தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா பிரான்ஸ் வந்து லண்டன் சென்றதாகக் கூறப்படுவதற்கும் கருணாவின் நிதி பரிமாற்றங்களுடன் தான் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார் எம் ஆர் ஸ்ராலின். 21 ஒக்ரோபர் 2007 தலித் மாநாட்டின் இறுதியில் ஸ்ராலினுடன் தேசம்நெற் இணையத்தளம் சார்பாக வினவிய போதே ஸ்டாலின் இம் மறுப்பைத் தெரிவித்தார். அப்படியானால் ஏன் இதுவரை இது தொடர்பான எந்த மறுப்பையும் வெளியிடவில்லை எனக் கேட்டதற்கு அது தொடர்பாக தான் சிந்திப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
மாற்றுக் கருதுக்கொண்ட ஊடகங்களான ரிபிசி வானோலி, tamilweek இணையத்தளம் போன்றவையே இவ்வாறான ஒரு சேறடிப்பைச் செய்தது தனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருப்பதாகவும் ஸ்ராலின் தனது மனவருத்தத்தை வெளியிட்டார்.
பொறுப்பு மிக்க ஊடகவியலாளர் எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் டிபிஎஸ் ஜெயராஜ் பொறுப்பற்ற தீப்பொறி போன்ற இணையத் தளங்களை மேற்கோள் காட்டி எழுதுவது அவரது செய்தித் தகமையின் தரத்தையே காட்டுகிறது எனவும் ஸ்ராலின் தேசம்நெற் இணையத் தளத்திற்குத் தெரிவித்தார்.
ஊடகங்கள் பொறுப்புடன் செயற்படுவது இன்றைய காலத்தின் அவசரத் தேவையாகும். அந்த வகையில் ஸ்டாலினுடைய இக்குற்றச்சாட்டுக்கு பொறுப்புள்ள ஊடகங்கள் என்ற வகையில் பொறுப்புடைய நபர்கள் என்ற வகையில் சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்புடன் பதிலளிப்பது அவசியமானதும் அவசரமானதுமாகும். நெருப்பில்லாமல் புகையாது என்பதற்காக வதந்திகளை செய்திகளாக்க முடியாது.
என்மீதான சேறடிப்புகளையும் குற்றச்சாட்டுகளையும் கடுமையாக மறுக்கின்றேன்.
எம்.ஆர்.ஸ்ராலின் (ஞானம்)
கடந்த சில வாரங்களாக ரி.எம்.வி.பி. அமைப்பினருடன் தொடர்பு படுத்தி என்மீது பலவேறு குற்றச்சாட்டுக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் ஐரோப்பிய மட்டத்தில் வதந்திகள் மூலம் ஓருசில மோசமான நபர்களால் மேற்படி குற்றச்சாட்டுக்கள் பரப்பப்பட்டுவந்தன. அதன் பின்னர் ரி.பி.சி. வனொலி மேற்படி குற்றச்சாட்டுக்களை பெயர் குறிப்பிடாது பூடகமான முறையில் தனது நாளாந்த செய்திகளாக வெளியிடத் தொடங்கியது. கருணா நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்கின்ற செய்திகளுடன் இணைத்து எனது பெயரை தீப்பொறி எனும் இணையத்தளம் தனது ஆங்கிலப் பக்கத்தில் ஒக்டோபர் 07 ஆம் திகதியில் பிரசுரித்தது. ஆதாரமற்ற வகையிலும் அநாகரிகமாகவும் வெளியாகின்ற புலிகளின் நிதர்சனம் போன்ற இணைத்தளங்களை நான் எப்படிக் கண்டுகொள்வதில்லையோ அதைபோல் இவற்றையும் நான் கண்டுகொள்ளவில்லை.
ஆனாலும் பொறுப்புமிக்க பத்திரிகைத் துறையில் நீண்டகாலமாகச் செயற்பட்டுவரும் டி.பி.எஸ்.ஜெயராஜ் அவர்கள் ஒக்டோபர் 13 ம் திகதியன்று தனது தமிழ் வீக் கட்டுரையொன்றில் கருணாவினுடைய லண்டன் பயணம் குறித்து நீண்ட கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் எனது பெயரையும் இணைத்து பாரிஸ் ஊடான அவரது பயணத்திற்கு நான் உதவியதாகவும், பாரிசிலுள்ள இலங்கைத்தூதரகத்தின் உளவுப்பிரிவினருடன் தொடர்பு கொண்டதாகவும் பொய்யான செய்திகளை அதில் குறிப்பிட்டிருந்தார். எந்தவித ஆதாரங்களும் இன்றி சமூக விரோதிகளால் நடாத்தப்படுகின்ற தீப்பொறி போன்ற இணையத்தளங்கள் வெளியிடும் சேறடிப்புகளை தனது இராணுவ அரசியல் ஆய்வுக் கட்டுரைகளில் தகவல்களாக சேர்த்துக்கொள்வது ஜெயராஜ் போன்ற பத்திரிகையாளர்களின் பொறுப்பற்ற செயலாகும். இதுபோன்ற செய்தி பொறுக்கித்தனங்கள் அவரது கடந்தகால மற்றும் எதிர்கால எழுத்துகள் மீதான நம்பகத் தன்மை மீது கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
கடந்த 22 ஆம் திகதி மீண்டும் தீப்பொறி இணையத்தளம் தனது தமிழ் செய்தித் தளத்தில் ரி.எம்.வி.பி. யின் உட்கட்சிப் போராட்ட சிக்கலுக்குள் என்னை இணைத்து எனது பெயரில் பாரிசில் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் என்னை, எனது எழுத்துகளை, எனது ஜனநாயக வேலைத்திட்டங்களை மதிக்கின்ற பலரது வேண்டுகோளின் பெயரிலேயே இந்த மறுப்புச் செய்தி எழுதும் முடிவுக்கு வந்தேன். கடந்த 17வருடங்களாக பிரான்சில் வாழும் நான் என்னால் முடிந்தவரை ஒடுக்கப்படுகின்ற மக்கள் மீதான கரிசனை கொண்டு செயற்பட்டு வருபவன். கருத்துச் சுதந்திரத்துக்காகவும் ஜனநாயக மீட்புக்காகவும் மிகவும் கடுமையான உழைப்பை தொடர்ச்சியாகச் செய்து வருபவன். அதுபோன்ற செயற்பாட்டில் இருப்பவர்களுடன் இணைந்தும் பங்களித்தும் என்னை அடையாளம் காட்டி வந்துள்ளேன். அது சிறு சஞ்சிகை, பத்திரிகை, நூல்வெளியீட்டுத்துறை, வானொலி, இலக்கியச்சந்திப்பு, இணையத்தளங்கள்….. என்று எவ்வித ஊடகங்களாக இருந்தாலும்சரி புலிகளது அராஜகத்துக்கு எதிராகவும், தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் குறிப்பாக ஒடுக்கப்படும் பிரிவினரான முஸ்லிம்கள், தலித்துகள் போன்றோரின் அரசியல் உரிமைக்காக புகலிட இலக்கிய அரசியல் துறையினூடாக கணிசமான பங்களிப்பினை செய்து வந்துள்ளேன். அந்த வகையில் யாழ்ப்பாணப் பிரதேச மேலாதிக்கத்தினால் ஒடுக்கப்படுகின்ற பிரதேசங்கள் குறித்து மிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றேன். அதனூடாக கிழக்கு மாகாண மக்களின் முன்னேற்றம், அவர்களது அரசியல் எதிர்காலம் என்பவற்றுக்காக மிக நீண்டகாலமாகவே எனது குரல்கள் ஒலித்து வருகின்றது. இவையனைத்தும் நான் இரகசியமாக செய்துவரும் வேலைத்திட்டங்கள் அல்ல. மிகப் பகிரங்கமாகவே எனது செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.
கிழக்கிலங்கை மாணவர்களின் மேம்பாடு கருதி கிழக்கிலங்கை கல்வி கலாசார ஒன்றியம் எனும் அமைப்பினையும், அப்பிரதேசத்தின் ஜனநாயக மீட்சிக்காக ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி எனும் அமைப்பையும் உருவாக்கி செயற்பட்டு வருகின்றேன். இவ்விரு அமைப்பினதும் உருவாக்கங்கள் புலிகளிலிருந்து கருணா பிளவு படுவதற்கும் ரி.எம்.வி.பி யின் உருவாக்கத்திற்கும் முற்பட்டவையாகும். இவற்றையெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான எனது வேலைத்திட்டங்களில் ஒரு பகுதியாகவே நான் கருதிவருகின்றேன். ஆனால் இவ்வேலைத்திட்டங்கள் மீது அதிருப்தியும் காழ்ப்பும் கொண்டிருக்கக் கூடிய சில மக்கள் விரோதச் சக்திகள் என்னை ஒரு பிரதேசவாதியாக சித்தரித்து வந்துள்ளனர். தற்போது ரி.எம்.வி.பி.இற்குள் ஏற்பட்ட உட்கட்சி ஜனநாயகத்துக்கான போராட்டங்களும் அதனை ஒட்டி பரப்பப்பட்டு வரும் வதந்திகளும் என்னை பிரதேசவாதியாக சித்தரித்து வந்தவர்களுக்கு நல்ல வாய்ப்பினை வழங்கியுள்ளது. இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி என்மீது சேறடிக்கும் முயற்சியில் மேற்படி சக்திகள் இப்போது இறங்கியிருக்கின்றன. ஐரோப்பா எங்கும் நடந்து வருகின்ற அரசியல் விவாதங்களிலும் தீர்வுத்திட்டங்கள் நோக்கிய உரையாடல்களிலும் ஓயாது நான் முன்வைத்து வருகின்ற கருத்துக்களுக்கு மாறான கருத்துக் கொண்டிருப்பவர்களில் ஒரு பகுதியினரே இத்தகைய சேறு பூசலில் இறங்கியிருக்கின்றனர்.
கடந்த 17 வருடங்களாக புலிகளது ஜனநாயக மீறல்களுக்கு எதிராக நான் பகிரங்கமாக செயற்பட்டு வருகின்ற போதிலும் இதுவரை தனிப்பட்ட முறையில் என்மீதும் எனது பெயர் மீதும் புலிகளால் கூட களங்கம் ஏற்படுத்த முடியவில்லை. காரணம் நான் இயக்கவாதங்களுக்கு அப்பாற்பட்டு எந்தவொரு கட்சியையோ குழுவையோ சாராது சுயமாகவும், சுதந்திரமாகவும் இயங்கி வருபவன். அத்தோடு தனிப்பட்ட வாழ்வில் உண்மையாகவும், எளிமையாகவும், நேர்மையாகவும் வாழந்துவருபவன். ஆனால் இன்று நான் கொண்டுள்ள அரசியல் கருத்துக்களை மலினப்படுத்த குறுக்கு வழியைக் கையாளும் நிலைக்கு ஜனநாயக முகம்கொண்ட வேடதாரிகள் சிலர் களமிறங்கியுள்ளனர். கருத்துக்களை கருத்துக்களால் வெல்லமுடியாத கோழைகளாகவே இவர்களை நான் காண்கின்றேன். என்னை வன்முறையாளனாகவும் அதிகார சக்திகளுக்கு விலை போகின்றவனாகவும் காட்டி எனது குரல்களை அடக்கி ஒடுக்கவும், அரசியலில் இருந்து என்னை ஓரம்கட்டவும் போடப்பட்டிருக்கின்ற சதித்திட்டமும் இதுவென கருதுகின்றேன்.
கிழக்கு மாகாண அரசியல் குறித்து நான் கொண்டுள்ள கருத்துக்கள் இச்சேறடிப்புகளுக்கு வாய்ப்பானதாய் அமைந்துள்ளது. அது ரி.எம்.வி.பி. யினருடன் என்னை இணைத்துப் பேச இத்தீய சக்திகளுக்கு வாய்ப்பளித்துள்ளது. கிழக்கு மாகாண மக்கள் குறித்து பேசுவதென்பது ரி.எம்.வி.பி. இற்கு மட்டும் குத்தகைக்கு கொடுக்கப்பட்ட ஒன்றல்ல. கிழக்கு மக்களின் தனித்துவங்களுக்காக குரல் கொடுக்கின்ற எல்லோருக்கும் ரி.எம்.வி.பி. சாயம் பூசுவதானால் தமிழ் பேசும் மக்கள் என்று உச்சரிக்கின்ற ஒவ்வொருவரும் முதலில் தங்கள் மீது புலிச்சாயங்களை பூசிக்கொள்ளட்டும். அரசியல் ரீதியில் எனது வேலைத்திட்டங்கள் பகிரங்கமானவை. ரி.எம்.வி.பி. இன் உருவாக்கம் அதன் நோக்கம் போன்றவை கிழக்கு மாகாண மக்களின் நலன்களுடன் ஒத்துப்போகின்ற புள்ளிகளில் நான் அவர்களை ஆதரிப்பவன் என்பதில் எவ்வித ஒழிவு மறைவுமில்லை. இவற்றை பகிரங்கமாக ஒத்துக்கொள்ள நான் தயங்குபவன் அல்ல. அது எனது அரசியல் உரிமை. அதை எந்தவொரு கணத்திலும் யாரிடமும் நான் விட்டுக்கொடுக்கப்போதில்லை. ஆனால் இந்த கோட்பாட்டு ரீதியான ஒத்திசைவென்பது வேறு, ரி.எம்.வி.பி. இயக்கத்தினுடைய கட்சிசார் நடவடிக்கைகள், நடைமுறைப் பிறழ்வுகள் என்பவை வேறு.
ஆகவே திட்டமிடப்பட்ட வகையில் ரி.எம்வி.பி.யின் உட்கட்சிப் போராட்டம் சார்ந்த சிக்கலுக்குள் எனது பெயரை சம்பந்தப்படுத்துவதை நான் கடுமையாக மறுதலிக்கின்றேன். அதையொட்டி என்மீது ஏற்படுத்தப்படுகின்ற கறை பூசல்கள் யாவும் அரசியல் நேர்மையற்ற போக்கிரித்தனங்களின் வெளிப்பாடேயாகும். எனது ஆரம்ப கால அரசியல் நடவடிக்கைகளில் நான் புளொட் அமைப்பினுடைய தமிழீழ மாணவர் பேரவையுடன் மட்டுமே சம்பந்தப்பட்டவன். என்னைத் தெரிந்த அனைவருக்கும் இது பகிரங்கமான உண்மை. இதைக்கூட அறிந்துகொள்ள முடியாது நான் ஒரு முன்னாள் புலிப்போராளி என ஜெயராஜ் எழுதியுள்ளார். தீப்பொறியின் பொய்மூட்டைகளுக்கு குஞ்சம் கட்டி ஊடக அந்தஸ்து கொடுத்திருக்கும் டி.பி.எஸ்.ஜெயராஜ் அவர்களின் ஆய்வு நகைப்புக்குரியதொன்று. நான் பங்கெடுத்த இயக்கத்தின் பெயரைக்கூட அறிந்துகொள்ள முடியாத டி.பி.எஸ்.ஜெயராஜ் அவர்கள் கருணாவின் நகர்வுகள் குறித்து கதை எழுதுவதை எண்ணி என் வாய் அல்ல பிண்டமே சிரிக்கிறது.
இதுபோன்ற செய்திகள் எனை நோக்கி புலிகளின் பார்வையை திருப்பிவிட்டு என்னை ஆபத்தில் மாட்டிவிடும் நயவஞ்சககர்கள் ஒருசிலரின் குள்ள நோக்கில் இருந்து எழுபவை என்பதை ஜெயராஜ் போன்றவர்கள் முதலில் அறிந்துகொள்ள வேண்டும். என்னை உள ரீதியாக நோகடித்து எனது இலக்கிய அரசியல் வேலைத்திட்டங்களில் இருந்து ஓரம் கட்டும் முயற்சியில் இறங்கியிருக்கின்ற அரசியல் போக்கிரிகளின் பூச்சாண்டிகள் எதுவுமே எனது உண்மையான ஜனநாயக செயற்பாடுகளின் முன்னால் வேகாது என்று அறிவிப்பதோடு, என்மீதான இந்த சேறு பூசல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை, அநீதியானவை என்று கூறி இவை அனைத்தையும் கடுமையாக மறுக்கின்றேன்.
This entry was posted on Thursday, October 25th, 2007 at 9:00 pm and is filed under செய்திகள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
27 Comments so far
kumar on October 26, 2007 4:46 pm
LTTE is a no 1. Our leader Pirapakaran.
விதுரன் on October 27, 2007 11:19 am
ஸ்ராலின் கருத்துகள் கவனத்தில் கொள்ளப்பட்டு ரி.பி.சி. அவரது தன்னிலை விளக்கத்தை தனது செய்தி அறிக்கையில் சேர்த்துக் கொள்ளாதது, நடுநிலை வானொலியாக ரி.பி.சி. தொடர்ந்து செயல்படும் என்பது சுத்த பம்மாத்து.
kumar on October 29, 2007 1:12 pm
our ledar prpakaran our netiol tamil eelam
don;t riget ane ?????????
Karunithasan on October 29, 2007 9:50 pm
நண்பர் ஞானம் என்கின்ற ஸ்டாலினுக்கு:
உங்களின் கட்டுரை வாசித்தேன் அழகான புனைவுகளைக் கொண்டு அக்கட்டுரைக்கு வடிவம் கொடுத்துள்ளீர்கள் .உங்களின் எழுத்துத்திறமைக்கு என் பாராட்டுக்கள். உங்களை அறியாத அப்பாவி வாசகர்ளை உங்களின் இந்த பட்சாதாப புனைவுக் கடிதம் உங்கள் மீது அனுதாபங் கொள்ள வைத்திருக்குமென்றே நம்புகின்றேன் .அந்தவகையில் நீங்கள் எடுத்த இந்த பதில் அறிக்கை முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றிருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். ஆனால் மறுபுறம் உங்களை நன்கறிந்த பலருக்கு உங்களின் அறிக்கை கவுண்டமணியின் நகைச்சுவை உணர்வையே தருகின்றது.
நண்பரே நான் எழுதும் இக்கடிதம் கருணா அம்மானுக்கும் உங்களுக்குமான கொடுக்கல் வாங்கல் பற்றியோ அல்லது அவர் பணத்தில் பிரான்சில் நீங்கள் வாங்கியதாக சொல்லப்படுகின்ற சொத்துக்கள பற்றியதோ அல்ல. இது உங்களுக்கும் கருணா அம்மானுக்கும்மான விடயம்.
நான் கூறவிரும்புவதெல்லாம் நீங்கள் உங்கள் அறிக்கையில் கூறியுள்ள “புனைவுக் கதைகள்” தொடர்பாகவே. முதலாவதாக நீங்கள் கிழக்கிழங்கை மாணவர்களின் கல்வி மேம்பாடு கருதி கிழக்கிழங்கை கல்வி கலாச்சார ஒன்றியம் எனும் அமைப்பினையும் அப்பிரதேசத்தின் ஜனநாயக மீட்சிக்காக ஜனநாயகத்திற்கான கிழக்கிழங்கை ஜனநாயக முன்னனி எனும் அமைப்பினையும் உருவாக்கி செயல்படுவதாக கூறியிருக்கிறீர்கள். நண்பரே பென்னாம்பெரிய புசனிக்காயை கொஞ்சுண்டு சோற்றுக்குள் மறைக்கும் செயலாக இது உங்களுக்கு படவில்லையா நண்பரே கிழக்கிழங்கை கல்வி கலாச்சார ஒன்றியத்தின் தோற்றம் என்பது கிழக்கு மக்களின் கல்வி மீதும் பொருளாதார கலாச்சார வளர்ச்சி மீதும் சமூக அக்கறை கொண்ட சில நண்பர்களின் அயராதமுயற்சியினால் உருவாக்கப்பட்டதொன்று. அதனுள் நீங்கள் நயவஞ்சகமான திட்டங்களோடு உட் புகுந்து உங்கள் கிறீமினல் மூளையை பயன்படுத்தி நீங்கள் செய்த திருவிளையாடல்களை பிரான்சில் உள்ள கிழக்கின் மைந்தர்கள் அறிவார்கள். உங்களின் கிறீமினல் தனங்களை தட்டிக் கேட்ட நண்பரொருவரை நீங்கள் புலிகளின் பினாமிகளை வைத்து பிரான்ஸ் லாச்சபலில் தட்டிக் கேட்ட வரலாற்றை நீங்கள் மறந்தாலும் நாங்கள் மறக்கவில்லை. இச் சம்பவத்திற்கெதிராக அன்றைய நேரத்தில் புலம்பெயர்ந்த சூழலில் பல நண்பர்களினால் கண்டன அறிக்கைள் விடப்பட்டதை கொஞ்சம் நீங்கள் ஞாபகங்கொள்வது நலமென்றே நினைக்கின்றேன் (நண்பரே அக்காலத்தில் வந்த கண்டன அறிக்கைகள் பல இன்னமும் என்னிடம் உள்ளன. நீங்கள் ஞாபகம்கொள்ள விரும்பினால் உங்களுக்கு என்னால் அனுப்பிவைக்கமுடியும்.) கிழக்கிலங்கை மக்களின் நல்வாழ்வுக்காக உருவாக்கப்பட்ட அந்த ஒன்றியம் உங்களின் சுயநல நடவடிக்கையினாலும் கடைந்தெடுக்கப்பட்ட பிரதேசவாத சேற்றினாலும் சீரழிந்து அதன் செயற்பாட்டு நண்பர்கள் உங்களின் சகவாசமே வேண்டாமென்று விலகி நிற்பதும் அதன் நிமித்தம் இவ் ஒன்றியம் முடங்கிக் கிடப்பதும் மிக வேதனைக்குரிய விடயமென்பதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையா. நீங்கள் பேசுகின்ற யாழ்ப்பாண மேலாதிக்கமென்ற கருத்தும் பச்சத்தனமான பிரதேச வாதமும் உங்களின் அரசியல்இவியாபார நலன் கருதியதேயன்றி அது உண்மையான கிழக்குமாகாண விசுவாசத்தில் ஏற்பட்டது அல்ல என்ற உண்மையை உங்களோடு பழகியவர்கள் நன்கு அறிவார்கள். பிரான்சில் இருக்கும் யாழ் மையவாத வேளாள இந்து சதானிகளோடு உங்களுக்குள்ள கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் வியாபார உறவுகளுக்கு என்ன பெயர் நண்பரே உங்கள் அகராதியில்.
இரண்டாவதாக புகலிடத்தில் 17 வருடங்களாக புகலிட அரசியல் இலக்கியத்திற்காக பங்களிப்பினை செய்துவருவதாக குறிப்பிட்டுள்ளீர்கள் உண்மையில் உங்களுக்கு மிகவும் தையிரியம்தான். கடந்த காலங்களை மனித மனம் மறந்துவிடும் என்பதில் உங்களுக்கு பலத்த நம்பிக்கை இருப்பதுபோல் தெரிகின்றது நண்பரே. புகலிடத்தில் காத்திரமான ஒரு மாற்றுச் சஞ்சிகையாக லட்சுமி கலைச்செல்வன் ஆகியோரால் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட எக்ஸில் சஞ்சிகையை இல்லாமல் ஆக்கி அதன்பெயரில் நீங்களும் உங்கள் பினாமிகளும் செய்த “இலக்கிய சேவை” உண்மையில் நீங்கள் சொல்வதுபோல் இலக்கிய பங்களிப்புத்தான் நண்பரே. நீங்கள் எக்ஸில் என்ற அதே பெயரில் ஒரு சஞ்சிகையை கொண்டுவந்து அச் சஞ்சிகையில் மாற்றுக் கருத்தாளர்களை புகலிடத்தில் புலிகளின் வன்முறைகளை அராஐகங்களுக்கு எதிராக குரல் கொடுத்த இலக்கிய வாதிகளை கொச்சைப்படுத்தி புலிகளுக்கு காட்டிக்கொடுத்தவரலாறு உங்கள் பாசையில் இலக்கிய சேவைதான். உலகத்தில் என் அறிவுக்கு எட்டியவரை இலக்கிய சஞ்சிகை ஒன்றில் அட்டையில் ஒரு பெண்ணைப்பற்றி கேவலமாக எழுதி வெளியிட்டு இலக்கியசேவை செய்த ஒரே நபர் நீங்கள்தான்; நண்பரே. அந்தவகையில் உங்களின் இலக்கிய சேவை மகாசேவைதான்! பெண்ணியவாதியும் மாற்றுச்சிந்தனையாளருமான லட்சுமி மீது நீங்கள் எழுதிய அந்த அட்டைப்பட வசனங்கள் இன்றும் என்னுள் ஞாபகம் உள்ளது நண்பரே. புகலிடத்தில் இருபதுவருடங்களுக்கு மேலாக நடந்துவரும் இலக்கிய சந்திப்பை இல்லாமல் ஆக்குவதற்கு அதன் மீது நீங்களும் உங்கள் பினாமிகளும் வைத்த குற்றச்சாட்டுக்களை மீண்டும் ஞாபகம்கொள்ளுங்கள் நண்பரே. உங்களுக்கு எப்பொழுதும் வன்முறைகளை எதிர்கின்றவர்கள் மீதும் மாற்றுச் சிந்தனையாளர்கள் மீதும் மனித உரிமைகள் பற்றிப்பேசுகின்ற ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றி சிந்திக்கின்ற இடதுசாரி கொள்கை பற்றாளார்கள் மீதும் நீங்கள் காட்டி வருகின்ற காழ்ப்புணர்ச்சி நிறைந்த கபடத்தனமான நடவடிக்கைகளை சற்றுக் குறைத்துக் கொள்ளுங்கள் நண்பரே.
நல்ல மனிதனாக வாழ்வதற்கு குறைந்தபட்சமாவது நேர்மையும் உண்மையும் அவசியம் எனக் கருகின்றவன் நான். அந்த வகையில் இனிமேலாவது நீங்கள் கொஞ்சமாவது நேர்மையோடு உண்மைபேச முயலுங்கள். பொய்கள் புரட்டுக்கள் பித்தலாட்டங்கள் செய்யும்போது எப்படிப்பட்ட மனிதர்களுக்கும் கொஞ்சம் பதட்டம் வருமென்றே நான் அறிந்திருக்கின்றேன். உங்கள் விடயத்தில் அது கொஞ்சம் கூட உங்களுக்கு இல்லாமல்போய்விட்டதே. உண்மையிலேயே நீங்கள் ரொம்ப தையிரியசாலிதான்.
மேலும் நண்பரே இலங்கை உளவுப்பிரிவுடன் உங்களுக்கு தொடர்பு இருப்பதாக ஒரு பொய்யான தகவலை சில இணையத்தளங்கள் வெளியிட்டுள்ளதாகவும் அது உங்கள் மீதான சேறடிப்பாக நீங்கள் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள் உண்மையில் இச் செய்தியில் உண்மை இல்லையெனில் மிக மிக கண்டிக்கப்பட வேண்டியதொன்று. ஆனால் நண்பரே உங்களின் கடந்த கால வரலாற்றை புரட்டும்போது மேற்கூறிய குற்றச்சாட்டுக்கு நம்பகத்தன்மை கூடுகின்றது. இலங்கையில் தமிழ்பேசும் மக்களின் உரிமைப்போராட்டம் உச்சநிலை அடைந்துகொண்டிருந்த காலகட்டத்தில் ஐக்கியதேசிய கட்சியின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலியின் நிதி உதவியோடு “உண்மை” என்றபெயரில் கொழும்பிலிருந்து மாதா மாதம் ஒரு பிரசுரம் வெளியிடப்பட்டது. தமிழ்பேசும் மக்களின் போராட்டத்தை தொடர்புடக சாதனங்கள் மூலம் (Media as a weapon of power) முயன்ற பாதுகாப்பு அமைச்சின் வெளிப்பாடே உண்மை பிரசுரத்தின் அரசியலாகும். இப் பிரசுர வெளியீட்டுக்கு கொழும்பு துறைமுக கூட்டுத்தாபனதில் பணிபுரிந்த ஒரு தமிழ்பேசும் தொழில் சங்கவாதி பொறுப்பாக இருந்தார். இவ் பிரசுர விநியோகப் பொறுப்பை பாதுகாப்பு அமைச்சே பொறுப்பெடுத்து தமிழ் பிரதேசங்களுக்கு தபால்; மூலம் இலவசமாக விநியோகித்துவந்தது. இதுதான் உண்மை பிரசுரத்தின் உண்மை வரலாறாகும். நண்பரே இதன் பின்னால் உள்ள இன்னுமொரு உண்மை வரலாற்றைப் பார்ப்போமா? இந்த வெளியீட்டு முயற்சியில் அந்த தொழில் சங்கவாதிக்கு உறுதுணயாக இருந்து செயல்பட்டவர் நீங்கள்தான் என்பதை நாங்கள் மறக்கமுடியுமா..? இவ்வாறு உங்களைப்பற்றிய பற்பல உண்மை வரலாறுகளை நாம் கூறமுடியும். குறிப்பாக உங்களின் சந்தர்ப்பவாத சுயநலத்திற்காக புலிகளிடம் தங்கள் உயிரைக் பறிகொடுத்த மட்டக்களப்பு புளொட் அமைப்புத் தோழர்கள் மூவரையும் நீங்கள் மறந்தாலும் நாங்கள் மறக்கவில்லை. அந்த தோழர்கள் எங்கள் கண்களிற்குள்ளும் நினைவுக்குள்ளும் இருக்கிறார்கள்.
நண்பரே பிரபல பத்திரிகையாளர் D.B.S Jeyaraj அவர்கள் உங்களை புலி என்று குறிப்பிட்டுள்ளதாக குறைப்பட்டுக் கொண்டுள்ளீர்கள். இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்தும் உங்களின் பேச்சுக்கள் வன்முறை சார்ந்த உங்களின் எண்ணக் கருத்துக்கள் மற்றும் உங்களின் செயல்பாடுகளை அவதானிக்கும் பலரும் உங்களை ஒரு முன்னால் புலியென்றே கருதுகின்றனர். புளொட்டின் மாணவர் அமைப்பில் நீங்கள் அங்கம் வகித்ததாக கூறியுள்ளீர்கள். புகலிடத்திலுள்ள புளொட் தோழர்கள் வன்முறைகளுக்கு எதிரானவர்களாகவும் ஐனநாயகத்தை கோருகின்றவர்களாகவும் இருக்கும்போது நீங்கள் மாத்திரம் வன்முறைக்கு ஆதரவாளனாக கிழக்கில் நடந்தேறும் படுகொலைகள் ஆட்கடத்தல்கள் சிறுவர்களை இராணுவத்தில் சேர்த்தல் மற்றும் அனைத்து மனித உரிமை மீறல்களையும் கருணா அம்மானின் பெயரால் நியாயப்படுத்துகின்றீர்களே. கருணா அம்மான் கூட இவ்வாறு நியாயப்படுத்தமாட்டார் என நினைக்கின்றேன். இவ்வாறான உங்களின் செயல்பாடுகளின் நிமித்தம்தான் D.B.S Jeyaraj; அவர்கள் உங்களை ஒரு புலியென அடையாளப்படுத்தி cள்ளாரென நினைக்கிறேன். எனினும் அவரின் இக் கூற்று தவறென்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். கருணா அம்மான் கிழக்குமாகாண அபிவிருத்தி பற்றியும் அதன் தனித்துவம் பற்றியும் பேசினாரே அன்றி உங்களைப்போல் பிரதேசவாதம் பேசவில்லை. உங்களின் பிரான்ஸ் நடவடிக்கைகள் தமிழ மக்கள் விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவுகளை கொடுக்கின்றதே அன்றி எவ்வித முன்னேற்றத்தையும் வரவேற்பையும் கொடுக்கவில்லை என்பதை நீங்கள் தயவாய் புரிந்துகொள்ளவேண்டும்.
நண்பரே மனிதர்கள் தவறுகள் இழைப்பது வரலாற்றில் சகஐம். வாழ்வில் துரோகம் இழைத்தவர்களும் தவறுபுரிந்தவர்களும் காலங்களின் நீரோட்டத்தில் நல்லவர்களாக வல்லவர்களாக மாறிய தருணங்களை நாம் கண்டிருக்கிறோம். இது வாழ்வுச் சூழலில் சகஐமானது. ஆனால் உங்களின் வாழ்கைப்பாதை இந்த வரலாற்று நியதியிலிருந்து மாறுபட்டதாகவே இருக்கின்றது. நீங்கள் உண்மையோடும் நேர்மையோடும் வாழவேண்டுமென்று நான் விரும்புகின்றேன். உங்களின் நிகழ்கால நடவடிக்கைகளை சுயபரீசோதனைக்கு உட்படுத்துங்கள். மற்றவர்களின் தேவையற்ற குற்றச் சாட்டுக்களை விடுத்து உங்கள் மனதுக்கு தெரிந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து வெளியேற முயலுங்கள். கிழக்கு மக்களுக்கான சேவையென்பது புகலிடத்தில் எங்களை வளம்படுத்திக்கொண்டு சொத்துக்கள் சேர்ப்பதல்ல அதற்கப்பாலும் அந்த மக்களுக்காக அந்த மக்களின் துயரங்களுக்காக விடிவுகளை தேடி அதனை அடைய முயல்வதே ஆகும். அறிக்கைப்போரினை விட்டுவிட்டு நிகழ்கால தவறுகளில் இருந்து மீட்சிகொண்டு விழித்தெழுவதே நாம் செய்யும் சுயவிமர்சனமாகும். உங்களின் பொய்மை களைந்த நேர்மை கொண்ட எதிர்கால வாழ்வுக்கு என் வாழ்த்துக்கள்.
நன்றி நண்பர
அன்புடன்
கருணைதாசன்
karunithisan@hotmail.com
mani on October 30, 2007 10:48 am
gnanam anpavarai nanraaka therium.suyanalam pedtthe manusan.evani pattri kathithu enna pirayosanam?
mani
Theepori on October 31, 2007 11:59 am
கருணாவின் சமூக விரோத நடவடிக்கையின் மூலம் மக்களிடம் பெறப்பட்ட கப்பம் பணத்தில் பிரான்ஸில் முதலீடு !
எமது இணையத்தளத்தில் கருணாவின் பிரான்ஸ் பொறுப்பாளர் பற்றிய தமிழ் ஆங்கில இணைய பக்கங்களில் வெளியான விபரமான தகவல் அடங்கிய கட்டுரைகளுக்கு நேரடியாக பதில் கொடுக்க முடியாத சின்னமாஸ்டர் அல்லது ஸ்டாலின் அல்லது ஞானம் என்று அழைக்கபடும் மாசிலாமணி இராஜேந்திரன் என்ற நபர் ஜனநாயகத்தைப் பற்றியோ அல்லது ஊடகத்துறை பற்றியோ பேசுவதற்கு இவருக்கு என்ன அருகதை உள்ளது. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இனி விடயத்துக்கு வருவோம்.
எமது இணையமான தீப்பொறி இணையத்தில் நாம் வெளியிட்ட அக்டோபர் 22—2007 திகதி செய்திக் குறிப்பில் மட்டக்களப்பில் இராணுவ புலனாய்வு அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் மட்டக்களப்பில் கருணா பிள்ளையான் அணி உறுப்பினர்கள் இணைந்து இரு குழுக்கள் உருவாக்கம் என்ற தலைப்பின் கீழ் வெளியான செய்தியியையிட்டு இதுவரை கருணாவோ அல்லது பிள்ளையனோ மறுப்பு தெரிவிக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதே வேளை அந்தக் கூட்டத்திலே பிள்ளையான் இராணுவ அதிகாரியிடம் கேட்ட கேள்வி ஒன்றின் போது லண்டனில் புங்குடுதீவு கிருஸ்ணன் ஊடாக கருணா முதலீடு செய்துள்ளது போல் பிரான்ஸில் சின்ன மாஸ்டர் அல்லது ஞானம் என்று அழைக்கப்படும் மாசிலாமணி இராஜேந்திரன் பெயரில் பாரீஸில் வாங்கப்பட்ட வீடுகள் மற்றும் முதலீடு தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பிள்ளையானால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது தொடர்பாக தனது கட்டுரையில் எவ்வித கருத்துக்களையும் கூறாமல் மறுத்தது ஏன்.?
இவர் தனது பதிலில்; எனது எழுத்துக்களை மதிக்கும் ஒரு சிலரின் வேண்டுகோளை ஏற்று மறுப்பு தெரிவிப்பதாக கூறும் இவர், அங்கு வாங்கப்பட்ட சொத்துக்கள் பற்றிய விடயங்கள் தொடர்பாக எவ்வித மறுப்பையும் இவரால் வெளியிட முடியவில்லை. ஆனால் முழு விபரங்களை வெளியிட்டிருந்தால் அவரின் எழுத்துக்களை மதிக்கும் அந்த ஒரு சில நபர்கள் சந்தோசப்பட்டிருப்பார்கள். அல்லது புரிந்திருப்பார்கள். அவரது எழுத்துக்களை மதிப்பவர்கள் சிலராக இருந்து பலராக கூடி இருப்பார்கள்.
அத்தோடு இவர் தனது பதிலில் கருணா அணியின் உட்கட்சிப்போராட்டத்தில் தன்னை இணைத்ததாகவும் கூறுகின்றார். இவர் சொல்லும் இந்த உட்கட்சிபோராட்டம் பற்றி சற்று விளக்கம் தருவாரா? இவரின் எழுத்தை மதிக்கும் நபர்கள் கருணா அணிக்குள் இவர் நாடாத்திய உட்கட்சிப் போராடத்தை அறிய ஏதுவாக இருக்குமல்லவா.
இவர் 17 வருடங்களாக பிரான்ஸில் புலி எதிர்ப்பாளராக செயற்பட்டதாக தனக்கு தானே ஒரு அணிகலனை பூட்டிக் கொண்ட இவர் எந்தக் காலத்திலும் தனது சொந்தப் பெயரில் செயற்பட்டது கிடையாது. இவர் புலிகளுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு இரட்டை வேடம் போட்டு செயற்பட்டதை தனது கட்டுரையில் அம்பலப்படுத்தியுள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தான் செயற்படுவதாக கூறும் இவர் கிழக்கு மகாணத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கடந்தவாரம் பிரான்ஸில் நடைபெற்ற கூட்டத்தில் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தது எதைக் காட்டுகிறது?
இவரை அரசியலில் இருந்து ஓரம் கட்ட போட்ட திட்டம் என கூறுகின்ற இவரின், கடந்கால அரசியல் நடவடிக்கைதான் என்ன? எதிர்கால அரசியல் தான் என்ன? என்பது புரியாத புதிராக உள்ளது.
குறிப்பு:
தீப்பொறி இணைய சஞ்சிகையால் அனுப்பபட்ட இக்கட்டுரையில் சம்பந்தப்பட்ட நபர் மீது வைக்கப்பட்ட சில குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் வைக்கப்படாததால் அவை இங்கு நீக்கப்பட்டு உள்ளது.
தேசம்நெற் இணைய நிர்வாகம்.
Mani on October 31, 2007 1:07 pm
saphas thippori. unkal pani thodarddum! gnanattin pholi vadevam ampalamaakaddum. vallka thesam. unkal panium thodarddum!
mani
பெயரிலி on October 31, 2007 3:51 pm
இந்தப் பிரச்சினையை தீப்பொறி எழுதியது. இப்போது கருணைதாசன் என்ற பெயரில் கடிதமொன்று விடப்பட்டிருக்கிறது. இதை எழுதியவர்கள் ஞானத்துக்குத் தெரிந்தவர்கள்தான் என்பதும் பிரான்சில் நடக்கும் ஒன்றுகூடல்களில் இவர்கள் சந்தித்துக் கொள்பவர்கள்தாம் என்பதும் இன்று அரசியல் இலக்கிய வட்டங்களில் இருப்பவர்களுக்கு ஊகிப்பதில் ஒரு பிரச்சினையுமேயில்லை. நேரில் காணும்போது இதுபற்றி இவர்கள் விவாதிக்கிருக்கலாமே. ஏன் அப்பிடியொரு பழக்கமேயில்லையா? அல்லது இந்தக் கருத்துகளில் நம்பகத்தன்மையில்லையா?. ஞானத்துக்கு எதிரான பிரச்சினையாக மட்டும் இதைப் பார்க்க முடியாது. உங்களுடன் அரசியல் இலக்கிய உறவுகளைக் கொண்டிருக்கும் என் போன்ற எல்லோருக்கும் பூச்சுற்றும் வேலையும்தான் இது. உங்களுடன் அரசியலில் உடன்பாடற்றவர்களை நீங்கள் இப்படியாக எதிர்கொள்ளப் போகிறீர்களா என்ன? கருணைதாசன் என்ற பெயரில் எழுதிய கடிதத்தின் உள்ளடக்கமும் அதன் வசன நடையும் இதை எழுதிய நபர் அசோக் (பாரிஸ்) என்பதை ஊகிக்க வேண்டியிருக்கிறது. இல்லையெனில் அசோக் இதை பகிரங்கமாக மறுக்கட்டும். கருணாவின் பிரிவின்போதான ஞானம் ரிபிசி கூட்டு அரசியல்கள் பேச்சுக்கள் பிரச்சினைக்குரியதாக என்போன்றவர்களுக்கும்தான் இருந்தது. அதை நேரடி விவாதங்களில் எதிர்கொள்வதற்குப் பதில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சோடிப்புகளுடன் அணுகுவது நேர்மையற்ற செயல். வெளியே வந்து விவாதியுங்கள். அது பிரயோசனம் தரும். - (இப்போதைக்குப்) பெயரில
சேனன் on October 31, 2007 5:09 pm
கண்டபடிக்கு கதையளந்து கற்பனைகளை செய்தியாக்கும் தற்போதய தமிழ் ஊடகவியல் - ஏதாவது ஒரு அரசியல் சார்பின் பிரச்சார நடவடிக்கையாக வளர்ந்து வருகிறது.
யார் யாருக்காக திரிபுசெய்கிறார்கள் என்பதை கவனித்து வருபவர்களுக்கு ‘நடுநிலை’ என்ற புணிதத்தை நிறுவி ‘பலமான’ அரசியல் பக்கம் சாரும் எழுத்துக்களை ஊடுருவி உண்மை அறிய முடியும். ‘நடுநிலை’ என்பதன் அர்த்தம் ஆதிக்க அரசியல் சார்பு என்றே தொடர்ந்து நிறுவப்பட்டு வருகிறது.
‘செய்தி வெளியிடலின்’ பின்னனியை காட்டச்சொல்லி நாம் கேட்பதும் காரன காரியத்துடன் செய்தியை நிறுவச்சொல்லி கேட்பதும் ஒன்றல்ல. அதேபோல் குறிப்பிட்ட செய்தியின் பின்னனியை கேட்பதன் பின்னால் அச்செய்திக்கு எதிர் அரசியலை நாம் வைத்துக்கொண்டிருக்கிறோம் என்றுமில்லை.
இந்த சின்ன அறிவித்தலுடன் நாம் D.B.S. Jeyarajக்கு அனுப்பிவைத்த கடிதத்தை இங்கு வெளியிடுகிறோம்.
26/10/2007
Dear D.B.S. Jeyaraj,
I write to request that you, as a well-respected journalist, demonstrate your journalistic integrity with regards your comments in your article, ‘Will “Col” Karuna Re-Appear Dramatically or Simply Disappear?’ published on October 13th, 2007.
You wrote:
According to some reports Karuna boarded a Sr Lankan Airlines flight and reached Paris some days ago. He was received in Paris by a writer cum journalist known as “Gnanam” who himself is an ex - LTTE cadre of the Eastern soil. “Suresh”an intelligence operative attached to the Lankan Embassy in France was also in attendance. After spending a few days in Paris with Gnanam the TMVP leader has vanished into the blue.
In the current political climate the above claims have very serious implications for the safety of Gnanam. I would like to point out that, as presented, they are clearly unsubstantiated and as such cannot be taken as fact. I request that you explain your motivation for making these claims and also provide Gnanam with the opportunity to defend himself.
It is at least in your interest to point out that these claims come from an unreliable source or you are just oiling the cogs of the rumour-mill. I will welcome the publication of your evidence. At least please provide further explanation to support your case.
I have to say that I do not share any of Gnanam’s political views or have any personal interest in defending him. However I write to you in the interest of establishing the facts. Also as you already know, the singling out of any name will only help to put that person’s life at risk.
Gnanam has already denied his involvement in his statement published in thesamnet.net and thenee.com. I hope you will look into this serious matter and reply with your thoughts.
I look forward to your reply,
Thanks.
Senan
Rayakaran on October 31, 2007 8:35 pm
தம்மை மூடிமறைத்துக் கொண்டு இயங்கும், இயக்கவாதிகளின் நோக்கம் என்ன?
ஏன் எதற்காக தம்மைத்தாம் மூடிமறைக்கின்றனர். எதனால் வெளிப்படையாக மக்கள் முன் வரமுடிவதில்லை. தாம் ஜனநாயகவாதிகளாக, வன்முறைக்கு எதிரானவர்களாக, கொலைகளை கண்டிப்பவர்களாக காட்டிக்கொண்ட, காட்டிக்கொள்கின்றவர்கள், எத்தனை எத்தனையோ கவர்ச்சிகரமான வேஷங்கள்.
இயக்கத்தின் உறுப்பினராக, அவர்களுடன் தொடர்புடையவராக வலம் வரும் இந்த வேஷதாரிகளின் வேஷம் படுபிற்போக்கானது. ஒருவன் தன்னை புலி என்று கூறி வேலை செய்வதில் ஒரு நேர்மையும், அதில் ஒரு ஒழுக்கமும் உண்டு. அதைக் கூட செய்யமுடியாதவர்கள் தான் ஜனநாயகவாதிகள். இப்படிப்பட்டவர்கள் படுபிற்போக்குவாதிகள். உண்மையில் தம்மையும், தமது மனித விரோத நடைமுறைகளையும் மக்கள் முன் மூடிமறைப்பது தான், தம்மை மூடிமறைப்பதன் நோக்கம்.
இப்படிப்பட்டவர்கள் மக்களின் முன்னும், தமது கருத்துக்களை வைக்கும் இடங்களிலும், தமது இயக்க அடையாளத்தை வெளிப்படுத்துவதில்லை. இதேபோல் தம்மை ஜனநாயகவாதியாக காட்டிக் கொள்ளும், அராஜகவாத லும்பன் உதிரிகள் இந்த இயக்கவாத கும்பலுடன் அடிக்கும் கூத்துகள் சொல்லிமாளாது. இவர்களின் இழிவு கெட்ட அரசியலோ, அரசியல் சதியாகின்றது. தலித் மாநாட்டிலும் கலந்து கொண்ட இந்த இயக்கப் பேர்வழிகள், தம்மை முழுமையாக மூடிமறைத்துக் கொண்டு, தலித் மக்களுக்கு எதிராகவே சதி செய்தனர்.
இப்படி பல புனைபெயர் பேர்வழிகள் எழுத்தில் உலவுகின்றனர். சொந்தப் பெயரில் அதை சொல்லும் அரசியல் நேர்மையற்று, சதிகளை மூலமாகிக்கொண்டு இயங்குகின்றனர். அண்மையில் ஞானம் தொடர்பாக தீப்பொறி இணையமும், அதை மீள வெளியிட்ட நிதர்சனச் செய்தியின் உண்மைத் தன்மையும் கூட, இங்கு இப்படிப்பட்டதுதான். ஞானம் பற்றிய குற்றச்சாட்டின் உண்மைத் தன்மை பற்றி ஆராய்வதல்ல, இந்த சதி வழிமுறை பற்றியதே எம்முன்னுள்ள விடையம்.
ஞானம் தனது அரசியல் செயல்பாட்டையும், கருணா என்ற பாசிச புலிக் கும்பல் பற்றிய, அரசியல் நிலைப்பாட்டை பகிரங்கமாக இதுவரை முன்வைக்கவில்லை. யாழ்மேலாதிக்கத்தின் பெயரால், கிழக்கு வாதங்கள் மூலம், அதை அரசியல் ரீதியாக பாதுகாத்து விடமுடியாது. இதையொட்டி தேனீயில் அவர் எழுதிய கட்டுரை, எதையும் அரசியல் ரீதியாக தெளிவாக்காத வகையில், சூக்குமமாக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் சதிகாரர்களின் தொடர் குற்றச்சாட்டுக்கு, அதுவே மேலும் பக்கபலமாக உள்ளது.
இந்த விடையத்தை அரசியல் சதியாகவே முன்னெடுத்த பின்னணியோ, அதைவிட சூக்குமானது. ஈ.என்.டி.எல்.எப் என்ற இந்தியக் கூலிக் குழுவின் இணையத்தில் தான், இந்த சதி திட்டமிட்டு வெளிவருகின்றது. இதில் அரசியல் நேர்மை பற்றிய விடையமும், சதி பற்றிய சூக்குமமும் அம்பலமாகின்றது. ஈ.என்.டி.எல்.எப் என்ற கொலைகார கும்பலினதும், இந்திய சதிக் கும்பலினதும் இணையம் தான் தீப்பொறி. இதில் ஒரு புனைபெயர் வழியாக, வருகின்ற சதிக்குரிய நபரை, அனைவரும் அறிவர்.
(cut)
இப்படி இயக்க சதிகள், ஜனநாயகத்தின் பெயரில் அரங்கேறுகின்றது. இதில் ஈ.என்.டி.எல்.எப் யை, கருணா கும்பல் ஜனநாயக விரோதமாக கிழக்கில் விழுங்கி ஏப்பமிட்டதை பழி தீர்க்கும் அரசியல், ஞானம் விவகாரம் ஊடாக பூதமாகி வீங்குகின்றது.
ஞானத்துடன் தீரா பகை கொண்டு திரியும் ‘அனைத்து வன்முறைக்கும் எதிரானவர்” நடத்தும் நாடகம் தான், ஞானம் பற்றிய தொடர்ச்சியான செய்திகள். ‘யன்னiலைத் திற” என்ற அசோக்கின் வெளியீடு இதைத்தான் அப்படியே முன்பு செய்ய முனைந்தது. இப்ப எழுத்தில் புனைபெயர்கள். இப்படி புனைபெயர் கட்டுரைகள் பல. கருணைதாசன் என்ற புனைபெயரில் தீப்பொறியில் வந்ததும் சரி, ஈழமுரசில் கருணைதாசன் என்ற பெயரில் மகாஜனா பழைய மாணவர் சங்கம் பற்றி எழுதியவரும் ஓருவரே. அண்மையில் தேனீயில் மலைதாசன் (பெயர்?) என்ற பெயரில் சோபாசக்தியை தாக்கிய, புனைபெயர் அனைத்திலும் ஒருவரே. இப்படி அரசியல் சதியை சூதாட்டமாக நடத்துகின்றனர். ஞானத்தின் அன்றைய துரோகத்தை பட்டியல் இடுபவர்கள், அந்த வீட்டில் பல வருடக்கணக்காக இதையெல்லாம் தெரிந்து கொண்டு சாப்பிட்ட அந்த துரோகத்தை மட்டும், எதிலும் யாரும் குறிப்பிடுவதில்லை. அப்போது ஞானம் துரோகியல்ல, இப்ப துரோகி.
இது போன்ற குற்றச்சாட்டுகளின் சரிபிழைக்கு அப்பால், சொந்தப் பெயரில் செய்ய முடியாது கேடுகெட்ட கேவலமே போதுமானது, இந்த சதியை ஆராய. இவர்களின் அரசியல் நேர்மை பற்றி பேசுவதற்கு. அதுவும் ஈ.என்.டி.எல்.எப் என்ற அனைத்து வன்முறையும் செய்த செய்யும் ஒரு இணையத்தில் இது அரங்கேறுகின்றது. இந்தக் கேவலமும், அனைத்து வன்முறையையும் எதிர்ப்பதாக கூறுவதன் அர்த்தமும் வெட்கக்கேடானது.
கிழக்கு பிரதேசவாதத்தை வைப்பது என்பது அவரின் அரசியல். அதை அரசியல் ரீதியாக எதிர்கொன்ள முடியாமல் போவது ஏன். இதை மறுக்கும் நீங்கள் வைக்கும் மாற்று அரசியல் தான் என்ன? அதைவிட உயர்வாக என்னத்தை வைக்கின்றீர்கள். ஈ.என்.டி.எல்.எப் என்ற இந்தியக் கூலிக் குழுவின் இணையத்தில் படுத்துக்கிடப்பது, ஞானத்தின் மீதான குற்றச்சாட்டை விட எந்தவகையில் உயர்ந்தது. புலியெதிர்ப்பின் பின் நடத்துகின்ற அரசியல் வக்கிரம், ஞானத்தின் அரசியலை விட எந்தவிதத்திலும் உயர்ந்ததல்ல.
இயக்கங்களுடன் நடத்துகின்ற இரகசிய உறவுகள், தொலைபேசி உரையாடல்கள், கூட்டுச் சதிகள், இயக்கத் தலைவர்களுடன் கொண்டுள்ள உறவு, என்று மொத்தத்திலேயே கேவலமானது. யார் வன்முறை செய்கின்றனரோ, அவர்களுடன் அரசியல் விபச்சாரம். வன்முறை மறுப்பதாக கூறிக்கொண்டு, கேடுகெட்ட அரசியல் விபச்சாரமல்லவா இவை. புலிகள் மட்டுமே வன்முறை செய்வதாக கூறிக்கொண்டும், கருணாவும் அப்படி செய்வதாக காட்டிக் கொண்டும், ஈ.என்.டி.எல்.எப் வுடன் குலாவுவது எப்படிப்பட்ட பொறுக்கித்தனம். நீங்கள் டக்கிளஸ்சுடன் ஆனந்தசங்கரியுடனும் கூடி (அவர்கள் கோடிக்கணக்கில் துரோகத்துக்கு பணம் வாங்குகின்றனர்.) அரசியல் கோஸ்டி கானம் பாடும் போது, ஞானம் தனியாக பாடினால் தான் என்ன? நீங்கள் செய்வது புரட்சியோ?
இப்படி டக்கிளஸ்சுடன் ஆனந்தசங்கரியுடனும் ஆலவட்டம் பிடித்து திரிகின்றவர்கள், தங்களை மூடி மறைத்துக் கொண்டு, புனைபெயரில் பம்முகின்ற அரசியல் யோக்கியதை தான் என்ன? ஞானம் தனது அரசியல் நிலையை வைக்க மறுப்பது என்பது, எமக்கு முன்னுள்ள தெளிவான விமர்சனம். கருணா பற்றிய அவரின் நிலைப்பாட்டை கோருகின்றோம். ஆனால் அதை நீங்கள் வைப்பதற்கு, உங்களுக்கு எந்த அரசியல் அடிப்படையுமே கிடையாது. அதுவும் ஈ.என்.டி.எல்.எப் இணையத்தில்! சொந்த அரசியல் நிலையைக் கூட வைக்க முடியாதவர்கள், ஞானத்தைப் பற்றி பேசுவது மிகமிக மலிவானது. உங்கள் அரசியல் என்பது, இழிவான மலிவான பிரச்சாரங்கள் தான். அதே புளட்டின் சதித் தனங்கள் தவிர, வேறு எதுவும் அங்கு அரங்கேறுவதில்லை.
தேசம்நெற் இணைய நிர்வாகம் on October 31, 2007 10:51 pm
தீப்பொறி இணையமும், அதை மீள வெளியிட்ட நிதர்சனச் செய்தியின் உண்மைத் தன்மையும் பற்றி விமர்சிக்கும் றயாகரன் எதுவித பொறுப்பும் அற்று தான் பக்கத்தில் நின்று பாத்ததுபோல் சில விசயங்களை வர்னிக்கிறார். குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் வைக்கப்படாததால் அவை இங்கு நீக்கப்பட்டு உள்ளது.
தேசம்நெற் இணைய நிர்வாகம்.
rayakaran on November 1, 2007 7:07 am
தேசம் இணையத்துக்க
ஆதாரம் என்பது, அரசியல் நடைமுறைகளுடன் தொடர்புடையது. இவாகளுக்கு இடையில் தேன் நிலவு மறுக்க முடியாத ஒன்று. ரீ.பீ.சீ க்குள் நடத்த குத்த வெட்டில் இவை வெளிவந்தவை தான். பார்க்க எனது கட்டுரையை.
உளவு அமைப்புகள் தான் ரீ.பீ.சீயை இயக்குகின்றது
http://www.tamilcircle.net/unicode/general_unicode/203_general_unicode.html
அரசியல் ரீதியாக அதை செய்பவர்கள் தான். உதாரணமாக ராஜனி தினகரமமை புலிகள் கொன்றனர் என்று கூறினால் (இப்படி பல கொலைகள்), அதற்கு ஆதாரம் இல்லை என்று எப்படி தேசம் கூற முடியும்.
இப்படிக் கூறி குற்றங்களை பாதுகாக்கின்ற அரசியல் நடைமுiறாகிவிடுகின்றது. அரசியல் ரீதியாக மக்கள் விரோததைக்கொண்டவார்கள், இதை செய்யாமல் எதைத்தான் செய்வார்கள். அதையவாது யாரும் சொல்ல முடியமா?
பி.இரயாகரன
rayakaran on November 1, 2007 7:37 am
மேலதிகமாக
இன்ற இனம் தெரியாத கடத்தல்களை பெருமளவில் அரசுசெய்கின்றது. கடந்த 2 வருடத்துக்கு முன்பாக இனம் தெரியாத பெலமளவு கொலைகளை புலி செய்தது. இதை சொல்ல ஆதாரமில்லை என்று எப்பஉ நீங்க முடியும்.
நிதர்சனம் டொட் கொம், தீப்பொறி செய்திகள் பரஸ்;பர இணக்கத்துடன் பிரசுரிப்பதற்கு பின்னனி உண்டு. ஆய்வு என்பது அதைக் காரண காரியத்துடன் ஆராய்வது தான். புலி பற்றிய விமர்சனத்தை தீப்பொறி பேசமறுப்பது ஏன். ஞானம் கருணா பற்றி விமாசனத்தை செய்ய மறுப்பது போல். கருணா கடித்துக் குதறும் தீப்பொறி, புலியுடன் அதுவும் நிதர்சனத்துடன் கொண்டுள்ள அரசியல் நிலைபாடு அம்மானமானது.
ரீ.பீ.சீ புலியெதிர்ப்பை (இப்படி கூறுவதற்கு ஆதாரமில்லை என்று நீக்கிவிடாதீர்கள்) தொடங்க முன், வன்னியுடன் நெருங்கி தொடர்பு இருந்தது. முதல் மாவீரர் தின உரையை ரீ.பீ.சீ தான் வன்னியில் இருந்து ஒலிபரப்பியது. ஏன் புலிகளும் தமிழ்செல்வனும் இருந்த நேரடி சதி உறவுகள் கசந்த போது, அதை ரீ.பீ.சீ வனோலில், தமது பேரம் பற்றி உரையடலின் ஒரு பகுதியை, உண்ணவிரதம் பற்றிய கூத்துகளை நியாயப்படுத்த ரீ.பீ.சீ வெளியிட்டது. இது கூட பலருக்கு தெரியாத வரலாறாகிவிட்டது.
இப்படி ஈ.என்;.டி.எல்.எவ் புலியிடன் கொண்டிருந்த நெருக்கமான முன்னய உறவுகளைக் கூட, ரீ.பீ.சீ தன்னை நியாயப்படுத்த வெளியிட்டது.
அவர்களின் அரசியல், அவர்களின் நடைமுறை, அதைத் தாண்டி இன்றவரை எதுவும் நகரவில்லை. ஒரு கூலிக் குழுவின் அரசியல் நடத்தைகளை, அதன் இழிவுகளை சுமந்து செல்லும் நபர்களின் நடத்தைகளுக்கு, ஆதாரம் கேட்பது இன்னுமொரு அரசியலாகத்தான் மாறுகின்றது.
மருது on November 1, 2007 10:30 am
அடப்பாவி மக்கா. புலி ரி பி சி நடத்துதுன்னு சொல்லிற உன்ர நல்ல மனசுக்கு பூமாலை போட.
இந்த தேசம் உட்பட இன்னிக்கு எல்லா ஊடகத்துக்கு பின்னாலயும் ‘புலி’ தான். எவ்ளோ செலவு பன்னி இவங்க புதிசா இனையம் வைச்சு அதுக்குள்ள இது உலகம் பூரா பரவுதுன்னா புலியில்லாம சாத்தியமா? இது ஒரு ஆதாரபூர்வமான வாதம். ஏலுமின்னா கடிச்சுப்பாருங்க –பல்லுத்தான் பறக்கும்!
எம்ம சுத்தி ஆடுவதெல்லாம் புலிதானுங்கோ. அப்பப்ப சிங்கமும் சேந்து ஆடினாலும் அது முக்கியமில்லங்கோ. புலிமையவாதம் கனதூரம் போகும். வன்னி தாண்டி வயக்காடுதாண்டி பேரினவாதம் தாண்டி ஏகாதிபத்தியத்தின் குதிருக்குள்ளும் கும்மாளமிடும்.
புலிபத்தி கிலிகொண்டலையும் இந்த பேமானிகளை காப்பாத்த ஆரெண்டாலும் -அடச்சீ ஆண்டவா ஓடிவா. வந்தொரு பொட்டுவை.
த ஜெயபாலன் on November 1, 2007 11:06 am
நண்பர் ரயாகரனுக்கு,
ஆதரங்கள் பற்றிய உங்கள் குறிப்பில் நியாயமுண்டு. ஆனால் ஒரு குற்றச்சாட்டை ஒரு அமைப்பின் மீது வைப்பதற்கும் அதையே ஒரு தனிநபர் மீது வைப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஒரு அமைப்பின் மீது குற்றச்சாட்டை வைக்கும் போது அதனை அரசியல் நடைமுறைகளுடன் தொடர்புபடுத்தி ஆராயலாம்.
அதன்படி ரஜனி திரணகமவை புலிகள் கொலை செய்தார்கள் என்று கூறும் போது அரசியல் நடைமுறைகளுடன் தொடர்புபடுத்தி அதனைப் பார்க்க முடியும். ஆனால் ரஜனிதிரணகமவை எக்ஸ் என்ற நபர் கொன்றார் என்று கூறுவதற்கு அரசியல் நடைமுறைகள் மட்டும் போதாது. அரசியல் நடைமுறைகள் என்ற போர்வையில் தனிநபர்கள் மீது இலகுவாக சேறடிக்கும் போக்கு தமிழ் அரசியல் சூழலில் பொதுவானதாகவே இருந்து வருகிறது.
பொம்பிளைக் கள்ளன், ரோவிடம் காசு வாங்கிறான் போன்ற குற்றச்சாட்டுகளை நீங்கள் யார் மீதும் வைக்கலாம் அதற்கு எந்த அரசியல் நடைமுறையையும் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டிய அவசியமில்லை.
கருத்துச் சுதந்திரம், மனித உரிமைகள், ஜனநாயகம் என்றெல்லாம் பேசும் நாம், எமது கருத்துக்கள் மட்டுமே சுதந்திரமானவை என்றும் மனித உரிமைகளும் ஜனநாயகமும் எமக்கு மட்டுமே உரியது என்ற வகையிலுமே நடந்து கொள்கிறோம்.
குற்றச்சாட்டை வைப்பவர்களே அதனை நிரூபிக்க வேண்டிய பொறுப்பையும் கொண்டு உள்ளனர். (விதிவிலக்கு பாலியல் வல்லுறவு.) ஆதாரங்கள் அற்ற குற்றச்சாட்டுகள் வெறும் சேறடிப்புகளே. அதனை தேசம்நெற் இணையத் தளம் தவிர்க்கவே விரும்புகிறது.
த ஜெயபாலன
rayakaran on November 1, 2007 4:20 pm
“அரசியல் நடைமுறைகள் என்ற போர்வையில் தனிநபர்கள் மீது இலகுவாக சேறடிக்கும் போக்கு” இது நடைமுறைக்கு வெளியில் தனிமனித புனிதனாக கட்டுகின்ற ஒன்று. அரசியல் நடைமுiயே குற்றமானதாக உள்ள போது, தனிமனிதன் அதற்கு உட்பட்டது தான்.
மறுபக்கத்தில் ‘அதன்படி ரஜனி திரணகமவை புலிகள் கொலை செய்தார்கள் என்று கூறும் போது அரசியல் நடைமுறைகளுடன் தொடர்புபடுத்தி அதனைப் பார்க்க முடியும்.” அரசியல் நடைமுறைகள் என்ற போர்வையில் இயக்கம் மீது இலகுவாக சேறடிக்கும் போக் உள்ளது நன்பரே.
குற்றச்சாட்டுகள் தனிநபர் சர்hந்தல்ல. அந்த இயக்கம் சார்ந்தது. அதாவது அந்த அரசியல் போக்கு மீது சார்ந்தது. தனிமனிதன அதன் மீது குற்றங்களை இளைக்கின்றான். இந்தியா கைக் கூலியாக ஒரு அமைப்பு, அது சாhந்த நபர் அரசியல் ரீதியாக இயங்கினால் இந்தியா கைக் கூலியாகத்தானே அடையளாம் கண வேண்டும்.
எப்படி கைக் கூலி என்று நிறுவவேண்டிய அவசியமில்லை. அந்த அரசியல் போதம். ஆதாரம் சாட்சியம் என்பது என்ன?. பாலியல் வல்லுறவு அல்லாதவை எல்லாம், அதாரம் வைத்து செய்வமாக கூறுவது அப்பத்தம்.
ஒரு அரசியல் இயக்கம், அதன் அரசியல் நடைமுறை, அதன் உறப்பினர்கள் என்று ஒரு வடட்டத்தைப் பற்றி பேசுகின்றொம் குற்றச்சாட்டின் நோக்கம், அது சார்ந்த அரசியல் நடைமுறைதான், உண்மைத் தன்மையை துல்லியமாக்கின்றது.
அரசியல் நெறி என்பது, மக்கள் பற்றிய அறநெறியுடன் தொடர்புடையது.
பொல்பொட் on November 1, 2007 7:17 pm
தேசம்நெற் சார்பாக ஜெயபாலன் முன்வைத்த கருத்துகள் பொதுவாக கருத்து எழுதும் சாதாரண இணையத்தள வாசிகளுக்கு பொருந்தலாம்.ஆனால், தனது உயிர், உடல், பொருள், ஆவி அனைத்தையும் புரட்சிக்காக தாரவார்த்து பாரிஸ் நகரில் தற்காலிகமாக வாழ்ந்து வரும் தோழர் இராயாகரனுக்கு கிஞ்சித்தும் பொருந்தாது என்பதை ஜெயபாலன் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை புரட்சிகர தோழமையுடன் மிக கண்டிப்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.
தோழர் இராயாகரன் ஒருவர் மீதோ அல்லது ஒரு அமைப்பின் மீதோ காட்டமான விமர்சிக்கிறார் என்றால் சோசலிச புரட்சி எம்மை நெருங்கி வருகின்றது என்று அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
புரட்சியின் பெயரால் எவர்மீதும் எப்படி வேண்டுமானாலும் குற்றங்களை சுமத்த புரட்சிகர சக்திகளுக்கு தார்மீக தகுதி உண்டு.
rayakaran on November 2, 2007 7:22 am
‘தோழர் இராயாகரன் ஒருவர் மீதோ அல்லது ஒரு அமைப்பின் மீதோ காட்டமான விமர்சிக்கிறார் என்றால் சோசலிச புரட்சி எம்மை நெருங்கி வருகின்றது என்று அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.” அண்ணை பொல்போட் அண்ணை என்ன சொல்லுகின்றார்.
எங்கள் எதிர்புரட்சி தான் களத்தில் உள்ளது, சோசலிசம் எல்லாம் சாத்தியமில்லை என்பதை நக்கலாக புனை பெயரில் சொல்லும், அந்த எதிர்புரட்சிதனம் வெளிப்டையானது. அவருக்கு சொந்த அரசியல் முதுகெழும்பே கிடையாது.
ஜெயபாலன் உடனான விவாதம், கோட்பாடு தொடர்பானது. தனிப்பட்ட அவருடானதல்ல. எப்படி இந்தியா இலங்கை கூலிக் குழுக்கள் எல்லாம் ஜனநாயகவாதிகளாக காட்டப்பட்டு, அதன் அடிப்படையில் பொது அறிவியல் தளத்தி அனுகப்படுகின்றதோ அப்படித்தான் இதுவும். இந்த கோட்பாட்டு வாதம் தனியான விமர்சனமாகவே ஆராய வேண்டி உள்ளது. விரைவில
த ஜெயபாலன் on November 2, 2007 8:38 am
நண்பர் ரயாகரனுக்கு,
நீங்கள் சொல்லும் சரியான அரசியல் நடைமுறை என்பது என்ன? நீங்கள் பின்பற்றுகின்ற அரசியல் நடைமுறையையே சொல்கிறீர்கள். தகுந்த ஆதாரம் இல்லாமல் யார் மீதும் குற்றம்சாட்ட முடியாது என்பது தான் எனது வாதம். அதன் அர்த்தம் யாரையும் புனிதராக்குவது அல்ல. ஆனால் நீங்கள் உங்களை ஒரு புனிதராகவும் புரட்சி தேவனாகவும் புரட்சியின் மகாத்மாவாகவும் காட்ட முயல்கிறீர்களோ என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டு உள்ளது. நீங்கள் புனிதமானவர் என்றும் உங்கள் குற்றச்சாட்டுக்கள் எப்போதுமே விசாரணைக்கு அப்பாற்பட்டதும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? இது தான் உங்கள் அரசியல் நடைமுறையா?
ஒரு அரசியல் இயக்கத்தின் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கும் ஒரு தனிநபர் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கும் வேறுபாடு இருக்கின்றது என நான் குறிப்பிடுவது குற்றச்சாட்டின் நிரூபனத்தன்மையை கருத்திற் கொண்டே. புலிகள் ரஜனி திரணகமவை படுகொலை செய்தார்கள் என்பதால் ஒவ்வொரு புலி உறுப்பினரையும் அப்படுகொலையுடன் குற்றம்சாட்ட முடியாது.
பாலியல் வல்லுறவு பற்றிய குற்றச்சாட்டுகளில் பெண்கள் தம்மீது மேற்கொள்ளப்படும் மிக மோசமான வன்முறைறைக்கு எதிராக குறற்றசாட்டை வைக்க முன்வருவதில்லை. சமூக அவமானம் இன்னோரன்ன காரணங்களால் அவர்களுக்கு சட்டப் பாதுகாப்பை அளிக்கவே இந்த நடைமுறையுள்ளது. அதனால் குற்றம்சாட்டப்பட்டவர் தான் நிரபராதி என்பதை நீரூபிக்க வேண்டி உள்ளது. இது ஒரு விவாதத்திற்குரிய விடயமே.
ஆனால் மற்றைய எல்லாக் குற்றச்சாட்டுகளிலும் குற்றத்தைச் சுமத்துபவர் அக்குற்றத்தை நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்க முடியாத குற்றச்சாட்டுகள் சேறடிப்புகளே. சரியான அரசியல் நடைமுறை என்துள் ஒழிந்துகொண்டு சேறடிப்புகளே செய்யப்படுகின்றன. இதில் வேதனையானது என்னவென்றால் சாஸ்திரிகளும் ரயாகரன்களும் ஒரே பதிலையே அளிக்கின்றனர்.
த ஜெயபாலன
Jeevan on November 2, 2007 12:36 pm
rayakarn annanar niraya puratche pesuvaar. aanaal hattan national bank pattik keddaal annar kadum tension aakiveduvaar. (ஆதாரம் அற்ற குற்றச்சாட்டு நீக்கப்பட்டு உள்ளது.) puratchi pnnuvaar. naam elitcha vayarkalla paarthukkonndu erukka. annarin purtche ponkaddm.
Jeevan
ரயாகரன் அண்ணர் நிறைய புரட்சியே பேசுவார். ஆனால் ஹற்றன் நசனல் பாங்க் பற்றிக் கேட்டால் அண்ணர் கடும் ரென்சன் ஆயிடுவார். (ஆதாரம் அற்ற குற்றச்சாட்டு நீக்கப்பட்டு உள்ளது.) புரட்சி பண்ணுவார். இழிச்ச வாயர்களா பார்த்துக்கொண்டு இருக்க. அண்ணரின் புரட்சியே பொங்கட்டும்.
Jeevan
rayakaran on November 2, 2007 2:15 pm
விவாதம் தனிநபர் தொடர்பதனதாக, குறுக்குவது அப்பத்தம். அரசிரலையே நாம் முன்வைக்கின்றோம்;, அதில் இருந்து கருத்துரைக்கின்றோம்;. மொத்த அரசியல் நடைமுறை மீதும், அதில் உள்ள நபர்களின் நடத்தை தொடர்பானது. மொத்த அரசியல் பற்றி நிலைபாடே இல்iiயென்றால், சாத்திரியுடன் ஒப்பிடுவது சாத்தியமானது.
எங்கள் அரசியல் தவறு என்றால் அதை முதலில் விவாதியுங்கள். அதற்கு பின்னால்லவா சரி பிழையை சொல்ல முடியும்.
சமூக இயக்கததில் குற்றத்தை தொழிலாக கொண்ட இயக்கத்தை, நாம் வைக்கும் அரசிலுடன் ஒரே தட்டில் போட்டு நிறுத்தும் அரசியல் அடிப்படை என்ன?
நீங்கள் நம்புடன் முதலளித்தவ சட்ட அமைப்பையே சாம் அரசியல் ரீதியாக எற்றக்கொள்வதில்லை. அதன் நீதிக் கோட்பாடு, அதன் ஜனசாயகம் என அதைத்தையும் தான்.
jeevan on November 2, 2007 4:32 pm
rayakan annar adkkadi naam naam naam einkinraar. onrum puriyavillai! naan arenthamaddel annaroodu annanai thyvera avaroodu oru manusanum eillai. annardam vellakkam keddu chellam.
jeevan
ரயாகரன் அண்ணர் அடிக்கடி நாம், நாம், நாம் என்கிறார். ஒன்றும் புரியவில்லை! நான் அறிந்தமட்டில் அண்ணரோடு அண்ணணைத் தவிர அவரோடு ஒரு மனுசனும் இல்லை.. அண்ணரிடம் விளக்கமா கேட்டு சொல்லும்.
jeevan
சுபேன் செல்லத்துரை on November 2, 2007 6:00 pm
ராசா! றயாகரா!
மில்லியன் கணக்கில் சாவடிச்ச ஸ்டாலினுக்கு சலாம் போடும் நீங்கள் -
வர்க்க அரசியலை வறட்டு வறட்டென்று வறட்டி கருக்கிச் சுருக்கி கமக்கட்டுக்குள் கொண்டுதிரியும் நீங்கள் -
முதலாளித்துவ பொருளாதாரத்தின் வளர்ச்சி, சமுதாயத்துக்குள் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்பது பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல், இரவல் கனவுக்குள்ள போயிருந்துகொண்டு 1940களில் வாழும் நீங்கள் -
இண்றய சழூகத்திற்குள் இயங்கும் முரன்பாடுகளை
முக்கி முக்கி தீத்தினாலும் கையோட அவுக்கென்டு கக்கிப்போட்டு கா கா வென்று கரைந்ததையே கரையும் நீங்கள் -
பல்வேறு தனிநபர் தாக்குதல்களை முன்னின்று நடத்திய நீங்கள் -
- வெக்கம் மாணம் ரோசமில்லாமல் ஒரு மண்ணாங்கட்டி ‘அரசியல் நிலைப்பாடு;’ வைக்க எப்பிடி வருகுது துனிவு.
- நாங்கள் என்ன, விடிய எழும்பி கக்கூசு பொனா அதுக்கயே விழுந்து கிடக்கிறம் எண்ட நினைப்பா உங்களுக்கு?
அண்ணை இந்த வசனங்களையாவது கொஞ்சம் மனிசருக்கு விளங்கிற மாதிரி கொஞ்சம் பொறுமையா எழுதலாம்தானே.
உதாரனம் எடுத்தனென்டா இங்க இடம் கானாது!!
த ஜெயபாலன் on November 2, 2007 9:50 pm
நண்பர் ரயாகரனுக்க
உங்கள் இணையத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள ‘அமெரிக்காவின் உருவாக்கம் தான் எய்ட்ஸ் கிருமி HIV’ என்ற கட்டுரை தேசம் சஞ்சிகைக்காக ச வேலு அவர்களால் தொகுக்கப்பட்டு இருந்தது. ”துப்பாக்கிகள் கற்கால மக்களுக்கு மட்டுமே!” என்ற வங்காரி மாத்தாய் (2004ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்) இன் வாசகத்துடன், ‘பேரழிவு ஆயுதம் - AIDS Made In America’ என்ற தலைப்பில் இதனை தேசம் சஞ்சிகையின் 25ம் இதழில் நவம்பர் - டிசம்பர் 2005ல் (பக்கம் 22 – 25) பிரசுரித்து இருந்தோம். அதனை மீள்பிரசுரம் செய்துள்ள நீங்கள் கட்டுரையின் தலைப்பை மாற்றி மூலத்தை தமிழர் இணையம் எனக் குறிப்பிட்டு உள்ளீர்கள். இதனை உங்கள் கவனத்திற்காகத் தெரியப்படுத்துகிறேன். நீங்கள் விரும்பினால் திருத்திக் கொள்ளவும்.
பரவலான வாசகர்களுக்குத் தகவல் சென்றடைவதையே நாம் விரும்புகிறோம். தேசம், இன்மை, லண்டன் குரல், லண்டன் உதயன், தேசம்நெற், ஆகியவற்றில் இருந்து ஆக்கங்களை எமது அனுமதி பெறாமல் ஆனால் அதில் எவ்வித மாற்றமும் செய்யாமல் யாரும் மீள்பிரசுரம் செய்யலாம். ஆனால் ஆக்கங்கள் தேசம், இன்மை சஞ்சிகைகளில் இருந்தோ, லண்டன் குரல், லண்டன் உதயன் பத்திரிகைகளில் இருந்தோ அல்லது தேசம்நெற் இணயத்தளத்தில் இருந்தோ பெறப்பட்டு இருந்தால், அதனை குறிப்பிடுவது மகிழ்ச்சிக்குரிய பண்பாக அமையும்.உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி.
த ஜெயபாலன்.
rayakaran on November 2, 2007 10:33 pm
நாம் கட்டுரையை எடுத்த இடம் இது தான்.
http://thiagu1973.blogspot.com/2007/10/hiv.html
அவர் இட்ட மூலக் குறிப்பை சரியாகவே நாம் போட்டள்ளோம். நிங்கள் நிங்கள் உங்கள் உரிமைக்காக அந்த இணையத்துடன் தொடர் கொள்ளவும்.
Rayakaran on November 2, 2007 10:52 pm
கட்டுரை எங்கிருந்து பெறப்பட்டது என்பதற்கான இணைய முகவரியை இங்கு இணைத்துள்ளோம்.
http://thiagu1973.blogspot.com/2007/10/hiv.html
பெறப்பட்ட மூலத்தில் எவ்வாறிருந்ததோ அதனை அவ்வாறே திருத்தங்கள் எதுவுமின்றி மீள்பிரசுரமாக்கியிருந்தோம்.
இக்கட்டுரையை தனது இணையத்தில் பிரசுரித்த நண்பர் இது குறித்து தனது கருத்தை தங்களுக்கு தருவதே சரியானதாகும்.
மருது on November 2, 2007 11:14 pm
அட ஜெயபால! நீ நினைப்பதுபொல் மசியிற ஆலில்ல கானும் றயா! அவருக்கு தமிழ் மட்டுமே அறியும் கானும்- அதுவும் ஆரும் பிழையா எழுதிறத –அதையும் பிழையா விழங்கி – பொரும் தத்துவமாக்கும் பழக்கம் கனகாலமா கிடக்கப்பனே. நம்மிட பிரான்சுக் காரர் ஆராவது எழுதுங்கவன் அதப்பத்தி. அசோக் இந்த அடி வாங்கிப்போட்டும் பாத்துக்கின்னு இருக்கலாமோ? பழச கொஞ்சம் இழுத்தாத்தான் மீண’டும் அமைதி வரும் போல!
thanks
thesamnet
புதியதோர் உலகம் – PUTHIYATHOR ULAGAM
15 years ago
No comments:
Post a Comment