மாற்றம் என்பது மாறாதது; இங்கே தோழமைதேடி...

Dec 24, 2009

அவரை பின் தொடருகிறீர்களா?

# solan on December 14, 2009 3:28 pm

வேடிக்கையான வீயூகம் முன்னைநாள் சுவிஷ் புலிகளின் பொறுப்பாளர் சூத்திரதாரி சபாலிங்கம் கொலையின் முரலியும் புளட்டின் உள்முரண்பாடும் பதவிமோகத்தால் வெளியேறி தங்களது எழுத்தாற்றலால் புளட்டை உடைத்தவள்ளல்கள் சேர்ந்து வியூகம்.
# கேதீஸ்வரன் on December 14, 2009 3:35 pm

ஜனநாயகபுராணம்…. மாற்றுக்கருத்துப்புராணம்…. இலக்கியபுராணம்… பெண்ணியப்ப்புராணம்… புரட்சிகரப்புராணம்… மனிதநேயப்புராணம்.. மக்கள் போராட்டப்புராணம்… என்ற வரிசையில் வந்தவர்கள் எல்லோரும் எப்படி தம் கொள்கைகளில் ‘வழுவாது’ விவேகமாக வியூகங்கள் அமைத்து நின்றனரோ அப்படித்தான் இந்த புது மே 18 புராணம்
எழுத உங்களுக்கு உரிமையுண்டு. ஆனால் அதை ஏற்க நாங்கள் தயாராக இல்லை.
நன்றி
வணக்கம்.
# meerabharathy on December 14, 2009 4:36 pm

நண்பர்களே! நமது தவறுகளுக்கு அடிப்படையாக மூன்று காரணங்கள் இருக்கின்றன…
முதலவாது… சூழல்…
இரண்டாவது… கோட்பாடு அல்லது கருத்தாக்க புரிதலின்மை…
முன்றாவது… தனிநபர் ஆளுமை அல்லது ஆற்றல்…

நமது சுழலே நம்மை செயற்பட துண்டுகின்றது… இச் செயற்பாட்டிற்கு சரியாக கோட்பாடு அல்லது கருத்தடிப்படையிலான வடிகாட்டல் இருக்குமாயின்…ஒழுங்கான பாதையில் செயற்படலாம்… ஒழுங்கான முறையான கோட்பாடோ அல்லது கருத்தாக்கம் இல்லாமலிருப்பினும்… செயற்படுபவர் தன்னளவில் தனது ஆற்றல் மற்றும் ஆளுமையை புரிந்து நேர்மையாக செயற்படுபவராக இருப்பின் அவரது செயற்பாட்டில் தவறுகள் இருப்பினும் தொடர்ச்சியான சுய/விமர்சன செயற்பாடுகள் மூலம் சரிசெய்யலாம்….

ஆனால் நாம் சரியாக கோட்பாடுகளுமின்றி நம்மைப் பற்றிய புரிதலுமின்றி சுழ்நிலையின் கைதிகளாக செயற்படுகின்றோம்…. மே 18 இயக்கத்தின் செயற்பாடு அவசியமாயினும்… செயற்படுவோர்களை ஆதரிக்காதுவடினும் தடையாக இல்லாதிருப்பது நல்லது… ஆனாலும் மீள மீள மனிதா;களுக்கு எதிராக போகும் சாத்தியம் இருப்பின் அதை ஆரம்பத்திலையே சுட்டிக்காட்டுவதும் விமர்சிப்பதும் சமூகத்தில் அக்கறையுள்ளவர்களது பொறுப்பாகும்…

இந்தபடிப்படையில் மே 18 இயக்கமானது சூழ்நிலையினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிறப்பும் ஒரு ரீயாக்கிடிவான செயற்பாடாகவே பார்க்கின்றேன்… மே 18 இயக்கம் என்று ஆரம்பிப்பதே கடந்தகால பல்வேறு இயஙக்கங்களின் பெயர்களின் பாதிப்பபைக் கொண்டுள்ளது என்பதை புரியலாம்…மேலும் விடுதலைப் புலிகளின் செய்பாடுகளுடனான முறிவை காத்திரமாக ஏற்படுத்தாமல் அவர்களது முடிவிலிருந்து தொடங்குவது… அதன் தொடர்ச்சியாகவே கருதப்படும்…. இது கவனிக்கப்படவேண்டிய ஒரு விடயம்….

ஜான் மாஸ்டர் அவர்கள் திறமையாக கோட்பாடுகளை முன்வைக்கக் கூடியவர் என்பது நாம் ;அறிந்தது…அவரது வாதத்திறமை மட்டும் அவர் முன்வைக்கும் கோட்பாட்டை நியாயப்படுத்தி விடாது… சரியாகதாகவும் மாற்றிவிடாது… அவர்கள் கூறியது போலர் இது தொடர் விவாதத்திற்கு உரியது…

மேலும் தனிநபர் செய்பாடு தொடா;பாக நாம் மேலும் கவனமாக பிரக்ஞையுடன் இருப்பது நல்லது….இந்த ;அக்கறை ஒழுங்கு செய்பவர்களில் இருப்பதாக தெரியவில்லை…குறிப்பாக நிவேதா அவர்கள் முன்வைத்த குறைபாடு….மேலும் ஜனான் மாஸ்டரும் மே 18 இயக்கத்தை ஓழுங்கு செய்பவர்களும் தங்களது கடந்தகால தனிநபர் மற்றும் கட்சி அல்லது இயக்கம் சார்ந்த செயற்பாடுகள் தொடர்பான சுய/விமர்சனங்களை வெளிப்படையாக இங்கு முன்வைப்பது ஆராக்கியமான முன்னோக்கிய செயற்பாட்டிற்கு வழிகோலாகும்…குறிப்பாக ஏன் கட்சி அல்லது இயக்கத்திலிருந்து விலகினார்கள்…அதற்காக அவர்கள் முன்வைத்த விமர்சனங்கள் என்ன..இது போன்ற பல விடயங்கள் வெளிப்படையாக கதைக்கப்பட வேண்டும்…சொந்தப் பெயர்களில் முன்வைப்பது உகந்தது…இதைவிடுத்த மனிதர்களின் பின்னனால் பிற மனிதர்கள் தொடர்பாக கதைப்பதும் விமர்சனங்கள் முன்வைப்பதும் ஆரோக்கியமானதல்ல…

இதை மே 18 இயக்கத்திலுள்ளவர்கள் கவனத்தில் கொள்வார்கள் என நம்புகின்றேன்… தொடர்ந்தும் உரையாடுவோம்…
நன்றி- மீராபாரதி
# ravi on December 14, 2009 4:40 pm

தலைவன் இல்லை என்றதும் எல்லாரும் வேட்டக்காரராய் வெளிக்கிட்டிட்டினம்
# ஆனந்தன் on December 15, 2009 12:39 am

ப.வி.ஸ்ரீரங்கன்!
எப்போதுமே வல வல..கொல கொலா… என அர்த்தமற்றதும். உண்மையற்றதுமான புனைவுகளையும், கற்பனைகளையும் மட்டுமே கொட்டிவருவதை ஒரு வேலையாகவே வைத்திருக்கிறீரா? சும்மா.. ஆய்வு மண்ணாங்கட்டி எல்லாம் செய்துவருவதாக கூறுகிறீரே எங்கே இது பற்றிய ஆய்வை செய்திருக்கிறீர்… உறுப்படியாக இந்த அவதூறுகளுக்கும், அபத்தங்களுக்கும் ஏதாவது சிறு ஆதாரத்தையாவது தர உம்மால் முடிகிறதா..?

மாக்சியத்தின் பேரால் இருக்கின்ற அனைத்து தோழமை சக்திகளையும் அநாவசியமான அவதூறு பரப்புவதன் மூலம் மேலும் மேலும் இடதுசாரி ஐக்கியத்துக்கு வஞ்சகம் விளைவிக்கிறீரே. முடிந்தால் உமது கற்பனைகளை பொலிவூட் சினிமாவில் வில்லும்… அங்கு உம்மைப் போன்றவர்களு்ககு இப்போது கிராக்கி அதிகம்.இதில் இளந் தலைமுறையினர் உமது பொய்ப்பரப்புரையை வேறு பின்பற்றவேண்டுமா..? அடப்பாவி…. முடிந்தால் ஐரோப்பாவில் உம்மைப்போன்றே வெறும் தனிநபர்களை மட்டுமே சொறிந்துகொண்டு மாக்சிய பூச்சாண்டி காட்டும் இன்னும் சில வகையறாக்களுக்கும் சேர்த்துத் தான் கூறுகிறேன். முடிந்தால் உம்மைப் போன்றோர் ஐந்தே ஐந்து பேரை வைத்து ஒரு கூட்டமாவது போட்டு காட்டப்பா… இத்தனை காலமும் தனிநபர்களில் குற்றம் தேடுவதும், கட்டுக்கதைகளைப் புனைவதையும் அதனை மாக்சியத்தின் பேரால் பரப்புவதையும் கொஞ்சம் நிறுத்தி சரியான அரசியல் திசைவழியை நோக்கி போப்பா… நாங்களும் கூட வாறம்.. புரட்சிகர மாற்றத்துக்கான தேவை என்றும் சமூகத்தில் இருக்கிறது.

வாழ்நாள் முழுவதும் வெறும் சேறுபூசித்திரிகின்ற அரசியலுக்காக உம்முடைய வாழ்நாளை வீணப்படிதில் ஒன்றும் பிரயோசனமில்லை. புரட்சிகரப் பயணம் நெடியது. அரசியல் எதிரிகளை சரியாக அடையாளம் காண். அந்த சக்திகளுக்கு எதிராக சேர்ந்து போராட அறைகூவுங்கள். பூர்ஷ்வா சக்திகளைவிட அதிகமான பிளவுகளையும், பிளவுகளுக்குள் பிளவுகளையும் ஏன் மாக்சிய சக்திகள் கண்டு வருகிறார்கள் என்பது பற்றி ஒரு ஆய்வு செய்தீரென்றால் அது பலருக்கும் பிரயோசனப்படும்.
# Jeyabalan T on December 15, 2009 1:48 am

பிரபாவிலும் பார்க்க கே பி யர் பரவாயில்லை என்றால் கேபி இன்ர பக்தர் என்றதோ? மகிந்தவின்ர வாக்கு எண்ணிக்கையைக் குறைக்க செகராவுக்கு வோட்போட்டால் சேகராவின்ர பக்தர் என்று சொல்றதோ.

அரிவாள் சுத்தியல் கொண்டு சிறிரங்கன் ஜிங்கு ஜிங்கு என்று என்ன ஆடுறார். கீ போட்டில மார்க்ஸிசப் புரட்சி செய்யிறதும் மக்களுக்காப் போராடுறதும் ஒன்றில்லை. ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்று மம்மி அடிக்கடி சொல்றவ. அது மாதிரி இந்த கீ போட் மார்க்ஸிஸ்டுக்களை நம்பி ஆத்தைக் கடக்க ஏலாது. பிரக்றிக்கலா இருக்கிறவை பிழை விடுறதும் அதில இருந்து புதிச கற்றுக்கொள்கிறதும் தங்களை வளர்த்துக் கொள்றதும் தான் இயல்பானது. உந்த மார்க்ஸிஸ பைபிள் கோஸ்டியோட கோரஸ் போட்டுக்கொண்டு குண்டுச் சட்டிக்கை குதிரை ஓடேலாது. சிறிரங்கன் ‘சேர்’ (தோழரல்ல) 1 2 3 … என்று ஊரில மண் அள்ளித் திட்டுற மாதிரி இருக்கு பாத்து மண் காத்துக்கு வந்து உங்கட கண்ணிலயும் விழுந்துவிடும்.

100 வீதம் எல்லாத்திலும் உடன்பட்டுத்தான் நாங்கள் எல்லோரும் குடும்பம் நடாத்துகின்றோமோ? நீங்கள் அப்படியோ தெரியாது. ஆனால் நான் அப்படியல்ல. மே 18 இயக்கம் - ஜான் மாஸ்ரருடைய கருத்துக்களில நான் உட்பட பலருக்கும் உடன்பட முடியாத பல விடயங்கள் இருக்கின்றது. உடன்படக் கூடிய விடயங்களும் இருக்கின்றது.

தங்கடை கருத்தை முன்வைத்து ஒரு பொதுக்கூட்டத்தை கூட்டி இருக்கிறார்கள். மற்றைய நாடுகளிலும் நடாத்துகிறார்கள். பொதுக்கூட்டத்தில சுவிஸ் முரளி வந்ததில என்ன தவறு. சுவிஸ் புலி முரளி மட்டுமா வந்தார். கீபோட் மார்க்ஸிட்டுகள் வந்தாக பேப்பர் மார்க்ஸிட்டுக்கள் வந்தாக சத்யசாய்பாபாவின் சீடர்கள் வந்தாக ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள் வந்தாக ஒட்டுக் குழுக்கள் வந்தாக யார் யாரெல்லாம் வென்றெடுக்கப்பட வேண்டுமோ அவர்கள் எல்லாம் வந்தாக. இவக எல்லாம் பொதுக் கூட்டம் ஒன்றுக்கு வாறதில என்ன பிரச்சினை. ஏன் இவங்களும் இரகசியக் கூட்டம் வைக்கும் கீபோர்ட் மார்க்ஸிட்டக்களாத்தான் இருக்கனுமா?

அவங்களிட்டை மக்களை எதிர்கொள்ற தைரியம் இருக்குது பொதுக்கூட்டம் வைக்கிறாங்க. கேட்கப்படுற கேள்விகளுக்கும் பதில் வைக்கிறாங்க. விமர்சனங்களையும் எதிர்கொள்றாங்க. வெல்டன் மே 18 மூவ்மன்ற். கீப் இற் அப்.
# sivam on December 15, 2009 9:11 am

மே 18 இயக்கம் என்ன சொல்கின்றது தான் முக்கியம். யார் அதில் இருகின்றார்கள் என்பது முக்கியம் இல்லை. இந்தக் கட்டுரையில் அவர்கள் கருத்துக்கள் பரிமாற பட வேண்டும், கருத்து சுதந்திரம் இப்போது இருக்கின்றது என்பது பற்றி பேசியதாக எனக்கு விளங்குகின்றது.

தமிழ் ஈழ விடுதலை புலிகள் தோற்கடிக்க பட்டது, தமிழ் தேசிய வாதத்தினை இல்லாமல் பண்ணவில்லை. புலி எதிற்பு, புலி அதரவு என்ற மட்டப்படுதலில் இருந்த அரசியல் வேறு வடிவங்கள் எடுக்கின்றது.

தமிழ் தேசிய வாத கட்சிகள், குழுக்கள், தனி மனிதர்கள் என்பவர்களில் பெரும்பான்மையோர் அரசுக்கு அதரவு எந்த மட்ட்டதிட்கு கொடுக்கலாம் என்பது பற்றி விவாதிக்கின்றனர்.

மே 19 போன்ற குழுவினர் தாங்கள் என்ன செய்ய போகின்றோம் என்பதை இந்தக் கட்டுரையில் சொல்லவில்லை. தங்களது தனிமனித பிழைகளையும் அதற்கான சுயவிமர்சனம் பற்றியும் கதைக்கின்றனர். இந்த முறையினால் தேசியவாத அரசியல் புனிதமானதாக வரலாறு இல்லை.

தனிமனித தவறுகள் அரசியல் வேலை திட்டத்தில் இருந்து தான் ஆரம்பமாகின்றது. கொலை, கொள்ளை, ஊழல், ஜனநாயக விரோதம் தனிய புலிகளின் குணாம்சம் இல்லை, இது தேசிய வாதத்தின் வெளிப்பாடுகள். இதனை சுய விமர்சனம் மூலம் இல்லாமல் பண்ணி விடலாம் என்று நான் கருதவில்லை. சுயவிமர்சனம் செய்பவர்களின் எண்ணம் உண்மையாக இருந்தாலும் அரசியல் விதிகள் தனி மனிதர்களின் நல்ல குணங்களினால் தீர்மானிக்க படுவதில்லை.

மே 19 குழுவின் சில அங்கத்தவர்கள், இங்கே கருத்துகள் எழுதியவர்கள் கடந்த காலத்தில் அரசியல் ரீதியில் தெரிந்தவர்கள். அந்த முறையில் இவர்களை தெரியாதவர்களுக்கு இங்கே எழுதப்படும் கருத்தை விளங்கிக் கொள்வது கஷ்டம். ஸ்ரீ ரங்கனின் கருத்து வழமையாக 1970 இன் பின்னணியில் இருந்து தேசியவாத அரசியலில் பழக்கமான ஒன்று.

இதன் ஒரு அம்சமும் மார்க்சிசத்தின் ஆய்வு செய்யும் முறையில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

ஸ்ரீ ரங்கன் எழுதியதில் எந்த வரி மர்க்ஸ்சிசம்?
இவர் எழுதிய முறையும் பாணியும் (method and style) எந்த வகையில் ஏனையோர் எழுதியதில் இருந்து வேறு படுகின்றது.?
# பல்லி on December 15, 2009 11:25 am

//தங்களது கடந்தகால தனிநபர் மற்றும் கட்சி அல்லது இயக்கம் சார்ந்த செயற்பாடுகள் தொடர்பான சுய/விமர்சனங்களை வெளிப்படையாக இங்கு முன்வைப்பது ஆராக்கியமான முன்னோக்கிய செயற்பாட்டிற்கு வழிகோலாகும்…குறிப்பாக ஏன் கட்சி அல்லது இயக்கத்திலிருந்து விலகினார்கள்…அதற்காக அவர்கள் முன்வைத்த விமர்சனங்கள் என்ன//
25 வருடத்துக்கு முன்பு செய்ய வேண்டியது; பரவாயில்லை ஒரு தலைமுறை காலம் தானே போனால் போகட்டும் இப்போதாவது வையுங்கள் உங்கள் இயக்க திருவிளையாடல்களை; பல்லியும் சிலதுகளை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்; வியூகத்துக்கு முன்னால் விமர்சனமா.? அல்லது விமர்சனத்துக்கு பின்னால் வியூகமா??
# பல்லி on December 15, 2009 12:00 pm

நாமும் வியூகம் பற்றி எமக்கும் மிக விமர்சனங்கள் உள்ளன; ஆனால் யார் இந்த பூபற்றா?? எத்தனையோ விடயங்கள் இங்கே விமர்சிக்கபட்டது, அதுபோல் இதுவும் ஒன்றுதான், அதுக்கிடையில் வாருங்கள் உன்மைகளை தேடி போவோம் என இவர் ஜான்மீது ஏதோ ஒரு பழிபோட நினைப்பது போல் இருக்கு, கேசவனுக்கு முன் பின் என்ற விடயம் ஏன்? கேசவனுக்கு முன்பு தீப்பொறி எப்படி இயங்கியது? அதன்பின் புலிகளில் இயங்கியது பற்றி இந்தனை காலம்வரை ஏன் எழுதவில்லை? அல்லது இந்த காலம் வரும் என காந்திருந்தீர்களா.? பல்லி போல்; பல்லி பல இடத்தில் எழுதியுள்ளேன் எனக்கு தீப்பொறி மீது விமர்சனம் இருக்கு என;ஆனால் கேசவனுக்கு முன் பின் என அல்ல; கேசவன் எழுதிய புதியதோர் உலகம் என்ன உன்மையின் உச்சகட்டமா?

ஏன் அதில்கூட மாயா போன்றோருக்கு விமர்சனம் இருக்கலாம்தானே. ரங்கன் நீங்கள் கூட ஒரு புலிகூடாரத்தின் நிழலில்தான் உங்கள் கருத்துக்களை சொல்லுவதாக பலர் சொல்லுகிறார்கள்; சமீபகாலமாக உங்கள் விமர்சனம் யாவுமே மாற்று கருத்தாளர் மீது (உன்மையை தேடுறியள்) பாய்கிறது; இது வரவேற்க்க தக்கதே; ஆனால் உன்மைகளை தெரியாமல் எப்படி நீங்கள் உன்மைகளை தேட போறியள்; கேசவனுக்கு முன் தீப்பொறியில் இருந்தவர்கள் தானே பின்பும் இருந்தார்கள் அப்படி இருக்க இது என்ன புதுகதை,

எனது கேள்வி கேசவனுக்கு பின் புலி சார்ந்த தீப்பொறியானால் கேசவனுக்கு முன்பு யார் சார்ந்தது தீப்பொறி; ஜெயபாலன் புலம்பெயர் தேசத்தில் மிக நீண்டகாலமாக ஊடகவியாளனாக இருக்கிறார், அவருக்கும் தீப்பொறிக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் இருந்தன. ஆனால் இதுவரை அவரிடம் ஏன் தீப்பொறிபற்றி ரங்கன் உன்மைகளை தேடவில்லை;? அல்லது ஜெயபாலன் சொன்னது போல் நாள்தோறும் மார்க்ஸிட்டக்களாத்தான் வாழ வேண்டும் அது தெரிந்தவர்களுடந்தான் பேசவேண்டும் என சத்தியம் செய்து விட்டீர்களா.

குலன் எழுதிய உலகமயமாக்குதல் என்னும் கட்டுரையில் 250மேல் வந்த பின்னோட்டங்கள் பெரும்பாலும் உன்மைகளை தேடின, அதில் பல உன்மைகளும் வந்தன ஏன் அதில் கூட தீப்பொறி வந்து போயிற்று, அப்போது ஏன் உங்கள் உனமைகள் தூங்கின? சம்பந்தபட்டவர்கள் வந்து எழுதும்போது தூங்குங்க; யாராவது ஒரு இரு புத்தகம் எழுதினால் போதும் அதன் தலையங்கத்தை வைத்து கொண்டு மல்லுக்கு வரவேண்டியது; பகமை இல்லாமல் பகட்டும் இல்லாமல் விமர்சனம் தேவை அதுவே பலரது முகத்தை காட்டும் உங்கள் பாணியில் பல்லியின் முகத்தைகூட:
# ஆனந்தன் on December 15, 2009 12:32 pm

தோழர் ஜெயபாலன் சரியாகத்தான் சொன்னீர்கள்…
நாம் அன்றாட வாழ்க்கையில் 100 வீதம் உடன்பட்டுத்தான் அனைத்தையும் எதிர்கொள்கிறோமா. சிறு முரண்பாடுகளும் பெரும் பிளவுகளை ஏற்படுத்தி உடையுண்ட வரலாறு மாக்சிய இயக்க வரலாறு. தூய்மைவாதம் என்று ஒன்றில்லை… ஆதிக்க சமூக அமைப்பில் நாம் அன்றாடம் பல்வேறு விடயங்களுடன் சமரசம் செய்துகொண்டுதான் போகிறோம். அதன் அர்த்தம் நமது அடிப்படை அரசியல் கொள்கைகளை விட்டுக்கொடுத்து சரணடைந்ததாக ஆகாது.

இன்றைய உலகமயமாக்கல் சூழலில் இளந் தலைமுறையினரை சமூக அநீதிகளுக்கு எதிராக போராடுவதற்கு இலகுவாக அணிதிரட்ட முடிவதில்லை. போராடும் சக்திகளுக்கு மிகப்பெரும் சவாலான விடயமாக இது ஆகியிருக்கிறது. முன்னர் இருந்த சமூக பிரக்ஞையின் தரம் மோசமாகியிருக்கிறது.

அடிப்படை விடயங்களில் பெரும் உடன்பாடுகளையும், சிறு முரண்பாடுகளையும் கொண்ட சக்திகள் ஒன்றிணைவதில் பூர்ஷ்வா சக்திகள் கூட வெற்றி காண்கின்றனர். ஏன் நம்மால் முடிவதில்லை. ஆயிரம் பேர் உள்ள இடத்தில் ஆயிரம் கருத்துக்கள் இருக்க நிறையவே வாய்ப்புண்டு.

முரண்பாடுகளுக்குள்ளும் உடன்பாடுகளை கண்டறிவதே இன்றைய தேவையே ஒழிய… உடன்பாடுகளுக்குள் முரண்பாடுகளை தேடித்தேடி கண்டுபிடிப்பாக அறிவித்து அழித்தொழிப்பதல்ல இன்றைய தேவை.

ஆயிரம் பூக்கள் மலரட்டும்…. ஆயிரம் கருத்துக்கள் முட்டி மோதட்டும்.
# கேதீஸ்வரன் on December 15, 2009 1:16 pm

அரசியல் பூச்சியங்களின் இலுப்பைபூ சர்க்கரை
# sivam on December 15, 2009 1:41 pm

இந்த கருத்து சொல்பவர்களை எனக்கு தெரியாது. இவர்களது அரசியலும் எனக்கு தெரியாது. இது முன் நிபந்தனையாக இல்லை நான் எனக்கு விளங்காததை கேட்பதற்கு என்று நம்புகின்றேன். இந்த கருத்துகள் தமிழ் தேசிய வாத அரசியலை முன் வைக்கின்றது என்பது எனது அடிப்படையான நிலைப்பாடு. ஏற்கனவே நான் எழுதிய கருத்துக்களுக்கு உங்களது அப்பிபிராயத்தை எதிர்பார்கின்றேன்.

அத்துடன் மேலதிகமாக சில கேள்விகள்:
///ஆதிக்க சமூக அமைப்பில் நாம் அன்றாடம் பல்வேறு விடயங்களுடன் சமரசம் செய்துகொண்டுதான் போகிறோம். அதன் அர்த்தம் நமது அடிப்படை அரசியல் கொள்கைகளை விட்டுக்கொடுத்து சரணடைந்ததாக ஆகாது.///
இந்த வசனம் எனக்கு தெளிவாக இல்லை.
என்ன பல்வேறு விடயங்கள்?
என்ன சமரசம்?
என்ன அடிப்படை அரசியல் கொள்கைகள்?
என்ன அடிப்படை இல்லாத அரசியல் கொள்கைகள்?

///அடிப்படை விடயங்களில் பெரும் உடன்பாடுகளையும், சிறு முரண்பாடுகளையும் கொண்ட சக்திகள் ஒன்றிணைவதில் பூர்ஷ்வா சக்திகள் கூட வெற்றி காண்கின்றனர்///
இதற்கு ஒரு உதாரணம் வழங்க முடியுமா?
# chandran.raja on December 15, 2009 4:59 pm

// அரசியலில் பூஜியங்களின் இலுபம்பூ சர்க்கரை// கேதீஸ்வரன்.
ப.வீ.சிறீரங்கன் ஆனந்தன் ஜெயபாலன் சிவம் போன்றோரின் கேள்விகளிலும் சந்தேகங்களிலும் ஒருவகை நியாயம் உண்டு. விவாதிப்பதற்கு இடம் உண்டு. ஆனால் உங்கள் பூஜியக்கதைகள் “துரோகிப்பட்டம்” கொடுத்ததையே நினைவூட்டுகின்றன. இதை மறுக்கும் நீங்கள் இலும்பம் பூ சர்க்கரையை கரும்புச் சர்க்கரையை ஆக்கவேண்டியது உங்கள் கடமையல்லவா? இதற்கு முயற்சி எடுப்பீர்களா?.
தமிழ்சமூகம் பிற்போக்கான சமூகம் என நாம் கருதினால் அதை முற்போக்கான வழியில் அழைத்துச்செல்வது எமது கடமையல்லவா!.
# Ahmad Nadvi on December 15, 2009 7:11 pm

Just for a change. Why all of a sudden Jeyapalan’s Tamil does sound like non Tamils’ Tamil. Even Rahuman Jan speaks very good Tamil. When he speaks no one will think that he is a Tamil speaking Muslim. Jeayapalan! are you trying to say something in code words or you just tried to write differently. Anyway your comment is agreable.
# மேளம் on December 15, 2009 7:59 pm

//பொதுக்கூட்டத்தில சுவிஸ் முரளி வந்ததில என்ன தவறு//. சுவிஸ் புலி முரளி மட்டுமா வந்தார்.//ஜெயபாலன்.

திரு.ஜெயபாலன் அவர்களிடம் மேளத்தின் சந்தேகம் கலந்த… தெளிவு தேடிய வினாவொன்று. இதற்கான காரணமும் உண்டு. சுமார் கடந்த பதினைந்து வருடங்களாவது தங்களது எழுத்துக்களை (தங்களது நேர்மை கலந்த எழுத்துக்களை) வாசித்துக் கொண்டிருப்பவன் என்பதால் உரிமையோடு கேட்கிறேன். அதென்ன புதுவிதமான வார்த்தைப்பிரயோகம் “சுவிஸ் முரளி வந்ததில என்ன தவறு” இது உங்களுக்கத் தேவையா? இந்த முரளி யார்? இவர் என்ன தில்லு முல்லுகள்…. அடிதடி தர்பார்… நடத்தினார் என்பதெல்லாம் இந்த சின்ன மேளம் சொல்லி தாங்கள் அறிய வேண்டியதில்லைலே….
மனிதர்கள் யாரும் திருந்தக் கூடாதென்றோ…. திரும்பவும் மனிதர்களாகக் கூடாதென்றோ மேளம் சொல்ல வரவில்லை; ஆனால் உங்களைப் போன்றவர்கள் கூட இவரைப் போன்றவர்களை ஞாயப்படுத்த முனைகிறீர்களே….. ப.வி.ஸ்ரீரங்கன் பற்றி எழுதுங்கள் நானும் அறிந்து கொள்கிறேன். அதைவிடுத்து… ஒருத்தர் மீது விமர்சனம் வைக்கப்போய்….. ஞாயப்படுத்த முடியாதவர்களை ஏன் கூடையில் தூக்கி வைக்கிறீர்கள் என்பதன் மர்மம் என்ன? ஞாயப்படுத்தல் “சுவிஸ் புலி முரளி மட்டுமா வந்தார்” என்ற வரிகளோடு மட்டும் நின்றிருந்தால். மேளத்திற்கு இந்த ஆதங்கம் தங்கள்மேல் வந்திருக்காது. உங்களுக்கு ஒரு விடயம் தெரியும்… இப்போது திருவிழாவுக்கு கடைவிரிக்க வந்திருப்பவர் யாரும் புதிய யாவாரிமார் இல்லை…. முன்பெல்லாம் பூஞ்சி முட்டாசும். வம்பாய் முட்டாசும் வித்தவியள்…… இப்ப காப்பு;சோப்பு; கண்ணாடி விக்கவாறாங்கள்… சாமான்தான் வித்தியாசம் யாவாரிமார் ஒண்டுதான்.

இன்று சமூக அரசியல் அக்கரையாளர்கள் என்று கூறிக்கொண்டு கடைவிரிக்க வரும் எந்தக் கொம்பனாவது அந்த மண்ணில் பசியோடும் பட்டினியோடும் கிடந்த-கிடக்கின்ற மக்களுக்கு ஏதேனும் செய்திருப்பானா என நெஞ்சைத் தொட்டுச் சொல்லட்டும். ஆனால் கடை விரிக்க வராதவன் செய்துகொண்டுதான் இருக்கிறான். (தேசம் பின்னூட்ட நண்பர்கள் கோபிக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கை மேளத்துக்குண்டு… காரணம் வியாபாரம் செய்யுமளவுக்கு உங்களுக்கு சுத்துமாத்து தெரியாது)

மேளம்
# சுகுணகுமார் on December 15, 2009 8:18 pm

புலியளிடம் இப்ப புலி முத்திரை இல்லையாம்! அதை இந்த இடது சாரிகள் என்று தம்மை அழைப்பவர்கள் தேசியம் பேசிற எல்லாரிலையும் குத்தி முடிஞ்சு போச்சுதாம். அதை தான் இப்ப பிவி சிறீ ரங்கனும் செய்யிறார் போலை கிடக்கு. ஜான் மாஸ்ரரான காந்தனைப்பற்றி இவர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் எதையும் சொல்லாது வெறும் தனி மனித தாக்குதலை புலிகள் பாணியில் நடாத்தியுள்ளார். புலிகள் தம் கருத்தை எதிர்த்தவர்களை சுட்டார்கள். இந்த பிவி சிறீ ரங்கன் தனது கீபோட்டால் சுட்டிருக்கிறார். ஆக இரண்டும் ஒரு விடயம் தான். ஜான் மாஸ்ரர் மீது எனக்கும் சில கடுப்பு இருக்கிறது! ஆனால் அதை நாங்கள் ஜனநாயக முறையில் தணித்துக் கொள்வோம். அனால் சிறீ ரங்கன் போல் போக்கிரி வேலை செய்ய மாட்டோம். 1983 கலவரத்துடன் நாட்டை விட்டு ஓடி வந்த இடதுசாரிகள் பலரை தெரியும்! அந்த நபர்களின் பாணியில் சிறீ ரங்கன் ஜான் மாஸ்ரரை குறிபார்த்து சுட்டிருக்கிறார். சிறீ ரங்கன் ஒருவேளை பெரிய ஐயாவுக்கு தோஸ்தோ தெரியாது! காரணம் ஜான் மாஸ்ரர் தன் புரட்சிகர பயணத்தை ஆரம்பித்தது புளட்டில் அல்லவா! மறந்தும் கூட புளட் இயக்கத்தின் மிக கேவலமான பாசிச முகத்தை இந்த சிறீ ரங்கன் கதைக்க மறந்ததன் தர்மம் என்ன? ஜான் மாஸ்ரர் புளட்டில் பலரை அனாதைகளாக விட்டு வந்தமையாலா? சரி அதை விடுவம்! ஐயா பீவி சிறீ ரங்கன் அவர்களே ஜான் மாஸ்ரரின் வரலாற்றை உங்களுக்கு சொன்னவர் யார்? அல்லது நீங்கள் வூபட்டாலில் இருந்து எப்படி பொட்டம்மானை மிஞ்சினீங்கள்? தயவு செய்து விளக்கம் தரவும்.

இளங்கோ என்பவர் புலிகளின் உளவாளி என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டபோது அதை மறுத்தவர்கள் அதன் பலனை பின்னர் அனுபவித்தார்கள். அதில் ஜான் மாஸ்ரரும் ஓருவர் என்பது உங்களுக்க தெரியுமா? புதியதோர் உலகம் கோவிந்தனுடன் மூன்று போராளிகளை புலிகள் கைது செய்த காலப்பகுதிக்கு பின்னர் ஜான் மாஸ்ரர் எங்கு இருந்தார் என்ன செய்தார் என்பது உங்களுக்கு தெரியுமா? வூப்பட்டாலில் அவர் பூப்றிக்கவில்லை ஜான் மாஸ்ரரை புலிகள், புளட், மற்றும் இலங்கை இராணுவம் தேடியது உமக்கு தெரிய நியாயமில்லைதான்! அப்ப ஜெர்மனியல் நல்ல குளிராயிருந்திருக்கும் நீங்கள் ஒரு அரையை விளாசிப்போட்டு கீபோட்டிலை லெனினச மார்க்கிச புணர்ச்சி பற்றி ஒரு கட்டுரை எழுதியிருப்பியள்! ஒரு போராளியை நீங்கள் கார்ல் மார்க்சை கும்பிட்ட மாதிரி கும்பிட வேண்டாம் குறைந்த பட்சம் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்!

ஜான் மாஸ்ரருக்கு அன்று அடைக்கலம் கொடுத்த பலர் இன்று இலண்டனிலும் ஐரோப்பாவிலும் உயிருடன் தான் இருக்கிறார்கள்! சும்மா புலி புலியெண்டு வாழ்நாள் முழுவதும் எழுதி இப்ப அதுவே பலருக்கு ஒரு விசராப் போச்சு! தண்ணியடிக்டீகேக்கை தொட்டுக்க ஊறுகாய் போல இப்ப உங்களுக்கு புலிப்பாசிசமமும் தொட்டுக்க ஊறுகாய் தான்! கோவிந்தனின் மரணத்தின் முடிச்சை அவுக்க முதல் போய் உங்கடை தலைக்குள்ளை இருக்கிற முடிச்சை அவுளுங்கோ! அறிவுள்ள மனிசன் என்றால் முதலிலை ஆராய்ந்து பார்ப்பான் அல்லது அறிந்தவனிடமாவது கேட்பான்! கற்பனை பண்ணி கதை எழுத வேணுமெண்டால் போய் ஆனந்த விகடன் அல்லது நக்கீரனிலை எழுதுங்கோ! நக்கீரன் கோபாலுவை விட திறமாதான் பின்னோட்டம் விட்டிருக்கிறயள்!
# மாயா on December 15, 2009 9:32 pm

// “சுவிஸ் முரளி வந்ததில என்ன தவறு” இது உங்களுக்கத் தேவையா? இந்த முரளி யார்? இவர் என்ன தில்லு முல்லுகள்…. அடிதடி தர்பார்… நடத்தினார் என்பதெல்லாம் இந்த சின்ன மேளம் சொல்லி தாங்கள் அறிய வேண்டியதில்லைலே….//

முரளிதான் , சுவிஸ் தமிழருக்குள் அடிதடி கலாச்சாரத்தை கொண்டு வந்தவர். இவர் முதலில் பாரீஸ் சண்டியர்களைத்தான் , சண்டித்தனத்துக்கு கொண்டு வந்தார். பின்னர் சில பொடிகள் சேர்ந்து புலிகளது சூரிச் காரியலத்துக்குள் நுழைந்து கொடுத்த பூசையில் , வீட்டைச் சுற்றி ஓடிய ஓட்டம் முரளிக்கும் , அவரோடு இருந்தோருக்கும் மட்டுமா தெரியும்?………..எல்லாருக்கும் தெரியும். பின்னர் முரளிக்கு வெளியே போறதுக்கும் பாதுகாப்பு படையே தேவைப்பட்டது.
# கேதீஸ்வரன் on December 15, 2009 11:27 pm

தீப்பொறியில் பொறியில் மாட்டாது மிஞ்சின புளட்காரர் மூண்டே மூண்டு பேர்தான். ரகுமான் ஜான், சலீம், விஜயன். இவர்களுடன் உள்ளுக்கு புகுந்த புலிகள் இளங்கோவையும் பீட்டரையும் சேர்த்தால் ஐஞ்சுபேர்தான். மிச்சப்பேர் எல்லாம் ஒன்றில் பொறியில் மாட்டப்பட்டு மாட்டி மாண்டார்கள். இல்லை பொறியை கண்டு தலைதெறிக்க ஓடி விட்டார்கள். இப்போ விஜயனும் மாட்டி விட்டார்.
சுகுனகுமார்! நீர் விட்ட பெரிய பிழை மெடிக்கல் பகல்டியை விட்டு புளட்டுக்கு போனதுதான்.
# கேதீஸ்வரன் on December 15, 2009 11:41 pm

புதியதோர்உலகம் கோவிந்தனோடு மிகவும் நெருக்கமாக நீண்டகாலம் பழகியதாலும் நடந்தவிடயங்களை நன்குதெரிந்ததாலும் சொல்கிறேன். கோவிந்தனின் மரணத்தில் ஒரு பெரியமுடிச்சு இருக்குதான். அதை இங்கே சொல்லி பழசை எல்லாம் கிளற விரும்பவில்லை.
தேவையென்றால் புளட்டின் முன்னாள் வடமாகாண பொறுப்பாளரும் பின்னாளில் தீப்பொறியின் தளபொறுப்பாளராக இருந்த .கனடாவில் இருக்கும் நேசனிடம் அல்லது கொழும்பில் பொட்டனுக்கும் இளங்கோவுக்கும் இடையில் தொடர்பாளராக இருந்த விஜயனிடம் கேட்டு பாருங்கள்.
# vs on December 16, 2009 1:16 am

பல முடிச்சுக்களை நான் அவிழ்ப்பதாகவிருந்தால் ரகுமான் யான் வரலாற்றின் குப்பைக்கூடைக்குள் செல்வதாகவே இருக்கும். இது, கடந்தகால நடாத்தை.பழி சுமத்துவதல்ல.

இன்றைய புள்ளி எதுவென்பதை உணர்வது மிக அவசியமானது. தன்னைக் குறித்தான பொதுமைப்படுத்தலில் தனது கடந்தகாலத்து நடாத்தையை மறைக்க முடியாது. அது ஆதாரம் தழுவிய யதார்த்தம்.
# pakthan on December 16, 2009 1:32 am

திரும்பவும் வந்து விட்டார்கள் இந்த மாக்ஸிஸ பூசாரிகள். பிராமணர்கள் வேதத்தை பாடமாக்குவது போல் இவர்களும் மாக்ஸிஸ புத்தகங்களை பாடமாக்கி விட்டு போதனை வேறு! மாக்ஸிஸ விஞ்ஞானத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் அதை நிலமைக்கு ஏற்றவாறு பாவிக்காமல் தேசிய இனப்பிரச்சனையில் லெனின் இவ்வாறு பாவித்தார் அவர் அப்படி சொன்னார் என கதை விடுகிறார்கள். உலக மாற்றங்கள் - 19 ம் நுற்றாண்டில் உலக ஒழுங்கு முறை பற்றிய சீரியசான புரிதல் இன்றி கர்நாடக சங்கீதத்தை பாடுவது போல் இந்த பழமைவாதிகள் தொடர்ந்து பாடுகிறார்கள்.
மாக்ஸ்ஸிய விஞ்ஞானம் பிழையானதன்று. அது விஞ்ஞானம். ஆனால் இந்த புத்தகப் புழுக்களுக்கு அதை சூழ்நிலைக்கு ஏற்ப பாவிக்க தெரியாமல் அதையும் குழப்பி எங்களையும் குழப்புகிறார்கள்

இனங்களுக்குள் சிறிதளவு முறுகல் இருந்த எண்பதிற்கு முதல் இவர்கள் ஐக்கிய இலங்கைக்குள் செய்த புரடசியில் இலங்கை மக்கள் அடைந்த பலன்களை சொல்லி மாளாது. புலி பயங்கரவாதம் முடிந்த பின்பு மீண்டும் இந்த குடுகுடுப்பைகாரர்கள் வந்து விட்டார்கள். ஐயோ பாவம் மக்கள்…..! இனி கத்தை கத்தையாக எழுதப் போகின்றார்கள். அது சரி புரடசியை ஆயுதம் இன்றி எவ்வாறு செய்யப் போகின்றார்கள். அல்லது பாராளுமன்றம் மூலம் ஐக்கிய இலங்கைக்குள் புரடசியா? அதே பழைய பல்லவிக்கு மே 18 என புது பெயின்ட் அடித்து மீண்டும் காதிலை பூ வைக்க வந்துட்டாங்கள். இந்த கச்சேரிகாரருக்கு எப்பவும் ஒரு மேடை தேவை.

காலம் காலமாக இவ்வாறான மக்கள் மீது நம்பிக்கையற்று மக்களுக்காக உண்மையாக உழைக்க திராணியற்ற கூட்டத்தை நாம் கண்டுவருகிறோம். ஆனால் இவர்கள் என்னதான் தலைகீழாக நின்றாலும் எத்தனை பக்கங்கள் நீட்டி முழங்கினாலும் இவர்களின் கனவுகள் நிறைவேறப் போவதில்லை. மக்கள் நீண்ட நெடிய யுத்தத்தில் நல்ல பாடங்களை பெற்றுள்ளார்கள்.
# chandran.raja on December 16, 2009 11:32 am

பக்தனின் கதை திரும்பவும் வயிற்றை கலக்கிறமாதிரி இருக்கிறது. பல ஆண்டுகளாக தொடர்ந்து பெய்த சாக்காட்டு மழை விட்டு இப்பதான் மக்கள் தலை துவட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமது சொந்த இருப்பிடத்திற்கு கூட முழுமையாக திரும்பமுடியவில்லை. இந்த நேரத்தில் திரும்பவும் ஆயுதத்தை நினைவூட்டுகிறீர்கள். இது உங்களுக்கு தப்பாக தெரியவில்லையா? பக்தா!. நீங்கள் மாக்ஸியத்தில் சரியான புரிதலை கொண்டுள்ளீர்கள் போல உங்களை காட்டிக் கொள்ளுகிறீர்கள். எப்படி? உங்களை யாரும் குழப்ப முடியும். நீங்கள் சொல்லுபவர்களை எனக்கும் தெரியும். அது அவர்களுக்கு சிலவேளை பொழுது போக்காக இருக்கலாம். ஆனால் அவர்கள் யாரையும் போட்டுத்தள்ள மாட்டார்கள். அவர்களை அவர்கள் போக்கிற்கே விட்டுவிடுங்கள். அவர்கள் உங்களுக்கோ மக்களுக்கோ எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டார்கள். நீங்களும் அவர்களுக்கு இடஞ்சல் கொடுக்காதீர்கள்.
இன்னுமொரு அன்பான வேண்டுகோள் பக்தா! உழைப்பாளர்கள் எப்பவும் புரட்சிகரமானவர்கள் தான் புரட்சி செய்ய அவர்களை நிர்பந்திக்கும்போது எப்படி புரட்சிக்கு பதில் சொல்வது எப்படியான ஆயுதங்களைப் பெற்றுக் கொள்வது பற்றி வரலாற்று ரீதியான இயங்கியல்போக்கு அவர்களுக்கு உண்டு. அதேபோல இலங்கைக்கு ஐக்கியம் தேவையா? தேவையில்லை என்பதைப்பற்றி முடிவெடுப்பார்கள். அதையும் அவர்கள் பாட்டுக்கே விட்டுவிடுங்கள். ஆயுதம்-புரட்சி-ஐக்கியம் பற்றி பாடம் எடுக்காதீர்கள். முடிந்தால் ஐந்தோ பத்தோ தின்பதற்கு ஊருக்கு அனுப்பி வையுங்கள் அது உங்கள் உபதேசத்தைவிட வலுமிக்கது.
# BC on December 16, 2009 7:27 pm

பக்தன் கூறுவது நடந்த நடக்கும் கூத்துக்களை பற்றியாதாக சரியானதாகவே தெரிகிறது.
# பல்லி on December 16, 2009 10:33 pm

தீப்பொறி ஏன் தொடங்கபட்டது?
இது யாரால் தொடங்கபட்டது?
இதில் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் இருந்தார்கள்?
தீப்பொறி தொடங்கிய பின் ரகுமான் புளொட்டில் தான் விட்டு விட்டு வந்த தனது சகாக்களை சந்தித்தாரா?
புதியதோர் உலகம் எதை பின்னனியில் வைத்து கேசவன் எழுதினார்?
எல்லாத்துக்கும் மேலாக இவர்கள் உன்மையில் இயக்க பிரச்சனையில் தான் தீப்பொறி தொடங்கினார்களா? அப்படியாயின் இவர்களை நம்பி கடல்
கடந்து போன பலரின் நிலை என்ன?
இப்படி பல கேள்விக்கு விடை இல்லை, அதேபோல் இல்லாமல் இனிமேலாவது செய்வதை தமது சுயநலம் கருதி இல்லாமல் மக்களின் அன்றாட வாழ்க்கை பற்றி சிந்தித்து செயல்படுவது அவசியம்; அதுவே மேலும் இவர்களை மக்கள் அனுமதிக்க வழிகோலும்: மக்கள் 40 இயக்கத்தை நம்பி; பல அறிவு ஜீவிகளை நம்பி இறுதியாய் கட்டாய கலியாணம்போல் புலிகளை நம்பி இன்று சொன்னவனை நம்புவதா (மகிந்தா) செய்தவனை நம்புவதா(சேகரா) என தெரியாமல் சிறையில் வாடும்போதும் கூட அந்த மக்கள் யாரை நம்ப வேண்டும் என சொல்லும் (தரகர்) வேலையையும் நாமே செய்கிறோம் (பல்லியும்தான்) உங்கள் வியூகத்துக்கான தகவல்களை மக்களிடம் இருந்து பெற்று செயல்படலாமே;
# chandran.raja on December 17, 2009 4:00 am

புதியதோர் உலகம் கேசவன்னால் எழுதப்படவில்லை. கோவிந்தனால் எழுதப்பட்டது. அவரின் உண்மையான பெயர் ஞாபகம் வருகிறது இல்லை. ஜனநாய மத்தியத்துவம் இல்லாத தன்மையே!. என்ன நோக்கத்திற்காக கட்சியில் இணைந்தார்களோ அந்த நோக்கம்….. போட்டி பூசல் பொறாமை பதவிஆசை பிரச்சனை ஏற்படுகிறபோது அதை தீர்க்கமுடியாதபோது கொலையில் முடித்துவிடல் இதைவிடுத்து புதியதோர் உலகத்தை நோக்கி போவதையே கோவிந்தன் குறிப்பிடுகிறார். இதில் விசித்திரமான உண்மை என்னவென்றால் இப்படியான போக்கு நாற்பது இயக்கங்கள் இருந்தது என்று சொன்னால் நாற்பது இயக்கங்களிலும் நடந்த கொண்டிருந்தது அல்லது சூழ்கொண்டிருந்ததே! உண்மை. கோவிந்தனின் கோரிக்கை இதிலிருந்து விடுபடுவதே.

கோவிந்தன் அதற்கான வழியை கண்டுபிடிக்கவில்லை. வரலாற்றையும் தத்துவ ஞானத்தையும் புரிந்துகொள்வதற்கு தமிழ்மக்கள் தயாரில்லை அல்லது புலம்பெயர் மக்களின் பணப்பலம் அதை சிந்திக்கவிடவில்லை. இறுதியில் கோவிந்தன் கொலையுடன் முடிவடைகிறது. இருந்தாலும் புதியதோர் உலகம் தனது முக்கியத்துவத்தை இழந்து விடவில்லை இழந்துவிடப் போவதும் இல்லை. என்றொன்றும் தமிழ்மக்களின் வரலாற்று ஆவணமாகவே கருதப்படும். தீப்பொறி இன்றைய வியூகம் புதியதோர் உலகத்தின் மீட்சியே!: அல்லது தொடுவானம் என்றும் அர்த்தம் கொள்ளலாம். மிகுதியை வாசகரின் கருத்திலிருந்து….!?.
# pakthan on December 17, 2009 5:56 am

காலத்துக்கு காலம் வெவேறு இயக்கங்களில் இருந்து வெவேறு வெளியீடுகளில் எழுதியவர்கள் இப்ப மே 18 பெயரில் வியூகம் அமைத்திருப்பது மே 18 இல் என்ன நடந்ததோ அதுதான் தமக்கும் நடக்க இருக்கிறது சீக்கிரம் மக்களிடம் இருந்து ஒதுக்கப்பட்டு ஒளிந்து விடபோகிறார்கள் என்பதை சொல்லாமல் சொல்லி நிற்கிறார்களோ. ஆறு கடக்க அல்ல ஆற்றம் கரைக்கே போகமுடியாத் வெறும் மண் குதிரையே இந்த மே 18 இயக்கம்.
பிரபாகரனை பற்றி எதுவும் தெரியாமல் பிரபாகரனை பற்றி புழுகி வணங்கியவர்கள் மாதிரித்தான் ரகுமான் ஜானை பற்றி தெரியாமல் அவர புளுகும் சிலர் இருக்கிறார்கள். வேஷங்கள் வேறு!! கோஷங்கள் வேறு! நிஜமுகங்கள் வேறு.!!

தீப்பொறியில் இருந்து விலகியவர்களை இயக்க இரகசியங்கள் வெளியில் பரவாமல் இருக்க அவர்கள் படுகொலை செய்யப்பட வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்த பேர்வழிதான் இந்த ரகுமான் ஜான். பெரிஐயாவுக்கு (உமா மகேஸ்வரனுக்கு) சலூட் அடிக்க மறுத்தால் ஒரத்த நாடு பீ காமப் சிறைதான் என்று புளட்டில் சட்டம் கொண்டு வந்தவரும் இவரே. இவருக்கு பிரபாகரனையோ புலியையோ விமர்சிக்க எதுவித உரிமையும் கிடையாது.
# Sathyam on December 17, 2009 6:55 am

Many of us what all about May18, PULI and Thedaham(PULI’s Toronto joint committee)just bring back PULI and give O2. nice way as book publishing, dinner party, Thedham people should be shame on themselves what they are doing now, but winners are Swiss Murali and CMR TVI crew.
# பல்லி on December 17, 2009 12:34 pm

புதியதோர் உலகம் கேசவனால்தான் எழுதப்பட்டது; அவர் புளொட் மத்திய குழு உறுப்பினரும் கூட; இவர்கள் யான்; கேசவன்; பார்த்தன்; மூவரும் 1982களில் திருகோனமலையில் பலமக்களுக்கு பிரபல்யமானவர்கள்; அதனாலேயே கேட்டேன் கேசவன் யான் பார்த்தன் அனுப்பிய (பயிற்ச்சிக்காக இந்தியாவுக்கு) இவர்கள் கழகத்தை விட்டு தீப்பொறியில் கவனம் செலுத்தியபோது அவர்கள் நிலை என்ன? இதுவரை அவர்களில் சிலர் கழகத்தில் இருப்பதாக சிலர் சொல்லுகிறார்கள்; பல்லி தவறான தகவலை தர விரும்புவதில்லை, முடிந்தவரை தேடுகிறேன், யார் இவர்கள் என; அதன் விடையே பல்லியின் கருத்துக்களாய் வருகிறது; கழகத்துக்கும் யான்க்கும் என்ன பிரச்சனை; இவர் ஒரு பாலஸ்தீன பயிற்ச்சி பெற்ற மிக திறமை வாய்ந்த போராளி என கழகத்தினர் சொல்லுகிறார்களே, அப்படியாயின் அங்கு என்னதான் நடந்தது, பல மத்திய குழூறுப்பினர் இருக்கும்போது சந்ததியார் ஏன் யான், கேசவனை தெரிவு செய்தார், இவருடன் கழகத்தை விட்டு புறப்பட்ட முக்கிய உறுப்பினர்கள் யார்? இத்தனைக்கும் பின்னும் புலியை திருத்தலாம் என நினைப்பதால் அப்போ ஏன் கழகத்தை திருத்தவோ அல்லது தலமையை மாற்றவோ தோன்றவில்லை; இப்படி பல பிரசனைகளை கவனத்த்கில் எடுத்து வியூகத்தை சரியான வழியில் கொண்டு போவார் யான் என நினைக்கிறேன்:இது விமர்சனமே தவிர விசம தனம் இல்லை; மேலே குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் எனது நண்பர்கள் சொன்னதுதான்; அது பொய்யாக இருந்தால் அதை எழுதுங்கள்; பல்லி தெரிந்து கொள்ள;
# meerabharathy on December 17, 2009 1:08 pm

நட்புடன் நண்பர்களுக்கு,
சுமூக மாற்றம ;எந்தளவு முக்கியமோ அந்நதளவு தனிமனிதர்களது மாற்றமும் முக்கியமானது. அதுவும் சமூக மாற்றத்திற்காக செய்படுகின்றோம் எனக் கூறுபவர்கள் தாம் மாறாமால் இருப்பதற்கு எந்தவிதமான சாட்டுகளும் முன்வைக்க முடியாது இதைக் குறிப்பிடும் அதேவேளை நாம பலவிடயங்களில் சமரசம் செய்துகெண்டே வாழ்கின்றோம் உதாரணமாக குடும்பக ;கட்டமைப்புக்குள் வாழ்வது, சமூகப் பாத்திரங்களை முதன்மைப்படுத்துவது அல்லது அப்படியே பயன்படுத்துவது, பிற்போக்கான கலாசார பழக்கவழங்கங்களை தொடர்ந்தும் பின்பற்றுவது…இப்படி பலவற்றை கூறலாம்….ஆனால் சமூக மாற்றத்திற்காக செயற்படுகின்றவர்கிளின் சமரசம் என்பது மிகக் குறைந்த பட்சமானதாக இருக்க வேண்டும் அல்லவா?

ஏனனில் தனிநபர் பாத்திரங்களின் முக்கியத்துவம் அவர்களின் அதிகாரம் மற்றும் கீழ்படிதல் போன்றன தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை நாம் முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டும். இது தட்டிக்கழிக்க முடியாத ஒரு ஆய்வு. ஒரு அமைப்பை நிறுவி செயற்படுகின்றவர்கள் மிக மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒன்று. புலிகள் அமைப்பின் தலைமைக்கு கீழ்படிதல் எப்படி சாத்தியமானது என்பதை அல்லது நமது சமூகத்தில் நிலவும் அதிகார கட்டமைப்புகளுக்கு எதிர்ப்பின்றி கீழ்படிதல் எவ்வாறு சாத்தியம் என்பதையும் ஒவ்வொருவிதமான சமூக பாத்திரங்களை வகிப்பவர்கள் எவ்வாறு அதன் அதியுச்ச எதிர் துருவ நிலைகளுக்குச் சென்று எதிர்மறையாக செயற்படுகின்றார்கள் என்பவற்றை இந்த ஆய்வுகளின் மூலம் நாம் விளங்கிக் கொள்ள முடியும் என நம்புகின்றேன். இந்த ஆய்வுகள் தொடர்பான இணைப்பு கீழே உள்ளது.

இதனால் சமூகத்திலும் பொதுபுத்தி மட்டத்திலும் நிலவும் ஆணாதிக்க கட்டமைவுகளுக்கும் அதன் அடிப்படையிலான மனிதர்களின் பொறுப்புக்களையும் சமூக பாத்திரங்களையும் கருத்தாதிக்கங்கைளையும் கேள்விகேட்பதன் மூலம் அதில் சிறிதளவாவது உடைவுகளை ஏற்படுத்தலாம்…

ஏனனில் கிரம்சியின் கோட்பாட்டை மேலோட்டமாக அறிந்தளவில் சமூக மேலாதிக்க “social hegemony” ஆணாதிக்க கருத்தியலானது நமது எலும்பு மச்சைகள்வரை ஆழமாக வேருண்டியுள்ளன…இதை நாம் பிரக்ஞைபூர்வமாக காயத்திரி ஸ்பிவாக் (Gayatri Spivak) கூறுவதுபோல் அதை வேருடன் நம்மிலிருந்து அகற்றவேண்டும். அதாவது “de-hegemonize” செய்யவேண்டும்.

இங்குதான் பிரக்ஞை முக்கிய பங்கு வகிக்கின்றது. நாம் நமது சிந்தனையிலும் செயற்பாடுகளிலும் ஒவ்வொரு கணமும் பிரக்ஞையாக இருப்பதற்கு பழகவேண்டும்.

இதன் அடிப்படையில்தான் வீயூகம் அல்லது மே 18 இயக்கத்தின் மீது எனது விமர்சனமும் உள்ளது. சமூகமாற்றம் என்பது சமூக கட்டமைப்புக்களையும் அதன் மேலாதிக்க கருத்துக்கைளயும் மட்டும் மாற்றிவிடுவதால் நாம் விடுதலையடைந்து விடுவோம் என்பது மரபான நம்பிக்கை. சமூக கட்டமைப்புகளையும் அதன் மேலாதிக்க கருத்துக்களையும் காவியும் பாதுகாத்தும் செல்பவர்களான தனிமனிதர்களினதும் பங்கும் அவர்களது மாற்றமும் மனித விடுதலையில் சமூக மாற்றத்தில் முக்கியமானது என்பது எனது கருத்து. சுமூக மாற்றத்திற்காக செயற்படுகின்றவர்கள் தம்மளவில் மாற்றத்தை தமது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படுத்துவது நல்லது. ஆராக்கியமானது. ஆல்லது ஆகக் குறைந்தது இவை இரண்டும் சமாந்தரமாக பயணிக்க வேண்டும். தனிப்பட்டதும் அரசியல் என்பது நாம் அறிந்தது. அந்தவகையில் நம் மீதான ஒடுக்கு முறையையும் உரிமைகளையும் மட்டும் முதன்மைப்படுத்துவதல்ல. அதற்காக போராடும் அதேவேளை நாம் ஒவ்வொருவரும் சமூக ஒடுக்குமுறை கட்டமைப்புக்கும் அதன் மேலாதிக்க கருத்துக்களுக்கும் எந்தளவு பங்களிப்பு செய்கின்றோம் என்பது கவனிக்கப்படவேண்டி முக்கியமான விடயம். மேலும ஆணாதிக்க சமூகம் கட்டமைத்த வரையறுத்த சமூக பாத்திரங்களை எந்தளவு முன்னெடுத்துச் செல்கின்றோம் என்பதும் கவனிக்கத்தக்கது. ஏனனில் இவை அனைத்தும் நமது பிரக்ஞையில் இல்லை. மாறாக சாதாரண வாழ்வியல் (normative) நடைமுறையாகிப் போனதில் பிரித்தரிய முடியாதுள்ளோம். இதில் நாம் பிரக்ஞைபூர்வமான முறிவை ஏற்படுத்த வேண்டியவர்களாக உள்ளோம். ஆவ்வாறான ஒரு முறிவை உயிர்ப்பு குழுவிலே அல்லது தமிழீழ மக்கள் கட்சியிலோ காணமுடியாததன் ஒரு காரணமே; நான் அக் கட்சியிலிருந்து விலகியது. இக் காரணங்கள் மே 18 இயக்கத்தில் அல்லது வியூகம் குழுவில் இல்லை என்பதற்கு எந்தவிதமான உத்திரவாதமும் இல்லை. இந்த விமர்சனத்தின் அர்த்தம் அவர்களது முயற்சியை குறைத்து மதிப்பிடுதலோ அல்லது குழப்பிவிடுதலோ அல்ல. இது ஒரு நேர்மறையான விமர்சனமே.

milgram experiments
http://www.youtube.com/watch?v=y6GxIuljT3w
http://www.psychologytoday.com/articles/200203/the-man-who-shocked-the-world
http://www.stanleymilgram.com/milgram.php

The 1971 Stanford Prison Experiment
http://www.prisonexp.org/legnews.htm
http://www.youtube.com/watch?v=fwdPpzaIbtI

நன்றி
மீராபாரதி
# HG on December 17, 2009 1:59 pm

புதியதோர் உலகம் link

http://puthiathorulagam.wordpress.com/
# Anonymous on December 17, 2009 3:31 pm

//தீப்பொறியில் இருந்து விலகியவர்களை இயக்க இரகசியங்கள் வெளியில் பரவாமல் இருக்க அவர்கள் படுகொலை செய்யப்பட வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்த……
பெரிஐயாவுக்கு (உமா மகேஸ்வரனுக்கு) சலூட் அடிக்க மறுத்தால் ஒரத்த நாடு பீ காமப் சிறைதான் என்று புளட்டில் சட்டம் கொண்டு வந்த…………//
இத்தகைய செய்திகள் உண்மையானால் இந்த ஜான், யாருக்காகவோ, யாரோ சிலரின் கட்டளைக்காகவோ வியுகம் அமைத்தவர்தான்.
# பல்லி on December 17, 2009 3:57 pm

புதியதோர் உலகம் நூலாசிரியர் கோவிந்தன் குறித்த விபரங்கள்

சொந்தப் பெயர் : சூசைப்பிள்ளை நோபேட்
புனைபெயர்கள் : டொமினிக், ஜீவன், கேசவன்
பிறப்பு : 1948.5.02 பாலையூற்று, திருகோணமலை
தந்தையின் பெயர் : மைக்கல் சூசைப்பிள்ளை
தாயின் பெயர் : நிக்கொலஸ் அன்னம்மா
# பல்லி on December 17, 2009 4:13 pm

//தீப்பொறியில் இருந்து விலகியவர்களை இயக்க இரகசியங்கள் வெளியில் பரவாமல் இருக்க அவர்கள் படுகொலை செய்யப்பட வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்த……
பெரிஐயாவுக்கு (உமா மகேஸ்வரனுக்கு) சலூட் அடிக்க மறுத்தால் ஒரத்த நாடு பீ காமப் சிறைதான் என்று புளட்டில் சட்டம் கொண்டு வந்த…………//

இதுக்கு ஜான் நேரடியாகவே தேசத்தில் பதில் தரலாம்; பின்னோட்டகாரர்தானே இவர்களுக்கு ஏன் நான் பதில் தரவேண்டும் என நினைக்கமாட்டார் என நின்னைக்கிறேன்; இவர் ராணுவ கட்டுபாடு மிக்கவர் என்பதை நானும் கேள்விபட்டேன்; ஆனால் இவர் தண்டனை பயிற்ச்சி சம்பந்தமாகவே இருக்குமாம்; ஆனால் சொல்லும் தண்டனை பற்றி எனிதான் விசாரிக்க வெண்டும் ஆகவே சம்பந்தபட்டவர் தனது நிலையை விளக்குவது சரியானதாக அமையும்; உமா மகேஸ்வரனுக்கு சலூட் அடிக்க மறுப்பவர்களை சிறைபோட சட்டம் கொண்டு வந்த யான் தான் ஏன் உமாவுக்கு சலூட்(ஆமா) அடிக்க மறுத்தார், விலகினார்; எழுதினார்; இது கூட குழப்பமாகவே இருக்கு; யான் வாருங்கள் விளக்குங்கள்;
# சு.ரவிச்சந்திரன் on December 17, 2009 4:39 pm

சுகுணகுமார் !
சும்மா தெரியாம எழுதாதையுங்கோ!
ரகுமான்ஜானுக்கு அடைக்கலம் கொடுத்த ஒரேஒருஆள் மட்டும்தான் இங்கிலாந்தில் இருக்கிறார். மிச்ச எல்லாரும் கனடாவில்தான் இருக்கினம்.
எங்களுக்கு நடந்த எல்லாம் தெரியும். இதுகளை கதைச்சு ஒரு பிரயோசனமும் இல்லை எண்டு வாயை மூடிண்டு இருக்கிறம்.
முந்தி மூலைக்கு மூளை வைரவர் கோயில் வைத்து கும்பிட்ட மாதிரி இவங்களும் இருக்கும்வரை எதோ பராயணம் படித்துக் கொண்டே இருப்பாங்கள். இவங்களாலை இனி பெரிசாக செய்ய ஒண்டும் ஏலாது. வெள்ளி பார்த்த வெள்ளி பார்க்கிற கூட்டம்.
பிரபாகரனுக்கு இருந்த அளவு அகந்தை இவங்களுக்கும் உண்டு. ஆனால் இவங்களுக்கு ஆளுமை கிடையாது. மற்றவர்களும் மரணத்திலும் பணத்திலும் குளிர்காய்ந்தவர்களால் வேறு எதுவும் செய்ய முடியாது சாகும் வரை அதைத்தான் தொடர போகிறார்கள். இந்த பாவப்பட்ட பிழைப்புவாதிகளை பற்றி கதைத்து ஏனைய்யா பொன்னான நேரத்தை வீணாக்குகிறீர்கள்?

தீப்பொறியையோ புளட்டையோ இவங்கள் வளர்க்கவில்லை. தீப்பொறி புளட் போன்றவற்றை வளர்த்த உண்மையான தோழர்கள் மாண்டுவிட்டார்கள். மிஞ்சினவர்கள் தற்போது சாப்பிடமட்டும்தான் வாயை திறக்கிறார்கள். தங்கள் எதிரியை விட தாங்கள் கட்டிய இயக்கத்துக்குள்ளேயே நூறு மடங்கு மோசமான கோரமுகங்களை கண்டு இன்னமும் விறைப்பில் இருக்கிறார்கள்.

முடிந்தால் முகாம்களில் இருந்து அத்தனையும் இழந்து பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு ஏதாவது பண பொருள் உதவி செய்யுங்கள்.
# சுந்தரேசன் on December 17, 2009 5:07 pm

சூசைப்பிள்ளை நோபேட்டின்(பாலையூற்று, திருகோணமலை) கருவில் உருவாகிய புதியதோர் உலகத்தை, புதியபாதையை சுந்தரத்தின் மரணத்துக்கு பிறகு மீண்டும் இலங்கையில் வெளியிட்ட தோழர், சென்னையில் விசுவானந்ததேவனின் பணஉதவியால் அச்சிட்டு வட இலங்கை முழுதும் வீடு வீடாக நேசனின் உதவியோடு விநியோகித்தார். குருடன் பார்த்த யானை மாதிரி இரயாகரன் முதல் பல கீபோர்டு ஆசாமிகள் புதியதோர் உலகத்தில் வரும் கதாபாத்திரங்களுக்கு இவர்தான் ரகுமான்ஜான் இவர்தான் நேசன் என்று கதை வேறு சொல்கிறார்கள்.
புதியதோர் உலகத்தில் எந்த ஒரு கதாபாத்திரமும் எந்த ஒரு தனிநபரையும் பிரநிதிபடுத்தாமல் வெவ்வேறு புளட் உறுபினர்களின் உண்மையான அனுபவங்களை கோர்த்து கதாபார்த்திரங்களை உருவாகியிருந்தார்கள் நோபேட்டும் புதியபாதையை சுந்தரத்துக்கு பின்னர் இலங்கையில் வெளியிட்ட தோழரும்.
# Kanna on December 17, 2009 6:28 pm

“Puthiyathor Ulagam” has been written by Susaipillai Nobert (Dominick, Gevan, Kasavan )from Trinco. Nobert particiapted so many poilitical activities while been student. He initiate the “Sangha Plagai” to educate the youth. After May 17 (I couldn’t remember the year may me 1992/3) Nobert not been seen by anyone.
After the 1983 riots PLOTE members amount incresed rapidly. Inthis time INDIA & PLO offered training opetion. INDIA gave 3 batch & PLO offere 2 batches. PLOTE doesn’t want to losee this option so they send all the members as much as they can. After these members went for training PLOTE adminiastration left with limited members.
Youth keep come from Srilanka for trainning. PLOTE started own training camps in Thenee, Kambam,Puthukoti, Tanjouor, Trichy etc. (Paranthan Rajan is all camp in-charge). In this time CID & LTTE infilration is big fear on new reuruite - it’s may be manipullated issue. Achuvelli Chandran & others got arrested as infiltrater. In this time Mathan escape from detention (dicipilinary attest) then Padukoti paniyar incident took palce. After Rajan has been removed and Vasudeva took control the camps. In this messy period is INTELIGENT TEAM, TOUTURE CAMP created with Vasudeva & Rajean’s control.In begining Cettikulam Senthil, Babuji, Morthy, Ravi, Valuvan, Shawdi etc.. were key members. When this incidnet become political issue, this team took control by Changili (this time first batch from PLO came back). After Changili took charge this team become Sulipuram team adn erspocible for Mugunthan’s security. Sangili promote the Sundram-Mugunthan(Pariiya) factor. Chetikullam senthil promote Kaththan-Mugunthan factor. other factors was Parthan-Mugunthan also visioble in training camps. These were become groups of wershipers within camps.

As training mastor, kanthan mastor (Jaan) is acceptable by rank & files. Becseue of his participation, attitude & behaviours. PLOTE got mixed up the miltry trainig and policical classses when Chandathiya’s plroblem goes. Outside trainers & training is taken with 100%miltry form but PLOTE dosen’t find the way to mingle wiht political assperation in trianings.
Arms shipment get caught - some talk goes carless management / used Panjab address and Golden temble operation vigilance made difficalties / PLOTE contrdiction wiht MGR and Mohandsas / Changilliy’s extrame action wiht Indian customs offecier / LTTE’s gunimindeed game / TULF’s hate wish activities - so many resons behind this lost - but Mugunthan cry for this lost.

Sivaram (Tharkey) is the first person creat the bad impresion about Shanththay in PLOTE for his personal benifite and Vasudeva made this gorw to keep his position in PLOTE. If Sandathy react wiselly maybe PLOTE better out come too.

Political divi control by Vasudeva - everyone knew his ability. He has been cheased by rank & file from the training camps. Asked him to do “Do ro Die”.
Militry divi control by Kannan - everyone knew his ability too - Even he dosen’t know to ride the motor bike.
INTL divi control by Shangili -
Lots of able leaders have been left out - they affraid to participate on this divi. So adminisrtation become wershipers groups. Noway of doing any corection within PLOTE. Luckiest and guniminded persons escape and still alive.
These escape pain and abilities no one can realize unless you gothrough all sitiuation ( small mistake will make me to die with out any marks or resons) - Noone want to remind these issues if you are eral escaper from this mess-

The CC team came from Jaffna, what they did to the camps - just excusses B.S - when the CC meeeting time Eswarn, Asoke,Rajean, Jaan, vavuniya-Athavan, Senthil, Babuji, have been offered to change all members - CC commitee become advice group and under house arrrest. New team who came from PLO training takking the control, Dismantel the I team and B camp - Wo was aginst and oposed this, grate Eswaran & Suppaiah. but by the end what these two did for PLOTE every one knew. But other point of view so call LAND COMMITEY was infitrated by LTTE -

By the end of 84 PLOTE become coktail of groups. Under cutting eachothers. I-team get more power, becasue they got the money arms and close to Mugunthan. Mugunthan even if he decided to do some impossible to do (only opetion he got kill himself). Respocilble of the Distraction of PLOTE account to all CC memebres and LAND COMMITEY - I-team is excution of the CC commmiteies mistakes.

I hope some one need to open it up more
thanks
# Anonymous on December 17, 2009 6:37 pm

‘ஆனால் அந்தப் படகு தென்திசை நோக்கியே சென்றுகொண்டிருந்தது.’
புதியதோர் உலகம் இவ்வாறு முடிகிறது. எழுதப்பட்ட முடிவு ஒரு தீர்க்கதரிசனமா? அல்லது அன்றைய நிதர்சனமா?
# மரியதாசன் on December 17, 2009 8:06 pm

நோபேட் முகவுரையில் சொன்னவை
“தமிழீழ விடுதலைப் போராட்டம் வன்முறையில் நம்பிக்கை கொண்ட ஆயுதமேந்திய போராட்டமாயினும் அது ஒருபொழுதும் அராஜகத்தன்மை கொண்டதாக மாறிவிடுவதை அனுமதிக்க முடியாது. விடுதலைப் போராட்டத்தில் என்றும் மனிதாபிமானமும், மானுட உயிர்ப்பிற்கான ஆவலும் மேலோங்கி இருக்க வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டம் இவற்றை இழந்து செல்லுமாயின் அது இன்னொரு அராஜகத்திற்கும் ஒடுக்குமுறைக்குமான வழியாகவே அமைந்து விடும்.

இந் நாவல் தனியொரு மனிதனின் படைப்பல்ல. பல தோழர்களின் ஆலோசனைகள், ஒத்துழைப்புக்கள் மூலம் உருவாக்கப்பட்ட கூட்டுப் படைப்பே இது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்ற உண்மைச் சம்பவங்களிலிருந்தே இந் நாவல் உருப்பெற்றுள்ளது.
இக் கதையின் கதாபாத்திரங்களில் இறந்தவர்கள் உண்மையில் இறந்தவர்கள் தான். உயிரோடு இருப்பவர்கள் இப்பொழுதும் உயிரோடுதான் இருக்கிறார்கள். ‘புதியதோர் உலகம்’ ஒரு இலக்கியமாகக் கருதி மாத்திரம் படைக்கப்படவில்லை. ஒரு அறைகூவலாகவும் கருதியே இது வெளிவந்துள்ளது”

மேலும் நோபேட் சொன்னதாவது:
“அராஜகமும் ஒடுக்குமுறையும் எந்த ரூபத்தில் வந்தாலும் அதற்கு எதிராகப் போராட வேண்டும். தன்னளவில் இந்தக் கயமைகளை வைத்துள்ள எந்த அமைப்பாலும் தமிழீழ மக்களுக்கு விமோசனத்தை வழங்க முடியாது”

:கடந்த 25 வருடமாக தென் திசையை தேடுவதாக சொல்பவர்கள் இனவெறியுடன் சிங்கள எதிர்ப்பு அரசியலில்தான் இன்னமும் நின்று உழன்றுகொண்டு மாக்சிசமும் மண்விடுதலையும் பேசுகிறார்கள் எழுதுகிறார்கள்.. குருட்டு வேதாந்திகள்!
# பல்லி on December 17, 2009 10:54 pm

//ரகுமான்ஜானுக்கு அடைக்கலம் கொடுத்த ஒரேஒருஆள் மட்டும்தான் இங்கிலாந்தில் இருக்கிறார்//
சுழிபுரம் புளொட்ட்டின் கோட்டை என்பது யாவரும் அறிந்த உன்மை; இறுதிவரை உமாவுடன் வலதுகரமாக இருந்தவர்கள் சுழிபுர நண்பர்கள்தான்; ஆனால் அதே சுழிபுரத்தில் அதே புளொட்டை நேசித்த குடும்பம்தான் தீப்பொறியினரையும் பாதுகாத்தது, இதை பல்லி சொன்னால் பையித்துயகாரன் பல்லி என சொல்லுவார்கள், ஆனால் அதுதான் உன்மை; புளொட்டின் மத்திய குழு உறுப்பினர்கள் யானும் கேசவனும்;ஆனால் மற்றும் தீப்பொறி நபர்கள் யார்???? அவர்கள் உன்மையில் கழகசெயல்பாடு காரனமாக தீப்பொறியில் இனைந்தனரா?? அல்லது தமது சுய பாதுகாப்புக்காக இனைந்தனரா?? இதில் நேசனும் அடக்கம்; இதில் சிலர் மிக கேவலமான விடயங்களில் ஈடுபட்டத்தையும் பலர் அறிய கூடும்; அத்துடன் தீப்பொறி சார்ந்தவர்கள் அனைவரும் ஒரே நோக்கத்துடன் கழகத்தை விட்டு செல்லவில்லை என கழகத்தினர் இன்றும் சொல்லுகிறார்கள். அப்படி போயிருந்தால் அவர்கள் பின்னால் பலர்(கழகத்தினர் ) போயிருப்பார்களாம்; அல்லது அதற்க்கு பின் கழகத்தை விட்டு பிரிந்த சில குழுக்களை ஏன் தீபொறி சேர்த்து கொள்ளவில்லை;
குறிப்பாக பரந்தன் ராசனை சொல்லலாம்; சகலத்துக்கும் விடை கிடைக்கும்போதுதான் வியூகம் சரியான பாதையில் போக முடியும்; அல்லது பாலா அண்ணா பாணியில் பளசுகளை கிண்டாதையுங்கோவெனில் இதுவும் ஒரு???
# sinnadurai on December 18, 2009 2:59 pm

நீண்ட காலமாகவே புனைகதைகளுக்குப் பழகிப்போன நமது மனம் நிசத்தை நம்ப மறுக்கிறது. உண்மை எதுவெனத் தெரிந்தும் ஒத்தக்கொள்ள முடியாத இயலாமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. புதிய புதிய பொய்களைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவையில் இருக்கிறது நமது இனம். இது நல்லதொரு மாற்றத்தை ஒருபோதும் நமக்குத் தந்துவிடப் போவதில்லை.
தமிழ் தேசியவாதிகள் சொல்வது போல் “தமிழ் மக்களுக்கு இருக்கின்ற கடைசி நம்பிக்கை விடுதலைப் புலிகள் தான். இலங்கை அரசிடம் இருந்து தமிழ் மக்களுக்கு ஏதாவது ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் அது விடுதலைப் புலிகள் காலத்தில் தான் முடியும்” என்று சொன்ன வார்ர்தைகள் இன்று எப்படிப் பொய்த்துப் போனது? இலங்கை அரசுடன் பலமேசைகளில் பேச்சுவார்த்தை நடாத்தியவர்களை இனி ஒருவித அரசியலிலும் இயங்க முடியாதபடி ஒன்றுமில்லாமல் செய்துவிட்டதற்கு காரணம் யார்? இவற்றிற்கு நாம் விடையை எப்போது தேடுவது?

வெறும் ஏமாற்றுத் தனங்களையே நீண்டநாட்களாக செய்து கொண்டிருக்க முடியாது. வெறும் தமிழ்த் தேசிய வெறியூட்டலில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டது. ஒவ்வொரு அரசியல் நிகழ்வுமீதும் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றம் இன்று அவசியமாகிறது. முப்பது வருடங்களுக்கு மேலாக கட்டிவைக்கப்பட்ட தமிழ்த்தேசிய கதையாடல் இன்று நம் கண்முன்னால் உருக்குலைந்துள்ளது. இங்கிருந்து நமது கடந்தகாலத் தவறுகள் குறித்த மீள்பார்வையைத் தொடங்கமுதல் இனிவரப்போகும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பரந்த மனதளவில் இருந்து எதிர்கொள்ள வேண்டியது மிக முக்கியமானதாகும். முதலில் விடப்பட்ட தவறுகளை நாம் எல்லோருமே அவரவர் நிலை சார்ந்து ஏற்றுக் கொள்ளுதல் என்பது மிக முக்கியமானது.

தங்களுடைய வருமானங்களுக்காக தமிழ் மக்களது வாழ்வைக் கேலிக்கூத்தாக்கியவர்கள் இந்தத் தமிழ்த்தேசிய வெறியர்கள். இவர்களே இன்னும் எஞ்சியிருக்கும் மக்களது வாழ்வை கேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருப்பவர்கள். தமிழீழ விடுதலையை நேசித்தவர்கள் அதற்காக தன்பிள்ளைகளை காவுகொடுத்த அந்த வன்னிமக்கள் விடுதலைப் புலிகளாலேயே கணக்கில்லாமல் கடைசி நாட்களில் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னால் இங்கை அரசினது வன்முறை பற்றியும் புதிய புரட்சி பற்றியும் புலம் பெயர் தமிழ் தேசியவாதிகள் அந்த மக்களுக்கு வகுப்பெடுப்பது என்பது எவ்வளதூரம் கொடுமையானது.
# சிறீ on December 19, 2009 6:19 pm

பல்லி உமக்கு ஆரோ நல்லாக புளுகி பீலா விடுகிறார்கள். தீப்பொறியில் ரகுமான் ஜான் இருக்கும்போது சுழிபுரம் பக்கமே போகவில்லை. தீப்பொறியில் ரகுமான் ஜான் இருக்கும்போது அராலிக்கு அங்காலை ஒரு அங்குலம் கூட காலே வைக்கவில்லை. வேணுமென்றால் ரகுமான்ஜானிடமே கேட்டுபாரும் பல்லி
# Thaksan on December 19, 2009 7:57 pm

தோழர் ஜான் பேய்க்கரம்பன்கோட்டையில்(இந்தியா-தமிழ்நாடு- தஞ்சாவூர் ஜில்லா) 1985ல் அமைந்திருந்த புளொட் இன் அதிரடி பயிற்சி முடித்த தோழர்களை சந்தித்ததே அவரின் புளொட் வாழ்வின் இறுதி அத்தியாயம். அந்த இறுதிநாளில் அவர் அங்கிருந்த தோழர்(முன்னாள்) ஒருவருக்கு பூட்ஸ் காலால் நெஞ்சில் ஓங்கி உதைத்ததே ஜானின் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இறுதி யுத்தம். அந்த தோழர் இன்றும் நெஞ்சு உபாதையால் பாதிக்கப்பட்டவராக கொழும்பில் தனியார் வர்த்தகத்தில் ஈடுபட்டு தனது வாழ்வை ஓட்டிக் கொண்டிருக்கிறார். உமாவை பெரியையா என விளிக்காததே அந்த முன்னாள் தோழர் செய்த தவறு என ஜான் அத் தருணத்தில் கூறியிருந்தாராம். புதியதோர் உலகம் ஒரு புனை நாவலே எனினும் அதில் சில உண்மைகளுமில்லாமலில்லை என்பதை அறிந்திருக்கிறேன். 1986 வரை புளொட் இன் உட்கொலைகள் (சந்ததியார்> காக்கா> அகிலன்-செல்வன் உட்பட) 38 மட்டுமே என முன்னாள் புளொட்டின் புலனாய்வு முக்கிய உறுப்பினர் (புலம்பெயர்நாட்டில் பின்னாள் புலி ஆதரவாளர்) கூறினார். ஜான் தன்னை சுய விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.
# பல்லி on December 19, 2009 9:32 pm

இதுக்குதான் சொன்னேன் சிலர் தம்மை ஒரு ஜீவிகளாக காட்டாமல் சிலரது சந்தேகத்தை தீர்க்க வேண்டும் என, சிறியின் கேள்விக்கு ரகுமானல்ல ஜெயபாலன் கூட பதில் சொல்லலாம், சிறி பல்லி பலரிடம் பலதை கேப்பேன், அதில் சிலர் புளுக கூடும்; ஆனால் அதை நம்பி வந்து பின்னோட்டம் இடும் அளவுக்கு இதுவரை நிலமை இல்லை; இருந்தாலும் சிறி எதுக்கும் பல்லிக்கு சொன்னதை தாங்கள் நேரம் இருந்தால் ரகுமானிடம் கேட்டு பாக்கலாமே; அதுசரி சுழிபுரம் என்ன முள்ளிவாய்க்காலுக்கு அருகாமையிலா உள்ளது; இந்த வாங்கு வாங்கிறியள், அராலிக்கும் சுழிபுரத்துக்கும் ஒரு 600 கிலோ மீற்றர் தூரம் இருக்குமா? என்னமாய் படுத்துறியள்;
# சிறீ on December 19, 2009 11:30 pm

பல்லி!
பல்லிதான் ஏதோ புளட்டின் சுழிபுரம் கோட்டைக்குள் ரகுமான் இருந்ததாக எழுதினீர்கள். எனக்கு ரகுமான் ஜானை கேட்கவேண்டிய தேவையே இல்லை எங்கள் கண்காணிப்பில்தான் இப்போ 26 வருடமாக ரகுமான் ஜான் இருக்கிறார்.
# Appu hammy on December 20, 2009 11:50 am

தமிழ் மக்களை காப்பாற்ற முடியாமல், அவர்களுடை உணர்வை மத்ததிக்கத் தெரியாமல் இருந்தாலும் பறவாயில்லை. தமிழர்களின் உணர்வுகளை, அவர்களுடைய வீரமிக்க வரலாறுகளை கொச்சைப் படுத்தாமல் இருங்கள்.

எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை நிரூபித்துக்கொண்டே இருங்கள் குறைகூறுபவா்களாயினும் கூறப்படுபவா்களாயினும் ஒரே கூட்டம்தான் வித்தியாசம் எதுவுமில்லை
# சிறீ on December 20, 2009 2:39 pm

அப்புஹாமி எப்ப இந்த பரப்புரை குழுவில் இருந்து வெளியில் வரப் போகிறீர்?
# பல்லி on December 20, 2009 10:01 pm

// எங்கள் கண்காணிப்பில்தான் இப்போ 26 வருடமாக ரகுமான் ஜான் இருக்கிறார்.//
ஏன் அவர் வேலைக்கு போவதில்லையா?
அவருக்கு குடும்பம் இல்லையா?
எங்கள் கண்காணிப்பு எனில் என்ன அர்த்தம்??
ஏதும் அமைப்பா?
அல்லது அவரை பின் தொடருகிறீர்களா?
ஜானுக்கும் உங்களுக்கும் உள்ள உறவு கழகம் சார்ந்ததா?
அல்லது தீப்பொறி சார்ந்ததா? இல்லாவிடில் வியூகமா?
பல்லிக்கும் சிறிதேனும் தெரியும் என்பதை சிறிக்கு புரிய வைக்க ஜெயபாலனுக்கும், கேசவன் சகோதரங்களுக்கும் உள்ள உறவை பற்றி பல்லி சொன்னால் போதுமா?? இதை உங்கள் கண்காணிப்பு குழு தணிக்கை செய்யுமா? அல்லது ஜான் KP உறவு பற்றி பேசுவோமா?? சிறி பல்லியின் நோக்கம் ஜான் மீது குற்றம் சாட்டுவதல்ல; விடுதலை சதிராட்டத்தில் அன்று விட்ட தவறுகளை இன்றும் விடாமல் செயல்பட்டால் மக்களுக்கு நல்லது ஆகவேதான் சில தவறுகளை சுட்டி காட்டினேன், ஜான் மீது எனது விமர்சன ஆரம்பமே ஜான் மிக திறமைசாலி என்பதுதான்; பெத்தவளுக்கு (தாய்) வந்தவள் மருமகள் ஏதோ சொன்னாளாம் என்பதுபோல் எமக்கு கதை சொல்ல வேண்டாம்; ஜான் பற்றி பலவிடயம் பல வருடத்துக்கு முன்பே நாம் அறிவோம்;

No comments:

Post a Comment