மாற்றம் என்பது மாறாதது; இங்கே தோழமைதேடி...

Dec 24, 2009

நிஜமுகங்கள் வேறு

pakthan on December 17, 2009 5:56 am
காலத்துக்கு காலம் வெவேறு இயக்கங்களில் இருந்து வெவேறு வெளியீடுகளில் எழுதியவர்கள் இப்ப மே 18 பெயரில் வியூகம் அமைத்திருப்பது மே 18 இல் என்ன நடந்ததோ அதுதான் தமக்கும் நடக்க இருக்கிறது சீக்கிரம் மக்களிடம் இருந்து ஒதுக்கப்பட்டு ஒளிந்து விடபோகிறார்கள் என்பதை சொல்லாமல் சொல்லி நிற்கிறார்களோ. ஆறு கடக்க அல்ல ஆற்றம் கரைக்கே போகமுடியாத் வெறும் மண் குதிரையே இந்த மே 18 இயக்கம்.
பிரபாகரனை பற்றி எதுவும் தெரியாமல் பிரபாகரனை பற்றி புழுகி வணங்கியவர்கள் மாதிரித்தான் ரகுமான் ஜானை பற்றி தெரியாமல் அவர புளுகும் சிலர் இருக்கிறார்கள். வேஷங்கள் வேறு!! கோஷங்கள் வேறு! நிஜமுகங்கள் வேறு.!!
தீப்பொறியில் இருந்து விலகியவர்களை இயக்க இரகசியங்கள் வெளியில் பரவாமல் இருக்க அவர்கள் படுகொலை செய்யப்பட வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்த பேர்வழிதான் இந்த ரகுமான் ஜான். பெரிஐயாவுக்கு (உமா மகேஸ்வரனுக்கு) சலூட் அடிக்க மறுத்தால் ஒரத்த நாடு பீ காமப் சிறைதான் என்று புளட்டில் சட்டம் கொண்டு வந்தவரும் இவரே. இவருக்கு பிரபாகரனையோ புலியையோ விமர்சிக்க எதுவித உரிமையும் கிடையாது.


கேதீஸ்வரன் on December 15, 2009 11:27 pm
தீப்பொறியில் பொறியில் மாட்டாது மிஞ்சின புளட்காரர் மூண்டே மூண்டு பேர்தான். ரகுமான் ஜான், சலீம், விஜயன். இவர்களுடன் உள்ளுக்கு புகுந்த புலிகள் இளங்கோவையும் பீட்டரையும் சேர்த்தால் ஐஞ்சுபேர்தான். மிச்சப்பேர் எல்லாம் ஒன்றில் பொறியில் மாட்டப்பட்டு மாட்டி மாண்டார்கள். இல்லை பொறியை கண்டு தலைதெறிக்க ஓடி விட்டார்கள். இப்போ விஜயனும் மாட்டி விட்டார்.
சுகுனகுமார்! நீர் விட்ட பெரிய பிழை மெடிக்கல் பகல்டியை விட்டு புளட்டுக்கு போனதுதான்.


கேதீஸ்வரன் on December 15, 2009 11:41 pm
புதியதோர்உலகம் கோவிந்தனோடு மிகவும் நெருக்கமாக நீண்டகாலம் பழகியதாலும் நடந்தவிடயங்களை நன்குதெரிந்ததாலும் சொல்கிறேன். கோவிந்தனின் மரணத்தில் ஒரு பெரியமுடிச்சு இருக்குதான். அதை இங்கே சொல்லி பழசை எல்லாம் கிளற விரும்பவில்லை.
தேவையென்றால் புளட்டின் முன்னாள் வடமாகாண பொறுப்பாளரும் பின்னாளில் தீப்பொறியின் தளபொறுப்பாளராக இருந்த .கனடாவில் இருக்கும் நேசனிடம் அல்லது கொழும்பில் பொட்டனுக்கும் இளங்கோவுக்கும் இடையில் தொடர்பாளராக இருந்த விஜயனிடம் கேட்டு பாருங்கள்.


vs on December 16, 2009 1:16 am

பல முடிச்சுக்களை நான் அவிழ்ப்பதாகவிருந்தால் ரகுமான் யான் வரலாற்றின் குப்பைக்கூடைக்குள் செல்வதாகவே இருக்கும். இது, கடந்தகால நடாத்தை.பழி சுமத்துவதல்ல.
இன்றைய புள்ளி எதுவென்பதை உணர்வது மிக அவசியமானது. தன்னைக் குறித்தான பொதுமைப்படுத்தலில் தனது கடந்தகாலத்து நடாத்தையை மறைக்க முடியாது. அது ஆதாரம் தழுவிய யதார்த்தம்.

நேற்று லண்டனில் மே-18 இயக்கத்தின் வியூகம் சஞ்சிகை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதனை எமது புதிய மாக்சிய மேதை நாவலன் அவர்களின் புதிய திசைகள் பிரிவினரும் தேசம் ஜெயபாலன் கும்பலும் இணைந்து நடத்தியுள்ளனர். அதனை அறிந்து நான் ஆச்சரியப்பட்டேன். இன்னும் சொன்னால் நாவலன் மொழியில் சொல்வதானால் அதனை அறிந்து நான் அதிர்ர்ர்ர்ர்ர்ந்ததுவிட்டேன். ஏனென்றால் இந்த ஜெயபாலன் இதுவரை பலதடவை நாவலனை கீபோட் மாக்சியவாதி என்றும் சொகுசு மாக்சியவாதி என்றும் கிண்டல் அடித்துள்ளார். அதுவும் நேற்று காலைதான் புலி சேதுவின் எழுத்துக்களைவிட இந்த மாக்சிய வாதிகளின் எழுத்துக்கள் ஆபாசமானவை.மோசமானவை.சமூகத்திற்கு தீங்கானவை என்று தனது வெப்சைட்டில் எழுதியுள்ளார். அந்த மை காயுமுன்னரே அதே நாவலனுடன் சேர்ந்து ஜான் மாஸ்டருக்கு விழா எடுத்தால் ஆச்சரியப்படாமல் இருக்கமுடியுமா? அல்லது நாவலன் மொழியில் சொன்னால் அதிர்ச்சியடையாமல் இருக்க முடியுமா? சரி ஜெயபாலன்தான் இப்படி என்றால் எங்கள் புதிய மார்க்சிய மேதை நாவலன் எப்படி இவருடன் சேர்ந்து விழா எடுக்கிறார். மூச்சுக்கு முன்னூறு தடவை மாவோ வாதிகள் மீது பிழை பிடிக்கும் இந்த மாக்சிய ஜம்பவான் எப்படி இப்படி நடந்துகொண்டார்? ஜெயபாலனின் “லிட்டில் எயிட”; இலங்கை அரசின் பணத்தில் இயங்கும் நிறுவனம் என்று குற்றம் சாட்டிவிட்டு இன்று அதே ஜெயபாலனுடன் சேர்ந்து விழா எடுத்தால் அதற்கு என்ன அர்த்தம் தோழர்களே? கலையரசன் கூட்டத்தில் பங்கு பற்றினால் தவறு .ஆனால் அதையே நாவலன் செய்தால் தவறு இல்லையா? இனியொரு ஆசிரியர் அசோக்கிற்கு இதனை சமர்ப்பிக்கின்றேன். இதேபோலத்தான் முன்பு எஸ்.எல்.எவ்.டி பணம் வாங்குவதாக நாவலன் குற்றம் சாட்டினார். பின்பு அதே அமைப்பைச் சேர்ந்த ரங்கன் என்பவரின் தலைமையிலே தனது புத்தக வெளியீட்டை நடத்தினார். இதை அறிபவர்கள் நிச்சயம் அதிர்ந்துவிடுவார்களா என்று தெரியும்.ஆனால் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி ஏமாற்ற இவர்களை நாம் அனுமதிக்கப்போகிறோமா?
நன்ற
நாள் ஒரு இயக்கம் காண்பதற்கும் பொழுதொரு கொள்கை பேசுவதற்கும் ஜான் மாஸ்டர் அவர்களுக்கு முழு உரிமை உண்டு. அதேபோல் மக்கள் தன்னை மாபெரும் தலைவனாக ஏற்றுக்கொள்வதாக கனவு காண்பதற்கும் அவருக்கு முழு உரிமை உண்டு. ஆனால் அவர் இதை மாக்சியத்தின் பேரால் செய்யும் கொடுமையையே எம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தமிழீழம் காண்பதற்கு எந்த மாக்சியத்தை துணைக்கழைத்தாரோ அதே மாக்சியத்தின் பேராலேயே கே.பி தலைமையையும் நியாயப்படுத்தினார். இன்றும் அதே மாக்சியத்தின் பேராலேயே மே18 இயக்கம் காண்கிறார். நாளை இதே மாக்சியத்தின் பேரால் தனது மாபெரும் தோழன் ஜெயபாலனையும் நியாயப்படுத்தினாலும் ் ஆச்சரியமடையத் தேவையில்லை!!
இலங்கை அரசு ஒரு சிங்கள இனவெறி அரசு. அது தழிர்களை கொல்கிறது. தமிழ் பெண்களை கற்பழிக்கிறது. எனவே தமிழீழமே தீர்வாகும். இது தான் புலிகளின் கொள்கை. ஜான் மாஸ்டர் அவர்களும் சாரம்சத்தில் இதையே கூறுகிறார்.ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக மாக்சிய சொற்களை கலந்து கூறுகிறார்.இங்கு அவர் தமிழீழம் சிறந்த தீர்வு என்பதால் அதை முன்வைக்கவில்லை.மாறாக ஜக்கிய இலங்கை சாத்தியமில்லை என்றும் அதனாலேயே தமிழீழம் என்கிறார். சரி அப்படி என்றால் தமிழீழம் சாத்தியமா என்று கேட்டால் அதற்கு ஒழுங்கான பதில் இல்லை.
கடந்த 25 வருடங்களுக்கு மேலாக தமிழீழத்தை முன்வைத்து அதனை அடையமுடியாதது மட்டுமல்ல அதற்காக மாபெரும் இழப்புகளை சந்தித்த பின்னரும் கூட அது குறித்து கொஞ்சம் கூட கவனத்தில் கொள்ளாமல் மீண்டும் புலிகளின் பாணியில் மாக்சியத்தின் பெரால் தமிழீழத்தை முன்வைத்தால் என்ன அர்த்தம்? எதை முன்வைத்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறார்களா? அல்லது தங்கள் பிழைப்புவாதத்திற்காக மக்களை முட்டாள்கள் ஆக்கப்பார்க்கிறார்ளா? வரலாறு பதில் சொல்லும்.
.

No comments:

Post a Comment