பல்லி on December 14, 2009 12:08 pm
அது சரி இப்படி என்னும் எத்தனை காலம்தான் திட்டங்களும் தீர்வுகளும் எழுத போறியள்; வயதுகளையும் கவனியுங்கோவன்; அறுபதை தாண்டினால் அடிக்கடி கனடா; லண்டன்; பாரிஸ்; நோர்வே; அலைய முடியாது அல்லவா. அதுவும் போக எமக்கும் கண்பார்வைகள் மங்கிபோகும்; உங்கள் திட்டங்கள் எழுத்துக்கள் இப்போதே எமக்கு சிறிது கஸ்ற்றமான சங்கடமான விடயம்தான்; சரி சரி எதுக்கும் தீப்பொறி போல் பலருக்கு பொறிமட்டும் வைத்துவிட்டு போகாமல் இதிலாவது தீ வரட்டும்; அத்துடன் தாங்கள்(ரகுமான்) KP யின் பக்த்தர் என பரவலாக பேசபடுகிறது; அப்படியாயின் புலி விட்டுபோன அரசியலையும் தீப்பொறி கவனிக்குமோ? என்னும் கேள்வி பல்லிக்கு மட்டுமல்ல பலருக்கு உண்டு; அதையும் உங்கள் வியூகத்தில் கவனிக்கவும்;
குகபிரசாதம் on December 14, 2009 1:41 pm
பிரபாகரனை “பிரபாகரன் அவர்கள்” என்று ஒருபோதும் எழுதாதவேளை நடந்து முடிந்ததும் நடக்க வேண்டியதும் என்று எழுதியதில் “கே பீ அவர்கள்”, “கே பீ அவர்கள்” என்று கே பீயை தூக்கி தலையில் வைப்பதை பார்க்கும்போது பல்லி ரகுமான்ஜான் பற்றி சொல்வது சரியாகத்தான் இருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
இத்தனை வருடமாக இவர்கள் வியுகத்தில் பலர் வீணாக மடிந்ததை தவிர வேறு எதுவும் நடக்கவில்லை. இவர்கள் வெள்ளி பார்த்த அரசியல் குருடர்கள். ஆனால் குரல் வளமிக்க குருடர்கள். இவர்கள் பாடுவதுக்கும் யதார்த்தாத்துக்கும் சம்பந்தம் கிடையாது. இவர்களின் கடந்த கால பின்னணி மிகவும் சந்தேகத்துக்கு உரியது. அதனால்தான் அடிக்கடி சுயவிமர்சனம் செய்தோம் எங்களை நம்புங்கள் நாங்கள் கிளீன்!!! கிளீன்??? என்று பீலா வேறு விட்டுகொண்டே வருகிறார்கள்.
இந்த கூட்டத்தில் பேசிய சுவிஸ் முரளி புலியின் ஒரு தூண். சேனா புலியின் ஒரு பலத்த ஆதரவாளன். பிரபாகரன் இல்லை என்றதால் தமது பிழைப்பை தொடர மே 18 இயக்கம் என்று எல்லாருக்கும் ஒரு புது பீலா காட்டி புதிய வியுகத்தில் தம் வியாபாரத்தை தொடங்கி இருக்கிறார்கள்.
அடபாவிகளா மீண்டும் ஒரு சதிராட்டமா?? திருந்தவே மாட்டீர்களா??? மக்களை வாழவிட மாட்டீர்களா??
கேதீஸ்வரன் on December 14, 2009 3:35 pm
ஜனநாயகபுராணம்…. மாற்றுக்கருத்துப்புராணம்…. இலக்கியபுராணம்… பெண்ணியப்ப்புராணம்… புரட்சிகரப்புராணம்… மனிதநேயப்புராணம்.. மக்கள் போராட்டப்புராணம்… என்ற வரிசையில் வந்தவர்கள் எல்லோரும் எப்படி தம் கொள்கைகளில் ‘வழுவாது’ விவேகமாக வியூகங்கள் அமைத்து நின்றனரோ அப்படித்தான் இந்த புது மே 18 புராணம்
எழுத உங்களுக்கு உரிமையுண்டு. ஆனால் அதை ஏற்க நாங்கள் தயாராக இல்லை.
pakthan on December 16, 2009 1:32 am
திரும்பவும் வந்து விட்டார்கள் இந்த மாக்ஸிஸ பூசாரிகள். பிராமணர்கள் வேதத்தை பாடமாக்குவது போல் இவர்களும் மாக்ஸிஸ புத்தகங்களை பாடமாக்கி விட்டு போதனை வேறு! மாக்ஸிஸ விஞ்ஞானத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் அதை நிலமைக்கு ஏற்றவாறு பாவிக்காமல் தேசிய இனப்பிரச்சனையில் லெனின் இவ்வாறு பாவித்தார் அவர் அப்படி சொன்னார் என கதை விடுகிறார்கள். உலக மாற்றங்கள் – 19 ம் நுற்றாண்டில் உலக ஒழுங்கு முறை பற்றிய சீரியசான புரிதல் இன்றி கர்நாடக சங்கீதத்தை பாடுவது போல் இந்த பழமைவாதிகள் தொடர்ந்து பாடுகிறார்கள்.
மாக்ஸ்ஸிய விஞ்ஞானம் பிழையானதன்று. அது விஞ்ஞானம். ஆனால் இந்த புத்தகப் புழுக்களுக்கு அதை சூழ்நிலைக்கு ஏற்ப பாவிக்க தெரியாமல் அதையும் குழப்பி எங்களையும் குழப்புகிறார்கள
இனங்களுக்குள் சிறிதளவு முறுகல் இருந்த எண்பதிற்கு முதல் இவர்கள் ஐக்கிய இலங்கைக்குள் செய்த புரடசியில் இலங்கை மக்கள் அடைந்த பலன்களை சொல்லி மாளாது. புலி பயங்கரவாதம் முடிந்த பின்பு மீண்டும் இந்த குடுகுடுப்பைகாரர்கள் வந்து விட்டார்கள். ஐயோ பாவம் மக்கள்…..! இனி கத்தை கத்தையாக எழுதப் போகின்றார்கள். அது சரி புரடசியை ஆயுதம் இன்றி எவ்வாறு செய்யப் போகின்றார்கள். அல்லது பாராளுமன்றம் மூலம் ஐக்கிய இலங்கைக்குள் புரடசியா? அதே பழைய பல்லவிக்கு மே 18 என புது பெயின்ட் அடித்து மீண்டும் காதிலை பூ வைக்க வந்துட்டாங்கள். இந்த கச்சேரிகாரருக்கு எப்பவும் ஒரு மேடை தேவை.
காலம் காலமாக இவ்வாறான மக்கள் மீது நம்பிக்கையற்று மக்களுக்காக உண்மையாக உழைக்க திராணியற்ற கூட்டத்தை நாம் கண்டுவருகிறோம். ஆனால் இவர்கள் என்னதான் தலைகீழாக நின்றாலும் எத்தனை பக்கங்கள் நீட்டி முழங்கினாலும் இவர்களின் கனவுகள் நிறைவேறப் போவதில்லை. மக்கள் நீண்ட நெடிய யுத்தத்தில் நல்ல பாடங்களை பெற்றுள்ளார்கள்.
புதியதோர் உலகம் – PUTHIYATHOR ULAGAM
15 years ago
No comments:
Post a Comment