சேரனும் அவரது மைத்துனர் விக்கினேஸ்வரனும், சிவகுமாரும் மே 18 இன் முன்னான தமிழ் ஈழகட்சி முலம் புரட்சிகரச் சக்திகளை சிதைத்தவர்கள்
புலிகளுக்கு மிக நெருக்கமாகச் சித்தாந்த முண்டுகொடுத்துப் புரட்சிகரச் சக்திகளை இக் குடும்பம் சிதைத்ததென்பதுதாம் உண்மை. சேரனும் அவரது மைத்துனர் விக்கினேஸ்வரனும் தூண்டில் சஞ்சிகையைச் சிதைத்தவர்களில் முதன்மையானவர்கள் என்றே கருதுகிறேன். இது, குறித்து மேலுஞ்சிலவற்றைச் சொல்வது இன்றைக்கு அவசியமானதே!
1988 இல் ஜேர்மனியில் தென்னாசிய நிறுவனத்தின் சார்பில் வெளியான தூண்டில் சஞ்சிகையின் “உண்மைகளைச் சொல்லுதல்” எனும் போக்கிலிருந்து அது புரட்சிகரமான கருத்துக்களை உள்வாங்க முனைந்தபோது, இதைக்கண்ட புலிகள் தமது இயக்க இருப்புக்கு ஆட்டம் கொடுக்கும் அணிவுருவாவதைத் தடுப்பதற்காக, மேற்கூறிய விக்னேஸ்வரன், சேரன், சிவகுமார் கூட்டைப் பயன்படுத்தித் தூண்டிலில் பிரஜைகள் எனும் புனைபெயரில் தொடர் உரையாடலை நிகழ்த்தினார்கள்.
அது, அப்பட்டமாகப் புலிக்கு ஆதரவான தளத்தை நிறுவுவதற்கும், தூண்டிலைப் புலிகள் உள்வாங்குவதற்கும், அதன் வாசகர்களைப் புரட்சிகர எண்ணங்களிலிருந்து திசை திருப்பிப் புலிகளது தேசியவாதத்துக்குச் சார்பானதாக மாற்ற முனைந்தார்கள். இதை அன்றைக்குப் பல தூண்டில் வாசகர்கள் அம்பலப்படுத்தினார்கள். குறிப்பாக வீ.நடராஜன் மிகச் சரியாகவே இதை இனங்கண்டார்.
இப்படியான பல மோசடிகளை இன்றும் நாம் பல தளங்களில் இனங்காணமுடியும். புலிகளது குறுந்தேசியவாதத்துக்குச் சித்தாந்த விளக்கமளிக்கப் பலர் புரட்சிகரச் சக்திகளாகத்தம்மை இனம்காட்டிப் புரட்சிகரச் சூழலை இல்லாதாக்குவது குறித்து, நிறையக் கதையாடல்கள் வருகிறது. இதில், யாரை நம்பி யாரோடு மக்கள் விடுதலைக்காகத் தோழமை உறவு கொள்ளமுடியும்?
புரட்சிகரச் சக்திகளையெல்லாம் உதிரிகளாக்கிய புலிகள், இன்றும் தமது கைவரிசையைக் காட்டியே வருகிறார்கள் என்பதற்கு புலம் பெயர் சூழலில் மாற்றுக் கருத்தாளர்களின் மூன்றாவது அணிச் சூழல் நல்ல உதாரணம்.
நட்ஷத்திரன் செவ்விந்தியனின் தகவல்களில் உண்மைகள் நிறைந்தே இருக்கிறது. சேரன் குடும்பம் ஐக்கிய இலங்கைப்புரட்சிக்கு எதிரான சதிகாரக் குடும்பம் என்பது உண்மை.
சேரன், விக்கினேஸ்வரன், சிவகுமார் போன்றவர்கள் புலிகளது பல ஆயிரம் கொலைகளுக்கு உடந்தையானவர்கள் மட்டுமல்ல, ஐக்கிய இலங்கைக்கான சோசலிசப் புரட்சிக்குக் குறுக்கே நின்று புலிகளது அந்நியச் சேவைக்குச் சித்தாந்த வலுக்கொடுத்தவர்கள். எனவே, இவர்கள் புலிகளுக்கு விசுவாசகக் காரியமாற்றியதென்பது, மறைமுகமாக அந்நியத் தேசங்களது நலனை இலங்கையில் அறுவடைசெய்ய அழிவு யுத்தத்தைத் தமிழீழத்தின் பெயரால் செய்ய உடந்தையான மக்கள் விரோதிகளே எனக் குற்றஞ்சாட்டுவது அவசியமானது.
எவரொருவர் இங்ஙனம், நமது மக்களுக்கு விரோதமான இந்தத் “தமிழீழ”அழிவு யுத்தத்துக்கு உடந்தையாக இருந்தாரோ-அவர் மக்கள் விரோதியே. ஏனெனில், இன்றுவரை இலட்சம் மக்கள் சாவதற்கான சித்தாந்தவலுவைச் செய்து, மக்கள் விடுதலையை அந்நியச் சக்திகளுக்குக் காட்டிக்கொடுத்தும், புலிகள் மூலமாக அந்நியத் தேசங்களுக்கு ஏவல் நாய்களாக நமது மக்களது குழந்தைகளை உருவாக்கியும், இன்று கொன்று குவிப்பதற்கும், துரோகிகளாக அழிப்பதற்கும் இவர்கள் உடந்தையானவர்கள்.
இவர்கள் குறித்துமட்டமல்ல, புலம்பெயர் சூழலில் இங்ஙனம் பலர் புரட்சிகரக் கருத்துக்களோடு உலா வருகிறார்கள். இவர்களில்பலர் புரட்சிகரச் சூழலை அழித்துப் புலிக்கு விசுவாசமாகக் காரியமாற்றுவதைத் தொடர்ந்து அம்பலப்படுத்துவது அவசியம்.
இதை நான் தொடர்வேன்.
ப.வி.ஸ்ரீரங்கன்
புதியதோர் உலகம் – PUTHIYATHOR ULAGAM
15 years ago
No comments:
Post a Comment