மாற்றம் என்பது மாறாதது; இங்கே தோழமைதேடி...

Dec 25, 2009

என்.எல்.எவ்.டி, பி.எல்.எவ்.டி.EPRLF

...
பதிந்தவர் ramakrishna, December 06, 2009
என்.எல்.எவ்.டி, பி.எல்.எவ்.டி ஆகிய இயக்கத்தை சேர்ந்த குறிப்பிட்ட சிலர் 1987 இல் இந்திய அரசாங்கத்தால் இரகசியமாக அவசரமாக கொடுக்கப்பட்ட பயிற்சியில் கலந்துகொண்டனர். அதில் NLFT,PLFT ஆகிய இயக்க தலைமை இந்த சந்தர்ப்பத்தில் இராணுவ பயிற்சியை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்ட ாக அறிகிறேன். எனக்கு தெரிய குருநகர் பிரதேச கமிட்டியை சேர்ந்த ஒருவரும் உருத்திரபுரம் அன்ரன் ஆகியோர் பயிற்சி பெற்றவர்களில் சிலர். அன்ரன் பின்னர் புலிகளின் விளையாட்டு பிரிவின் முக்கிய உறுப்பினர். இந்த பயிற்சியிக்கு முன்னர் புலிகளால் தடை செய்யப்பட்ட எல்லா அமைப்புகளை சேர்ந்தவர்களும் அரசியல் கல்வி வட்டம் என இந்தியாவில் கூடி கலந்துரையாடி வந்தனர். அதில் NLFT,EPRLF,EROS,PLOT,PLFT,TMPP( தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை) எனப்பலரும் கலந்து கொண்டனர்.


என்.எல்.எப்.ரி அப்படி எந்த பயிற்சியும் நீங்கள் குறிபிட்ட காலத்தில் எடுக்கவில்லை.
பதிந்தவர் rayakaran, December 06, 2009
வணக்கம் ராமகிறிஸ்ணா

என்.எல்.எப்.ரி அப்படி எந்த பயிற்சியும் நீங்கள் குறிபிட்ட காலத்தில் எடுக்கவில்லை. பி.எல்.எவ்.ரி பற்றி எனக்குத் தெரியாது. நீங்கள் குறிப்பிட்ட அன்ரன், பி.எல்.எவ்.ரியில் இருந்தவர். அத்துடன் அவர் கடுமையாக பலியால் சித்தரைவதைக்கு உள்ளானதுடன், புலிகள் தமக்கு வேலை செய்ய வைக்கபப்பட்டனர். 1986 முற்பகுதியில் என்.எல்.எப்.ரி உடைந்தது. குருநகர் பகுதி பெரும்பகுதி பி.எல்.எவ்.ரியுடன் நின்றது.

பதிந்தவர் ramakrishna, December 06, 2009

ரயாகரன் வணக்கம், உங்கள் பதிலுக்கு நன்றி. இங்கு எனக்கு தெரிந்த விடயத்தை பதிவிடுகிறேன். மேலதிக உண்மைகளை உறுதிப்படுத்திக்கொ ்ளுங்கள். PLFT பயிற்சி பெற்றுக்கொண்டது உண்மையானது. 1990களில் புலிகளால் uthr(ஜ்) சிறிதரன் தேடப்பட அவர் தப்பியோடியதும்,அவரத ு சண்டிலிப்பாய் வீட்டிலிருந்து புலிகளால் ஆயுதங்கள்,பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டதும் அறிந்ததே. இந்த PLFT தேடுதலில் உடுவில் அன்ரன் (விவேகானந்த சர்மா) புலிகளால் கைது அதனை தொடர்ந்து உருத்திரபுரம் அன்ரன் புலிகளால் கைது செய்யப்பட்டதும் நடந்ததும் உண்மை. ஆனால் அன்ரன் சித்திரவதை செய்யப்படவில்லை என்பதும் அவர் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ் செல்வனின் சகோதரனான பரமு.மூர்த்தியின் தலையீட்டினால் புலிகளால் விடப்பட்டதாகவும் அறிகிறேன். அப்போது மூர்த்தி மாத்தையாவின் மக்கள் முன்னணியின் அமைப்பாளர் அவருடன் அன்ரன் தொடர்பில் இருந்தமையால் விடுவிக்கப்பட்டார். பின்னைய காலத்தில் அன்ரன்,விந்தன் ஆகியோர் புலிகளுக்காக வெளிப்படையாக வன்னியில் புலிகளின் பண்பாட்டுக்கழகத்து ன் தொடர்பு வைத்து நாடகங்கள் அரங்கேற்றியதாகவும் அன்ரன்,விந்தன் ஆகியோர் கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில கல்வி கற்பித்தபோது அவர்களிடம் பயின்ற பல மாணவர்கள் புலிகள் அமைப்பில் இருந்தமையும் புலிகளுடனான தொடர்பு இவர்களுக்கு இறுக்கமடைய ஆரம்பித்தது. அன்ரன் கைதான நேரத்தில் கிளினொச்சியில் கல்வி கற்பித்து வந்த ரவி அருணாசலம் கூட தன்னையும் புலி இலக்கு வைக்கலாமென பயந்து கொழும்புக்கு ஓடியதாகவும் அறிகிறேன். இதே காலத்தில் சங்கானை பிரதேச கமிட்டியை சேர்ந்த சந்திரன் கூட புலிகளால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாக அறிகிறேன். அதேபோல் முரசுமோட்டை,பரந்தன் , விசுவமடு ஆகிய இடங்களில் NLFT,PLFT ஆகியவற்றின் பிரதேச கமிட்டியில் இருந்த பலர் பிற்காலங்களில் புலிக்கு வேலைசெய்தனர். எல்லோரும் கைது செய்து சித்திரவதை செய்து வேலை செய்விக்கப்பட்டவர் ள் அல்லவே. இதில் NLFட் உம் இந்திய பயிற்சியில் ஈடுபட்டதாகவே அறிகிறேன். ஏனெனில் அரசியல் கல்வி வட்டத்தில் தமிழ்மாறன்(ராகவன்) NLFட் சார்பாக கலந்துகொண்டிருந்தா ். இந்த கலந்துரையாடலின் பின்னணியில் தான் இராணுவ பயிற்சி தொடர்பான ஓர் உடன்பாடும் எட்டியதாக அறிகிறேன். எனது இந்த தகவல் மட்டும் என்னால் உறுதியாக சொல்லமுடியாது. முடிந்தால் உறுதிப்படுத்தவும். ஆனால் விசுவானந்ததேவனை தலைமையாக கொண்ட PLFT பயிற்சி எடுத்தது உண்மையானது.


இந்திய ஆயுதப் பயிற்சி
பதிந்தவர் ரூபன், December 06, 2009
ராமகிறிஷ்ணாவின் கருத்துத் தொடர்பாக 90 களில் என்.எல்.எவ் ரி மற்றும் பி.எல்.எவ்.ரி யில் இருந்த தோழர்கள் கருத்துக் கூறுவது நல்லது!.

நட்புடன்
ரூபன்
061209

...
பதிந்தவர் rayakaran, December 07, 2009
ரமகிருஸ்ணக்கு வணக்கம்

1.உங்கள் தகவலுக்கு நன்றி. இதில் மறுக்க எதுவுமில்லை. என்.எல்.எவ்.ரி பயிற்சி அக்காலத்தில் எடுக்கவில்லை. என்பது என்னால் உறுதியாக கூற முடியும். தமிழ் மாறன் பொது அரங்கில் பங்குகொள்ளவே தயராற்றவராக இருந்தவர். என்.எல்.எவ்.ரியைக் கூட சந்திக்க அக்காலத்தில் மறுத்து நின்றவர்

2.அக்காலத்தில் என்.எல்.எவ்.ரி நடத்தி பயிற்சி முகாம் தேவையில்லை என்று முற்றாக முடக்கியவர் அவர். அவரின் இந்த தன்னிசையான நிலை, அமைப்பில் முரண்பாடக மாறி வளர்ச்சியுற்றது. புலிகளை எப்படி எதிர் கொள்வது என்பது தொடர்பான அரசியல் முரண்பாடாக மாறியது. இதன் தொடர்ச்சில் தான் நான் ராஜினமாக செய்தேன்.

3.1984 இல் ஈ.பி.ஆர்.எல். ஊடாக இருவர் பயிற்சிக்கு அனுப்பட்டனர். அமைப்பின் பெரும்பான்மை இதை நிராகரித்தபோதும், விசுவின் பிடிவாதத்தால் அமைப்பு அதை அங்கரித்து. நாபா உடாக பயிற்சிக்கு அனுப்பப்பட்டவர்களு ்கு, பயிச்சியை ஈ.பி.ஆர்.எல். வழங்கவில்லை. இதில் பிரமேச்சந்திரன் தன் நரிப்புத்தியுடன் கையாண்டவர். விசுவின் இது போன்ற தொடர்ச்சியான நடவடிக்கைகள் தான், அமைப்பின் அரசியல் பிளவாக மாறியது.

4.விசுவின் மறைவின் பின் பி.எல்.எவ்.ரி அமைப்பு இது போன்ற நடைமுறைகள் அதிகரிக்க வாய்ப்பு அதிகம் இருந்தது. சிறிதரன் வழிகாட்டியாக, கொள்கை வகுப்பளாராக மாறியிருந்தவர். ஒரு உதாரணம், நான் 1987 இல் புலிகளில் இருந்து தப்பிய பின், 1988ம் ஆண்டு ராக்கிங்கு எதிரான ஒரு பேராட்டத்தை நான் தனித்து தொடங்கினேன். இது வன்முறையில் முடிந்தது. ராக்கிங் வெய்தவர்கள் என்னை அடிக்கமுனைய, நான் அதற்கு எதிராக மாணவர்களை அணிதிரட்டி நிற்க பல்கலைக்கழகம் இரண்டுபட்டு நின்றது.

இந்த நிலையில் சிறிதரன் முதன் முதலாக என்னை தன் அலுவலகத்துக்கு அழைத்தார். அவர் எனது கணித பேராசிரியராக இருந்த போதும், ஒருநாளும் கதைத்தது கிடையாது. என்னிடம் அவர் கூறியது ராக்கிங்கை ஆதாரிக்கும் படி. ராக்கிங்கை புலிகள் எதிர்ப்பதால், மாணவர்கள் ராங்கிக்கை ஆதாரித்து நிற்பதன் மூலம் புலியை தனிமைப்படுத்தலாம் என்றார். அதை நான் உடன் நிராகரித்தேன்.

போராட்டம் வன்முறையாக மாறும் நிலை. இந்த இடத்தில் நாவலன் தலையிட்டு, என்னை குறித்த ராக்கிங்க்கு எதிராக நடந்த வன்முறைக்கு மன்னிப்பு கோரக் கோரினார். நான் ராக்கிங்கு செய்ததுக்கும், ராங்கிங்கின் போது கையாண்ட வன்முறைக்கும் மன்னிப்புக் கோரக் கோரினேன். இப்படி இழுபட்டு, நான் மன்னிப்பு கோருவதை மறுத்தேன். நாவலன் கூறனான், இதைப் புலிகள் பயன்படுத்தி உன்னை சுட்டுக்கொன்றுவிடு ார்கள், எனவே மன்னிப்பு கோரக் கோரினான். இப்படி ஒரு அஸ்திரத்தை வைத்து, மன்னிப்புக் கோரக்கோரினான்.

இறுதியாக ராக்கிங் தான் வன்முறைக்கு காரணம் என்ற எனது உரையுடன் (பெரும் கூச்சலுக்கு மத்தியில்), மன்னிப்பு கோரப்பட்டது.

இங்கு சிறிதரன் முதல் நாவலன் வரை அந்த இடத்தில் ராக்கிங் செய்தவர்களுடன் நின்றனர். ரக்கிங்கால் பாதிக்கப்ட்டவர்களு ன் நிற்கவில்லை.

...
பதிந்தவர் ramakrishna, December 08, 2009
அசோக் குழுவில் செயற்பட்ட அ. கௌரிகாந்தன்(சுப்பைய ா) என்பவரும் இருந்ததாக நினைக்கிறேன். இவர் பின்னாளில் புலிகளுடன் சேர்ந்து செயற்பட்டவர். ENDLF உருவாக்கத்தின் ஆரம்பத்தில் இவரும் இருந்திருக்க வேண்டும். பின்னர் அதிலிருந்து விலகி PROவா என்ற இயக்கத்தை கட்டியதாகவும் இந்தியாவில் சில இடங்களில் கொள்ளையிட முயன்று சிலர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்.
...
பதிந்தவர் ramakrishna, December 07, 2009
PLFட் இன் இந்திய பயிற்சியில் அன்ரன் அன்பழகன், ஜெஸ்லி ஆகியோர் கலந்துகொண்டதாக தகவல்.

...
பதிந்தவர் ramakrishna, December 04, 2009
மத்திய குழுவின், மிகப்பெரும்பான்மைய தீப்பொறி கொண்டு இருந்தது....
தீப்பொறி குழுவில் சந்ததியார், கேசவன்(கோவிந்தன்),ரக மான் ஜான் மாஸ்ரர்,தயாபரன்( குமரகுருபரன் சகோதரன்) என்போர் புளொட் ம.குழுவில் இருந்தவர்கள் இருந்தனர். அதைவிட ம.குழு உறுப்பினரான மரியதாஸ்(இப்போது யாழ் மா நகர சபை பொறியியலாளர்) வெளியில் இருந்து தீப்பொறிக்கு ஆதரவாக இருந்தனர். இன்னொரு ம.குழு உறுப்பினரான மரியதாஸின் சகோதரன் தேவதாஸ்(மாறன்) சிறிலங்கா சிறையில் அப்போது இருந்தார்)

Thanks

http://www.tamilcircle.net


EPRLF இன் இறப்பு

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தொடர்பான இந்த சிறு நோக்கு தலித்தியமும் தேசியமும் தொடர்பான விவாதங்களுக்கு ஒரு நடைமுறை விளக்கமாக அமையும் என்று நம்புகிறேன். EPRLF தொடர்பான ஆவணக் குறிப்புகள் ஏதும் இல்லாத நிலையில் இந்தக் குறிப்பினை இந்த இயக்கத்தின் முன்னை நாள் உறுப்பினர்கள் வளர்த்தெடுப்பார்கள் என நம்புகிறேன்.

முதன் முதலில் தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்பான சரியான அமைப்பு முறை ஒன்றை கொண்டிருந்த இந்த இயக்கமானது, கிராமங்களில் இருந்தே தனது ஆரம்ப வளர்ச்சிக் கருவினைக் கொண்டிருந்தது. ஏகாதிபத்தியம் தொடர்பான தனது குறை மதிப்பீட்டினால் அழிந்து போன இந்த அமைப்பானது, 80 களின் ஆரம்பத்தில் நம்பிக்கை தரும் சமூக சக்தியாகத் திகழ்ந்தது.

கிராமியத் தொழிலாளர் சங்கம், ஈழ மாணவர் பொது மன்றம், ஈழப் பெண்கள் அமைப்பு போன்ற மக்கட் பிரிவுகளை அமைப்பு மயப்படுத்தும் வெகுஜன அமைப்புக்களையும், ஈழ மக்கள் விடுதலை முன்னணி என்ற தேச விடுதலை இயக்கத்தையும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற புரட்சிக் கட்சியையும் தன்னகத்தே கொண்டிருந்த இந்த அமைப்பானது, ஆரம்பத்தில் இவ்வுள்ளக அமைப்புக்களிடையேயான உறவுகள் தொடர்பான தெளிவான பார்வையையும் கொண்டிருந்தது.

பத்மநாபா உள்பட இவ்வமைப்பின் பல தலைவர்கள், கிராமியத் தொழிலாளர் சங்கதினூடாக கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்களை அமைப்பு மயப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

மத்தாளோடை, உரெழு, மாதகல், போன்ற வறிய கூலிவிவசாயிகளின் கிராமங்கள் பலவற்றில் பத்ம நாபா 83 இற்குப் பின்னர் கூட இயக்கத்தின் தலைவராக அறியப்படவில்லை. கிராமியத் தொழிலாளர் சங்கத்தின் அமைப்பளராகவே தாழ்த்தப்பட்ட மக்களால் அறியப்பட்டிருந்தார்.
பல தாழ்த்தப் பட்ட மக்களின் போராட்டங்களில் முன்னின்று பங்காற்றிய கிராமிய உழைப்பாள்ர் சங்கம், இந்த மக்களின் முழு நம்பிக்கையைப் பெற்றிருந்தது. ஈழ மக்கள் புரட்ட்சிகர விடுதலை முன்னணி கிராமியத் தொழிலாளர் முன்னணியில் தங்கியிருந்தது. சங்கம் சுயாதீனமாக இயங்கியதுடன் கட்சியினதும் இயக்கதினதும் சொந்த நலனுக்கு அப்பாற்பட்டதாகவும், வறிய கூலி விவசாயிகளின் நலன்களைப் பிரதினிதித்துவப் படுத்துவதாகவும் அமைந்தது.

ஈழப் பெண்கள் முன்னணியும், ஈழ மாணவர் பொது மன்றமும் இவ்வாறே அமைந்திருந்தன. எந்த ஒரு மககட் பிரிவினதும் மிகப் பலமான ஆயுதம், அந்த மக்களின் வர்க்க அடிப்படையில் ஒருங்கிணைந்த அமைப்பேயாகும். இந்த வகையில் மிகவும் பலம் பெற்று வந்த கிராமியத் தொழிலாளர் சங்கம் முற்போக்காளர்கள் மத்தியில் நம்பிக்கை நட்சத்த்ரமாகத் திகழ்ந்தது.

1983 இல் ஏற்பட்ட இயக்கங்களின் பாய்ச்சல் நிலை வீக்கம் காரணமாக, இந்த இயக்கத்திலும் கோஷ்டி வாதப் போக்கு மேல்னிலைக்கு வந்தது. இந்திய அரசால் வழங்கப்பட்ட இராணுப்பயிற்சிக்கு அவசரமாக ஆள்சேர்ப்பதில் ஆர்வம் காட்டிய இவர்கள் திடீரென பெண்கள் மாணவர் விவசாயிகள் அமைப்புக்களை EPRLF இன் அங்கங்களாக மாற்றத்தீர்மானித்தனர். சுவரொட்டிகளூடாகவும், துண்டுபிரசுரங்களூடாகவும் இந்தப் பிரகடனத்தைப் பிரச்சாரம் செய்தனர். இதனால் மூன்று முக்கிய விளைவுகள் ஏற்பட்டன.

1. மேற்படி எல்லா வெகுஜன அமைப்புக்களும் சட்டவிரோத அமைப்புக்களாகக் காட்டிக் கொடுக்கப்பட்டதுடன், அதன் உறுப்பினர்களும் சிறிலங்கா அரசால் தேடப்பட்டனர்.

2. கட்சியின் அங்கங்களான வெகுஜன அமைப்புக்கள் கட்சியின் நேரடிக் கட்டுப்பட்டுக்குள் வர மக்கள அமைப்புக்களில் கட்சி தங்கியிருக்கும் நிலை மாறியதுடன், கட்சியில் இந்த அமைப்புக்கள் தங்கியிருக்கும் நிலை உருவானது.

3. மக்கள், குறிப்பாக கூலி வறிய விவசாயிகள், கிராமிய உழைப்பளர் சங்கத்தை தமது நலன்களுக்கான அமிப்பாக அல்லாமல் கட்சியின் நாலன்களுக்கான அமைப்பாகக் கருதினர்.

இதனால் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற அமைப்பு முதற்தடைவையாக மரணத்தின் விழிம்பிற்குள் தள்ளப்பட்டது.
ஆனால் EPRLF இற்குள் இருந்த, குறிப்பாக அதன் மத்திய குழுவிலிருந்த பல உறுப்பினர்கள் வெகுஜன அமைப்புக்கள் தனித்துவமாக அமைய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராட்டம் நடத்தினர். 1985 இறுதிவரை தொடர்ந்த இந்தப் போராட்டத்திற்கு சுரேஷ், பத்மநாபா போன்றோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இவ்வாறான உறுப்பினர்களை சுரேஷ் தலைமையிலான உளவுப்பிரிவு நாபாவின் உத்தரவின் பேரில் கண்காணிகவும் ஆரம்பித்தது.

மறு புறத்தில் சுத்த ராணுவப் போக்கையே தனது வாளாகக் கருதிய டக்ளஸ் தேவானத்தா போன்றோர் LTTE போன்ற அமைப்பைக் கட்டியெழுப்புவதையே தமது நோக்காகக் கொண்டு செயற்பட, இயக்கத்துள் பதவிப் போட்டி உருவானதுடன், முற்போக்காளர்களின் குரல் முற்றாக மழுங்கடிக்கப்பட EPRLF இன்னொரு LTTE ஆக மாறிப்போனது. ஏற்கனவே இருந்த ஜனனாயகத் தன்மைகள் இந்த சுத்த ராணுவப் போக்கிற்கு எதிரானாதாக அமைய, EPRLF ராணுவம் பலம்ழந்ததாகக் காணப்பட்ட நிலையில் LTTE இனால் நிர்முலமாக்கப்பட்டது.
தாழ்த்தப்பட்ட மக்களான வறிய கூலி விவசாயிகளின் பலமான தலைமையை இழந்த போதே இறந்துபோன EPRLF இன்னொரு LTTE ஆக மாறுவதும் சாத்தியமற்றதாகிப் போனது.

Navalan


peiyan on November 4, 2007 7:32 am

ராகவன் ரயாகரனோடு தலைமறைவு!

ஏரம்பு: on November 4, 2007 9:43 am

ஏரம்பு:
கருத்துக்களை எழுதும் போது முன்வைக்கபட்ட வாதத்தின் அடிப்படையில் கருத்தினைப் பதிவு செய்வதே நாகரீகம். ராகவன் தனது வாதத்தை வைத்துள்ளார். அதுபற்றிய விவாதத்திற்கும் தயாராக உள்ளார். இந்த ஜனநாயகப் பண்பை முன் வைத்து கருத்தக்களை முன் வையுங்கள். யாரும் தத்துவ ஆசிரியர்களாகப் பிறப்பதில்லை. தனது கருத்துக்களை விவாதிக்கத் தயாராக உள்ள ராகவனின் ஜனநாயக் பண்புக்கு வாழ்த்துக்கள்!!

mani on November 4, 2007 10:10 am
navalain kaddurai pala vedayankali pesukiinrathu. paaraaddukkal. evar rayakaranodu samar enra sanjikaiyi nadatti pinpu rayakarn navalanin arachiyal chenthani mithu poraamy kondu corinaai vesar condu thuratti adtthavar.ethu francel ulla pala paarkalutku therunthirukkum.rayakaranodu nmpe enthaviha uraum kollamudiyathu. evar rayakarn paasaiel cholvathynnal rayaakarn oru araciyal viyaapaari. naavalanuddu (deleted) hattan national bank collai paitri nanraaka thrium. avar ethu patri eiluthaveendum.

Mani
நாவலனின் கட்டுரை பல விடயங்களைப் பேசுது. பாராட்டுக்கள். அவர் ரயாகரனோடு சமர் என்ற சஞ்சிகையை நடத்தி, பின்பு ரயாகரன் நாவலனின் அரசியல் சிந்தனை மீது பொறாமை கொண்டு துரத்தி அடித்தவர். இது பிரான்ஸில் உள்ள பலபேருக்குத் தெரிந்திருக்கும். ரயாகரனோடு எந்தவித உறவும் கொள்ளமுடியாது. அவர் ரயாகரன் பாசையில் சொல்வதானால் ரயாகரன் ஒரு அரசியல் வியாபாரி. நாவலனுக்கு (நீக்கப்பட்டு உள்ளது) ஹற்றன் நசனல் பாங்க் கொள்ளை பற்றி நன்றாகத் தெரியும். அவர் இது பற்றி எழுத வேண்டும்.
மண

navalan on November 4, 2007 3:07 pm

தயவுசெய்து தத்துவார்த்தப் பிரச்சனைகளைமட்டும் விவாதிப்பேம். எமது சமூகத்திற்குத்தேவையானது ரயாகரனின் தனிப்பட்ட பிரச்சனைகளல்ல. தனினபர்கள் மீதான தாக்குதல் என்பது குறித்த பிரச்ச்சனை தொடர்பான ஆய்வைத் திசைதிருப்புவதில் மட்டுமே முடிவடையும். ரயாகரனின் சரியான பல கருத்துக்கள் கூட இவரின் இவ்வாறான போக்கினால் அடிபட்டுப் போய்விடுகிறது. நான் ரயாகரனாக மாற விருபவில்லை. இன்று எம்முன்ன்னாலுள்ள தலிதியல் தொடர்ப அபாயகரமான கருத்து விடுதலைப் புலிகளின் பாசிசத்தை ஒத்த தாக்கங்களை ஏற்படுத்த வல்லதாக நான் கருதுகிறேன். இது தொடர்பான விவாதங்கள் அவசியமானதும் அவசரமானதுமாகும்.

மருது on November 4, 2007 6:59 pm

இந்த தலித்மாநாடு எந்த இயக்கமும் சார்ந்து நடத்தபடவில்லை என்று அறிவித்ததாகத்தான் நான் கேள்விப்பட்டேன். இதற்குள் ஏன் இயக்க மூலாம் பூச வபறியள்? தலித்தியத்தையும் புலியையும் பாசிசத்தையும் ஒப்பிடுவது போன்ற ஒரு பயித்தியக்காரதன்தை என்ன சொல்வது? கொஞ்சம் பொறுமையாக யோசித்தால் தெரியும். புலியெதிர்ப்பு முத்திரையை நீங்கள் தலித் அமைப்புகளுக்கு குத்த முன்னிற்பதால் உங்களுக்கு என்ன லாபம். தேசிய விடுதலை மேல் மோகம் கொண்டுள்ள தலித்துகளை தனிமை படுத்தி தலித்துகளின் ஒருங்கினைப்பை உடைப்பதை தவிர இதற்கு பின்னால் ஒரு மண்ணாங்கட்டியுமில்ல

Navalan on November 4, 2007 7:29 pm

மக்களின் ஆதரவுடனான, சமூக இயக்கதிற்கெதிரான எந்தவொரு போக்கும் பாசிசத்தை உருவாக்கும் அபாயமுள்ளதாகும். அதற்காக இதுதான் பாசிசம் என நான் வரையறுக்கவில்லை. இதற்கும் புலி எத்ர்ப்பிற்கும் எந்த சம்பந்தமுமில்லை. இந்தியாவில் தலித்தியம் அது தொடர்பான பொருள் முதல்வதப் பார்வை என்பனவற்றின் குறைபாடுகள் காரணமாக பல நக்சல்பாரி அமைப்புக்களின் பாசிசத்தன்மையை உங்களுக்கு சுட்டிக்காட்ட முடியும்.

இன்றைய உலகமயமாதலின் பின்னணியில் எழுந்துள்ள தலித் இயக்கங்கள் தொடர்பான சரியான பார்வையை நாம் உருவாக பின்னிற்போமானால் இதன் விழைவுகள் ஆபத்தானவையாகலாம் என்ற ஆதங்கத்திலிருந்து எழுதப்பட்டது தான் எனது குறிப்பு. இதற்கும் புலிக்கும் எந்தத் தொடர்பையும் நான் குறிப்பிடவிலை. அவ்வாறு அது தொனித்திருன்ட்தால் எனது மன்னிப்புக்கள்.
Navalan

Thanks
Thesamnet

No comments:

Post a Comment