காற்றின் திசையில் பாய்க்கப்பல் விடுதல் :நட்சத்திரன் செவ்விந்தியன்
Thanks
http://thesamnet.co.uk/?p=123
குறிப்பு: பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் பற்றிய இவ்விமர்சனக் கட்டுரை நட்சத்திரன் செவ்விந்தியனால் சில ஆண்டுகளுக்கு முன்னரேயே எழுதப்பட்டது. இக்கட்டுரை வேறு ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட போதும் அவை இக்கட்டுரையை வெளியிட மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
|| தூள் யாவாரம், கள்ளக்கடத்தல்
ஆர் ஆரோடை படுத்து எழும்பினை
எல்லாக் கதையும் நல்லா அறிவம்||
- சி. சிவசேகரம் (உளவாளிகள் கவிதையிலிருந்து)
Siva Funeralதமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் மு.சிவசிதம்பரம் அவர்களின் மரணத்தைத் தொடர்ந்து பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் 9 ஜீன் 2002 திகதியுடைய ஞாயிறு தினக்குரலில் ‘சிவசிதம்பரம் அவர்களுக்கு’ என்று தலைப்பிடப்பட்ட அஞ்சலிக்குறிப்பு அடிப்படையிலான விடயம் ஒன்றை எழுதியிருந்தார். உங்களில் பலர் அதனைப்படித்திருப்பீர்கள்.
இடதுசாரி விமர்சகராக அறியப்பட்ட ஒரு தமிழ்ப் பேராசிரியர் தனது அதிகாரத்தையும் (Authenticity) தகுதிகளையும் துஷ்பிரயோகம் செய்து ஒரு தேசிய தமிழ் நாளிதழின் பக்கங்களையும் துஷ்பிரயோகம் செய்து எழுதியதற்கு மேற்குறிப்பிட்ட விடயம் சிறந்த உதாரணம்.
சிவத்தம்பியினுடைய குறித்த கட்டுரை மிகவும் உணர்ச்சிவயமானது; மிகவும் தனிப்பட்டது. பொது வாழ்வில் இருக்கின்ற ஒருவர் மரணமானதும் அவரைப் பற்றி பத்திரிகையொன்றில்; வரவேண்டிய அஞ்சலிக் குறிப்பு பொதுவாழ்வுக்கு அவரது பங்களிப்புக்களை பக்கஞ்சார்பு இல்லாமல் அலச வேண்டியது. பொதுவாழ்வில் அவரால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளும் உள்ளடக்கப்பட வேண்டும். பேராசிரியருடைய கட்டுரை சிவசிதம்பரத்தைப் பற்றிய சரியான மதிப்பீட்டைச் செய்யத் தவறுவதுடன்; அவரை ஒரு புனித, அமானுஷ்ய தலைவராகவும் கட்டமைக்கிறது. இவ்வாறான கட்டுரை ஒன்றை சிவசிதம்பரத்தின் குடும்பத்தினரால் வெளியிடப்படுகிற ‘கல்வெட்டில்’ வெளிவருவது எங்களுக்குப் பிரச்சினை இல்லை. ஒரு தேசிய நாளிதழில் வருவது தான் நமது பிரச்சினை.
குறித்த கட்டுரையின் சில பகுதிகள் வருமாறு
“ஆனால் நீங்கள் ஒரு சராசரிக் கரவெட்டியானா? அப்படி நினைக்கவே மனம் கூசுகிறது நீங்கள் கரவெட்டி வழியாக ஈழத்திற்கு, தமிழ் உலகத்திற்கு கிடைத்த ஒரு பெரும் சொத்து”
Sivasithamparam M“பின்னல் உடுப்பிட்டியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு உலகின் கவனத்தை ஈர்த்து தமிழ்க்குறைகள் பற்றிய குரலை எழுப்பி அந்தக் குரலோடு இலங்கையின் வரலாற்றில் நீங்கள் பதிவானீர்கள்”
“ ———–நீங்களும் அமிர்தலிங்கமும் சக தலைவர்கள் ஆனீர்கள். அந்தக் கட்டத்தில் தான் உங்கள் அரசியல் தியாகங்கள் ஆரம்பமாகின.”
“ உடுப்பிட்டி முதல் நல்லூர் வரையான பயணம் இருக்கிறதே. அது எழுதப்படும் போதுதான் உங்கள் தியாக வரலாற்றின் உண்மைகள் வெளிவரும். இந்த ஊற்று அது எங்களின் ஊரினுடையது”
தமிழர் விடுதலைக்கூட்டணி ஒரு மோசமான சந்தர்ப்பவாதக் கட்சி என்பதும் வரலாற்றில் அது மேற்கொண்ட கடுமையான தவறுகளும் இன்றைய ஈழப்போராட்டத்தின் சீரழிவுக்குக் காரணம் என்பதும் இப்போது மிகத் தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டு விட்டன. இதற்கான பொறுப்புக்களை கூட்டணியின் சகதலைவர்களாக இருந்த அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமுமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
1. இலங்கையின் முதலாவது தமிழ் அரசியல் படுகொலையான துரையப்பாவின் கொலையில் தமிழரசுக்கட்சி மற்றும் கூட்டணிக்கு இருக்கின்ற பங்கு. தங்களது தனிப்பட்ட அரசியல் நலனுக்காக துரையப்பாவை ஒரு துரோகி என்ற பட்டம் கட்டி அவரைக் கொல்லுமாறு பிரபாகரன் முதலிய இளைஞர்களுக்கு ‘உரு’ ஏற்றியமை.
2. தமிழரசுக் கட்சியில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஏ.நவரட்ணம் முதலியோர் 1969ம் ஆண்டில் ஸ்தாபித்த தழிழர் சுயாட்சிக் கழகம் என்ற கட்சியின் கொள்கையான தனிநாட்டுக் கோரிக்கையைத் திருடி 1977 பொதுத் தேர்தலில் போட்டியிட்டமை. இக்கொள்கையை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பயன்படுத்தினார்களே அன்றி இக்கொள்கைக்கு விசுவாசமாக இருக்கவில்லை.
3. 1981ல் கழுதைதேய்ந்து கட்டெறும்பாகி மாவட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டமை.
4. சாதி, பால, இனம், வர்க்கம் முதலிய எல்லா விடுதலைகளையும் உள்ளடக்கிய ஒரு புரட்சிகரமான கருத்தியல் இல்லாமல் இருந்தமை. இந்த புரட்சிகரமான அம்சங்களையும் ஜனநாயகத்தையும் கொண்டு இந்தியாவில் பயிற்சி பெற்ற புரட்சிகரமான இளைஞர் மற்றும் இடதுசாரி இயக்கங்களையும் ஒன்றிணைத்து ஒரு பல கட்சிகளின் கூட்டமைப்பை (அதற்கான வாய்ப்புக்கள் மிக மிக உவப்பாக இருந்த போதிலும்) 1980களின் ஆரம்பத்தில் கட்டியெழுப்ப முடியாமல் போனது.
மேற்கூறியவை எல்லாம் கூட்டணியினரின் மகா தவறுகள். இவையெல்லாவற்றுக்கும் கூட்டாக பதில் சொல்ல வேண்டிய மனிதர் சிவத்தம்பியின் எழுத்தில் தியாகியாகவும் தமிழ் உலகிற்குக் கிடைத்த பெரும் சொத்தாகவும் மாற்றப்படுகிறார்.
பொதுவாழ்வில் இருக்கின்ற ஒருவர் அல்லது ஒரு தலைவருக்கு நேர்மையை (honesty) விட Integrity தான் முக்கியம். Integrity என்ற ஆங்கில பதத்துக்கு இன்னமும் ஒரு முறையான தமிழ்ச்சொல் இல்லை. Integrity என்ற பதத்துக்கு நேர்மையைவிட மிக ஆழமான, நீதி, ஒழுக்கம், அறம் முதலியவற்றுக்கு விசுவாசமாக இருக்கின்ற தன்மை என்று பொருள்படும். honesty என்பதை ஆங்கிலத்தில் கூடுதலாக ஒருவருடைய தனிப்பட்ட நடத்தை சம்பந்தமாகவும் integrity என்பதை ஒருவருடைய பொதுவாழ்வு சம்பந்தப்பட்ட தொழில்சார்ந்ததாகவுமே பயன்படுத்தப்படுகிறது.
பலஸ்தீன தலைவர் யாசர் அரபாத்தும் இந்திய பிரதமர் வாஜ்பாயும் தனிப்பட்ட முறையில் தங்களுக்கென்று லஞ்ச ஊழலில் ஈடுபடாதவர்கள். தனிப்பட்ட முறையில் யாரையுமே கொலை செய்யாதவர்கள். இந்த தனிப்பட்ட இவர்கள் இருவரினதும் நடத்தையையும் விபரிக்க நேர்மை (honesty) என்ற பதம் போதுமானதும் மிகச்சரியானதும் ஆகும்.
பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் அரபாத்துக்கு கீழே வேலை செய்கின்ற பல தலைவர்கள் லஞ்ச ஊழல்களில் ஈடுபடுகின்றார்கள். இது அரபாத்துக்கு தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறது. வாஜ்பாய் என்ற நேர்மையான மனிதரையும் BJP நன்கு பயன்படுத்துகிறது. இக்கட்சி இனவாதத்தைப்பயன்படுத்தியே ஆட்சியில் இருக்கிறது. முஸ்லீம் மக்களை படுகொலை செய்வதை கொள்கையாகவே கொண்டுள்ளது. இவற்றையெல்லாம் செய்கின்ற அரசாங்கத்தின் தலைவராக வாஜ்பாய் இருக்கிறார்.
மேற்குறித்த இரண்டு தலைவர்களினதும் பொதுவாழ்வு சம்பந்தப்பட்ட இயல்பை விபரிக்க நேர்மை (honesty) என்ற பதம்போதாது. அதற்குத்தான் ஐவெநபசவைல என்ற பதம் தேவைப்படுகிறது. அரபாத் மற்றும் வாஜ்பாயின் integrity கேள்விக்குரியது. integrity இல்லாத தலைவர்கள் என்றும் சொல்லலாம்.
சிவத்தம்பி குறித்த அஞ்சலிக் குறிப்பில் சிவசிதம்பரத்தின் நேர்மையைப் பற்றி சிலாகித்து எழுதுகிறார். தமிழில் integrity க்கு ஒரு சொல் இல்லாததால் ‘நேர்மை’ என்று எழுதுகிறபோது அது integrity என்ற மயக்கத்தையும் கொடுக்கக் கூடியது.
“நீங்கள் ஆசையில்லாதவர். எதிலும் மோகமில்லாதவர்.”
“உங்கள் அரசியலோ தலைமுறை தலைமுறையாய் இருந்த சொத்தை இழக்கச்செய்தது. உங்களுக்காக “ஜே“ போட்டவர்களே உங்கள் காணிகளை அடாவிலைக்கு வாங்கியது எங்களுக்குத் தெரியும். கொழும்ப வீடு போனதும், அதை நீங்கள் மீளக்கட்டவும் விரும்பவில்லை. உண்மையில் கட்டவும் முடியவில்லை. இந்த நேர்மை கண்டு நாங்கள் சிலிர்த்தோம்.”
- சிவசிதம்பரத்துக்கான அஞ்சலிக் குறிப்பு
தமிழர்களின் வீடான வடக்கு கிழக்கு மாகாணத்தை அடகு வைத்ததைப் பற்றியும் பந்தாடியதைப் பற்றியும் இதை அடிப்படையாகக் கொண்ட சந்தர்ப்பவாத கூட்டணியின் அரசியலை கேள்விக்குட்படுத்தி எழுதமாட்டார் சிவத்தம்பி. இதனடிப்படையில் சிவசிதம்பரத்தின் integrity பற்றி பேராசிரியர் ஒரு மூச்சும் விடமாட்டார். வடக்கு கிழக்கு என்ற பெரிய வீடே போக சிவசிதம்பரத்pன் சின்ன வீட்டைப் பற்றித்தான் சிவத்தம்பி எழுதுவார்.
சிவசிதம்பரம் ஆசையும் மோகமும் இல்லாதவர் என்று எழுதுவது வேடிக்கையானது. இளமைக் காலத்தில் கம்யூனிஸ்ட் ஆக இருந்த சிவசிதம்பரம் அதனைக் கைவிட்டு தமிழ்க் காங்கிரஸ் பிறகு கூட்டணி என்று வந்ததே கதிரை ஆசையினாலும் அதிகார மோகத்தினாலும் தான். இறுதிக் காலத்திலும் தன்னைக் கொலை செய்ய முயற்சித்த ஒரு இயக்கத்திற்கு பய பக்தியோடு பணிந்து தேசிய பட்டியல் எம். பி ஆக வந்ததும் அதிகார மோகத்தினால் தான்.
பேராசிரியர் சிவத்தம்பி எப்பொழுதும் காற்றின் திசையில் பாய்க்கப்பல் விடுகிறவர். அதற்கு உதாரணமாக பின் வருவனவற்றைத்தரலாம்.
1. 1989 ம் ஆண்டு அமிர்தலிங்கம் யோகேஸ்வரனோடு சிவசிதம்பரமும் தனது துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுக்கு மரணமாகி இருந்தால் அன்றைய வீரகேசரியில் இன்று தினக்குரலில் எழுதிய மாதிரியான அஞ்சலியை கா.சி எழுதியிருப்பாரா? (நிச்சயமாக இல்லை).
2. சிவத்தம்பி சார்ந்திருந்த அமைப்பான தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தின் செயலாளர் க. கந்தசாமி ஈரோசினால் கடத்திச் செல்லப்பட்டுக் கொலை செய்யப்பட்ட போது சிவத்தம்பி அதனைக் கண்டிக்கவும் இல்லை. கந்தசாமிக்கு ஒரு அஞ்சலி உரை தானும் எழுதவில்லை. உண்மையில் சிவசிதம்பரத்தைப் போல அல்லாது கந்தசாமி உயர்ந்த integrity ம் அர்ப்பணிப்பும் உடைய மனிதர்.
3. சிவத்தம்பியின் சக பல்கலைக்கழக ஆசிரியையான கலாநிதி ராஜினி திரணகம 1989ம் ஆண்டு புலிகளால் கொல்லப்பட்ட போது சிவத்தம்பி கண்டிக்கவும் இல்லை. அஞ்சலியும் எழுதவில்லை. கந்தசாமி, திரணகம முதலியோரின் integrity மற்றும் அர்ப்பணிப்போடு ஒப்பிடுகிறபோது சிவசிதம்பரம் ஒரு வியாபாரத் தரகர் போன்றவர்.
4. துப்பாக்கி முனையில் பயமுறுத்தப்பட்டு புலிகளின் இருப்பையும் தலைமையையும் கூட்டணியினர் ஏற்றுக்கொள்ளாத 2001 டிசம்பர் தேர்தலுக்கு முன்னைய மாதிரி இருந்த ஒரு சூழலில், புலிகளுக்கும் கூட்டணியினருக்கும் வெளிப்படையான ஒரு பகமையுணர்வு உள்ள சூழலில் சிவசிதம்பரம் இயற்கை மரணம் அடைந்திருந்தால் சிவத்தம்பி இப்போது எழுதிய மாதிரியான ஒரு அஞ்சலி உரையை எழுதியிருப்பாரா? நிச்சயமாக இல்லை. சிவசிதம்பரத்தின் பூதவுடல் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வன்னிக்கூடாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவதையும் புலிகளின் உறுப்பினர்கள் அவரின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதையும் உறுதிப்படுத்திய பின்னர்தான் சிவத்தம்பி இதனை எழுதியிருக்கிறார்.
5. 1999ம் ஆண்டு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினரும் கல்வியாளருமான நீலன் திருச்செல்வம் புலிகளால் கொல்லப்பட்ட போது சிவத்தம்பி அஞ்சலியோ கண்டனமோ எதுவும் எழுதவில்லை. சரியாக ஆறு மாதங்களுக்குப் பிறகு குமார் பொன்னம்பலம் அப்போதைய இலங்கை அரசாங்கத்தின் முகவரால் கொல்லப்பட்ட போது அதற்கு சிவத்தம்பி ஆங்கிலத்தில் உருக்கமான அஞ்சலி எழுதினார். சிவத்தம்பிக்கு குமார்பொன்னம்பலத்துடன் சிவத்தம்பிக்கு சிவசிதம்பரத்துடன் இருந்த மாதிரியான தனிப்பட்ட தொடர்புகள் எதுவும் கிடையாது. எனவே இந்த தனிப்பட்ட தொடர்புகளின் அடிப்படையில்தான் பொன்னம்பலத்துக்கு எழுதினார் என்றும் திருச்செல்வத்துக்கு எழுதவில்லை என்றும் வாதிடுவது சரியான வாதம் அல்ல. சிவத்தம்பியைப் போலவே குமார்பொன்னம்பலமும் ஒரு சந்தர்ப்பவாதியாக அரசியல் செய்தார். நீலன் திருச்செல்வம் இவர்களைப்போல இல்லாது தனது சுயாதீனத்தை (independency) பேணிக்கொண்டவர்.
Kumar Ponnampalam1992 ம் ஆண்டுவரையும் குமார் பொன்னம்பலம் புலிகளை கடுமையாக விமர்சிப்பவராகவே இருந்தவர். 1991இல் “வடக்கிலும் கிழக்கிலும் ஜனநாயகம் என்பதே கிடையாது. ஒருவர் புலிகளின் சொற்கேட்டு நடக்காவிடில் அவர் கொல்லப்பட்டு அழிந்து விடுவார். ஓருவருக்கும் புலிகளுக்கு எதிராக வாயைத் திறப்பதற்கு துணிவில்லை. அங்கே துப்பாக்கிதான் ஆட்சி செய்கிறது. மூளைகளும் நாக்குகளும் என்றென்றென்றைக்குமாக மௌனமாக்கப்பட்டுவிட்டன.
புலிகள் மனிதப் பேரழிவுகளை செய்யக் கூடிய வல்லமையுள்ள ஒரு குழுவினர். அது மட்டுமே அவர்களால்; செய்யக்கூடியது. எல்லோருமே உள்ளுர் சண்டியனைப் பற்றிப் பயந்து போயுள்ளனர்.”
(30 ஏப்ரல் 1991, சண்டே ரைம்ஸ்) என்று கூறிய பொன்னம்பலம் 1992ல் பின்வருமாறு சொன்னார்.
“புலிகளைத் தமிழ்மக்களிடம் இருந்து அந்நியப்படுத்த முடியாது என்று தொண்டமான் கூறுவதோடு நான் உடன் படவில்லை. குறிப்பாக யாழ்குடாநாட்டிலிருக்கின்ற மக்களால் பயத்தினால்தான் தங்கள் வாயைத்திறக்க முடியாமல் இருக்கிறது. புலிகள் தான் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி என்ற கோரிக்கையை கேட்ட போது எனக்குப் புல்லரித்தது (எள்ளலாக) முன்னர் உவ்வாறுதான் த.வி. கூட்டணியும் தங்களை ஏக பிரதிநிதிகள் என்று கூறிக் கொண்டனர். அது நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. இப்போது புலிகளின் முறை. புலிகளின் கோரிக்கையும் நீண்டகாலத்துக்கு நீடிக்கப் போவதில்லை.” (29 மார்ச் 1992, சண்டே ரைம்ஸ்)
(சண்டே ரைம்ஸ் இல் வந்த மேற்கூறிய பதில்களை ராஜன் ஹல் தன்னுடைய Sri Lanka : The Arrogance of Power (2001, UTHR, Colombo) என்ற நூலில் ஆவணப்படுத்தி உள்ளார்).
இதிலிருந்து தெரியவருவது என்னவென்றால் குமார் பொன்னம்பலம் புலிகளின் கருத்தியலை மனசார ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் நிபந்தனையின்றி புலிகளுக்கு ஆதரவளிப்பவர் அல்லர். 1994ம் ஆண்டுத் தேர்தலிலும் பாராளுமன்ற கதிரையொன்றைப் பெற முடியாமல் தோற்றுப் போன குமார் பொன்னம்பலம் வாக்கு வேட்டைக்காக வரித்துக் கொண்ட சுலோகமே புலிச்சார்பாகும்.
இது சிவத்தம்பிக்குத் தெரியாதது அல்ல. இன்று இலங்கையில் இருக்கின்ற ஏறத்தாழ அனைத்து தமிழ் ஊடகங்களும் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற தமிழ் ஊடகங்களும் செய்திகளையும் ஆய்வுக் கட்டுரைகளையும் கடுமையான சுயதணிக்கைக்கும், உள்ளாக்கி புலிகளின் கருத்தியலோடு ஒத்திசைந்தே வெளியிடுகின்றன. இந்தத் தமிழ் ஊடகங்கள் தான் வரலாற்றையும் சம்பவங்களையும் மறைத்தும் திரித்தும் விட்டு நீலன் திருச்செல்வத்தை ஒரு துரோகியாகவும் குமார் பொன்னம்பலத்தை ஒரு தியாகியாகவும் கட்டமைத்தன. உண்மைகளை உள்ளபடியே பக்கச் சார்பில்லாமல் ஒரு கல்விசார் படிப்பாளிக்கே உரிய சுயாதீனத் தன்மையோடு விடயங்களை எழுதாமல் தமிழ் ஊடகங்கள் கட்டமைத்த இரண்டு மனிதர்களைப் பற்றிய போலிப் பிம்பங்களோடு முரண்படாமல் சிவத்தம்பி எழுதுவதற்கு பின்வரும் காரணம் உண்டு.
வெகுஜன கலாச்சாரத்துக்கு வெகுஜனங்களைக் குழப்பாமல் உணர்ச்சிவசமாக வெகுஜனங்கள் கேட்க விரும்புகிற விடயங்களை எழுதுவதன் மூலம் வெகுஜனங்கள் மத்தியிலிருந்து ஜனரஞ்சகமான பிரபல்யத்தை பெறுவதும் அதிலிருந்து வருகின்ற போலி அதிகாரத்தையும் போதையையும் அனுபவிப்பதுதான். போதுவான அரசியல் வாதிகள் வேண்டுகிற போதைக்குச்சமனானது இது.
சிவத்தம்பி இவ்வாறு தூக்கி எழுப்புகிற சிவசிதம்பரம் தான் தமிழரசுக் கட்சியில் இருந்த ஒரு நல்ல மனிதரும் மனச்சாட்சியின் கைதியுமான ஊர்காவற்துறை பாராளுமன்ற உறுப்பினரான ஏ.நவரட்ணம் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்த போது அந்த ‘தீவானை’ மோசமாக எள்ளி நகையாடியவர். இந்த சுவாரசியமான விடயத்தை ஏ.நவரட்ணம் தனது நினைவுக் குறிப்புக்களின் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தகமான “The Fall and the Rise of the Tamil Nation” (1991, காந்தளகம், சென்னை) என்பதில் பதிவு செய்திருக்கிறார்.
Navarathnam A1968ம் ஆண்டு ஒருநாள், அப்போது பாராளுமன்றத்தின் உப சபாநாயகராக இருந்த சிவசிதப்பரமும் ஏ.நவரத்தினமும் தற்செயலாக கொழும்பிலிருந்து யாழ்பாணத்துக்கு ஒரே புகையிரத வண்டியில் பயணம் செய்ய வேண்டி வந்தது. அன்றைய தினம் தான் நவரத்தினம் பாராளுமன்றத்தில் பேசும் போது தனது தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்திருந்தார். நவரத்தினத்தைக் கண்டதும் சிவசிதம்பரம் கேட்டது இது தான்.
“ஜயா (எள்ளலாக) நீங்கள் பேசுகின்ற இந்த தனிநாடு எது? அவர்கள் கடற்படையின் போர்க்கப்பலான H.M.C.S விஜயாவை ஊர்காவல் துறையில் அல்லது காங்கேசன் துறையில் கொணர்ந்து தரித்துவிட்டு ஒருபத்து செல் அடித்தால் உங்கள் தனிநாடு இந்து சமுத்திரத்தின் அடியில் முழ்கிப்போய்விடுமே” (பக்.282)
இவ்வாறு சிவத்தம்பி எழுதக் காரணம் வரலாறுகள் நினைவிழந்து பேரன ஒருவகையான நிலையில் இருந்து அல்ல. அவரது சுவாதீனம் ஒழுங்காகத்தான் உள்ளது. சிவசிதம்பரம் அரசியல்வாதியாக இருந்து கொண்டு அரசியல் செய்தார். சிவத்தம்பி ஒரு படிப்பாளராக இலக்கியவாதியாக இருந்து கொண்டே அரசியல் செய்பவர்.
அரசியல் விஞ்ஞானத்தில் அமுக்கக் குழுக்கள் (pressure groups) என்று ஒரு எண்ணக் கரு உண்டு. பெரிய அரசியல் அதிகாரம் மிக்க அரசியல் கட்சிகள் மைய நீரோட்ட அளவில் செல்வாக்காக அரசியலில் ஈடுபட அமுக்கக் குழுக்கள் அதிகாரம் இல்லாதவையாக இருப்பினும் மக்கள் கூட்டத்தின் ஒரு சிறுபகுதியின் பொதுநலனுக்காக அல்லது முழுமக்கள் கூட்டத்தின் பொது நலனுக்காக போராடும். இந்த அமுக்கக் குழுக்கள் பெரிய அரசியல் கட்சிகளின் கொள்கைத் தீர்மானங்கள் எடுப்பதில் செல்வாக்குச் செலுத்தும். உலக அரசியலில் சுற்றுப்புறச் சூழல் இயக்கங்கள், மனித உரிமை அமைப்புக்கள் முதலியன அமுக்கக் குழுக்களாகவே தொழிற்படுகின்றன.
சிவத்தம்பியின் விமர்சன மற்றும் இலக்கிய வாழ்விலும் ‘அமுக்கக் குழு’ என்ற கருத்தியல் முக்கியமானது. 50 களிலிருந்து 70 கள் வரையான மூன்று தசாப்தங்களும் சிவத்தம்பி ஒரு வரட்டு மார்க்சியராகவே இருந்தார். மார்க்சியத்தை இலக்கிய விமர்சனத்துக்கு பயன்படுத்துகிற போது இந்த வரட்டுத்தனம் மிக துலங்கலாகத் தெரிந்தது. சுயாதீனமாக இயங்க வேண்டிய படைப்புத்துறையையும் விமர்சனத்துறையையும் ஒரு அரசியல் கட்சியாக கட்சி மனோபாவத்தோடும் கட்டுப்பாடுகளோடும் வைத்திருந்தனர். தங்களது அணி சார்ந்தவர்களையே குழு மனோ பாவத்தோடு சிலாகித்து எழுதினார்கள் சிவத்தம்பி முதலியோர்.
சிவத்தம்பி முதலியோர் அங்கம் வகித்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துக்கு வெளியே இருந்தும் சமகாலத்தில் ஒரு வளமான படைப்பிலக்கியம் மற்றும் விமர்சனத்துறை சார்ந்த மரபு வளர்ந்து வந்தது.
ஈழத்துச் சிறுகதை மூலவரில் தொடங்கிய மேற்கூறிய மரபு அ.செ முருகானந்தன், வரதர், அ.ந.கந்தசாமி, எஸ்.பொன்னுத்துரை, வ.அ. இராசரத்தினம், மு.தளையசிங்கம், கே.வி. நடராஜன் என்று சிறுகதையில் தொடர்ந்தது. இவர்களை, இவர்களின் படைப்புக்களை சிவத்தம்பி முதலியோரின் விமர்சனங்கள் புறக்கணித்தன. முற்போக்கு அணி சார்ந்து எழுதிய படைப்பாளிகளிலும் என்.கே.ரகுநாதன், டொமினிக் ஜீவா, டானியல் முதலியோர் சில நல்ல படைப்புக்களைத் தந்திருந்த போதிலும் செ.கணேசலிங்கம், காவலூர் ராஜதுரை முதலியோர் மிகப்பிரச்சாரமான மோசமான படைப்புக்களையே எழுதியுள்ளனர்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கிற போது சிவத்தம்பி பட்டியலிட்ட முற்போக்கு எழுத்தாளர்களை விட வெளியிலிருந்த எஸ்.பொ, வ. அ. இராசரத்தினம், மு. தளையசிங்கம், கே.வி.நடராஜன் ஆகியோர் மிகத் திறமைவாய்ந்த கலைஞர்கள் என்பதை காலம் இன்று நிரூபித்துவிட்டது. கவிதைத்துறையில் சிவத்தம்பி முதலியோர் சிலாகித்த பசுபதி, சுபத்திரன் முதலியோர் மிகமோசமான பிரச்சார படைப்பாளிகள் என்பதும் இன்று நிரூபணமாகிவிட்டது.
இக்காலப் பகுதியில் மு.தளயசிங்கம் எழுதிய ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி என்ற நூல் மிக முக்கியமானது. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க விமர்சகர்களையும் படைப்பாளிகளையும் அவர்களது படைப்புக்களையும் விமர்சனரீதியாகவும் சுயசரிதை ரீதியாகவும் அலசி எழுதிய அம்மாதிரியான ஒரு விமர்சனத்தை எழுதக்கூடிய துணிவும் தார்மீகப ;பலமும் சிவத்தம்பிக்குக் கிடையாது.
எண்பதுகளில்தான் சிவத்தம்பியில் வரட்டு மார்க்சியம் விடுபட்டு ஒரு வளர்ச்சி தெரிகிறது. சிவத்தம்பியின் இந்த மாற்றத்துக்கு காரணம் அலை சஞ்சிகை போன்ற அமுக்கக் குழுக்கள் தான். அலை சஞ்சிகை சிவத்தம்பி, கைலாசபதி போன்றோரின் விமர்சன குறைபாடுகளை ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தியதுடன் விவாதங்களையும் தொடக்கி வைத்தது. அலை ஆசிரியர் அ.யேசுராசா ஒரு மார்க்சிய எதிரி என்ற குற்றச் சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டாலும் அலை ஒரு பழமைவாத மதவாத இயக்கத்தின் பாணியில் மார்க்சியம் மீது சேறு பூசவில்லை. வரட்டு மார்க்சியத்தின் தர்க்கப் பிழைகளையும் தவறுகளையுமே அலை சுட்டிக்காட்டியது. மேலும் சிவத்தம்பி முதலியோர்கள் புறக்கணித்த எஸ்.பொ, வ.அ இராசரத்தினம், கே.வி நடராஜன் முதலியோர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து இயங்கவில்லையே தவிர அவர்கள் மார்க்சிய எதிரிகள் அல்லர்.
சிவத்தம்பியின் 80களில் ஏற்பட்ட மாற்றத்தின் மைல்கல் என உயிர்ப்புக்கள் சிறுகதைத் தொகுதிக்கு அவர் எழுதிய பின்னுரையைச் சொல்லலாம். அலை சஞ்சிகை உடனடியாகவே சிவத்தம்பியின் குறித்த முன்னுரையை மனமாரச் சிலாகித்துப் பாராட்டியது. அலையில் சிறுகதை எழுதி வளர்ந்த உமா வரதராஜனையும் ரஞ்சகுமாரையும் சிவத்தம்பியால் சிலாகித்துச் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. மகாகவிக்கு தாங்கள் செய்த இருட்டடிப்புக்குப் பிராயச்சித்தமாக அவரது மகனான சேரனின் முதல் தொகுதி வந்தவுடனேயே அதிகம் பாராட்டி எழுத வேண்டியதாயிற்று.
Canagaratna A Jஅலை சஞ்சிகையின் காலப்பகுதியிலே தான் சிவத்தம்பி மீது அமுக்கம் செலுத்திய இன்னொரு நிகழ்வான எம்.ஏ.நுகமான்; என்ற விமர்சகரின் வருகையும் இடம்பெறுகிறது. மகாகவியின் புத்தகங்களைப் பதிப்பித்து அவரை மீள்கண்டு பிடிப்புச்செய்தவர் நுகமான். நுகமானும் யேசுராசாவும் சேர்ந்து தான் ‘பதினொரு ஈழத்துக் கவிஞர்” நூலைத் தொகுக்கின்றனர்.
சிவத்தம்பிக்குள் இருக்கின்ற அரசியல்வாதி, சிவத்தம்பியின் விமர்சனப் பார்வையை விசாலப்படுத்தி வளமாக்க உதவிய அமுக்கக் குழுக்களைப் பற்றி திறந்த மனத்தோடு பேச விடுவதில்லை.
1999ம் ஆண்டு வெளிவந்த கட்டுரையொன்றில் பின்வருமாறு எழுதுகிறார்.
“முற்போக்கு எதிர்நிலைச் சஞ்சிகைகளாக முக்கியப்பணியை ஆற்றியனவற்றுள் கலைச்செல்வி, அலை முக்கியமானவை. இவற்றுள் அலை முற்போக்கு எதிர்ப்பு நிலைப்பாட்டைத் தமிழக முற்போக்கு எதிர்பாளர்களுடன் சேர்ந்து மேற்கொண்டது.” (பக் 109, நவீனத்துவம்-தமிழ்-பின்நவீனத்துவம்)
முற்போக்கு என்ற சொல்லை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சூடிக்கொண்டதால் அதுதான் முற்போக்கானது என்றும் அலை ‘முற்போக்கு எதிர்ப்பு நிலைப்பாட்டை’ எடுத்ததனால் அலை பிற்போக்கானது என்ற மயக்கத்தை மேற்கூறிய வசனங்கள் கொடுக்கக்கூடியவை. உண்மையில் வரலாற்றில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைவிட அலை தான் முற்போக்கானதாக இருந்தது என்பது இன்று நிறுவப்பட்டுவிட்டது.
அலை ஒரு ஆசிரியர் குழுவால் வெளியிடப்பட்ட சஞ்சிகை என்றாலும் அது ஒரு இயக்கமாகவும் இருந்தது. ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி எழுதிய தளையசிங்கம் (போர்ப்பாறை எழுதிய தளையசிங்கமல்ல) ஏ.ஜே.கனகரத்னா போன்றவர்கள் அலையின் பிதாமகர்கள். நுகமானின் வளர்ச்சியும் அலையின் வளர்ச்சியும் சமாந்தரமாக நிகழ்ந்தது. எனவே அலை ஒரு காலத்தின் பிரதிபலிப்புக்கூட.
ஆகவே சிவத்தம்பி ‘யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு-ஓர் இலக்கிய வரலாற்றுக் கண்ணோட்டம்’ என்ற கட்டுரையை எழுதுகிற போது அதில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தையும் ஒரு கட்டமாகக் குறிப்பிடுவது போல் அலை இயக்கத்தையும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
22222222222222222222222222222222222222222222222222222222222
1. kannan on November 16, 2007 9:52 am
திரு சிவதம்பி என்பவர் யார்?
2. denkiri on November 16, 2007 11:38 am
kannanin arumyyaana keelvi. pathil chollip paarunkovan paarppam. knna nei entha ulakatthil erukkirai? unakku oru muttham naan thara veendum.
denkiri.
3. humanwatch on November 16, 2007 12:18 pm
MARX AFTER MARX மார்க்ஸூக்குப் பின்னான மார்க்ஸ்
பேராசிரியர் கா. சிவத்தம்பியுடன் யமுனா ராேஐந்திரன் உரையாடல்
ய.ரா: நாங்கள் இந்த நேர்காணலிலை முழுக்க மார்க்சியம், மார்க்சியத்தினுடைய எதிர்காலம் இவை தொடர்பான விடயங்கள் குறித்துப் பேசலாம் என்று எண்ணுகிறேன். சோவியத் யூனியனுடைய வீழ்ச்சிக்கான காரணங்களை நீங்கள் எப்படி மதிப்பீடு செய்கிறீர்கள் ?
கா.சி: சோவியத் யூனியனுடைய வீழ்ச்சிக்கான காரணங்களை நான் இப்படிப் பார்க்கிறேன். மார்க்சியத்திற்கு ஏற்பட்ட முக்கியமான பிரச்சினை என்னவென்றால் சோவியத் அரசினுடைய வளர்ச்சியும் சோவியத் அரசு ரஷியப் பேரரசினுடைய பகுதிகளை சோவியத் அரசுக்குள் கொண்டு வரவேண்டிய - கொண்டு வந்த நிர்ப்பந்தமும் இதன் காரணமாக, தொடக்கம் முதலே காணப்பட்ட ஒரு சமனற்ற வளர்ச்சியும். சோவியத் ரஷியப் புரட்சியை, ரஷியப் பேரரசின் மாநிலங்கள் முழுவதற்கும் புதுமையாக ஆக்க முனைந்ததில் ஏற்பட்ட வரலாற்றுப் பிரச்சனைகள் அடிப்படையில் உள்ளன என்று நான் கருதுகின்றேன். புரட்சி ஏற்பட்டது ரஷியாவில்தான், மொஸ்கோவில்தான். ஆனால் ரஷியப் பேரரசு, கஸாக்ஸ்தான்வரை துருக்கிஸ்தான்வரை நீண்டு கிடந்தது. லெனின் காலத்திலே படிப்படியாக இவையெல்லாம் அதாவது 27, 28இலை தான் வந்து சேருது. இங்கெல்லாம் பெரிய ஒரு புரட்சிக்கான நிலைமையோ அல்லது புரட்சியினுடைய தன்மைகள்பற்றியோ புரட்சிபற்றியோ அதற்கான சிந்தனைகளோ இருந்தது கிடையாது. அந்தச் சந்தர்ப்பத்திலைதான் அந்த நாடுகள்மீதும் இந்த நடைமுறைகள் போய்ச் சேர்ந்தது. அப்போது அங்கே உள்ள, அந்தந்தப்பகுதிகளில் உள்ள மக்கள் எல்லாரும் ரஷியாவில் எழுந்த மொஸ்கோ நிலைப்பட்ட ஒரு அரசியலைப் பகிர்ந்து கொள்ளவோ புரிந்து கொள்ளவோ முடியவில்லை. சோவியத் அரசினுடைய தன்மை இதனால் மாறுதலடையத் தொடங்குகிறது. இது படிப்படியாக லெனின் காலத்தில் ஏற்படுகிறது. இரண்டாவது உலக யுத்தத்தின்பொழுது சோவியத் அரசினுடைய பங்கு ஒரு மாதிரியாகவும் அதன் பின்னர் இன்னொரு மாதிரியாகவும் விளங்குகிறது. ஸ்டாலினிசத்தினுடைய வளர்ச்சி என்று சொல்கிறபொழுது அதை நாங்கள் சற்று அனுதாபத்தோடும் பார்க்கவேண்டும். அதை வரலாற்றுப் புரிந்துணர்வோடு பார்க்கவேண்டும். என்னவென்றால் ஒரு காலகட்டத்தில் சோவியத் அரசு அல்லது சோவியத் பொருளாதாரம் கனரகத் தொழில்களினுடைய (heavy industries) பெருந் தொழில்களினுடைய வளர்ச்சி, பெருமளவிலான முன்னேற்றம் செய்யவேண்டிய தேவை ஒன்று இருந்தது. மார்க்சியத்தினுடைய அடிப்படையான சில விஷயங்கள் இருக்குத்தானே ? தொகைரீதியான மாற்றங்கள் கனரீதியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது. இது சோவியத் அரசினுடைய தன்மைகளை மாற்றத் தொடங்கியது. அது, படிப்படியாக, அந்த மாற்றம் ஏற்பட்டுப் பின்னர் நாங்கள் ஸ்டாலினியம் என்று சொல்லப்படுகிற போக்கு நிச்சயமாக வந்து சேர்ந்துவிட்டது.
ய.ரா: இங்கு ஸ்டாலினியத்துடைய குணங்களாக நீங்கள் எதை எதை வரையறுக்கிறீர்கள் ?
கா.சி: ஸ்டாலினியத்துடைய குணங்களாக நான் வரையறுப்பது, பிரதானமாக, லெனின் காலத்தில் இருந்த உட்கட்சி விவாதம் இல்லாமற்போனது. அந்த உட்கட்சி விவாதமும், ஒருமைப்பாட்டின் அடிப்படையில், அதாவது ஒருமித்த சிந்தனை அடிப்படையில் விவாதங்களைக் கொண்டு செல்கின்ற தன்மையும் இல்லாமற்போனது. இதன் காரணமாக, சோவியத் அரசு மிக முக்கியமான ஒன்றானது.
என்னென்றால் லெனின் காலத்தில் , அவர் கட்சியை வாக்கெடுப்பு நிலைக்கு விடவில்லை. அதாவது கட்சியை வாக்களிப்புக்கு விடவில்லை. எல்லாரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்ல அவற்றினு‘ாடாக வருகின்ற பொது அம்சங்களை எடுத்து ஒருமித்த சிந்தனை அடிப்படையில் திரட்டினார். அப்ப, லெனினைப் போன்ற ஒரு ஐனநாயகவாதி, எல்லாக் கட்டங்களிலும் ஐனநாயகச் சூழலைப் பேணுகின்ற சிந்தனைத் திறனுள்ள, தீட்சண்யமான பார்வை உள்ள ஒரு தலைவர் இருக்கிறவரையில் பிரச்சினை இல்லை. அதன் பிறகு, இது எப்பொழுதுமே வர்றது, புரட்சியின் தலைவர்களும் புரட்சிக்குப்பின் வருபவர்களும் என்பது. அவர்களுக்குப் பிறகு வந்த தலைவர்கள் இந்த நிறுவனங்களுடாகவே வளர்ந்து அதன் மூலமாக முதிர்ச்சி பெற்றவர்கள். அவர்களால் அந்த ஐந்தாம், பதினேழாம் ஆண்டுகள் காலத்து நடைமுறையைப் பின்பற்ற முடியவில்லை. இதனால், கட்சியினுடைய ஒருமைப்பாட்டை (ஒருமித்த சிந்தனை அல்லது நிலைப்பாடு) என்பது, கட்சி நிர்வாகத்தினுடைய திணிப்பாக மாறுகின்றது. இது மிகவும் சுவாரசியமான முரண்பாடு. பிற்காலத்தில் சோவியத் அரசும் சோவியத் கட்சியும் இவ்வாறு ஏன் தனிநிலைப்பட்டன என்று சொன்னால் அது லெனினியம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதனால். பிழையை உண்மையிலேயே லெனினிலேயே போடலாம் போல இருக்கு. ஆனால், லெனினுடைய காலச்சூழல் வேறு. அவருடைய ஆளுமை இடம்பெற்ற சூழல் வேறு. அவர் நடந்த முறை வேறு. அந்த நடைமுறை பின்னர், கட்சிச் செயலாளர் விரும்புகிறார், கட்சி விரும்புகிறது என்கிற நிலைக்கு வந்துவிட்டது. இதனால் அந்த உள்கட்சி விவாதம் உண்மையில் இல்லை. அதன் பிறகு, இப்படியான ஒரு சூழல் ஏற்பட்டதற்கு, உலக-சர்வதேசிய நிலைமையும் காரணம். அதாவது, உலகயுத்தம், கெடுபிடிப்போர், கம்யூனிசத்தை ஒரு மிகவும் விரோதமான தன்மையில் பார்க்கும் முதலாளித்துவப் போக்குகள் இவை எல்லாம். இதனால் சோவியத் அரசு உண்மையில் சாதாரண முற்போக்கு நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுப்பதன்மூலம் ஒரு உலகப் பொதுவான அபிப்பிராயத்தை ஏற்படுத்த வேண்டிய தேவைகூட இருந்தது. குறிப்பாக இரண்டாம் உலக யுத்தத்தின் பிறகு 50, 60களில் அதனையே கொண்டு நடத்தவேண்டி இருந்தது. அப்போ இந்த முரண்பாடுகள் காரணமாக ஏற்பட்டது. மற்றது, அந்தந்த நாடுகளில் கட்சிகளினுடைய வளர்ச்சிகள் சோவியத் ரஷியாவோடு இணைக்கப்பட்டிருந்த முறைமையிலும் ஒரு பிரச்சினை இருந்ததென்று தான் நான் கருதுகிறேன். அவற்றினுடைய இயல்பான வளர்ச்சி சில இடங்களில் பிரச்சினைக்குள்ளாயிற்று. உதாரணமாக, பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்படமுடியாத சூழலிலும், அந்த அரசிற்கு சோவியத் அரசினுடைய ஆதரவு இருந்தது. இந்த மாதிரியான நிலவரங்கள் ஏற்பட்டன. இவை யாவற்றுக்கும் மேலாக ஒரு தொடர்ந்த அரசியற்கல்வி, எந்த அளவிற்குப் பயன்படுத்தப்பட்டது என்பது இன்னொரு கேள்வி. அதுதான், அதிலுள்ள ஒரு சிக்கல் என்னவென்று சொன்னால், அதன் பிறகு ரஷியாவினுடைய நிலைமைகள் மாறி செளகரியங்கள் எல்லாம் வரத் தொடங்கிய பிறகு, புரட்சிக்காகப் போராடியவர்களின் தலைமுறை போய்விட்டது. அப்ப, இந்த நிலைமைகள் காரணமாக சோவியத் அரசில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இவை நடந்து கொண்டிருக்கின்றபொழுது, உண்மையில் அது அரசில், குறிப்பாக அவர்களுடைய விவசாய விடயங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திற்று. விவசாயம் பிழைக்கத் தொடங்கியவுடன் இந்த நடைமுறை, நிர்வாகரீதியாக ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, ஒரு இயல்பான பொருளாதார, சமத்துவப் பொருளாதார வளர்ச்சிக்கு - சோசலிசப் பொருளாதார வளர்ச்சிக்கு - இந்த விதிகள் பிரமாணங்களே தடைகளாக இருந்தன.
உண்மையில் நம்பமாட்டாங்கள், நான் 72, 74, 76, 78களில் எல்லாம் போயிருக்கிறேன். நான் 80களில் போகவில்லை. அங்கு நாங்கள் ஒரு முறை போய் ஒரு தொழிற்சாலையில் கதைக்கின்றபொழுது, அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஒருவர், அவர் எங்களுடன் ரொம்ப நட்புடன் பேசுகிறபொழுது சொன்னார் சிலவேளைகளில் தங்களிற்குச் சிக்கல் இருக்கிறது, அடிக்கடி தலையீடு செய்கின்ற சுற்று நிருபங்கள் போன்றவையால். நிர்வாகத்துக்கு அப்படிப் பிரச்சினை இல்லை. அங்கு உணவுப் பிரச்சினை ஒன்று படிப்படியாக வளர்ந்துகொண்டு வருகின்றது, 70களின் பிற்கூற்றுகளில் இருந்து 80கள் வரை, பாணுக்கு கியூ, இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம். அதெல்லாம் வெறும் முதலாளித்துவப் பிரச்சாரங்கள் மாத்திரமல்ல, உள்ளுக்குள்ளேயே பிரச்சினையாகத் தொடங்கிவிட்டது. ஆனால் இவற்றினுடாடாக ஒரு சமத்துவம் இருந்தது. உண்மையான சமூக ஐனநாயகம் இருந்தது, கவலை என்னென்று சொன்னால் அந்த மேற்கத்தைய நாகரீகத்தின் பண்பு, அவைகளை எவ்வாறு எதிர்நோக்குவதென்பது அவர்களுக்குத் தெரியாமல் இருந்தது. நான் கஸாக்ஸ்தானுக்குப் போயிருக்கிறன், ஆர்மேனியாவுக்குப் போயிருக்கிறன். இப்படியான இடங்களிலை போய்ப் பார்த்த பொழுது, அந்த சோவியத் புரட்சி பற்றிய அரசியல் பிரக்ஞை எல்லா இடங்களிலும் சமமாக இருந்ததாகச் சொல்லமாட்டேன். அப்ப, இத்தகைய காரணங்களினாலதான் சோவியத் வீழ்ச்சி ஏற்பட்டதென்று நான் கருதுகிறன். சோவியத் வீழ்ச்சி, அந்தச் சிதைவு ஏற்பட்டதுக்கு அகக் காரணிகளும் உண்டு. புறக் காரணிகளோ உலகத்திற்குத் தெரிந்தது. அவர்கள் அந்த நிலைமையை அழிக்கவேண்டும் என்று நீண்டகாலமாகத் தொழிற்பட்டமை. ஆனால், ஒரு வெறும் சதி என்பதனால் மாத்திரம் இது ஏற்பட்டதென்று நான் கருதமாட்டேன்.
ய.ரா: மற்றது, ஒரு புரட்சி வந்து ஒரு கால கட்டத்தில் நடந்த பிறகு ஐனநாயக நிறுவனங்களை கட்டவேண்டியது ஒரு மிக முக்கியமான விடயந்தானே ? இவர்கள் ஐனநாயக நிறுவனங்களை கட்டுவதில் என்னமாதிரி நிலைப்பாடு எடுத்திருந்தார்கள், ஒன்று ? மற்றது இன்னொன்று, பெரும்பாலும் வரலாற்றுரீதியில் பார்த்தோம் என்றால் எந்த சமூக அமைப்புமே ரொம்பக் கெட்டி தட்டிப்போகும்போது அதிகாரம் வரும்போது அதற்கு முதல் குரல் எழுப்புபவனாகக் கலைஞன்தான் இருக்கிறான். அப்ப இந்தக் கலைஞர்கள் சம்பந்தமான ஒரு சகிப்புத்தன்மையும் இருக்கவேண்டிய சூழல் ஒன்று இருக்கிறது. சோவியத் யூனியனிலும் சரி, கிழக்கு ஐரோப்பிய நாடுகளும்சரி, புரட்சிக்குப் பிந்திய சமூகங்களிலும் சரி, இன்றைக்கு வரைக்கும் அந்தப் பிரச்சினை ஒன்றிருக்கு. இதனை மார்க்சிய வாதிகள் அல்லது புரட்சியாளர்கள் என்ன மாதிரி அணுகியிருக்கமுடியும் என்று நினைக்கிறீர்கள் ?
கா.சி: என்னுடைய நிலையில் இருந்து, ரொம்ப சூசகமாகத்தான், நான் அப்போது சொன்னதைத் திருப்பிச் சொல்ல விரும்புகிறேன். அதாவது, வரலாற்றுப் பாத்திரம் மாறத் தொடங்க, அரசின் வளர்ச்சி, அரச நிறுவனங்களின் வளர்ச்சி, கருத்துநிலையை நிலைநிறுத்துவதற்கான நடைமுறைகள் - இவை எல்லாம் படிப்படியாக ஒரு நிர்வாகமயப்படுத்தப்பட்ட விடயங்களாக மாறிவிட்டன. அப்ப இந்த நிர்வாகமயப்பாட்டுக்கு நடைமுறை வரலாற்று முன்னுதாரணம், - ரஷியப் பேரரசுடைய - உதாரணம் தான். என்னைக் கேட்டால், அடிப்படையில் சோவியத் வீழ்ச்சியினுடைய காரணமே அதுக்குள்ளைதான் இருக்கு. இதைப் புரிந்துகொள்ளேல்லை.
கோர்க்கி, செலக்கோவின் பின்னர் ஒரு இலக்கியப் படைப்பாக்கப் பாய்ச்சல் வரமுடியாமற் போனதற்கான ஒரு காரணம் இந்த நடைமுறைதான். இந்த நடைமுறைகள் இலக்கியத்தோடு அல்லது கலைஇலக்கியத்தோடு தொடர்பு கொண்டிருந்த முறைமையில் காணப்பட்ட பிரச்சினை. மூன்றாவது உலகநாடுகளில் இருந்த கலை இலக்கிய உணர்ச்சிகளைப் புரிந்துகொண்ட அளவுக்கு, அக்காலகட்டத்து சோவியத் ரஷியா அறுபதுகள் எழுபதுகளில் தங்களுடைய கலை வளர்ச்சிகளை - உள்ளுர ஏற்பட்ட வளர்ச்சிகளை - அது புரிந்துகொண்டதாக எனக்குப்படவில்லை. இதன் பின்னர் இந்த சீன-சோவியத் முரண்பாடு வந்ததுதானே, அது உண்மையில் அரசுகளின் முரண்பாடு. அது மார்க்சியத்தின் முரண்பாடென்று நான் எடுக்கமாட்டேன். ஆனால், அதை மார்க்சியத்தின் முரண்பாடாகத்தான் நாங்கள் கருதினனாங்கள். அப்ப, இந்தக் கலைகள் சம்பந்தமாக சிந்தனை முறைமைகளை எவ்வாறு உள்வாங்கிக்கொள்வது எவ்வாறு பார்ப்பது என்பது சம்பந்தமாக…. இப்ப, டோல்ஸ்டோயினுடைய இடம் என்ன என்பது பற்றி லெனினுக்குத் தெளிவிருந்தது. புஷ்கினுடைய இடம் என்ன என்பது பற்றிய தெளிவு அதற்குப் பின் வந்தவர்களுக்கு இருக்கேல்லை. அந்தக் கால கட்டத்திலை - நான் பேரை மறந்து போனன் - ஒரு இளம் கவிஞர் , அவரை நான் சந்திச்சுக் கதைச்சனான். ரொம்ப நீண்ட நேரமாகப் பேசினோம். அவர் வந்து கட்சியினுடைய வேலைகளைச் செய்கிறார், நிறைய இளம் எழுத்தாளர்களைச் சந்திக்கிறார். ஊடாட்டம் எல்லாம் இருக்கிறது. ஆனால் எந்த அளவுக்குப் புதிய சிந்தனைகளை அவர் கொண்டு வருகிறார், சொல்லுகிறார் என்பது…. ? அதில் ஊக்கம் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். அந்த ஊக்கம் ? இது ஒரு தவிர்க்கமுடியாத நிலைமையாக - அதைத்தான் நான் சொல்லுறன், நான் திருப்பித் திருப்பிச் சொல்வது என்னவென்றால் அந்த அரசினுடைய மேலாண்மை பற்றி அடிப்படையாக, நான் என்ன சொல்லுறன் என்றால், சுருக்கமாகச் சொல்லுறனே, நான் கிராம்ஸியை இங்க பொறுத்திப்பார்க்க விரும்புறன். சோவியத் ரஷியாவில், எங்கை நாங்கள் பிழைபோச்சுது எண்டிறதைப் பாக்கிறத்துக்கு, இந்த கலாச்சார மேலாண்மை எல்லாம் பார்ப்பம். எங்கை பிரச்சினை வந்ததெண்டு பாக்கிறத்துக்கு நாங்கள் கிராம்ஸியை சோவியத் ரஷியாவுக்கு பொறுத்திப் பார்க்கலாம்.. சோவியத் ளவயவநமுக்கியமா ? சோவியத் அரசு தன்னுடைய கருத்துநிலையை நிறுவுவதற்கான முக்கிய மையங்களாக ஊடகங்களாகக் கொண்டவை எவை ? அவற்றினுடைய அமைப்பிலுள்ள பிரச்சினைகளை. அப்படிப் பாத்தமெண்டு சொன்னா இந்தப் பிரச்சினை இல்லாமப் போகும்.
ய.ரா: அப்துல்லா ஒச்சலான் சோசலிசத்தின் இன்றைய வீழ்ச்சி சம்பந்தமாக ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அதிலைகூட இந்த சோவியத் யூனியனுடைய வீழ்ச்சிக்கு மிக முக்கியமான ஒரு காரணம், ஒரு ‘ஸ்பிரிச்சுவல் கல்ச்சர் ‘ ‘டெவலப் ‘ பண்ணுறதிலை அது ஒரு மிகப் பெரிய பிழை விட்டிருக்கிறது என்கிறார். உதாரணமாகப் பார்த்தீர்கள் என்றால் மதம், மற்றது சடங்குகள், மரபு சார்ந்த இந்த விஷயங்களில் வந்து ஒரு கெட்டி தட்டின ஒரு நிலைப்பாட்டை அது கொண்டிருந்தது என்றும் மற்றது இன்னொன்று தனக்கே உரிய ‘சோசலிஸ்ட் ஸ்பிரிச்சுவல் கல்ச்சர் ‘ ஒன்றை மாற்றாக உருவாக்கத் தவறியது என்றும் ஒரு விஷயத்தை அவர் சொல்கின்றார்.
கா.சி: அது ரொம்ப சுவாரசியமான ஒரு விஷயம். என்னென்று சொன்னால் 74, 76களில் நடந்த ஆசிய ஆபிரிக்க எழுத்தாளர் மகாநாட்டிலை, ஆர்மேனியாவில், கவியரங்க அம்சம் நடந்தது. அப்ப தமிழ்க் கவிதைகள்பற்றி நான் வாசித்தபோது அங்கு இந்த பிரச்சினை வந்தது. ‘ஸ்பிரிச்சுவல் டெவலப்மென்ட், ‘ மற்ற ‘லிட்டரேச்சர் அண்ட் ஸ்பிரிச்சுவல் டெவலப்மெண்ட். ‘ இந்த முரண்பாடு ஒன்று இருக்கு. அது ‘ஸ்பிரிச்சுவல் ‘ என்று சொன்னவுடனே ஆத்மார்த்தமான வளர்ச்சி. அந்த ஆத்மார்த்தமான வளர்ச்சி என்கிறது எங்களுக்கு மதம்சார் வளர்ச்சியாகத்தான் இருக்கிறது. நாங்கள் இப்போதும் அதை அப்படித்தான் பார்க்கிறோம். அது ‘ஹூயுமன் ஸ்பிரிட் ‘டினுடைய வளர்ச்சி, அதனுடைய தன்மைகள், ‘ஸ்பிரிச்சுவல் ‘ என்பதற்கு ஒருமானுடப் பரிமாணம் இருக்கிறது என்கிற அந்த வரையறை எங்களுக்கும் வரேல்லை அங்கையும் போகேல்லை. சரீங்களா ? ஏன் நான் அந்த எழுத்தாளர் மகாநாட்டைப்பற்றிச் சொல்லுகிறேன் என்று சொன்னால், நாங்கள் அந்த பிரச்சினையை அங்கை எழுப்புறோம்.. உங்களுக்கு ‘ஸ்பிரிச்சுவல் ‘ என்றால் நீங்கள் எழுபது வருஷ, அறுபது வருஷ புரட்சி அனுபவத்தோடு இருக்கிறீங்கள். எங்களுக்கு ‘ஸ்பிரிச்சுவல் ‘ என்றால் வேறை அர்த்தம். பிரெஞ்சிலை இப்படிச் சொல்லுகிறார்கள், இதை எப்படிப் பார்க்கிறதென்று நான் கேட்டன்.
உண்மையிலேயே நம்பமாட்டாங்கள், பலருக்கு அது சிக்கலாக இருந்தது. ஒரு பெண்வந்து என்னோடை பேசினாங்க, அந்த மாநாடு முடிஞ்ச உடனை. அவ சொன்னா நீங்க சொன்னது பல விஷயங்களிலை இருக்கு. நாங்கள் அந்தத் தன்மைகளை வளர்த்தெடுக்கவில்லை. இதற்குக் காரணம் என்னவென்று சொன்னால் அவங்க மதம்சார் மரபையும் கலாச்சாரம்சார் மரபையும் விளங்கிக்கொண்டமுறை. அப்போ, இதனாலைதான் ஜரோப்பிய பண்பாட்டுக்குள்ளேயே கம்யூனிசமும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வளர்ந்த முறைகளில் நாங்கள் பல வேறுபாடுகளைக் காண்கிறோம். இத்தாலிக் கட்சிக்கு ஒரு வளர்ந்த முறைமை இருக்கு. பிரெஞ்சுக் கட்சிக்கு ஒரு வளர்ந்த முறைமை இருக்கு. வித்தியாசமானது. நிச்சயமாக வித்தியாசமானது. அதுக்குள்ளாலைதான் ஒரு அல்துாஸர் வரமுடியும். வெளிப்படையாகப் பேசமுடியும். இந்தப் பாரம்பரியம் ஏன் ரஷிய அரசிலை இல்லாமற் போனது ? அப்ப என்னெண்டு சொன்னால், நான் நம்புறன் அந்த அரசு அமைப்புநிறுவனமயமாதல் தன்மை ஆகிட்டுது. அதுதான் அடிப்படை. எல்லாமே அப்படி நடந்துகொண்டு போறபொழுது அந்த நிறுவனஇறுக்கமாதல்- அது வந்தவுடன் யார் நமக்குச் சார்பாகப் பேசுகிறார்கள் என்பது முக்கியமாகின்றதே தவிர, யார் நம்மைக் கேள்விக்குட்படுத்தவில்லையோ அது முக்கியமாகின்றதே தவிர, யார் அடிப்படைக் கேள்விகளைக் கிளப்புகிறார்களோ அது முக்கியமாகப்படாமற் போகின்றது.
ய.ரா: மற்றது நாங்கள் பெரும்பாலும் சோசலிசத்தின் வீழ்ச்சிபற்றிப் பேசும்போது ஐனநாயக நிறுவனங்களைக் கட்டியமைப்பது சம்பந்தமான கேள்வி கூடவே வருகின்றது. அப்படி வரும்போது என்னென்னு கேட்டாங்கன்னா ஐனநாயக நிறுவனங்களைக் கட்டுவதென்பது ஒன்று அரசியல் சுதந்திரத்துடனும் தனிநபருடைய பொருளியல் சுதந்திரத்தோடையும் சம்பந்தப்பட்ட விஷயம். இப்ப இந்த சோவியத் யூனியனுடைய கிழக்கு ஜரோப்பிய நாடுகளுடைய வீழ்ச்சிக்குப் பிறகு ஒரு நவ தாராளவாதத்தின் பாலான ஒரு ஈர்ப்பு எல்லா இடதுசாரிகளுக்குமே வந்திருக்கு. உதாரணமாக லத்தீனமெரிக்க விடுதலை இயக்கங்கள் பெரும்பாலும் அந்த நவ தாராளவாதத்தைத் தழுவிக் கொண்டிருக்கின்றன என்றுதான் பெரும்பாலான ஆய்வாளர்கள் எழுதுகிறார்கள். நவ தாராளவாதம் அத்துடன் பின்நவீனத்துவம் சம்பந்தமான விவாதங்களும் வரும்போது ஒரு தனிநபருடைய அரசியல் பொருளியல் உரிமைகளோடு இந்த வித்தியாசங்கள் என்று சொல்வதை அங்கீகரிப்பது என்று இணைத்துக் கொண்டால் ஒரு சாத்தியமான எதிர்காலத்திற்கான ஐனநாயக அமைப்பை உருவாக்கமுடியும் என்பதுபோல் சொல்கிறார்கள்.
கா.சி: அதிலைதான் அடிப்படையில் இருந்து தொடங்க விரும்புகிறேன். அதாவது வந்து, என்னைப் பொறுத்தவரையில் சோசலிசத்தின் வீழ்ச்சி என்று நீங்கள் ஒரு சொல்லுப் பாவிக்கிறீர்கள்தானே. அதை நான் எப்படிச் சொல்லுவேன் என்று சொன்னால் சோசலிசப் பரீட்சார்த்தங்களின் வீழ்ச்சி அல்லது சிதைவு. இதை நான் சோசலிசத்தின் வீழ்ச்சி என்று எடுக்கிறதற்கு இன்னும் ‘ரெடி ‘யாகவில்லை. அந்த சோவியத் அனுபவம் - சோவியத் சோதனை- அதிலை ஏற்பட்ட பிரச்சினைகளுக்கும் அவைகள்தான் ‘சோசலிசம் ‘ என்று அல்ல. பிற்காலத்தில் என்ன ஆகிவிட்டதென்று சொன்னால், சோவியத் சோதனை முயற்சியில் காணப்பட்ட அம்சங்கள் அத்தனையும் சோசலிசத்தினுடைய அம்சங்களாக எடுக்கப்பட்டது. அதை நான் வன்மையாக எதிர்க்கிறேன். சோவியத் நாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள், சோவியத் நாட்டில் ஏற்பட்ட மாற்றங்களுக்கான மார்க்சிய நிலைப்பட்ட காரணங்கள் - இதுகளுக்கு நான் திருப்பித் திருப்பிப் போக விரும்புவதற்கான காரணம்- அரசியல- அரசியல் பொருளாதாரப் பிரச்சனைகள் என்னென்று சொன்னால் அங்கு நடந்த சோசலிச முகாமைத்துவம், சோசலிச அரசு நிர்வாகமுறை-. அதிலை இருந்த பிரச்சினைதான்.
இது எந்தளவிற்கு அந்த அடிப்படையான வாதத்தைப் பிரச்சினைப்படுத்துது என்கிறது இன்னொரு கேள்வி. சீனாவிலும் அந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்கு. அது இன்னொரு விதமான பிரச்சினை. அது முற்றிலும் இன்னொரு பண்பாட்டுச்சூழலில் ஏற்பட்டது. சரியோ பிழையோ இதற்குள் தாக்குப் பிடிச்சுக் கொண்டிருக்கிற கியூப சோசலிசம் கியூப சோதனை என்று ஒன்றிருக்கு. கிழக்கு ஜரோப்பிய அனுபவங்கள் அதனால் ஏற்பட்ட சிதைவுகள் எல்லாம் இருக்கு. இவை எல்லாம் ஒரு புறம் இருக்க இந்தியாவிலை ஒரு பாராளுமன்ற ஐனநாயக அமைப்புக்குள்ளை மிகத் திரிபுபட்ட அல்லது மிகவும் வெவ்வேறுபட்ட சூழலில் வங்காளத்தில் ஒரு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி இருக்கு. 15 வருஷமாக அல்லது இருபது இருபத்தைஞ்சு வருஷமாக இருக்கு. கேரளாவிலை அதைச் செய்யமுடியுது. சோசலிசத்தைப்பற்றிய எங்களுடைய பார்வை இவை எல்லாவற்றையும் உள்ளடக்கவேணும். சோசலிசத்தினுடைய எதிர்காலம் பற்றிய நடைமுறைகள் அதனுடைய சோதனை அம்சங்கள் எல்லாத்தையும் நான் ஒரு புறத்திலை கியூப சோதனை இன்னொரு புறத்திலை ேஐாதிபாசு இன்னொரு புறத்திலை காலஞ்சென்ற நம்முடைய ஈ. எம். எஸ். என். அதொரு முக்கியமான சோதனை முயற்சி. அது பூரண கம்யூனிஸம் அல்ல. இருந்தாலும் அது முக்கியமான சோதனை. அதே நேரத்தில் சோவியத் யூனியனில் நடந்தவை. அவைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி எடுத்துப்பார்க்கிற பொழுது இந்த மார்க்சிய பொருளாதார முறைமைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சில சிக்கல்கள் நமக்குத் தெரிய வரும். இந்த நவ தாராளவாதப் போக்கு என்று சொல்லப்படுகிற இந்த முறைமை எங்களைப் பழையபடி, நான் நம்புறன், நாங்கள் இந்த விவாதங்கள் எல்லாத்துக்குள்ளாலையும் விடுபட்டுப்போயிருக்கிற ஒரு மார்க்சியச் சிந்தனையாளரிடம் எங்களைக் கொண்டு செல்லவேண்டும் என்று நான் நினைக்கிறன். அவருடைய சிந்தனையை அனுதாபரீதியாக எந்தக்காலத்திலும் முன்னர் பார்க்காதவன் என்கிற வகையில் - ட்ரொட்ஸ்கி. எனக்கு ட்ரொட்ஸ்கி இப்ப சில விஷயங்களை, நாங்கள் ட்ரொட்ஸ்கியத்தை மிகவும் ஆழமாகப் பார்க்கவேண்டும் என்று நினைக்கிறன். நுிரந்தரப் புரட்சி என்னும் கருத்தாக்கம்-அந்த விஷயத்தை நாங்கள் கொஞ்சம் ஆழமாகப் பார்க்கவேணும். இப்ப கலாச்சாரம் பற்றியும் இலக்கியம் பற்றியும் ட்ரொட்ஸ்கி சொன்ன விஷயங்களை இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்க்கவேணும் போலை இருக்கு. இதனாலைதான் நான் சொல்றனான் சோவியத் அரசினுடைய வளர்ச்சியினுடைய ஒரு முதல் பலிக்கடாவாக ட்ரொட்ஸ்கி போய்விடுகிறார். சரீங்களா ? அப்ப இவற்றினுடாடாக நாங்கள் வளருகிற தன்மையை நாங்கள் காணுகிறோம். இப்ப நீங்கள் சொல்லுகிற இந்த நவ தாராளவாதம் வந்து ஒரு ஜரோப்பியச் சூழலில்தான் பேசப்படுகிறது. இந்த நவ தாராளவாதம் மூன்றாம் உலக நாடுகள், இல்லை என்று சொன்னால் சீனா தவிர்ந்த ஆசிய நாடுகளில் எந்த அளவிற்குப் பொருத்தமானது என்பது இன்னொரு விஷயம். அதுபற்றி நாங்கள் மிக நுணுக்கமாக ஆராயவேண்டிய தேவை இன்னும் இருக்கென்றுதான் நான் நினைக்கிறன்.
இதுக்குள்ளை என்ன விஷயம் என்று சொன்னால், அதுதான் அடிப்படையான முதலாளித்துவத்தின் தன்மை அறுபதுகளின் பின்னர் உருத்தெரியாமல் மாறியது. முற்றமுழுக்காக மாறியது. ஏர்னஸ் மேன்ட்டல் வளர்ச்சியடைந்த முதலாளித்துவம் அல்லது பிற்கால முதலாளித்துவம் எனும் வாதத்தை வளர்ததெடுக்கிறார். அவர் வைக்கேல்லை சோவியத் எதிர்பார்ப்புகள் மாதிரிஅல்லது , அரசுகளின வீழ்ச்சி எல்லாம் வருகுது என்ற மாதிரி.
நாங்கள் அதைத் தவறா இணைச்சிட்டம். முதலாளித்துவத்தின் உள்ளுறை சக்தியை நாங்கள் புரிஞ்சு கொள்ளேல்லை. அதனுடைய சாத்தியப்பாடுகளை அதனுடைய ஆற்றல்களை நாங்கள் புரிஞ்சு கொள்ளேல்லை. சரீங்களா ? அப்ப, அது, இந்த மார்க்சியத்தினுடைய சில முக்கியமான அம்சங்களை உள்வாங்கி அது தன்னை நிலைப்படுத்திக் கொண்டுது. சரி. அப்ப நாங்கள் இப்ப வர்க்கம் அப்பிடி என்று பார்க்கேக்கை, ஒரு நெருக்கடி வருகிறபொழுது பாருங்கோ எங்களுடைய பழைய வரையறைகள் எல்லாம் சரியா எண்டு பார்க்கணும். அது அவசியம் எண்டு நான் கருதுறன். அப்பிடிப் பார்க்கிற பொழுதுதான் நாங்கள் ஏற்கனவே சில மார்க்சீய வகைத்திணைகளுக்குக் கொடுத்த வரையறைகள் எல்லாம் ஒரு காலச்சூழலில் கொடுத்த வரையறைகள்தான். ஒரு குறிப்பிட்ட அரசியல் பொருளாதார ஓட்டப் பின்னணியில் கொடுத்த வரையறைகள்தான். அதை எல்லாம் மாறிப் பார்க்கவேண்டி இருக்கிறது.
இன்றைக்குள்ள நவ தாராளவாதம்கூட முதலாளித்துவத்தினுடைய தன்மைகள் காரணமாக மாறியிருக்கு. இப்ப ஒரு ஓற்றதை¢துருவ உலகு-. ஒரு பெரிய கலாச்சாரத்தை முதன்மைப்படுத்திப் பார்க்கிற தன்மை இவைகள் எல்லாம் முக்கியமா இருக்கு. வடிவாப் பார்க்கலாம் இந்தக் கால கட்டத்திலை மேலுக்கு வந்திருக்கிற அறிவுத்துறைகளைப் பாருங்கோ. நிர்வாகவியல் வந்திருக்கு, கலாச்சார ஆய்வுகள் வந்திருக்கு. இதெல்லாம் முக்கியமான விஷயங்கள். கடந்த 10, 20 வருடங்களுக்குள் நடந்த அறிவியற்துறை மாற்றங்கள் அல்லது அறிவுத்துறை மாற்றங்கள். இப்படிப் பார்க்கிறபொழுதுதான் இந்த நவ தாராளவாதம் என்று பார்க்கிற தன்மை ஜரோப்பிய மரபில் உண்டு. அந்தப் பார்க்கிற முறைமை இல்லாததன் காரணமாக, ஜரோப்பாவின் கம்யூனிச வளர்ச்சிக்கு பாதகங்கள் ஏற்பட்டது என்பதும் உங்களிற்குத் தெரியும். அதனால்தான் அல்து‘ாஸர் போன்றவர்கள் எல்லாம் புதிய சிந்தனை முறைமைகளைத் தோற்றுவித்தார்கள். துரதிர்ஷ்ட வசமாக என்னவென்றால் நாங்கள் மார்க்சியத்தினுடைய மார்க்சியதர்க்கம் அதுக்கு ஒரு தர்க்கம் மார்க்சீய தர்க்கம் என்று ஒன்று இருக்கு. மார்க்சீய தர்க்கத்தை மார்க்சியம் இடைக்காலத்தில் தவறவிட்டுவிட்டது. நாங்கள் மற்றபடி அந்த தர்க்கத்தைப் மீட்டெடுக்க வேணும்..
- தொடரும்
நன்றி : உயிர் நிழல்: மார்ச்-ஏப்ரல்: பிரான்ஸ் :2000. e-mail : EXILFR@aol.com. உயிர் நிழல் நேர்முகத்திலிருந்தான ஆங்கில வாக்கியங்கள் இந்த வடிவத்தில் முழக்க தமிழில் மாற்றப்படடிருக்கிறது. திண்ணைக்காக வாசிப்புக்கருதி மொழியமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. மறுபிரசுரத்திற்கு அன்புடன் அனுமதியளித்த உயிர் நிழல் ஆசிரியர்கள் லமி கலைச் செல்வன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றி உரியது.
Thinnai 2000 July 02
4. humanwatch on November 16, 2007 12:20 pm
MARX AFTER MARX மார்க்ஸூக்குப் பின்னான மார்க்ஸ்
பேராசிரியர் கா. சிவத்தம்பியுடன் யமுனா ராேஐந்திரன் உரையாடல்
ய.ரா: மற்றது நீங்க அல்துாஸர் என்று சொன்னபோதுதான் ஞாபகம் வருகின்றது என்னவென்றால் அல்துாஸர் பற்றிச் சொல்லும்போது சொல்வாங்கள், அவர் வந்து மனிதமுகத்துடன் சோசலிசம் என்ற பிரச்சனை குறித்துத்தான் தனது எதிர் வாதங்களை முன்வைத்தார் என்று.. கிழக்கு ஜரோப்பிய நாடுகளுடைய பல்வேறு நாடுகளிலும் மூன்றாவது வர்க்கம் என்று சொல்லப்படுகிற, அதிகார வர்க்கத்திற்கு எதிராக ஒரு மனிதமுகத்துடன் சோசலிசம் என்ற அந்த போக்குக்கு எதிராகவும் அதேசமயத்திலை ஸ்டாலினியத்திற்கும் இடையிலை ஒரு பாதை போட முயன்றவர் என்று சொல்கிறார்கள். அது பெரும்பாலும் இந்த வன்முறை சம்பந்தமான விஷயங்களைப் பொறுத்துத்தான் அவர் அந்தமாதிரி ஒரு கண்ணோட்டத்தை கொள்கிறார். அப்ப பார்த்தீங்கள் என்றால் சமூக மாற்றத்திலை வன்முறை அதற்கடுத்து மனிதகாரணமே.
கா.சி: நான் மிக மிக ஆழமாக மனித காரணி வளர்ச்சி பற்றி பார்க்கலாம் என நினைக்கிறேன். இதுகூட சிலர் சொல்லலாம் மானுடம் என்கிறதுகூட காலத்துக்குக் காலம் வரையறை பண்ணப்படுகிறபொழுது எது மானுடம் எது மானுடம் இல்லை என்பதுபோல் வரையறை பண்ணப் படுகின்ற பொழுது மானுடம் என்கிறதில் வித்தியாசம் இருக்கும் என்று. இருந்தாலும் மனித உந்துதல், மனித நிலைப்பட்ட உந்துதல், இது எனக்கு பிரதானமாகப் படுகிறது.
உண்மையில் அல்துாஸரோடை எனக்குள்ள பிரச்சினை என்னவென்றால் அந்த மனித உந்துதல்கள் எல்லாவற்றையும் அவர் கணக்கெடுத்துக் கொள்ளேல்லை என்பதுதான், அப்படித்தான் சொல்வார்கள். ஆனால் அந்த ஜரோப்பியச் சிந்தனை மரபிலை ஒரு முக்கியமான மாற்றத்தை அவர் ஏற்படுத்தினார். அதாவது அமைப்பியல அடியாக வந்த அந்த மாற்றத்தை ஏற்படுத்தினார். இன்றைய காலகட்டத்தில் இந்த மனிதகாரணி சம்பந்தமான விடயங்கள் படிப்படியாகக் குறைந்துகொண்டு போகின்றன. இந்த வன்முறை வருவதற்கு ஒரு காரணமே, ஒரு புரிந்துணர்வோடு தொழிற்படக்கூடிய சூழல் இல்லை என்கிறது ஏற்படுகின்ற பொழுதுதான் வன்முறை ஒரு வழிமுறையாக வருகின்றது. அது ”ஏ” யிடம் மாத்திரமல்ல ”பி” யிடமும் இல்லாமற்போகும். அப்போ, இதனை எவ்வாறு கொண்டு வரலாம் என்பது கேள்வி. இது நான் நம்புறன், ஒரு நிரந்தரமான மானுடப்பிரச்சனை. இந்த இடத்திலைதான் இந்தப் பண்பாடுகள் முக்கியமானவை. பண்பாடு என்பது எத்தனையோ காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்ற ஒன்று. அப்படி என்ற ஒன்று இல்லை, இதை மிகைப்படுத்திப் பார்க்கக்கூடாது என்கிற வாதமும் இருக்கு. அதை நான் ஏற்றுக்கொள்ளுறன். சுருக்கமாகச் சொன்னால், ஒரு நேர்கோட்டுவாதத்தை நான் ஏற்றுக்கொள்ளேல்லை. நாங்க நேர்கோட்டுவாதத்திலும் பார்க்க அது சிக்கற்பாடானது சரீங்களா ? ஆனால் அதே நேரத்திலை நாங்கள் கீறின கோடுகளெல்லாம் ஒவ்வொரு திசையில் போய் அங்கை அங்கை போய் நிண்டிட்டுது எண்டு சொன்னால் அதனாலை யாருக்கும் பிரயோசனமும் இல்லை.
அறிவின் ஒருமைப்பாடு முக்கியம். அப்பதான் மனித முயற்சிக்கே ஒரு இலக்கு இருக்கும். அந்தச் சிந்தனை மரபு வரவேணும். அப்ப எங்களுக்கு என்ன தேவை என்று சொன்னால் இப்ப, ஒரு ஹெகலுக்குப் பிறகு மார்க்ஸ் வந்தது மாதிரி மார்க்ஸ்க்குப்பிறகு வரப்போகிற சிந்தனை என்ன, மார்க்சியத்தை உள்வாங்கி மார்க்சியத்தின் தளத்தில் நின்று கொண்டு, உலக வளர்ச்சிகளை உள்வாங்கி வரப்போகிற சிந்தனை என்ன ? After Marx what ?
என்னென்றால், இதெல்லாம் மதங்கள் மாதிரி இல்ல, அவரோடை இந்தச் சிந்தனை மரபு போறதுக்கு. மார்க்சுக்கு அப்பால் என்ன ? மார்க்ஸ் தன்னுடைய காலகட்டத்திற்கேற்ற மிக முக்கியமான விஷயங்களைப்பற்றி ஆராய்ந்தார். ஆனால் நாங்கள் அந்த தர்க்கத்தில் இருந்து அங்காலை போறம். படிப்படியாக அங்காலை போறபொழுது அங்க ஒரு உலகம இருக்கு ஒரு வளர்ச்சி இருக்கு. அதற்கு அங்காலை ஒரு பிரச்சினை இருக்கு. அது, மார்க்ஸ் சொன்னவைகளெல்லாம் சில இடங்களிலை சரியாயிருக்கு சில இடங்களிலை சரிவரலை.. சரியோ ? நாங்கள் மார்க்ஸை ஒரு யுதயா மரபில் உள்ள தீர்க்கதரிசியாப் பார்க்கேல்லை. ஒரு காரணமுடைய உடைய ஒரு காரண காரியத்தொடர்போடை விளக்குகிற அறிவுபூர்வமான ஒரு சிந்தனைப் பகுப்பாய்வாளர் என்கிற முறையிலைதான நாம அவரப் பார்க்குறம்..
அப்ப இதற்கு மேலை நாங்கள் பார்க்கப்போறது என்னெண்டால், ஒரு குறிப்பிடட எல்லைக்கு மேல என்ன என்கிறதுதான். நான் நம்புறன், அந்த வளர்ச்சிநிலை இந்த விஷயங்கள் எல்லாத்தையும் கணக்கெடுக்க வேண்டி வரப்போகுது என்றுதான் நான் நினைக்கிறன்.
ஆனா இதுக்குள்ளை ஒண்டு, நாங்கள்… இதுக்குள்ளை இன்னொரு விஷயம் இருக்கு ராேஐந்திரன். என்னெண்டால் இப்ப பிரச்சினைகளுடைய அழுத்தங்கள் வெவ்வேறுபட்டது. வித்தியாசங்கள் வேறுபட்டது. இதிலை உள்ள சோகம் என்னென்றால் சோகமோ அல்லது மாற்றத்தினுடைய தன்மைகள் என்னென்றால் நாங்கள் சில இடங்களிலை போய் மாட்டுப்படுகிறமோ என்கிற சந்தேகம் எனக்கு வருகுது. என்னெண்டால் இன்றைய சிந்தனைப் போக்கு மரபுகளின்படி அடிப்படை மனித ஒற்றுமையை ஒருமைப்பாட்டை வற்புறுத்துகிற நோக்குகளிலும் பார்க்க அடிப்படை மனித வேற்றுமைகளை வலியுறுத்துகிற சிந்தனை மரபொன்றிருக்கு.
ய.ரா: அதாவது இந்த பின்நவீனத்துவம் பற்றிச் சொல்றீங்கள் ?
கா.சி: அப்ப, அந்த வேற்றுமைகளை உணராமல் ஒருமைப்பாட்டை கட்டியெழுப்பமுடியாது என்ற அளவிலை இது மிக முக்கியம். ஆனால் இந்த வேற்றுமைகள்தான் முக்கியம் எண்டு சொன்னால் ஒரு அடிப்படை ஒருமைப்பாடும் இல்லாமல் போய்விடும். அந்த அடிப்படை ஒருமைப்பாடு இருக்கவேணும் என்கிறதுக்காக ஒரு நேர்கோடு போட்டுச் சொல்லுறதை நாங்கள் எவ்வளவுத்துக்கு எதிர்க்கிறோமோ அதேபோல இந்தப் பன்முகப்பாடான பார்வைகள் ஒவ்வொன்றும் போய் ஒவ்வொரு திசையிலை செத்துப்போச்சு என்றால் அதுக்கு அங்காலை போகமுடியாத பாதைகளாக மாறிவிடாமல் இவையெல்லாம் எங்கோ ஒரு இடத்திலை சந்திக்கிற புள்ளி இருக்கவேணும். புின்நவீனத்துவத்தில நான் காணுறது அதுதான்.
ய.ரா: உங்கடை பார்வையைத்தான், டெர்ரி ஈகிள்டனும்- இதேபார்வையைத்தான் பகிர்ந்துகொள்கிறார்.
கா.சி: உண்மையிலை நம்பமாட்டாங்கள். நீங்கள் சொன்னா என்ன மாதிரி நினைக்கிறீங்களோ தெரியாது. ரொம்பக் கிட்டடியிலைதான் டெர்ரி ஈகிள்டனை இது சம்பந்தமா வாசிச்சன். வாசிச்ச உடனை என்ன பண்ணுறதென்றே எனக்குத் தெரியேல்லை (ஆச்சரியத்துடன்)
ய.ரா: நான் நினைக்கிறன், மார்க்சியத்தின் மீதான ஒரேவிதமான விமர்சனத்திலை இருந்து வருகுதெண்டு நினைக்கிறன்.
கா.சி: மற்றது நான் அன்றைக்கு லண்டனிலை இன்னுமொரு புத்தகம் பார்த்தன். நான் எப்பவுமே இந்த கலைகளுடைய தன்மைபற்றி மார்க்சியக் கண்ணோட்டத்திலை பேசிக்கொண்டு போறபொழுது ரோஷனோவினுடைய பார்வையை- அன்றைக்குத்தான் அவருடைய கருத்தைப் பார்த்தேன். எனக்கு அவரைப்பற்றி அதிகம் தெரியாது. யுதார்த்தத்தை அறிதல் என்பது பற்றி அவர் எழுதியது- யதார்த்தத்தைப்பற்றிய நம்முடைய அறிகை. இதை நான் அடிக்கடி வகுப்புகளிலை கூடச் சொல்லுறது. அதாலை நான் நம்புறன், மற்றது, ஒரு சிந்தனை முறைமை என்பது எனக்கு மாத்திரம் உரியதோ அல்லது இன்னொருவருக்கு மாத்திரம் உரியதோ அல்ல. இந்த விஷயத்திலை ஓடிக்கொண்டு போனா எல்லாரும் சிந்திப்பாங்க எண்டுதான் நம்புறன். புின்நவீனத்துவத்திலை எனக்குள்ள சிக்கல் இதுதான். என்னெண்டு சொன்னால் அது அங்கே முடியப்போறதில்லை.அங்கேயும் வித்தியாசம் இருக்கும் அந்த வித்தியாசத்துக்குப்பிற்பாடு என்ன ? அதற்கு அப்பாலை என்ன ? அதற்கு அங்காலை எங்கை போறம் ?
அது நான் நம்புறன், மார்க்சியத்தினுடைய உள்தர்க்கத்தை. அந்த தர்க்த்தை நான் ஏற்றுக் கொள்கிறன். அப்பிடிப் பார்க்கிறபொழுது புதிய ஒரு வளர்ச்சி ஒன்று வரும். பாருங்கோ உண்மையிலை இதை நாங்கள் காணுகிறம். 18ம் நுாற்றாண்டு பகுத்தறிவு 19ம் நுாற்றாண்டிலை வேற மாதிரி பகுத்தறிவு வந்து எல்லாத்தையும் மறுதலிச்சுது. மதம் என்கிறதே இல்லை எண்டுது. அப்பதான் மதம் என்கிற பொருள்முதல்வாதம் என்கிற வாதம் வந்தது. நாங்கள் பொருள்முதல்வாதத்தை ஏற்றுக் கொள்கிறம். ஆனால் அதற்குள்ளை உள்ள ‘ஸ்பிரிச்சுவலிஸம் ‘ என்கிறதுக் குத் தமிழிலை இன்னும் ஒரு சொல்லே இல்லை அது தெரியுமா ? சொன்னா ஆன்மீகவாதம் என்றுதான் சொல்லவேணும். அப்பிடிச் சொல்லக்கூடாது. இதுக்காக நான் உயிர்ப்புநிலை என்றுகூட ஒரு சொல்லு வைச்சிருக்கிறன். நான் பயன்படுத்திற சொல் உயிர்ப்புநிலை தான். ‘ஸ்பிரிச்சுவலிஸம் ‘ என்று நான் மொழிபெயர்ப்பது அவர்களுடைய உயிர்ப்புநிலை, உயிர்நிலை. அந்த உயிர்ப்புநிலைதான் எங்களுக்கு முக்கியம். அது வந்து ஆன்மீகமாக இருக்கலாம் அல்லது ஆன்மீகம் இல்லாமல் இருக்கலாம். அது எங்கை, சித்த மரபில் இருந்தது. அவன் கோவிலை நிராகரிச்சான்.. ஆனால் அவனுக்குள்ளை ஒரு உயிர்ப்புநிலை இருந்துது. இந்தமாதிரிப் பார்க்கிற பொழுதுதான் உயிர்ப்புநிலை எங்களுக்கு ரொம்ப முக்கியமாகிறது. ஆதனால பின்நவீனத்துவத்தல உள்ள மிக முக்கியமான பிரச்சினை என்னவென்று சொன்னால் அது இதற்கு அங்காலை போகவேணும். ஒவ்வொரு காலகட்டத்திலையும் அந்தச் சிந்தனை மரபுகள் மாறிக்கொண்டு வரும். அப்பிடித்தான் நான் நம்புறன்.
ய.ரா: மற்றது இப்ப இன்னொரு விவாதம் ஒண்டிருக்கு. கெடுபிடிப் போர்காலகட்டத்தில இருந்த முக்கியமான உரையாடல் என்னவென்றால், இப்ப அந்தக் கால கட்டத்திலை வந்து சோசலிசம், கம்யூனிசம் என்ற முரண்பாட்டை வைத்துக்கொண்டு ஏகாதிபத்தியம் வந்து தன்னுடைய செய்திகளை நியாயப்படுத்திக்கொண்டு இருந்தது. ஆனா அதே சமயத்திலை ஒரு உரையாடல் ஒன்று அப்ப இருந்தது, என்னென்று கேட்டார்கள் என்றால் மனித உரிமை என்கிற உரையாடல். அப்ப சோசலிசத்தின் மேல் முன்வைக்கப்பட்ட பிரதான குற்றச்சாட்டு என்னவென்றால், சோசலிச சமூகம் மனித உரிமை அற்ற சமூகம் என்றமாதிரித்தான். இப்ப அதுக்குப் பிறகு பார்த்தீங்கள் என்றால் இந்த மனித உரிமை பிரச்சனையை நாங்கள் கையிலை எடுத்து அதாவது உண்மையிலேயே மனித உரிமையின்மேல் அக்கறை உள்ளவர்கள் கையில் எடுத்து ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இதைப் பாவிக்கமுடியும் என்கிற ஒரு சூழல் இப்போது உருவாகி வருகிறது. இப்ப என்னென்டால், சிலி சர்வாதிகாரி பினோஷேயை நான் நினைக்கிறன், ஒரு 10 வருஷத்துக்கு முன்னாடி வந்து, இந்த மாதிரி ஒரு கோர்ட்டிலை கொண்டு வந்து நிறுத்தி விசாரணை செய்வதே கஷ்டமாக இருந்திருக்கும். இவங்க அவரைக் காப்பாத்தினாங்க அது வேறை விஷயம். ஆனா தொடர்ந்து போராடக் கூடியதாய் இருக்கு. நாங்க முகம்கிழிக்கக் கூடியதாக இருக்கு. அப்ப அதனாலை வந்து இந்த உரையாடலை நாங்கள் என்ன மாதிரி நடைமுறையை மேற்கொள்ளலாம் என்பது ஒன்று. மற்றது உண்மையிலேயே மனித உரிமை அக்கறையை இந்த சோசலிஸ்ட்டுகள் என்று நம்பிக் கொள்றவங்களும் புரட்சிகர சமூகத்தையும் நம்பிக்கொள்றவங்களும் வந்து, இதை என்ன மாதிரிப் பார்க்கலாம் என்று நினைக்கிறீங்கள் ?
கா.சி: என்னுடைய அபிப்பிராயம் என்னவென்றால் சில விஷயங்கள் உண்மையிலை சோசலிசம் சரியாக நான் சொல்ற மாதிரி இந்த உயிர்ப்போடை போயிருந்தால் சில பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது. இரண்டு பிரச்சினைகளை நான் அடிக்கடி நினைக்கிறதுண்டு.
ஒன்று, கிழக்கு நாடுகளில் அதிகம் உணரப்படாத, மேற்கு நாடுகளில் மிகவும் உணரப்படுகிற, ஆனால் உலகம் முழுவதற்கும் பொதுவான சூழல் பிரச்சினை, மற்றது மனித உரிமைப் பிரச்சினை.
சோசலிச அரசு சரியான முறையிலை வளர்ந்திருக்குமேயானால் இதெல்லாம் சோசலிச அமைப்பின் கருத்தாக்கங்களாக இருந்திருக்கும். அந்த வளர்ச்சி சரியில்லாதபடியினாலை, அந்த வளர்ச்சியிலை ஊறு ஏற்பட்டதன் காரணமாக இன்றைக்கு சூழலியல் என்கிறது தனி அரசியலாக ஆகிவிட்டது. அரசியலோடு சம்பந்தப்படா ஆனா அரசியலுக்கு உள்ளுக்குள்ளை நிற்கிற ஒரு விஷயமாகப் போயிட்டுது. அரசியல் கருத்துநிலை அதெல்லாம் அவங்களுக்கு முக்கியமில்லை என்கிறது, ஆனால் இது மிகப்பெரிய அரசியல் பிரச்சினை. அது மாதிரித்தான் நாங்க ஐனநாயகத்தைச் சரியாகப் பேசி இருந்தால் அல்லது ஐனநாயகத்தைச் சரியாக நடைமுறைப்படுத்தி இருந்தால், மனித உரிமை என்பது ஐனநாயகத்தின் அம்சமாக ஆகியிருக்கம்.அந்த ஐனநாயகம் எனும் கருத்தாக்கம் சரியாகத் தொழிற்பட்டிருக்கும் என்றால் மனித உரிமை அதுக்குள்ளை வந்திருக்கும். மனித உரிமைப்பிரச்சனை எப்ப எப்ப வருகுதென்று சொன்னால் வெறும் அரசியல் ஐனநாயகம் சமூக ஐனநாயகமாக மாறாத பொழுது.
நாங்கள் மிகப்பெரிய தவறு செஞ்சோம் . பேரளவிலைதான் நாங்கள் சமூக ஐனநாயகவாதிகள். போல்ஷிவிக் என்று பேர் வைச்சம். அந்த சமூக ஐனநாயகத்துக்குப் போய் இருந்தால் இப்ப என்னாச்சு எண்டு சொன்னால் முதலாளித்துவம் வளர்ந்த நாடுகளிலை ஐனநாயகம் வேறை மனித உரிமை வேறை. அது ஒரு சிறப்புத்துறை ஆகிவிட்டது. சரீங்களா ? அப்போ இதை முழமையாகப் பார்க்கவேண்டிய தேவை ஒண்டிருக்கு எங்களுக்குள்ளை. இந்த மனிதப் பிரச்சினைகள், வாழ்வியல் பிரச்சினைகள் உள்ளடக்குகிற வகையில் பார்க்கவேண்டிய தேவை ஏற்படுகின்றது. அப்பிடி இல்லை என்று சொன்னால் இப்படித்தான் பாரக்கவேண்டும். சுழலியல் வேறை மனித உரிமை வேறை அது வேறை இது வேறை என்று சரிபார்க்க வேண்டியிருக்கும். சரீங்களா ? நாங்கள் இந்த அரசியலுக்கு மாத்திரம் விடுதலை என்று சொன்னோம். சுதந்திரத்துக்கு மாத்திரம் விடுதலை என்று சொன்னோம். அது பாருங்கோ அந்த விடுதலை என்று சொல்கிற பொழுது சில நாடுகளிலை அது, என்ன மதங்களை நாங்கள் கண்டிச்சுக்கொண்டிருந்தோமோ அந்த மதங்களே அதுக்குக் காரணமாச்சு. விடுதலை இறையியல். ஜம்பதுகளில் இருந்த கம்யூனிஸ்டுகள் என்றைக்காவது திரும்பி வந்தால், கத்தோலிக்க சர்ச்சுக்கள்ளே விடுதலை இறையியல் இருக்கென்று சொன்னால் அவன் நம்பவே மாட்டான். ஆனா இண்டைக்கு, கத்தோலிக்க சர்ச்சுக்கள்ளேயே ஒரு பெரிய அரசியற் புரட்சி ஏற்படலாம், லத்தீன் அமெரிக்க நாடுகளுடைய பண்பாட்டின்படி. இந்த மனித உரிமை என்று பேசிறதெல்லாம் இப்ப இந்தமாதிரிப் பிரிச்சுப் பார்க்கிற இந்தச் சிறப்புத்துறைப்பார்வைதான். இந்த அதீத சிறப்புத்துறைப் பார்வையெல்லாம் நாங்கள் ஐனநாயகம் பற்றிக் கொண்டிருந்த, வளர்த்துக்கொண்ட முறைமைபற்றியது. காரணம் என்னென்றால் அந்த அமைப்புமுறை. ஆந்த அமைப்பு இறுக்கமான அமைப்பு. அதுதான் அங்கு அடிப்படையானது. அதாவது வந்து ‘டெமாக்ரெட்டுகள் ‘ வந்தாலென்ன, ‘ரிபப்ளிக்கன்கள் ‘ வந்தாலென்ன அடிப்படையிலை அமைப்பு மாறாது. இப்ப எங்களுக்குப் புரியுது, ‘லேபர் ‘கட்சி, 13 வருஷத்துக்குப் பிறகு வந்தாலும்கூட சில விஷயங்களை மாத்திறது கஷிடம் என்று. அது எங்களுக்குப் புரியுது. அப்போ எங்களை அறியாமல் இந்த உண்மைகளை நாங்கள் மறந்துவிடக்கூடாது. இதிலை முழுமையாக முதலாளித்துவத்தின் தன்மைகள் வேறு வகையில.மாறிவிட்டிருக்கிறது என்கிறதையும் பார்க்க வேணும். முந்தி எல்லாம் நாங்கள் எங்களுடைய இளம் வயசிலை அல்லது எங்களுடைய நடு வயசிலை ஏகாதிபத்தியத்தை ஒரு நாட்டோடை சேர்த்துப் பார்க்கக்கூடியதாக இருந்தது. இன்றைக்கு ஏகாதிபத்தியத்தை ஒரு நாட்டோடை சேர்த்துப் பார்க்கேலாது.
ய.ரா: ”உலகமயமான முதலாளித்துவம்” என்கிற ரொம்பவும் நாகரீகமான வார்த்தையாக ஆகியிருக்கிறது.
கா.சி: ஆமாம். ரொம்பக் நாகரீகமான வார்த்தை. ” உலகக்கிராமம்” என்று சொல்றாங்கள். அப்ப இதுகளெல்லாம் சிக்கலானது. அப்ப என்னென்றால் இதுக்குள்ளை இன்னொரு பாய்ச்சல் இருக்கு. சிருஷ்டிபூர்வமான பாய்ச்சல் ஒன்று தயாராகிக்கொண்டிருக்கு. நாங்கள் அதற்குத் தயாராகிக் கொள்ளவேண்டும்.
ய.ரா: மற்றது இப்ப வந்து மேற்கு ஜரோப்பிய நாடுகளிலை மார்க்சிச லெனினிச மறுமலர்ச்சி என்கிறமாதிரி இந்த விமர்சனங்களில் இருந்து ஒரு வளர்ச்சிப் போக்கொன்று பெரும்பாலான சிந்தனையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. உதாரணமாக பின்நவீனத்துவத்தை வளர்ச்சியடைந்த முதலாளித்தவ சமூகத்தின் தர்க்கத்திற்க்குள் வைத்து விளக்கும் போக்கு இருக்கிறது.
கா.சி: ஆமா பிடெரிக் ேஐம்ஸன் எல்லாம் அப்படிச் செய்திருக்கிறாங்க.
ய.ரா: அதே மாதிரி தேசிய இனப் பிரச்சினை சம்பந்தமா, அயர்லாந்துப் பிரச்சினை சம்பந்தமா டெர்ரி ஈகிள்டன் ஆக்கபூர்வமான பார்வை எல்லாம் முன்வைக்கிறார். அதே மாதிரி பெண்நிலைவாதம் தொடர்பா நிறைய விஷயங்களை சோசலிஸ்ட் பெண்நிலைவாதம், நம்ப ஷீலா ரெளபோத்தம் எல்லாம் செஞ்சிருக்கிறாங்கள். ஆனால் இந்த மாதிரி ஒரு மறு பரிசீலனை எங்கடை நாடுகளிலை அதாவது, இந்த வித்தியாசங்களை அங்கீகரிப்பது, அதிலிருந்து ஒற்றுமை உருவாக்குவது மற்றது குறைந்த பட்சம் கட்சிக்குள்ளாக ஐனநாயக நடைமுறைகளைக் கொண்டு வருவது, இந்த மனித உரிமை அக்கறைகளை ஏற்படுத்திக்கொள்வது என்கிறமாதிரி மூன்றாம் உலகநாடுகளில் இருக்கிற மார்க்சிய லெனினிய இயக்கங்கள் கம்யூனிஸ்ட் கட்சிகள் புரட்சிகர இயக்கங்கள் இவற்றில் ஆசியாவில் இந்த அனுபவங்களை சுவீகரித்துக்கொண்டிருப்பதாக நினைக்கிறீங்களா ?
கா.சி: ஆசியாவில் நாங்கள் விட்ட பிழை என்னென்றால் சில பிரச்சினைகள் இருக்குது. ஆசிய அனுபவங்கள், ஆசிய அனுபவ வளர்ச்சியில் சோசலிச அனுபவ வளர்ச்சியில் சோசலிசத்திற்கு நாங்கள் எக்ஸ்போஸ் பண்ணுப்பட்ட முறைமை ஒன்றிருக்கு, காலனித்துவச்சூழலில். அந்தச் சூழலில்தான் ‘எக்ஸ்போஸ்டு ‘ ஆகி இருக்கிறம். அவங்கள் தத்துவார்த்தரீதியாகப் பார்க்கிறபொழுது அந்த நாட்டினுடைய அசைவியக்கம்பற்றிய சகல அறிவோடும் அதனைச் செய்தவர்கள் அல்ல.
அப்ப, இதன் காரணமாக நாங்கள் பல விடயங்களை உணராத ஒரு நிலையிலை இருந்திருக்கிறம். அதன் பிறகு அறுபதுகள், ஒரு ஜம்பதுகளுக்குப் பிறகு சோவியத் ரஷிய, சீன - இந்தப் பெருங்குடைகளின்கீழ் அந்த மரபுக்குள்ளாலை கம்யூனிசம் வளர்ந்துகொண்டு போகிற ஒரு சிந்தனை முறைமை ஒண்டு இருந்தது. இதனாலை அந்த உள்ளார்ந்த வளர்ச்சி மிகக் குறைவு. எங்களுக்கு உண்மையிலேயே வங்காளத்தல கேரளாவிலை அப்பிடித்தான் இருக்கு. தமிழ்நாட்டிலை ப. ஐீவானந்தம் ஒரு வெளிச்சக்கீற்று மாதிரி அப்பிடி வந்துவிட்டுப் போனார். நான் அடிக்கடி சொல்லுறது என்னென்று சொன்னால் இந்த ஐீவானந்தம் எங்கை விட்டுதோ அங்கை தொடங்கவேணும்போலைதான் எனக்குப் படுகுது. அதாவது ஐீவானந்தத்தை ஒரு மறுபரிசீலனை பண்ணவேணும்போலை இருக்கு. அப்ப அந்த காலத்தலை ஐீவா வாழ்ந்த காலத்திலை ஐீவானந்தம் செய்தது எல்லாத்தையும் அப்போதிருந்து கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் ஏற்றுக்கொண்டது கிடையாது.
அவரைக் கிண்டல்பண்ணிக்கூடச் சிலபேர் சொல்லுவார்கள். நாங்கள் இந்த எங்களுடைய மரபு, இதிலை ஒரு ஐனநாயகத்தைக் காணுதல் அதனை வளர்த்தெடுத்தல் என்கிற ஒன்றிலை அந்த வித்தியாசங்கள், பேசப்படாத வித்தியாசங்கள் என்பவற்றை நாங்கள் இப்போது சற்றுக் கவனமாகப் பார்க்கவேண்டும்.
அதற்காகத்தான் சில சிந்தனையாளர்கள் மேலெழுந்தவாரியான வரலாறு வேண்டாம். ஸபால்டன் ஆய்வுகள் வேணும் என்று சொன்னார்கள். அவர்கள் இந்த ஸபால்டன் ஆய்வுகள் என்கிற சிந்தனையையே கிராம்ஸி போன்றவர்களிடம் தான் எடுக்கின்றார்கள். அது பின்நவீனத்தவ சிந்தனை அல்ல. சரீங்களா ? அப்ப நான் நம்பறன் எங்களுக்கு கிராம்ஸி போன்றவர்கள், இந்த ஸபால்டன் கருத்த்துக்கள் இதுகளாலை நாங்கள் ஒரு…..
மற்றது எங்கடை மேல்நிலைப்பட்ட சமுகம்- ‘ஹையரார்க்கிகள் சொஸைட்டி ‘- எங்கள் உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே. அதுதான் தொல்காப்பியம். கீழ்நிலையில் உள்ளவர்கள்பற்றி நாங்கள் யோசிக்கிறேல்லை. அந்த மேல்நிலையில் உள்ளதை வைத்துக்கொண்டே எங்களுடைய பெறுமானங்கள் எல்லாத்தையும் வளர்த்திட்டம். நாங்கள் இதை மீள்பரிசோதனை பண்ணவேணும்.
எங்களுக்கு ஒரு அடிப்படையான வரலாறு வேணும். நல்ல வரலாற்றுச் சிந்தனை வேணும்.
ய.ரா: கிராம்ஸி பற்றிச் சொல்லும்போது இங்கு மேற்கில பார்த்தீங்கெண்டா கிராம்ஸியினுடைய கலாச்சார மேலாண்மை கருத்தாக்கத்தை வைத்துக்கொண்டு நிறையஆய்வகள் வந்திருக்கு. உண்மையிலேயே நாங்க வந்து ஸபால்டன்கள் மற்றும் அவங்க கலாச்சாரம் சம்பந்தமான ஆய்வுகள் மற்றது புரிதல்கள் மற்றது ஒடுக்கப்பட்ட மக்களுடைய அரசியல் இயக்கத்தைக் கட்டி எழுப்புவது எல்லாம் இந்த வெகுஐன கலாச்சார ஆய்வுகளிலே முக்கியமான விஷயம். இந்த வெகுஐனக்கலாச்சாரம் சம்பந்தமா பார்த்தீங்கன்னா கலாச்சார ஆய்வுகள் தமிழில் பண்ணப்படேல்லை. உதாரணமாக சினிமா வந்து வெகுஐனக் கலாச்சாரத்துல சினிமா மிக முக்கியமான ஒரு ஊடகம்.. இது சம்பந்தமா வெங்கட் சாமிநாதன் இப்ப எழுதுறார், எம்ஜிஆர் என்கிற பிரச்சினை பத்தி. இதுபற்றி மார்க்சீய நோக்கிலிருந்து ஒன்றும் வரேல்லை. அதாவது கிராம்ஸியினுடைய அணுகுமுறைகள் வந்து உண்மையிலே எங்களுடைய நாடுகளில் பொருத்தப்படவேண்டியது வந்து, வெகுஐனக் கலாச்சாரம் சம்பந்தமானது என்றுதான் நான் நினைக்கிறேன்.
கா.சி: ஓம்! வேகுஐனக் கலாச்சாரம் சம்பந்தமாக ஆய்வுகள் அதிகம்பேர் செய்யேல்லை. இந்த நேரங்களிலை எல்லாம் நாங்கள் செய்தம் என்று சொல்ல மனதுக்குக் கஷிடமாக இருக்கு சொல்றதுக்கு.
எம்ஜிஆர் பத்தி 81இல் நான் செய்த ஆய்வு அடிப்படையில அந்த மாதிரி ஆய்வுதான் தொடர்பு கொள்ளுதல் எனும் அடிப்படையிலானது அவ்வாய்வு. சினிமாவைப்பற்றி சில நிகழ்ச்சிகளை எடுத்துக் கொள்ளுவம். வெகுஜனக் கலாச்சாரத்தைப் பார்க்கிற தன்மையில்லை. எங்களுக்கென்னென்று சொன்னால் தமிழிலை, தமிழ் இலக்கியம் எண்டு சொன்னா தொல்காப்பியம் இதுகளோடைதான். தொல்காப்பியம் முக்கியம்தான், அதுக்காக தொல்காப்பியத்தைச் சொல்லேல்லை. நாங்கள் நவீனத்துவத்திற்கு முந்தியதைத்தான் வற்புறுத்தினோம். மற்றது நவீனத்துவத்திலேயும் இந்த மாதிரியான விஷயங்களை வெகுஐனக்கலாச்சாரத்தை வலியுறுத்திறேல்லை. அண்மையிலை இந்த வெகுஐனக் கலாச்சாரத்தை வலியுறுத்திப்பார்க்கிற போக்கொன்று காணப்படுகுது. அது தமிழ் நாட்டிலை நிறையக் காணப்படுகிறது. இலங்கையிலை இன்னும் வரேல்லை. அவங்க இந்த வெகுஐனக் கலாச்சாரத்தை கோட்பாட்டு அடிப்படையல் பார்க்கிறாங்கள் இல்லை. ஆனா கோட்பாட்டு அடிப்படை படிப்படியாக வரும். இப்போ, அரசு செய்திருக்கிற இந்த கானாப் பாடல்கள் பற்றிய ஒரு ஆராய்ச்சி. இருளியல்பற்றி வருகிற ஆராய்ச்சி. ஆனால் சினிமாவை அவர்கள் பார்க்கிற முறைமையிலை உள்ள பிரச்சினைகள் இருக்கு. அதை நான் ஒத்துக்கொள்கிறன். உதாரணமா இந்த வெகுஐனக் கலாச்சார நிலைபாட்டிலிருந்து பார்க்கவேண்டிய தேவை நிறைய அங்கு உண்டு. ஆனா சினிமாவைப்பற்றி எல்லாம் அப்படிப் பார்க்கவேணும். உண்மையில் நான் ஒரு முறை சொன்னேன், தமிழ்ச்சமூகமும் அதன் சினிமாவும், என்னுடைய சின்ன ஒரு உரை ஒன்றில் அதைத்தான் சொல்ல விரும்பினனான். இந்தமாதிரிப் பார்க்கிற தேவை ஒன்றிருக்கு. நீங்க சொல்லுறது ரொம்பச் சரி. வெகுஐனக் கலாச்சாரம்பற்றிய ஆய்வுகள் ரொம்பக் குறைவு. ஏனென்று சொன்னால் அதுக்கும் காரணமிருக்குது. எங்களுடைய கலாச்சாரத்துக்கள்ளேயே வெகுஐனக் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளாமல் அதாக ஏற்றுக் கொள்ளாமல் நாங்கள் திரிபுபடுகிறோம். ஏன் தெரியுங்களா ? எங்களுடைய தமிழ்நாட்டுச் சூழல்லே ஒரு மூன்று நாலு கலாச்சாரம் இருக்கு.
ஒன்று, மரபு ரீதியிலான சமஸ்கிருதக் கலாச்சாரம். (அது சமஸ்கிருதமயமான ஒரு நிலை). அதற்கான ஒரு திராவிட, ஒரு பகுத்தறிவு ரீதியிலான அணுகுமுறை.. இந்த பகுத்தறிவு அணுகுமுறைக்கு ஊடாக வந்த சமஸ்கிருதமயமாதல் இதெல்லாம் சேர்ந்த ஒரு நிலை. இன்றைக்கு வள்ளலாரிலை இதெல்லாம் வந்து சந்திக்குது போலை இருக்கு. சினிமாவுக்குள்ளாலை வாறது, நாடகதடத்துக்குள்ளாலை வாறது. அப்ப இந்த கலாச்சாரங்கள் எல்லாம் தமிழ்நாட்டுக் கலாச்சாரத்தினுடைய பார்வைகளிலை ரொம்ப சுவாரசியமாய் இருக்கு. அப்போ அங்கை ஒரு புறத்திலை சமஸ்கிருதமயமாதல் ஒரு புறத்திலை இந்த பகுத்தறிவு மரபு இன்னொரு புறத்திலை மேற்கத்திய கலாச்சாரம் நீங்கள் சொல்ற மாதிரி மேற்கத்திய கலாச்சாரத் துக்குள்ளாலை வாற வெகுஐன மரபு. நான் அடிக்கடி சொல்றது குமுதத்தோடை எங்களுக்குத் தமிழ்நாட்டிலை வெகுஐன மரபு ஆரம்பமாகிறது. படிக்கிறதுக்காகவே படிக்கிறது.. அதற்கு முதல் ஏதோ ஒன்றென்றாலும் சுதந்திரத்துக்கான போராட்டமாகத்தான் இருந்திருக்கும் அந்தப் பத்திரிகை. மணிக்கொடிகூட சுதந்திரத்தின் மணிக்கொடிதான். ஆனால் குமுதத்தோடை எப்பிடி ஆகிறது என்று சொன்னால் அந்த விற்பனைக்கான வாசிப்பு.
அப்புறம் இந்த நுகர்பொருள் கலாச்சாரத்தை நாங்கள் பார்த்த முறைமை ஒப்புக்கொள்ளத்தான் வேணும். சரியாகப் பார்க்கவில்லை என்று. அதை பரந்துபட்ட மரபோட சேர்த்துப் பார்க்கிறது. இந்த நுகர்பொருள் கலாச்சாரம் எப்படி எங்களுடைய பெரும் பாரம்பரியம் என்பதை எப்படிப் பயன்படுத்துகிறது என்றதைப் பார்ப்பம். சரீங்களா ? இந்த தமிழ்ச்சினிமாவிலைகூட கல்யாணம் பண்ணும் வரையும் ஒரு டிரஸ் போடுவாங்க. கல்யாணம் பண்ணினவுடனே பெண்ணினுடைய டிரஸ் மாறிவிடும். இப்படி எல்லாம் தாறுமாறா டான்ஸ் ஆடுகிற பெண் கடைசியிலை தாலியைப்பற்றிப் பேசுவா. இதெல்லாம் சுவாரஸ்யமாக இருக்கிற அதேவேளையிலை இதுக்குள்ளை ஒரு ‘கல்ச்சுரல் அன்டர்பின்னிங் ‘ ஒன்று இருக்குது.
ய.ரா: பொதுவாக இந்த யுகம் வந்து தேசியத்தினுடைய யுகம் என்று சொல்வாங்கள். தேசியத்திற்கும் ” கருத்தியலாக தேசியம்” என்பதுக்கும் வித்தியாசம் இருக்கென்று சொல்கிறார்கள். தேசியம் என்பது ஒரு வரலாற்று வகைப்பட்ட நிலை என்று ஒப்புக்கொள்ளுபவர்கள் கூட, ” தேசியத்தைக் கருத்தியலாகப் பார்க்கும் பொழுது ” இதெல்லாம் நிறைய பாசிச அனுபவங்களைக் கொண்டிருக்கிறதென்று ஜரோப்பிய அனுபவங்களை வைத்துச் சொல்வாங்கள். அப்ப, மார்க்சியத்தினுடைய வரலாற்றுத் தவறு வந்து தேசியத்தை அங்கீகரிக்காதததுதான் என்று சொல்றாங்கள். இப்பிடி எல்லாம் விவாதங்கள் இருக்கு. இன்னும் பார்த்தீங்கள் என்று சொன்னால் பெளடிக்ட் ஆண்டர்ஸன் சொல்லும்போதுகூட ”தேசியம் ஒரு கற்பிதம் ” என்கிறார். அதே வேளை கற்பிதமாயினும் வரலாற்று ரீதியில் அத நிஐம் என்கிறார். அப்ப இது சம்பந்தமா நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் ? தேசீயம் சோசலிசத்திற்கான ஒரு மாற்று என்று நினைக்கிறீங்களா ? ஆல்லது தேசீயம் வரலாற்று நிலை என்று நினைக்கிறீங்களா ?
கா.சி: அதாவது வந்து சோசலிசம், அந்த தேசிய அடையாளம் என்று எடுத்துக்கொள்ளுவம் நாங்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருக்கு. மார்க்சியம் விட்ட மிகப் பெரிய தவறுகளில் ஒன்று என்னென்று சொன்னால் இந்த வாழ்வியல் உண்மையை அது ஏற்றுக்கொள்ளாதது. அதுக்கு அப்பாலை போனது. தேசியத்திற்கு அப்பாலை போனது. ஆனால் தேசியத்திற்கு ஜரோப்பியச் சூழலில் ஏற்பட்ட அதே அனுபவங்கள் திருப்பி வரவேணும் என்பது கூடாது. அதை நாங்கள் தவிர்க்கவேண்டும். ஆனால் இந்த இனத்துவம ( எத்னிசிடி. என்கிற சிந்தனை வந்ததற்கான வரலாற்றுப் பின்புலத்தையும் நாங்கள் மறந்துபோகக்கூடாது. அமெரிக்க முதலாளித்துவம், ெஐர்மன் முதலாளித்துவம் வந்த தொழிலாளர்களிடமிருந்து அபரிமிதமான லாபத்தைப் பெறுவதற்காக அவர்களை அவர்களது சூழலில் பேணுவதற்காகத்தான் , இந்த இனத்துவ உழைப்பு இனக்குழுக்கள் என்கிற கருத்து வந்தது. இன்றைக்கு நாங்கள் இனத்துவத்தை ஒரு கொள்கையாக மாற்றிவிட்டோம். சரீங்களா ? அது இருக்கட்டும். அப்படி இருக்கிற பொழுது இந்த தேசம் என்கிறதில் இருந்து வாறது வேறை. அப்ப இன்றைக்கு நாங்கள் தேசியத்துக்கு ஒரு புதிய வரைவிலக்கணம் கொடுக்கவேணும். அது ஒரு அடையாளம். ஒரு பண்பாட்டு அடையாளம். அந்தப் பண்பாட்டு அடையாளம் என்கிற வகையில அதுக்கு மிக முக்கியத்துவம் இருக்கு.
ய.ரா: இது வந்து வரலாற்றடிப்படையில் தற்காலிகமானது என்று நினைக்கிறீங்களா ? அதுதான் நான் கேட்டன் சோசலிசம் என்பது நாங்கள் ஒரு சமூக அமைப்பு என்று சொல்கிறம். ஒரு இலட்சிய சமூகம் என்று சொல்கிறம். அதுமாதிரி தேசியம் என்பது வரலாற்றுரீதியலான நிபந்தனைக்குட்பட்ட தற்காலிகம்என்று சொல்றீங்களா, இல்லை இது நிரந்தரம் என்று சொல்கிறமா ? குருத்துநிலையாக வரும்போது இதிலை நிறைய….
கா.சி: கருத்துநிலையாக வந்தபோது அதில் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கு. இப்பொழுதும் பல நாடுகளில் இந்தப் பிரச்சினை இருக்கு. ஆனால் அதிலை உள்ள பிரச்சினை என்னென்று சொன்னால், இதொரு வரலாற்றுப் பிரக்ஞை என்று சொல்லுவம். ஒரு வரலாற்றுப் பிரக்ஞையைத் தருகின்ற ஒன்று. இந்த வரலாற்றுப் பிரக்ஞையை எவ்வாறு பயன்படுத்துவதென்பது மிக முக்கியம். அது ஐனநாயகத்தோடை செல்லுமேயானால் அது உண்மையான சோசலிசத்தோடை செல்லுமேயானால் அதாவது அது மனிதாயுதத்தை விரும்புமேயானால் இந்தத் தேசியம் சர்வலோக மனிதனை ஏற்றுக்கொள்வதாக இருக்கும்.
ய.ரா: இப்ப என்னென்றால் பெரும்பாலானவர்கள் வந்து பின்நவீனத்துவவாதிகள் வந்து தனித்தனித்துறைகள் சார்ந்து ஸ்பெஷலிஸ்ட்டுகள் ஆகப் போய்விட்டார்கள். மனித உரிமை ஸ்பெஷலிஸ்ட் பின்நவீனத்துவ ஸ்பெஷலிஸ்ட் பெண்நிலைவாத ஸ்பெஷலிஸ்ட் என்று. ஆனால் ஜரோப்பிய நாடுகளிலை ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நிறைய சித்தாந்திகள் இப்ப- அல்துாசரை மொழிபெயர்த்த கிரிகெரி இலியட் போன்றவர்கள் எல்லாம் சோசலிஸ்ட்தொழிலாளர் கட்சியுடன் சேர்ந்து கூட்டங்கள் ஏற்பாடு பண்ணக்கூடியதாக இருக்கு. அதே மாதிரி ‘நியூ லெப்ட் ரிவியூ ‘ எல்லாம் ‘இன்டர்நேஷனல் சோசலிசம் ‘ பத்திரிக்கையோடு சேர்ந்து கருத்தரங்குகள் ஏற்பாடு பண்ணுகிறது. நான் என்ன சொல்கிறேன் என்றால், இந்த சோசலிசம்பற்றி விமர்சனம் வைத்த புதிய இடதுசாரிகள் எ ல்லாம் இன்றைக்கு மக்கள் இயக்கங்களில் சம்பந்தமுள்ள இடதுசாரிக் கம்யூனிஸ்ட் இயக்கங்களோடு இணைந்து செயற்படும் சூழ்நிலை ஒன்று மேற்கில் உருவாகி இருக்கின்றது.
ஒன்று அவங்கள் இந்த வெகுஐன இயக்கங்களை¢ கிட்ட வந்திருக்கிறார்கள். மற்றது கட்சி சார்ந்து நிறைய விஷயங்களை அங்கீகரித்து விமர்சனபூர்வமாக மாறி வந்துவிட்டார்கள். இப்ப என்னென்னா வந்து இப்படியான ஒரு சுயவிமர்சன உணர்வாடு எங்களுடைய நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் வரும் என்று நீங்கள் நினைக்கிறீங்களா ? மார்க்சியத்தினுடைய அல்லது சோசலிசத்தினுடைய எதிர்காலம் எங்களுடைய நாடுகளில் எப்படி இருக்கும் ?
கா.சி: வரவேணும் என்பது நான் அடிக்கடி வற்புறுத்திச்
5. arun on November 16, 2007 1:27 pm
நட்சத்திரன் செவ்விந்தியனிடம் !சில கேள்விகள்??????????????!
1. இக்கட்டுரை சிவதம்பிக்கு எதிராக எழுதப்பட்டதா?? புலிகழுக்கு எதிராக எழுதப்பட்டதா?? கூட்டணிக்குஎதிராக எழுதப்பட்டதா?????
2. இப்போது புலி எத்ர்பை முழுநேர தொழிலாக கொண்டு செயற்படுபவர்கள் தமது முன்னைய கருத்து நிலையிலிருந்து மாறி அமிர்தலிங்கம் தேசிய தலைவரர் எனவிழிககின்றன. உமது கடடுரை அமிர்தலிங்கத்தினை திட்டிதீர்த்துள்ளது.
மேற்கோள்.>>>தமிழர் விடுதலைக்கூட்டணி ஒரு மோசமான சந்தர்ப்பவாதக் கட்சி என்பதும் வரலாற்றில் அது மேற்கொண்ட கடுமையான தவறுகளும் இன்றைய ஈழப் போராட்டத்தின் சீரழிவுக்குக் காரணம் என்பதும் இப்போது மிகத் தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டு விட்டன. இதற்கான பொறுப்புக்களை கூட்டணியின் சக தலைவர்களாக இருந்த அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமுமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அமிர்தலிங்கம் தேசிய தலைவரர்?????
பிற்காலத்தில் அமிர்தலிங்கத்தினை. சங்கரி போன்றவர்களை வழிநடாத்திய பாராளுமன்ற உறுப்பினரும் கல்வியாளருமான நீலன் திருச்செல்வம் இன்றைய ஈழப்போராட்டத்தின் சீரழிவுக்குக் காரணம் இல்லையா?????
6. yamuna rajendran on November 16, 2007 2:41 pm
சிவத்தம்பியுடனான என்னுடைய நேர்காணலை நான் தேசத்திற்கு அனுப்பவில்லை. அதுவும் முழுமையாக இங்கு வெளியிடப்படவில்லை. இங்கு அதன் பொறுத்தம் என்ன எனவும் எனக்கு விளங்கவில்லை. திண்ணை வலைத்தளத்தில் இருந்து எடுத்திருக்கிறிர்கள். இது சரியான நிலைபாடு இல்லை என நினைக்கிறேன். விவாதங்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன். பார்வையாளனாக இருக்க விடுங்கள். விரும்பினால் நானே என் கருத்துக்களை எழுதுவேன்.
அன்புடன் ராஜேந்திரன்.
7. ragu on November 16, 2007 4:21 pm
நட்சத்திரன்,
உங்கள் கட்டுரையில் உள்ள சிவத்தம்பியின் பெயருக்குப்பதிலாக திருச்செல்வம் பெயரையோ, சிறீசபாரட்ணம் பெயரையோ அல்லது சங்கரி பெயரையோ இட்டாலும் சரியாகவே வரும்.
8. arun on November 16, 2007 5:45 pm
இலங்கையின் முதலாவது தமிழ் அரசியல் படுகொலையான துரையப்பாவின் கொலையில் தமிழரசுக்கட்சி மற்றும் கூட்டணிக்கு இருக்கின்ற பங்கு. தங்களது தனிப்பட்ட அரசியல் நலனுக்காக துரையப்பாவை ஒரு துரோகி என்ற பட்டம் கட்டி அவரைக் கொல்லுமாறு பிரபாகரன் முதலிய இளைஞர்களுக்கு ‘உரு’ ஏற்றியமை. சொன்ன உமது தகவல் இன் ஆதாரம் யாது? உமக்கே 1994ம் ஆன்டின் பின்னர் தான் தமிழ் தேசிய விடுதலை போராட்டம் சரியா தெரியும். அல்லது தெரிந்தது கொள்ள் தொடங்கினீர். அப்படியிருக்க இந்த ஆதாரங்கலை யார் உமக்கு தந்த்து? துரையப்பாவை எல்லோரும் தான் துரோகியாக அக்காலத்தில் கனித்தார்கள். இல்லையென்ரு யாரும் சொல்லட்டும் பார்ப்பம்?? நட்சத்திரன் உமது கவிதைக்ள் யதார்ததுடன் பொருந்தியிருந்த்து. ஆனால் தெரியாத விடயத்தை எழுத முர்பட வேன்டாம்.
9. arun on November 16, 2007 10:14 pm
செவ்விந்தியனின் ஆஷ்தான அரசியல் குரு வேரு யாருமல்ல சரினிகர் வசந்த்ன் என்கிற சிவகுமார். அவர் சொல்வதே இவருக்கு வேத வாக்கு. அதனையே இக்கட்டுரையில் கட்டுடைத்துள்ள்ர்.
10. தகடு on November 17, 2007 12:29 am
உப்பிடி எத்தின பேர் கிளம்பி இருக்கிறியள். ஆ..ஊ எண்டால் எல்லாரும் கேள்வியளோடை வந்திறியள். என்ன சங்கதி?
அங்கை இராயாகரன் அண்ணாச்சி கேள்வி கேள்வியா சரவெடி கொழுதிகிறார். இங்கை அருண் அந்தமாதிரி கேள்வியால வேள்வி நடாத்திறார்.
அது சரி அண்ணாச்சி இராயாகரன் ஹற்றன் நசனல் பாங் என்றவுடனை ஏன் உங்களுக்கு மூக்கு வேர்க்குது?
ஆர் கேள்வி கேக்கிறது என்பது அல்ல முக்கியம், என்ன கேள்வி என்பதுதான் முக்கியம்.
இப்ப (தமிழ் அரங்கம்) அதிருதில்ல….
அப்ப வரட்டா….
11. Thakshan on November 17, 2007 6:35 am
அருண்; துரையப்பா யாருக்கு என்ன துரோகம் செய்தார் என்று உங்களால் சொல்ல முடியுமா? அன்று தமிழரசுக் கட்சிக்கு யாழில் சவாலாக அரசியல் செல்வாக்கு பெற்றிருந்தவர் துரையப்பா. 1970ல் அமிர்தலிங்கமும் சிவாவும் ஜீ.ஜீ யும் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தால் தமிழீழ கோசம் ஒரு பேச்சக்காகவாவது இவர்களால் எடுக்கப்பட்டிருக்குமா? தமிழர் விடுதலைக் கூட்டணியாவது உருவாகியிருக்குமா? தனது பேச்சாற்றலால் இளைஞர்களை வசப்படுத்திய அமிர்தலிங்கம் கூட பின்னாளில் நிலைமைகள் இவ்வாறு மாறிவிடுமென கற்பனை பண்ணியிருக்க மாட்டார். பொடியளுக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியாது என்று ஒருவேளை வருத்தப்பட்டிருப்பார். பதவிகளுக்காக துரையப்பா துரோகியாக்கப்பட்டார்.
அதே வழியிலேயே பின்னர் அமிரும் துரோகியாக்கப்பட்டார். துரையப்பாவுக்கு இயற்கை மரணம் வரக்கூடாதென மேடைகளில் முழக்கமிட்டவர்களுக்கும் மரணம் இயற்கையாக அமைந்து விடவில்லையென்பதை சரித்திரம் பதிவு செய்து கொண்டுள்ளது. புலிகள் உள்ளிட்ட தமிழருக்கு விடுதலை பெற்றுத் தாரோம் என்று வெளிக்கிட்ட அனைவரும் தமிழருக்கு செய்த துரோகங்களை பட்டியலிட்டுப் பாருங்கள்.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் இடைக்கால நிர்வாகத்தில் ஏனைய கடசிகளுக்கு இடம் தரக்கூடாது என்ற பிரபாவின் பிடிவாதமும் பயமும் தான் அதன் பின்னரான இற்றைவரையான அழிவுகளுக்கும் அடிப்படைக் காரணம். எந்தவொரு பேச்சவார்த்தை மேசையிலாவது புலிகள் தமிழ் மக்களின் பிரச்சனைகள் பற்றி பேசி இருக்கிறார்களா? தங்களின் தேவைகளை(ஏ-9 திறப்பு; இடைக்கால நிர்வாகம்; சுனாமி நிவாரண பங்கீடு; போக்குவரத்துக்கு ஹெலி வசதி; கருணா பிரச்சனை …….என்று சொல்லிக்கொண்டே போகலாம்)யும் செளகரியங்களையும் தான் பிரச்னைகளாக காட்டி குழப்பினார்கள்.
(மக்கள் பற்றிய எந்த கவலைகளும் இவர்களுக்கு இருப்பதாக நம்புகிறவர்கள் அந்த மக்களுடன் வாழ்ந்து கொண்டு தங்கள் கருத்துக்களை சொன்னால் குறைந்தபட்சம் அதைப்பற்றி விவாதிக்கலாம். அல்லது தங்கள் உறவுகளில் ஒன்றையாவது இந்த கொடும் யுத்தத்திற்கு பலி கொடுத்திருப்பார்களோ தெரியாது. யுத்தத்தின் வலியை அனுபவித்தாலே புரியும்.)
சிவசேகரத்தின் கவிதை வரிகளே நினைவிற்கு வருகிறது (வரிகள் சரியாக நினைவில்லை}…
“துரோகியென தீர்த்து அன்றொருநாள் சுட்ட வெடி….
கண்டவனைச் சுட்டது;கேட்டவனைச் சுட்டது..
சுடச் சொன்னவனை சுட்டது..
சுட்டவனைச் சுட்டது…
சும்மா நின்றவனையும் சுட்டது”
பிட்டுக்கு மண்சுமந்த பிரானின் முதுகில் பாண்டியன் தந்த பிரம்படி போல்.
12. S.V.Raj on November 17, 2007 8:07 am
யாரிந்த சிவத்தம்பி என்ற கேள்வி கேட்கப்பட வேண்டிய கேள்விதான். ஏனென்றால் இன்னமும் சிலர் இவரை செய்யுங்கோடாப்பா, உங்கட பிள்ளயளுக்கு முருகனக் காட்ட மறந்திராதேங்கோ. என்ன இருந்தாலும் கடவுள நாங்க கை விடேலாது”
இந்த அட்வைசக் கேட்ட பல்கலைக்கழக பழைய மாணவத் தம்பதி ஒன்று அதிர்ந்து போனது. ஏனென்றால் சிவத்தம்பியை சுத்த மாக்ஸிஸ்டாக நம்பி, பின்பற்றி வந்த சிலருள் இவர்களும். ‘மாக்ஸியத்தின் தூண்களிலொன்று முருகன்கோயில் மணிக்கோபுரமாச்சுதடோய் அண்ண” என்று இந்தத் தம்பதிகள் சிவத்தம்பி மீதான தமது நம்பிக்கை சரிந்து போனதையிட்டு ஏற்பட்ட ஆதங்கத்தை கிண்டலாய்க் கொட்டித் தீர்த்தனர்.
13. S.V.Raj on November 17, 2007 9:47 am
யாரிந்த சிவத்தம்பி என்ற கேள்வி கேட்கப்பட வேண்டிய கேள்விதான். ஏனென்றால் இன்னமும் சிலர் இவரை ஈழத்து மாக்ஸியத்தின் இருபெரும் துண்களில் ஒன்று என்று இன்னமும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். சுத்தப் பேத்தல். மாக்ஸியத்தைத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கும் ஒரு பருத்த மாமிசத்துண் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
செல்வச் சன்னதியின் பழுத்த முருக பக்தரான சிவத்தம்பி அவர்கள் 90களில் ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்தவேளை இங்கு வதியும் சில முன்னை நாள் பல்கலைக்கழக மாணவர்களின் வீடுகளுக்கும் சென்றிருந்தார். அப்போது இவர் செய்த மிக முக்கிய இலவச அட்வைஸ் “என்ன வேணுமெண்டாலும் கதையுங்கோ செய்யுங்கோடாப்பா; உங்கட பிள்ளயளுக்கு முருகனக் காட்ட மறந்திராதேங்கோ. என்ன இருந்தாலும் கடவுள நாங்க கை விடேலாது”
இந்த அட்வைசக் கேட்ட யாழ்.பல்கலைக்கழக பழைய மாணவத் தம்பதிகள் ஒன்று அதிர்ந்துபோனது. ஏனென்றால் சிவத்தம்பியை சுத்த மாக்ஸ்ஸிஸ்டாக நம்பி பின்பற்றி வந்தவர்களுள் இவர்களும். “மாக்ஸியத்தின் துண்களிலொன்று முருகன்கோயில் மணிக்கோபுரமாச்சுதடோய் அண்ண” என்று இந்தத் தம்பதிகள் சிவத்தம்பி மீதான தமது நம்பிக்கை சரிந்து போனதையிட்டு ஏற்பட்ட ஆதங்கத்தை கிண்டலாய் கொட்டித் தீர்த்தனர்.
14. humanwatch on November 17, 2007 10:17 am
யமுனா ராஜேந்திரன்
அவர்களிடம் மன்னிப்புக் கோருகின்றோம்.
humanwatch.sl@hotmail.com
இணையவலைத்தள செய்திகள் / படைப்புக்களை மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பும் முயற்சியில் சில நண்பர்களாகிய நாங்கள் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றோம். இதற்கு பின்னால் எந்தவித திட்டமிட்ட அரசியல் நோக்கங்களும் இல்லை. இதுவொரு சுயாதீன கூட்டு முயற்சியாகும். இதன் முலம் காத்திரமான படைப்புக்கள் வாசகர்களுக்கு சென்றடைய வேண்டும் என விரும்புகின்றோம்.
நட்சத்திரன் செவ்விந்தியன் அவர்களின் சிவத்தம்பி தொடர்பான பிரதி தேசம் நெற் இணையத்தளத்தில் வெளியானபோது அப் பிரதிதொடர்பான விவாதத்தை - உரையாடலை தொடர்வதற்கு உங்களின் சிவத்தம்பியினுடனான உரையாடல் துணை நிற்கும் என்பதால் அதனை திண்னை இணைய வலைப்பதிவிலிருந்து அனுப்பிவைத்தோம். வேறு எந்தவித பிழையான நோக்கங்களும் எங்களுக்கு இல்லை. தமிழ் அறிவு சார்ந்த படைப்புலக தளத்தில் உங்களின் எழுத்துக்கள் மீது நாங்கள் மிகுந்த நம்பிக்கையும் மரியாதையும் கொண்டவர்கள்.
நாங்கள் அனுப்பிய உங்களின் பிரதியில் சில பந்திகள் எங்களின் பதிவிடலில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறினால் தேசம் இணையவலைப்பதிவில் பதியவில்லை. இத் தவறுக்கும் தேசம் இணையத்தளத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இத் தவறுக்காக உங்களிடம் மன்னிப்பு கோருகின்றோம். நாங்கள் படைப்பாளியின் படைப்பு உரிமையை மதிக்கின்றோம். உங்களிடம் அனுமதி பெறாமல் உங்களின் எழுத்துப் பிரதியை நாங்கள் பயன்படுத்தியமைக்கும் மன்னிப்பு கோருகின்றோம்.
நன்றி.
15. thavaraj on November 17, 2007 12:02 pm
கட்சியில் இருந்த ஒரு நல்ல மனிதரும் மனச்சாட்சியின் கைதியுமான ஊர்காவற்துறை பாராளுமன்ற உறுப்பினரான ஏ.நவரட்ணம்????
நட்சத்திரன்>
நல்ல மனித்ர்களுக்கம் புலிகள் நாட்டுபற்றாளா; பட்டம் வழங்குகிறார்களா?
ஆச்சாpயமாகத்தான் இருக்கு
16. yamuna rajendran on November 17, 2007 1:53 pm
நான் முகமறியாத ஹூயூமன்வாட்ச் சார்ந்த நண்பர்களுக்கு- எனது சங்கடத்தைப் புரிந்து கொண்டு விளக்கமளித்ததற்கு நன்றி. அன்புடன் ராஜேந்திரன்.
17. Ramanan on November 17, 2007 9:36 pm
Thagadu, you are a loose Pathmanathan.
attn: to Thesam
I hope, you woudn’t let to use your valueable site to use street fighters like THAGADU
18. London Suthakini on November 18, 2007 2:27 am
அன்புடன் தேசம் தளத்திற்கு
கடந்த 10 ஆண்டுகளாய் தரமான கருத்துக்கள் தரும் தங்கள் சஞ்சிகை தகடு போன்றோரின்
தரமில்லாத் தகவல்களை தரப்படுத்தாமல் தருவதால் தங்களின் தரத்தை தவிடு பொடியாக்கும்
என்பது என் கவலை. தனியாக நின்று தளைத்த நம் தேசம் தவறியும் தவறிழைககாது இருக்க வேண்டும் என்பதே என் பேரவா.
ஜமுனாவிடம் செய்த தவறுக்காக மன்னிப்பு கோரியவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள். ஆனால் தொடர்ந்தும் தவறுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
தக்சன் நீங்கள் முன்வைத்த கருத்துக்கள் மிகவும் பொருத்தமானவை. தமிழ் மக்களுக்கா பிரச்சனைகள் இதுவரை எந்த தமிழ் தலைவனாலும் முன்னெடுக்கப்படவில்லை. துரையப்பா கொலை அண்ணன் அமிரின் அரசியல் வாழ்வை அலங்கரிக்க செய்த அரசியல் படுகொலை.
அம்புலி காட்டி அம்மா சோறு ஊட்டும்
பிள்ளையின் உண்மை நிலையா தமிழ் மக்கள்
இல்லை இல்லை தரும் உணவதனை சத்தமில்லாதுண்
தருவேன் தண்டனை மரண தண்டனை
மாற்றான் தாய் போல் மாய்க்கிறார் தமிழரை
இதுவரை இலங்கையில் தமிழர் கட்சிகளானாலும் சரி தலைவர்கள் ஆனாலும் சரி ஏன் இன்றுவரை இயங்கும் தமிழ் விடுதலை என்று கூறும் இயக்கங்கள் ஆனாலும் சரி தமிழரை பிரச்சனையில் இருந்து விடுபட வைப்பபது நோக்கமல்ல தமிழர்களால் தம் விடுதலை நோக்கலே தவமாய் கொண்டார்.
அயல்நாட்டு படைகள் வரும் போது தமிழ் அரசியல் தலைவர்கள் அயல் நாட்டில் அடிபட்ட தலைவர்கள் நடுக்காட்டில் அடிபட்டுச் செத்தது தமிழரெல்லோ.
ஏ 9 பாதை திறக்கச் சொல்லி ஏற்றிய உணவும் லொறிகளுடன் தாண்டிக் குளத்தில் தவம் கிடக்க
தமக்கு பாதுகாப்பு இல்லையென்று தடை போட்ட தம்பிமார் தனிக்காட்டில் தலைப் போட்ட எம்பிமார் கொழும்பதனில்…….
தவிக்கும் குழந்தைக்கு பாலுமின்றி தாங்களுமுண்ண உணவுமின்றி தவித்தது எல்லாம் தமிழரல்லோ
பரராஜசேகரன் (போத்துக்கேயருக்கு முன்னதாக யாழ்ப்பாண அரசை ஆண்டவன்) காலம் முதல் பரம்பரையாக தமிழ் பேசி இஸ்லாம் மதத்தை தழுவியதால் இவர்கள் எங்கள் மக்களல்ல இரு நாள் அவகாசம் உங்களுக்கு இருப்பிடம் விட்டு போயிடணும் இல்லையேல் மரணம் உங்களது என்று கூறி எழுப்பிவிட்டார். தமிழ் பேசும் மக்களை துரத்திவிட்டு தாயகம் காக்கும் தந்திரமாம் தமக்கு பயம் என்று சொல்லாமல் தமிழர் தலையில் போட்டு விட்டார்.
4000 கோடி ரூபாயில் தமிழர் பங்கு எமக்கென்றார் இல்லையென்றால் யுத்தமென்றார்
பணத்துக்காய் மூண்ட யுத்தமதில் தினமும் சாவது தமிழரெல்லோ
இப்படிப் பார்த்தால் எத்தனை துயரம் எல்லாம் தமிழர் தலையெழுத்து
நல்லதோர் தவைவன் கிடைக்கும் வரை நலிந்தே வாழ்வதும் தமிழரெல்லோ…..
தக்சன் இப்படி கூறிக் கொண்டு போனால் மகாபாரதத்தையும் விஞ்சி விடும் தமிழர் கதை………
மீண்டும் அடுத்த கருத்தில் சந்திக்கும் வரை
London Suthakini
19. arun on November 18, 2007 12:36 pm
தோழ்ர் ரமேஷ் எழுதிய துரையப்பா முதல் காமினி வரை தொடரை மீள் வாசிப்பு செயயவும். தோழ்ர்காள்
20. Nadsathiran. Chevinthian on November 20, 2007 11:01 am
1. Prof. Sivathamby is 75 this year and it is widely celebrated. Almost all the Tamil press (which is identical of the German press under Nazi rule) who were under the grip of LTTE fascism pathetically portrayed himself as a great Tamil intellectual.
2. In the interview with Yamuna Raj, Prof. Sivathamby appears to be well informed and highly analytical. However, what we should take into account is that Prof. makes these observations in the latter part of the nineties. Mu. Thalaiyasingham was highly analytical of the soviet statehood much earlier period of the fifties. The fact that exorcising and deconstructing Stalin originally initiated by the insider Khrushchev himself soon after Stalin’s death in the latter part of the fifties makes figures like Prof. Siva in the fifties a JOKE.( He is still a JOKE - More than ever now) Prof. Sivathamby lacks intellectual calibre and critical acumen, let alone the hard work and voracious reading.
3. For Arun
(a) I never had a GURU
(b) Comrade Ramesh’s “From Duraiappa to Gamini” is not entirely a reliable serial. Ramesh is the one who deliberately fabricated the truth and wrote in Thinamurasu that Rajini Thiranagama was murdered by EPRLF (Apparently to settle his old score with EPRLF)
3. For Thavaraj
Yes is was an irony that Tigers awarded “NaddupatRaalar to some good men too. I am here talking about the Navaratnam of the seventies and eighties. In his last decade in Canada he was less informed of what was happening in Sri Lanka. He had gone a bit senile and started to believe that LTTE was a clean movement. LTTE seized the moment. The other good man of whom LTTE has full of praises is Pon. Sivakumaran. Luckly he died early and never crossed Prabhakaran’s path - otherwise
Prapakaran would have been the assassin of Sivakumaran.
Thanks for Thakshan and others involved in this debate.
Sorry to write in English. I haven’t yet installed Tamil fonts in my new computer.
-Nad.Che
21. raju on November 21, 2007 7:08 am
“யமுனா ராஜேந்திரன்
அவர்களிடம் மன்னிப்புக் கோருகின்றோம்.”
இது தேவையில்லாத வேலை. யாருடைய எழுத்தும் வெளிவந்தபின் அவாகளுக்குச் சொந்தமில்லை என்ற சங்கதி ஒன்றும் இரகசியமில்லை. ஆனாலும் எழுத்து அறம் கருதியும் எழுத்தின் மீதான மதிப்புகருதியும் அவாகளது பெயரையும் சேர்த்து பதிதல் முறையானது. ய.ரா. வின் எழுத்தை மீள்பதிவு செய்வதையோ; விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதையோ தடுப்பதற்கு ய.ரா.வுக்கு மட்டுமல்ல யாருக்கும் உரிமைகிடையாது. அது தம்மீதான விமர்சனத்தை முன்கூட்டியே தடுக்கும் குறுக்குவழி முயற்சிதான். அப்படிப் பார்த்தால் ய.ரா. கட்டுரைகளில் பாவிக்கும் வகை தொகையான கோட்டேசனுகளுக்கு யாருடைய அனுமதியைப் பெறுகிறார்.
அதேவேளை கொசிப்பு விவாதங்களில் பங்கேற்க தனக்கு விருப்பமில்லை என்று ஒதுங்கியிருக்க அவருக்கு தார்மீக உரிமையுண்டு. எவரும் சீண்டி விளையாடவும் முடியாது.
22. Thakshan on November 22, 2007 1:06 am
மாயைகளிலிருந்து விடுபடுவோம். பெயரில்லா ஊருக்கு வழிகாட்டும் வேதாதங்கள் வேண்டாம். அழிந்து கொண்டிருக்கும் சமூகத்தை காப்பாற்ற வழியைத் தேடுவோம். இந்த கால் நுற்றாண்டில் கொன்றொழிக்கப்பட்ட இளம் சந்ததியினரின் வாழ்வை எண்ணிப் பார்ப்போம். போராளிகளின் தொகைக்கு மேலாக துரோகிகளாக அழிக்கப்பட்ட எங்கள் இளம் சந்ததியினர் விட்ட தவறு என்ன? சமூக நீதி; மனிதநேயம் வேண்டி நின்ற அறிவுஜீவிகள்… தொழிலாளர்கள்… என பல் வகையினரும் மெளனிகளாக்கப்பட்டு உள்ளனர்.
ஊடக சுதந்திரம் மறுதலிக்கப்பட்டு மறுதலையாக வெறும் ஊதுகுழல்களாக்கப்பட்டுள்ளன. இருப்பை தக்க வைக்கவும் வெறும் சுய விளம்பரத்திற்காகவுமே பக்கம் சார்ந்த அரசியல் அலசல்களுக்குள் தங்களை முடக்கிக் கொண்ட அந்தர ஜீவன்களாக சிலர். பேராசிரியர்கள் பெயர் ஆசையாளர்களாகி கோவணத்தையும் இழந்தவர்களாகி..தூ. பொதுவுடமை; மார்க்சியம்; மயிரிசம்…. வாழ்வை; மனிதத்தை நேசிக்கத் தெரியாத கொலைகளை பூசிக்கும் உங்களுக்கெல்லாம் மாமனிதர் கனவு… மனிதனாக வாழுங்கள் உங்களை மக்களே மாமா மாமனிதராக்குவார்கள். விலங்குகளுக்கு மனிதர்கள் எப்போதுமே விரோதிகளாகவே தெரிவர். விலங்குகளுக்கு தங்கள் இருப்பின் மீது மட்டுமே அக்கறை.
23. palan on January 22, 2008 3:53 pm
செவ்விந்தியன் சிவத்தம்பியை அடித்து எசுராசாவை எழுப்புவது விசித்திரமாகக் கிடக்கு. இரண்டு பேருக்கும் என்ன வித்தியாசம்? சுபத்திரனை சிவத்தம்பியாக்கள் எளுப்பினது பிழை எண்டால் யேசுராசா பிற்காலத்தில புதுவை இரத்தினதுரையை எழுப்பினதும் பிழைதானே. என்ன செவ்விந்தி அறப்படிச்சு கூழ் பானைக்குள்ள.
பாலன்
24. Paran on January 23, 2008 4:52 am
செவ்விந்தியனுக்கு தான் கவிஞனா அறிமுகமாக வேணுமெண்டதாலை யாழ்ப்பாணத்திலையும் கொழும்பிலையும் யார்யாருக்கு …. அவரோடை நுகேகொடை மட்டும் பஸ்ஸில போனவைக்குத் தெரியும். தன்ரை புத்தகத்தைப் பற்றி இங்கிலீசிலை எழுத வேணுமெண்டதுக்காக கே.எஸ்.சிவகுமாரனுக்கு எப்பிடி கூஜா தூக்கினவர் எண்டதும் கொழும்பிலை எல்லாருக்கும் தெரியும். பிறகு எப்பிடி கே.எஸ்க்கு அடிச்சவரெண்டதும் தெரியும். அவருக்கு தேவைப்பட்டா எழுப்பவார். தேவை முடிஞ்சு இனி அவராலை பிரயோசனம் இல்லையெண்டா அடிப்பார். சிவத்தம்பியின் வீட்டு வாசல்ல ….. கொழும்பிலை நான் நிண்ட காலத்திலை எத்தினை நாள் நான் கண்டிருக்கிறன்.
இவையெல்லாம் படைப்பாளிகள். விமர்சகர்கள்
புதியதோர் உலகம் – PUTHIYATHOR ULAGAM
15 years ago
No comments:
Post a Comment