போலிப் பேராசிரியரின் போலி ஒப்பாரி - கவிஞர் சேரனின் சவப்பெட்டி அரசியல் :நட்சத்திரன் செவ்விந்தியன்
Thanks
http://thesamnet.co.uk/?p=380
ஐம்பது ஆண்டுகளுக்கு முதல் அழகு சுப்பிரமணியம் Professional Mourners என்ற அருமையான ஆங்கிலச் சிறுகதையை எழுதினார். யாழ்ப்பாணத்தின் செத்த வீடுகளில் செத்தவருக்கு உறவில்லாத, குறித்தவருடைய இறப்பினால் துயரமடையாத பெண்கள் சடங்குக்காக மட்டுமே மிக உருக்கம் தோன்றக்கூடிய வகையில் ஒப்பாரி வைத்து அழுவதை அருமையாக அவர் அதில் சித்தரித்திருந்தார்.
இப்போது சேரனை கனடாவில் நடத்தப்பட்ட தோழர் பராவின் அஞ்சலிக் கூட்டத்திற்கு அதன் அமைப்பாளர்கள் பேச அனுமதித்திருப்பதை அறிகிறபோது அழகு சுப்பிரமணியத்தின் கதைதான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. யாழ்ப்பாணத்தில் சடங்குக்காக மட்டும் ஒப்பாரி வைக்கும் பெண்கள் இறந்தவரின் இறப்பினால் துயரமடையாவிட்டாலும் இறந்தவருக்கோ அவரின் கொள்கைகளுக்கோ எதிரானவர்கள் அல்லர். ஆனால் சேரனோ பராவின் கொள்கைகளுக்கும் அவரின் நேர்மைக்கும் மறுதலையானவர். தறுதலையாக இருத்தல் என்பதே சேரனின் நடைமுறை வாழ்க்கைத் தத்துவம்.
Pararajasingamபரா ஒரு அப்பழுக்கற்ற மனிதாயதவாதி (Humanist). களங்கமும் Hypocrisyம் அற்ற மனிதன். இதனை அவரது தனிப்பட்ட வாழ்வும் அரசியல் வாழ்வும் சொல்லும். ஒரு சிங்களப் பெண்ணை மண முடித்தவர். ஆதிக்க சாதியில் பிறந்து தனது மகளை ஒரு தலித்துக்கு மணமுடித்துக் கொடுத்தவர். ஆனால் சேரன்? தனிப்பட்ட நலன்களுக்காகவும் தன் நாசிசிஸ்ரிக் (Narcissistic) உளநோய்க்கு தீனிபோடுவதற்காகவும் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் டாய்லட் பேப்பர் போல் உபயோகிக்கிறவர். பின்னர் தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்த தருக்கத்துக்கும் தரவுக்கும் பதிலாக சூழ்ச்சிகளையும் குதர்க்கங்களையும் திரிப்புகளையும் உபயோகிப்பவர்.
மற்றவரின் மரணத்தை வைத்து தனிப்பட்ட அரசியலை நடத்துவது ஒர் ஆதிகாலத் தொழில். சவப்பெட்டிக் கடைக்காரனின் யாவாரத்தைப் பற்றி சேரனே ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அண்மைக் காலங்களில் சேரன் இறந்தவர்களுக்கு அஞ்சலி எழுதும் அரசியலை வெற்றிகரமாக செய்துவருகிறார். 1999 ம் ஆண்டு புலிகளை விமர்சிப்பவராக இருந்த சேரன் அதே ஆண்டு நீலன் திருச்செல்வம் புலிகளால் கொல்லப்பட்ட போது அது சார்பாக புலிகளைக் கண்டித்து சரிநிகரில் ஒரு உண்மையான அஞ்சலி எழுதினார். அதற்கும் முதல் புலிகளால் கொல்லப்பட்ட பாரிஸ் சபாலிங்கம், கவிஞை செல்வி போன்றோருக்கும் இயற்கை மரணமடைந்த சீனக் கம்யூனிஸ்ட் சண்முகதாசன் பத்திரிகையாளர் காமினி நவரத்தின ஆகியோருக்கும் சேரன் அஞ்சலி எழுதியிருக்கிறார். சண்முகதாசனும் நவரத்தினவும் புலிகளால் கொல்லப்படாவிட்டாலும் அவர்களுக்கு எழுதிய அஞ்சலிகளிலும் தேவையும் பொருத்தமும் கருதி புலிகளின் அரசியலும் படுகொலைகளும் சேரனால் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தன.
Anton Balasingamபின்னர் 2002 ம் ஆண்டுக்குப் பிறகு புலி வேசம் போட்டு 2005ம் ஆண்டு பிரபாகரனின் மாவீரர் தின உரையை அன்ரன் பாலசிங்கம் மோசமாக கொச்சைப்படுத்திப் போட்டாரென்று கனடா ஈழநாடு இதழில் பாலசிங்கத்தை கடுமையாக தாக்கியிருந்தார். அதை எழுதிய மையின் ஈரம் காயமுன்னரே 2007 சரிநிகரில் அதிகார ஆசைக்காக கொள்கைகளைக் கைவிட்டு பிரபாகரனின் பாஸிசத்துக்கு அடிமைச் சேவகம் செய்த அதே அன்ரன் பாலசிங்கத்தை ஓகோ என்று புகழ்ந்து அஞ்சலி எழுதினார். இதற்கு முதல் வந்த சரிநிகரில் (மார்ச்-ஏப் 2007) ஈரோஸ் இரத்தினசபாபதிக்கு சேரன் அஞ்சலி எழுதினார். தன்னோடு சேர்ந்து தண்ணி அடித்த ரத்தினா தன் தந்தையாராகிய மஹாகவியோடும் சேர்ந்து தண்ணியடித்திருக்கிறாராம். (உண்மையிலேயே ரத்தினா மஹாகவியோடு தண்ணியடித்தாரா என்பதை அறிந்தவர்கள்தான் உறுதிப்படுத்த வேண்டும்.)
ஈரோஸ் இயக்கத்தில் புலிகளின் பாஸிச செயற்பாடுகளை நியாயப்படுத்தக் கூடிய பாலகுமார் போன்றவர்கள் இருந்தாலும் எதிர்மறையானவர்களும் இருந்தார்கள். எப்போதும் போலவே இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்த காலப் பகுதியிலும் ஈரோஸ் மதில்மேல் பூனைபோல சந்தர்ப்ப வாதிகளாக இருந்தனர். தாங்கள் நடுநிலமையாக இருப்பதாக காட்டிக் கொண்டாலும் முதுகெலும்பு அற்ற தன்மையால் மறைமுகமாக புலிகளை ஆதரிக்கிற நிலை எடுத்தார்கள். மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடா விட்டாலும் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வதற்காக சந்தர்ப்ப வாதிகளாக புலிகளுக்கே கரடி விட்டு 1988 ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வென்றார்கள்.
EROS Ilayathamby Ratnasabapathyஇதன் பிறகு பா.உ ஆன இரத்தினசபாபதி “மாகாண சபை என்பது மக்களைக்கொல்லும் சபையாகப் போய்விட்டது” என்ற அடிப்படையில் அன்றைய EPRLF அரசாங்கத்தை மட்டுமே கடுமையாக விமர்சித்தும் அன்றைய நிலவரங்களுக்கு பெருமளவில் காரணமான புலிகளை விமர்சிக்காமலும் பாராளுமன்றத்தில் பேசிய பேச்சை ரத்தினாவுக்கு அஞ்சலியில் குறிப்பிடும் சேரன் அப்பேச்சு அன்றைய நிலவரம் பற்றிய மிகச்சரியான மதிப்பீடு என்று கூறி உண்மையை இலாவகமாக திரிக்கிறார்.
தோழர் பரா புலம் பெயர்ந்து போனதால் இயற்கை மரணம் எய்தினார். ஈழத்திலேயே வசித்திருந்தால் அவரது கொள்கைகளுக்காக புலிகளால் கொல்லப்பட்டிருப்பார். அவ்விதம் நடந்திருப்பின் சேரனோ அல்லது காலம் வைகறை முதலிய பச்சோந்திகளோ அவரது அஞ்சலியில் கலந்து கொண்டிருக்க மாட்டார்கள். லக்ஸ்மன் கதிர்காமருக்கு கனடாவில் அஞ்சலிக் கூட்டம் நடத்தப்படவில்லை. அங்கு நடத்தப்பட்ட கேதீஸ் லோகநாதனின் அஞ்சலிக் கூட்டத்திற்கு சேரனோ வைகறை காலம் முதலிய அமைப்புகளோ கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது. பல அமைப்புக்கள் பராவின் அஞ்சலிக் கூட்டத்தை இணைந்து நடத்தியதற்கு பின்னாலுள்ள அரசியல் இப்போது எல்லாருக்கும் புரிந்திருக்கும்.
விரிவுரையாளராக இருக்கும் சேரனின் குரல் ஒரு சமுக விஞ்ஞானியுடையதல்ல. மறுதலையாக ஒரு பச்சோந்தி அரசியல் வாதியினுடையது. சேரனும் அவரது அடிவருடிகளும் தங்களின் தனிப்பட்ட நலன்களுக்காக ஒரு தகவல் வழுப்புரட்சியை (Misinformation Revolution) 2002 இலிருந்து நடத்தி வருகிறார்கள். பாலசிங்கத்துக்கும் இரத்தினசபாபதிக்கும் சரிநிகரில் அவர் எழுதிய அஞ்சலிகளில் மிகச் சூக்குமமாகவும் திறமையாகவும் உண்மை திரிக்கப்படுகின்றது.
சண்முகதாஸனுக்கும் இரத்தினசபாபதிக்கும் சேரன் எழுதிய அஞ்சலிகளில் அவர்கள் இருவரின் முகமும் தனக்கு அடூர் கோபால கிருஸ்ணனின் முகாமுகம் படக் கதாநாயகனின் முகத்தை நினைவுறுத்தியதாக எழுதுகிறார். ஏனக்கு சேரனின் முகத்தைப் பார்க்கிறபோதெல்லாம் ரூஷ்ய மோசடிக்கலைஞன் ராஸ்புடினின் (Rasputin) முகந்தான் நினைவுக்கு வரும்.
பரா புலிகளின் பாஸிசத்துக்கெதிராக இறுதிவரையும் போராடியவர். மனித உரிமைகளுக்கான யாழ் ஆசிரியர் சங்கத்தின் - UTHR(J) நேர்மையில் நம்பிக்கை வைத்திருந்ததுடன் அச்சங்கத்தின் அறிக்கைகளை இறுதி வரையும் வாசித்து வந்தவர். சேரனோ அச்சங்கத்தினர் புலிகள் பாசிஸ்டுகள் என்று கூறுவதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று சொன்னதுடன் அச்சங்கம் சந்திரிகா அரசாங்கம் நடத்திய “சமாதானத்துக்கான யுத்தத்தை” வழிமொழிந்தது என்ற மாதிரியான பொய்த் தகவல்களையும் பரப்பிவந்தவர். தான் இறப்பதற்கு சில காலத்துக்கு முதல் பரா கனடாவுக்குச் சென்றபோது சேரனை சந்திப்பதை தவிர்த்தவர்.
ஓநாயைக் கொண்டு ஆட்டுக்குட்டிக்கு அஞ்சலி நடத்தப்பட்டிருக்கிறது கனடாவில். போலிப் பேராசிரியரைக் கொண்டு போலி ஒப்பாரி வைப்பித்திருக்கிறார்கள்.
2222222222222222222222222222222222222222222222222222222222222222222222222
1. maruthu on February 4, 2008 3:30 am
நட்சத்திரன் : கனகாலத்துக்கு பிறகு-நல்ல எழுத்து
2. Thiyagu on February 4, 2008 6:45 am
நட்சத்திரன் போன்றவர்களும் நாட்டுக்குத் தேவைதான். துணிச்சலான எழுத்து. சமரசமில்லாத எழுத்துக்களே இன்றைய தேவை. இதற்குள் ரயாகரன் புதிதாய் செழியன் போன்றவாகளும் அடங்குவா. ஆனால் அவாகளின் சமரசமின்மை என்பதைக் காட்டிலும் தம்மீதான விம்பத்தை அப்பாவித்தனமாக கட்டமைக்கும் தன்மையே மேலோங்கி நிற்கிறது.
3. புலனாய்வு on February 4, 2008 9:24 am
தேசம் ஆசிரியர் ஜெயபாலனிடம் சில கேள்விகள்.
என்ன விடயத்தை அடிப்படையாக வைத்து பின்னூட்டங்கள் உங்களால் தணிக்கை செய்யப்படுகின்றன?
அதை தெளிவாகச் சொன்னால், நாம் அதற்கேற்றவாறு பின்னூட்டங்களை அளிக்க முடியும்.
ஏனெனில், செ. யோகநாதன் பற்றிய எனது பின்னூட்டம் எனது பின்னூட்டன் பெரிய அளவில் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. அதச் சற்று விளக்க முடியுமா?
சரிநிகர் பத்திரிகையை ஆதாரமாக வைத்தே நான் எனது பின்னூட்டத்தை பதிவு செய்தேன். ஆயினும் அதில் பல விடயங்கள் உங்களால் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. உங்கள் தணிக்கை தொடர்பாக எனக்கு உள்ள கேள்வி என்னவென்றால், தணிக்கைக்கு உட்படும் பகுதிகளை எத்தளத்தில் நின்றவாறு நீங்கள் வரையறை செய்கின்றீர்கள்.
1. அது பொய்யான செய்தியாக இருக்கும் என நீங்கள் கருதியிருக்கும் பட்சத்தில், நீங்கள் மற்றைய எல்லோருடைய பின்னூட்டங்களும் உண்மை எனக் கருதுகின்றீர்களா? அவ்வாறாயின் அஸ்ரப் அலி போன்றோர் பொய் மூட்டைகள உங்களது வலைதளத்தில் அவிட்டு கடைபரப்பிய போது அதனை எவ்வாறு அனுமதித்தீர்கள். மற்றும் பிரபாகரன், மதிவதனி பற்றிய செய்திகள் உங்களால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் தான் அனுமதிக்கப்பட்டனவா? அப்படியெனில் ஏன் இந்த ஓரவஞ்சனை எனக் கூறமுடியுமா?
2. தனிநபர் தாக்குதலாக இருக்கும் பட்சத்தில், பிரபாகரன் நாசமாக போக என்ற ரீதியில் எழுதப்பட்ட பின்னூட்டம் உங்களால் எவ்வாறு அனுமதிக்கப்பட்டது? இன்னும் நட்சத்திரன் செவ்விந்தியனால் எழுதப்பட்ட சேரனைப் பற்றிய கட்டுரையை எவ் ஒழுக்க கோட்பாடுகளுக்குள் நின்று பிரசுரித்தீர்கள்? நட்சத்திரன் செவ்விந்தியன் பற்றி நான் ஒரு பின்னூட்டம் வரைகின்றேன் உங்களால் அதை அனுமதிக்க முடியுமா?
அப்படி முடியாதவிடத்து, உங்களால் பத்திரிகா தர்மத்துக்கு கட்டுப்பட்டு நடக்க முடியவில்லை என ஒப்பு கொள்கின்றீர்களா? அதை பகிரங்கமாக அறிவிக்க தயாரா? தனிப்பட்ட நட்புகள் சார்ந்தும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் சார்ந்தும் உங்களது தேசம்நெற் வழிநடத்தப்படுவதாக ஒப்பு கொள்கின்றீர்களா?
பிரபாகரனைப் பற்றியயும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்டதுமான எவ்வளவோ விடயங்களை நீங்கள் அனுமதித்தீர்கள். பிரபாகரன் என்ற தனிமனிதன் சார்ந்து என்று இருந்தாலும் பரவாயில்லை அவரது மனைவி மதிவதனி சார்ந்து வந்த எவ்வளவோ பின்னூட்டங்களை உங்களது வலைதளத்தில் நான் பார்த்திரிக்கின்றேன். ஆயினும் சில இடங்களில் எவ்வாறு உங்களால் அனுமதி மறுக்கப்படுகிறது.
சரி அதை அனுமதிக்கும் நீங்கள் எவ்வாறு மற்றைய பின்னூட்டங்களை மட்டிறுத்தலாம்? நட்சத்திரனைப் பற்றியும் அவர் தனது வாழ்க்கையில் செய்த சமூக சேவைகள்(!?) பற்றியும் உங்களுக்கு பின்னூட்டம் வருமிடத்து அதனை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றீர்கள்? யோகநாதனைப் பற்றிய பின்னூட்டத்தை மறுக்க நினைத்த நீங்கள், நட்சத்திரனின் சிவத்தம்பி பற்றிய பதிவை சிவத்தம்பிக்கு சொன்னபோது சிவத்தம்பி வருத்தப்பட்டார் என கேள்விப்பட்டேன். அந்த வருத்தத்தை அனுமதித்த நீங்கள் யோகநாதனின் பின்னூட்டத்தை எவ்வாறு மட்டிறுத்தலாம்? இது தான் எனக்கு முன்னுள்ள கேள்வி.
நட்சத்திரன் கொழுமிபில் செய்த சமூக சேவைகள்(!?ggrrr) பற்றிய விடயங்களை நான் எழுதுகின்றேன். அவர் அரசியல் ரீதியாக எவ்விடங்களில் மாறுபட்டார் என நான் எழுதுகின்றேன். அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் பற்றி நான் எழுதுகின்றேன். நீங்கள் அனுமதிப்பீர்களா?
நட்சத்திரனுக்கு தமிழீழ போரட்டத்தையோ, சிவத்தம்பியையோ, சேரனையோ விமர்சிப்பதற்கான எந்த தகுதியும் இருப்பதாக நான் கருதவில்லை. கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வைகுண்டம் போன கதை தான்.
முதல்லை ஒருத்தன் தன்னை தெரிந்து கொண்டு மற்றயவர்களை விமர்சிக்க வேண்டும்.
இதற்கான பதிலை நீங்கள் எனக்கு தரவேண்டும். அது உங்கள் கடமை.
தேசம்நெற் குறிப்பு:
நண்பர் புலனாய்வுக்கு,
தேசம்நெற் கருத்துக்களம் பகுதியில் தேசம்நெற் இறுக்கமான கட்டுப்பாடுகள் எதனையும் கொண்டிருக்கவில்லை.
//1. அது பொய்யான செய்தியாக இருக்கும் என நீங்கள் கருதியிருக்கும் பட்சத்தில்இ நீங்கள் மற்றைய எல்லோருடைய பின்னூட்டங்களும் உண்மை எனக் கருதுகின்றீர்களா?//
உங்கள் பின்னூட்டங்கள் இந்த அடிப்படையில் தணிக்கை செய்யப்படவில்லை.
//2. தனிநபர் தாக்குதலாக இருக்கும் பட்சத்தில்இ பிரபாகரன் நாசமாக போக என்ற ரீதியில் எழுதப்பட்ட பின்னூட்டம் உங்களால் எவ்வாறு அனுமதிக்கப்பட்டது?//
உங்கள் பின்னூட்டங்கள் இந்த அடிப்படையிலும் தணிக்கை செய்யப்படவில்லை. ஆனால் பொதுவாக தனிநபர் தாக்குதலை தவிர்க்கவே விரும்புகிறோம். ஆனால் மகிந்த ராஜபக்சவையும் பிரபாகரனையும் புலனாய்வையும் நட்சத்திரன் செவ்விந்தியனையும் ஒரே தளத்தில் வைத்து விமர்சிக்க முடியாது.
செ யோகநாதன் பற்றிய உங்கள் குறிப்புகள் நீக்கப்பட்டதற்கு ஒரே ஒரு காரணம் அவர் உயிர்நீத்து சில தினங்களே. அவருடைய குடும்பத்தினருக்கு இக்காலப் பகுதி மிகவும் உணர்வுபூர்வமான காலகட்டம். இவற்றைக் கருத்தில் எடுத்தே உங்கள் குறிப்புகள் சில நீக்கப்பட்டது. மற்றும்படி எந்த கொள்கை கோட்பாட்டுகளின் அடிப்படையிலும் நீக்கப்படவில்லை. தேசம்நெற் இறுக்கமான கட்டுப்பாடுகள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதை மீள வலியுறுத்துகிறேன்.
த ஜெயபாலன்.
4. nallathu on February 4, 2008 10:21 am
ok ok
5. Rathan on February 4, 2008 10:41 am
மார்க்சிசத்தின் பேரால் புலியெதிர்பை செய்து போலித்தனமாக மனிதவுரிமை பேசி புகழ் பணம் சேர்க்க முயற்சிப்பவர்களும் சவப்பெட்டி கடைகார அரசியலைதான் செய்கிறார்கள். இதில் சேரனுமொன்று தான் நட்சத்திர செவ்விந்தியனும் ஒன்றுதான். மேலுள்ள தலைப்பு போட்டி வியாபார விளம்பரம்தான்.
6. arun on February 4, 2008 10:47 am
செவ்விந்தியன், உமது வாசிப்பு திறன், வளர்த்துக்கொண்ட எழுத்துதிறன் அபாரம். இருந்தாலும் நீர் சொல்லும் தகவல் வழு புரட்சியை நீரே செய்கிறீர். “மாகாண சபை என்பது மக்களைக்கொல்லும் சபையாகப் போய்விட்டது” என்ற அடிப்படையில் அன்றைய EPRLF அரசாங்கத்தை மட்டுமே கடுமையாக விமர்சித்தும் அன்றைய நிலவரங்களுக்கு பெருமளவில் காரணமான புலிகளை விமர்சிக்காமலும் பாராளுமன்றத்தில் பேசிய பேச்சை ரத்தினாவுக்கு அஞ்சலியில் குறிப்பிடும் சேரன் அப்பேச்சு அன்றைய நிலவரம் — அன்றய நிலவரம் பற்றீ 87-90 வரை இந்த அரசியல் பற்றீ தமிழர் பிரச்சனை பற்றீ சிந்தித்ததுண்டா - அக்காலத்தில் இந்த மாகாண அரசின் கைக்கூலிகளின் பிரசன்னம் - கொடூரம் மிக குரைந்த வடமராட்ட்சியில் இருந்த உமக்கு தனியே படிப்புடன் நின்றூ கொண்டீரேயொளிய எந்த சமூக அக்கறயும் உமக்கு இருந்ததாக எனக்கு தெரியாது.
சேரன், வசந்தன், சரவணண், பாலகிருஸ்னன், விக்கிகளும் உருவேற்ற எழுத தொடங்கிய உமது எழுத்து சேரன் கலையும் விமர்சிக்க தொடங்கி விட்டது. சேரனின் கவிதை தொடங்கி அரசியல் வரை சந்தர்பவாதம் கலந்தது. புலிகள் உம்மை விட சேரன் பற்றீ நல்லாய் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
7. arun on February 4, 2008 11:50 am
ஜெயபாலனுக்கு, செவ்விந்தியன் தொடர்பான பல முக்கிய விடயங்கலை நீர் தனிக்கை செய்துள்ளீர். புலனாய்வு என்பவரின் கேள்விகளே என்னுடையதும். செவ்விந்தியனின் விம்பம் தெரிவதற்குரிய விடயங்கலை தெரிந்தே தணிக்கை செய்த மாதிரி உள்ளது. தகவல் வழு புரட்சி பற்ரி பேச நட்.செவ்வுக்கு எந்த தகுதியுமில்லை. எனது தகவல் வழுவில்லை என்பதால் தான் தணிக்கை தவரானது என்கிறேன். அப்படிப் பார்த்தால் சேரனுக்கு எழுதிய விமர்சனமும் பிரசுரிக்கும் தகுதிக்குரியதல்ல.
8. kavithan on February 4, 2008 11:50 am
நட்சத்திரன் செவ்விந்தியன் அவர்களே! சேரன் பற்றி உங்களைவிட எங்களிடம் கடும் விமர்சனங்கள் உண்டு. அவை அரசியல் சார்ந்தது. தனிநபர் சார்ந்த குற்றச்சாட்டுக்களை விமாசனம் என்ற போர்வையில் சுமத்த முயல்வது அபத்தமானது. தனிப்பட்ட நடத்தை தொடர்பான குற்றச்சாட்டை சேரன் உங்கள் மீது சுமத்த வெளிக்கிட்டால் உங்கள் நிலமை என்னவாகும்? ஒருகாலத்தில் இணைபிரியா வண்ணம் நீங்கள் இருவரும் சரிநிகர் காலகட்டத்தில் செய்த சாகசங்களை எண்ணிப் பாருங்கள். உங்கள் நிலமை என்னவாகும்? எதற்கும் கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறிய முன் யோசிப்பது நல்லது. தயவுசெய்து இன்னொரு இரயாகரனாக மாற வேண்டாம். நீங்கள் திறமை கொண்டவர். அதன் மீது கவனம் செலுத்துங்கள்.
9. Rathan on February 4, 2008 12:24 pm
அடுத்தவரை நோண்டுபவர்கள் ஒன்றுக்கு இரண்டு தரம் சிந்தித்து செயலில் இறங்குங்கோ! திரு புலனாய்வின் கையில் பலபேரின் கடந்தகால நிகழ்கால சாதகங்கள் இருக்கு போலை! கவனம்.
10. Amuthan on February 4, 2008 12:34 pm
நீங்கள் சேரனை விமர்சிக்கலாம் .. இரவி அருணாசலத்தை விமர்சிக்கலாம் ..ரயாகரனை விமர்சிக்கலாம் .. தனிப்பட்ட முறையிலும் விமர்சிக்கலாம் எவ்வளவு கீழ்த்தரமாகவும் விமர்சிக்கலாம் .. வையலாம்… ஆதாரமும் தேவையில்லை .. ஆனால் சிவலிங்கத்தை .. ஜெயபாலனை .. விமர்சிக்கக் கூடாது .. தவறி விமர்சித்தால் உஙகளது கருத்து தணிக்கைக்கு உள்ளாகும்.. இதுதான் தேசத்தின் பத்திரிகா தர்மம்…
இந்த பின்னூட்டம் அனுமதிக்கப்படாது என்றே நம்புகிறேன் ..
11. kapilan on February 4, 2008 1:02 pm
ரதன், நீர் புலிக்கு புண்ணாக்கு வைப்பதோடு மட்டும் நில்லும். நீர் பிரபாவயும், பொட்டரையும் தவிர மற்ற அனைவரையும் ஒரு வக்கும் தெரியாமல் விமர்சிப்பீர். ஆனால் புலியின் சேரனை சொன்னால் கோபம் வருகிறதோ? உம்மை விட சேரனை அரசியல் ரீதியாகவும். கவிதை (பாடல்கள்) மூலமும் செவ்வந்திக்கு நல்லாவகவே தெரியும். காரணம் நாம் பல விடயங்களில் செர்ந்து செயல்பட்டுள்ளோம். சேரனை உலகுக்கு ஒரு மனிதனாக காட்டிய பெருமை யருக்கு என முடிந்தால் இதை வாசித்த பின் சேரன் எழுதட்டும்.
இவரது ஆசை பாலாவின் இடம் காலியாக உள்ளது சிலவேளை தான் புலியிடம் போனால் அது தனக்கு கிடக்கும் என எண்ணியே. ஆனால் பொட்ட செரனை நம்புவா. சேரனிடம் நாம் கொள்கயை எதிர் பார்க்க கூடாது தான். கனடாவில் ஆசிரியர் தொழில் மட்டுமா?….
……. சுனாமி வந்து எமது இனம் பாதிக்கப்பட்ட போது. அங்கு நடந்த அழிவுகளை அனைத்து ஊடகங்களும் படத்துடன் வெழியுலகுக்கு தெரிய படித்தின. அதை இவர் மிக கேவலமாக விமர்சனம் செய்தார். படத்தை காட்டி தமிழர் பிச்சை எடுப்பதாய். இன்று புலியின் பேரை சொல்லி கனடாவில் பிழைப்பு
நடத்தும் சேரனை விமர்சனம் செய்யகூடாதென? தயவு செய்து ஜேர்மன். கனடா. லண்டன். பரிசில் வாழும் சேரனின் நண்பர்கள் தான் சேரன் என்னும் பச்சோந்தியை தமிழ் சமுதாயத்துக்கு அறிமுகம் செய்ய வேண்டும். இல்லவிடில் சேரனும் சமுதாயத்தில் மாமனிதனாக உயிருடன் நடமாடுவார்.
புலிகளிடம் ஒரு சிறப்பு பட்டத்தை எதிர் பார்த்தே வன்னி போனார் அது கிடைக்கவில்லை. சேரன் ஒரு செருக்கன் மட்டுமே.
12. nallathu on February 4, 2008 1:06 pm
ok ok
13. தம்பர் on February 4, 2008 1:18 pm
//…சேரன், வசந்தன், சரவணண், பாலகிருஸ்னன், விக்கிகளும் உருவேற்ற எழுத தொடங்கிய உமது எழுத்து சேரன் கலையும் விமர்சிக்க தொடங்கி விட்டது. …//
தம்பி அருண், உங்கட ‘மேதகு’ செட்டியேடை சேர்ந்துதான் TNT கட்டி அமைச்சுப்போட்டு பிறகு அவரையே ‘போட்டு’க்காட்டின அரசியல் வழியில தமிழரெல்லாம் போயினம் போலை.
செவ்விந்தியன் அந்தளவுக்கு போகேல்லை எண்டதை நினைச்சு சந்தோசப்படுரதை விட்டுட்டு, வாய்க்கும் மூளைக்கும் தொடர்பில்லாமல் அவிட்டு விடாதேங்கோ.
14. thamizhi on February 4, 2008 1:36 pm
ஐயோ ஐயோ…… என்னண்ணை செய்கிறீர்கள். ஈழத்திலை மக்கள் அன்றாடம் தங்கடை உயிரைத் தக்க வைத்துக் கொள்ள படாதபாடுபட்டுக் கொண்டிருக்கையிலை நீங்கள் பாதுகாப்பாய் வேற்றவன் நாட்டிலை குசியாய் அமர்ந்து கொண்டு புளிச்ச கதை கதைத்துக் கொண்டு திரிகிறியள்.
நட்சத்திரன் அண்ணை உங்களுக்குத் செமிக்கயில்லையெண்டால் கொஞ்சம் வெத்திலை மடிச்சுத்தரக் கேட்டு சாப்பிட்டு செமிக்க வையண்ணை. புத்தி பேதலிச்சுப் போச்சுதெண்டு கேள்விப்பட்டேன். இவ்வளவு இருக்குமெண்டு நான் நினைக்கயில்லை….. கொழும்பிலை நிக்குமட்டும் நுகேகொடை… இப்ப என்ன அரசியல்?
15. BAKYARAJ on February 4, 2008 2:03 pm
மீன் பிடித்தவனை மீன் விற்றவன் வம்பில் மாட்டிவிட்டான்(பிணத்தை உண்டாக்கியவனை…பிணத்தை விற்றவன்…). இதற்கு அடிப்படை சாதி தடிப்பும், காலனித்துவ மனப்பான்மையும் ஆகும். வசூலுக்கான ஆதாரம் கெட்டு விடக்கூடாது என்பதற்காக, அப்பாவி மக்களை ஏமாற்றவே, இந்திய உளவுத்துறை, சிஐஏ என்ற புகை மூட்டங்கள். நோய்க்கான கிருமி என்னவென்று இதில் ஈடுபட்டவர்களுக்கே வெளிச்சம்.
16. Rathan on February 4, 2008 2:40 pm
கபிலன் உம்முடைய சர்வாதிகார நியாயம் நல்லாய்தான் இருக்கு! நீங்கள் கெட்ட கேட்டிற்கு ஐனநாயகம் கருத்து சுதந்திரம் மனிதவுரிமை. சேரனிற்கு தமது கருத்து நிலைபாட்டில் மாற்ற மேற்படுத்த உரிமையில்லையோ? புலியை கொலை வெறியுடன் எதிர்த்த பல பேர் இப்ப தமது நிலைபாட்டை மாற்றி புலியுடன் ஒத்துழைக்க முடியுமானல் அதையேன் திரு சேரன் செய்ய கூடாது?
அமரர் தராகி சிவராமும் 90 களில் புலிகளை எதிர்த்தார் அவருக்கு சிங்களவரிலிருந்து கிடைத்த பட்டறிவு தான் வெறும் புலியை எதிர்க்கவில்லை முழு ஈழதமிழரின் உரிமையும் எதிர்கிறேன் என்ற தெளிவை கொடுத்தது. தனது நிலைபாட்டை மாற்றி கொண்டார். அதைதான் சேரனும் செய்ய முயற்சிகிறார்! புலியெதிர்ப்பு கும்பலிருந்து ஒருவன் புலி ஆதரவு நிலைபாட்டிற்கு மாறுகிறான் எங்கை எங்கடை பீத்தலெல்லாம் அம்பலத்திற்கு வந்திடுமோ என்ற பயத்தில் என்னோடை வந்து எகுறுறீர்.
சேரனுக்கும் உங்களிற்கும் தனிபட்ட பழக்கமிருந்தால் சேரனுடன் தனிபட்ட முறையில் ரெலிபோன் அடித்து கதைத்திருக்க வேண்டியது தானே? முன்பின் யோசிக்காமல் பிரசினையை கருத்து களத்திற்கு கொன்டு வந்து விட்டு இப்ப திரு புலானாய்வு உங்கள் உங்கள் பீத்தல்களை அம்மாணமாக்கி விடுவாரே என பதறுகிறீர். சரி இப்பவும் ஒன்றும் கெட்டு போகவில்லை திரு புலனாய்வின் காலில் சரண்டர் ஆகிவிடுங்கோ!
கபிலன் கருத்து களத்திற்கு வாற விடயங்களை பற்றி கருத்து சொல்லுற உரிமையை தேசம்நெற் கருத்துகளம் தந்திருக்கு. அதை மறுதலிக்கிற உரிமை உங்களிற்கு கிடையாது. மேற்குலகிலிருந்தாலும் அடிபடை மனித உரிமையை விளங்கிற பக்குவமில்லை! இதுக்குள்ளை நாங்கள் கதை எழுதினம் ஆய்வு கட்டுரை எழுதினம் கவிதை வடித்தம் என்ற பீலாவேறை.
நெஞ்சில் உரமுமின்றி நேர்மை திறனுமின்றி வஞ்சனை செய்வரடி கிளியே வாய்சொல்லில் வீரர்ரடி!
17. Amuthan on February 4, 2008 3:35 pm
என்னுடைய கருத்தை தணிக்கை செய்து பிரசுரித்து விட்டு கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்துகிறீர்களா?
.-.-.-.-.-.-
குறிப்பு: நீதிமன்ற தீர்ப்பை அனுப்பி வையுங்கள் அதனை பிரசுரிப்போம்.
தேசம்நெற்
18. Thakshan on February 4, 2008 6:54 pm
சிவராமைப் போலவே சேரனும் ஒரு புகழ் விரும்பும் சமூக புற்று நோய்க் கிருமி (தான் வளரும் வரை தன்னை வெளியில் இனம் காட்டாது; வளர்ந்த பின் எள்ளி நகையாடும்). சரிநிகர் குழாத்தின் தனிமனித ஒழுக்கங்களுக்கான சாட்சியங்கள் இப்போதும் ஏதோ ஓர் மூலையில் விம்மி வெடித்துக் கொண்டுதானிருக்கின்றன.
இவற்றிற்கும் அரசியலுக்கும் எந்த தொடர்புமில்லை என்பதால் விளக்கங்கள்; விபரங்கள் தேசம்நெற்றிக்குரிய அந்தஸ்த்தை பாதித்துவிடும். சேரனின் அரசியல் விபச்சாரம் மகாகவிக்கு இழுக்கு. இதே சேரன் மறுவளமாய் பிரட்டிப்போட இன்னும் கொஞ்ச காலம் தேவைப்படலாம். புலி பசித்தாலும் சயனைட்டைக் கடிக்குமேயொழிய புல்லைத் தின்னாது. சேரனெல்லாம் புல்லை விட கேவலமான பூண்டுகள் என்பது புலிக்குத் தெரியும்.
19. புலனாய்வு on February 4, 2008 9:04 pm
….. அதற்குள், சேரன் தனது கொள்கையை மாற்றி விட்டார் என்று கூப்பாடு வேறு போடுகின்றார். ஏன் கொள்கையை மாற்ற கூடாது.? ஏன் இவரா கொள்கை வகுப்பாளர். புலிகள் மட்டுமே இன்றைக்கு உள்ள பேரம் பேசும் சக்தி. டக்கிளஸ் என்ன சொல்லி அழுகின்றார் என்று யாருக்காவது தெரியுமா? ராஞபக்ஸ சகோதரர்கள் டக்ளசை போடு படுத்தும் பாடு யாருக்காவது தெரியுமா? வேண்டுமெனில் இருந்து பாருங்கள்.
நட்சத்திரனின் கருத்துப்படி புலிகளை ஒழித்தால் தமிழ் மக்களுக்கு விடிவு வந்துவிடுமா என்ன? ந்ட்சத்திரன் இன்று ஏன் எதிர்க்கிறீர்கள் என்று யாருக்கும் தெரியாது. எனக்கு தெரியும். இன்று கனடாவில் இருந்து போன்கோல் வந்திருக்குமே! அதற்காக தானே புலியை எதிர்க்கிறீர்கள்? சேரனை எதிர்க்கிறீர்கள். கவனம் ந்ட்சத்திரன் நாளை சேரன் புலியை எதிர்த்தால் கனடாகாரர் புலியை ஆதரிக்க தொடங் விடுவார்கள். அப்போது நீங்களும் புலியை ஆதரிக்க வேண்டி வந்துவிடும். நீங்கள் பாவம் நட்சத்திரன்.
ஈரோசை முதுகெலும்பு அற்றவர்கள் எனக் கூறும் நீங்கள் முதுகெலும்பு உள்ளவரா? எதுக்கும் ஒருக்கா தடவிப் பார்த்துக் கொள்ளுங்கள். மற்றைய முதுகெலும்பு உள்ளவர்கள் எல்லோரும் இப்போது எங்கே போய்விட்டார்கள்?
தேசம் ஜெயபாலன் தோழர் பராவை 3 வது முறையாகக் கொன்றிருக்கிறார். நட்சத்திரன் போன்ற ஒன்றுக்கும் உதவாதவர்களை கட்டுரை எழுதவ்ட்டதன் மூலம்.
புலனாய்வு
.-.-.-.-.-.-.
நண்பர் புலனாய்வு, இப்பதிவில் நட்சத்திரனின் சொந்த வாழ்க்கை பற்றியே எழுதியுள்ளீர்கள். அதனால் உங்கள் பதிவின் ஒரு பகுதி நீக்கப்பட்டு உள்ளது.
தேசம்நெற்.
20. arun on February 4, 2008 10:01 pm
ஜெபாலனிடமிருந்து தனிக்கைக்கான பதிலைக் காணவில்லை. புலி ஆதரவாளரான செவ்விந்தியன் தனக்கு பாஸ் தரவில்லை எனபதற்காக புலி எதிர்பை காட்டியது எழுதியது எப்படி அருனோதயனால் ஒத்துக்கொள்ள முடியும். அவர் தரும் வாக்கு மூலம் எல்லாம் வேதவாக்கு ஆகாது. அவர் எழுதுவதை பதிவேற்ற முடியுமென்றால் அவர் தொடர்பான உன்மைகலை ஏன் கத்தரிக்க வேண்டும்.
…. சேரன் போலி பேராசிரியர் என்ற தலைப்புக்கு யார் பொறூப்பு. தேசமே.
.-.-.-.-.-.-.-
நண்பர் arun, இப்பதிவில் நட்சத்திரனின் சொந்த வாழ்க்கை பற்றியே எழுதியுள்ளீர்கள். அதனால் உங்கள் பதிவின் ஒரு பகுதி நீக்கப்பட்டு உள்ளது.
தேசம்நெற்.
21. arun on February 4, 2008 10:19 pm
நட்சத்திரனுக்கு தமிழீழ போரட்டத்தையோ, சிவத்தம்பியையோ, சேரனையோ விமர்சிப்பதற்கான எந்த தகுதியும் இருப்பதாக நான் கருதவில்லை. கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வைகுண்டம் போன கதை தான்.
95 க்கும் முன்னர் காமினி வரட்னவையோ, சேரனையோ, சண்முகதாசனையோ, நீலனையோ, சபாலிங்கத்தையோ, ரட்ன சபாபதியையோ தெரிந்தோ அறீந்தோவிராத புத்தகபூச்சி, கேள்விதானத்தாலும் எப்படியும் எவரையும் விமர்சிக்க முடியாது. இன்னமும் தெரிந்து கொள்ள வேண்டியதும், சொந்த படைப்புக்கலையும் நூற்ருக் கணக்கில் எழுதிவிட்டு விமர்சிக்கவும். அப்போது தகுதியுடையவர்ராவீர்.
22. ரகு on February 5, 2008 1:54 am
பலர் ‘சத்திர சிகிச்சை’ அரசியல் காரரை முன் வரிசையில் வைத்து ‘சவப்பெட்டி’ அரசியல் நடத்துவார்கள். ஆனால் உண்மையில் அது சவப்பெட்டி அரசியல் தான் என சத்திர சிகிச்சைக் காரருக்கு சில காலங்களின் பின்னர் தெரிய வந்து விடும். அப்போது அவர்கள் கடையை விட்டு வெளியேறி சொந்தக்கடை ஆரம்பித்து விடுவார்கள் அல்லது வேறு சத்திர சிகிச்சைக் காரர்களுடன் சேர்ந்து விடுவார்கள். பழைய சவப்பெட்டிக் கடைக்காரர்களின் உண்மை முகம் ஊருக்கு தெரியவந்து விடும். அந்த ஆதங்கத்தில் ஒப்பாரி வைப்பார்கள். இதை நாம் தராக்கி சிவராம்; டயான் ஜெயதிலக்கா, டி.பி.எஸ். ஜெயராஜ்; ஈ.ப்.டி.பி, ஜாதிக ஹெல உறுமய; ஆனந்த சங்கரி என்று பலவற்றில் பார்த்துவிட்டோம். ந.செவ்விந்தியன் அண்மையில் தேனீ என்ற சவப்பெட்டிக் கடையிலும் இருந்தார். இனி என்னாகுமோ?
//…சேரனெல்லாம் புல்லை விட கேவலமான பூண்டுகள் என்பது புலிக்குத் தெரியும்….//
தெரியுது எல்லோ? அப்ப ஏன் கவலைப்பட்டு உங்கட புளிச்சலை இங்க சத்தி எடுக்கிறியள்? பரவாயில்லை புலியைப் பற்றி தெரிஞ்சுதான் வச்சிருக்கிறியள்.
23. arun on February 5, 2008 8:09 am
//நண்பர் அருன், இப்பதிவில் நட்சத்திரனின் சொந்த வாழ்க்கை பற்றியே எழுதியுள்ளீர்கள். அதனால் உங்கள் பதிவின் ஒரு பகுதி நீக்கப்பட்டு உள்ளது.// தேசம்நெற்.
சொந்த வாழ்க்கையுடன் தான் எல்லோரது அரசியலும் கலந்துள்ளது. அது செவ்விந்தியனுக்கு விதிவிலக்கா. எவராவது சமூக அக்கரையுடன் தான் இதில் வந்து எழுதுகிரீர்கள் என்ரால் கேட் கேனையனாக தான் இருக்க வேண்டும். சொந்த வாழ்க்கையை தனிப்பட்ட காழ்ப்புக்காக அரசியலாக்கி இன்னோர் மக்களால் ஆதரவளிக்கப்படும் தலைவரையோ, அமைப்பையோ, தனிநபரையோ விமர்சிப்பதையும், தனது புகலிட வாழ்வுக்காக ஒர் அமைப்பின் அல்லது அதன் தலைமையின் மீது வேண்டுமென்றே நட்சத்திரனால் போடப்படும் பழிகலை கத்தரிக்கும் தேசம் ஏற்றூக்கொள்கிறதா.
செவ்விந்தியனின் நடத்தை பற்றீயோ, கவிதை களவு பற்றீயோ, எழுதவில்லை. தனது நலனுக்காக பாவிக்கப்பட்ட அரசியல் அவர் கூறூM தகவல் வழு புரட்சி பற்றீ தான் எழுதியுள்ளேன். அரிசிக்குள்ளூம் அரசியல் உள்ளது. சொந்த வாழ்க்கைக்குள்ளூம் இப்போது தமிழர் மத்தியில் அரசியல் உள்ளது.
24. visnu on February 5, 2008 8:19 am
என்ன இது செவ்விந்தியன் யாகாவராயினும் நாகாக்க என கேள்விப்பட்ட துண்டா? சாண்டில்யனின் கதை பிடிக்கவில்லையென்றால் வாசிக்க வேண்டாம். ஒட்டமாவடி அறபாத்தின் எழுத்து இனகுரோதத்துக்கு துணைகோகின்றதா அதை ஒதுக்கு? வாசியாமல் விடுவதற்கு எமக்குள்ள சுதந்திரத்தை நாம் ஏன் கவனியாமல் காட்டுக்கத்தல் போடுகின்றோம். சேரனை பிடித்திருந்து. இப்போது பிடிக்கவில்லையா? அழகாக சேரனை இன்ன இன்ன காரணங்களுக்காக பிடிக்கவில்லை என எழுதுங்கள். அத்துடன் வரலாற்றுக் குப்பைக்கு போகட்டும்.
ஏனப்பன் நீர் வரலாற்றில் குப்பை கொட்டுகின்றீர். உமது கவிதை முன்பு எனக்கு பிடித்திருந்தது. இப்பவும் இக்கவிதைகளுக்கு ஒரு இடம் இருக்கிறது. இப்போது திசைமாறிப் போய்விட்டீர். சேரனும் திசைமாறியது போல. சேரன் பல திசைகள் மாறிவிட்டது தான் உமது குறை என்று எனக்கு விளங்குகின்றது. எனக்கும் குறைகள் உண்டு. சேரன் மீதல்ல. கிளிப்பிள்ளைகள் போல் பட்டியல் போடும் விமர்சகர்மேல். உரியமுறையில் விமர்சியும் அது இலக்கிய ஊழியம்.
ஏனப்பன் இந்த ஆபாச எழுத்துக்கள். யாரையெல்லாம் நிராகரிக்க விரும்புகின்றீரோ அவரையெல்லாம் காலம் புறமொதுக்கும் அவை தகாதனவென்றால். அதில் உமக்கு பங்குண்டு. சரியான விமர்சனத்தை நீர் ஆயுதமாக எடுக்க வேண்டும். உம்மை நான் அறிந்திராத போதும் உமது எழுத்துக்களை நான் அறிவேன். கழிசடை எழுத்து வேண்டாம். இது தனிப்பட்ட ஆதங்கம்.
தேசம்நெற் ஆசிரியர்களுக்கு ஒரு குறிப்பு. உங்கள் தணிக்கை அளவீடு மீளாய்வு செய்யப்பட வேண்டும். அல்லாது போனல் குறைந்தபட்சம் தர்க்க நியாயங்களுடாக மாற்று கருத்துக்களை தரும் என்ற நம்பிக்கையில் உங்கள் தளத்துக்கு வரும் என் போன்றவர்கள் ஏமாற்றமடைந்து விடுவார்கள். அதன் அர்த்தம் கழிவடைகளை பார்க்க விரும்ர்வோர் மட்டுமே பார்க்க விரும்பும் ஒன்றாக இத்தளம் மாறிவிடும் என்பதே. அதை நான் விரும்பவில்லை. அதற்கு ஆவன செய்ய வேண்டும். அதாவது
1. நாகரிகம் பேணப்படுவதை உறுதிப்படுத்தல்
2. பொருத்தமற்ற இடுகைக்கு இடம்தராமை. மிக நொய்மையாக தொடர்புபடும் இடுகையென்றாலும் இடம்தரவேண்டாம்.
3. விவாதம் எதை நோக்கி நகர்த்தப்பட வேண்டும் என்ற குறைந்தபட்ச இலக்கையாவது வரித்துக்கொள்ளல். தேர் இழுக்கப்படுகையில் கட்டைகளால் திசைமாற்ற எவ்வளவு பிரயத்தனம் செய்கிறார்கள். தயவுசெய்து கழிசடைகளை களையும் குறைந்த பட்ச பில்டர்களையாவது முன்வைத்து இயங்குங்கள். அல்லாது போனால் நான் சலிப்புறுவேன். என்னைப்போல் சிலராவது இருக்கக்கூடும் நண்பர்களே.
விஷ்ணு
-.-.-.-.-.-
நண்பர் விஸ்ணுவுக்கு
உங்கள் ஆலோசணைக்கு மிக்க நன்றி. ஏனைய கருத்தாளர்களும் இதனை கருத்தில் எடுப்பார்கள் என்று கருதுகிறோம். ஏற்கனவே இவ்விடயம் தொடர்பாக கருத்தாளர்களிடம் ஆலோசனை பெற்று உள்ளோம். கூடிய விரைவில் கருத்தாளர்களுடைய ஆலோசனைகளை நடைமுறைப்படுத்த முயற்சிப்போம்.
தேசம்நெற்.
25. amohan on February 5, 2008 9:23 am
//…சேரனெல்லாம் புல்லை விட கேவலமான பூண்டுகள் என்பது புலிக்குத் தெரியும்….//
இது புதுசு!! புலியை விடவும் கேவலமாக ஏதும் இருக்க முடியுமோ? கல் பணிஸ் தெரியுமோ? பழுதாப் போன பாணை வைச்சு செய்யுறது தான் கல் பணிஸ்.. அந்த கல் பணிஸே பழுதாப் போனா?
இன்ஷா அல்லா!
26. Mano on February 5, 2008 11:19 am
தராக்கி சேரன் நட்சத்திரன் எல்லோரும் சிறந்த எழுத்துத் திறன் பெற்றிருப்பவர்கள் அதற்கும் மேலாக தம்மை வெளியுலகில் கொண்டு வருவதற்கேற்ற சங்கதிகளை வழங்குவதற்காக நிறைய வாசித்திருக்கிறார்கள். அவர்களின் எழுத்துத் திறமையை நிதானம் தவறாமல் வழங்க வேண்டியது எழுத்தாளனுக்குரிய தார்மீகக் கடமை. ஏனென்றால் அவர்களின் எழுத்தினால் மக்கள் வசீகரிக்கப்படுகிறார்கள். பின்பற்றிச் செல்கிறார்கள்.
மக்கள் விடுதலை பற்றிய கருத்துக்களை தெரிவப்பதென்றால் அவர்கள் தாம் தெளிவுபெற்ற பின்னரே அதைப் பற்றி எழுத வேண்டும். அவர்களுக்கு புலிகளின் பாதை ஒரு காலத்தில் பிழையாக இருந்தது பின்னர் சரியாக இருந்தது. அதனால் அவர்கள் மாறி மாறி உருவேற்றுவார்கள். அவர்களின் பின்னால் சென்ற பாமர மக்கள் என்னாவது என்பது பற்றி அவர்களுக்கு அக்கறை தேவைப்படுவதில்லையோ?
பேராசிரியர் முதல் இந்த நட்சத்திரன் வரை குளம்பிப் போனவர்கள். அவர்கள் தாங்கள் இறந்த பின்னால் தமது பெயர் எப்படியிருக்க வேண்டும் என்று சிந்தனைக்கு இறங்கி விட்டவர்கள். இந்த மெத்தப் படித்தவர்களால் இலங்கைத் தமிழர்களின் விடுதலைப் போராட்டப் பாதையில் ஏற்படும் தவறுகளையும் கண்டுகொள்ள முடியாது சரிகளைக் கண்டு ஊக்கம் கொடுக்கவும் முடியாது.
வெளிநாட்டிலுள்ள முன்னாள் போராளிகளுக் எல்லாம் ஒரே வேலை; மற்றவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது. ஏன் என்று விளங்கவில்லை. போராட்டத்தை விட்டுவிட்டு தாம் வாழும் வாழ்க்கை பற்றி உள்ளுக்குள் கூச்சமடைவதால் அவசியமற்று மற்றவர்களை விமர்சிக்கிறார்களோ தெரியவில்லை. இப்படித்தான்; வெளிநாட்டிலிருந்து இங்கு மெனக்கிட்டு வந்து; சந்திரிகாவின் போய் பிரண்ட் பற்றிக் கதைத்துவிட்டுப் போனவர்கள் இப்போது வந்து சந்திரிகா வைத்த தீர்வுத்திட்டம் பரவாயில்லை என்கிறார்கள். எமது பிரச்சினை இப்படித்தான் போகிறது.
27. இருட்டடி on February 5, 2008 12:57 pm
கவிஞர் சேரனின் சவப்பெட்டி அரசியல்: புல(ன்?)பெயர்ந்த தமிழரை அசெளகரியப்படுத்தாமல் அரசியல் கதைக்கிற வைக்கும் அரசியல் செய்யிற வைக்கும் ‘புலிச்தேசியம்’ தான் மடப்பள்ளி. ஆனால் என்ன, வெளியில தெரியாமல் இருக்க, மோதகமாய் இருகிறதை, கொழுக்கட்டையா பிடிச்சுக்காட்டுவினம். இரண்டுக்கிள்ளையும் உள்ளுடல் ஒண்டுதான்.
நாங்கள் தொலைச்ச இடம் இருண்டு போச்சுது எண்டதுக்காக வெளிச்சமாய் இருக்கிற எங்கேயோ ஒரு இடத்தில நிண்டு தேடிக் கண்டுபிடிச்சிடுவன் எண்டு உங்க சிலபேர் கச்சையைக் கட்டிக்கொண்டு கனக்க அளக்கினம்.
உப்பிடிவெளிகிட்ட சிலரில் ஒருவரான கவிஞர் சேரனுக்கு செவ்விந்தியனின் எழுத்துக்களும் ஓர் இருட்டடிதான்.
http://eruddadi.blogspot.com
28. Rathan on February 5, 2008 1:07 pm
திரு மனோவின் கருத்து நிதர்சனமானது! ஆனால் கெடுகுடி சொல் கேளாது. தங்கள் தலையிலேயே தாங்களே மண்அள்ளி போட்டுக்கொள்ளட்டும்.
29. Rathan on February 5, 2008 4:26 pm
“கூலிக்கு மாரடித்தல்” எனும் எல்லா தளத்திலுமுள்ள தமிழரும் அறிந்திருக்கும் எளிய மரபுத் தொடர் இருக்க 50 வருடத்திற்கு முன் அழகு சுப்பிரமணிய மெழுதிய ஆங்கில சிறுகதை மூலம்தான் ஏதோ இதை அறிந்ததாக பீலா காட்டி தனது வாசிப்பை சுயதம்பட்ட மடிப்பவர் ஒரு சிறந்த எழுத்தாளர். கடவுள் காக்க!
திரு சேரன் காரண காரியத்துடனோ அது இல்லாமலோ புலியையெதிர்த்து அஞ்சலி கவிதை எழுமட்டும் அவர் மகா யோக்கியர். சிறிலங்கா அரச சமதான உப செயலாளர் கேதீசு லோகநாதனுக்கு புலிகளை கண்டித்து அஞ்சலிக் கவிதை எழுதாதலும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்திற்கு அஞ்சலிக் கவிதை எழுதியதால் அதே சேரன் அயோக்கியர்.
ஒரு தமிழர் சிங்கள பெண்ணை திருமணம் செய்து மகளை தலித் இளைஞனுக்கு திருமணம் செய்து கொடுத்து மார்க்சிசத்தினூடக கடைசி வரை புலியெதிர்ப்பு செய்து’ மனிதவுரிமைகளுக்கான ஆசிரியர் சங்கத்தின்???!!! அறிக்கைகளை வாசித்தபடியால் அப்பழுக்கற்ற களங்கமற்ற மனித நேயவாதிக்கான தகுதியை பெற்றுவிடுகிறார். எனக்கு அமரர் பரா மீது தனிபட்ட அபிபிராயமெதுவுமில்லை.
ஒருவரை பச்சோந்தி என்று சொல்வதற்கும் மற்றவரை மனிதநேயவாதி என்று சொல்வதற்கும் காட்டிய சின்னை புள்ளைதனமான தர்க்க ரீதியிலான நியாயங்கள் எவ்வளவு பலவீனமானது! இவரது எழுத்தை அமரர் தராக்கி சிவராமின் எழுத்துடன் ஒப்பிடுவதென்பது அமரர் தராக்கி சிவராமை அவமானபடுத்துவதற்கு சமம். முக்காலும் காகம் முழுகி குளித்தாலும் வெள்ளை கொக்காது நண்பர்களே!
30. amohan on February 5, 2008 6:41 pm
யாரப்பா உந்த சேரன்? செம அட்வேர்ட் அந்தாளுக்கு… கரிகால் பிரபாக்கு இவர் பேமஸ் ஆகிறார் எண்டு ஆத்திரம் வந்தால் கனடாவோ கனகபுரமோ .. போட்டுத்தளீருவார். கவனம்.. ஒரு வருஷத்துக்கு மேலா உவங்கள் ஒரு புத்திஜீவியையும் டம் பண்ணேல்ல.. கவனம் கவனம்…
31. Thakshan on February 5, 2008 9:16 pm
தராக்கியின் வாசிப்பு விசாலமானது என்பதில் ஐயமில்லை. தராக்கியின் சிந்தனைகள் எப்படியானவை என்பதை இஸ்மைல் குவாட்ரியிடமும் இக்பால் அத்தாஸிடமும் பி.பி.ஸி ஆனந்தியிடமும் டி.பி.எஸ்.ஜெயராஜிடமும் சரிநிகர் சிவகுமாரிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் ரதணண்ணை. இவர்களுக்கு தராக்கியின் மூலமும் முடிச்சுக்களும் நன்கு தெரியும். பணம் பாதாளம் வரை போகும்.
ஆனால்.. அறிவை விலைபேசியது சிவராமிற்கு இழுக்கு. கருணாவின் மயக்கம் சிவராமின் சித்து விளையாட்டு. கருனாவின் தனிமனித பலயீனங்களுக்கு அரசியல் விளக்கம் ஓதிய சாத்தான். கணக்கு பிழைத்ததால் காலை வாரிய புத்திஜீவி. கேவலம் புலிகளுக்கு ஆப்பு வைக்க துணிந்தவருக்கு தனக்கான ஆப்பு எங்கே? எப்படி? வைக்கப்பட்டிருந்தது என்பதை உணர முடியாமல் போய்விட்டது.
புளொட் இன் ஆரம்பகால உட்கொலைகளில் சிவராமின் பங்கு மிகுதியானது என்பது அவரது நண்பர்களின் தகவல். அவரே புளொட் இன் அரசியல் பிரிவின் முதல் பொதுச் செயலாளரென தேர்தல் திணைக்களத்தில் பதிவாகியுள்ளதென்பது ஆதாரமுடையது (தமிழ்நெற் இணையத்தளம் அன்றைய புளொட் ஆலோசனையில் ஆதரவுடன் (நிதி) ஆரம்பிக்கப்பட்டதாக சிவராமே கூறியுள்ளார்). குள்ளத்தனங்களில் புளொட்டை சிவராம் விஞ்சியிருந்தாரா? சிவராமை புளொட் விஞ்சியிருந்ததா என்பதற்குமப்பால் புலிகள் எல்லாவற்றையும் சாதகமாக்க முயற்சித்து தோற்றார்களா வென்றார்களா என்பதே கேள்விக்குரியதாகபடுகிறது.
சிவராமின் படுகொலை எந்த விவாதங்களுக்குமப்பால் கண்டனத்திற்குரியது என்பதில் மாற்றமில்லை. புலி ஆதரவு-எதிர்ப்பு என்பதைக் கடந்து இவ்வளவு அழிவுகளுக்கும் பின்னராவது தமிழ் மக்களுக்கான போராட்டத்தின் பலாபலன் 13வது திருத்தச் சட்ட மூலம் தானா? 2006 ல் புலிகளின் தலைவர் கூறியதைப்போல் மகிந்த ஒரு யதார்த்த வாதிதானா? இந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ள கடந்த 15 வருட வலிகள்; இழப்புக்கள்; அழிவுகள் தேவையானவையா?
இதற்கான பதிலிற்கு அரிதாரம் பூசி ஆலாபனை செய்து விளங்கப்படுத்த ஆருமில்லை இப்போ. விளக்கங்கள் விவரணங்கள் இயக்கங்களின் தலைமைகளுக்கு தேவைப்படலாம் சாதாரண மக்களுக்கு தேவையில்லை. எப்போதும் மக்கள் புத்திசாலிகள். நாணலைப்போல் எங்கே? எப்போது? வளைவது நிமிர்வது என்பது அவர்களுக்கு கை வந்த கலை.
32. denkiri on February 5, 2008 9:48 pm
//வெளிநாட்டிலுள்ள முன்னாள் போராளிகளுக் எல்லாம் ஒரே வேலை; மற்றவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது. ஏன் என்று விளங்கவில்லை. போராட்டத்தை விட்டுவிட்டு தாம் வாழும் வாழ்க்கை பற்றி உள்ளுக்குள் கூச்சமடைவதால் அவசியமற்று மற்றவர்களை விமர்சிக்கிறார்களோ தெரியவில்லை.//
என்ன இருந்தாலும் பாருங்கோ இப்படி இரயாகரனை மனசில வைச்சுக்கொண்டு அவருக்கு இப்படி நக்கல் அடிக்கக் கூடாது பாருங்கோ. என்ன இருந்தாலும் நட்சத்திரனின் விமர்சனத்தில் நியாம் சில இருக்கு பாருங்கோ. அவருடைய தவறு என்னண்டால் இரயாகரனாக சில இடங்களில் மாறிவிடுகிறார். ஒரு இரயாகரனே நமக்கு போதும் பாருங்கோ உலகத்தை நாறடிக்க.நட்சத்திர செவ்விந்தியன் இரயாகரனின் ஊத்தைத்தனத்தை செய்யாமல் நட்சத்திரன் செவ்விந்தியனாகவே இருக்கட்டடும் பாருங்கோ.
33. நரகத்துமுள்ளு on February 5, 2008 10:44 pm
//..“கூலிக்கு மாரடித்தல்” எனும் எல்லா தளத்திலுமுள்ள தமிழரும் அறிந்திருக்கும் எளிய மரபுத் தொடர் இருக்க 50 வருடத்திற்கு முன் அழகு சுப்பிரமணிய மெழுதிய ஆங்கில சிறுகதை மூலம்தான் ஏதோ இதை அறிந்ததாக பீலா காட்டி தனது வாசிப்பை சுயதம்பட்ட மடிப்பவர் ஒரு சிறந்த எழுத்தாளர். கடவுள் காக்க!..//
தேசத்தின் குரலும் தனக்கு தெரியாத உலக அரசியல் தத்துவங்கள் ஒண்டும் இல்லை எண்டு பீலாக்காட்டத் தான் ‘சுதந்திர வேட்கை’ எழுதினவர் எண்ட கதையாகிடக்கு ரதன் சொல்லுற விளக்க விண்ணாளாம்.
புலியிர … கதையளக்கிர உங்களைப் போல விட்டேத்தி விமர்சகர்கள் விடுற பீலாவை விளங்க வைக்க கூப்பிடாத கடவுகளை உதுக்கேன் கூப்பிடுகிறியள்…
34. Rathan on February 6, 2008 9:21 am
“நாகபாம்பு படமெடுகுதென்று நாக்கிழி புழுவும் படமெடுத்திச்சாம்” நாக்கிழி புழுவால் நெளிய மட்டும்தான் முடியும் நரகத்துமுள்ளு.
35. Rathan on February 6, 2008 9:27 am
அமரர் தராக்கி சிவராம் கருணாக்கு உடந்தையாய் இருந்தார் என்பது புலியெதிர்ப்பு புத்தியீவிகளுக்குதான்?! தெரிந்திருந்தது. இதுகளை அறியாத புலிகள் அவருக்கு மாமனிதர்பட்டம் கொடுத்தார்கள் என்றும் சொல்லிவிடுங்களேன். ஏன் அதை குறையாய் விடுறீங்கள்.
36. kurkure on February 6, 2008 10:07 am
நச்சென்றூ பதிலறூக்கும் ஸ்ரார் செவ்விந்தியன் எல்லோருடைய விலாவாரியான விமர்சனங்கலையும் சிட்னியிலிருந்த படி தொகுத்துக் கொண்டிருக்கிறார். எல்லோருக்கும் தனது விதண்டாவாத பதிலை தர ரெடி. சும்மா அதிரப்போகுது. ஸ்டீவ் பக்னர் சிட்னி கிரிக்கட் மச்சில் தவரான தீர்ப்பு கொடுத்ததால் அம்பயரிங்கிலிருந்து வெளியேற்றப்பட்டார். எந்த காலத்திலும் எந்தவொரு அரசியல் தளத்திலும், போராட்ட அமைப்பிலுமில்லாத கடந்த 10 வருட முன்னாள் அரசியல் தளத்திலிருந்தவர்களின் உறவு, நட்பு மட்டுமே தனது ஆதார)வு தகவலாக கொண்டு அரசியல் விமர்சனம் செய்பவர்களும் வெளியேற்றப்பட வேண்டும். ஸ்டீவ் பக்கனர் கூட 100 க்கும் மேற்பட்ட டெஸ்ட் மச்சுக்கு நடுவராக இருந்திருக்கிறார்.
37. nan-sivaram on February 6, 2008 2:39 pm
நண்பர்களே, சிவராம் புளட்டில் இருந்தவர். மக்கள் அமைப்புக்கு செயளாளராக இருந்தவர். மூதூர் செல்வன், அகிலன் கொல்லப்பட்டதில் சம்பந்தப்பட்டவர். உமாவின் ஆலோசகராக இருந்தவர். அத்துலத்முதலியுடன் 87ல் புளட் பேச்சு வார்த்தையில் ஈடுபடும் போது உமாவுடன் கலந்து கொண்டவர். ஏன் முதலியின் தொடர்பு கூட சிவராமின் சிங்கள நண்பர்கள் மூலமாகதான் ஏற்பட்டது என்ரும் சொல்லப்படுகிறது. 90களின் முற்பகுதிவரை புளட்டில் செயற்பட்டவர். இருந்த போதும் அதன் தலமைகளுடன் தொடர்புடனிருந்தவர்.இது ஒரு பக்கம்.
இரண்டாவது புலிகளூடனான தொடர்பு 90களின் இருதியிலிருந்து தராக்கி என்ற பத்தி எழுத்தாளருடன் புலிகள் ஏற்படுத்திக்கொண்டது. இதனை ஒருபோதுன் எவரும் வெளிகொணர வில்லை. ஏன் சிவராமுக்கு மாமனிதர் பட்டம் கொடுக்கப்பட்டதென்ற கேள்விக்கு பதில் இதிலிருந்தே தொடங்குகிறது. கொட்டகலயில் சயனைட் அருந்தி மரணமடைந்த கூட்டுபடை தலைமைய குண்டுவெடிப்பு சூத்திரதாரி சந்திரன், சிவராமுடன் தொடர்பை ஏற்படுத்தி செயற்பட்டவர்.
சந்திரன் மட்டக்களப்பில் ஏற்கனவே தமிழீழ ரானுவம் என்ற தம்பா. மகேஸ்வரனின் அனியில் செயற்பட்ட போது நட்பாகவிருந்தவர். சந்திரனால் புலிகளுக்கு அறீமுகப்படுத்தப்பட்டவரே சிவராம். இதே சந்திரனின் இறப்பை தொடர்ந்தே மலையக.ம.முன்னனி சந்திரசேகரன், காதர் போன்றவர்களும் சிரை சென்றவர்கள். சிவராமை புலிகளின் தலைமை சிவராமை 95ல் சந்திரிக்காவின் ஒப்பந்த காலத்தில் பி.பி.சி ஆனந்தியுடன் ஊடகவியலாளராக யாழ்சென்ற போது கலந்துரையாடிக் கொண்டனர்.
சிவராமின் ஊடக பாத்திரம் புலிகலுக்கு பல்வேறூ செய்திகலை உயர்மட்ட கொள்கை வகுப்புகலை செய்தி வாயிலாக சொல்லிக் கொண்டிருந்தது. அது புலிகள் தொடர்பிலான தவறூகளாக இருக்கட்ட்டும் வேறூ தகவல்களாக இருக்கட்டும் எல்லாம் கலந்தேயிருந்தது. அது சிவராமை செயற்படும் தளத்தில் தக்க வைக்க உதவியது.
இதன் பின்னயதே கருனாவுடனான சமாதான காலத்திலான தொடர்பு. கருனாவுடனான உரையாடல்களிலிருந்து கருனாவினது எண்ணங்கலையும் சிவராம் புலிகளின் தலைமைக்கு சொல்லிவைக்க தவறவில்லை. இதற்கும் அப்பால் சிவராமின் தேச கடமை புலிகளுக்கே தெரிந்தது.
38. நரகத்துமுள்ளு on February 6, 2008 2:56 pm
//…“நாகபாம்பு படமெடுகுதென்று நாக்கிழி புழுவும் படமெடுத்திச்சாம்” நாக்கிழி புழுவால் நெளிய மட்டும் தான் முடியும் நரகத்துமுள்ளு…// உப்பிடி எத்தின பேர் கிளம்பி இருக்கிறியள் நாக்கிழிப் புழுவை நாகபாம்பெண்டு பீலா விட. உங்களைப் போல ஆட்களால தான் எட்டாம் வகுப்புக்கு ‘கட்’ அடிச்சவர ‘மேதகு’ ஆக்கி ‘கட்டவுட்’ கட்டி கதையும் அளப்பியள்.
39. Thakshan on February 6, 2008 5:59 pm
ரதனண்ணை! கருணா தான் பிரிந்து கொள்வதாக அறிவித்த போது சிவராமும் கருணாவுடன் ‘தேனகம்’ முகாமிலேயே இருந்தார். கருணாவின் முதல் அறிக்கைக்கு கிழக்கு பிரதேசவாத முலாம் தடவியவர் சிவராம். இது புலிகளுக்கு தெரியாதது என்று நினைத்தால் பொட்டர் சயனைட் அடித்து 4 வருசமாகி இருக்க வேணும். அடி சறுகுவதை ஆரம்பத்திலேயே புரிந்துகொண்ட சிவராம் கொழும்பு வந்தவுடன் வீரகேசரியில் கடிதம் வரைந்து தமிழ்தேசியம் விளக்கினார்.
கருணா கம்பி எண்ணுறதை விட்டுட்டு டைறி குறிப்பு எழுதுவாரெண்டால் பிரயோசனமாயிருக்கும். சிவராம் படுகொலை செய்யப்பட்ட பின்னர் ஞானம் சொன்னார் ஒரு ரவுண்ட்ஸ் மிச்சம் என்று. மாமனிதர் விருதெல்லாம் உண்மையான துரோகிகளுக்கு கொடுக்கப்படுவதென்பதை நீங்கள் இன்னும் புரிஞ்சு கொள்ளாமல் போனது ஆச்சரியமாயிருக்கு.
40. Rathan on February 6, 2008 8:38 pm
திருதக்சன்! கருணாவின் தேனகத்தில் என்ன நடந்ததென்பது எனக்கு தெரியாது தான். மாமனிதர் யோசெப் பரராஐசிங்கமும் புலிகளின் துரோகியா? நீங்கள் ஒர்ரிருவரின் கடந்தகால நடவடிக்கையை வைத்து கொண்டு எல்லா மாமனிதரையும் துரோகியென சொல்வது எனக்கு சரியாய் படவில்லை.
41. நரகத்துமுள்ளு on February 6, 2008 8:51 pm
//….சந்திரன் மட்டக்களப்பில் ஏற்கனவே தமிழீழ ரானுவம் என்ற தம்பா. மகேஸ்வரனின் அனியில் செயற்பட்ட போது நட்பாகவிருந்தவர். சந்திரனால் புலிகளுக்கு அறீமுகப்படுத்தப்பட்டவரே சிவராம். இதே சந்திரனின் இறப்பை தொடர்ந்தே மலையக ம.முன்னனி சந்திரசேகரன், காதர் போன்றவர்களும் சிறை சென்றவர்கள்.//
நீங்கள் குறிப்பிடும் சந்திரன் என்பவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் TEAஇல் இருந்த ‘அப்புச்சி’ வரதன் ஆகும். இவர் வடமராச்சி - கரவெட்டியைச் சேர்ந்தவர். 1984 - காத்தான்குடி வங்கிக் கொள்ளையின் முக்கிய சூத்திரதாரியான இவர் 1984இல் கைதுசெய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் இருந்து இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின் விடுதலையாகி 1989ல் புலியில் இணைந்தவர்.
42. Rathan on February 6, 2008 9:45 pm
பட்டபடிப்பு படித்த தவைர்களால் வளர்க்கபட்ட இயக்கமெல்லாம் துணைக்குழுவாய் அலைய 8ம் வகுப்பு படித்தவரின் இயக்கம் கொள்கை மாறமல் புலியாய் நிமிர்ந்து நிற்குது. பேராசிரியர் கலாநிதி விரைவுரையாளர்கள் சிலர் துணைக்குழு அரசியல் செய்ய கிளம்பி விட்டினம் பார்த்தீர்களா! கெளரவமான காட்டிகொடுப்பென புகழுங்கோ!
43. nan-sivaram on February 6, 2008 10:05 pm
நண்பர், தங்களின் தகவல் சரியானது. வரதன் என்பதே சரியானது. வரதன் அமிர்தலிங்கம் கொலையுடனும் மரைமுகமாக கரவெட்டி விசுவுடன் தொடர்புபட்டிருந்தவர். விசு மூலமாகவே புலிகளுக்கு வேலை செய்தவர். வரதன் புலிகளில் உறூபினராக இருந்ததில்லை என்ரே எனக்கு தெரியும். என்னையும் அவர் புலிகளுக்கு வேலை செய்ய மாற்றூ இயக்கமோன்றீன் முன்னாள் உருப்பினராகிய என்னை அனுகிய போது இந்த விடயம் தெரிந்து கொண்டேன்.
44. Sesu on February 7, 2008 9:49 am
ஆஹா சபாஷ் சரியான போட்டி. எல்லா உண்மைகளும் வெளியிலை வருகுது போல. ஒருவருமே மதிக்கவில்லையென்று காஞ்சு போய்க் கிடந்த சேரனை தூக்கி நிமித்திட்டீங்களப்பா எல்லோரும். உங்களுக்கு ஒன்று விளங்குதா இல்லையா? நீங்கள் நினைச்சோ நினைக்காமலோ சேரனை ஒரு பெரிய மனிதனாக்கிப் போட்டீங்கள். உங்களுக்கு சேரன் மேலுள்ள காழ்ப்பு அவரைக் கோபுரத்தில் கொண்டு போய் வைக்குமளவிற்கா போகும்.
45. Vimalan on February 7, 2008 2:51 pm
வலு சுவாரசியமாக்கிடக்கு. நட்சத்திரன் செவ்விந்தியன் பல உண்மைகளைக் கண்டுபிடிச்சு அவிட்டு விட்டிருக்கிறார். எனக்கும் சில உண்மைகள் தெரியும். குறிப்பா பல்கலைக்கழக ஆசிரியர்கள் பற்றி. உதாரணமா ஆரார் எப்படி பட்டம் பெற்றவை. டொக்ரரேட் வாங்கினவை. பேராசிரியரானவை. எதையெதையோ குடுத்து விரிவுரையாளரானவை எண்டு நிறைய விசயங்கள் கிடக்கு.
சேரன் போலிப் பேராசிரியர் எண்டு நட்சத்திரன் கண்டு பிடிச்சமாதிரி என்ர கண்டு பிடிப்பகளும் கொஞ்சம் கிடக்கு. அவிட்டு விட இடமில்லாமல் அவசத்தோடை திரிஞ்சனான். தேசம் நடத்துற புண்ணியவான்களால ஒரு கதவு திறந்து கிடக்குது. போட்டுத் தாக்குவம். கூடத்துக்குள்ள செரிகி வைச்சதெல்லாத்தையும் எடுத்துக் கொண்டு வாறன். பராக் பராக் பராக்
46. Ravi on February 7, 2008 5:52 pm
ஜோசெப் பரராஜசிங்கம் எவ்வளவு தூரம் இயல்பில் புலி எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டவர் என்பதை முன்னாள் தினகரன் மட்டக்களப்பு நிருபர் (பின்னர் தமிழ்நெற் இன் நிருபர்) துரைரத்தினதிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அவர் தற்போது சுவிஸில் இருக்கின்றார். 2001ம் ஆண்டு பொதுத் தேர்தலில் விருப்பு வாக்கினடிப்படையில் அவர் பெற்றிருக்கவில்லை என்பதையும் அவருக்கு எவ்வாறு பா.உ பதவி கிடைத்ததென்பதும் சம்பந்தர் ஐயாவுக்கு தெரியும்.
அவர் புலி ஆதரவு நிலைப்பாட்டை எப்போ? எதற்கு? எடுத்தார் என்பதையும் கருணா தினக்குறிப்பு என்ற ஒன்றை எழுதும்போது தெரிந்து கொள்வோம். எது எவ்வாறெனினும் ஜோசெப் பரராஜசிங்கத்தின் கொலையில் புலிகளுக்கு சம்பந்தமிருக்க முடியாது என்பது எனது கருத்து. (முன்னாள் புலிகளை சொல்லவில்லை)
47. Rathan on February 7, 2008 9:42 pm
//குற்றம் பார்ப்பின் சுற்றமில்லை// தனிய குறை குற்றங்களை மட்டும் பார்த்தால் ஒன்றினைந்த செயற்பாட்டை செய்ய முடியாது. எவரும் பரிபூரணார் அல்ல!.
48. palan on February 8, 2008 4:51 pm
தேசம் வர வர ஒரு புலனாய்வு இதழ் மாதிரியும் வருகுது. தமிழகத்து ‘நக்கீரன்’ மாதிரி இது தமிழின் முதல் இணைய புலனாய்வு இதழாக்கும். இதனால வாசகர்களின் எண்ணிக்கை புற்றீசல் மாதிரி பெருகப்போகுது. தேசம் ‘பேமஸ்’ ஆகப்போகுது.
49. புலனாய்வு on February 8, 2008 7:00 pm
பாலன், நகீரனோடை தேசத்தை ஒப்பிட முடியாது. நக்கீரன் உண்மையிலேயே பல விடயங்களை வெளிக்கொண்டு வந்த இதழ். எல்லாவிதமான அதிகாரத்திற்கு எதிராகவும் தனது புலனாய்வுப் பணிகளை முடுக்கி அம்பலப்படுத்த முயன்றது. ஆனால் தேசம்…!!! நான் எழுதியதை தேசம் முற்றாகத் தடை செய்தது. நட்சத்திரன், மற்றயவர்களைப் பற்றி கற்பனையில் வந்ததை எல்லாம் எழுதுவார். அதை தேசம் பிரசுரிக்கும். இதுவா புலனாய்வு இதழுக்கான தளம்? கிசுகிசுவை எல்லாம் புலனாய்வு என்று சொல்ல முடியுமா?
இதுவே சேரனைப் பற்றியோ அல்லது வேறு யரைப் பற்றியாவது எழுதியிருந்தால் தேசம் பிரசுரிக்கும். சரிநிகரும் இவ்வாறு தான் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தது. மமதையுடன் இருந்தது. ஆனால் இன்றைக்கு ஊரெல்லாம் அடிவாங்குது. அறிவார்ந்த தளத்தில் மிகவும் பலமான தளத்தில் இருந்த சரிநிகருக்கே - சரிநிகர் ஆசிரியர்களுக்கே - இந்த நிலமை என்றால் விடிய எழும்பி 3 நேரம் சாப்பாடும் புலியெதிர்ப்பும் எண்டு இருக்கிறவர்களை வைத்துக் கொண்டு தேசத்தால் என்ன செய்ய முடியும். எல்லாம் கொஞ்சகாலம் தான்.
தேசத்துக்கு கிடைத்த ஒரேயொரு நல்ல விடயம். அஸ்ரப் அலி எழுதாமல் விட்டது. தொடந்து எழுதியிருந்தா பெரும்பாலானவர்கள் தேசம் பார்ப்பதை நிறுத்தியிருப்பார்கள். நிறுத்திப் போட்டு சன் ரி.வி யில நாடகம் பார்க்கலாம். பாதகமான விடயம் ராகவன் போன்றோர் எழுதாமல் விட்டது. (வேறு பெயர்களில் எழுதுகிறார்களோ தெரியவில்லை.) ஜெயபாலனிடம் தெளிவு இருக்க வேண்டும். எவ்வாறு உரையாடல்களையும் வாசகர்களையும் கொண்டு செல்வதென. அது இல்லை என்றே படுகின்றது.
ஏனெனில், அப்படி ஒரு தெளிவான நிலைப்பாடு இருக்குமாக இருந்தால், நட்சத்திரனது மேற்படி கட்டுரை இவ்வடிவில் பிரசுரமாயிருக்காது. வேறுவிதமான விமர்சனமாக வெளிவந்திருக்கும். சரி பிழைகளை ஆராயும் நிலைப்பாட்டிற்கு வாசகர்கள் வருவதை நினைக்க வேண்டும். அதை விடுத்து, பல பேர் பாப்பதற்காவும் பலர் பின்னூட்டம் போடுவதற்காகவும் தளம் நடத்துவதில் பிரயோசனம் இல்லை.
செய்திகளையும், மேம்போக்கான அரசியலையும் பதிவாக்கி ஆரோக்கியமான விடயத்தை கொண்டுசெல்ல முடியாது. வாசகர்களை மேலும் மேலும் முட்டாளாக்குவது தான் ஜெயபாலனது நிலைப்பாடு என்றால் நாம் என்ன செய்ய முடியும். எல்லொரும் கும்மியடிப்பதைத் தவிர வேறுவழியே இல்லை.
50. Anbu on February 8, 2008 9:26 pm
Hello….
51. arun on February 8, 2008 11:41 pm
பதிலடி - இருட்டடி, நட்சந்திர பராவின் வழியில் ஓர் தலீத் பெண்னை திருமணம் செய்து திருமண வழு புரட்சி செய்வீராக - //எழுதினார்கள். பேசினார்கள். அதாகப்பட்டது பராமாஸ்டர் ஓரு சிங்களப் பெண்ணுக்கு வர்ழ்வு கொடுத்தார் என்றும் தனது மகளை ஒரு தலித்துக்கு கட்டிவைத்ததன் மூலம் ஒரு தலித்துக்கு வாழ்வு கொடுத்தார் என்றும் பெருமையடித்துக் கொண்டார்கள். பீற்றிக்கொண்டார்கள். மகா கெட்டிப்காரர்கள் அவர்கள். அதாவது பொடிவர் வல்லி சின்னத்தம்பி ஜீவமுரளியாகிய எனக்கு கட்டிக் கொடுத்ததாக. பெருமையடித்துக் கொண்டனர்.
ஆக ‘ஆதிக்க சாதியினரின் பெருந்தன்மை தலித்துக்கனின் மீதான கழிவிரப்கப்பார்வை ஆதரவுக்கரம் என்பன தலித்துக்களை மெய்சிலிர்க்க வைக்கின்றன’ ஆரசியல், இலக்கியம் சாhந்த ஒருவரின் மரணத்தின் பின் தாங்கள் சார்ந்த கட்சிக்கு ஆதாயம் தேடுவது தாங்கள் சாhந்த கருத்துக்கு ஆதாயம் தேடுவது சாதிமேலாண்மையை நாசூக்காக நிலைநிறுத்துவது என்பன எங்களுக்கு புதிய விடயங்கங்கள் அல்ல. இதன் பின்ணணியிலேயே தேனியில் எழுதிய செந்தமிழனையும் ரிபிசி விமர்சகர்களையும் நட்சந்திரன் செவ்வியந்தியனையும் பார்க்க முடிகிறது.//
52. meerabharathy on February 11, 2008 2:34 pm
மனிதார்களே! தங்களின் விவாதத்தையும் அதன் கருத்துக்களையும் வாசித்தேன். நிச்சயமாக மகிழ்ச்சியடையவில்லை.
இலங்கையிலும் உலகின் பல பாகங்களிலும் மனிதார்கள் அநியாமாக வன்முறையாளர்களால் பழியிடப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில்… இவ்வாறான தனிநபர்கள் மீதான கருத்துக்களுக்கு அப்பாற்பட்ட ஆனால் அவர்களது தனிப்பட்ட படுக்கையறை வாழ்வில்; தலையீடுவது மிகவும் அநாகாpகமாகும்.
நாம் ஒவ்வொருவரும் கடந்த காலத்தின் கைதிகள். நோயாளிகள். நமது செயற்பாடுகள் மட்டுமல்ல நமது சிந்தனைகளுக்கும் நாம் பொருப்ப அல்ல என்பது நாம் அறியாத ஒரு உண்மை. காரணம் நமது பிரக்ஞையின்மை.
இதனால் நாம குடந்த காலத்தினால் ஆட்டுவிக்கப் படுகின்றோம் எனக் கூறினால் மிகையல்ல.
ஒருவரின் செயற்பாடு நமக்கு புரிந்து கொள்ள முடியாததாக ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கலாம். அதற்காக நாம் சாp என்பதல்ல. இன்னுமொருவருக்கு நமது செயற்பாடு மற்றும் கருத்துக்கள் புரிந்து கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் முடியும் என்பதற்காக நாம் சாp என்பதல்ல. இதற்கு காரணம் நமது பிரக்ஞையற்ற சார்புத்தன்மை.
இதிலிருந்து விடுபட்டு நமது வாழ்வை நமது கைகளில் எடுப்பது நமது வாழ்வுக்கு கருத்துக்களுக்கு நாம் பொறுப்பு எடுப்பது மிக முக்கியமானது. இதற்கு நாம் பிரக்ஞையாக செயற்பட வேண்டும்.
இது நமது செயற்பாடுகளையும் கருத்துக்களையும் நாம் கவனிப்பதற்கும் மெருகூட்டுவதற்கும் வழிவகுக்கும்.
சுற்று பின்நோக்கிச் சென்று பிரக்ஞையுடன் நாம் இந்த விவாதத்தில் எழுதியதை மீள வாசித்தோம் என்றால் நம்மைப் பார்ப்பதற்கு நமக்கே வெட்கமாக இருக்கும். இதற்காக மீண்டும் குற்ற உணர்வில் சிக்கி மறு முனைக்குச் செல்லத் தேவையில்லை. தனீ நபர்கள் மீது சேரு பூசுவதை விட்டுவிட்டு ஆரோக்கியமான செயற்பாட்டை நோக்கி முன்னேறுவதற்கு முனைவோமாக…
மனிதா;கள் ஒருபுறம் அநியாயமாக அதிகார வெறியர்களாலும் வன்முறையாளர்களாலும் இறந்து கொண்டிருக்கும் இவ்;வேளையில் நமது பணி மிகவும் முக்கியமானதும் அவசியமானதுமாகும். நுhம் ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் மனித வாழ்வின் மீதும் அதன் மேம்பாட்டின் மீதும் அக்கறை கொண்டவர்கள். இதனால் தான் இவ்வாறான் விவாதங்களில் பங்கு கொள்கின்றேூம். ஆனால் நம்மை அறியமால் நமது பிரக்ஞையின்மையால் இவ்வாறான மூன்றாந்தர விவாதங்களில் பங்கு கொண்டு நமது நேரங்களையும் ஆற்றல்களையும் விணாக்குகின்றோம்.
ஆகவே மனித நண்பர்களே! நமது பாதையை ஆரோக்கியமானதாக உருவாக்குவதற்கு இன்றிலிருந்து பிரக்ஞையுடன் செயற்படுவதற்கு முனைவோமாக…
பி.கு. 1. சேரனின் குறிப்பிட் கட்டுரைகளை வாசித்தேன். இவ்வாறான கட்டுரைகள் எழுதியன் நோக்கம் அவருக்கும் மட்டுமே வெளிச்சமானது. முற்றும் வலைப் பதிவுகளில் புலிகளை நோக்கி செல்வதாகவும் அறிந்தேன். இது தொடர்பாக சேரன் மட்டுமே நமக்கு விளக்கம் தரமுடியும். நமது விவாதங்கள் கற்பனையான கருத்துக்களே. மேலும் கடந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் புலிகள் தொடர்பாக சிறு விமர்சனக் குறிப்பை முன்வைத்துச் சென்றதை நான் மட்டுமல்ல அங்கிருந்த அனைவரும் கேட்டிருப்பர் என நம்புகின்றேன். இது வலைப் பதிவுகளின் கருத்துக்கு மரணாக இருக்கின்றது. எது உண்மை என்பது நமக்குத் தொpயாது.
2. கவிஞா;கள் சாதாரண மனிதா;களே. குவிதை சுழலில் சுற்றிக் கொண்டிருக்கும் அவர்கள் மனம் ஒரு கணத்தில் ஒரு படைப்பை படைக்கின்றது. இது மனதிற்கு அப்பால் இருந்து வெளிவருகின்றது. இக் கணம் கடந்த உடன் மீண்டும் அவர்கள் பழையபடி சாதராண மனித மன நிலைக்கு வந்துவிடுவர். தூம் படைத்தத படைப்புகளை புரிந்து கொள்ள முடியாது அதிசயப்பட்ட படைப்பாளிகளும் உள்ளனர். ஏனனில் இவ்வாறான படைப்புகள் இவர்களால் படைக்கப்பட்டதல்ல. மூறாக இவர்களுக்கூடாக படைக்கப்பட்டது என்பதே பொருத்தமானதாகும். இ;வ்வாறான படைப்புகளே காலத்தை வென்றும் வாழ்கின்றன. நுhம் ஒன்றில் எந்தளவு முழுமையாக ஒன்றிப்பாக ஈடுபடுகின்றோமோ அந்தளவிற்கு நமக்கு விளைவுகள் வெளிவரும்.
நன்றி மீராபாரதி
53. Bhavan on February 13, 2008 5:05 am
“யுத்தத்தில் நாங்கள் வெல்லத் தானே வேணும்.” நட்சத்திரன் செவ்விந்தியன்
நட்சத்திரன் செவ்விந்தியனின் கட்டுரை(?) பார்த்தேன். நட்சத்திரன் எழுதியவற்றுள் கீழேயுள்ள இரண்டும் அரசியல் ரீதியான குற்றச்சாட்டுக்கள்.
“மாகாண சபை என்பது மக்களைக் கொல்லும் சபையாகப் போய்விட்டது” என்ற ரட்ணாவின் பேச்சை அன்றைய நிலைவரம் தொடர்பாக சரியான பேச்சு என்பதனூடாக சேரன் உண்மையைத் திரிக்கிறார் எனபது ஒன்று.
மனித உரிமைகளுக்கான யாழ் ஆசிரியர் சங்கம்- UTHR(J) சந்திரிகா அரசாங்கம் நடத்திய ‘சமாதானத்துக்கான யுத்தத்தை’ வழிமொழிந்தது என்ற மாதிரியான பொய்த் தகவல்களையும் பரப்பி வந்தவர் என்பது மற்றையது..
இவ்விரண்டில்; முதலாவதில் ரட்னாவின் அப்பேச்சு சரியானது என்பதனூடாக சேரன் எவ்வாறு உண்மையைத் திரிக்கிறார் என்பதை நட்சத்திரன் விளக்கவில்லை. மாகாண சபை உருவான காலம் முதல் இன்றுவரை இலங்கையில் வாழும் எங்களுக்கு மாகாணசபை என்பது மக்களைக் கொல்லும் சபையாக இருந்த அனுபவம் தான் எஞ்சியிருக்கிறது.
1989 ஆம் ஆண்டின் ஒரு நாள்; என்னுடைய உறவினர் ஒருவரை கொழும்புக்கு வழியனுப்ப யாழ். பஸ் நிலையத்திற்கு வந்திருந்தேன். திடீரென எங்கிருந்தோ வந்த ஆயுததாரிகள் கொழும்பு செல்ல வந்திருந்த இளைஞன் ஒருவனை நோக்கிச் சுட் ஆரம்பித்தார்கள். பஸ் நிலையத்தில் நின்றிருந்த எல்லோரும் நாலா பக்கமும் சிதறி ஓடினார்கள். அந்த இளைஞன் விழுந்ததும் வந்த ஆயுததாரிகள் மூன்று பேரும் சுற்றி வளைத்து நின்று சுட்டுக் கொன்று விட்டு அசோகா ஹோட்டல் பக்கமாக ஓடி; விட்டார்கள். அத்தனையையும் இந்திய அமைதிப்படை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தது. என்னுடைய கண்களுள் அந்தக் காட்சி இன்னமும் தேங்கிக் கிடக்கிறது. இவ்வாறான சம்பவங்களும் ரட்ணாவின் கூற்றுக்குக் காரணிகளாகலாம் அல்லவா? ஆக, ரட்ணாவின் அந்தக் கூற்றில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அதைச் சொன்னதனூடாக சேரன் எந்த உண்மையைத் திரிக்கிறார் என்பதுவும் எனக்குப் புலப்படவில்லை.
திம்பு பேச்சுவார்த்தையில் மிதவாத தீவிரவாத அமைப்புக்கள் அனைத்தும் சேர்ந்து நான்கு அம்சக் கோரிக்கை ஒன்றை முன் வைத்ததும் அதனடிப்படையில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் இந்திய இலங்கை அரசுகள் அக்கறை காட்டாததால் அப்பேச்சுவார்த்தை முறிவடைந்ததும் அதற்கு மூன்று வருடங்களின் பின்னர் இலங்கை இந்திய ஒப்பந்தம் 13வது திருத்தச் சட்டம் ஆகியவற்றின் ஊடாக மாகாண சபை ஏற்படுத்தப்பட்டதும் வரலாறு.
எப்போதுமே போரிடும் இரண்டு தரப்புக்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தான் வழமை. இங்கே ஒப்பந்தம் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே செய்யப்பட்டதே தவிர, போராளிக் குழுக்களுக்கும் இலங்கையரசுக்குமிடையே செய்யப்படவில்லை என்பதே அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் , அதன் பின்னணி ஆகியவற்றைக் கேள்விக்குள்ளாக்கி விடுகிறது. இது; முதலாவது பிரச்சினை.
உண்மையில் அவ்வொப்பந்தத்தை வரிவரியாக நட்சத்திரன் படித்துப் பார்த்ததால் தெரியும் அது இலங்கையை தனது பொருளாதார அரசியல் நலன்களுக்குக் கீழ்ப்படிவிக்கும் நோக்குடன் செய்யப்பட்டவொன்றே தவிர, மக்களுடைய நலன்களுக்காகச் செய்யப்பட்டதல்லவென்று. தமிழ் மக்களுடைய நலன்களுக்கு மட்டுமல்ல இலங்கைவாழ் அனைத்து மக்களுடைய நலன்களுக்குமே இவ்வொப்பந்ம் எதிரானதென்பதும் புரியும். ஓப்பந்தம் இப்படியிருக்க அதனூடே உருவாக்கப்பட்ட மாகாண சபை மட்டும் மக்களுடைய நலன்களைப் பேணுவதாகவா இருக்கும். ஆதன் தர்க்க விதிப்படி அது இறுதியில் மக்களைக் கொல்லும் சபையாக மாறியது தான் வரலாறு.
நட்சத்திரனுக்கும் எங்களில் பலரைப் போலவே ஞாபக மறதி அதிகம் என்று தோன்றுகிறது. மண்டையன் குழுவுக்குப் பயந்து திரிந்த காலத்தை மறந்து விட்டாரா? அல்லது இன்றைய அரசியல் கருதி மறைத்து விட்டாரா என்று அவர் தான் சொல்ல வேண்டும்.
தமது பிள்ளைகளை பாடசாலைக்கோ ரிய+சனுக்கோ விடவே பெற்றோர் அஞ்சிய காலம் அது. கொஞ்சம் வசதி வாய்ப்பு உள்ளவர்கள் யாருடைதாவது காலைக் கையைப் பிடித்து விமான மூலம் பிள்ளைகளைப் பாதுகாப்பாக கொழும்புக்கு அனுப்பி வைத்தனர்.
வசதிவாய்ப்பு அற்றவர்களி;ன் பிள்ளைகள் கட்டாய இராணுவத்திற்காக கடத்திச் செல்லப்பட்டார்கள்.
யாழ்ப்பாணப் பத்திரிகைகளிலிருந்து பத்திரிகையாளர்கள் கடத்திச் செல்லப்பட்டு துப்பாக்கி முனையில் பத்திரிகை நடாத்துமாறு நிர்ப்பந்திப்பட்டார்கள். அந்தப் பத்தரிகைக்குப் பெயர் விடு தலை(!). அதில வேலை செயத் பத்திரிகையாளர்கள் இன்னமும் இருக்கிறார்கள் அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். எப்படித் தாங்கள் எழுத வைக்கப்பட்டார்கள் என்பதைக் கதைகதையாகச் சொல்லுவார்கள்.
மாகாணசபையின் இறுதிக்காலம் எப்படி இருந்தது என்பது ஒன்றும் ரகசியமல்ல. இறுதியாக இந்த மாகாணசபையில் எனக்கு இருக்க ஒரு கதிரை கூட இல்லை என்று சொல்லி அதன் முதலமைச்சராக இருந்த வரதராஜப் பெருமாள் தமிழீழத்தைப் பிரகடனப்படுததிவிட்டு இந்தியா போய்ச் சேர்ந்ததும் இன்று வரலாறாகி விட்டது.
இப்படிப்பட்ட மாகாண சபைக்கும் மக்களுடைய நலன்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? ரட்ணா அதை மக்களைக் கொல்லும் சபை என்று சொன்னதில் என்ன தவறு இருக்கிறது. சேரன் அதனை அன்றைய நிலவரம் பற்றிய சரியான மதிப்பீடு என்று சொன்னதில் தான் என்ன தவறு. அன்றைய மாகாண சபைக்கும் மக்களுடைய நலன்களுக்கும் என்ன தான் தொடர்பிருந்தது என்பதை அது சிங்கள - தமிழ் - முஸ்லிம் - மலையக எந்த இன மக்களாக .இருந்தாலென்ன நட்சத்திரன் விளக்குவாரா?
நட்சத்திரன் இங்கே செய்திருப்பது வரிகளுக்கிடையே தகவல்களை மட்டுமல்ல உண்மையையும் வழுவ விட்டிருப்பது தான்.
அதேபோலத் தான மற்றையதும்,
மனித உரிமைகளுக்கான யாழ் ஆசிரியர் சங்கம்- UTHR(J) சந்திரிகா அரசாங்கம் நடத்திய “சமாதானத்துக்கான யுத்தத்தை” வழிமொழிந்தது என்ற மாதிரியான பொய்த் தகவல்களையும் பரப்பி வந்தவர் சேரன் என்பது மற்றையது..
சந்திரிகா அரசாங்கம் நடத்திய “சமாதானத்துக்கான யுத்தத்தை” வழிமொழிந்தது மட்டுமல்ல அதனை ஆதரித்தது, ஆதரித்துப் பேசியது, மேடையேறியது என்று இன்னோரன்ன விடயங்கள் உண்டு நட்சத்திரன்.; கண்களை மூடிக் கொண்டு …. பஞ்சாமிர்தம் என்று நட்சத்தரன் நக்குவதற்கு நாங்கள் என்ன செய்வது,? அவருக்கே மணத்தில் மலம் என்று தெரிகிறது. நக்கத் தொடங்கி விட்டார். நக்கித் தானாக வேண்டும். நக்குவதற்கான காரணத்தையும் கண்டி பிடித்தாக வேண்டிய நிலை அவருக்கு.
இலங்கையில் விக்ரர் ஐவனைத் தெரியுமா? ராவய பத்திரிகையின் ஆசிரியர். அவர் ஊழரவெநச pழiவெ என்றொரு ஆங்கில சஞ்சிகையை நடாத்தி வந்தார். அதன் இதழ்களிலொன்றில் மனித உரிமைகளுக்கான யாழ் ஆசிரியர் சங்க- இரட்டையர்களில ஒருவரான ராஜன் ஹ{ல் வழங்கிய நேர்காணலைப் படித்துப் பாருஙகள். அவர் எப்படி சந்திரிகா அரசாங்கம் நடத்திய “சமாதானத்துக்கான யுத்தத்தை” வழிமொழிந்து ஆதரித்ததுப் பேசியிருக்கி;றார் என்று. மற்றையவரான சிறீதரன் உள்ளக அரங்குகளில் பேசியதை நட்சத்திரன்; கேட்கவில்லைப் போலும். அதேபோல் அதன் செயற்பாட்டாளர்களில் ஒருவரான மனோரஞ்சன் பொதுக் கூட்டங்களிலேயே சந்திரிகா அரசை ஆதரித்துப் பேசியதை அவர் அறியவில்லைப் போலும். இந்தப் பாக்கியங்களெல்லாம் வாய்க்கப் பெற்றவர்கள் இலங்கையிலிருக்கும் நாங்கள்
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கான யுத்தத்தை சந்திரிகா அரசாங்கம் அநுருத்த ரத்வத்த தலைமையில் முன்னெடுத்தபோது மனித உரிமைகளுக்கான யாழ் ஆசிரியர் சங்க ருவுர்சு(து) செயற்பாட்டாளர் மனோரஞ்சன் சந்திரியாக அரசுக்கு ஆதரவாக இராணுவத்திற்கும் மக்களுக்குமிடையில் ந்லலுறவைப் பேணும் வகையில் பிரஜைகள் குழுக்களை உருவாக்குவதற்காக, அவர் அப்போது அங்கம் வகித்த மேர்ஜ் என்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் பெயரில் அவர்களுக்குத் தெரியாமலேயே அந்தப் பெயரைப் பாவித்து துண்டுப்பிரசுரம் அச்சிட்டதும், அது அந்த நிறுவனத்திற்குத் தெரிய வர அந்தப் பிரசுரங்களை வெளியிடவிடாது அந்த நிறுவனம் தடுத்ததும் அரசசார்பற்ற நிறுவன வட்டத்தில் எல்லோரும் அறிந்த கதை. ஆனால் நட்சத்திரன் அற்pயாத கதை.
மனித உரிமைகளுக்கான யாழ் ஆசிரியர் சங்க ருவுர்சு(து) செயற்பாட்டாளாரான இந்த மனோரஞ்சன் தான் அரசாங்க ஒளிபரப்புக் கூட்டுத்தாபனமான ரூபவாஹினி தமிழ் செய்திப் பிரிவுக்கும், லேக்ஹவுஸின் தமிழ் பிரசுரங்களுக்கும் சந்திரிகா அரசாங்கத்தின் காலத்தில் பொறுப்பாக இருந்தவர் எனபதும் இங்கு எல்லோரும் அறிந்த பரகசியம். ஆனால் நட்சத்திரன் அறியாத பரகசியம்.
இவற்றையெல்லாம் நம்ப மறுத்தால் மனித உரிமைகளுக்கான யாழ் ஆசிரியர் சங்க ருவுர்சு(து) இரட்டையர்களில் ஒருவரான் சிறிதரன் கையால் அடி வாங்கிய சுனந்த தேசப்பிரியவிடம் இன்றைய (சுதந்திர ஊடக இயக்க ஒழுங்கமைப்பாளர்) கேட்டுப் பாருங்கள் சிறிதரனிடம் ஏன் அடி வாங்கினீர்களென?
இப்போது சொல்லுங்கள்; மிகச் சூக்குமமாகவும் திறமையாகவும் உண்மையைத் திரிப்பது யார்? நட்சத்திரனா? சேரனா?
இந்த இரண்டுமே நட்சத்திரன் யாருடைய நலனில் அக்கறை கொண்டு யாருக்காக இப்படிப் பேசுகிறார் என்பதைப் புரிய வைக்கப் போதுமானது.
இனி தேசம்நெற் ஆசிரியருக்கு தங்களுடைய பத்திரிகையின் அடிப்படையான ஒழுக்கவிதி தான் என்ன,? யாரும் எதை வேண்டுமாலும் பேசலாம். எழுதலாம் ஆனால் அதனைப் பிரசுரிப்பவருக்குப் பொறுப்பு இருக்க வேண்டுமல்லவா?
தட்டெழுத கணனியும், பிரசுரிப்பதற்கு ஒரு வiலைத்தளமும் இருந்து விட்டால் எதனை வேண்டுமானாலும் எழுதலாம் யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்றாகி விடுமா? (அதற்காக சேரனோ வேறு எவருமோ விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்றோ அவர்கள் மீது விமர்சனங்கள் வைக்கப்படக் கூடாதோ என்பது அர்த்தமல்ல.) இது ஒருவகையான அதிகாரம், அராஜகம் அல்லவா? அந்த அதிகாரத்தை நாங்கள் எப்படியும் பிரயோகிப்போம் என்று கோத்தபாய ராஜபக்ச சொன்னதற்கும் இதற்கும் ஏதாவது வேறுபாடு காண முடியுமா?
உதாரணமாக, கட்டுரையின் தலைப்பிலேயே போலிப் பேராசிரியர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கான எந்த ஆதாரத்தையும் தேசம் ஆசிரியரோ கட்டுரையாளரோ தரவில்லை. இது பத்திரிகையியலின் அடிப்படை விதிகளுக்கு முரணானது என்பதை ஆசிரியர் புரிந்து கொள்ளவில்லையா? (யாராவது தேசம் ஆசிரியர் இலங்கை அரசிடம் பணம் வாங்கிக் கொண்டு தான் இதனை நடாத்துகிறார் என்று சொன்னால் உங்களுடைய எதிர்வினை என்னவாக இருக்கும்?) இது தேசத்தினுடைய அல்லது கட்டுரையாளருடைய அல்லது இருவருடையதும் தனிப்பட்ட விருப்பின் காரணமாக இடப்பட்டது என்பதைப் புலப்படுத்துகிறதல்லவா? இது எந்த வகையான ஒழுக்கம் என்பதை யாராவது விளக்கமுடியுமா? .
முடிந்த மட்டும் முயன்றதில் இதை இப்படித் தான் விளங்கிக் கொள்ள முடிந்தது. நட்சத்திரனுடைய நோக்கம் தனது தனிப்பட்ட காழ்ப்பை சேரனில் கொட்டுவது, தேசத்தின் நோக்கம் அதனைப் பிரசுரித்து திருப்பதிப்படுவது சுயமைதுனம் செய்வதையும், அதை ஒளித்திருந்து பார்த்து இன்புறுவதையும் போன்றதே இது என்று சொன்னால் ஏதாவது தப்பாகி விடுமா?
இறுதியாக நட்சத்திரன் எழுதிய அவNர் மறந்து போன கவிதை வரிகள் சிலவற்றுடன்; இதனை முடிக்கலாம் என்று நினைக்கிறேன். நான்காவது பரிமாணம் (கனடா) வெளியீடாக 1994இல் வெளிவந்த வசந்தம் 91 என்ற தொகுப்பில் இந்த வசந்தம என்ற தலைப்பில் (பக்.14இல்) வெளியானது.
“சோதினை நடக்கவில்லை
ஒரு பருவகாலம் முழுவதும் ஆழழன குழம்பிக் கொண்டிருக்கிறது.
கன நண்பர்கள் இயக்கத்துக்குப் போய்விட்டார்கள்.
அவர்களின் போகுதலின் முன்
இந்தக்கடற்கரையில் இப்போ நாங்கள் முகருகின்ற சோகத்தை
முகர்ந்து கொண்டு தான் போனார்கள்
பரந்த கடலில் நமது சோகம் ஒரு அலையேனும் ஆகாவிட்டாலும்
இப்படிச் சொல்லச் சிரமமாயிருந்தாலும்
“யுத்தத்தில் நாங்கள் வெல்லத் தானே வேணும்.”
பவன்
டீhயஎயn6@பஅயடை.உழஅ
54. arun on February 13, 2008 11:00 am
பவான் அவர்களே மிக பொருத்தமான பதில்கள தந்துள்ளீர்கள். உங்களது தகவலுடன் சில… சந்திரிக்காவை ஆதரித்து இ.ஒ.கூட்டுதாபனத்தின் காலை ஒலிபரப்பில் வெள்ளாப்போடு சரியாக 6.30க்கு தொடங்கிவிடுவார்கள் புலி எதிர்புரட்சி..தமிழ்ழீழ பிரகடனம் செய்து ஓடிய வரதரும், மனோரன்சனும் மாறீ மாறீ கதைப்பார்கள். புலி எதிர்ப்பை கக்குபவர்கள மட்டும் தொலைபேசி இனைப்பில் கதைக்க விடுவார்கள்.“யுத்தத்தில் நாங்கள் வெல்லத் தானே வேணும்.” செவ்விந்தியா உமது பதிலை காணவில்லை?
55. arun on February 13, 2008 11:04 am
தேசம், செவ்விந்தியன தொடர்பாக வைத்த எல்லா விமர்சனங்fகளுக்கும் பதில் பெற ஆவன செய்யவும். தங்களது பதிலும் தேவை.
56. arun on February 13, 2008 11:25 am
செவ்விந்தியன், ஜ.நாவின் ஆயுத கழைவுக்கு நியமிக்கப்பட்ட குழுவிலுள்ள ஜ.னாவுக்கான இலங்கை பிரதினிதியும் இப்படியொரு புத்தம் முன்னர் எழுதியிருக்கிறார். சன்டினிச புரட்சி நிக்கரகுவா. இவர் பற்றீ உமது நிலைப்பாடு என்ன செவ்.னட்சத்திரன். தயான் ஜெயதிலக்கா தாங்கள் சொன்ன மாகாண சபையியில் வரதருக்கு கீழ் அமைச்சராக இருந்தவர். தேசிய ரானுவம் செய்த கொலைகளுக்கு இவரும் பொறூப்புதானே. செவ்விந்தியா முடிந்தால் இதனை தயான் எழுதியதை வாசியும். முன்னரே வாசித்தும் இருப்பிர். http://www.noolaham.net/project/03/229/229.htm
57. vijajan on February 13, 2008 12:40 pm
பவனின் கருத்துக்களுககு நட்சத்திரன் பதில சொல்லாவிட்டாலும் தேசம் பதில் சொல்லியாக வேண்டும் அலலவா?
58. Chinnan on February 13, 2008 3:43 pm
எங்கே நட்சத்திரன் ஓடி ஒளிந்துவிட்டாரா? சத்தத்தையே காணோம். பவான்/பவன் இன் கேள்விகளுக்கு நட்சத்திரன் என்ன பதிலளிக்கப் போகிறார் என்று றெpயக் காத்திருக்கிறோம்.
59. ramaneetharan on February 14, 2008 4:43 am
பவன் எழுதும் வரை நட்சத்திரன் செவ்விந்தியன் சொல்வது எல்லாம் உண்மை என்றே நம்பியிருந்தேன். ஆனால் இவ்வளவு தகவல் திரிப்பையும் தகவல் வழுவையும் தானே செய்து கொண்டு எப்படி மற்றவர்கள் மேல் குற்றம் சுமத்த முடிகிறது. இது புலம் பெயர்ந்த எழுத்தாளா;கள் பற்றிய தவறான கண்ணோட்டத்தை உருவாக்கிவிடும். புலம் பெயர்ந்தவர்கள் இலங்கைச் சூழல் பற்றி எதுவும தெரியாமல் சும்மா எழுதித் தள்ளுகிறார்கள் என்றெண்ண வைக்கும்.
பவனைப் போன்றவர்கள் தொடர்ச்சியாக எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அது தான் இப்படியான விவாதத்தை பயனுள்ளதாக்கும். தேசமும் பிரசுரிக்க முன்னர் அதன் உண்மைத் தன்மை பற்றி அறிய முயற்சி செய்ய வேண்டும். இல்லையேல் தேனியை ஒருவரும் திரும்பிப் பார்க்காதது போல் தேசத்தையும் திரும்பிப் பார்க்க விரும்பா நிலை ஏற்படும்.
60. Bhavan on February 14, 2008 10:40 am
பவனின் கேள்விகளில் உள்ள நியாயம் உங்களுக்கு உறைக்கவில்லையா? தேசம் நெற் ஆசிரியர்களே. ஏனிந்த மெளனம். உங்கள் குட்டுகள் வெளிப்பட்டதனாலா. நீங்கள் ஒருவரை நோக்கிக் கையை நீட்டும் போது உங்களை நோக்கி நான்கு விரல்களும் நீட்டப்பட்டிருக்கின்றன என்பதை அறியாதவராகளா நீங்கள்? இலங்கையில் வாழும் மக்களின் நிலையைக் கொஞ்சமாவது நினைத்துப் பார்த்திருந்தீர்களானால் உங்களால் இப்படிக் கொஷிப் படிக்க முடியுமா? தேசத்தில் வந்த எந்தக் கட்டுரை உருப்படியாக இருக்கிறதென்று சொல்லுங்கள் பார்க்கலாம்.
61. Bhavan on February 14, 2008 2:24 pm
13ஆம் திகதி என்னால் எழுதப்பட்ட குறிப்புகளுக்கு ஆதரவு தந்தோருக்கு நன்றி. எனினும் 14ஆம் திகதி பவன் என்ற பெயரிலேயே இன்னொரு குறிப்பும் எனக்கு ஆதரவாக வந்துள்ளது. உண்மையிலேயெ இன்னொரு பவன் எழுதியிருந்தால் மகிழ்ச்சியே. அல்லது இதுவும் வலைத் திருவிளையாடலா நானறியேன். விடயத்தைத் தொpவிப்பது மட்டுமே நான் செய்யக் கூடியது.
62. vanman on February 14, 2008 4:05 pm
To Bhavan, natchthiran sevindian bluffed a lot about Mahajana college aswell. He compared Mahajana with Eaton. The comparisan is a joke. EATON its an establishment of the British ruling class. Mahajana established by British ruling class real servants. Interestingly CHERAN is one of the Mahajana’s everyone’s favourite. Maybe personal reasons or Cheran’s daytoday political stands make sevindian angry.
A poet start with reflecting the Tamil people’s sorrows, agony, and their right for self determination. Then he shown himself as a journalist with the backup of the “saturday review” editors. Immidiatley he changed his colours for the NGOs Holland scholarship. Thereafter his famous BBC interview. Now the spokesman for vanni? When he given an interview to “KALASUVADU” Cheran claimed himself as a born Prof with a wonderfull brain. Opperressed people create poets. but poets sell them for a good price. Now sevindian maybe sharing his angry?
63. Evon on February 14, 2008 4:35 pm
போலி பேராசிரியர் என்று சேரனை; நட்சத்திரன் விழிப்பது தவறு வேண்டுமென்றால் காமக் கவிஞா; என்று விழிப்பதுதான் சாpயானதாக இருக்கும். தனிப்பட்ட தாக்குதல் என்று நீங்கள் எடுத்துக் கொண்டால் செய்ய வழியில்லை. ஏனெனில் ஒருவர் தனிப்பட்ட வாழ்வில் நோ;மையானவராக இல்லாத போது; பொது வாழ்வில் நோ;மையானவராக இருப்பார் என்று எதிர்பார்ப்பது எங்கனம் என்று எனக்குப் புரியவில்லை…..
சேரனனுக்காக இவ்வளவு துரம் வக்காளத்து வாங்குபவர்களே!
- விடுதலைப் புலிகளை மகிழ்விக்கும் செயற்பாடுகளில் சேரன் ஈடுபட்டு வருகிறார் என்பதை வெளிப்படையாக காணலாம். (புலிகளின் …… அன்ரன் பாலசிங்கத்திற்கு ‘நினைவுக் கட்டுரை’ எழுதும் சேரன்; புலிகளால் கொல்லப்பட்ட எந்தவொரு புத்திஜீகளுக்கும் நினைவுக் கட்டுரையென்ன தான் பங்குபற்றும் கூட்டங்களில் கூட வாய்திறப்பதில்லை. இதிலிருந்து என்ன புலப்படுகிறது?
- சேரனுக்கு வக்காளத்து வாங்குவதன் மூலம் புலிகளின் கொலை அரசியலை அங்கீகாpப்பதாக அமைந்துவிடுகிறது என்பதை உணர முடியவில்லையா?
- புலிகளை மட்டுமல்ல அவர்களின் கொலைகளை; பாசிச செயற்பாடுகளை எதிர்ப்பவர்களை விமர்சிப்பதின் மூலம் புலிகளை திருப்திப்படுத்த வில்லையா? (புலிகள் ரெலோவின் சாதாரண உறுப்பினர்களை எவ்வாறு கொன்றொழித்தார்கள் என்பதை சற்று சிந்தித்துப் பார்கவும்)
- புலிகளின் கொலைகளை பாசிச செயற்பாடுகளை விட்டுவிட்டு புலிகளை எதிர்ப்பவர்களின் தவறுகளை அல்லது பிழைகளை து}க்கிப்பிடித்துக் கொண்டாடுவதின் நோக்கம் என்ன?
- புலிகளின் பாசிச செயற்பாடுகள் எங்கே? மாகாணசபை; வரதராஜப்பெருமாள்; UTHR(J) மனோரஞ்சன் ஆகியோரின் சில்லறைத்தனமான செயற்பாடுகள் எங்கே? (புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஏதோவொரு சுயாதீனமான செயற்பாடு ஏதாவது ஒரு வகையில் இருக்கிறது என்று யாராவது சொல்வார்களா? பத்திரிகை சுதந்திரம் மயிர் மட்டை என்று பிளந்து கட்டுறியளே? புலிக்காக வக்காளத்து வாங்குகிற ‘தினக்குரல்’ கூட அங்கு விற்க முடியாது.
மாகாணசபை மக்களைக் கொல்லும் சபை என்று எவ்வளவு காலத்துக்குத்தான் மாரடிப்பியள். இன்று ஆமி கைப்பற்றிய பிரதேசங்களில் கண்டெடுத்த புலி சிறமிகளின் சிறுவர்களின் கடிதங்கள் உங்கள் இதயங்களைத் தைக்கவில்லையா? இதைக் கேள்வி கேட்க வக்கில்லை. நடந்து முடிந்த ‘செத்த பிணத்தை’ கிண்டிக் கிளறி வைத்துக்கொண்டு ஒப்பாரி வைக்கிறியள்! போங்கடா நீங்களும் உங்கட……..
64. makkal on February 14, 2008 5:54 pm
You mention UTHR(J) Manoranjan. I never heard, Manoranjan was a member of staff at University of Jaffna. He was a singer. He was popular singing “Eelathele ratha vellam…” song. I thing he might be a member of PLFT.
65. ரகு on February 14, 2008 6:05 pm
Evon, //…..UTHR(J) மனோரஞ்சன் ஆகியோரின் சில்லறைத்தனமான செயற்பாடுகள் எங்கே…//
இப்படியான ‘சில்லறைத்தனமான’ செயற்பாட்டாளர்களைக் கொண்டவர்களா UTHR(J) ? இவர்களுக்கா யூ.என் விருது யூனிசெஃப் விருது என தம்பட்டம் அடித்த்தார்கள்??? அஹா.. சந்தோசம்.. சந்தோசம்… வாழ்க யூ.ரி.எச்.ஆர்(ஜே)….ஜே..ஜேஜே!!!
போதாக்குறைக்கு பவன் வேற இந்த UTHR(J)காரரிட்ட சுனந்தா தேசப்பிரியா அடிவாங்கினார் என புதுச் செய்தி சொல்லுறார். பவன் அண்ணை கொஞ்சம் விளக்கமாப் போடும். இஞ்ச கொஞ்ச UTHR(J)வாலுகள் இருக்கினம். அவயளுக்கு சொல்லுவம்!!!
66. Rathan on February 14, 2008 7:15 pm
ஈவோன்! தமிழர் தேசிய விடுதலை போரை எதிர்த்து துணைக்குழு அரசியல் செய்பவர்களிடம் தனித மனித நேர்மையை பார்க்க முடியவில்லை. இந்நிலையில் அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் உங்கள் தனிமனித நேர்மையை அடுத்தவர் கேள்விக்குள்ளாக்க எந்த ஆதாரமும் தேவைப்படாது. அதையும் நீங்கள் தனிப்பட்ட தாக்குதலாய் எடுக்க கூடாது.
திரு சேரன் தான் விரும்பிய காரியத்தை அடுத்தவருக்க இடைஞ்சல் இல்லாமல் செய்வதற்கான தனிமனித சுதந்திரம் அவருக்கு இல்லையா? அல்லது நீங்களென்ன அவரின் எஐமானா?
புலிகளின் அரசியல் தமிழ்தேசிய அரசியல் அதை எதிர்க்கும் மற்றைய தமிழ் குழுக்களின் அரசியல் துணைக்குழு அரசியல். அரச படைகளையும் அதன் துணைக் குழுக்களையும் அரசின் உளவாளிககளையும் அழிப்பது சாதரன போர்த் தர்மம்.
சிறிசபாரத்தினம் யாழ்வைத்தியசாலையில் தமது சக உறுப்பினர்களை படுகொலை செய்யவும் அடுத்த நாள் இறந்தவர்களின் உடலை தம்மிடம் ஒப்படைக்க சொல்லி கேட்ட. கொலையை கண்டித்த பொதுமக்களை சுட்டு கொன்றும் காயபடுத்திய சிறிசபாரத்தினத்தின் அங்கத்தவர்களைதான் புலிகள் அழித்தனர். அது இரு ஆயுதம் தாங்கிய அமைப்புகளிடையே ஏற்பட்ட ஆயுதமோதல். அதுபோக ரெலோவே இப்போ புலிகளுடன் ஒத்து இயங்குது நீங்கள் ஏனோ நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்.
புலிகளின் போராட்டத்தை ஆதரிப்பது இன உணர்வுள்ள தமிழரின் உரிமை. அந்த மக்கள் ஈழவிடுதலை விரோதிகளை எதிர்ப்பதும் புறம் தள்ளுவது இயல்பான விடயம்தானே.
ஈழவிடுதலை போராளிகளையும் எடுப்பார் கைபிள்ளைகளான ஈழவிரோதிகளையும் எப்படி ஒரே தளத்தில் வைக்க முடியும். உங்களிற்கு துரோகமென்பது சர்வ சாதாரணம் நேர்மையானவர்களிற்கு மன்னிக்க முடியாத தேசத்துரோகம்.
மாகணசபையென்றாலே ஈழதமிழரை பொறுத்தளவில் மக்களை கொல்லும் சபைதான். அன்று இன்று என்றும் அதேதான்.
உதய நாணயக்காரவும் கெகலிய ரம்புகுவெலயும் உங்கள் அளவில் நவீன அரிச்சந்திரர்தான். சிறிலங்கா வான்படையாலும் இராணுவத்தாலும் நாளந்தம் பலியெடுக்க படுகிற தமிழ் சிறார்களை பற்றி என்றாவது ஒரு நாள் கவலை பட்டிருப்பீரா. எஐமான சேவகத்தில் உள்ள உங்களிடம் மனிதாபிமானத்தை எதிர்பார்ப்பது தப்புத்தான்.
67. nirmalan on February 14, 2008 7:48 pm
இவான் உம் அஸ்ரப் அலியும் மாறூவேடம் பூண்டுள்ளமாத்ரி தெரிகிறது. சேரனை புலிகளும் ஏற்ருக் கொள்ளவில்லை. சேரனும் புலிகளின் தமிழ் தேசியம் என்பதை ஏற்றூக் கொள்ளவில்லை. சும்மா வேலையில்லாமல் சேரனையும் புலிகளையும் முடிச்சுபோட்டு கதையளக்காதீர்கள். சேரனுக்கும் பலருக்கும் ஒன்றீல் புலியை புக்ழ அல்லது புலியை எதிர்த்து கட்டுரை, கவிதை, விமர்சனம், ஆய்வு எழுத கதைக்க வேண்டியது தான் இன்றாயநியதி. சேரனின் எங்கள் எவருக்கும் தெரியாத முகம் புலிகளூக்கு தெரியும். யாரை எங்கே வைப்பது என்ரு புலிகளூக்கு நன்றாக தெரியும். புலிகளீன் பேச்சாளர், அரசியல் ஆலோசகர் நல்ல கற்பனை.
68. sri on February 14, 2008 8:36 pm
சேரன் ஒரு போலிப்பேராசிரியர் என்பது ஏற்கெனவே 2006 ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் க. மகாதேவன்
தேனி இணையத்தில் எழுதிய சேரனைப்பற்றிய விமர்சனத்திலும் 2007ம் ஆண்டு தேசம் இதழ் 31(மார்ச்07-மே 07) இல் சேரனின் திசைகள் பேட்டியை ந. செவ்விந்தியன் விமர்சித்து எழுதிய கட்டுரையிலும் மிகத்தெளிவாக நிறுவப்பட்டுள்ளது.
கலாநிதிப்பட்டம் பெற்று விரிவுரையாளராக தொழிலை தொடங்கும் ஒருவர் 15 – 20 ஆண்டு சேவையின் பின்னரே பேராசிரியராக வரமுடியும். 2001ம் ஆண்டே சேரன் கலாநிதிப்பட்டம் பெற்றார். இவர் எப்படி 2005 இலோ அல்லது இப்போதோ பேராசிரியராக முடியும்?
விரிவுரையாளர்களாக தொழிலை தொடங்குபவர்களை அமெரிக்க பல்கலைக்கழகங்கள் Assistant Professor என்று குறிப்பிடும். தமிழில் இதனை விரிவுரையாளர் என்றோ அல்லது உதவிப்பேராசிரியர் என்றோ குறிப்பிடலாம். இதற்கமைய சேரனின் உண்மையான தகுதி விரிவுரையாளர் என்பதே.
ஆதாரம்.: பின்வரும் சேரனின் பல்கலைக்கழக உத்தியோகபுர்வ இணையம்.
http://www.uwindsor.ca/units/socanth/sociology.nsf/inToc/B09AAAAB44A4671885256C750064EC58
நிலமை இப்படி இருக்க
காலச்சுவடு பதிப்பகத்தால் 2005 க்குப்பிறகு வெளியிடப்பட்ட சேரனின் புத்தகங்களிலும் 2005 திசைகள் இணைய இதழிலும் சேரன் பேராசிரியர் என்று குறிப்பிடுவது சேரனாலேயே செய்யப்படும் மோசமான அறிவுத்துறை மோசடி.
சேரன் ஒரு “பச்சோந்தி அரசியல்வாதி” என்பதற்கு பின்வரும் 2002 ஆண்டுக்குப்பின்னரான சேரனின் புலிக்கு வக்காலத்து வாங்கும் கருத்துக்களே ஆதாரம்.
“மனித உரிமைகளுக்கான பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் (யாழ்)[UTHR(J)] சொல்வதுபோல புலிகளை பாசிஸ்டுகள் (fascists) என்று முத்திரை குத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பது மட்டுமல்ல, இத்தகைய முத்திரையிடல்களுக்கு பின்னால் பலமான அரசியல் காரணங்களும் உள்ளன”
=== சேரன். (நிகரி பெப் 17, 2002)
கேள்வி: விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகள் இருந்து வந்திருப்பதைப் பொதுவாகப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் எப்படிப்பார்க்கிறார்கள்?
சேரன்: ” விடுதலைப்புலிகளின் ஆட்சிக்குள் இருக்கிற மக்களின் அனுபவங்களைப்பற்றி நான் ஒன்றும் சொல்ல இயலாது. நான் அந்தப் பகுதிகளுக்குப் போய் வரவில்லை. சமூகவியலாளர்கள் இது குறித்து என்ன சொல்கிறார்கள் என்றால் “தேர்தல் நடைபெறாமல் ஒரு இயக்கம் நீண்ட காலமாக ஒரு பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமென்றால் பயங்கரத்தைப் பாவித்து இருக்க முடியாது” என்று சொல்கிறார்கள். அடக்குமுறை ஏதாவது ஒரு விதத்தில் பிரயோகிக்கப்பட்டிருந்தாலும், ஒட்டுமொத்த மக்களின் ஆதரவில்லாமல்நீண்ட காலத்துக்கு ஒரு நிலப்பரப்பைத் தங்களது ஆட்சிக்குக்கீழ் வைத்து வெற்றிகரமாக முன்னெடுப்பது என்பது சாத்தியப்படாது. வியட்னாம் உட்பட பல நாடுகளில் இத்தகைய நிலமையைப் பர்த்திருக்கிறோம். அந்த வகையில் வடக்கு கிழக்கில் புலிகளுக்குட்பட்ட பிரதேசங்களில் ஏராளமான மக்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றுதான் நம்புகிறேன். அதே சமயத்தில் புலிகள் சில மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என்று சொல்லமுடியாது. அம்மாதிரி தவறுகள் நடப்பதாக அவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு தூரம் அடிப்படையான ஜனநாயக, மனித உரிமைகள் சார்ந்து அரசாங்கம் அமைக்கப்படப்போகிறது என்பதில்தானிருக்கிறது எதிர்காலம். ”
=== தீராநதி செப். 2002.
“தெளிவும் செறிவும் சாரமும் காரமும் பொருந்தியதாக அமைந்திருந்தது பிரபாகரன் அவர்களின் உரை. தளராத படைத்திறன், போர்வலு என்பவற்றின் மீது உறுதியாகக் கட்டப்பட்ட நம்பிக்கையும் பெருமிதமும் அவருடைய பேச்சினூடக வெளிப்பட்டன.”
(தலைவரின் மாவீரர் தின உரைக்கு தல. சேரனின் பொழிப்புரை)
=== கனடா ஈழநாடு 2006
சேரனின் தாசர்களே! ரென்சன் ஆகாமல் கொஞ்சம் யோசித்து நடவுங்கோ. நீங்கள் கிண்டக்கிண்ட நாறப்போறது சேரன்தான். ஏனெனில் சேரனின் மோசடிகள் கொஞ்ச நஞ்சமில்லை. நீங்கள் நன்மை செய்யவெண்டு வெளிக்கிட அது சேரனுக்கு பெருந்தீமையில போய் முடியப்போகுது.
69. ஓல்ட்புளொட் on February 14, 2008 9:03 pm
நட்சத்திரன் செவ்விந்தியன் எண்டு ஒருத்தற்றை புத்தகம் நூலகத்தில கிடக்கடாப்பு தம்பியவை. உவன் சின்ன பொடியனாடா? உவனுக்கு என்ன தெரியும் எண்டு எழுத வந்தவன்? பாருங்கோடா அவன்ட புத்தகத்தை. வசந்தம் ‘91
http://noolaham.net/wiki/index.php?title=%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%2791
70. tamilwitness on February 14, 2008 9:08 pm
தாங்கள் வணக்கத்தலமொன்றை ஆக்கிரமித்திருப்பதை மறைத்து அதை சிவிலியன்களின் வணக்கத்திற்கு தடுத்து வைத்திருப்பதை மறைத்து அங்கே ஒரு சிவில் வாழ்க்கை இருப்பது போலக்காட்டி அதைப் புலிகள் தாக்கியிருப்பதாக சாதிக்க முற்படுகிறார்கள். இவை அனைத்துமே அப்பட்டமான பொய்களாகும். படையினருடைய பொய்களை வெளிப்படுத்துவதான அறிக்கையொன்றை மன்னர் சென் செபஸ்தியார் பேராலய பங்குத்தந்தை அருட்திரு எஸ்.கே.தேவராஜ் அடிகள் வெளியிட்டிருக்கிறார்.
சென் அன்ரனீஸ் ஆலயவளாகத்தை போர்நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையிலிருந்து அரசு விலகிக் கொண்டபின்னர் உடனடியாகவே படையினர் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விட்டனர். அத்தோடு சிரமதானம் செய்வதுகுறித்த வேண்டுகோள் படையினரிடம் விடுக்கப்பட்டதான தகவல் முற்றிலும் தவறானது என்பதை அவர் மிகவும் அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தியுள்ளார். சென் அன்ரனீஸ் ஆலயத்தின்தற்போதைய நிலைமை என்ன? அதுபற்றி மன்னார் குருமுதல்வர் தெரிவித்த கருத்துக்கள் இவை.
சிலகாலங்களுக்கு முன்னர்வரை செவ்வாய்கிழமை வழிபாடுகளிற்காக தேவாலயத்திற்கு செல்வதற்கு மக்களிற்கு படையினர் அனுமதி வழங்கியிருந்தனர். ஆனால் அண்மைக்காலமாக மன்னாரில் ஏற்பட்டிருக்கக்கூடிய சம்பவங்களின் காரணமாக (சிறிலங்காப் படையினர் மேற்கொள்ளும் படை நடவடிக்கை காரணமாக) தேவாலயத்திற்கு செல்வதற்கு படையினர் அனுமதிப்பதில்லை. தேவாலய வளாகத்துள் படைமுகாம் அமைக்கப்பட்டபின்னர் அங்கே பொதுமக்களோ குருவானவர்களோ செல்வதில்லை இதன்காரணமாக தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது அங்கு பொதுமக்களோ குருவானவரோ இருந்திருக்கவில்லையென்பதை என்னால் உறுதிப்படுத்தமுடியும்.அதாவது விடுதலைப் புலிகளினுடைய எறிகணைகள் வீழ்ந்து வெடித்த இடம் ஒரு படைமுகாம்மட்டுமே. அது சிலவாரங்களிற்கு முன்புவரை பொதுமக்கள் திரள்கின்ற வணக்கத்தலமாக இருந்திருந்தாலும் கூட தற்பொழுது முற்றுமுழுதான படை ஆக்கிரமிப்பிற்குள்ளேயே அது இருக்கிறது.
71. Bhavan on February 17, 2008 7:17 am
எனது குறிப்புக்குப் பின்னர் பலர் எழுதியிருக்கிறார்கள். அவாகளில் எவரும் நான் எழுதிய எந்த விடயத்தையும் மறுக்கவோ வேறு அபிப்பிராயங்களைத் தெரிவிக்கவோ இல்லை. புதிதாக எதையும் எழுதவில்லை. ந.செயும் மெளனம் தேசமும் மெளனம் சாதிப்பது ஏனோ தெரியவில்லை. தவறைத் தவறு என்று ஒத்துக் கொண்டு திருத்தி விடுவது தான் அழகு.
சேரனை விமர்சிக்கக் கூடாது எனறோ அவர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்றோ நான் ஒரு போதும் சொல்லவில்லை. சேரனை தாராளமாக விமர்சியுங்கள். நான் ஒன்றும் சேரன் தாசன் அல்ல. எனக்கும் சேரனில் விமர்சனங்கள் இருக்கின்றன. அது உங்களுடைய தளத்திலிருந்து அல்ல. இப்படி மிரட்டுவதனூடாக உண்மையை மறைக்கலாம் என்று மட்டும் கனவு காணாதீர்கள்?
ஆனால் சேரனை விமர்சிக்கிற சாக்கில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தையும் மாகாண சபையையும் வக்காலத்து வாங்குவது தான் பிரச்சினையாகிறது. அதேபோல் மாகாணசபை காலத்தில் கொல்லப்பட்ட உயிர்களின் பிரச்சினை சில்லறைப் பிரச்சினையாவது தான் வேதனையளிக்கிறது. புலிகளின் ஜனநாயக மறுப்பை வன்முறை மூலம் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வழிமுறையை நிராகரிக்கும் நாங்கள் ஈபிஆர்எல்எப்பும் ரெலோவும் புளொட்டும் செய்த வன்முறைகளையும் ஜனநாயக மறுப்பையும் மட்டும் எப்படி நியாயப்படுத்தி விட முடியும். இந்த இடத்தில் தான் நட்சத்திரன் சேரனை விமர்சிக்கும் (!) சாக்கில் படுகொலை அரசியலுக்கு வெள்ளையடிக்கப் பார்க்கிறார் என்கிறேன்.
யூரிஎச்ஆரினதும் வரதராஜப் பெருமாளினதும் நடவடிக்கைகள் சில்லறை என்பீர்கள் நீங்கள். புலி ஆதரவாளா;கள் புலிகளின் நடவடிக்கைகள் போராட்டத்தின போது இடம் பெறும் சிறு தவறுகள் என்பார்கள். மொத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் இரத்தம் சிவப்பு என்பதை நாம் எப்போது ஏற்றுக் கொள்ளப் போகிறோம்?
இவான் சொல்வது போல் ஒருவா; தனிப்பட்ட வாழ்வில் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நேர்மை என்பது என்ன? அதனை எப்படி அளவிடுவது? எப்படிக் கண்டறிவது? என்பதில் பலத்த சிக்கல்கள் இருக்கின்றன. ஒவ்வொருவர் அளவு கோலும் மாறுபடும். புலம் பெயர்ந்திருப்பவர்களில் எத்தனை பேர் உண்மையிலேயே அரசாங்கத்தினால் அல்லது புலிகளால் அல்லது வேறெதேனும் அமைப்பால் உயிராபத்துக் காரணமாகப் புலம் பெயர்ந்திருக்கிறார்கள்? அவர்கள் நேர்மையாக உண்மை சொல்லியா அகதியானார்கள்? இது தனிப்பட நேர்மையானதா? யாரோ ஒருவாpன் உடைந்த வீட்டையும் கொல்லப்பட்ட யாரோ ஒருவரை உறவினராக்கியும் அந்தக் குருதியில் பெறப்பட்டதல்லவா இந்த அகதி அந்தஸ்து என்று ஒருவர் விவாதிக்கக் கூடும். ஆக தனிப்பட்ட வாழ்வில் எங்கே நேர்மை என்று எப்படித் தேடுவது? உண்மையில் இது அவரவரது சுதர்மம் என்பது தான் என்னுடைய புரிதல்.
சிறி சொல்வது போல் 15 வருடங்களின் பின்னர் தான் என்றால் இலங்கையில் பேராசிரியர் என்று எவருமே போடத் தகுதியற்றவர்கள் என்பேன். உண்மையில் இது நாட்டுக்கு நாடு வேறுபடக் கூடியது என்பது தான் எனது அறிவு. சேரன் குறைந்தபட்சம் phன முடித்துவிட்டுத் தானே போடுகிறார். அது முடிக்காமலே போடும் பலர் இருக்கிறார்கள். அதற்கு என்ன செய்வது. யாழ்ப்பாணத்தில் இல்லாத யூரிஎச் ஆரினர் யாழ்ப்பாணம் என்று போடுவது போல.
72. Uthayan on February 17, 2008 7:23 am
அட நட்சத்தரன் இப்படிக் கவிதை எழுதியிருக்கிறாரா? போரில் வெல்லத் தானே வேண்டும் என்று. இப்படி எழுதிய நட்சத்திரன் இப்போது புலிகளுக்கு எதிராக எழுதலாம் தனது கொள்கையை மாற்றலாம் என்றால் சேரன் மட்டும் ஏன் மாறக் கூடாது என்று நட்சத்திரன் எதிர்பார்க்கிறார். சேரன் புலிகளை ஆதரித்தால் இப்போது அவருக்கு என்ன பிரச்சினை. இது சரியான … காய்ச்சலே தவிர வேறேதுமாகத் தெரியவில்லை.
ஒரு நல்ல மனிதனின் அஞ்சலியில் ஒரு பச்சோந்திக்கு மேடை கொடுத்திருக்கும் தோழர் ரட்ணம் கணேஸ் பராவை இரண்டாவது முறையாகக் கொன்றிருக்கிறார்.
புதியதோர் உலகம் – PUTHIYATHOR ULAGAM
15 years ago
No comments:
Post a Comment