்தா தொடங்கப் போகிறோம் என்கிற பயம் உறுத்துகிறது. // குமரன
நீங்கள் சொல்லுகிற மாற்று அரசியல் என்பது என்ன? புலிகளுக்கு மாற்றானதா? புலி எதிர்ப்பு என்பதும் வரையறுபுகுட்படாத பின்நவீனத்துவம் போன்ற அழுக்குகளும் மாற்று அரசியல் என்பதா? நாம் இதுவரை முன் மொழிந்ததெல்லாம் சாம்பாறு அரசியல் மட்டுமே. இது மறுபடி மறுபடி எமது இதயத்தையே அறைந்து கொண்டிருக்கும்.
ஆயிரக் கணக்கானவை விவாதங்களுக்குட்பட வேண்டும். புதிய கருத்துக்கள் தேவை. சமாதானம் ஜனநாயகம் தலித்தியம் என்ற போர்வைக்குள் பிழைப்பு நடத்தும் புல்லுருவிகள் அம்பலப்படுத்தப் படுவதிலிருந்தே நீங்கள் கருதும் மாற்றும் அரசியல் உருவாகிறது. தனிப்பட்ட காழ்ப்புணர்வில் இருந்தான விமர்சங்களில் இருந்தல்ல யமுனா ராஜேந்திரன் ஆரம்பித்தது போல் கருத்துக்களை மோதுவதில் இருந்துதான் புதியன உருவாகின்றன. கார்ல் மார்க்ஸையே எடுத்துக் கொள்ளுங்கள் பெரும்பாலான அவரின் இலக்கியங்கள் ஏனைய கருத்துக்களை விமர்சிப்பதிலிருந்தே உருவாகிறது.
இந்த சாதிக் கூட்டத்தினதும் ஷோ வினதும் கருத்தற்ற கருத்துக்கள் போதியளவு அம்பலப்படுத்தப்பட்டுவிட்டன. இனி, பழையன போய் புதியன வருதலை எதிர்பார்ப்போம்.
ரகு on March 3, 2008 7:18 pm
//…இப்படி கூற முடியும் “கொடூரமான காழ்ப்புணர்ச்சியோடு ஒரு வனத்தினுள் சக மிருகத்தை வேட்டையாடத் தேடி திரியும் ஒரு புலியின் மனக் கட்டமைப்பை கொண்டலையும் ஒரு புலித்தன இலக்கியவாதி”….// magesvaran,
உங்களின் புலிக்காச்சலை எப்படியும் ‘ச்ந்தில சிந்து பாடி’ காட்ட முனைய வேண்டாம். சோபா சக்தியோட பிரச்சினை எண்டாலும் உங்ளுக்கு புலியை இழுக்காமல் காச்சல் தீராது. இவை எல்லாம் மாற்றுக் கருத்து வாதிகள், மாற்று இயக்கங்கள் ஏன் கட்டெறும்பாகப் போனது என்பதற்கு நல்ல உதாரணம். கீழ்வரும் ஒன்றில் போல் இல்லாமல் புலியை ஏன் இழுக்கிறீர்கள்?
இப்படி கூற முடியும் “கொடூரமான காழ்ப்புணர்ச்சியோடு ஒரு நாட்டினுள் சக மனிதர்களை வேட்டையாடத் தேடி திரியும் ஒரு ஒட்டுக்குழுவின் மனக் கட்டமைப்பை கொண்டலையும் ஒரு மாற்றுக்கருத்து இலக்கியவாதி”.
இப்படி கூற முடியும் “கொடூரமான காழ்ப்புணர்ச்சியோடு ஒரு வனத்தினுள் சக மிருகத்தை வேட்டையாடத் தேடி திரியும் ஒரு நரியின் மனக் கட்டமைப்பை கொண்டலையும் ஒரு நரித்தன இலக்கியவாதி”.
priya on March 3, 2008 7:36 pm
சோபா சக்தியின் கருத்துக்கு எதிர்க்கருத்தாடல் என்ற போர்வையில் த்னிநபர் தாக்குதலை தொடுத்து விட்ட ராஜேந்திரன் ஒரு புறம் யார் காய்த்த மரத்துக்கு முதலில் கல்லெறிவார் என்று பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் ஒன்று வசவு பாடுவது மறுபுறமாக தேசம் பத்திரிக்கை நடை போடுகிறது.
சோபா சக்தி ஒரு படைப்பாளி. அவனது படைப்புக்கள் இந்த வசவுகளுக்கு மேலாயும் காலங்காலமாக நிலைத்து நிற்கும் என அறியா மூடர்நீவீர். சோபாசக்தி ராஜேந்திரன் மேல் 10 வருடங்களுக்கு முன் வைத்த விமர்சனத்துக்கு இது வரை தூங்கிக் கொண்டிருந்தவர்கள் இன்று கொதித்தெளும்பும் தார்ப்பரியம் என்ன. ராஜேந்திரனின் கட்டுரை தனி மனித தாக்குதலை முதன்மைபடுத்தி தத்துவ விள்க்கம் சொல்ல முனைந்து தோற்று போகிறது.
காலனித்துவ எதிர்ப்பு இந்துத்துவம் பின்னணித்துவத்தின் விளைவு என்று அடித்து சொல்கிறார் ராஜேந்திரன். காலனித்துவ எதிர்ப்பு இந்துத்துவம் பால கங்காதர திலகர் போன்ற இந்துத்துவவாதிகளால் விதைக்கபட்ட விசம். இதனை பின்னணித்துவ போக்கு என அடித்து சொல்லும் அறியாமை தான் ராஜேந்திரனின் அதிக பிரசங்கித்தனத்துக்கான அளவு கோல்.
மறைந்த நண்பர் கஜனின் வேண்டுகோளிற்கு ஏற்ப ’ஈழமுரசு’ இதழில் நான் இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வந்த உலகத் திரைப்படங்கள் தொடர்பான கட்டுரைகள்தான் சோபா சக்தியின் எரிச்சலுக்கு காரணம் என்கிறார் ராஜெந்திரன். உண்மை என்னவெனில் ராஜேந்திரன் காசுக்காக கொள்கையை விட்டு எந்த பத்திரிகையிலும் ‘ தனது தனித்துவத்தை இழக்காமல்’ எழுதுவது அனைவருக்கும் தெரிந்த உண்மை.
விடுதலை புலிகள் இலங்கையில் ஜனனாயக சூழலுக்கான அனைத்து கதவுகளையும் மூடிக்கொண்டு புலம் பெயர் தமிழரிடம் ஜனனாயகம் பேச முனைவதற்கான பம்மாத்து அரசியலே ஈழ முரசின் தொடக்கம். ஈழமுரசில் எழுதி ஜனானாயக விழுமியங்களை மீட்டெடுத்த பெருமை அவருக்கே சாரும்.
ஆங்கிலம் தெரியாததால் எரிச்சல் படுகிறார் என்கிறார் ராஜேந்திரன். ஆங்கிலம் தெரிவது மட்டும் திரைப்பட விமர்சனத்துக்கான தகுதி கிடையாது. அத்துடன் ராஜேந்திரனின் ஆஙகில புலமைக்கு அவரது கவிதை மொழி பெயர்ப்புகள் சாட்சி. ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சக்கரை என்பார்கள். அவரது திரைப்பட விமர்சனங்கள் பக்கம் பக்கமாக செல்லும். அற்புதம் என்ற வார்த்தையை விமர்சனத்திலெடுந்து எடுத்து விட்டால் மிஞ்சுவதொன்றும் இல்லை.
சோபாசக்தியை பற்றிய அவரது விமர்சன அடித்தளம் பூர்சுவா உயர்சாதி அறத்திலிருந்து தான் கட்டப்பட்டிருக்கிறது. ஒழுக்கத்துக்கான வரைமுறைகள். சம்பிரதாயங்களுக்கான வரமுறைகள். இது தான் அவரது அளவு கோல்கள். அற்புதனும் நாவலனும் ஒன்று சேர்கிறார்கள் சோபா சக்தியை தாக்குவதற்கு. எதிரிக்கு எதிரிநண்பன் என்ற சித்தாந்த அடிப்படையில்.
ஆங்கிலம் தெரியாத சோபா சக்தியின் கொரில்லா ஆங்கிலத்தில் மொழி மெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. Random House அதனை வெளியீடு செய்துள்ளது.
Filled with characters as strange and violent as they are unforgettable - young girls with bombs concealed in their bosoms, delinquent boys, illicit liquor sellers, wily police inspectors, murderers, prostitutes, farmers, innocents – Gorilla was a literary sensation when it first arrived in 2002. Its publication this year marks the English language debut of a remarkable talent.
sam on March 3, 2008 7:39 pm
ஓஓஓஓ…..
kalaakaran on March 3, 2008 7:53 pm
புகலிட தமிழர் வாழ்வில் கூட்டுக்கலவி இருக்கக்கூடாதென்கிறாரா? அல்லது கூட்டுக்கலவியே இருக்கக்கூடாதென் கிறாரா? அல்லது மற்ற இனங்களில் இருக்கலாம் என்கிறாரா?
Thakshan on March 3, 2008 8:13 pm
சோபாசக்தியின் அரசியல் பின்தளம் எதுவோ தெரியாது. அவரது எமுத்துக்களில் மிகச் சாதுரியமாக தன்னை மறைத்துக் கொள்கிறார் என்றே கருதுகிறேன். எவ்வாறெனினும் அவரது நாவல்கள் உண்மைச் சம்பவங்களை பெரும்பகுதியாக கொண்டவையே. சுவாரசியமும் முழுமையும் பெற சில இடங்களில் அவர் புனைவுகளை மேற்கொண்டிருக்கலாம். அவர் தனது நாவல்கள்; சிறுகதைகளில் தொட்டுச் சென்ற சம்பவங்கள் பல பரிமாணங்களை பிரதிபலிப்பவை.
rajan on March 3, 2008 9:32 pm
ரஞ்சன் குமரன் நீங்கள் தேவையில்லாமல் கவலைப்படுகிறீர்கள். தேசம் இதுபோல கீழ்த்தரமான தனிநபர் மோதல்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. இதுவும் ஒரு சமூக விரோதச்செயல் என்பது தேசத்திற்கு புரியவில்லை.
சோபாசக்தி விதைத்ததை அறுவடைசெய்கிறார். அவா; யாரை விட்டுவைத்தார். எல்லோரையும் கிண்டலும் கேலியும் செய்தார். மனம்நொந்தவர்கள் கோஸ்டி சேர்ந்து தாக்குகிறார்கள்.
இவா;களது அடிபிடியில் ஏதாவது கருத்து தெறிக்கிறதா பாருங்கள். எவ்வளவு தனிமனித விரோதம். கையில் துவக்கு இருந்தால் சுடுவார்கள். இவர்களெல்லாம் ஜனநாயகம் பேசுவது இயலாமையில் தானே தவிர - மனிதாபிமானத்தால் அல்ல.
Che on March 3, 2008 10:32 pm
நானும் தான் பாத்திக்கினு இருக்கன். கேக்கிறதுக்கு ஆளில்லன்னு ஆழுக்கால் பாஞ்சு விழுந்து கத்தி சூடாறுகிறியள். இதில கத்திற எல்லாரும் என்ன புடுங்கினியள் எண்டு ஒருக்கா பட்டியள் போட்டா தெரியும் கிழியும் சங்கதி.
இந்த கேழ்விய யமுனாவிடம் கேக்கப்படாதுதான். புத்தகம் புத்தகமா எழுதி கிழித்துள்ளார். – ஆனால் ஒரு பிரியோசனமும் கிடையாது. ஏதாவது இதுவரை காலமும் உருப்படியாக எழுதியதுண்டா?
கண்னை மூடிக்கொண்டு யமுனா எழுதிய எதை எடுத்தென்றாலும் நான் பிழைபிடிச்சு காட்டுவேன். யமுனாவுக்கு தில்லு இருந்தால் தான் எழுதிய பிழையில்லாத ஒரு புத்தகத்தை சொல்லவும். அதில் நான் ஆயிரம் பிழை பிடிச்சு காட்டுகிறேன். நான் பத்துக்கு மேற்பட்ட பிழை பிடிச்சால் யமுனா எழுதுவதை நிறுத்த தயாரா? இது ஒரு பகிரங்க சவால். கூகிலில அடிச்சு தகவல் சொருகி எழுதும் நீங்கள் எல்லாம் எழுத்தாளரெண்டு வெளிக்கிட்டியள். முடிஞ்சா சாவாலை ஏற்றுக்கொள்ளும
thee on March 3, 2008 11:23 pm
//உங்களிடம் எனக்குப் பிடிக்காத, நான் வெறுக்கிற விடயம் நீங்கள் ‘வேடதாரிகளாக’ இருக்கிறீர்கள் என்பதுதான். ‘தெரியாத’ விசயங்களை நீங்கள் ‘தெரிந்ததாகக்’ காட்டிக் கொள்கிறீர்கள். அதனைச் சுட்டிக் காட்டுபவர்களை காழ்ப்புடனும் வன்மத்துடனும் வசைகளுடனும் நீங்கள் எதிர்கொள்கிறீர்கள். அறிவுச் சூழலுக்கு இது உகந்தது இல்லை.//
நன்றி யமுனா ராஜேந்திரன் சோபாசக்தி இனைங்காட்டியதுக்கு.
sam on March 4, 2008 12:14 am
//சோபா சக்தியின் கருத்துக்கு எதிர்க்கருத்தாடல் என்ற போர்வையில் த்னிநபர் தாக்குதலை தொடுத்துவிட்ட ராஜேந்திரன் ஒரு புறம் யார் காய்த்த மரத்துக்கு முதலில் கல்லெறிவார் என்று பார்த்துக்கொண்டிருந்த கூட்டம் ஒன்று வசவு பாடுவது மறு புறமாக தேசம் பத்திரிக்கைநடை போடுகிறது.// பிர்ய
ராஜேந்திரன் தனிநபர் தாக்குதலைத் தூண்டிவிட்டதாக யாரும் கருத இடமில்லை. முகமூடிக் கன்வான்கள் பின்னூட்டங்களாகத் தொடுத்த புனைவுகளை இதே இணையச் சஞ்சிகையில் இன்னும் அழிக்கப்படாமல் அப்படியே இருக்கிறது. மேலுள்ள கட்டுரையில் ஷோபா ஷக்தி பின்நவீனத்துவம் என்று எண்ணிப் பெருமிதம்கொள்ளும் ஒன்றைப்பற்றி “சீரியசான” விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முகமூடியுடனாவது யாராவது எதிர்-விமர்சனம் முன்வைக்கத் தயாராகவிருந்தால் அது கட்டுரையைத் செழுமைப்படுத்துவதுடன் மட்டுமல்லாது ஷோபா குழுவையும் தெளிவு படுத்தும்.
//காலனித்துவ எதிர்ப்பு இந்துத்துவம் பால கங்காதர திலகர் போன்ற இந்துத்துவவாதிகளால் விதைக்கபட்ட விசம். இதனை பின்னணித்துவ போக்கு என அடித்து சொல்லும் அறியாமை தான் ராஜேந்திரனின் அதிக பிரசங்கித்தனத்துக்கான அளவு கோல்//-பிர்யா
சரி நீங்கள் பின்நவீனத்துவம் என்றால் என்னவென்று அனுமானித்து வைத்திருக்கிறீர்கள்? அதை ஏன் குறைந்தபட்சம் தெளிவுபடுத்தக் கூடாது? பூக்கோவின் பின்நவீனத்துவத்திற்கும் ஜோன் போட்ரியாரிந்துகும் நிறைய தத்துவார்த்த வித்தியாசங்களுண்டு; ஷோபாசக்தி குழுநினைத்துக் கொண்டிருக்கும் பின்னவீனத்துவத்திற்கும் அதன் வேறுபட்ட கர்த்தாக்கள் எழுதி வைத்திருப்பதற்கும் உள்ள வேறுபாடுகள் போல.
//சோபா சக்தி ஒரு படைப்பாளி. அவனது படைப்புக்கள் இந்த வசவுகளுக்கு மேலாயும் காலங்காலமாக நிலைத்து நிற்கும் என அறியா மூடர்நீவீர்// பிர்யா.
தமிழ் வாணனிலிருந்து சுஜாதா ஈறாக சாருனிவேதா, ஷோபா ஷ்க்தி என்று ஆயிரமாயிரம் படைப்பாளிகள் உள்ளனர். இறுதியில் அவர்களது படைப்புக்கள் சமூகத்திற்காக, சமூகத்தில் யாருக்காக எழுதப்பட்டதிலிருந்தே படைப்பாளியின் தன்மை தீர்மானிக்கப்படுகிறது. “பொழுது போக்கு” எழுத்தாளர்களாக இருந்துவிட்டுப் போங்கள். பூக்கோவைப் போல பலியல் வக்கிரங்களை வெறுப்பின் எல்லைவரை விதைக்கின்ற விஷங்கள் வேண்டாம். 13 வயதுக் குழந்தையுடன் பாலுறவு பற்றிப் படைத்துவிட்டு குழந்தைப் போராளிக்காகக் குரல்கொடுக்கும் அருவருப்பு சார்த்ர் சொன்னதை விட கீழ்த்தரமான குமட்டல்.
//சோபா சக்தியை பற்றிய அவரது விமர்சன அடித்தளம் பூர்சுவா உயர்சாதி அறத்திலிருந்து தான் கட்டப்பட்டிருக்கிறது// பிர்யா
எந்தத் தளத்திலிருந்து கட்டப்பட்டது என்பது போன்ற முத்திரை குத்தும் மனோபாவமே தமிழ் விடுதலை இயக்கங்களிடமி இருந்து நீங்கள் உள்வாங்கிக் கொண்ட இன்னுமொரு சுயவிமரிசனம் செய்யப்படாத தந்திரோபாயம். யமுனாவின் கருத்துக்களுக்கு வரிக்கு வரி விமர்சனம் செய்யும் உரிமை உங்களுகு விற்கப்பட்டுள்ளது.
//….ஒழுக்கத்துக்கான வரைமுறைகள். சம்பிரதாயங்களுக்கான வரமுறைகள். இது தான் அவரது அளவு கோல்கள். //
குழந்தைப் போராளியில் வரைமுறையை வரிந்து கொண்ட நீங்கள் பாலியலுக்கு வந்ததும் வரையறையைக் கோட்டைவிட்டு விடுகிறீர்கள்.
//ஆங்கிலம் தெரியாத சோபா சக்தியின் கொரில்லா ஆங்கிலத்தில் மொழி மெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. றன்டொம் Hஒஉசெ அதனை வெளியீடு செய்துள்ளது.//
லட்சக்கண்க்கான சமூக அக்கறையுள்ள படைப்பாளிகள் பதிப்பாகமலே செத்துப் போயிருக்கிறார்கள்!
//எவ்வாறெனினும் அவரது நாவல்கள் உண்மைச் சம்பவங்களை பெரும்பகுதியாக கொண்டவையே. சுவாரசியமும் முழுமையும் பெற சில இடங்களில் அவர் புனைவுகளை மேற்கொண்டிருக்கலாம்.// தச்ஷன்.
ஒவ்வோரு தனி நாளிலும் எத்தனையோ அருவருப்பான சம்பவ்ங்களைச் சந்த்திதுக் கொள்கிறோம். இவற்றில் ஒன்றா படைப்பாளியின் படைப்பிற்குக் கருவாக வேண்டும். இதற்கு முண்டு கொடுக்க பின்னவீனத்துவ எழுத்திக்களில் சிலவரிகளா? மஞ்சள் பத்திரிகை கூட எழுதுங்கள் ஆனால் மக்களின் பெயராலல்ல.
//இதில கத்திற எல்லாரும் என்ன புடுங்கினியள் எண்டு ஒருக்கா பட்டியள் போட்டா தெரியும் கிழியும் சங்கதி.//
நீங்கள் எதையும் புடுங்கிக் கொள்ளுங்கள் ஆனால் மனித விழுமியங்களையல்ல. மாற்று இருப்பவன் தான் விமர்சனம் செய்ய வேண்டும் என்று ஒஷொ சொன்னதைத் தான் புலிகளும் சொல்கிறார்கள் மீரா பாரதி. மாற்று என்பதன் ஆரம்பமே விமர்சனத்திலிருந்த்து தான் உருவாகிறது. தயவுசெய்து முன் வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு கோஷ்டி வாதிகளாக இல்லாமல் ஆக்க பூர்வமான விமர்சனத்தை முன்வையுங்கள்.
kovai kuna on March 4, 2008 1:18 am
//”நமக்கு இன்று மிச்சமாகியிருக்கிற அரசயில் இவ்வளவுதானோ என்று அடிக்கடி உறைக்கிறது. மாற்று அரசியலுக்கான வேலையினை இங்கிருந்தா தொடங்கப் போகிறோம் என்கிற பயம் உறுத்துகிறது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக புலத்தில் ஒன்றையுமே கட்டியெழுப்பவில்லையே என்கிற விரக்தியுடனும் புலம்பல்களுடனும் தான் எஞ்சிய காலத்தையும் கடத்தப்போகிறோமோ?”// (குமரன்)
நிஜமாக அப்படித்தான் இருக்கப் போகிறீர்கள், இப்படியான வம்பளப்புகள் மற்றும் கொசிப்படிப்புகளில் இருந்தும் உடைத்துக்கொள்ளாத வரை. நித்தம் இப்படியான தனிப்பட்ட சண்டைகளைத் தவிர எதை உருப்படியாக உருவாக்கி இருக்கிறோம்? ஆழமான வரலாற்று அறிதலுடன், புள்ளி விபரத்துடன் புறநிலையாக தமது கருத்தினை எழுதுபவர்கள் இங்கு யார் உண்டு? உலகரிதீயாகவும், குறிப்பாக இந்திய துணைக்கண்டத்திலும் இந்தச் சீரழிவுக்கு, சமூக ஜனநாயகம், ஸ்ராலினிசம் மட்டுமல்ல, மாவோயிசம், பப்லோயிசம் - லங்கா சமசமாஜக் கட்சி 1964 இல் இந்த போக்குக்கு அடிபணிந்ததால் தான் மாபெரும் காட்டிக்கொடுப்பினை விளைவாக்கியதுடன் இன்றைய பாரிய இரத்தக் களரிக்கும் பாதை திறந்துவிடப்பட்டது) மற்றும் இன அடிப்படையில் எழுச்சி பெற்ற இயக்கங்களான திராவிட இயக்கங்கள் மற்றும் தேசிய விடுதலை இயக்கங்களும் காரணமாகும்.
wsws இன் நீண்டகால வாசகன் என்ற முறையில் நான் தெளிவாக ஒன்றைக்கூற முடியும். மாபெரும் அறிவொளி இயக்கத்திற்கு எதிரான கருத்தியல் வாதிகளான நீட்சே மற்றும் Heidegger க்கு எதிராக மட்டுமல்ல அவர்களது வாரிசுகளான பின்நவீனத்துவாதிகளின் உளறல்களையும் மற்றும் முதலாளித்துவ கருத்தியலையும் சவால் செய்து சீரழிக்கப்பட்ட மார்க்சிய கலாச்சாரத்தை மீள் ஸ்தாபிதம் செய்யவும், அதனது வரலாற்றுக் கடமையை செய்ய உலகத் தொழிலாள வர்க்கத்திற்கு கல்வியறிவூட்டிக் கொண்டிருக்கும் ஒரே ஒரு உலக இயக்கம், நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவாகும். உண்மையில் என்னைப் போன்று பலர் அதனது விஞ்ஞான பூர்வமான ஆழமான மார்க்சிய அறிவூட்டலின் பால் கவரப்பட்டுள்ளோம்.
“மரணம் வரைக்கும் தற்காலிக சந்தோசங்களையும் அவ்வப்போதைய மனமகிழ்வூட்டுகின்ற சலிப்பு நிறைந்த சண்டைகளிலும் தான் செலவிடப் போகிறோமோ என்று வேதனையாக இருக்கிறது”
இந்த அடிப்படையில் 1930 களின் இறுதியில் ட்ரொட்ஸ்கி குட்டிமுதலாளித்துவ போக்கு எதிராக குறிப்பிட்டதை சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும். ”பொருள்முதல்வாத இயங்கியலுக்கு எதிரான போராட்டமானது குட்டிமுதலாளித்துவ வாதிகளின் கடந்த காலத்தையும், பழமை வாதத்தையும், பல்கலைக் கழக வாதிகளின் தற்பெருமை வாதத்தையும்” இறுதியில் அவநம்பிக்கைவாதத்தையும் தான் வெளிப்படுத்தும்.
குமரன், உங்களுக்கு நேர்மையாக இருக்கும் பட்சத்தில், என்னைப் போல் இவைகளில் இருந்து ஒரு சிரத்தையான படிப்பினைகளை எடுத்துக்கொண்டு, முறிவடையா வரலாற்று தொடர்ச்சியைப் பேணும் புரட்சிகர மார்க்சிய இயக்கமான நான்காம் அகிலத்தின் மார்க்சிய விஞ்ஞான முன்னோக்கின் பால் நகரும் படி அழைப்பு விடுக்கிறேன்.
மார்ச் 16 இல் பாரிசில் நடைபெறும் கீர்த்தி பாலசூரியாவின் இருபதாவது நினைவுதினத்தில் நானும் எனது சக வாசக நண்பர்களும் கலந்துகொள்ள இருக்கிறோம், உங்களையும் அதில் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
கூட்டம் மார்ச் 16, ஞாயிறு, பிற்பகல் 2;30 மணி,
AGECA, 177 rue de Charonne, 75011 Paris
Métro: Charonne – ligne 9, Alexandre Dumas – ligne 2, Nation – RER A , Bus – ligne 76
பேச்சாளர்கள்: அமுதன், உலக சோசலிச வலைதளத்தின் தமிழ் பக்கத்தின் முதன்மை ஆசிரியர் கிறிஸ் மார்ஸ்டன், செயலாளர் சோசலிச சமத்துவக் கட்சி, பிரிட்டன் பீற்றர் சுவார்ட்ஸ், செயலாளர் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு.
SEKKIZHAR on March 4, 2008 6:55 am
//பின்நவீனத்துவம் என்று எண்ணிப் பெருமிதம்கொள்ளும் ஒன்றைப் பற்றி “சீரியசான” விமர்சனம் முன்வைக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக முகமூடியுடனாவது யாராவது எதிர்-விமர்சனம் முன்வைக்கத் தயாராகவிருந்தால் அது கட்டுரையைத் செழுமைப்படுத்துவதுடன் மட்டுமல்லாது ஷோபா குழுவையும் தெளிவுபடுத்தும். காலனித்துவ எதிர்ப்பு இந்துத்துவம் பால கங்காதர திலகர் போன்ற இந்துத்துவவாதிகளால் விதைக்கபட்ட விசம். இதனை பின்னணித்துவ போக்கு என அடித்து சொல்லும் அறியாமை தான் ராஜேந்திரனின் அதிக பிரசங்கித்தனத்துக்கான அளவு கோல்// பிர்ய
பால கங்காதர திலகர், இந்திய சூழலில், சுதந்திரத்திற்கு முன்னிருந்த ஒரு அரசியல் கருத்தை பிரதிபலித்திருக்கிறார். இதன் வேர் மிகவும் ஆழமானது. இருபத்தோராம் நூற்றாண்டில் “வீரபாண்டிய கட்ட பொம்மனாக” நாடகம் போடலாம், ஆனால் சண்டை போட முடியாது. இதைதான் “படம் காட்ட வேண்டாம்”, என்கிறார்கள். மற்றவர்களின் “நுண்ணுனர்வை”, வெட்டி, ஒட்டி, விளையாட்டு காட்டுவதும், ஒரு எதிர்ப்புணர்வுதான் - இது விளிம்பு நிலை அடையும் போது, இதற்கெதிராக ஆயுதம் தாங்கி போராடமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.
ranjan on March 4, 2008 8:50 am
முகுந்தன், நான் யாரையும் காப்பாற்ற வேண்டிய நிலை எனக்கு இல்லை. எனக்கும் சோபாசக்தி சுகன் ஆகியோர் மேல் பல விமர்சனங்கள் உண்டு. ஏன் என்னைக் கூட அவர்கள் விமர்சித்துள்ளாகள். ஆனால் இன்றைய ஈழத்து புலம்பெயர் இலக்கிய அரசியல் சூழலில் நாம் எடுக்க வேண்டிய பல விடயங்கள் 30 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளப்பட்டு தமிழ்ச் சமூகம் இந்த தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளை கொட்டிக்கொண்டு இருப்பதை விட பெரிதாக எதையும் சாதித்துவிடவில்லை. பாருங்கள் சிங்கள திரைப்படங்களை குறும்படங்களை எவ்வளவு ஆழமான சமூக கருத்துள்ளவை இப்படி தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளை விடுத்து இந்த புலம்பெயர்ந்து வாழும் எமது இளம் சமுதாயத்திற்கு எது பயன்படுகிறதோ அதை முன்னெடுத்து செல்வது தான் நல்லது.
இப்போ சோபாசக்தி நாளை ஜமுனா பின்னர் நீர் நான் என்று இந்த வியாதி தொடரும். ஏன் ஜமுனாவும் அ. மார்க்சும் சோபாசக்தியும் ஒரு பகிரங்க விவாதத்திற்கு வந்து விவாதிக்கலாமே. என்னதான் நாம் மற்றவர்களை விமர்சித்தாலும் நாம் முதலில் எம்மை சுயவிமர்சனம் செய்துவிட்டு மற்றவர்களைப் பற்றி விமர்சிக்க வேண்டும். ஜமுனாவும் சோபாசக்தியும் சேர்ந்து பரிசில் … இதெல்லாம் ஜமுனா கதைத்து இருக்கலாம் தானே. இன்று ஈழத்து எழுத்துக்களை விமர்சிப்பதும் ஈழத்து எழுத்துக்கள் என்றால் தரமற்றவை என்றும் ஜெயமோகன் போன்றவர்கள் விமர்சித்து வருகின்றார்கள். அதேபாணியில் சோபாசக்தியும் பல இந்திய சஞ்சிகைகளுக்கு பேட்டி கொடுக்கும் போது தனது சொந்த விருப்பின் அமைவுக்கு ஏற்ப பேட்டிகளை வழங்கி ஈழத்து எழுத்துக்களை கொச்சைப்படுத்தியுள்ளார். இதற்கு சோபாசக்தியே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
மற்றும் நான் எனது கருத்தை பதிவு செய்தவுடன் நான் சோபாசக்தியை காப்பாற்ற நினைப்பதாக கூறும் உமது அறியாமையை நான் எப்படி புரிந்து கொள்வது கருத்துச் சொல்வதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு அந்தக் கருத்துச் சுதந்தர மறுப்பால் ஏற்பட்டது தான் இந்த காழ்ப்புணர்வு. புலியெதிர்ப்பு புலிஆதரவு கோஸ்டிகள் இன்று தமது காழ்ப்புணர்வுகளை கொட்டுவதற்கு ஒரு காரணமும் இப்படியான கருத்துச்சுதந்திர மறுப்புக்களே. அணி சேருவதும் அணி பிரிவதும் தான் தமிழ்ச் சமுதாயத்தின் வீழ்ச்சிக்கு காரணம்.
இன்று எமது இளம் சமுதாயத்தினர் சிலர் (தமிழ் தெரிந்த பிள்ளைகள்) இந்த தேசம் நெற்றை பார்ப்பார்களா அவர்கள் எள்ளி நகையாடும் விதத்தில் தான் உள்ளது. அதைத்தான் இங்கே நான் மித்திரன் பேப்பர் என்று எழுதியிருந்தேன் இப்படியான விடயங்களை நாம் மித்திரன் பேப்ரில் தானே இலங்கையில் உள்ள போது வாசித்தோம். தேசம்நெற் ஆரம்பத்தில் நன்றாகத்தான் வந்தது. ஆனால் இப்பொழுது பலர் கூறி நான்னேட்டது இது ஒருப்பர்; நிதர்சனம் போன்றுள்ளது. அதற்குள் போனால் தலையிடிக்குது என்று பலர் கூற நான் கேட்டுள்ளேன். இப்படி தனிப்பட்ட நபர்கள் மேல் நாம் அக்றைகாட்டுவதை விட அக்கறை காட்டி அவர்களை உயர்த்தி பிரபல்யபடுத்துவதை விட பல வேலைகளை நாம் செய்யலாம் என்பது என் கருத்து.
Rathan on March 4, 2008 9:08 am
//இது ஒரு பகிரங்க சவால். கூகிலில அடிச்சு தகவல் சொருகி எழுதும் நீங்கள் எல்லாம் எழுத்தாளரெண்டு வெளிக்கிட்டியள். முடிஞ்சா சாவாலை ஏற்றுக்கொள்ளும்// சே!
யமுனா எற்கனவே சவால்விட்டிட்டார்.
//புனைபெயரில் எழுதுகிறவர்கள் அநாமதேயமான பெயரில் எழுதுகிறவர்கள் போன்றவர்களோடு எனக்கு எந்தவிதமான விவாதமும் சாத்தியமில்லை.
நான் எனது சொந்தப் பெயரில் எனது சொந்த அடையாளத்துடன் விவாதத்திற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் அவர்களது எழுத்துக்கள் மற்றும் நடத்தைகள் போன்றவற்றை ஆதாரபூர்வமாகக் குறிப்பிட்டு இக்கட்டுரையை எழுதியிருக்கிறேன். இதே வகையில் தமது சொந்தப் பெயரில் தமது சொந்த அடையாளங்களுடன் எழுத்து மற்றும் நடத்தை சார்ந்த ஆதாரங்களுடன் வருகிற எவரோடும் திறந்த விவாதத்திற்கு நான் தயாராக இருக்கிறேன்.//
தொடங்க வேண்டியதுதானே விவாதத்தை. தேசம்நெற்! இந்த கருத்தியல் விவாதத்திற்கு களம் அமைத்து கொடுங்கள்.
Rathan on March 4, 2008 9:27 am
//விடுதலை புலிகள் இலங்கையில் ஜனனாயக சூழலுக்கான அனைத்து கதவுகளையும் மூடிக்கொண்டு புலம் பெயர் தமிழரிடம் ஜனனாயகம் பேச முனைவதற்கான பம்மாத்து அரசியலே ஈழமுரசின் தொடக்கம்.// பிரியா
யுத்தமுனையில் போர்முகம் தான் காட்ட முடியும். அமைதியான ஐரோப்பிய சூழலில் ஐனநாயகமுகம்தான் தேவை. சிறுவர் பாலியலையும் கூட்டுக் கலவியையும் முலைப்பாலை முகமறிய பெண்ணிடம் வேண்டிநிற்பது. சிறந்த மனிதர்களின் சிந்தனை. இவர்கள் படைப்பாளிகள். கறுமமடாசாமி.
Rathan on March 4, 2008 10:17 am
//தேசம்நெற் ஆரம்பத்தில் நன்றாகத்தான் வந்தது. ஆனால் இப்பொழுது பலர் கூறி நான்னேட்டது இது ஒருப்பர்; நிதர்சனம் போன்றுள்ளது. அதற்குள் போனால் தலையிடிக்குது என்று பலர் கூற நான் கேட்டுள்ளேன்.// ரஞ்சன்.
புலியெதிர்ப்பு காழ்புணர்வு கட்டுரைகளும் அதற்கு ஒத்திசைவான பின்னூட்டங்களும் பெருமளவில் வரும்மட்டும் தேசம்நெற் சூப்பராய் இருந்தது. இப்போ புலியெதிர்ப்புக்கு எதிரான கருத்துக்களும் புலியெதிர்ப்பு வாதிகளின் வக்கிர முகங்கள் வெளிகாட்டப்படுவதால் தேசம்நெற்றின் தரம் குறைந்து விட்டது. இதுக்கு பேர்தானாம் மாற்றுக் கருத்து மாணிக்கங்களின் நேர்மையான விமர்சனமாம்.
முதலில் சோபாசக்தியினால் தமிழில் பதிப்பிக்கப்பட்ட குழந்தைப் போராளிகளின் நுhல் வெளியீட்டை தேசம்நெற்தான் முன்னின்று நடத்தியது. இன்று திரு யமுனா இராசேந்திரனின் சோபாசக்தி மற்றும் சுபன் மீதுதான விமர்சனத்தை வெளியிடுகிறது. தேசம்நெற் எந்தப் பக்கமும் சாராதுதான் செயல்படுகிறது.
yamuna rajendran on March 4, 2008 10:17 am
//”இப்போ சோபாசக்தி நாளை ஜமுனா பின்னர் நீர் நான் என்று இந்த வியாதி தொடரும். ஏன் ஜமுனாவும் அ. மார்க்சும் சோபாசக்தியும் ஒரு பகிரங்க விவாதத்திற்கு வந்து விவாதிக்கலாமே”//
ரஞ்ஜன் நான் எற்கனவே தெளிவாகத் தெரிவித்து விட்டேன். நான் இதற்கான முழு ஒத்துழைப்பையும் தருகிறேன். இந்த நேர்மை ‘ஷோ’விடமும் சுகனிடமும் உண்டா எனக் கேட்டுச் சொல்லுங்கள். யமுனா ராஜேந்திரன்.
yamuna rajendran on March 4, 2008 10:35 am
1. காலனித்துவ எதிர்ப்பு இந்துத்துவம் பின்னணித்துவத்தின் விளைவு என்று அடித்து சொல்கிறார் ராஜேந்திரன். காலனித்துவ எதிர்ப்பு இந்துத்துவம் பால கங்காதர திலகர் போன்ற இந்துத்துவவாதிகளால் விதைக்கபட்ட விசம். இதனை பின்னணித்துவ போக்கு என அடித்து சொல்லும் அறியாமை தான் ராஜேந்திரனின் அதிக பிரசங்கித்தனத்துக்கான அளவு கோல்.
2. உண்மை என்னவெனில் ராஜேந்திரன் காசுக்காக கொள்கையை விட்டு எந்த பத்திரிகையிலும் ‘ தனது தனித்துவத்தை இழக்காமல்’ எழுதுவது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆங்கிலம் தெரியாததால் எரிச்சல் படுகிறார் என்கிறார் ராஜேந்திரன்.
3. ஆங்கிலம் தெரிவது மட்டும் திரைப்பட விமர்சனத்துக்கான தகுதி கிடையாது. அத்துடன் ராஜேந்திரனின் ஆஙகில புலமைக்கு அவரது கவிதை மொழி பெயர்ப்புகள் சாட்சி.
4. சோபாசக்தியை பற்றிய அவரது விமர்சன அடித்தளம் பூர்சுவா உயர்சாதி அறத்திலிருந்து தான் கட்டப்பட்டிருக்கிறது. ஒழுக்கத்துக்கான வரைமுறைகள். சம்பிரதாயங்களுக்கான வரமுறைகள். இது தான் அவரது அளவு கோல்கள
5. ஆங்கிலம் தெரியாத சோபா சக்தியின் கொரில்லா ஆங்கிலத்தில் மொழி மெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. சுயனெழஅ ர்ழரளந அதனை வெளியீடு செய்துள்ளத
ப்ரியா. நல்லது நீங்கள் கொட்டி முழக்குகிறீர்கள். முதலில் நீங்கள் யார் எனச் சொல்லுங்கள். ஏன் புனைபெயரில் வந்து விவாதம் செய்ய வெண்டும்? சொந்த முகத்துக்கு என்ன ஆயிற்று? ஆங்கிலம் தெரிவது ஒரு தகுதியம் கிடையாது. அப்படி நான் சொல்லவும் இல்லை. நிறைய சவால் விடுகிறீர்கள். ஆதாரங்களுடன் சொந்தப் பெயரில் வந்து சவால் விடுங்கள். நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். விவாதத்திற்கு வரும் அநெமதேயர்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
முடிந்தால் ஈழத்து அரசியல் நாவல் தொடர்பான எனது நாலை வாசியுங்கள். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் ஆசிய நாவல்களின் அரசியல் நாவல்கள் பற்றி அதில் பேசியிருக்கிறென். மொழிபெயர்க்கப்பட்டி இருப்பதினாலெயே அதனை எல்லாரும் ஒப்ப வேண்டும் எனக் கூச்சல் போடுகிற நினைக்கப் பரிதாபமாக இருக்கிறது. சரி. பொத்தாம் பொதுவாகப் பேசாமல் சொந்த முகத்துடன் வாருங்கள். உங்கள் ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு கெள்விக்கம் பதில் சொல்கிறென். அதுவரை ஸாரி மை டியர். யமுனா ராஜேந்திரன்.
yamuna rajendran on March 4, 2008 10:40 am
ப்ரியா- சரி. நான் பூர்சுவா உயர்சாதி. உங்கள் சாதி என்ன? ஷோபா சக்தியின் சாதி என்ன? என் கட்டுரையில் எது உயர்சாதி அறம்.? சும்மாக் கதையடிக்க வேண்டாம். இனி சொந்தப் பெயரில் வந்தால்தான் உங்களுக்குப் பதில் தருவது சாத்தியம். அல்லவெனில்… நான் எற்கனவே கட்டுரையில் சொல்லியிருக்கிறேன். சும்மாப் பேய்க் காட்ட வேண்டாம். யமுனா ராஜேந்திரன்.
yamuna rajendran on March 4, 2008 10:58 am
//”இந்த கேழ்விய யமுனாவிடம் கேக்கப்படாதுதான். புத்தகம் புத்தகமா எழுதி கிழித்துள்ளார். – ஆனால் ஒரு பிரியோசனமும் கிடையாது. ஏதாவது இதுவரை காலமும் உருப்படியாக எழுதியதுண்டா?
கண்னை மூடிக்கொண்டு யமுனா எழுதிய எதை எடுத்தென்றாலும் நான் பிழைபிடிச்சு காட்டுவேன். யமுனாவுக்கு தில்லு இருந்தால் தான் எழுதிய பிழையில்லாத ஒரு புத்தகத்தை சொல்லவும். அதில் நான் ஆயிரம் பிழை பிடிச்சு காட்டுகிறேன். நான் பத்துக்கு மேற்பட்ட பிழை பிடிச்சால் யமுனா எழுதுவதை நிறுத்த தயாரா? இது ஒரு பகிரங்க சவால். கூகிலில அடிச்சு தகவல் சொருகி எழுதும் நீங்கள் எல்லாம் எழுத்தாளரெண்டு வெளிக்கிட்டியள். முடிஞ்சா சாவாலை ஏற்றுக்கொள்ளும்”// ச
சே. சவால் வீடுகீறீர்கள். ரொம்ப சந்தோசம். சவால் வீடுகிற அறிவுத் தெளிவும; திண்மையும் கொண்ட நீங்கள் ஏன் சொந்தப் பெயரில் வரக்கூடாது? இது கருத்து விவாதம் தானே?
நான் சவாலை ஏற்கிறேன். சொந்தப் பெயரில் வாருங்கள். நிழல்களிடம் விவாதிக்க என்னால் இயலாது. கூகிலில் அடித்தாலும் பிரிட்டிஸ் லைப்ரரி போய் புத்தகம் தேடி எடுத்தாலும் ‘படிக்க’ வேண்டும். அதுதான் முக்கியம். கூகிலில் தெடுவதும் கண்டடைவதும் முக்கியமாகப் படிப்பதும் ஒரு கலை. இதுபறறியும் நான் கொஞ்சமாக உயிர்நிழலில் எழுதியிருக்கிறென். படித்துப் பாருங்கள்.
அப்பறம் சே என் புத்தகங்களகப் பதிப்பிதத ஒருவர் ப்ரூப்பே அனுப்பவில்லை. செத்த பிணமாகப் புத்தகம் வந்தது. ஆனால் உயிர்மை பதிப்பகம் என் புத்தகங்கள் கொண்டு வந்திருக்கிறது. 3 முறை ப்ரூப் பார்த்தேன். முடிந்தால் அதில் பிழை பிடியுங்கள் பாரப்போம். நீங்கள் சவால் விடுவது ப்ரூப் பிழையா அல்லது கருத்துப் பிழையா? நான் ஷோபா சக்தியுடன் ஈடுபட்டிருப்பது கருத்துவிவாதம் ப்ரூப் பிழை விவாதம் இல்லை. சொந்த முகத்துடன் ஆத்திரம் காட்டாமல் வாருங்கள் விவாதிப்போம். உங்கள் சவாலை இன்முகத்துடன் ஏற்கிறேன். பை சே-
யமுனா ராஜேந்திரன்.
ashok on March 4, 2008 11:38 am
யமுனாவின் இப்பிரதி தனிநபர் தாக்குதல் என்ற எல்லையை அகன்று ஒரு ஆரோக்கியமான கருத்தியல் சார்ந்த சமூகப் போலிகளை அம்பலப்படுத்தும் தார்மீக சமூகக் கடமையின் வெளிப்பாட்டை கொண்டமைந்ததாகவே இருக்கின்றது. தனிநபர் தாக்குதல் என்று இப் பிரதிமீது ஒரு சிலர் சினம்கொள்வது அவர்களின் தனிப்பட்ட உறவுநிலை சார்ந்த நிலையின் தன்மையே. இதனை நாம் உதாசீனம் கொள்வது நல்லது.
ஒருநபர் இச் சமூகத்தின் பிரதிநிதியாக தன்படைப்புக் கூடாகவோ தன் செயல்பாடுகள் மூலமாகவோ உறவுகொள்ள முயலும்போது அவர் சமூகத்தின் கருத்துக்களை விமர்சனங்களை எதிர்கொண்டே ஆகவேண்டும். அந்நபர் போலித்தனங்களின் கபடத்தனங்களின் விச எண்ணங்களின் சூழ்ச்சித்தனங்களின் ஒட்டுமொத்த அயோக்கிய தனங்களின் பிரதிநிதியாக உருக்கொள்ளும் போது அந்நபர் எம் சமூகத்தின் முன் எவ்வித தயவுதாட்சணயமும் அற்ற முறையில் அம்பலப்படுத்தப்பட வேண்டிது சமூக அக்கறையாளர்களின் தார்மீகக் கடமையாகும். அந்த தார்மீக நெறியிலிருந்தே யமுனா ராஜேந்திரனின் இப்பிரதி நோக்கப்பட வேண்டும்.
இன்று புகலிடத்தில் இப் போலிகளின் சுயநலமிகளின் பணமும் தொடர்புகளும் புகலிடத்தில் ஒரு அதிகாரக் கட்டமைப்பை உருவாக்குவதில் துணை நிற்கின்ற அபாயத்தை நாம் ஒவ்வொருவரும புரிந்துகொள்வது அவசியமாகின்றது. கடந்த காலங்களில் தனிநபர்களுக்கூடாக துளிர்விட்ட பாசிசச் சிந்தனைகளும் செயற்பாடுகளும் இலங்கையில் புலிகள் என்ற பெயரில் அமைப்பு வடிவம்பெற்று இன்று அதன் சொல்லொனாத் துயரங்களை நாம் அனுபவித்துவருகிறோம். அதன் முன்னால் பிரதிநிதிகளான இவர்கள் அதே பாசிச சிந்தனைகளோடும் செயற்பாடுகளோடும் எந்தவித மாற்றமும் இன்றி புகலிடத்தில் ஐனநாயகவாதிகளாகவும் புலி எதிர்பாளர்களாகவும் போலி முகம் தரித்து உலா வருகின்றனர்.
இதனால் உண்மையிலேயே ஐனநாயகத்தை கோருகின்றவர்களுக்கு மனித உரிமைகளை நேசிக்கின்றவர்களுக்கு அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக குரல்கொடுப்பவர்களுக்கு இவர்களின் இந்த செயல்பாடுகள் ஊறுவிளைவிக்கின்றன என்றே கூறவேண்டும். எனவே யமுனாவின் இவ்பிரதி ஐனநாயக நேசிப்பாளர்களுக்கு சரியான திசைவழிநோக்கிய பயணத்திற்கு தடையாக இருக்கும் போலிகளை கண்டுணர வழிசமைத்துள்ளது என்ற வகையில் நாம் மகிழ்ச்சி கொள்வோம். நன்றி.
-அசோக்-
ashokyogan@hotmail.com
yamuna rajendran on March 4, 2008 11:55 am
எனக்குச் சவால் விடுகிறவர்களுக்கு தெளிவுக்காக ஒரு வரி. இதில் எழுதுகிறவர்கள் பலரை எனக்குத் தெரியாது. என்னிடம் சவால் விடாத வரையிலும் அவர்களது புனைப் பெயர்கள் எனக்குப் பிரச்சினையாக இருக்கத் தேவையில்லை. அவர்களது கருத்துக்களுக்கு அவர்களும் - மட்டுறுத்தும் தேசம்நெட்டும்தான் பொறுப்பு. ஆனால் நீங்கள் நிழல் மனிதர்களாக இருந்து கொண்டு எனக்குச் சவால் விடுகிறீர்கள். அதுதான் எனக்குப் பிரச்சினை. அதனால்தான் சொந்த முகத்துடன் வாருங்கள் எனக்கேட்கிறேன். புரிந்தால் சரி. யமுனா ராஜேந்திரன்.
ranjan on March 4, 2008 12:28 pm
யமுனா சோபாவிடமும் சுகனிடமும் கேட்டுச்சொல்லுங்கள் என்று எழுதுகிறீர்கள் என்னை விட உங்களுக்குத் தான் அவர்களிடம் கூடுதல் தொடர்பு உண்டு. அத்துடன் நீங்கள் பகிரங்கமாக அவர்களை விவாதத்திற்கு அழைத்தும் உள்ளீர்கள். அவர்கள் உண்மையில் சமூகத்தின் மேல் அக்கறை உள்ளவர்களாயின் நிச்சயமாக விவாதிக்க வருவார்கள். இல்லை தமது பெயருக்கும் புகழுக்கும் எழுதுபவர்களாக இருந்தால் கடைசி மட்டும் உங்களுடன் பகிரங்க விவாதத்திற்கு வரமாட்டார்கள்.
பொறுத்து இருந்து பார்ப்போமே…??
thas on March 4, 2008 1:25 pm
//இன்று புகலிடத்தில் இப் போலிகளின் சுயநலமிகளின் பணமும் தொடர்புகளும் புகலிடத்தில் ஒரு அதிகாரக் கட்டமைப்பை உருவாக்குவதில் துணை நிற்கின்ற அபாயத்தை நாம் ஒவ்வொருவரும புரிந்துகொள்வது அவசியமாகின்றது.//
தோழர் அசோக்கின் மேற்படி கூற்று நுர்ற்றுக்கு நுர்று வீதம் உண்மையானது. ஐரோப்பா நாடுகளில் குறிப்பாக பிரான்சிலும் லண்டனிலும் அரங்கேறும் சில கூத்துக்களை பார்க்கும்போது தோழர் அசோக் சொல்லும் விடயத்தின் முக்கியத்துவத்தை உணரக்கூடியதாக உள்ளது.
yamuna rajendran on March 4, 2008 1:47 pm
//”உண்மை என்னவெனில் ராஜேந்திரன் காசுக்காக கொள்கையை விட்டு எந்த பத்திரிகையிலும் ‘ தனது தனித்துவத்தை இழக்காமல்’ எழுதுவது அனைவருக்கும் தெரிந்த உண்மை.”//
ப்ரியா மறந்து விடடேன். என் சினிமா கட்டுரைக்கான எதிர்விணையை ‘ஷோ’ எதில் எழுதினார். ஈழமுரசில் தான் எழுதினார். அப்போது அவரது கொள்கை எங்கே போயிற்று? அதற்கு அவர் எவ்வளவு காசு வாங்கினார்? கேடடுச் சொல்லுங்கள். யமுனா ராஜேந்திரன்.
priya on March 4, 2008 1:54 pm
நெருப்புக்கும் சாமுக்கும் ஏன் சேயுக்கும் பொறுமையாக பதிலளிக்கும் ராஜேந்திரன் ப்ரியாவுக்கு ஏன் பதிலளிக்க கூடாது. பரியாவின் முகம் அப்படி பிரபலமானதல்ல சொன்னால் தெரிவதற்கு.நட்புடன் - ப்ரிய
Rathan on March 4, 2008 1:59 pm
//கடந்த காலங்களில் தனிநபர்களுக்கூடாக துளிர்விட்ட பாசிசச் சிந்தனைகளும் செயற்பாடுகளும் இலங்கையில் புலிகள் என்ற பெயரில் அமைப்பு வடிவம்பெற்று இன்று அதன் சொல்லொனாத் துயரங்களை நாம் அனுபவித்துவருகிறோம். அதன் முன்னால் பிரதிநிதிகளான இவர்கள் அதே பாசிச சிந்தனைகளோடும் செயற்பாடுகளோடும் எந்தவித மாற்றமும் இன்றி புகலிடத்தில் ஐனநாயகவாதிகளாகவும் புலி எதிர்பாளர்களாகவும் போலி முகம் தரித்து உலா வருகின்றனர்.// அசோக்.
கிடைச்ச கைய்புக்களை கடாய் வெட்ட பார்க்கிறீங்கள். புலிகளால் கழித்து விடப்பட்ட பிரதிகிருதிகளை நீங்களதான் புலியெதிப்பு வீரபுருசர்களாகவும் கதாநாயகர்களாகவும் உருமாற்றி போட்டு, அவர்கள் உங்களை வென்ற சிசியர்கள் ஆனாவுடன் உங்களின் இன்றைய சிநேகிதங்களை மறைத்து எந்த தொடர்புமற்ற புலியிலை பழியை போடுங்கோ. இதுதான் உங்களவில் மாற்றுக்கருத்து.
yamuna rajendran on March 4, 2008 2:06 pm
அறிவித்தல்: நான் இந்த விவாதக் களத்திலிருந்து தற்காலிகமாக விடைபெறுகிறேன். வார இறுதியில் மறுபடி வருகிறபோது ‘சொந்தப் பெயரில்’ ஏதேனும் எழுதப்பட்டிருந்தால் மட்டுமே எதிர்விணை செய்வேன். மற்றபடி இதுவே இந்த விவாதக்களத்தில் எனது இறுதியான தொடர்பாடலாக இருக்கும். மதியம் 14.04. 04 மார்ச் 2008. தேசம்நெட்டுக்கு எனது நன்றி. யமுனா ராஜேந்திரன
sam on March 4, 2008 2:25 pm
//இன்று புகலிடத்தில் இப் போலிகளின் சுயநலமிகளின் பணமும் தொடர்புகளும் புகலிடத்தில் ஒரு அதிகாரக் கட்டமைப்பை உருவாக்குவதில் துணை நிற்கின்ற அபாயத்தை நாம் ஒவ்வொருவரும புரிந்துகொள்வது அவசியமாகின்றது.//
அஷோக்கின் சமூகப் பற்றுள்ள எழுத்து. கடுகு போல் சிறிதானாலும் காரத்துடன் உறைக்கும்.
thurai on March 4, 2008 2:36 pm
//யுத்தமுனையில் போர்முகம் தான் காட்ட முடியும். அமைதியான ஐரோப்பிய சூழலில் ஐனநாயகமுகம்தான்// ரதன
இன்னமும் விளக்கமாகச் சொன்னால், இலங்கையில் மனிதரை வேட்டையாடும்போது புலித்தோலும், அமைதியான ஐரோப்பிய சூழலில் பணம் கறப்பதற்கு பசுத்தோலும். போர்ப்பது போல எனலாம்.
துர
karuppan on March 4, 2008 2:38 pm
ஆசிய மொழிகளிலிருந்து பாலியல் வக்கிரத்துடன் கூடிய நூல்கள் ஐரோப்பிய மொழிகளுக்குத் தீவிரமாக மொழிபெயர்க்கப்படுகின்றன. உலக மயக் கலாச்சார உருவாக்கத்தின் ஒரு பகுதியே இது.
shangaran on March 4, 2008 3:01 pm
இந்த பிரமுகப் பேர்வழிகளை அசோக் கூறாவிட்டாலும் எங்களால் புரிந்து கொள்ள முடிகின்றது. புலி எதிர்ப்பு என்ற போர்வையில் இவர்களின் செயல்பாடுகள் மற்றவர்களின் முற்போக்கான செயல்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதாகவே இதுவரை இருந்துள்ளது. பாரீசில் நண்பர்கள் வட்டம் மற்றும் உயிர்நிழல் நடாத்துகின்ற கூட்டங்களை இலக்கிய சந்திப்புக்களை திட்டமிட்டு குழப்புவதில் சோபாசக்தியின் சுகனின் பங்கு முக்கியமானது.
பாரீசில் அசோக்கும் அவர் நண்பர்களும் யுத்தத்திற்கு எதிரான அமைப்பு என்ற பெயரில் இலங்கையில் நடக்கும் யுத்தத்திற்கு எதிராகவும் சமாதானத்தை வேண்டியும் ஒட்டிய சுவரொட்டிகளை சோபாசக்தி இரவோடு இரவாக கிழித்தெறிந்தார். இதைக்கண்டித்து உயிர்நிழலில்கூட இவ்வமைப்பினரால் வெளியிடப்பட்ட கண்டன அறிக்கை வெளிவந்துள்ளது. ஆதாரத்திற்கு வாசகர்கள் படித்துப் பார்க்கவும். இப்படி பலதை எழுதமுடியும்.
நான் இதனை எழுதுவது இவர்களை குறைகூறுவதற்கல்ல. சோபாசக்தி சுகன் சொக்கன் போன்றவர்கள் இந்த ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு எதனை செய்தார்கள்? தங்களின் தனிப்பட்ட வாழ்வுக்காகவும் வளர்ச்சிக்காகவும் சுய விளம்பரத்திற்காகவும் சமூகத்திற்கு உழைக்க முயன்ற பலபேரை கேவலப்படுத்தி நோட்டீசும் மொட்டைக் கடதாசியும் எழுதியதுதான் கண்ட மிச்சம்.
mukunthan on March 4, 2008 3:02 pm
குடும்பம், கலாச்சாரம் ஒழுக்கம் குறித்தெல்லாம் உங்கள் கருத்தென்ன ?
இந்த விசயங்களில் நான் முற்று முழுதான பெரியாரிஸ்ட். “திருமணம் செய்வதைக் கிரிமினல் குற்றமாக்க வேண்டும்” என்றார் தந்தை பெரியார். இந்த முதலாளிய சமூக ஒழுங்குகளின் அடிப்படைக் கண்ணி ஆலைகள் அல்ல. குடும்பங்களே அடிப்படைக் கண்ணிகள். குடும்பப் பொறுப்பும் பற்றுமே தொழிலாளர்களை ஓய்வெடுக்க விடுவதில்லை. உலகத் தொழிலாளர்கள் ஓய்வெடுத்தால் முதலாளியப் பொறியமைவு சரிய ஆரம்பிக்கும். இம் முதலாளியக் கலாச்சாரம் ஒழுங்குகள் எல்லாம் தகர்ந்து விழும். பேராசான் கார்ல் மார்க்ஸ் சொன்னது போல குடும்பம் என்பது ஒரு குட்டி அரசுதானே. அங்கு கணவன் அதிகார மையம் தானே! ஒழிந்து போகட்டும் குடும்பங்கள். அது ஒழியும் போது இந்த நிலவும் நாற்றெமெடுத்த கலாச்சாரங்களும் ஒழுக்கங்களும் கூடவே ஒழிந்து போகும்.
சோபாசக்தி-சத்திய கடதாச
இதுபற்றி யாராவது ………..
priya on March 4, 2008 5:45 pm
//தங்களின் தனிப்பட்ட வாழ்வுக்காகவும் வளர்ச்சிக்காகவும் சுய விளம்பரத்திற்காகவும் சமூகத்திற்கு உழைக்க முயன்ற பலபேரை கேவலப்படுத்தி நோட்டீசும் மொட்டைக் கடதாசியும் எழுதியதுதான் கண்ட மிச்சம்.//
சுகனும் சோபாவும் வாழ்க்கை வசதிக்காக சுய விளம்பரத்துக்காகவும் மற்றவர்களை கீழே விழுத்தி மேலே வந்தவர்கள் என்று சொல்வது நல்ல நகைச்சுவை. இதனை அவர்களுடன் மோதியவர்கள் கூட ஏற்று கொள்ளமாட்டார்கள். சுகனும் சோபாவும் தவறு விடாதவர்களல்ல. அது அனைவருக்கும் பொருந்துமென கூறலாம்.
priya on March 4, 2008 6:25 pm
யமுனா ராஜேந்திரன் கட்டுரை குறித்து சில குறிப்புகள் :K.ரவி ஸ்ரீநிவாஸ்
யமுனா ராஜேந்திரனின் கட்டுரையில் தமிழ் பின் நவீனத்துவம், (பொதுவாக) பின் நவீனத்துவம் குறித்த வேறுபாடுகள் தெளிவாக இல்லை. பின் நவீனத்துவத்தின் கூறுகளில் ஒன்று பூர்வ குடி சிந்தனைப் பெருமிதம் என்ற முடிவிற்கு எந்த அடிப்படையில் அவர் வந்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஜாபிஸ்டாக்கள் குறித்த அவரது புரிதல் சரியல்ல. அது எழ முக்கியமான காரணம் உலகமயமாதல், ணாFTஆ அதற்கு ஒரு பிண்ணனி உண்டு. மக்கள் இயக்கமாக, போராட்டமாக அது பல புதிய யுக்திகளைக் கையாண்டது. உதாரணமாக இணையத்தினை பயன்படுத்தியது, சர்வதேச கவனத்தைப் பெற்றது, மற்றும் உலகெங்கும் உள்ள பல முற்போக்கு இயக்கங்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டது. ஒருவிதத்தில் இது உலகெங்கும் தோன்றிய சிறு விவாசாயிகள் / பழங்குடி மக்கள் இயக்கங்கள் போன்றது. ஒடுக்குமுறை, சுரண்டல் ஆகியவை உலகப்பரிமாணங்கள் கொண்டவை என்ற நிலைப்பாட்டை முன்வைத்தது. இதை பின்நவீனத்துடன் தொடர்புபடுத்தி பேசமுடியும், யமுனா ராஜேந்திரன் எழுதிய பொருளில் அல்ல. மாறாக நவீனத்துவ அரசியல், பின் நவீனத்துவ அரசியல், வெகுஜன இயக்கங்கள் என்ற ரீதியில்.
யமுனா ராஜேந்திரன் கட்டுரை பின் நவீனத்துவம் குறித்த ஒரு குழப்பமான பார்வையையே தருகிறது. பின் நவீனத்துவம் ப்ரெவிலெகெட் பெர்ச்பெச்டிவெ, மெடநர்ரடிவெச் போன்றவற்றை கேள்விக்குள்ளாகுகிறது. அடையாளங்களின் உருவாக்கம், தன்னிலைகளின் பலவகைத்தன்மை போன்றவை குறித்து பேசும் பின் நிலை வாதம் நக்சைலைட் அனுபவம் பற்றி நக்சலைட் கூறுவதே சரி அல்லது அதுவே சரியான கருத்து என்பதை எற்பதில்லை. மாறாக அப்படி யாரும் உண்மை குறித்து ஏகபோக உரிமை கொண்டாட முடியாது என்பதையே சுட்டிக்காட்டுகிறது. வெகுஜன இயக்கங்களுக்கு பின் நவீனத்துவத்துடன் ஒரு உரையாடல் சாத்தியமா ? ஆம், ஆனால் அத
பின் நவீனத்துவம் சாரம்சவாதத்தினை நிராகரிக்கிறது. மாறாக அடையாளங்கள் நெகிழ்வுதன்மை கொண்டவை, மாறுதலுக்கு உட்பட்டவை என்று வாதிடுகிறது. எனவேதான் இது ஒட்டுமொத்தமாக வெகுஜன அரசியலை நிராகரிக்கிறதோ என்ற கேள்வி எழுகிறது. இது போல் அவர் முன் வைத்துள்ள பின் நவீனத்துவத்தை இப்படிப் பயன்படுத்தி படிப்பவர்களை பயமுறுத்த வேண்டாம். பின் நவீனத்துவம் வலதுசாரி அரசியலுக்கும் பயன்படும், இடது சாரி அரசியலுக்கும் பயன்படும். எனவே அதை முத்திரை குத்தி பார்ப்பது தேவையற்றது. மாறாக பின் நவீனத்துவம் என்பது ஒற்றை சிந்தனைப் போக்கல்ல, அதில் பல போக்குகள் உள்ளன, பல மாறுபட்ட பார்வைகள் உள்ளன என்பதினை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அறிவியல் தொழில்நுட்பம் மீது விமர்சனம் வைக்கும் பின் நவீனத்துவவாதிகளும் உண்டு, அறிவியல் தொழில்நுட்பம் குறித்து ஆதரவு / எதிர்ப்பு என்ற இரு நிலைபாடுகளுக்கு அப்பாற்பட்ட புரிதல் வேண்டும் என்போரும் உண்டு. எனவே இதுவேதான் பின் நவீனத்துவ நிலைப்பாடு என்று ஒன்றை முன்வைப்பது எளிதல்ல. தமிழில் பின் நவீனத்துவம் பெருமளவு இலக்கியம் / பண்பாடு சார்ந்தே விவாதிக்கக்பட்டுள்ளது. நான் இதை இலக்கிய / பண்பாடு சார்ந்த ஒன்றாக மட்டும் பார்க்கவில்லை. பின் நவீனத்துவ சிந்தனைகளின் தாக்கத்தினை கல்வி குறித்த தத்துவம், வரலாற்றியல், புவியியல், நாடுகளுடான உறவுகள் பற்றிய ஆய்வுகள் என பலதுறைகளில் காண முடியும். மேலும் ஆங்கிலத்தில் பின் நவீனத்துவம் குறித்து எழுதப்படுள்ளவை மூலமே எனது புரிதலை உருவாக்கிக் கொள்ள முயல்கிறேன்.
யமுனா ராஜேந்திரன் எழுதியுள்ளதன் அடிப்படையில் பின் நவீனத்துவத்தை புரிந்து கொள்ள முயலாதீர்கள் என்று வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன். தமிழ்ச் சூழலில் சோகலுடனான உரையாடலை மொழிபெயர்ப்பதை விட ஏPW ல் வெளிவந்த கட்டுரைகள், மீரா நந்தா எழுதியுள்ளவை, மீரா நந்தா நூல் பற்றி ஆனந்த் எழுதிய மதிப்புரை போன்றவற்றை அறிமுகப்படுத்தி பின் நவீனத்துவம், அறிவியல், அறிவியல் போர்கள், ஹிந்துத்வம் முன்வக்கும் ‘அறிவியல் கண்ணோட்டம்’ குறித்து விவாதிப்பதே பொருத்தமாக இருக்கும்.
யமுனா ராஜேந்திரன் படிப்பவர்கள் குழம்பும் வண்ணம் ஒரு கட்டுரையை எழுதி, பேட்டியை மொழிபெயர்த்து வெளியிடுகிறார், போதுமான விபரங்கள், தகவல்கள் தராமல். எதற்காக இந்த முயற்சிகள். இவற்றால் என்ன பயன். ஏன் ஒரு கட்டுரையையும், ஒரு சர்ச்சையையும் இப்படி பயன்படுத்துகிறார்கள்.
திண்ணையில் வந்த விமர்சனத்தின் ஒரு பகுதி ..
priya on March 4, 2008 6:29 pm
நெரூதா அனுபவம் - நான் சில விஷயங்களை விளக்குகிறேன். - சுகுமாரன்
பாப்லோ நெரூதா பற்றிய எனது கட்டுரைக்கு திரு.யமுனா ராஜேந்திரனின் எதிர்வினை கண்டேன். சற்று வருத்தமாகவும் இருந்தது. குறிப்பாக ‘குறிப்பிட்ட உலகக் கவி ஒருவர் குறித்து தமிழில் நடந்திருக்கும் பங்களிப்புகளை ஒதுக்கி விட்டு தன்னை மட்டும் முன்னிலைப் படுத்திக்கொள்ளும் தொனியிலேயே கட்டுரை அமைந்திருப்பது… ‘ என்ற அவதானிப்பு.
நீண்ட காலத்துக்குப் பிறகு பழைய நண்பர் ஒருவர் நம்மை நினைவுகூர்வது குதூகலமளிக்கக் கூடியது. ஆனால், திரு.யமுனா ராஜேந்திரனின் ‘அரங்கறியா வட்டாட்டமும் ‘ பொருத்தமற்ற இடையீடும் குதூகலத்தைவிட வருத்ததையே தந்திருக்கிறது. இதுவரையான இலக்கிய வாழ்க்கையில் சர்ச்சைகளிலிருந்து விலகி நிற்கவே விரும்பிவந்திருக்கிறேன்; விரும்புகிறேன். சொந்த தமுக்கை கொட்டி ஒலிபெருக்குவதில் எனக்கு நம்பிக்கையில்லை. அவசியமற்று முன்னிலைப் படுத்திக்கொள்வதிலும் அக்கறையில்லை. எனது இலக்கிய செயல்பாடுகளுக்கு மண்ணும் வேருமாக அமைந்தவற்றை மறந்ததுமில்லை. புறக்கணித்ததுமில்லை.
திண்ணையில் இருந்து ஒரு பகுத
soba on March 4, 2008 6:37 pm
ஐயோ பிரியா, அசோக் எழுதினது சோபாவுக்கும் சுகனுக்கும் மட்டுமல்ல இவர்கள் கிட்டத்தட்ட செத்துப் போனவர்கள். முக்கியமானவர்கள் புதியவர்கள். இதோ! //அதே பாசிச சிந்தனைகளோடும் செயற்பாடுகளோடும் எந்தவித மாற்றமும் இன்றி புகலிடத்தில் ஐனநாயகவாதிகளாகவும் புலி எதிர்பாளர்களாகவும் போலி முகம் தரித்து உலா வருகின்றனர். //
priya on March 4, 2008 6:45 pm
ஜமுனாவின் பின்னணித்துவம் அல்லது பின்னணித்துவங்கள் பற்றிய தவறான புரிதலை தவறான மொழிமெயர்ப்புகளை ஒன்றிரண்டு பேர் மட்டும் சொல்லவில்லை. தேவையாயின் இன்னும் பல்வேறு தகவல்கள் பட்டியலாக உள்ளன. இதனை தருவதற்கான காரணம் சோபா சக்தியின் ஆத்திரத்தில் புத்தி மங்கி ஆகா அற்புதமான விமர்சன ரீதியான கட்டுரை பெட்டகத்தை ராஜேந்திரன் தந்திருக்கிறார் என கூறி உங்களை சுயதிருப்திபடுத்த வேண்டாம். சோபா சக்தியின் பின்னணித்துவ (அப்படி அவர் சொல்ல வில்லை) போக்கை விமர்சிக்க அவரது படைப்புகளை விமர்சிக்க ஆரோக்கியமான வழிகள் இருக்கவே இருக்கின்றன. ம் இல் ஒரு பகுதியை படித்துவிட்டு முழுநாவலையும் விமர்சிப்பது சல்மான் ருஸ்டியின் சாதனிக் வேர்சஸ்ஸை படிக்காமலே எரிக்க கிழம்பிய கூட்டம் போல்.
Thakshan on March 4, 2008 6:52 pm
வித்துவக் காய்ச்சல்கள் மிகுந்ததாக விமர்சனங்கள் இருக்கின்றனவேயன்றி பயனுள்ளதாக இல்லை. தனிப்பட்ட குரோதங்களை கொட்டுமிடமாக கட்டுரையும் பின்னூட்டங்களும் அமைந்துவிடுகின்றது. தேசம்நெற் நிர்வாகம் உசாராக வேண்டிய தருணம் இது. புலத்தின் அக்கறை தளத்தினுடையதாக இருக்கும் போதுதான் பயனுடையதாகும். போர்ச் சூழலிற்கும் ஜனநாயக மறுப்புக்கும் ஆட்பட்டு மானுடத்தை தொலைத்து பரிதவிக்கும் ஒரு சமூகத்திற்கு வேண்டிய விழிப்புணர்வையும் அழிவுகளை தடுத்து நிறுத்த வேண்டிய அவசியத்தையும் ஜனநாயக பண்புகளை வளர்த்தெடுக்க வேண்டிய தேவையுமே முதன்மைப்படுத்தப்படல் வேண்டும்.
Remainder on March 4, 2008 6:56 pm
தட்சணாமருதமடு பகுதியில் உள்ள தமது வீடுகளைப் பார்ப்பதற்காக, உழவு இயந்திரம் ஒன்றில் சென்ற 4 சிவிலியன்கள் இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினரின் கிளேமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக…..
priya on March 4, 2008 7:53 pm
//அதன் முன்னால் பிரதிநிதிகளான இவர்கள் அதே பாசிச சிந்தனைகளோடும் செயற்பாடுகளோடும் எந்தவித மாற்றமும் இன்றி புகலிடத்தில் ஐனநாயகவாதிகளாகவும் புலி எதிர்பாளர்களாகவும் போலி முகம் தரித்து உலா வருகின்றனர்.//
அசோக் - இம்மாதிரியான விமர்சனங்கள் அனைவரையும் ஒரே தட்டில் போட்டு பாசிசம் என்ற சொல்லாடலுக்குள் அடக்கிவிடும் போக்கு. இது மிகவும் ஆபத்தானது. சோபா சக்தியுடனோ சுகனுடனோ உங்கள் வேற்றுமை வெறும் ஜனனாயகம் சம்பந்தப்பட்டதல்ல. அதற்குள் பல் வேறு சிக்கல்கள் உள்ளன என்பது உங்களுக்கு நன்கு தெரியும். இதில் யார் சரி யார் தவறு என்ற விசயத்தை விட்டு தவறினை அனைவரும் சிந்திப்பதே ஆரோக்கியமான வழி. பிரான்ஸிலுள்ள புலம் பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் (உங்களையும் சேர்த்து) மாற்று கருத்து மாற்று இலக்கியம் போன்ற புலம் பெயர் படைப்புகளின் முன்னோடிகள். லண்டனில் இவ்வாறான இலக்கிய கர்த்தாக்கள் படைப்பாளிகள் அரிதே.
vithuran on March 4, 2008 9:08 pm
//பிரான்ஸிலுள்ள புலம் பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் ( உங்களையும் சேர்த்து) மாற்று கருத்து மாற்று இலக்கியம் போன்ற புலம் பெயர் படைப்புகளின் முன்னோடிகள். லண்டனில் இவ்வாறான இலக்கிய கர்த்தாக்கள் படைப்பாளிகள் அரிதே// உங்கள் பிருத்தாளும் தந்திரம் அரிதிலும் அரிதே!! இதுவும் புலியிடம் படித்தோ??
ashok on March 4, 2008 9:23 pm
பிரியா அவர்களே! சோபாசக்தியுடனான எங்கள் முரண்பாடு, அவரின் வன்முறை மனோபாவம் நேர்மையற்ற அவரின் செயற்பாடுகள் சூழ்ச்சித்தனங்கள் இவற்றிலிருந்து எழுகின்றவை. உண்மையில் சோபாசக்தியின் புகலிட பிரவேசத்திற்குப் பின் நாங்கள் சந்தித்த அனுபவங்கள் படிப்பினைகள் அவரின் துரோகத்தனங்களை லண்டனில் வாழும் உங்களைப் போன்றவர்களால் புரிந்துகொள்ள முடியாது. புலித்தன அரசியல் மனோபாவத்தை விட்டு வெளியேறி ஐனநாயகத்தை கோருகின்ற மனித உரிமைகளை நேசிக்கின்ற மனிதர்களால் மாத்திரமே சோபாசக்தியின் கபடங்களையும் வன்முறை மனோபாவத்தையும் புரிந்துகொள்ள முடியும்.
பெண்ணியவாதியும் உயிர்நிழல் சஞ்சிகையின் ஆசிரியையும் மாற்றுக் கருத்தாளருமான லக்சுமியை பற்றி எக்சில் சஞ்சிகையில் முன் அட்டையில் நச்சுத்தனமான சொல்லாடல்களால் சோபாசக்தி (ஞானத்தோடு சேர்ந்து) வசைபாடியதை உங்களின் பெண்ணிய சிந்தனையில் எவ்வாறு கனிப்பீர்கள்? சோபாசக்தி மீதான உங்களின் கருசனைக்கு எனது நன்றிகள்.
அசோக
ravi on March 4, 2008 9:37 pm
செப்ரம்பர் 11 தாக்குதலை ஒரு பயங்கரவாதத்துக்கு வெளியில் வைத்துப் பார்க்க முடியாதவர்கள் கூட அமெரிக்கா மீதான வெறுப்பின் காரணமாக உளமார மகிழ்ந்தார்கள். இங்கும் சோபாசக்தியை ஒரு படைப்பாளியாக மறுக்க முடியாதவர்களும் சோபாசக்தி மீதான தாக்குதலில் படைப்பாளியையே தொலைத்துவிட்டு மகிழ்கிறார்கள் என்பதை பின்னூட்டங்கள் காட்டுகின்றன.
சோபாசக்தியின் அரசியல் அவரின் நுண்மையான மிதப்பல்கள் எல்லாம் கொரில்லா நாவலிற்கான விமர்சனங்களிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாய் கேள்வி கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. நக்கலும் நையாண்டியும் உண்மைகளும் புனைவுகளும் பிம்பக் கட்டமைப்புகளுமான சோபாசக்தியின் உலகத்தில் பாதிக்கப்பட்ட ஒரு குரலாக யமுனாவின் விமர்சனத்தைப் பார்க்க முடியும். புரிந்துகொள்ள முடியும். அந்தக் குரல் தனிநபர் தாக்குதலுக்குள் போய்வருவதும் தவிர்க்க முடியாமல் இருக்கலாம். அதேநேரம் அதை தனிநபர் தாக்குதலுக்கு வெளியில் வைத்துப் புரிந்துகொள்ளாது ஒரு விமர்சன முறையாகக் காட்ட முன்வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
யமுனாவின் விமர்சனத்தை தனிநபர் தாக்குதலுக்கு வெளியே வைத்து மதிப்பிட தடையாக உள்ள முக்கிய அம்சம் குறைந்தபட்சம் புலம்பெயர் அரசியல் இலக்கிய உறவுநிலைகளுக்குள் வைத்து சோபாசக்தியை மதிப்பிட முடியாமல் போனதுதான். சோபாசக்தி இதற்குள்ளால் எப்படி வேறுபடுகிறார் என்பதை துல்லியமாகக் காட்டத் தவறியதுதான்.
சோபாசக்தி கட்டமைக்க வெளிக்கிடும் விம்பங்கள் அவருடன் முரண்பட்டு நிற்பவர்கள் (மனித உரிமைவாதிகள், பாசிச எதிர்ப்பாளர்கள், ஜனநாயகத்துக்காகக் குரல் கொடுப்பவர்கள்… போன்ற அடைமொழிகளால்) கட்டமைக்க வெளிக்கிட்ட விம்பங்களை மிஞ்சிக்கூட இருக்கலாம். ஆனால் அவற்றைத் தவிர்த்து இதையெல்லாம் மதிப்பிட்டுவிட முடியாது. சாதாரணமாக இலக்கியச் சந்திப்புகள் பெண்கள் சந்திப்புகள் போன்ற தப்பிப் பிழைத்திருக்கும் அமைப்புகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளையெல்லாம் முறையாகக் கையாள்வதற்குப் பதிலாக ஜனநாயக மறுப்பு, அராஜகம் என்றெல்லாம் சுட்டி மொட்டைப் பிரசுரங்களும் புனைபெயர் விமர்சனங்களும் வந்து நிலைமைகளைச் சிக்கலாக்கிய, சிக்கலாக்கும், புலம்பெயர் நிலைமைகளையெல்லாம் ஓரமாய் வைத்துவிட்டு சோபாசக்தி சுகனிடம் மட்டும் மல்லுக்கட்ட முடியாது.
சோபாசக்தி அறியப்பட்ட பெயரில் வந்து எழுதுவதால் இவ்வாறான மதிப்பீடுகளை எடுக்க அமையும் சாத்தியம் புனைபெர்கள் மொட்டைப் பிரசுரங்களுக்குப் பின்னால் நின்றவர்களிடம் (நிற்பவர்களிடம்) சாத்தியப்படாமலே இருக்கிறது.
எது எப்படியோ புகலிட இலக்கியம் பாரிசை மையங்கொண்டு இந்த முரண்பாடுகளுக்குள்ளாலும் இயங்குகிறது என்பதை கருத்திலெடுக்காத எந்த விமர்சனங்களையும் அது மீறி வளர சாத்தியம் இருக்கிறது. இதன் மிதப்பான படைப்பாளியாக தன்னைக் கட்டமைக்க சோபாசக்தி முனைகிறார் என்ற விமர்சனத்தில் உடன்பட முடியும். அதை அடைய அவரது நுண்மையான விளையாட்டுகள் கட்டுடைக்கப்பட வேண்டும். என்னைப் பொறுத்தவரை அதைவிட சோபாசக்தியின் படைப்புத் திறன் அவரை தாங்கிப் பிடிக்கும் என்பதை விரும்பினாலென்ன விரும்பாவிட்டாலென்ன எதிர்பார்க்க முடியும். இவர்கள் தம்மை கலகக்காரர்களாக கட்டமைக்கும் விம்பங்கள் உண்மையில் பிரச்சினைக்குரியது தான். அதை அம்பலமாக்கும் மையங்களை யமுனா ராஜேநதிரனின் விமர்சனத்தில் எற்றுக்கொள்ளலாம்.
சோபாசக்தியை விமர்சிப்பவர்களுடன் சோபாசக்தி கறுவியத்துடன் செயற்படுவார் என்று அபிப்பிராயம் இருக்கிறதுதான். அதேவேளை நம்முடன் இருந்து மரணமாகிவிட்ட தோழர்களை விமர்சிப்பதற்குக்கூட இயல்பான மனநிலையை வரவழைக்க முடியாமல் இருக்கிறது. இதை ரயாகரன் செய்தபோது (உடன்பாடோ உடன்பாடின்மையோ) அது எவ்வாறாக எதிர்கொள்ளப்பட்டது என்பதை வாசகர் அறிவர். மாறாக அவர்களின் உண்மைப் பாத்திரங்களின் மீது வைத்து புதிய புதிய புனிதங்கள் கட்டமைக்கப்படுகின்றது என்பதே நிஜம். இவைகளைத் தவிர்த்து மதிப்பீடுகளை எடுப்பது முழுமையானதல்ல.
எனக்கு எப்பவுமே தனிநபர் தாக்குதலுக்கு வெளியில் வைத்துப் புரிந்துகொள்ளப்பட முடியாமல் இருப்பதற்கு இன்னொரு காரணம் சோபாசக்தியை எதிர்கொள்ள அ.மார்க்ஸினை இழுத்துவருவதுதான். கொரில்லா நாவல் பற்றிய யமுனா ராஜேநதிரனின் விமர்சனத்தில்கூட தூக்கலாகத் தெரிந்தது அ.மார்க்ஸ் விரோதமே. அ.மார்க்ஸை சோபாசக்தி மேற்கோள் காட்டுவதோ அல்லது பழகுவதோ பின்நவீனத்துவ ஆசான் என்று (நக்கலாக) விளிப்பதற்குப் போதுமானதல்ல.
அ.மார்க்ஸின் எதிரணி நபர்களான எஸ்விஆர், கீதா போன்றவர்களை சிலாகிப்பதில் இந்த அணிதிரளல் உள்மனமே காரணம் என நான் நினைக்கிறேன். நிறப்பிரிகை ஏற்படுத்திவிட்ட விவாதப் போக்கு வலுவானது தான். (புலம்பெயர் இலக்கியத்தை பழித்து நின்ற தமிழக இலக்கியச் சூழலில் அதனை வலுவாக அறிமுகப்படுத்தியதிலும் கூட நிறப்பிரிகைக்கு முக்கிய இடம் இருக்கிறது.) இதற்குள்ளால் புகலிடத்தில் அறிமுகமாகியவர்தான் அ.மார்க்ஸ் எனபது கவனிக்கப்பட வேண்டியது.
புதிய விடயங்களைப் படித்து அதை தனதாக்கிக்கொண்டு பகுத்தாயும் மனோபாவம் அ.மார்க்ஸிடம் நான் கண்டுகொண்டது. அவர் ஒருதொகை மேற்கோள்களைப் போட்டு ஆய்வுகளை ஒப்புவிக்கும் போக்கற்றவர். அவரிடம் ஏற்படும் கருத்து மாறுபாடுகளை அவர் தனது ஆய்வுகளுக்கூடாக வந்தடைகிறாரோ இல்லையோ நாம் அதன்பின்னே அலைந்து திரிந்தால் அதற்கு அவர் பொறுப்பாளியாக இருக்க முடியாது. அல்லது அவரது பெயரை தனது விம்பங்களைக் கட்மைக்க ஒருவர் பாவித்தால் அதை கட்டுடைப்பதற்குப் பதில் அ.மார்க்ஸிடம் ஓடினால் அந்த மனநோய்க்கு எம்மிடம்தான் மருந்திருக்குமேயொழிய அ.மார்க்ஸிடம் இல்லை.
பின் நவீனத்துவம் என்பது ஒரு தத்துவமாகவன்றி ஒரு அறிதல் முறையாகவே அறிமுகப்படுத்தப்பட்டதாக நான் படித்ததுண்டு. மார்க்சியத்தின் இடைவெளிகள் பற்றிப் பேச முனைந்ததாக நான் அறிந்ததுண்டேயொழிய மார்க்சியத்துக்கு எதிரானதாக வைக்கப்பட்டதாக நான் விளங்கிக் கொள்ளவேயில்லை. இந்த இடைவெளிகளை அது சரியாக இனங்காட்டியதா, மார்க்சியம் சொல்லத் தவறியதை அது சொல்ல முனைந்ததா என்ற விடங்களில் பிரச்சினை இருக்கலாம். ஆனால் மார்க்சியத்தை மறுத்ததாக நான் (தமிழில்) படித்ததில்லை. உண்மையில் பின்நவீனத்துவம் பேசுபவர்களைவிட அதை எதிர்ப்பவர்களிடம்தான் இந்த எதிர்நிலை புகலிடத்தில் காணப்படுவதாக நான் நினைக்கிறேன்.
ஈழமுரசு பத்திரிகைக்கு யமுனா ராஜேந்திரன் (காசு வாங்கி) எழுதியது என்பது அவர் சம்பந்தப்பட்ட விசயம். அதை அவர் தொழில்சார் பத்திரிகையாளன் என்ற நிலையிலேயே விளங்கப்படுத்த முடியும். அரசியல் ரீதியாக அல்ல. இதே போலத்தான் இந்தியா ருடே பத்திரிகையை மலம் துடைக்க பாவித்த போராட்டத்தின்பின் அ.மார்க்ஸ் வாஸந்திக்குப் பேட்டி கொடுத்ததையும், பார்ப்பனப் பத்திரிகைகள் என்று சாடிக்கொண்டே அதே பார்ப்பனப் பத்திரிகைகளுக்கு ஓடிஓடி சோபாசக்தி பேட்டிகொடுத்துக் கொண்டு திரிவதையும் அவர்கள் கொண்டுள்ள அரசியலால் நியாயப்படுத்திவிட முடியாது.
சோபாசக்தி தலித் போலிகள் என்று அடையாளம் கண்டால், தலித் ஒடுக்குமுறைக்கு நாம் எதிரானவர்கள் என்றால் தலித் அமைப்புகளின் வாசலில் ஏன் சோபாசக்தியைக் கண்டு மிரளவேண்டும்? தலித்தியம் பேசுபவர்கள் எல்லோரையும் சோபா சுகன் வாசனைத்திரவியம் தடவியவர்களாக ஏன் நாம் பார்க்க வேண்டும்? தலித் மாநாட்டுக்குள் ஏன் எங்கள் கருத்துகளைக் கொண்டு வரக்கூடாது? ஆக முரண்பாடுகளைக் கையாள்வதில் நாம் யாரும் முன்மாதிரியாக இல்லை என்ற புலம்பெயர் சூழலுக்குள் நாம் விடப்பட்டிருக்கிறோம் என்று சொல்லத் தோன்றுகிறது. -ரவ
sam on March 4, 2008 9:52 pm
ப்ரியா, யமுனா விமர்சனங்களை மறைவிலிருந்து முன்வைக்காமல் வெளிப்படையைக் கோரியுள்ளார். உங்களுக்கு அது பற்றிக் கவலையே இல்லை. நீங்கள் அவரிடமிருந்து பதிலை எதிர் பார்க்கவில்லை அல்லது உங்களை வெளிக்காட்ட துணிவில்லை.
நமது மக்களின் வரிப்பணத்தில் இலவசக் கல்விகற்றவர்கள். நாம் பிறந்து வளர்ந்து நமது அம்மா அப்பாவோடு கைகோர்த்து அமைதியாய் நடந்த்து திரிந்த மண் பிணங்களின் விதைப்பிடமாகிவிட்டது. புகலிடத்திலிருந்து நாம் என்ன செய்ய முடியும்? புலிகள் கோருவதைப் போல் ஒரு கொடிக்குக்கீழ் ஒற்றுமையாயிருத்தலா அல்லது தடைகளை உடைத்து தேசித்தில் புதியனவற்றின் வரவை ஊக்குவிப்பதா? ஜனநாயகத்தின் சாதியின் பெயரால் பிரதேசத்தின் பேயரால் புதியன வருதலை சிதைத்துக் கொண்டிருக்கும் உள் எதிரிகளே எம்முன் உள்ள முதல் தடை.
83 களில் இயங்களின் ஒற்றூமைக்கு எதிராகப் பேசியவர்கள், ஒற்றுமை என்பது சமரசமாகிவிடக் கூடாது என்பதைச் சுட்டிக் காட்டியவர்கள் எல்லாம் துரோகிகளாக துவம்சம் செய்யப்பட்டார்கள். இன்று எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு மரண்த்தின் விழிம்பில் நிற்கும் ஒரு மக்கள் கூட்டத்தைப் பார்க்கிறோம். ஒற்றுமை என்பது சமரசம்ல்ல. இங்கிருந்து நாம் அருசி அனுப்பி சமூகத்தை அழிவின் விழிம்பிலிருந்த்து உள்ளிளுக்க முடியாது. சரியானவற்றை அடையாளம் காண வேண்டும்.
இந்தியாவில் சாதிவாதம் உருவான போது ஒற்றுமை என்ற பெயரில் அதற்கெதிரான போராட்டம் முன்னெடுக்கப்படவில்லை. இன்று தலித்தியம் தறிகெட்டோடி புகலிடம் வரை வந்து சாதியை வளர்க்கிறது.
பின்நவீனத்துவம் என்ற பெயரில் அது மார்க்ஸியத்தின் நிரப்பல் என்ற சீரழிவை தத்துவமாக்கிய சுயநலங்களுகெதிரான போராட்டம் முன்னெடுக்கப்படாததால் இன்று இலங்கைத் தமிழர்கள் வரை அதன் நச்சு வேர்களைப் பரவ விட்டிருக்கிறது.
வெற்றைகண்ட இலங்கை சாதிப் போராட்டங்களைக் கூடப் பேசாத இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரைகுறைகளை இப்போதே களையாவிட்டால் அவற்றின் விஷ வேர்கள் எமக்காக செத்துப் போனவர்களையும் நச்சாக்கிவிடும்.
உலகம் முழுவதுமுள்ள தமிழர்களின் ஒற்றுமை அவசரமானது. இல்ங்கை சவக்காடாக்கப் படுவதற்கிதிராக..!
ஆனால் ஒற்றுமைக்காகச் சமரசம் செய்துகொள்வதென்பது சரணடைவே!
kovai kuna on March 4, 2008 10:30 pm
//”பின் நவீனத்துவம் வலதுசாரி அரசியலுக்கும் பயன்படும், இடது சாரி அரசியலுக்கும் பயன்படும்”// priya.
it doesnt explain anything but confused the people, who doesn’t know about that thought. if anyone want to understand, what is post modernism, from the scientific theory of marxism that only wsws represent today, please read it carefully.
“பின் நவீனத்துவம் என்றால் என்ன?
ஊசி நுணியில் எத்தனை தேவதைகள் நடனம் ஆட முடியும் என்ற சமய குருக்களுக்குரிய குறைந்தபட்சம் ஒரு அர்த்தமற்ற விவாதத்தைத்தான் பின்நவீனத்தும் செய்து வந்திருக்கிறது என்ற நிலைப்பாட்டை நிரூபித்துக் காட்ட சோகலும் ப்ரிக்மொன்டும் போதுமான சாட்சியங்களை ஒன்று திரட்டியுள்ளார்கள். ஆனால், அதற்குள் இருப்பது அவ்வளவுதானா? பின்நவீனத்துவம் முட்டாள்த்தனமான ஒன்றாக மட்டுமா இருக்கிறது? பின்நவீனத்துவம் என்றால் என்ன? அந்த இயக்கத்தின் மூலங்கள் என்னவாக இருக்கின்றன?
« எனவே அதை முத்திரை குத்தி பார்ப்பது தேவையற்றது. மாறாக பின் நவீனத்துவம் என்பது ஒற்றை சிந்தனைப் போக்கல்ல, அதில் பல போக்குகள் உள்ளன, பல மாறுபட்ட பார்வைகள் உள்ளன என்பதினை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் » priya
“முதலாவதாக, விஞ்ஞானம் மற்றும் ஒவ்வொரு சிந்தனைத்துறையிலும் சார்புநிலைவாதத்தை அறிமுகப்படுத்தும் மற்றும் விளங்கிக்கொள்ளக் கூடிய ஒரு புறநிலை உண்மையினை மறுக்கும் பின்நவீனத்துவத்தின் பொதுவான போக்கினை ஒரு சிந்தனைப்பாடசாலை (பள்ளி) யாகத்தான் சரியாக இனம்காண்கிறார்கள். “
“சமூகவியல், இலக்கிய விமர்சனம், மொழியியல், கலாச்சார ஆய்வுகள் மற்றும் பல ஏனைய கல்விநெறிகளின் துறைகளில் குழப்பமான கோட்பாடுகளை ஆதரிக்கும் பொருட்டு நிரூபிக்கப்பட்ட, மதிப்புமிக்க இயற்கை விஞ்ஞானத்தின் கருத்துப்பாடுகளை இந்த அனைத்து புத்திஜீவிகளும் போலியான முறையில் உபயோகப்படுத்துகிறார்கள்.”
To read more: http://www.wsws.org/tamil/articles/2003/jan/100103_pm.shtml
mukunthan on March 4, 2008 10:42 pm
//”தட்சணாமருதமடு பகுதியில் உள்ள தமது வீடுகளைப் பார்ப்பதற்காகஇ உழவு இயந்திரம் ஒன்றில் சென்ற 4 சிவிலியன்கள் இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினரின் கிளேமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக”….// தேவை உடனடி அரசியற் தீர்வு.
yamuna rajendran on March 5, 2008 10:25 am
நண்பர்கள் நட்சத்திரன் ஜீவமுரளி அசோக்யோகன் நாவலன் ஸ்விஸ் ரவி போன்ற நான் முகமறிந்த நண்பர்கள் இந்த விவாதங்களில் பங்கேற்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நிச்சயமாக இவர்களது கருத்துக்கள் தொடர்பாக எனது எதிர்விணைகளை நாகரீகமாகவும் பொறுப்புடனும் முன்வைப்பேன்.
எனது சொந்த வாழ்வு பற்றிய ‘சவால்கள்’ அல்லாத கருத்து சார்ந்த கேள்விகளுக்கு மட்டும் ‘நிழல் மனிதர்களுக்கும்’ நான் பதிலளிப்பேன்.’நிழல் மனிதர்கள்’ அவர்களது சொந்த முகம் சாதிய வர்க்க அரசியல் நட்பு மற்றும் விவாதத்திற்கு உரியவர்களுடனான அவர்களது உறவின்தன்மை போன்றவற்றை அவர்கள் முன்வைக்காதவரை அவர்களது கேள்விகள் பற்றி நான் கிஞ்சிற்றும் அக்கறைப்பட வேண்டிய அவசியமில்லை.
ஷோபா சக்தியுடனோ அல்லது சுகனுடனோ எனக்கு எந்தச் சொந்த விவகாரமும் இருக்க அவசியமேயில்லை. கருத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்குமானால் ஏன் என் மீது தனிப்பட்ட குரோதங்களை வளர்த்துக் கொண்டே இருக்கிறீர்கள் எனவே அவர்களை நான் கேட்கிறேன்? குறைந்த பட்சம் அடுத்த முறை பார்க்கிறபோது ஒரு புன்னகையையாவது பறிமாறிக்கொள்ள முடியாத அளவில் ஏன் வெறுப்பைக் காவித்திரிகிறீர்கள் எனத் தான் கேட்கிறேன்?
உரையாட வாருங்கள். அல்லது அவதூறுகளைப் பரப்புவதையாவது நிறுத்திக் கொள்ளுங்கள்.
மேலாக நான் எனது இரணடரை வயதுக் குழந்தையை முழு நேரமும் பராமறிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. எனது எதிர்விணைகளுக்கான காலம் என்பது அதைப் பொறுத்தே அமையும்.ஆனால் நிச்சயமாகப் பொறுப்புடன் பதிலளிப்பேன். யமுனா ராஜேந்திரன
nithy on March 5, 2008 11:36 am
ஈழத்தின் வன்முறையினால் மனப்பிறழ்வுற்ற ஒரு நபர் தனது பெற்ற பெண் குழந்தையை கர்ப்பமாக்கியதனை, அப் பெண் குழந்தையின் கண்களில் ‘காதல்’ தெரிந்ததை எழுதிய ஷோபாசக்தி அந்தப் பெண்ணுக்கு ஒரு பெயரையும் சூட்டியிருந்தார். இப் பெயர் சூட்டல் தட்செயல் நிகழ்வே. ஆனால் சுவீசில் வாழும் ஒரு எழுத்தாளர்(!) தன் மகளின் பெயரை திட்டமிட்டு இந்தக் கதையின் கர்ப்பமாக்கப்பட்ட பெண்ணுக்கு சூட்டி தன்னை அவமானப்படுத்திவிட்டதாகவும் பழிவாங்கி விட்டதாகவும் ஷோபாசக்தி மீது கறுவிக் கொண்டு திரிந்தார். இந்நேரங்களில் இவ்சுவீஷ்காரார் ஷோபாசக்தி பற்றிய விமர்சனங்கள் மிக சகிக்க முடியாதவை. காது கொடுத்து கேட்க முடியாதவை. இன்று அந்த சுவீஷ்காரரே ஷோபாசக்தியைப் பற்றி புகழ்ச்சியாக எழுதுவது காலத்தின் கோலம்தான். ஷோபாசக்திக்கே இது புரியாத புதிர்தான்.
kanthan on March 5, 2008 11:49 am
அன்பர் ரவிக்கு, சந்தர்ப்பவாத எழுத்திற்கு நீங்கள் ஒரு உதாரணம். எதிரிக்கு எதிரி நண்பன். நேற்று எழுதியதை இன்று மறந்துவிடுகிறீர்கள். படைப்பை மாத்திரம் பார்க்கச் சொல்லும் நீங்கள் ஷோபாசக்தி பற்றி இப்படி எழுதியதற்கு விளக்கம் தரமுடியுமா?
//தேவா சோபாசக்தியிடம் இந்நூலை கைமாற்றிவிட்ட செய்தியைச் சொன்னபோது, ஒன்றை மட்டும் தேவாவிடம் சொல்லி வைத்தேன். இந்நூல் இப்போதைக்கு வெளிவரப் போவதில்லை என்பதே அது. இந்த 3-4 வருட இழுத்தடிப்பும் அதை நிருபித்துள்ளதாகவே நான் கருதுகிறேன்//
arasu on March 5, 2008 12:42 pm
//நான் ஏன் ‘ஷோ’வை ‘தலித் நகல் போலி’ என்கிறேன் என்பது தொடர்பாக சிறு விளக்கம் : ‘ஷோ’வினதும் சுகனதும் திருவிளையாடல்களின் பின் யார் ‘நிஜமான ‘தலித்’ யார் ‘தலித் அல்ல’ எனவே தெரியாமல் போகிற ஒரு சூழல் புகலிடத்தில் வந்துவிட்டது. தமது சொந்த ஏற்றங்களுக்கும், தமது இலக்கிய நோக்கங்களைச் சாதித்துக் கொள்ளவும், தமது வேஷங்களை மறைத்துக் கொள்ளவும் ‘தலித்’ எனபதனை இவர்கள் இருவரும் ஒரு முகமூடியாகப பாவிக்கிறார்கள் என்பதனால்தான் ‘ஷோ’வை நான் ‘தலித் நகல் போலி’ என்கிறேன்.//யமுனா ராஜேந்திரன
வெல்டன் யமுனா!
selvakumar on March 5, 2008 1:56 pm
இங்கே நடக்கும் சண்டைகளை பார்க்கும்போது எனக்கு வாந்தியே வருகின்றது. பொய்யர்களும் புரட்டல்கறர்களும் தீடிரென்று இப்போது களத்தினுள் குதிததுள்ளார்கள். நேற்று வரை சோபாவை திட்டித்தீர்த்த சுவிஸ் ரவி பரீஸ் நண்பர்கள் மேல் கொண்ட காழ்ப்புணர்ச்சியின் விளைவு சோபாவுக்கு கொடுக்கும் விருது. இங்கு பேர்லினில் சோபாவை திட்டித்தீர்க்கும் நம் ஜீவமுரளி செங்கள்ளு சித்தனோடு கொண்ட தீராப் பகையின் விளைவு சோபாவுக்கு கிடைத்த இரண்டாம் விருது. என்னையா புகலிட இலக்கிய உலகம். கந்தன் சொல்வதுபோல் “எதிரிக்கு எதிரி நண்பன் ” இதுதான் இவர்களின் சித்தாந்தம்.
moganathas on March 5, 2008 3:08 pm
//ஆக முரண்பாடுகளைக் கையாள்வதில் நாம் யாரும் முன்மாதிரியாக இல்லை என்ற புலம்பெயர் சூழலுக்குள் நாம் விடப்பட்டிருக்கிறோம் என்று சொல்லத் தோன்றுகிறது. -ரவி//
தம்பி ரவி உங்களைவிடவா? இவ்விசயத்தில் நீங்கள் ஒரு கலாநிதியல்லவா. பயிற்சிப் பட்டறைகள் தொடங்கலாமே.
Thevaraja on March 5, 2008 9:30 pm
ரவி பயிற்சிப் பட்டறை தொடங்க தகதியானவரே. ரவியின் எழுத்தில் சமூகப் பொறுப்பு தெரிகிறது. ரவியினுடைய ஏனைய விமாசனங்களும் படித்திருக்கிறேன். அநேக விடயங்களில் உடன்பட முடிகிறது. தக்சனின் பார்வையும் விசாலமானது. பலரும் பின்னூட்டங்களில் சும்மா அலம்புகிறார்கள
Nathan on March 6, 2008 6:30 am
“எதிரிக்கு எதிரி நண்பன் ” இதுதான் இவர்களின் சித்தாந்தம். இலங்கை அரசோடு உறவு வைத்துக் கொள்வது போல.
Rathan on March 6, 2008 9:55 am
//ரவி பயிற்சிப் பட்டறை தொடங்க தகதியானவரே. ரவியின் எழுத்தில் சமூகப் பொறுப்பு தெரிகிறது// புலத்தமிழர் அப்படி என்னதான் பாவம் செய்தார்களோ! கடவுள்காக்க.
//ஈழத்தின் வன்முறையினால் மனப் பிறழ்வுற்ற ஒரு நபர் தனது பெற்ற பெண்குழந்தையை கரப்பமாக்கியதனை அப் பெண்குழந்தையின் கண்களில் ‘காதல்’ தெரிந்ததை ….புகலிட தமிழர் வாழ்வில் ‘இல்லாத கூட்டுக் கலவி’ பற்றி இவர் கதை எழுதினார். குடிப்பதற்கு என்ன வேண்டும் எனும் விமானப் பணிப்பெண்ணிடம் ‘முலைப்பால் வேண்டும்’ என அவர் கேட்கிற ஒரு ‘புரட்சிகரமான’ கவிதை….// இவற்றுக்கு வக்காலத்து வாங்குவதன் மூலம் ரவியின் எழுத்தில் சமூகப் பொறுப்பு தெரிகிறது.
//தக்சனின் பார்வையும் விசாலமானது. இவைற்றை எதிர்ப்வர்கள் பின்னூட்டங்களில் சும்மா அலம்புகிறார்கள்.// “ஒருவரின் நண்பர்களை வைத்து அவரின் நடத்தையை அறியலாம் என்பார்கள். … சொல்லத் தேவையில்லை.
thiruma on March 6, 2008 10:47 am
பிரான்சில் புலிகளால் படுகொலை செய்யப்பட்டவர் சபாலிங்கம். இவர் கடைசியாக சுவிசில் நடந்த இலக்கிய சந்திப்பில் கலந்து கொண்டவர். இதிலெடுக்கப்பட்ட வீடியோ கசெற் அந்த நேரம் புலிகளுக்கு இந்த … கொடுக்கப்பட்டதாக கதைக்கப்பட்டது. இது சம்பந்தமாக தேனீயிலும் பலபேர் எழுதினார்கள். அந்த வீடியோ கசெற்றுக்கு என்ன நடந்தது என்று. இந்த …பதில் கூறாமல் இருக்கிறார். இன்று இலக்கிய சந்திப்பின் “ஏகபிரதிநிதிகளின்” ஒருவரும் புலிகளை எதிர்ப்பதையே முழு நேர ஊழியமாக கொண்டிருப்பருமான … இந்தவிடயத்தில் ஏன் மெளனமாக இருக்கிறர்ர். இது அவருக்கு வன்முறையாகத் மனித உரிமை மீறலாகத் தெரியவில்லையா. பழைய இயக்கக்க கூட்டாளி என்பதால் காப்பாற்ற நினைக்கிறாரா?. முடிந்தால் பதில் சொல்லட்டும்.
ranjan on March 6, 2008 11:21 am
அது சரி தேசம் - நான் ஒரு கட்டுரை எனது சொந்தப் பெயரில் ரதன் பற்றியும் அசோக் (துடைப்பான்) பற்றியும் எழுதினால் போடுவீர்களோ? போட்டால் தெரியும் இவர்களின் ….. ஏன்னய்யா தெரியாமத்தான் கேட்கிறேன் சோபாசக்தி அப்படி என்ன தான் செய்துபோட்டார். அவர் அப்படி செய்வதற்கு நீங்கள் எல்லாம் இளிச்சவாயர்கள் என்ற அர்த்தமா?? சோபாசக்தி யாருக்காவது சேர்ட்டைப் பிடித்து அடித்தா? அல்லது …?
உங்களுக்கு என்னய்யா தகுதி இருக்கு இப்படி மற்றவங்களை அடித்து அடித்து பிழைப்பு நடத்தும் நீங்கள் முரளி, ரவி யமுனாராஜேந்திரன், நட்சத்திரந்திரன் செவ்விந்தியன் ஆகியோர் சொந்தப் பெயரில் தானே வந்து எழுதியுள்ளார்கள் புறம்போக்குகளே உங்களால் உங்கள் முகத்தைப் பார்க்க முடிய வில்லையா?? அது சரி நிதி யாரு என்று எமக்கு தெரியும் வண்டவாளம் லாச்சப்பல்ல கப்பல் ஏறுது தெரியல்லையா?? நிதி நீர் ஒரு உண்மையான ஆள் என்றால் நேருக்கு நேர் விவாதத்திற்கு வருகிறீரா உமது சொந்தப்ப யெரில அப்போ நானும் எனது சொந்தப் பெயரில வாறன்.
அது சரி அசோக்கிற்கு லக்சுமியை ஒரு விவாதத்திற்கும் இழுக்காமல் இருக்க முடியாதுள்ளது போல் ஏன் அசோக் கலைச்வெசல்வன் ….. செய்தவற்றை நாமும் பட்டியல் இடுவோமா? சும்மா துள்ளாதையும் அசோக் உம்முடைய காழப்புணர்வுகளை நாம் கொட்ட வெளிக்கிட்டால் லாச்சப்பல் இல்லை உலகம் பூரா நாறும். மூடிக்கொண்டு இரும். இல்லை இப்ப சோபாசக்தி நாறுகிறதை விட கேவலாமா நீரும் நாறுவீர் பார்ப்போமா?? சவால்.
றஞ்சன்: தேசம் இவ்விமர்சனத்தை போட மாட்டீர்கள் என நினைக்கிறேன் காரணம் நீங்களம் அசோக்கும் ஒரே கூட்டு என்று பலர் கதைக்கிறார்கள். அசோக் பற்றி யாராவது எழுதினால் அதை நீங்கள் தடை செய்வதாகவும் கூறுகிறார்கள். அது உண்மையாயின் நீங்கள் போடமாட்டீர்கள
supan on March 6, 2008 11:48 am
தம்பி தவராசா பிழைகளை கண்டிக்க பழகிக்கொள்ளுங்கோ. நியாயப்படுத்தி நியாயப்படுத்தி நாம கண்டபலன் என்ன? நாட்டையே நாசப்படுத்திவிட்டோம்.இங்கையாவது நாம் திருந்தமாட்டோமா?
Rathan on March 6, 2008 1:04 pm
ரஞ்சன் வெறும் சவுன்டு மட்டும் விட்டு பிரயோசனமில்லை. திரு யமுனா சவால்விட்டவரெல்லோ. தான் வைத்த விமர்சனத்திற்கு சொந்த பெயரில் வந்து பதில் விமர்சனம் வைக்கச் சொல்லி. அப்போ பொத்திக்கொண்டு இருந்து விட்டு இப்பவந்து வாய்சவாடல் விடுகிறீர். ரதனை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அதே மாதிரி நீங்கள் யாரென்று எனக்கும் தெரியாது. இந்நிலையில் உங்கள் சவால் அர்த்தமற்றது. உங்கடை பட்டறை பாசறை இலக்கிய சந்திப்புக்கும் எனக்கும் தொடர்பில்லை. அவலென நினைத்து வெறும் உரலை இடிக்காதையும்.
Balu on March 6, 2008 1:12 pm
ரதன். உங்களது விடுதலை மீதான பற்றுதலை நான் மதிக்கிறேன். உங்கள் எழுத்துகளோடு சற்றேனும் உடன்பட முடியாவிட்டாலும். நீங்கள் விடுதலையின் மீதான பற்றுதலோடு பின்னூட்டமிடுகிறீர்கள். கண்டிக்கிறீர்கள். அதற்கு உங்களுக்கு பூரண உரிமம் உண்டு.
அதேவேளை மாற்று என்று சொல்ப்படுகிறவற்றயும் எதிர்மனநிலையை நீக்கி வாசிக்கலாமே. சோபாசக்தி மீது எல்லாரும் எறிய நீங்களும் புலிவாசலில் நின்று எறிகிறீர்கள். கற்கள் இருக்கின்றனதானே. எறியுங்கள். அதேநேரம் சோபாவின் எழுத்துகள் ஏதாவது படித்திருக்கிறீர்களா? கெரில்லா மற்றம் ம் நாவல். சிறுகதைகள்.. இப்படி படித்துக்கொண்டு நீங்கள் விமர்சிப்பது உங்களுக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது.. தொடர்ந்து எழுதுங்கள். தொடாந்து படியுங்கள்.
paappu on March 6, 2008 1:30 pm
பாபு அண்ணாச்சி, ஒரு மாதத்திற்கு 20 ஆயிரம் கதைப் புத்தகங்கள் இந்தியாவில் மட்டும் வெளிவருகிறதாம்.
ஆனந்த விகடனையும் கற்கண்டையும் வரிக்கு வரி படித்துத்தான் விமர்சிக்க வேண்டுமென்றில்லை.
பாலியல் வக்கிரங்களை எல்லாம் படைப்பாகும் ஒருவரின் படைப்பை பிள்ளைகுட்டிகளோடிருந்து படிக்கச் சொல்லும் நீங்கள் சமூகப் பொறுப்புள்ளவரா?
priya on March 6, 2008 1:33 pm
தேசம் அவதூறுகளை போட வேண்டுமென்றே அடம் பிடிக்கிறது. அசோக் பற்றி ரன்ஜன் எழுதியது ஆபாசமானது மட்டுமல்ல மிரட்டலுமாகும். இது கண்டிக்கபட வேண்டியது. நிதி என்பவரும் விதி விலக்கில்லை. இது மட்டுமல்ல யோக்கியர்களாக சொந்தப்பேரில் வரும் போது ‘ கருத்து’ சொல்பவர்களாகவும் புனை பெயர்களில் வரும் போது ஆதாரமில்லாத வதந்திகளை பரப்புவதும் தனி மனித தாக்குதலை தொடுப்பதும் கடமையாக கொண்ட அயோக்கியர்கள் பலர் அன்னியன் பட பாணியில் வலம் வருவதற்கு தேசம் களமமைத்து கொடுப்பது மிகவும் கண்டிக்க தக்க செயல்.
priya on March 6, 2008 2:24 pm
தனி மனித அவதூறுகளையும் புரளிகளையும் காழ்ப்புணர்வுகளையும் கொட்டும் அயோக்கியர்களுக்கு தேசம் பின்னூட்டம் என்ற பேரில் களமமைத்து கொடுப்பது தேசம் ஆசிரியர்களின் அரசியல் பார்வையையும் பொறுப்புணர்வையும் சந்தேகிக்க தூண்டுகிறது. தேசம் இதனை மீள் பரிசோதனைக்கிட்டு செல்லுமா அல்லது தொடர்ந்தும் சாக்கடைக்குள் செல்லுமா. தேசம் ஆசிரியர்களின் அளவு கோல் என்ன. இதனை பொறுப்புடன் பரிசீலிப்பது மூலம்தான் தேசத்தினை பற்றிய மதிப்பீட்டை வாசகர்கள் எடை போட முடியும். தேசநிர்வாகம் வெறும் ஜனனாயகம் என்ற போர்வையில் வாந்தி எடுப்பதை அனுமதிக்கிறதா. தேசம் தனதுநிலை பாட்டை தெளிவாக்கி அதனைநடைமுறை படுத்தாவிட்டால் சமூக உணர்வுள்ள கட்டுரையாளர்களையும் வாசகர்களையும் இழந்து முழுமையான் கொசிப் பத்திரிகையாக மாறும் காலம் சீக்கிரமில்லை.
santhanam on March 6, 2008 2:31 pm
சொக்கன், சிறுவன், பாபு என்ற பெயர்களில் தலீத் கூட்டத்திற்குப் பின்னர் லண்டன் குழு தொடக்கிவைத்த தனிநபர் தாக்குதல் தொடர்கிறது. சொந்த லாபத்திற்காக சமூகத்தையே வியாபரமாக்கும் ஒரு கூட்டத்திற்கு எல்லா வகையான தந்திரங்களும் அத்துப்படி. சண்டை என்றால் கத்தியைத் தூக்கிக் கொண்டு ஓடும் கூட்டம்.
Rathan on March 6, 2008 2:48 pm
நண்பர் பாலு. தேசம்நெற் பின்னூட்டமிட அனுமதிக்குது என்பதற்காக நான் திரு சோபாசக்தி மீது கல்லெறியவில்லை. சிறுவர் நலனில் அக்கறையுடையவர் போல் தமிழ்மொழி பெயர்ப்பான “குழந்தைப் போராளி” எனும் நாவலை முன்னின்று பதிப்பிக்கிறார். அதே அவர் “ஈழத்தின் வன்முறையினால் மனப் பிறழ்வுற்ற ஒரு நபர் தனது பெற்ற பெண்குழந்தையை கரப்பமாக்கியதனை அப் பெண் குழந்தையின் கண்களில் ‘காதல்’ தெரிந்ததாக” கதையெழுதியதாக அறியும் போது ஒரு சாரசரி மனிதனுக்கு அவர்பால் எப்படியான அபிப்பிராயம் ஏற்படும்? அதுதான் என் விமர்சனமாக பின்னூட்டமிட்டேன்.
நானும் மாற்று கருத்தென கதைக்கும் பலரை தனிப்பட்ட முறையில் கவனித்த போது சமூக வாழ்வில் ஏதாவது குழறுபடித்தனம் செய்பவராக சாரசரியான மனித நேர்மையற்றவராகத்தான் இருக்கிறார்கள். மனிதரில் யாரும் பரிபூரணர் இல்லை ஆனாலும் குறைந்த பட்ச சமூக நேர்மையாவது வேணும்.
நான் மாற்று கருத்தே இருக்க கூடாதென சொல்லவில்லை யதார்த்த உலக நடைமுறைக்கு ஒத்துவர கூடியதாக இருக்கவேணும். புலியை எதிர்ப்பவர்களை பாருங்கள் பலர் தமது தவறை மறைப்பதற்காகவே மாற்றுக்கருத்து மூகமுடியை போட்டுவிடுவார்கள்.
//அதேவேளை மாற்று என்று சொல்ப்படுகிறவற்றயும் எதிர்மனநிலையை நீக்கி வாசிக்கலாமே// நண்பரே மாற்று கருத்தென சொல்லிக் கொண்டு பல இணையங்கள் வானொலி புலம்பெயர்மண்ணில் இயங்குகின்றன. அதில் ஏதாவதொன்று தர்க்கரீதியில் யதார்த்த ரீதியில் எதாவது கருத்தை முன்வைக்கிறார்களா? நானும் இணையதளங்கள் பார்க்க தொடங்கிய காலப் பகுதியில் எல்லாவிதமான மாற்றுக் கருத்தென சொல்லிக் கொள்ளும் இணையங்களை எதிர் மனநிலையை நீக்கி பார்த்தேன். ஒன்றுகூட யதார்த்தரீதியில் கருத்தை முன்வைப்பதை காண முடியவில்லை காலப்போக்கில் அந்த இணையங்களை பார்க்கும் ஆர்வம் தானாக குறைந்துவிட்டது.
ashok on March 6, 2008 3:00 pm
அன்புள்ள றஞ்சனுக்கு வணக்கங்கள். உங்கள் எழுத்துக்கு என் வாழ்த்துக்கள். உங்களைப் போன்ற பலரது மிரட்டல்களையும் அவதூறுகளையும் கண்டுபழகியவன் நான். என்னைத் தெரிந்த ஆயிரம் நண்பர்கள் தோழர்கள் உலகம் பூராகவும் உள்ளனர். நான் அரசியல் ரீதியில் முரண்கொண்ட பலபேர் பிரான்சிலும் உலகம் பூராகவும் பரவியுள்ளனர். உங்களின் அவதூறுகளை என் அரசியல் எதிரிகளும் கூட ஏற்றுக்க கொள்ளமாட்டார்கள். இந்தத் நண்பர்களின் தோழர்களின் என்னைப் பற்றிய மதிப்பீடே எனக்கு முக்கியமாகின்றது.
நான் எங்கும் எப்பொழுதும் சுயவிமர்சனத்தோடு என்வாழ்வை கொண்டு நடத்துபவன். வன்முறைசார்ந்த இயக்கம் ஒன்றொடு சிலகாலத்தை கழித்தவன் என்ற வகையில் அதன் மீதான விமர்சனத்தோடும் என் சுயவிமர்சனதிலிருந்தும் என்னை உருவாக்கிக் கொண்டவன். இன்று இவ் விமர்சனங்களுக்கூடாக அனைத்து வன்முறைகளுக்கெதிராகவும் ஐனநாயகத்தை கோரியும் மனித உரிமைகள் மீதான அக்கறைகளோடும் செல்பவன்.
சோபாசக்தியோடு என் முரண்பாடு என்பது அரசியல் சமூகம் சார்ந்த அவரது நடவடிக்ககைகளும் செயற்பாடுகளும் தொடர்பானவை. சோபாசக்தியின் ஆரம்பகால சிறுகதைகளின் தீவிர வாசகன் நான். இது சோபாசக்திக்கும் தெரியும். எப்பொழுது சோபாசக்தி தன் பழைய அரசியல் சாதூரியங்களையும் கபடத்தனங்களையும் புகலிட அரசியல் இலக்கிய தளத்தில் காட்ட முனைந்தாரோ அன்றுலிருந்து சோபாசக்தியோடு என் முரண்பாடு தொடங்குகின்றது. சோபாசக்தி எழுத்து வல்லமைகொண்ட சாதூரியம் மிக்க கபடத்தனமான எழுத்தாளன் என்ற என் கணிப்பீட்டில் வரும் “எழுத்து வல்லமை கொண்ட” என்ற பெருமையை நான் எப்பொழுதும் எங்கும் மறுதலிப்பவன் அல்ல.
-அசோக்-
ranjan on March 6, 2008 4:20 pm
//சோபாசக்தியின் ஆரம்பகால சிறுகதைகளின் தீவிர வாசகன் நான். இது சோபாசக்திக்கும் தெரியும்.
அப்படி வாரும்// அசோக்
உம்மை எல்லோருக்கும் தெரியும் அதாவது உலகம் பூரா தெரியும். நீர் செய்த செய்கின்ற பல ஜாலமாலங்களினால் இப்போ பலர் உம்மைப்பற்றி அறிந்து விலகியிருப்பதும் தெரியும். உம்முடன் உறவு வைத்தவர்கள் எல்லாம் இப்போ சோபாசக்தி பக்கம் என்பதும் தெரியும். அதனால் தான் நீர் பொறாமை பொங்கி பிரவாகம் எடுத்து புலம்புறீர்.
ஏதற்கெடுத்தாலும் நான் மனித உரிமைவாதி மண்ணாங்கட்டி என்று உங்களுக்கே ஒரு பெயரை நீங்களே சூட்டிக்கொண்டு திரிகின்றீர்கள். ஆனந்தசங்கரி ஒரு லட்சம் பெற்றமாதிரி மனித உரிமைவாதி என்று சொல்லி காசு பெறலாம் என்ற யோசனையோ பரவாயில்லை. நல்ல பிழைப்புத்தான். உங்களுக்கு சோபாசக்தி பற்றி எழுத என்ன இருக்கிறது. நீங்கள் எப்படி பொய்ப் பிரச்சாரங்கள் செய்கிறீர்களோ இல்லை சுத்துமாத்துக்கள் என்று பல வேலைகளிளில் ஈடுபட்டு அணிசேருகின்றீர்களோ அதே போல் தான் சோபாவும் தனது வேலையை கச்சிதமாக செய்கின்றான். இதில் என்ன தவறு.
உண்மையில் நீர் நேர்மையான ஆளாக இருந்திருந்தால் ஞானம் தான் சொல்லி உம்மை யாரோ ஒருத்தன் அடிக்க வந்ததாகவும் (சுட வந்ததாகவும்) பொய்ப்புரளி விட்டு பலரை நோட்டீஸ் அடிக்க வைத்து விட்டு இப்போ அதே அடிக்க வந்தவருடன் அல்லது உம்மை சுட வந்தவருடன் உறவு கொண்டாடுகிறீர். அது எப்படி இப்படி சோபா செய்யவேயில்லையே.
எக்ஸில் உயிர்நிழல் பிரச்சினையில் சோபா மட்டுமா தலையைக் கொடுத்தார். ஏன் நீர் கொடுக்கவில்லை. விஜியை பேசியதற்காக கிருஸ்ணராஜா பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவில்லை என்று சொல்லும் அந்தக் கூட்டத்தில் நானும் தானே இருந்தேன். கலைச்செல்வன் அசோக் கூறித்தான் நான் விஜியை பேசினேன் என்று பகிரங்கமாக கூட்டத்தில் மன்னிப்பு கேட்டதை மறந்து விட்டீரா? அசோக் கலைச்செல்வன் இறந்துவிட்டார். ஆனா நான் இன்னும் இறக்கவில்லை. ஆகா இது தான் அசோக் என்கிறீரா அல்லது இது தான் உங்களுடைய வேலை என்கிறீரா.
இது எப்படி இது தான் தாஜா பண்ணுவது என்று சொல்லுவது எல்லா விவாதங்களிலும் சொந்தப்பெயரில வராத அசோக் இன்று பெரிசா சோபாசக்தியின்ர விவாதத்திற்கு மட்டும் நல்ல முகமனுடன் அசோக் என்று வாறீர் நல்லாத் தான் புளுடா விடுறீர் மாப்பு மாப்பு நானும் மட்டக்களப்பான் தான். மாப்பு
றஞ்சன
ranjan on March 6, 2008 4:34 pm
//அப்போ பொத்திக்கொண்டு இருந்து விட்டு இப்பவந்து வாய்சவாடல் விடுகிறீர். ரதனை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அதே மாதிரி நீங்கள் யாரென்று எனக்கும் தெரியாது. இந்நிலையில் உங்கள் சவால் அர்த்தமற்றது. உங்கடை பட்டறை பாசறை இலக்கிய சந்திப்புக்கும் எனக்கும் தொடர்பில்லை. அவலென நினைத்து வெறும் உரலை இடிக்காதையும்//
ரதன் நீரும் என் விடயத்தில் பொத்திக்கொண்டு இரும் இதை அசோக்கிட்ட கேட்க வேண்டிய கேள்வி இலக்கியச் சந்திப்பு பட்டறை பாசறை என்று என்னிடம் இல்லை எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமேயில்லை எல்லாத்தைக்கையும் ஏன் ஐயா ரதன் தலையைக் கொடுக்கிறா?? ஐயோடா சாம
ranjan on March 6, 2008 4:42 pm
//தேசம் அவதூறுகளை போட வேண்டுமென்றே அடம் பிடிக்கிறது. அசோக் பற்றி ரன்ஜன் எழுதியது ஆபாசமானது மட்டுமல்ல மிரட்டலுமாகும். இது கண்டிக்கபட வேண்டியது. நிதி என்பவரும் விதி விலக்கில்லை. இது மட்டுமல்ல யோக்கியர்களாக சொந்தப்பேரில் வரும் போது ‘ கருத்து’ சொல்பவர்களாகவும் புனை பெயர்களில் வரும் போது ஆதாரமில்லாத வதந்திகளை பரப்புவதும் தனி மனித தாக்குதலை தொடுப்பதும் கடமையாக கொண்ட அயோக்கியர்கள் பலர் அன்னியன் பட பாணியில் வலம் வருவதற்கு தேசம் களமமைத்து கொடுப்பது மிகவும் கண்டிக்க தக்க செயல்//
பிரியா என்ன அசோக்கிற்கு வக்காளத்தா / சோபாசக்தி பற்றி அசோக் வாய்க்கு வந்த மாதிரி எழுதலாம் ஆனா நாங்க அசோக்கை பற்றி எழுதக்கூடாது. பாருடா யாழ் மேலாதிக்கத்தை சூப்பர்.

thanks

http://thesamnet.co.uk/?p=539

No comments:

Post a Comment