மாற்றம் என்பது மாறாதது; இங்கே தோழமைதேடி...

Dec 28, 2009

தேசத்திற்கு எதிரான சட்ட ஆவணமாகலாம்.

சேதுவும் தேசம் ஜெயபாலனின் பொறுப்பற்ற பத்திரிகா தர்மமும். : எஸ் சிவரூபன்
 
Thank you for Jayapalan and thesamnet
._._._._._.
 
விமர்சனக் கட்டுரைகள் சொந்தப் பெயரில் எழுதுவதற்கே தேசம்நெற் அழுத்தம் கொடுத்து வருகின்றது. இருப்பினும் இக்கட்டுரையை எழுதியுள்ள எஸ் சிவரூபன் என்பது புனைப்பெயர். கட்டுரையாளரது விமர்சனம் தேசம்நெற் ஆசிரியர்களில் ஒருவர் தொடர்பாக உள்ளதால் இவ்விமர்சனக் கட்டுரையை தேசம்நெற்றின் விதிமுறைகளுக்கு விலக்காக புனைபெயரிலேயே பிரசுரிக்கின்றோம். கட்டுரையின் இறுதியில் த ஜெயபாலனின் விளக்கக் குறிப்பும் இணைக்கப்பட்டு உள்ளது.
 
தேசம்நெற்
._._._._._.
 
டிசம்பர் 17 ம் திகதி இலண்டன் நேரத்துக்கு தேசம்நெற்றில் முன்னைநாள் நிதர்சனம் டொட் கொம் என்ற புலிகளின் இணையத்தள நிர்வாகி ஆகிய சேது என அழைக்கப்படும் நடராசா சேதுரூபன் மகிந்தவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய கொழும்புக்குச் செல்வதாக செய்திக்கட்டுரையை எழுதிய தேசம் ஆசிரியர் ஜெயபாலன் அக்கட்டுரையில் (http://thesamnet.co.uk/?p=18265) பின்வருமாறு எழுதுகிறார்.
 
"நடராஜா சேதுரூபன் இலங்கைத் தமிழ் மக்களின் வாக்கு வங்கிமீது பிடிமானத்தை கொண்ட ஒருவரல்ல. ஆனால் இலங்கையில் ஊடகவியலாளராகக் கடமையாற்றிய சேதுரூபன் காலஞ்சென்ற தவிபு இன் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் முதல் மனைவியுடன் பணியாற்றியவர். அதன் மூலம் அன்ரன் பாலசிங்கத்துக்கு அறிமுகமானவர். 2002 நோர்வேயில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ரிபிசி ஊடகவியலாளராகக் கலந்துகொண்ட சேதுரூபன் அன்ரன் பாலசிங்கத்துடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டவர்."
 
நடராசா சேதுரூபன் 1978 ம் ஆண்டு இலங்கையில் பிறந்தவர். துன்னாலையைச் சேர்ந்தவர். இப்பொதைய வயது 31 மட்டுமே. மேற்கூறிய விடயங்களை நாங்கள் சேதுவுடன் ஹாட்லிக்கல்லூரியில் படித்தவர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளோம். ஹாட்லிக்கல்லூரியின் இணையத்தளத்திலும் சேதுவின் தகவலை (http://www.hartleycollege.com/cgi-bin/hweb/form/more/all_info.cgi?SERIAL=2136 ) பார்க்கலாம். அன்ரன் பாலசிங்கம் அடேலை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்துகொண்டது 1978 இல். (ஆதாரம் அடேல் பாலசிங்கத்தின் நூல் - த வில் ரு பிறீடொம்) 1978 ம் ஆண்டுக்குமுதலே முதல் மனைவி நோய் காரணமாக மரணமடைந்துவிட்டார். அதாவது முதல் மனைவி சேது பிறப்பதற்கு முதலே இறந்துவிட்டார். பிறகெப்படி சேது முதல் மனைவியுடன் பணியாற்றியிருக்க முடியும்? இது மிகப்பெரிய பொய். தகவல்களின் நம்பகத்தன்மை பற்றியும் இலங்கையில் அவர் ஊடகவியலாளராக பணியாற்றியதையும் பின்னூட்டத்தில் வாசகர்கள் கேள்வி எழுப்பியபின்னரும் ஜெயபாலன் தானும் பின்னூட்டத்தில் வந்து பின்வருமாறு எழுதுகிறார்.
 


"சேது இலங்கையில் வீரகேசரியின் தினசரிப் பதிப்பிலும் குறிப்பாக ரிபிசி யில் இருந்து பிரியும்வரை ரிபிசி யிலும் பணியாற்றியவர். சேதுவுடன் சமகாலத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் இன்னமும் இலங்கையிலும் ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளனர். அவர்கள் அதனை உறுதிப்படுத்தியும் உள்ளனர். சேது வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் அன்ரன் பாலசிங்த்தின் முதல் மனைவியும் அங்கு பணிபுரிந்திருந்தார். அந்த உறவும் அன்ரன் பாலசிங்கத்தின் ஒரே ஊரவன் என்ற பிடிப்பும் ஒஸ்லோவில் சேதுவின் ரையை பாலா அண்ணை சரி செய்துவிடத் தூண்டியது."

 
பத்தாண்டுகளுக்கு மேலாக தரமான பத்திரிகைத்துறையில் இருப்பவர் ஜெயபாலன். புலிகள் மாற்று இயக்கங்கள் இலங்கை அரசு எல்லாவற்றினதும் அரசியலை நன்கறிந்தவர். அப்படியானவர் புலிகளின் ஏஜண்டாக இருந்த தன்னைவிட ஏறத்தாள எட்டு வயதுகள் குறைந்த ஒரு மூன்றாந்தரமான கோமாளியான போலிப் பத்திரிகையாளனிடம் இலகுவாக ஏமாந்து போனது எவ்வாறு?


பாலசிங்கத்தின் வயது என்ன? சேதுவின் வயது என்ன.? முதல் மனைவியுடன தான் வேலைசெய்தேன் என்று சேது ஜெயபாலனிடம் சொன்ன புழுகை உறுதிப்படுத்தாமலும் தகவலின் மூலத்தை வாசகர்களிடம் சொல்லாமலும் CNN fox news மற்றும் நிதர்சனம் டொட் கொம் பாணியில் ஜெயபாலன் ஒப்புவிப்பதன் மர்மம் என்ன? என்ன சுலபமாக ஊத்தை சேது ஜெயபாலனின் தலையில் மிளகாய் அரைத்துவிட்டுப்போகிறான்.
 
பத்திரிகையாளர்கள் தவறு செய்யாதவர்கள் அல்ல. நல்ல பத்திரிகையாளன் தான் தவறு செய்ததும் தவறைத்திருத்தி மன்னிப்புக் கேட்பான். இங்கோ ஜெயபாலன் தன்னுடைய தவறைத் தெரிந்த பின்னரும் தன்னுடைய மிக மோசமான தகவல் மூலத்தை(சேது) யும் தன்னுடைய மிகப்பலவீனமான செய்திக் கட்டுரையாக்கத்தையும் மறைப்பதற்காக பிடிவாதக்காரனாக இருப்பதைப் போலுள்ளது.
 
இலங்கையின் முக்கிய பத்திரிகையாளர்களாகிய இக்பால் அத்தாஸ் க்கும் டீ.பீ.எஸ். ஜெயராஜ் க்குமிடையில் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. இக்பால் அத்தாஸ் வேணுமென்றே பிழையான தகவலை எழுதுவதில்லை. தவறு சுட்டிக்காட்டப்பட்டால் அவர் அடுத்தவாரத்தில் தன்னுடைய தகவல் தவறை சுட்டிக்காட்டி திருத்துவார். டீ.பீ.எஸ். ஜெயராஜ் வேண்டுமென்றும் தவறுதலாகவும் பல தகவல் மற்றும் வாதப்பிழைகளைச் செய்வார். அவர் தவறு சுட்டிக்காட்டப்பட்டாலும் அதனை சரி செய்துகொள்ளமாட்டார். இதன் காரணமாகவே அத்தாஸ் சர்வதேச ரீதியிலும் மதிப்புக்குரிய பத்திரிகையாளராக இருக்கிறார்.
 
சேதுரூபனைப் பற்றிய ஜெயபாலனின் கட்டுரையானது ஜெயபாலன் என்ற பத்திரிகையாளனின் நம்பகத்தன்மை சுயாதீனம் மற்றும் பத்திரிகைசார் அறங்கள் சம்பந்தமான மிக வலுவான கேள்விகளை எழுப்புகிறது.
 
என்ன காரணங்களுக்காக நடராசா சேதுரூபன் இலண்டனைவிட்டு வெளியேறி அல்லது வெளியேற்றப்பட்டு இலங்கைக்குச் செல்லவேண்டி வந்தது? பன்னர் ஒரு ஆயசசயைபந Marriage of convenience மூலமாகவா சேதுரூபன் நோர்வே சென்றார்? இத்தகைய முக்கியமான விடயங்கள் ஜெயபாலனின் கட்டுரையில் வேணுமென்றே தவிர்க்கப்பட்டு விட்டன.
 
நிதர்சனம் டொட் கொம் விடுதலைப் புலிகளை விமர்சிப்பவர்களையும் மாற்றுக் கருத்தாளர்களையும் மிரட்டிப்பணிய வைப்பதற்காகவும் விடுதலைப் புலிகளின் பிரச்சாரங்களை மேற்கொள்ளவும் விடுதலைப் புலிகளால் கொல்லப்படப் போகிறவர்களின் "குற்றப் பத்திரிகையை" முன்கூட்டியே அறிவிக்கவும் புலிகளால் பயன்படுத்தப்பட்டது. இதனை நிர்வகித்தவர் சேது என்பதோடு சேதுவுக்கும் பொட்டம்மானுக்கும் நேரடித்தொடர்புகள் இருந்தது. அல்கைடா சம்பந்தப்பட்டு ஒரு இணையத்தை சேது நடாத்தி வந்திருந்தாரானால் இன்னேரம் அவர் சிறைக்குள்தான் இருப்பார். சேது பல கொலைகளுக்கு நிதர்சனம் ஊடாக உடந்தையாக இருந்தவர். மத்திய கல்லூரி அதிபர் ராஜதுரை கொல்லப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னரே கொலைத்தண்டனை அறிக்கை நிதர்சனத்தில் வந்தது.
 
இப்படிப்பட்ட சேதுவையும் ஜெயபாலன் கூறுகின்ற "ஜனநாயகவாதிகள்" மற்றும் ரயாகரன் ஆகியோரையும் ஜெயபாலன் ஒரே தளத்தில் வைத்து விமர்சிப்பது ஏளனத்திற்கும் கண்டனத்திற்குமுரியது. ரயாகரனின் கட்டுரை மொழி மட்டுமே கண்டனத்துக்குரியது என்றால் சேதுவின் இணையம் Psychological warfare செய்ததோடு நிஜத்தில் பல கொலைகளுக்கும் உடந்தைபோனது.
 
 
சேதுவிற்கு தமிழில் ஒழுங்காக எழுத வாசிக்கத் தெரியுமா என்பதே கேள்விக்குரியது. நல்ல ஆய்வுக் கட்டுரைகளையும் செய்திக் கட்டுரைகளையும் எழுதக்கூடிய பகுப்பாய்வுத்திறனுள்ள ஜெயபாலன் சென்ற ஆண்டிலிருந்து குழு அரசியலின் இயங்கியல் காரணமாக தன்னுடைய நடுநிலைத்தன்மையை விரைவாக இழந்து வருகிறாரோ என்ற ஐயம் எழுகிறது. நிர்மலா ராஜசிங்கம் இராகவன் முதலியோர் மீது தனிப்பட்ட கவனமெடுத்து அவர்கள் மீது நடுநிலமையற்ற புலி அடிவருடிகளான தமிழ்நதி போன்றவர்கள் எழுதிய கட்டுரைகளை பிரசுரித்ததும் மீள்பிரசுரித்ததும் ஆனது குழு அரசியலுக்குப் பலியாகியமையாலா? மாற்றுக் கருத்துக்களுக்கு இடமளித்து அவை பிரசுரிக்கப்பட வேண்டியவை என்பது நியாயமானதுதான். ஆனால் நிர்மலா ராகவன் போன்ற சிலருடன் சச்சரவு ஏற்பட்ட பின்னர் மட்டும் அச்சிலர் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி குறுகிய காலத்துக்குள் அவர்களைப்பற்றி வெளிவந்த "மாற்றுக்கருத்துக்" கட்டுரைகளை எழுதுவதற்கும் மீள்பிரசுரிப்பதற்கும் பின்னால் ஒரு குழு அரசியல் இருப்பதற்கான சாத்தியம் நிறையவுள்ளது. இப்போது ஜெயபாலன் ஊத்தை சேதுவை மிக மென்போக்கோடு அணுகியம் தற்பாதுகாக்கிற அளவுக்கு அரவணைத்தும் ஓரளவுக்கு நியாயப்படுத்தியும் செல்வதை ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும். ஜெயபாலனின் அளவுகோல்களில் இரட்டைத்தன்மை மேலோங்கிவருகிறதா? சேதுரூபனுடையதோடு ஒப்பிடுகிறபோது நிர்மலாவினதும் ராகவனினதும் நேர்மை எவ்வளவோ மேலானது. ஆனால் நிர்மலா முதலியாரையும் அவர்தம் ஜனநாயக இயக்க காரரையும் விமர்சிக்கிறபோது ஜெயபாலன் மிகக்கடுமையான அளவுகோல்களையும் கடுமையான மொழியையும் பயன்படுத்துகிறார். ஊத்தை சேது புலிகள் அழிந்த இப்போது மிகப்பரிதாபகரமாக வேண்டுகிற பிரபல்யத்தையும் ஏன் நம்பகத்தன்மையையும் கூட தன்னை அழித்தும் ஊத்தை சேதுவுக்குத் தருகிறார் ஜெயபாலன்.
 
குறித்த கட்டுரையில் ஜெயபாலன் தனது பெயரில் பின்வரும் பின்னூட்டமூடாக சேதுவை நியாயப்படுத்த முயல்கிறார்.
 
"படித்தவன் எல்லாம் பண்பாணவன் பண்பாணவன் எல்லாம் படித்தவன் என்ற இந்தச் சிந்தகனயே சேதுவினை ஒரு ஊடகவியலாளனாக பொறுப்பான தொழில் செய்பவனாக பார்க்க முடியாமல் தடுக்கின்றது. என்னைப் பொறுத்தவரை சேது ஒரு தெரிந்த கெட்டவன். இங்கு ஒளிவு மறைவு இல்லை.
 
ஆனால் இங்கு பின்னூட்டங்கள் சொல்லும் ஊடக நேர்மையை எப்படி மதிப்பிடுவது. ஜனநாயம் மார்க்ஸியம் புரட்சி பேசுகின்ற ஊடகங்களுக்கும் சேதுவின் அன்றைய எழுத்துகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. தமிழ்சேர்க்கிள் இணையத்தளத்தின் இத்தொடுப்பில் உள்ள கருத்துக்களை ஒரு தடவை பார்க்கவும். (18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும்) http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6223:2009-09-11-10-49-49&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50
 
சேது பின்னணியில் இருந்ததாகக் குற்றம்சாட்டப்படும் நிதர்சனம் இணையத்தில் அல்லது மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள இணையங்களில் எழுதப்பட்டவைக்கும் தமிழ் சேர்க்கிளில் உள்ள கருத்துக்கும் என்ன வித்தியாசம். தமிழ்சேர்க்கிளில் மே 18க்குப் பின் அதன் மொழியில் ஓரளவு திருப்பம் ஏற்பட்டு உள்ளது. அதற்கு முன் இரயாகரனனின் கட்டுரைக்கும் நிதர்சனம் கட்டுரைகளுக்கும் என்ன வேறுபாடு? நிதர்சனம் கட்டுரையில் மார்க்சியம் சோசலிசம் லெனின் மாஓ போன்ற சொற்கள் காணப்படமாட்டாது. மற்றுப்படி இரு இணையங்களிலும் தமிழில் உள்ள அத்தனை வன்மம் கொண்ட சொற்களையும் பார்க்கலாம்.
 
லண்டனில் பத்திரிகை நடத்தியவர் தலைமறைவாக இருந்து நடத்திய பின்னூட்டம்.கொம் இணையத்தளம் அதில் கருத்துக்கள் மொட்டைக் கடிதங்கள் எழுதிய ஜனநாயகவாதிகள், மாவோயிஸ்ட்டுக்கள் இவர்களையெல்லாம் எப்படி மதிப்பிடுவது. இவர்கள் எழுதியதற்கும் சேது எழுதியதற்கும் எவ்வித வேறுபாடுகளும் இல்லை.
 
சேது முக்காடு போடாமல் அவற்றைச் செய்ய மற்றையவர்கள் முக்காடு போட்டுக்கொண்டு அதனைச் செய்கிறார்கள். இந்த ஊத்தைக் கனவான்கள் ஒரு இயக்கத்திற்கு அல்லது ஒருசாராருக்கு மட்டும் உரித்தானவர்கள் அல்ல. இவர்கள் ஜனநாயகம் மார்க்ஸியம் படித்தவன் பொறுப்பான தொழில் செய்பவன் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு சமூகத்தை மெல்ல மெல்ல நாசமாக்குகிறார்கள். சேது போன்றவர்களை இலகுவில் அடையாளம் கண்டு சிகிச்சையளிக்கலாம். ஆனால் மற்றையவர்களை அவ்வளவு இலகுவாக அடையாளம் காணவும் முடியாது சிகிச்சை அளிக்கவும் முடியாது. இவர்களே சமூகத்திற்கு மிக ஆபத்தானவர்கள். மிகமோசமான சமூகக்கொல்லிகள்." - த ஜெயபாலன்.
 
ஜெயபாலனின் கட்டுரைக்கூடாக மட்டும் சேது தனக்கு பிரபலம் தேடாமல் பின்னூட்டங்கள் ஊடாகவும் தேடுகிறார். இதனையும் ஜெயபாலன் அனுமதித்துள்ளார்.
 
ஊத்தை சேது என்கிற சந்தர்ப்பவாத பச்சோந்தியின் இப்போதைய strategy பின்வருமாறு. நிதர்சனம் டொட் கொம் இயக்குனராக இருந்தபோது தனக்கும் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைக்குமிருந்த தொடர்பை பகீரதப்பிரயத்தனம் செய்து மறைப்பது. தனக்கும் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுக்குமிடையிலேயே அதிலும் குறிப்பாக அன்ரன் பாலசிங்கத்துக்குமிடையிலேயே தொடர்பு இருந்ததான புதிய மாயப்புனைவை ஊடகங்கள் ஊடாக கட்டமைப்பது. புலிகள் அழிந்த இக்காலத்தில் மகிந்த ஆட்சியோடு தொடர்பு எடுப்பது. மீண்டும் புதிய எஜமானர்களுக்கு ஊடக ரவுடியாகி (எப்போதும் போலவே வேலை வெட்டிக்குப்போகாது) செல்வாக்கையும் செல்வங்களையும் அனுபவிப்பது.
 
ஐரோப்பாவில் criminal recordஐ உடைய ஒரு பச்சோந்தியும் கோமாளியுமானவரை மகிந்தவோ அல்லது சரத் பொன்சேகாவோ தங்களது பிரச்சாரத்துக்கு உபயோகிப்பார்களாயின் அவர்களிக்கு கிடைக்கவிருக்கும் தமிழ் வாக்குகளும் கிடைக்காமலே போகும்.
 
 
தேசம் நெற் போன்ற பொறுப்பான பத்திரிகைகள் சேது போன்றவர்களின் வேலைத் திட்டங்களுக்குப் பலியாகமல் இருக்க வேண்டும்.
._._._._._.
 
 
த ஜெயபாலனின் குறிப்பு:
 
//இலங்கையில் ஊடகவியலாளராகக் கடமையாற்றிய சேதுரூபன் காலஞ்சென்ற தவிபு இன் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் முதல் மனைவியுடன் பணியாற்றியவர்.//
 
மேற்படி குறிப்பில் //’முதல் மனைவியுடன்’ என்பது ‘அன்புக்குரியவருடன்’// என்று வந்திருக்க வேண்டும். தகவல் மூலம் அன்புக்குரியவர் என்று அவரது பெயரைக் குறிப்பிட்டு இருந்தது. அதனைக் கேட்டுப் பதிவு செய்யும் போது நான் தவறாக அது அவருடைய மனைவி என்று அர்த்தப்படுத்திக் கொண்டேன். மேற்படி அந்த அன்புக்குரியவருடன் சேது வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றி இருந்தார். முதல் மனைவி பற்றிய எஸ் சிவரூபனின் குறிப்புச் சரியானதே. ஏனையவை எஸ் சிவரூபனுடைய ஊகம் அல்லது விமர்சனம்.
 
தவறுக்கு வருந்துகிறேன். முன்னைய கட்டுரையிலும் இத்திருத்தத்தை மேற்கொள்கிறேன்.
 
த ஜெயபாலன்
 
Comments:
 
1. chandran.raja on December 28, 2009 1:39 pm
 
சேதுவுக்கு ஒரு இணையத்தளம் ஊத்தை சேதுவை விமர்சிப்பதற்கும் அவருக்கொரு கட்டுரை எழுதிக் காத்துக் கொண்டிருப்பவர்களும் தேசம்நெற் இடம் தருமாக இருந்தால் அந்த தேசம்நெற் தேவையே இல்லை. " தேசம்" தேசம்நெற் ரை பத்து வருடங்களுக்கு மேலாக நான் பார்த்து வருகிறேன்.
த.ஜெயபாலனின் நேர்மையில் நான் சந்தேகப்பட மாட்டேன் என ஒரு பின்னோட்டம் இட்டிருந்தார்.
 
அதையே நானும் சொல்லுவது. கதிரையில் குந்தியதும் முதலில் தேசம்நெற்றை பார்த்துவிட்டு மற்றம் மீதியை தொடருவேன். அதே போலத்தான் றயாகரனின் பிரச்சனையும். பழைய நாறிப்போன தமிழ்தேசத்தை கிளறிக்கிளறி முகர்ந்து பார்பவர்களுக்கு றயாகரனை விமர்சிக்க என்ன உரிமை இருக்கிறது. அது ஒரு பொதுயுடைமைவாதிகளுக்கு மட்டுமே!.
இது போன்ற தவறுகளை தேசம்நெற் திருத்திக் கொள்ளும் என்பதில் எமக்கும் ஏதோ நியாயம் உண்டு.
 
2. Sethurupan on December 28, 2009 2:13 pm
 
ஊகங்களை கட்டுரையாக வடித்து அதற்கு ஒரு ஊடகம் தேடும் போலிப் பேருக்கும் அதை காவிவரும் தேசத்திற்கும் பாராட்டுகள்.
 
சிவரூபனுடைய ஊகத்திற்கு நான் பதில் கொடுக்க தேவை இல்லை என்றே கருதுகின்றேன். பயனுள்ள விமர்சனங்களுக்கு பதில் கொடுக்க தயார்.
 
சிவரூபனுடைய ஊகம் சேதுவை அவமரியாதைக்கு உட்படுத்துமாக இருந்தால் அது சட்டத்திற்கு முரணானது என்பதை தேசம் த ஜெயபாலன் இந்த கட்டுரையை இணையத்தில் ஏற்றமுதல் சிந்தித்திருக்க வேண்டும்.
 
இந்த கட்டுரை தேசத்திற்கு எதிரான சட்ட ஆவணமாகலாம்.

No comments:

Post a Comment