மாற்றம் என்பது மாறாதது; இங்கே தோழமைதேடி...

Dec 25, 2009

ஐரோப்பிய தமிழ்பச்சோந்திகள் தலைவர் நாவலன் அவர்களே!

ஐரோப்பிய தமிழ்பச்சோந்திகள் தலைவர் நாவலன் அவர்களே!

Posted December 25, 2009 by VP

ஐரோப்பிய தமிழ்பச்சோந்திகள் தலைவர் நாவலன் அவர்களே!

-நம்பிக்கையுடன் பிரபாகரன்

சபாநாவலன் அவர்களே, உங்களின் சில கட்டுரைகளை வாசித்தவற்றிலிருந்து ஒரு மார்க்சிய வாதி என்ற முறையில் சில கருத்துக்களை தெரிவிக்கவிரும்புகிறேன்.

1. மார்க்சியம்=புரட்சி, புரட்சி=மார்க்சியம் என்ற அகநிலை பொருள்முதல்வாதப் பார்வையை கைவிடுங்கள்.

2. புரட்சிக்கான அணுகுமுறைகளை முன்வைக்க முடியாத சமூக வரலாற்றுக்கட்டங்களை அங்கீகரியுங்கள்.

3.உங்கள் கருத்துக்கள் 1960 க்கும் பொருந்தும் .80 க்கும் பொருந்தும்,2020 க்கும் மாறாது. .ஏனெனில் அதில் இயங்கியல் இல்லை.ஆனால் உலகமும் ஈழநிலைமைகளும் இயங்கியலையே கொண்டிருக்கின்றன.

4. மேலும் நமக்கு அப்பால் புறவயமாக போக்கு எடுத்திருக்கும் ஈழவிடுதலை என்ற எதார்த்தத்தை அங்கீகரிக்காததால் பொருள்முதல்வாதப் பார்வையையே கைவிடுகிறீர்கள்.அதற்க்கு மாற்றாக புரட்சியை அகவயமாக முன்வைத்து, புறத்தை அங்கீகரிக்கும் புறநிலை கருத்துமுதல்வாதியாகக் கூட இல்லாமல்,எண்ணங்களிலிருந்து(புரட்சி) எதார்த்தத்தை பார்க்கும் அகநிலைக் கருத்துமுதல்வாதியாகவே இருக்கிறீர்கள்.

5 மார்க்சியத்தில் எதார்த்தத்தை விளங்கி கொள்ளவே சமன்பாடுகள் உள்ளன.மாற்றுவதற்கு சமன்பாடுகள் இல்லை. அப்படி இருப்பதாக யார் கருதினாலும் அது மானிடவிடுதலைவரை நடைமுறைச் சோதனைக்கு உட்பட்டதுதான்.புரட்சி என்பது அத்தகைய சமன்பாடு அல்ல. புரட்சி என்பது தவிர்க்க முடியாத விதி அல்ல. அது இடம் காலம் சூழல் சார்ந்த வாய்ப்பு.இந்த வாய்ப்பு 19 ம்நூற்றாண்டில் ஐரோப்பா முழுவதும் இருந்தது.அதன் பிறகு ஐரோப்பா தவிர்த்த பிற பகுதிகளில் இருந்தது. தற்போது பொதுப்போக்காக இல்லாமல், தனிச்சிறப்பு கொண்ட வாய்ப்பாக உள்ளது.மீண்டும் நினைவு படுத்துகிறேன்,19 ம் நூற்றாண்டிலிருந்து புரட்சி ஒரு வாய்ப்பாகவே இருந்துவருகிறது,விதியாக அல்ல.

எனவே இலங்கையில் மற்ற நாடுகளில் அல்லாத தனிச்சிறப்பான புரட்சிக்கான வாய்க்ப்புகள் இருப்பதை நீங்கள் நிரூபிக்கவேண்டும். அப்புரட்சி அண்மையானதகவும்,ஈழ மக்களின் உடனடி இன விடுதலைக்கு அண்மித்து இருப்பதையும் நிரூபிக்கவேண்டும்.இவையெல்லாம் முடியாவிட்டால் ஈழவிடுதலையே அம்மக்களின் தீர்வு என முடிவு செய்து அதற்க்கு களம் இறங்கவேண்டும்.நம்பிக்கையுடன் பிரபாகரன்.(praba.k865@gmail.com

No comments:

Post a Comment