மாற்றம் என்பது மாறாதது; இங்கே தோழமைதேடி...

Dec 23, 2020

வெற்றிச்செல்வனும், உமாமகேசுவரனும்... இந்திய ரோவின் சுண்ணாம்பு தடவல்!

 பகுதி 41

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்  -வெற்றிச்செல்வன்

டெல்லியில் எமது பத்திரிகையாளர் தொடர்புகளும் மிகவும் விரிவாக இருந்தது. குறிப்பாக டெய்லி ஹிந்து பத்திரிக்கை ஆசிரியர் ஜிகே ரெட்டி, ஹிந்துஸ்தான் டைம் ஆசிரியர் பட்னிஸ்(இந்த தொடர்பு தோழர் ஜெயபாலன் மூலம் ஏற்பட்டது), இடதுசாரி சிந்தனையுள்ள மிகப் பிரபலமான ஜான் தயால் டெல்லியில் வெளிவரும் patriot, மற்றும் மும்பையில் இருந்து வெளிவரும் blize பத்திரிகைகளில் இவரது கட்டுரைகள் முக்கியத்துவம் பெறும். இவர் ஜான் தயால் எமது டெல்லி அலுவலக வீட்டுக்கே வந்து செயலதிபர் உமா மகேஸ்வரனை பேட்டி கண்டு ஒரு பக்க அளவுக்கு அந்தப் பேட்டி வந்திருந்தது. டெல்லியில் வந்திருந்த தோழர் சைமன், ஜோன் தயல் அவர்களுடன் மிக நீண்ட நேரம் விவாதித்து பேசிக்கொண்டிருப்பார். அடிக்கடி சந்திப்பார். மற்றும் பிபிசி புகழ் பெற்ற டெல்லி நிருபர் மர்க்டெலி, அவுஸ்திரேலிய வானொலி நிருபர் இவர்கள் எமது அலுவலகத்துக்கே வந்து செயலதிபர் உமா மகேஸ்வரனை பேட்டி கண்டு ரேடியோவில் ஒலிபரப்பினார்கள்.

மற்றும் PTI டெல்லி பொறுப்பாளர் எனது நெருங்கிய நண்பர் சந்திரசேகரன் எப்போது செயலதிபர் டெல்லி வந்தாலும் உடனடியாக சிறு பேட்டி எடுத்து போடுவார். pTI செய்தி ஸ்தாபனம் போடும் செய்திகளை இந்தியாவில், உலக நாடுகளில் உள்ள பத்திரிகைகள் எடுத்து போடுவார்கள். இதே மாதிரி ஜெர்மனியைச் சேர்ந்த ரைட்டர் செய்தி ஸ்தாபனமும் பேட்டி கண்டார்கள். இந்தியன் எக்ஸ்பிரஸ் பெண் செய்தியாளர் அவர்களும் வீட்டுக்கே வந்து பேட்டி கண்டார்கள்.

பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது செயலதிபர் உமா மகேஸ்வரனின் ஆளுமை மிகச் சிறந்ததாக இருக்கும். இவ்வளவு திறமை உள்ளவர் எப்படி அத்துலத் முதலியின் வலையில் விழுந்தார், என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.இதுதான் யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள் போல. 83 ,84 ஆம் ஆண்டுகளில் செயலதிபர் உமா மகேஸ்வர னின் திறமையை பார்த்து சந்தோசப் பட்டவர்கள் நாங்கள். 83 ஆம் ஆண்டு செயலதிபர் உமாமகேஸ்வரன், சந்ததியார் இருவரும் சிலவேளைகளில் ஜோதி ஸ்வரன் என்ற கண்ணனும் அமர்ந்து பல மணி நேரம் இயக்க வளர்ச்சி மற்றும் போராட்டம், மற்ற இயக்கங்கள் பற்றி பல மணி நேரம் அமர்ந்து விவாதிப்பதை, நான், மாதவன் அண்ணா, மாறன், கந்தசாமி, சிலவேளைகளில் செந்தில் தூர இருந்து இவர்களையே பார்த்துக்கொண்டு இருப்போம். எங்கள் வேலை அவர்களுக்கு தேநீர் உணவு போன்றவற்றை வழங்குவது. சந்ததியாரும், செயலதிபர் உமா மகேஸ்வரனும் குறிப்புகள் எடுத்துக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் விவாதத்தில் களைத்து போய் விட்டால், கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்க எங்களோடு பேசி எங்களை கிண்டல் பண்ணுவார்கள். மிகவும் அருமையான ஆரம்பகால நிகழ்வுகள்.

என்று ஷெர்லி கந்தப்பா எமது இயக்கத்துக்குள் அடி எடுத்து வைத்தாரோ எல்லாம் மாறிவிட்டது. ஷெர்லி நம்பிக்கைக்கு உரிய ஆள் இல்லை இலங்கை உளவுத்துறையின் ஆள் என்று சந்ததியார செயல் அதிபரிடம் கூற அதைக் கேட்காமல் எமது செயலதிபர் ஷெர்லி கந்தப்பாவுக்கு இயக்கத்தில் முக்கியத்துவம் கொடுக்க எமது இயக்கத்தில் தலைவர்கள் இடையே விரிசல் ஏற்பட்டது. இதை நான் டெல்லியில் இருக்கும் போது , சென்னையில் இருந்து சகா நன்ப நிர்வாக பொறுப்பாளர்கள் கவலையுடன் பரிமாறிக்கொண்ட செய்திகள். அதோடு செயலதிபர் உமாமகேஸ்வரன் மூடிய அறைக்குள் ஷெர்லி கந்தப்பா உடன் ரகசியமாக பேசும் பழக்கம் மட்டுமே தொடர்வதாக குறிப்பிட்டு சக சென்னை நிர்வாகிகள் கவலைப்படுவார்கள்.

சென்னை இலங்கை துணைத் தூதுவர் அலுவலகத்துக்கு ஒரு துணை தூதர் இருக்கும்போது, இன்னொரு துணைத் தூதர் வழமைக்கு மாறாக நியமிக்கப்பட்டிருந்தார். அவரின் அலுவலகம் சென்னை தாஜ் ஓட்டலில் , அங்குதான் அவர் தங்கியிருந்தார். அவரின் பெயர் திஸ்ஸ ஜெயக்கொடி. சென்னை raw அதிகாரி உன்னி கிருஷ்ணன் cia உளவாளியாக மாறியதற்கும் இவருக்கு நெருங்கிய சம்பந்தம் உண்டு. இவரது தாஜ் ஹோட்டல் ரூமுக்கு ஷெர்லி கந்தப்ப்பாவும், செயலதிபர் உமா மகேஸ்வரனும் இரவு 10 மணிக்கு மேல் மாதத்தில் பல நாட்கள் போய் தங்கியிருந்து காலை ஐந்து மணிக்குத்தான் திரும்புவார் களாம். துணைத் தூதுவர் திஸ்ஸா ஜெயக்கொடி கண்காணிக்க வென்று என்றுஇருந்த இந்திய IB அதிகாரிகள், செயலதிபர் உமா மகேஸ்வரனை டெல்லிக்கு வரவழைத்து விபரங்கள் கேட்டபோது நானும் உடன் இருந்தேன். அவர் மழுப்பலான பதில் சொல்லியே கூறினார். இலங்கை துணைத் தூதுவர் எமது இயக்க ஷெர்லி கந்தப்பா வின் நெருங்கிய நண்பர் என்றும், தானும் போய் ஓரிரு முறை சந்தித்தேன் என்றும் பொய் கூறினார்.இந்திய அதிகாரிகளை சந்தித்து விட்டு நாங்கள் இருவரும் வரும்போது, செயலதிபர் உமா மகேஸ்வரன் இவங்க லேசுப்பட்ட ஆளில்லை, எல்லாரையும் மிக நெருக்கமாக உளவு பார்க்கிறார்கள் நாங்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று கூறினார். இலங்கை துணைத் தூதரை சந்தித்து விசாரிக்கப் பட்டவர்களில் ஈரோஸ் அமைப்பின் பாலகுமாரன் ஒருவர்.

இந்த இலங்கை தொடர்புகள் கிடைத்த பின்பு தான் சந்ததியார் கொலை, எமது செயலதிபர் உமாமகேஸ்வரன் தடம் புரள துடங்கியது எல்லாம் ஆரம்பமாயின. இதைப்பற்றி நாங்கள் ஒரு சில முக்கிய தோழர்கள் பல செய்திகள் எங்களுக்குள் பரிமாறி., இது பெரியவரின் அதாவது செயல் அதிபரின் ராஜதந்திரமாக இருக்கக்கூடும் எமது செயலதிபர் உமா மகேஸ்வரன் கொழும்பில் இயங்கிய போது, அவருக்கு முழு உதவியும் லலித் அத்துலத் முதலி, முன்பு துணை தூதுவராக இருந்த திச ஜெயக்கொடி தான். கொழும்பில் செயலதிபர் உமா மகேஸ்வரன் தங்கியிருந்த வீடு மிகவும் பாதுகாப்பான இடத்தில் உள்ள லலித் அத்துலத் முதலியின் சகோதரியின் வீடு என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் விஜய குமாரதுங்க எமது தோழர்கள் தங்கவும், அலுவலகம் நடத்தவும் வேறு வீடுகள் உதவி செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அண்மையில் எனது பதிவுகளைப் பார்த்த, சென்னையில் உமா மகேஸ்வரனின் வீட்டில் மெய் பாதுகாப்பாளர் ஆக இருந்த ஒரு தோழர் தன்னை அடையாளம் காட்ட வேண்டாம் என்றும் பல செய்திகளை கூறினார். சென்னை வரும்போது அவரை நான் சந்தித்திருக்கிறேன். தற்சமயம் வெளி நாட்டில் வசிப்பதாக கூறினார். அவர் கூறிய விஷயங்கள் எல்லாம் தாஜ் ஹோட்டலுக்கு செயலதிபர் போய் விடிய வரும்வரை, அவருக்காக தன் காரில் தூங்குவதாக வும், ஆனால் யாரை சந்திப்பார் என்று தனக்கு தெரியாது என்றும் கூறினார். அதோடு அவர் கூறிய மற்றொரு விடயம் சந்ததியாரை பிடித்து வர செய்ய, சங்கிலி கந்தசாமி இடம் செயலதிபர் உமாமகேஸ்வரன் கோர, கந்தசாமி பெரிய ஐயா இது மட்டும் என்னால் முடியாது என்று கூறியிருக்கிறார். கந்தசாமி செயலதிபர் இடம் முதன்முறையாக இப்படிக் கூறியது தங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது என்றும் கூறினார். இவர்சென்னையில் கந்தசாமியின் பாதுகாப்பு பிரிவில் இருந்தவர். சென்னையில் கேகே நகரில்இருக்கும் உமாமகேஸ்வரன் வீட்டுக்கு சாதாரண தோழர்கள் யாரும் வந்து விட முடியாதாம். கந்தசாமி கந்தசாமியின் பாதுகாப்பு பிரிவில் உள்ளவர்கள் மட்டும் தான் நடமாடுவார் கலாம் ஒரு நாள் மொக்கு மூர்த்தி வந்திருக்கிறார், இவர்கள் அவரை தடுக்க செயலதிபர் வெளியில் வந்து தான்தான் வரச்சொன்னேன் என்று கூறி வீட்டுக்குள் அழைத்துப் போய் பேசி இருக்கிறார். இதன் பின்புதான் மொக்கு மூர்த்தியின் உளவுப்படை, வாமதேவன் ஆகியோர்சந்ததியாரை கடத்தி கொலை செய்திருக்கிறார்கள். இந்த சம்பவத்துக்குப் பின் மொக்கு மூர்த்தி செயலதிபர் உமாமகேஸ்வரன் நேரடி தொடர்பில் இருந்திருக்கிறார். கந்தசாமியின் உளவுப்பிரிவு என்றாலும் மூர்த்தி கந்தசாமிக்கு கட்டுப்பட்டு நடக்கவில்லை. செயலதிபர் உமாமகேஸ்வரன் மூர்த்தி தொடர்பின் பின் மூர்த்தி பல இயக்கத் தோழர்களை தன்னிச்சையாக விசாரித்து கொலை செய்த சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் கடைசியில் ஒட்டுமொத்தமாக பழியும் சங்கிலி கந்தசாமி மேல் விழுந்துள்ளது. அவர் கூறிய இன்னொரு விடயம் தளத்தில் இருந்த எமது ராணுவ தளபதி மென்டிஸ், 1986கடைசிப் பகுதியில் கிட்டு கைது செய்ய முன்பு, செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு மிக அவசர செய்தி ஒன்று கூறியுள்ளார். ஒரு குறிப்பிட்ட நாள் நேரத்தில் தன்னுடன் வயர்லெஸ் இல் பேசும்படி, அதோடு அங்கு தங்களுக்கு நெருக்கடியான நேரமாக இருப்பதாகவும் உடனடியாக பல தோழர்களையும் ஆயுதங்களையும் தளத்துக்கு அனுப்பும்படி கூறியுள்ளார். செயலதிபர் உமா மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாவலர் கூறிய விடயம் இயக்க வயர்லெஸ் ரகசிய அலுவலகம் சென்னைஆதம்பாக்கத்தில் இருந்ததாகவும், மென்டிஸ் குறிப்பிட்ட நாள் நேரத்தில் செயலதிபர் போய் மென்டிஸ் உடன் பேசவில்லை யாம். தான் செயலதிபர் இடம் நினைவுபடுத்த அவர் கந்தசாமியை அனுப்பி விட்டேன் என்று கூறியுள் ளார். அந்த காலகட்டத்தில் கந்தசாமி எல்லா பொறுப்புகளும் பறிக்கப்பட்டு சும்மா இருந்திருக்கிறார். தான் கந்தசாமியை பார்த்து மென்டிஸ் உடன் பேசினீர்களா என்று கேட்க. தனக்கு ஒன்றும் தெரியாது பெரிய ஐயா எனக்கு எந்த வேலைகளும் கொடுப்பதில்லை என்று கூறியுள்ளார். அப்போது ஏன் மெண்டிஸ் உடன் பேசாமல் தவிர்த்தார். என தான் ஆச்சரியப்பட்ட தா க அந்த மெய்ப்பாதுகாவலர் கூறினார். இது நடந்து இரண்டு நாட்களின் பின் சின்ன மெண்டிஸ் கிட்டுவால்1987 ஜனவரியில் மென்டிஸ் பிரபாகரனால் நேரடியாக கொலை செய்யப்படும்போது செயலதிபர் உமாமகேஸ்வரன் டெல்லியில்இருந்தார். ஒருநாள் காலை சென்னையிலிருந்து மாதவன் அண்ணா தொலைபேசி மூலம் மெண்டிஸ் முதுகு முழுக்க அயன் பாக்ஸ் சுடப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக செய்தி வந்திருப்பதாக கூறினார். இந்தக் கொலையை பிரபாகரன் நேரடியாக செய்ததாகவும், காரணம் கிட்டு மெண்டிசை பிடித்து , சித்திரவதைகள் ஒன்றும் செய்யாமல் நல்லவிதமாக நடத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் மெண்டிஸ் சேரும்படி வற்புறுத்தி கொண்டிருந்ததாகவும், காரணம் முன்பு பலமுறை கிட்டுவை கொல்ல கூடிய சந்தர்ப்பம் இருந்தும்,மெண்டிஸ் ஒன்றும் செய்யாமல் விட்டதால் கிட்டு மெண்டிஸ் மேல் ஒரு மதிப்பு வைத்திருந்திருக்கிறார்.

அந்தக் காலகட்டத்தில் பிரபாகரனை விட உலக நாடுகள் பத்திரிகைகள் எல்லாம் கிட்டுவின் புகழை தான் பாடினே. கிட்டத்தட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் கிட்டு என்று தமிழ்நாட்டில் எல்லாம் பத்திரிகைகளில் செய்திகள் வரும். இதனால் கிட்டு மேல் பிரபாகரன் கடுங்கோபத்தில் இருந்ததாகவும், ஆனால் இலங்கை போய் முழு பொறுப்புகளையும் தானே எடுத்து, கிட்டுவின் மேல் உள்ள ஆத்திரத்தில் கிட்டு தடுக்க தடுக்க சின்னமேண்டிசை, சூடும் அயன்பாக்ஸ் ஹால் சுட்டு உடம்பு தோலை முழுக்க உரித்து பிரபாகரன் நேரடியாக கொலை செய்ததாக தகவல்கள் வந்தன. இது பற்றி மேலும் உண்மைகளை அறிந்த தோழர்கள் உண்மையில் நடந்த விஷயங்களை பதிவுகளாக போட்டாள் எல்லோருமே அறியக்கூடியதாக இருக்கும்.

மெண்டிஸ் கொலை பற்றிய தகவல் ஒரு தவறு நடந்துள்ளது. அதாவது மென்டிஸ் அயன்பாக்ஸில் சூடு வைத்து கொலை செய்தது மாத்தையா என்று என தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த நேரம் பிரபாகரன் அங்கு இருக்கவில்லை எனவும் கூறுகிறார்கள். கிட்டு, மாத்தையா போட்டியில் இது நடந்ததாகவும் கூறுகிறார்கள். இது அந்த நேரம் கேள்விப்பட்ட தகவல் என்றபடியால் நான் தவறுக்கு மன்னிப்பு கேட்கிறேன்.

பல நண்பர்கள்கேள்விப்பட்டசெய்திகளை எழுத வேண்டாம் என்று கூறுகிறார்கள். உண்மைதான். ஆனால் அன்று சின்ன மென்டிஸ் கொலை தொடர்பாக டெல்லியில் செயலதிபர் உமா மகேஸ்வரன் மற்றும் நான் பத்திரிகையாளர் மற்றும் எங்கள் தொடர்பு உள்ளவர் களிடம் பிரபாகரன் இந்தக் கொலையைநேரடியாக செய்தார் என்று தான் பிரச்சாரம் செய்தோம். அது எனக்கு மிக நன்றாக நினைவில் உள்ளதுஅதைத்தான் இங்கு குறிப்பிட்டுள்ளேன் தவிர புதிதாக கேள்விப்பட்ட சம்பவத்தை எழுதவில்லை இது எனது நேரடி அனுபவம்.

தொடரும்.




பகுதி 40

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்

85 ஆம் ஆண்டு 86 ஆண்டு ஆரம்பத்தில் என நினைக்கிறேன். மாணிக்கம் தாசன் தனது தம்பி அசோக் டெல்லி அனுப்புவதாகவும் அங்கு சில மாதங்கள் என்னோடு இருக்கட்டும் என்றும் கூறினார். நான் இதுபற்றி செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் தொலைபேசி மூலம் கூறியபோது, அவர் மாணிக்கத்தின் தம்பியே டெல்லியில் சில காலங்கள் இருக்கட்டும் என் றார். டெல்லி வந்த மாணிக்கத்தின் தம்பியை வரவேற்று தங்க வைத்தேன் சின்ன பையன். எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் டெல்லியில் இருந்தார் ஆனால் அடிக்கடி சென்னைக்கு போக வேண்டும்என அடம் பிடிப்பார். மாணிக்கம் தாசன் இடம் இதுபற்றி தொலைபேசியில் கூறியபோது அவனை அனுப்ப வேண்டாம் எனக் கூற, நான் என்ன பிரச்சனை என்று கேட்க தாசன் , தனது தம்பிஅடிக்கடி பரந்தன் ராஜன் வீட்டுக்குப்போய் இருக்கிறான். இதனால் தன்னை இயக்கத்தில் சந்தேகப்படுகிறார்கள். அப்போது நான் கேட்டேன் ராஜன் வீட்டுக்கு தானேஇதனால் என்ன பிரச்சனை? அப்போதுதான் தாசன் கூறினார் ராஜனுக்கும் பெருசிக்கும்( உமா மகேஸ்வரனுக்கு) இங்கு சிறு பிரச்சனை நிரஞ்சன் கொலை சம்பந்தமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால் தனது தம்பி அங்க போவது மற்றவர்கள் தன்னை யும் சந்தேகப்படுகிறார்கள் என்று கூறினார். எனக்கு அப்போது தான் முதல்முறையாக எமது இயக்கத்தின் குள் மறுபடியும் பிரச்சனை என்று தெரியவந்தது.

சில நாட்களின் பின் மாணிக்கம் தாசன் தம்பி அசோக் சென்னை போய் விட்டார். அவர் தற்போது பிரான்சில் இருக்கிரார். ஆனந்த் பெயர். ஒரு நாள் செயலதிபர் உமா மகேஸ்வரன் தொலைபேசி மூலம் எனக்கு ஒரு பாஸ்போர்ட் ரெடி பண்ண சொன்னார்ஜெர்மன் போவதற்கு என்று. நானும் ஏற்பாடு செய்து வைத்திருந்தேன். திடீரென ஒரு நாள் ஷெர்லி கந்தப்பாவும், திருஞானம் என்றரமேஷ் இருவரும் டெல்லி வருகிறார்கள் அவர்கள் ஜெர்மன் போவதற்கு உதவி செய்யும்படி கூறினார். அவர்களது பயண விவரம் யாருக்கும் தெரியக்கூடாது என்றும் கூறினார். இவர்கள்டெல்லி வந்தபோது, திருஞானம் எனது நல்ல நண்பர் .அவரிடம் என்ன விஷயம் என்று கேட்டேன். அவர் ரகசியமாக மிக ரகசியமாக இலங்கை பாதுகாப்பு அமைச்சர் அதுலத் முதலி செயலதிபர் உமா மகேஸ்வரனை ஜெர்மனியில் ரகசியமாக சந்திக்க விரும்பியதாகவும், எமது இயக்கத்தில் ஏற்பட்டுள்ள இன்றைய குழப்ப நிலையில் செயல் அதிபரால் போக கஷ்டம் என்றும் அதோடு இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் எங்களுக்கு மிகப்பெரிய அவமானம் என்றும், செயலதிபர் உமாசார்பாக தன்னை அதாவது ரமேஷ் அனுப்புவதாகவும் மிச்சம் எல்லாவற்றையும் ஷெர்லி கந்தப்பா பார்த்துக்கொள்வார் என்றும் கூறினார். ஜெர்மனி போய் வந்த பின்பு ரமேஷிடம் விபரம் கேட்டபோது அவர் கந்தப்பா அத்துலத் முதலிடம் தன்னை அறிமுகப்படுத்தி செயலதிபர் உமா சார்பாக வந்திருப்பதாக அறிமுகப்படுத்தி விட தான் தலை காட்டியதாகவும், பின்பு தன்னை விட்டு விட்டு, அவர்கள் இருவரும் இரண்டு நாள் மிக ரகசியமாக மிக அதிக நேரம் பேசியதாகவும், என்ன பேசியதாகக் தனக்குத் தெரியாது என்றும் கூறினார். ஆனால் செவிலி கந்தப்பா மிக மகிழ்ச்சியுடன் இருந்ததாகவும் கூறினர். அவர்கள் டெல்லி வந்தபோது நானும் கவனித்தேன் ஷெர்லிமிக மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்.

ஒரு முறை சித்தார்த்தன், லண்டன் கிருஷ்ணன் ,செயலதிபர் உமாமகேஸ்வரன் மூவரும் டெல்லி வந்து இருந்த போது,நாங்கள் நால்வரும் மிக மகிழ்ச்சியோடு பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். மொக்கு மூர்த்தி, வாமதேவன், கண்ணன்,வாசுதேவா போன்றவர்களின் செயல்பாடுகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். மொக்கு மூர்த்தியை பற்றி சித்தார்த்தனும் கிருஷ்ணனும் கவலை தெரிவித்தார்கள். அப்போது உமா மகேஸ்வரன் மூர்த்தியின் திறமையைப் பற்றிக் கூறினார். முதன்முதலில் தாங்கள் ஒரு கொலையை செய்து சரியாக புதைக்காது விட்டதனால் ஒரத்தநாட்டில் ஊர் மக்கள் அதைப் பற்றிப் பேச தொடங்கியதால்,. முகாம் பொறுப்பாளர் பயிற்சிக்காக வந்த தோழர் மூர்த்தி அழைத்துக்கொண்டுபோய் அந்த பிணத்தை தோண்டி எடுத்து வேறு இடத்தில் புதைக்க சொல்ல, அந்தத் தோழர் மூர்த்தியும் அருவருப்பு படாமல் அந்த பிணத்தை தோண்டி எடுத்து சாக்குமூட்டையில் கட்டி பிண நீர் வழிய வழிய தலையில் தூக்கி வைத்து வேறு இடத்தில் வைத்ததாகவும், அப்போதுதான் மூர்த்தியின் விசுவாசமும், துணிச்சலும் தங்களுக்கு தெரியவந்து அவரை எமது விசாரணை (சித்திரவதை முகாம்) பொறுப்புக்கு போட்டதாகவும் கூறினார். அதன் பின்னர் தோழர் மூர்த்தி , மொக்குமூர்த்தி ஆகிவிட்டார் என செயலதிபர் சிரிப்புடன் கூறினார். பின்புஎமது செயலதிபர் உமாமகேஸ்வரன் வாமதேவன் இன்திறமையைப் பற்றிக் கூறினார். அதாவது ஒரு ஊரில் பெண்கள் முழுக்க மிகமிக பத்தினியாக வேறு ஆண்களை ஏறெடுத்து பார்க்காத வர்கள் என்று பெயரெடுத்து அந்த ஊரில் வாமதேவன் விட்டடால், குறைந்தது 10 பெண்களை யாவது பத்தினி தன்மையை இழக்கச் செய்து விடுவார் என்று அட்டகாசமாக சிரித்துக்கொண்டே கூறினார்.

சித்தார்த்தன் கேட்டார் இந்த உளுத்துப் போன திறமையற்ற கண்ணன் என்கிற சோ திஸ் வரனே ஏன் எமது கழக ராணுவ பொறுப்புக்கு போட்டீர்கள் என்று ,பரந்தன் ராஜன் ஐ ராணுவ பொறுப்புக்கு போட்டிருந்தால், திறமையாக கழக ராணுவத்தைவழிநடத்தி இருப்பார் என்று, அதற்கு செயலதிபர் உமாமகேஸ்வரன் மறுத்து தலையாட்டி, அது தனக்கு ஆபத்து என்றும் எல்லா தோழர்களையும் தனது திறமையால் ராஜன் தன் பக்கம் இழுத்து விடுவார். ஆனால் கண்ணன் ஒன்றும் செய்யாவிட்டாலும் தான் சொல்வதைக் கேட்டு நடக்கும் தனக்கு எதிராக ஒருகாலமும் திரும்பாது, என்றும் கூற சித்தார்த்தன் விசுவாசத்தை விட திறமை முக்கியம் மாணிக்கம் தாசனை சரி போட்டு இருக்கலாம் தானே என்று கூறினார். அதற்கு செயலதிபர் மாணிக்கம் தாசன் தோழர்களை தலைமைதாங்கி வழிநடத்த தகுதியற்றவர், மாணிக்கம் தாசன் ஒரு சாகச விரும்பி. எப்பவும் எதையாவது சாகசமாக செய்ய விரும்பும் ஆள்என்று கூறினார்.

சின்ன உதாரணம் ஒன்றையும் செயலதிபர் கூறினர். எப்படி என்றால் 60 பேர் இருக்கும் ஒரு முகாமுக்கு மாணிக்கம் தாசன் போனால், அங்கு ஒருவருக்கும் சாப்பிட ஒன்றும் இல்லை பட்டினியாக இருக்கிறார்கள் என்று தெரிந்தால், மாணிக்கம் தாசன் தனக்கு வேண்டிய ஒரு சில தோழர்களை வேலை இருக்கிறது என்று கூறி அழைத்துப்போய் அவர்களுக்கு பிரியாணி போன்ற சில உணவுகளை வாங்கிக் கொடுத்து கூட்டிக்கொண்டு வருவார். ரகசியமாக. அதே முகாமுக்கு பரந்தன் ராஜன் போனாள் தோழர்கள் பட்டினியாக இருப்பதைப் பார்த்து, உடனடியாக முகாம் பொறுப்பாளர் அழைத்து எத்தனை பேர் இருக்கிறீர்கள் என்று கேட்டு தன்னிடமிருக்கும் பணம் முழுவதையும், எடுத்துக்கொடுத்து, பணத்துக்கு அளவாக அரிசி பருப்பு கிழங்கு வாங்கி வரும்படி கூறி பின்பு அவர்களுடன் இருந்து சாப்பிட்டுவிட்டு கிளம்புவார். இப்படி இருந்தால் பயிற்சிபெறும் தோழர்கள் ராஜனுக்கு தான் விசுவாசமாக இருப்பார்கள்.அதனால் தனக்கு எதிராக இன்னொரு ஆள் வளர்வதை வளர விடக்கூடாது என்றார். வாசுதேவ ஐ பற்றி கூறும் போது வாசுதேவா, கண்ணனை போன்றவர் தான். வளவள என்று பேசுவார். சோசலிசம் தத்துவம் கொள்கை என்று பேசமாட்டார். குழப்பமாக பேசியே மற்றவர்களை குழப்பி விட்டு விடுவார். அதனால் வாசுதேவா வை பற்றி கவலை இல்லை என்று கூறினர். செயலதிபர் இன் பேச்சைக் கேட்டு நாங்கள் திகைத்து நின்றோம்.

எங்கள் திகைப்பை போக்க ஒரு சிரிப்பு கதையைக் கூறினார், தஞ்சாவூரில் மற்ற இயக்கங்களின் நடவடிக்கைகளை, நடமாட்டங்களை அறிய மூர்த்தியின் உளவுப்படை பல இடங்களில் சுற்றி வருவார்களாம். அப்படிப் போன ஒருஉளவுத்துறை தோழர் ஒரு இலங்கை அரசின் சிங்கள உளவாளி இருப்பதாக மூர்த்திக்கு தகவல் கொடுக்க வேறு சில தோழர்களும் சேர்ந்து சிங்கள உளவாளியை பிடித்துக்கொண்டு வந்து விட்டார்களாம். அவன் பேசிய மொழி தெரியாமல் அரைகுறை சிங்களம் தெரிந்த ஒரு தோழரை அழைத்து வந்து விசாரிக்கச் சொல்லி இருக்கிறார்கள், அந்தத் தோழரும் திறமையாக விசாரித்து அந்தத் தோழரும் அந்த இலங்கை உளவாளி புளொட் இயக்கத்தை பற்றி அறிய வந்ததாக கூறியதாக மக்களிடம் ஒப்பித்து விட்டு போய்விட்டார். மொக்கு மூர்த்தியும் வழமையாக சித்திரவதை செய்து கொலை செய்து கொண்டிருக்கிறார். அந்த இலங்கை உளவாளியின் உடுப்புகளை சோதனை செய்தபோது தஞ்சாவூர் லாட்ஜ் சாவி இருந்திருக்கிறது.வேறு சில உளவாளிகளும் இருக்கலாம் அல்லது முக்கியமான உளவு பொருட்கள் இருக்கலாம் நினைத்துபோக. அங்கு அவர்களுக்கு அவர் இலங்கை உளவாளி அல்ல வடநாட்டிலிருந்து துணிமணி விக்க வந்த இந்திக்காரன் என்று தெரியவந்தது. இவர்களுக்கு இந்தியும் புரியாது சிங்களமும் புரியாது. அவர்கள் வந்து மொழி பெயர்ப்பு செய்த தோழ ரைகடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். இதைக்கேட்டு சித்தார்த்தன் கொஞ்சம் கடுமையாகவே அந்த இந்திக்காரன் குடும்பம் என்ன பாடுபடும், முக்கு மூர்த்தி தோழர்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்திருக்க வேண்டும் என்று கூற, தான் அவர்களை கண்டித்து விட்டதாக கூறினார்.

எமது இயக்கத்தின் மறுமுகம் கொஞ்சம் கொஞ்சமாக எங்களுக்குத் தெரிய ஆரம்பித்த நேரம் அதுவாகும். ஆனாலும் அன்று அதை நாங்கள் பெரிய சீரியஸ் விஷயமாக நினைக்கவில்லை என்பதும் உண்மையே. பெரிய விடுதலை இயக்கத்தில் இப்படியான தவறுகள் நடக்கத் தான் செய்யும் என்று எமது செயலதிபர் உமா மகேஸ்வரன் கடைசியில் கூறிய வார்த்தைகள் தான் நாங்கள் நம்பியது.

தொடரும்.




பகுதி 39

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்

லண்டன் கிருஷ்ணன். சுப்பையா கிருஷ்ணபிள்ளை. ஆரம்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு லண்டனில் ஆதரவாக இருநதார். பின்பு உமா மகேஸ்வரன்தலைமையில் இருந்தபுலிகளுக்கு லண்டனில் இருந்து உதவிகள் செய்து வந்தார். இவர்தான் இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை கொலை உட்பட பல கொலைகளுக்கு முதன் முதலாக உரிமை கோரிய கடிதம்லண்டனிலிருந்து முதன்முதலாகஇவரால்தான் அனுப்பப்பட்டது. ஆனாலும் பிரபாகரன் பணவிஷயத்தில் இவரைப் பற்றி நல்ல அபிப்ராயம் இருந்ததில்லை என அறியக்கூடியதாக இருந்தது

1983 ஆண்டு இவரை புளொட் வேலை செய்யும்படி செயலதிபர் கேக்க உடனடியாக வெளிநாடுகளில் புளொட் கிளைகள் அமைக்க, பணம் சேகரிக்க, லெபனான் பயிற்சிபெற,(லெபனான் பயிற்சி மகா உத்தமன் மூலம்கிடைத்ததாகவும் ஒரு செய்தி உண்டு)போன்ற பல வேலைகளை குறுகிய காலத்தில் செய்து வெளிநாடுகளில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் வெளிநாடுகளில் வளர்ச்சி பெற லண்டன் கிருஷ்ணரும் முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. அவருடன் கூட இருந்த சித்தார்த்தன், சீனிவாசன் போன்றவர்களும் கிருஷ்ணனுக்கு உதவி செய்தவர்கள். வெளிநாடுகளில் இருந்த பழைய பெரியவர்களுக்கு தர்மலிங்கம் எம்பி யின் மகன் சித்தார்த்தன் என்பது எமக்கு ஆதரவு கூட ஒரு காரணம்.

லண்டன் கிருஷ்ணன் பலமுறை டெல்லி வழியாக சென்னை போயிருக்கிறார். லண்டன் கிருஷ்ணன் வரும்போது ஏர்போர்ட்டுக்கு ஆட்டோ கொண்டு போக கூடாது டாக்ஸி தான் கொண்டு போக வேண்டும். அந்தக் காலத்தில் குடி தண்ணீர் பாட்டில் வாங்கி வைக்க வேண்டும். பல சொகுசு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் அவர் வந்து போகும் போது கொஞ்சம் பயம் தான். காரணம் அவருக்கு செய்து கொடுக்கும் வசதிகளில் கொஞ்சம் குறைந்தால், எங்களை தனது அடிமைகளை போல் நினைத்து கண்டபடி திட்டுவார்.

இவர் வந்து போகும் போது இவரின் செயல்கள் பற்றி ரிப்போர்ட்டாக போட்டால், செயலதிபர் உமா மகேஸ்வரன் என்னிடம் இதைப் பற்றி நீர் பெரிதுபடுத்த வேண்டாம். நான் கிருஷ்ணனிடம் பேசுகிறேன் என்று கூறுவர்.

கிருஷ்ணன் சென்னைக்குப் போனால் அங்கு முக்கிய தோழர் களை நட்பு பிடித்து அவர்களைஉயர்தர கடைகளில் சாப்பிட அனைத்து போவது நல்ல உடுப்புகள்வாங்கிக் கொடுப்பது போன்ற தனிப்பட்ட நட்புக்களே வளர்த்துக் கொள்வது போன்ற செயல்களை செய்வது பற்றி சந்ததியார் பலமுறை கிருஷ்ணனை கண்டித்திருக்கிறார். சந்ததியார் பலமுறை செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் வெளிநாட்டுக் கிளைகளில் இருந்துஇந்தியாவுக்கு வருபவர்களையும் வெளிநாட்டுக் கிளைகளின் சார்பாக தனிப்பட்ட நபர்கள் வந்து இயக்க கட்டுக்கோப்பு களை மீறி செயல்பட விட வேண்டாம் என கூறியுள்ளார்.அதனால் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் திரும்ப போகும்போது சந்ததியாரை திட்டிக் கொண்டே போன சம்பவங்கள் பல உண்டு. அதோடு எல்லா வெளிநாட்டுக் கிளை களும், சேகரித்த பணத்தை லண்டன் கிருஷ்ணன் இடமே கொடுக்கச் சொல்லியும் ஏற்பாடு.

வெளிநாட்டுக் கிளைகளின்அவர்களின் செயல்பாடுகளும் சேகரித்த பணம் செலவழித்த தொகை போன்ற எந்த விபரங்களும் நேரடியாக செயலதிபர் உமா மகேஸ்வரன் இடமே கொடுக்கப்பட்டது. ஆனால் இயக்க பொருளாளர் இடம் வெளிநாட்டுப் பணம் சம்பந்தமாக எந்த விபரமும் கொடுக்கப்பட்டது இல்லை. சந்ததியார் தீர்க்கதரிசி போல, அன்று கூறினார் , வெளிநாட்டு கிளைகள் ஆல் குறிப்பாக லண்டன் கிளை யைப்இயக்கத்தின் நிர்வாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராவிட்டால், எமது இயக்கம் மோசமான விளைவுகளை சந்திக்கும் என்றார். அன்று சந்ததியாரை நாங்கள் எல்லாம் செயலதிபர் மேல் உள்ள பொறாமையால் வெறுப்பால் சொல்லுகிறார் எனநினைத்து சந்ததியாரை வெறுப்பாக பார்த்தோம் அவர் கூறியது 1989ஆம் ஆண்டு உண்மையாகிவிட்டது.

என் 19 89ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கல்கிசையில் ஒரு ஹோட்டலில் வைத்து லண்டன் கிருஷ்ணனும் செயலதிபர் உமா மகேஸ்வரனும் மிக மிக மோசமான வார்த்தைகளால் திட்டி கைகலப்பு நடந்திருக்கிறது.செயலதிபர் உமாமகேஸ்வரன் கிருஷ்ணனைப் பார்த்து நீ கோடிக்கணக்கான ரூபாய்களை ஏமாற்றி விட்டாய் என கூற, கிருஷ்ணன் செயலதிபர் உமாவைப் பார்த்து உன் பெயரில் ஸ்விஸ் வங்கியில் போட்ட பணம் என்னவானது என்றவாறு இருவரும் பல உண்மைகள் வெளியில் வர சண்டை பிடித்துள்ளார்கள்.இந்த சண்டையில் நேரில் பார்த்த தோழர் பாவம் உண்மையை அறிந்து வெறுத்து போய் இருக்கிறார். இந்த சண்டையின் பின்புதான் செயலதிபர் உமாமகேஸ்வரன் லண்டன் கிருஷ்ணனை சுடச் சொல்லி ஆட்சி ராஜனிடம் பொறுப்பை கொடுத்தார். இதைப் பற்றி பின்பு விரிவாக எழுதுகிறேன். லண்டன் கிருஷ்ணன் பிற்பாடு இலங்கை அரசாங்கத்தோடு சேர்ந்துகருணாவை அழைத்து கொண்டு இந்தியா ,லண்டன் அழைத்துச் சென்றார். தற்சமயம் இலங்கை உளவுத்துறைக்கு உதவி செய்ய முக்கியமான நபர்களில் 70 வயதுக்கு மேல் சென்றாலும் கிருஷ்ணனும் ஒருவர் என்ற விபரங்கள் வருகின்றன.

சந்ததியார் கூறியதுபோல், ஒரு மாபெரும் இயக்கத்தை செயலதிபர் உமாமகேஸ்வரன் அத்துலத் முதலியின் நட்பால் , சிதறுண்டு போகசெய்ததைப் போல், லண்டன் கிளை பொறுப்பாளர்கள் செயலதிபர் உமா அழியகாரணமானவர்கள். இன்றும் சிலர் நான் செயலதிபர் உமாவை வேண்டுமென்றே குற்றம் சாட்டி எழுதுவதாக கூறுகிறார்கள். ஆனால் இதுவரை யாரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை விட ஒரு பெரிய இயக்கம் அழிந்து போனதற்கான காரணத்தை தேடவில்லை. பல உண்மைகள் தெரிந்த பல தோழர்கள் மௌனமாக இருக்கிறார்கள்.இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக சில உண்மைகளை கூறுகிறார்கள். எமது இயக்கம் சிதறுண்டு போவதற்கு முகாமில் இருந்த தோழர்கள் ஒரு காலத்திலும் சம்மந்தம் இருக்கவில்லை. அதே மாதிரி தளத்தில்செயல்பட்ட எமது இயக்கத் தோழர்களும் காரணம் இல்லை. யார் காரணம்.

தொடரும்.







பகுதி 38

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்

பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, அல்ஜீரியா சௌத் யேமன், பிரிட்டிஷ்அமெரிக்கா, டென்மார்க் ,பெல்ஜியம், மொரிஷியஸ், ஸ்விஸ், சிம்பாவே, போன்ற நாட்டு அதிகாரிகளையும், பாலஸ்தீன விடுதலை இயக்கம், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ், நம் பிபிய நாட்டு விடுதலை இயக்கம் ஸ்வப்போ போன்ற விடுதலை அமைப்புகளுடனும் மிக நெருங்கிய தொடர்பில் இருந்தோம். மற்ற 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தூதரகங்களுக்கு மாதாமாதம் எமது வெளியீடுகள் அனுப்பி வைப்போம்.இதில் குறிப்பிடப்பட வேண்டியவர் சிம்பாவே ஹை கமிஷன் இன் முதன்மைச் செயலாளர் திரு .முகொனோ அவர்கள். இவர் மும்பையில் படித்தவர். படிப்பு முடித்தவுடன் நேரடியாக 1984 ஆம் ஆண்டு கடைசியில் புதுடில்லியில் ஆரம்பிக்கப்பட்ட சிம்பாவே ஹை கமிஷன் முதல்செயலாளராக நியமிக்கப்பட் டார். எங்களை விட இரண்டு மூன்று வயது தான் கூடுதலாக இருப்பார். ஆரம்பத்தில் டெல்லியில் பைவ் ஸ்டார் ஹோட்டலில் தான் இவர்களின் ஹை கமிஷன் ஆபீஸ் செயல்பட்டது.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஹை கமிஷன் என்பதால் வேறு எந்த ஒரு இயக்கமும் அவர்களை தொடர்பு கொள்ளவில்லை. எமது இயக்கம் சார்பில் நான் நான் முதலில் இவரைதொடர்பு கொண்டு, டெல்லியில் எமதுஅலுவலகம் இருக்கும் வரை இருவரும் நல்ல தொடர்பில்இருந்தோம்.. இவரை வாரத்தில் மூன்று நாட்களுக்கு மேல் சந்திப்போம். என்னோடு வந்திருந்த பரதன், சைமன் போன்றவர்கள் டெல்லி அலுவலகம் சார்பாக தொடர்பு கொண்டவர்கள் இவர்களுடன் நல்ல நட்பாய் பழகியவர். சில வேலைகளில் எங்களை தேடிக் கொண்டு நாங்கள் இருந்த இடத்துக்கு காரில் வருவார். நானும் சித்தார்த்தனும்,அவரை சந்திக்கும் போது நமது பகலுணவு அவருடன் 5 ஸ்டார் ஒட்டலில் தான். அடிக்கடி அவருடன் சாப்பிடுவோம். நான் டெல்லியில் இருந்த காலங்களில் நல்ல சாப்பாடு சாப்பிட்டது அப்போதுதான். அடுத்தது விடுதலை இயக்கங்கள் டெல்லிக்குபேச்சுவார்த்தைக்கு வரும்போதுவீட்டுக்கும் கட்டிக் கொண்டு வந்துவிடுவோம். அதை நாங்களும் இந்திய தோழர்களும் பங்கிட்டு சாப்பிடுவோம்.

சிம்பாவே ஹை கமிஷன் முகோனோவசந்த் விகார் என்ற இடத்தில் வீடு எடுத்து மனைவியையும் பிள்ளைகளையும் கூட்டி வந்த பின்பு, நானும் சித்தார்த்தனும் அடிக்கடி வீட்டுக்கு டின்னர் சாப்பிட கூப்பிடுவார். இரவு டின்னரில் பியர், அவர்களின் அன்றாட உணவு ரவை உப்புமா போன்று இருக்கும், அடுத்து மாட்டு இறைச்சி எலும்பும் சதையும் , கஷ்டப்பட்டு சாப்பிட்டு வருவோம். செயலதிபர் உமாமகேஸ்வரன் வரும்போது அவர் மாலை நேரத்தில் வீட்டில் சந்திப்பார்.குடிக்க மாட்டார் இறைச்சி சாப்பிட மாட்டார் அதோடு அவருக்கு முன்னால் நாங்களும் சாப்பிடமாட்டோம் குடிக்க மாட்டோம். எங்களின் நிலைமையும் அவர் புரிந்து கொண்தார்.எமது செயல் அதிபருக்கு டீயும் பிஸ்கட்டும் எங்களுக்கும் சேர்த்து கிடைக்கும்.

இதே மாதிரி ஃபிரான்ஸ் முதன்மை செயலாளரும் வீட்டில் தான் சந்திக்க விரும்புவார்.காரணம் அடிக்கடி எம்பஸ்ஸி அலுவலகத்துக்கு வந்து போவது பலத்த கண்காணிக்கப்படும். அதனால்தான் அவர் வீட்டில் சந்திப்பர். அவர்வீட்டுக்கு போனவுடன் சின்ன ஒரு அலமாரியை திறந்துஇருக்கும் விதம் விதமான குடி வகைகளில் எது வேண்டுமென்று கேப்பார். எனக்கு குடிவகைகளில் பற்றி ஒன்றும் தெரியாததால், ஏதாவது சரி என்றும் கூறுவேன். அவர்தான் குடிப்பதே எனக்கும் கொடுப்பார். ஒருமுறை செயலதிபர் வந்திருக்கும்போது பிரான்ஸ் அதிகாரியை சந்திக்க போனபோது, வழமை போல அவர் அலுமாரியை திறந்து என்னவேண்டும் என்று கேட்க, செயலதிபர் தனக்கு கூல்ட்ரிங்க்ஸ் மட்டும் போதும் என்றார். அவருக்கு கூல்ரிங்ஸ் எனக்கு குடி வகையும் கொடுக்க நான் பதறிப் போயிட்டேன். . செயலதிபர் கண்ணால் ஜாடை காட்டினார் குடிக்கும்படி. வெளியில் வரும்போது செயலதிபர் கோரினார். இப்படியானவர்களை சந்திக்கும் போது அவர்கள் குடிக்கக் கொடுத்தால் குடியும். அப்பதான் அவர்களோடு மனம் விட்டு பேச முடியும். இல்லாவிட்டால் அவர்களை அவமரியாதை செய்ததாக இருக்கும். அதற்காக வீட்டில் வாங்கி வைத்து எல்லாம் குடிக்கக்கூடாது என்று கூறினார்.

பரதன் என்ற சாரங்கன்இங்கு இருக்கும் போது என் வியன் சோமு, டி ஆர் பாலு, ஆந்திரா கர்நாடகா எம்பிக்கள், பிரிட்டிஷ் எம்பஸ்ஸி போன்றவர்களே சந்தித்த பின்பு டெல்லி அலுவலகத்துக்கு கொடுத்த குறிப்பு இன்றும் என்னிடம் உள்ளது.

பிரான்சில் இருந்து கப்பலில் வேலை செய்த வினோத் என்பவர் எமது இயக்கத்தில் சேர்ந்து வேலை செய்ய டெல்லி ஊடாக சென்னை வந்தார். இவர்விடுதலைப்புலிகளில் சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த திலீபன் அவர்களின் உடன் பிறந்த அண்ணன்.அவருடன் பேசும்போது தனது தம்பி திலீபன் தவறான இடத்தில் போய் சேர்ந்து இருக்கிறான்என்று கூறுவார். இவர் வரும்போது பெருந்தொகையான டெனிம் ஜீன்ஸ் கொண்டு வந்தபோது டெல்லி ஏர்போர்ட் தமிழ் அதிகாரி பெயர் சித்தார்த்தன்கஸ்டம்ஸ் அதிகாரி பெருந்தொகையான அளவு டேக்ஸ் போட்டுவிட்டார். கட்ட காசில்லாத தால்,ஏர்போட்டில் திரும்ப காசுக்கட்டி எடுப்பதாக கூறி விட்டு வந்துவிட்டார். இந்த சம்பவம் G.பார்த்தசாரதி அவர்கள் செல்வாக்காகஇருந்த நேரம் நடந்த சம்பவம். நான் போய் G.பார்த்தசாரதி அவர்களை பார்த்தேன். அவர் உடனடியாக டெல்லி ஏர்போர்ட் சீப்கஸ்டம்ஸ் அதிகாரி சீக்கியர் அவருக்கு தொலைபேசி மூலம் விபரம் கூறி என்னை அனுப்பி வைத்தார். அந்த சீக்கிய அதிகாரி என்னை வரவேற்று நன்றாகப் பேசினார் பின்பு டெக்ஸ் அடித்த விபரங்களை பார்த்தஅதிகாரி சும்மாவே கிளியர் பண்ணி இருக்கலாம் என்றார். பின்பு சீக்கியஅதிகாரி மற்ற கஸ்டம்ஸ் அதிகாரி சித்தார்த்தனை கூப்பிட்டு விபரம் கூறி டேக்ஸ் போட வேண்டாம் என்று கூறினார். ஆனால் அவர் பிடிவாதமாக 2000 ரூபாய் டாக்ஸ் அடித்துதான் டெனிம்ஜீன்ஸ்களை கிளியர் பண்ணினார். அந்தநேரம் டெல்லி ஏர்போர்ட் கஸ்டம்ஸ் அதிகாரியாக நடிகர்மேஜர் சுந்தர்ராஜனின் தம்பியும் இருப்பதைப் அவர் அச்சு அசலாகநடிகர் சுந்தர்ராஜன் போலவே இருப்பார்.

நான் டெல்லியில் இருந்து பல முறை எமது இயக்க தோழர்கள் பயிற்சிக்காக ராணுவ சப்பாத்துக்கள் புதியது குறைந்த விலையில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் சோடிகள் வாங்கி ரயிலில் போட்டு சென்னைக்கு அனுப்பி இருக்கிறேன். ராணுவசீருடைகள் என்பனவும் வாங்கி அனுப்பி இருக்கிறேன். சென்னையிலிருந்து தொலைத்தொடர்பு , வானொலி கருவிகளுக்கு பார்ட்ஸ் வாங்க சென்னையிலிருந்து உடுவிலை சேர்ந்த சுரேன், வசந்தி என்பவரும் வந்திருந்தார்கள்.இடங்களுக்குக் கூட்டிக் கொண்டு போய் வாங்கி கொடுத்தேன். சுரேன் படிக்கும் காலத்தில் இருந்து எனக்கு தெரியும் அவரின் அண்ணா எனது வகுப்புத் தோழன்.

84 ஆம் ஆண்டிலிருந்து லண்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்து போகும் முக்கியமான நபர் லண்டன் கிருஷ்ணன் என்பவரை பற்றி அடுத்த பகுதியில் எழுதுகிறேன்.

கீழே ஒரு கடித பிரதி போட்டுள்ளேன் முந்திய பதிவுகள் வர வேண்டியது. அதாவது டாக்டர் இல்யாஸ், ஜெயபாலனை டெல்லி அனுப்பவும் அவர்களுக்கு வேண்டிய உதவி செய்யும்படி செயலதிபர் உமாமகேஸ்வரன் எனக்கு எழுதிய கடிதம்.

தொடரும்






பகுதி 37

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்

அடுத்த நாள் காலையில் நானும் செயலதிபர் உமா மகேஸ்வரனும் வை கோபால்சாமி MP வீட்டுக்குப் போனோம். வை கோபால்சாமி எம்பி டெல்லிவரும் போது அடிக்கடி போய் நான்சந்தித்து பேசுவேன்.அதுபோல் செயலதிபர் உமா மகேஸ்வரனும் டெல்லிவரும்போது கோபால்சாமி எம்பி டெல்லியில்இருந்தால் போய் சந்திப்பர்.அவர் விடுதலைப் புலிகளோடு நெருக்கமாக இருந்தாலும் எங்களோடு நல்ல தொடர்பில் தான் இருந்தார்.

கோபாலசாமி எம் பி யும்,அவரது உதவியாளரும் நமக்கு தேனீரும் பிரெட் டோஸ்ட் போட்டு கொடுத்து உபசரித்தார்கள். திம்பு பேச்சுவார்த்தை பற்றி, பேச்சுவார்த்தை வந்தபோது, உமாமகேஸ்வரன் செயலதிபர்ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். இந்திய வெளியுறவுச் செயலர் ரொமேஷ் பண்டாரிபேச்சுவார்த்தை சம்பந்தமாக இலங்கைக்குப் போய் வரும் போது அவர் இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனா அவருடன் நெருங்கிப் பழகி வைர நெக்லஸ் கள் விலை கூடிய நவரத்தினம் மாலைகள் போன்றவற்றை அன்பளிப்பா பெற்றுக்கொண்டதும் , மட்டுமல்லாமல் இந்திய,இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு எதிராக வேலை செய்வதாகவும் போட்டுக் கொடுத்தார்.வை கோபால்சாமி மிகவும் கோபத்துடன் இவ்வளவெல்லாம் நடந்திருக்கிறதா நான் விடமாட்டேன் ஒரு கை பார்க்கிறேன் என்று கூறினார். அன்று ராஜ்யசபா பாராளுமன்றத்தில் வைகோஇந்திய வெளியுறவுச் செயலர் ரொமேஷ் பண்டாரி இலங்கை ஜனாதிபதியின் கைக்கூலிவைர நெக்லஸ் க்காக விலை போய்விட்டார் காரசாரமாக பேசினார்.அடுத்த நாள் பத்திரிகைகளில் எல்லாம் ரொமேஷ் பண்டாரி வைர நெக்லஸ் வாங்கியதுதான் முக்கியத்துவம் பெற்றன.

அன்று மாலை ரொமேஷ் பண்டாரி சந்திக்க போன் செய்தபோது, உடனடியாக ஆறு மணி போல் தனது வீட்டில் வந்து சந்திக்கச் சொன்னார்..அவரை சந்தித்தபோது அழாத குறையாக தன்னைப் பற்றி பொய்யான செய்தியை பாராளுமன்றத்தில் வை .கோபால்சாமி பேசி விட்டதாகவும், திம்புவில் நடந்த சம்பவத்தை கூட சித்தார்த்தன் உண்மையை பத்திரிகை யில் கூறி இருக்காவிட்டால்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிய தான் காரணம் என எல்லோரும் எழுதி இருப்பார்கள். சித்தார்த்துக்கு தன் நன்றியைக் கூறச் சொன்னார். எமது செயலதிபர் உமாமகேஸ்வரன் உடனடியாக வைர நெக்லஸ் கதையை விடுதலைப்புலிகள் தான் வைகோவிடம் கூறியிருப்பார்கள் அவர்கள்தான் வைகோவுடன் நெருக்கம் எனக் கூறினார். அவரும்இருக்கலாம் எனக் கூறி யோசிக்கத் தொடங்கினர். நானும் செயலதிபர் உமா மகேஸ்வரனும் எமது ராஜதந்திரத்தை நினைத்து சிரித்து சந்தோசப் பட்டோம். இப்படித்தான் இவர்களை பழிவாங்க வேண்டும் என்றார். எமது இந்த செயல் அந்த அதிகாரியின் பதவிக் காலத்தில் ஒரு கரும்புள்ளி.நவரத்தினங்கள் வைர நெக்லஸ்உடன் வேறு பல பொருட்களும் லஞ்சம் வாங்கினார் என பலரும்நேரடியாக எழுதத் தொடங்கினார்கள். அதற்கு ஆதாரம் வை கோபால்சாமி பாராளுமன்றத்தில் பேசிய பேச்சு என்றார்கள். பாராளுமன்றத்தில் ஆதாரமில்லாமல் பேசியிருக்க மாட்டார் என்றும் கூறினார்கள். இலங்கை இந்திய பத்திரிகைகளில்எமது இயக்கம் பயிற்சி பெறும் இடங்கள் பல பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின.சர்வதேச ரீதியில் பெரிய பிரச்சினையாக இருந்தது. இந்திய அதிகாரிகள்இதைப் பற்றி என்னிடம் கேட்கும்போது, நான் இதுபற்றி செயலதிபர் உமாவிடம் விபரம் கேட்ட போது, ஈபிஆர்எல்எஃப் , அல்லது ஈரோஸ் இந்தசெய்தியை கொடுத்திருக்க வேண்டும் என தங்களுக்கு தெரியவந்ததாக அதிகாரிகளிடம் கூற சொன்னார். அதிகாரிகள் நம்பவில்லை. IB ஐபி அதிகாரிகள் எமது இயக்கம் தான் ஷெர்லிகந்தப்பா மூலம் இந்தியாவுக்கு எதிராக வேலை செய்கிறது என கண்டுபிடித்து விட்டார்கள். எமது இந்த வேலைதமிழ்நாட்டில் பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான தோழர்களே பாதித்தது என்பது உண்மை. இப்படியான போட்டுக் கொடுக்கும் வேலைகளைவிடுதலைப் புலிகளைத் தவிர மற்ற இயக்கங்கள் ஒருத்தர் போட்டுக் கொடுக்கும் வேலைகளை செய்து வந்தார்கள் என்பது உண்மையே.

85 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் லெபனான் பயிற்சிக்கு போக வந்த ஒரு தோழர் சங்கானை சேர்ந்தவர்என்னோடு ஒரே வகுப்பில் படித்த நெருங்கிய நண்பரின் தம்பி இவரும் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் தான் படித்தவர். சின்ன மெண்டிசின் சமவயது நண்பர்கள் தான்.அவர்களின் விமான பயணத்துக்கு முதல் நாள் இரவு சென்னையில் இருந்து எனக்கு தொலைபேசி அந்த தோழரை அனுப்ப வேண்டாம். அவர் எங்கும் தப்பி போக விட வேண்டாம். இரண்டொரு நாளில் சென்னையிலிருந்து ஆள் வரும்அவருடன் அனுப்பி விடசொல்லி.அந்த சங்கானை தோழர் விசாரித்த போது தன்னை சந்ததியார் இன் ஆள்என்று முதலில் சந்தேகித்து விசாரித்தார்கள் என்றும், தன்னை சென்னைக்கு அனுப்ப வேண்டாம் தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்றும் கூறினார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

நான் செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம்இது பற்றிய விபரத்தை கூற அவர் தனக்கு தெரியாது தான் விசாரிக்கிறேன் என்றார் நானும் எனது நண்பரின் தம்பி எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும் தவறான ஆளாக இருக்காது என்று கூற, சரி டெல்லியில் கொஞ்சநாள் இருக்கட்டும் தான் கந்தசாமி இடம் பேசுவதாக கூறினார். நான் சென்னை அலுவலகத்துக்கு தொடர்புகொண்டு மாதவன் அண்ணாவிட கந்தசாமி வந்தால் உடன் என்னை தொடர்பு கொள்ள சொல்லச் சொன்னேன். கந்தசாமி தொடர்பு கொண்டபோது விபரத்தைக் கூறி, உதவி கேட்டேன் கந்தசாமிஅவன் கழகத்திற்குள் பிரச்சினை பண்ணாவிட்டால் சரி நீ புத்தி சொல்லி வை என்று கூறினார்.நான் கந்தசாமி மாறன் மூவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். கந்தசாமி சாகும்வரை நெருங்கிய நண்பனாக தான் இருந்தார். சங்கானை தோழர் திரும்ப சென்னை போய் இயக்கத்தில் வேலை செய்து இயக்கம் உடைந்தபோது வெளிநாட்டுக்கு போய் விட்டதாக அறிந்தேன் இப்போது அவர் நோர்வே நாட்டில் இருப்பதாக செய்தி.

லண்டனில் இருந்து மகர சிங்கம் என்ற பெரியவர் வந்திருந்தார். அவர் இலங்கை அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கியமாட்டிக்கொண்டு இந்திய பாராளுமன்றத்திற்கு அருகில் போய் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக கூறினார். ஒரு மாதிரி அவரை தடுத்து இந்திய நண்பர் சம்பத் அவர்கள் அவரைக் கூட்டிக்கொண்டு போய் கன்னாட் ப்ளேஸ் என்ற இடத்தில் நிற்க வைத்தார்.ஆர்ப்பாட்டம் செய்து விட்டு வந்த பெரியவர் மகர சிங்கமையா சென்னைக்குப் புறப்பட்டு, பின்பு தஞ்சாவூர் சென்றுஎமது முகாம் எல்லாம் பார்வையிட்டு திரும்ப லண்டன் போக டெல்லி வந்தபோது அவர் புளொட் கட்டாயம் தமிழீழம் பெற்றுத் தரும்என்ற நம்பிக்கை தனக்குவந்துள்ளதாக கூறினார்.

எமக்கு பல வெளிநாட்டு தூதரகங்களின் தொடர்புகள் கிடைத்தன.அங்கு வேலை செய்யும் முதன்மைச் செயலாளர் அல்லது இரண்டாம் செயலாளர் உண்மையில் அவர்கள்தான் அந்தந்த நாட்டின் ரகசிய உளவுத்துறை ஆட்கள் அவர்கள்தான் தாங்கள் வேலை செய்யும் நாட்டின் எல்லா விபரங்களையும் எடுத்துதங்கள் நாட்டின் வெளி நாட்டு உளவுத் துறைக்கும், தங்கள் நாட்டு வெளியுறவு அமைசுக்கும் ரிப்போர்ட் போடுபவர்கள். தூதுவர் என்பவர் ஒரு அலங்கார பொம்மை. அவரை பப்ளிக்காக யார் வந்தாலும் போய் பார்க்கலாம்.ஆனால் முதன்மைச் செயலாளர் அல்லது இரண்டாம் செயலாளர் அவை சந்திக்கும் சந்திப்புகள் மிக ரகசியமாக இருக்கும்.

நாளை டில்லியில் எங்கள் தொடர்பில் இருந்த பத்திரிகையாளர்கள் வெளிநாட்டு தூதரகங்கள் பற்றிய விபரங்களை தருகிறேன்.

கீழே உள்ள படங்கள் மகர சிங்கம் ஐயா எமது முகாமில்.

தொடரும்

.




பகுதி 36

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்

இந்தியபேச்சுவார்த்தைஎழுதுவதற்காக 85 ஆம் ஆண்டு நடந்த பலவிடயங்களை எழுதவில்லை .இனி தொடர்கிறேன். 85 ஆம் ஆண்டு வருட ஆரம்பத்தில் செயலதிபர் உமாமகேஸ்வரன் டெல்லிக்கு என்னிடம் ரெண்டு பேரை அனுப்பி வைத்தார் அவர்கள் கேட்கும் உதவியை செய்து கொடுக்கும்படி கூறினார். அப்படி வந்தவர்கள் செயலதிபர் உமாவின் சகோதரர் முறையான நாகலிங்கம்அவர்களும், கந்தசாமி என்பவரும். கந்தசாமி எமது இயக்க வேலையாக லண்டனுக்குப் போக போக இருப்பதாகவும், எனக்குச் சொன்னார்கள். நானும் என்னோட அவர்களை தங்க வைத்து டெல்லி ஏர்போர்ட்டில் லண்டனுக்கு அனுப்பி வைத்தேன்.அடுத்த நாள் லண்டன் சீனிவாசன் போன் செய்து கூறினார் நீங்கள்அனுப்பிய கந்தசாமி என்பவரை லண்டன் ஏர்போர்ட்டில் இருந்து திருப்பி டெல்லிஅனுப்பி விட்டார்கள் என்று. நானும் நாகலிங்கமும் போய் கந்தசாமி யைஅழைத்து வந்தோம். அவர்கள் சென்னை போய் திரும்பவும் உடனடியாகடெல்லி வந்தார்கள். செயலதிபர் உமா மகேஸ்வரன் எனக்கு போன் செய்து இவர்களை யாரும் சந்திக்காத வாறு வேறு இடத்திலோ அல்லது ஹோட்டலில் தங்க வைக்கப் படும்படி கூறினார். நானும் அண்ணா திமுக பாராளுமன்றக் குழுத் தலைவர் மோகனரங்கம் எம்பி இடம் கேட்டு அவரின் வீட்டில் ரகசியமாக தங்க வைத்து இருந்தேன்.நான் உணவுவாங்கிக் கொண்டு போய் கொடுக்க வேண்டும்.இவர்களின் நடவடிக்கை மர்மமாக இருந்ததால் சென்னையிலிருந்த கழக நிர்வாக பொறுப்பாளர்

எனது நண்பர் மாதவன் அண்ணாவிடம் விசாரித்தேன். அப்போதுதான் கந்தசாமி இலங்கை பொலிஸ் அதிகாரி என்றும் இலங்கை அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான தொண்டமான் அவர்களின் மெய்ப்பாதுகாவலர் என கூறினார். செயலதிபர் உமாஇரண்டு வாரங்களின் பின்பு அவர்களை சென்னைக்கு அனுப்பச் சொன்னார். அதன் பின்பு வந்த செய்திகள் எப்ப என்று நேரகாலம் மறந்து விட்டது. எப்போ என்று அந்த நாளை தெரிந்த தோழர்கள் பதிவு விட்டால் நல்லது. சென்னையில் பேசன் நகர் உள்ள பாலசிங்கத்தின் வீட்டில் வெடிகுண்டு வெடித்து பாலசிங்கம் இருந்த வீடு கொஞ்சம் சேதம் அடைந்தது இது சம்பந்தமாக தமிழ்நாடு காவல்துறை சிலரை கந்தசாமி உட்படகண்டுபிடித்து கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இந்த வழக்கு இப்பவும் நடக்கிறது. பிற்காலத்தில் இது பற்றி நான்அறிந்த செய்தி ,இலங்கை உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர்லலித் அத்துலத் முதலி உமாமகேஸ்வரன் மூலம் தமிழ்நாட்டில் உள்ளபாலசிங்கம் முதல் முக்கிய விடுதலைப் புலித் தலைவர்களை கொல்ல போலீஸ் அதிகாரி கந்தசாமியை அனுப்பிஉதவி செய்ய கூறியதாகஅறியக்கூடியதாக இருந்தது. இது சம்பந்தமாக 86 ஆம் ஆண்டு பின் தளமாக மாநாட்டுக்கு முன்பு செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டாகும்.

85 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் சந்ததியாரும் ஒருவரை அனுப்பி அவருக்குத் தேவையான உதவிகள் செய்யும் படியும், அவர் தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமானவர் எனக் கூறி எனது சுகம் மற்றும் எனது வேலைகளை பற்றி கேட்டு,தூர இருந்து வேலை செய்தாலும் இயக்கத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த கூடிய வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என அறிவுரை கூறினார். இதுதான் அவருடன் நான் கடைசியாக பேசியது. அவர் அனுப்பி யவர் இலங்கையின் முக்கிய அட்வகேட் ருத்ரமூர்த்தி அவர்கள்.கொழும்பில் சிறைப்பட்ட தமிழ் இளைஞர்களுக்காகவாதாடியவர் என கேள்விப்பட்டேன். எல் கனேசன் எம்பி வீட்டில் இருந்த இந்திய நண்பர்களுக்கு அவரை நன்றாக பிடித்து விட்டது. காலையில் எழும்பி குளித்து விபூதி பூசி சாமி கும்பிடுவார். சைவ சாப்பாடுதான் சாப்பிடுவர் அதுவும் தனது காசில். காலையில் அவர் டெல்லியில் புகழ் பெற்ற மனித உரிமை அமைப்புகள் வக்கீல்கள் சங்கம் தனிப்பட்ட புத்திஜீவிகள் எல்லோரையும் தொடர்பு கொண்டு அவரை சந்திக்கச் சென்றார். நான்தான் அவரை ஸ்கூட்டரில் அழைத்துக்கொண்டு அவர் குறிப்பிடும் இடங்களுக்குகூட்டிக் கொண்டு போவேன். எல்லோரும் அவரை மிகவும் மரியாதை கொடுத்து பேசுவார்கள். இலங்கைத் தமிழர்பிரச்சனை, இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றியெல்லாம் விளக்கமாக எடுத்துக் கூறுவர். சில நாட்களில் நான் அவருடன் போக முடியாவிட்டால் எனது இந்திய நண்பர் சம்பத் என்பவர் அழைத்துக்கொண்டு போவார். ஒரு மூன்று வாரத்தின் பின்பு ருத்ரமூர்த்தி அவர்கள் ஓர் உள்ளரங்க கூட்டத்தைக் கூட்டினார். அதில் கிட்டத்தட்ட 300 பேர் வரை வந்தார்கள். வந்தவர்கள் அறிவுஜீவிகள் சீனியர் பத்திரிகையாளர்கள் புகழ்பெற்ற வக்கீல்கள் எல்லாம் வந்தார்கள். அவர் தான் தயாரித்த இலங்கை இனப்பிரச்சினை சம்பந்தமான சிறு புத்தகம் ஒன்றையும் எல்லோருக்கும் கொடுத்தார். அதோடு இலங்கைத் தமிழர்பிரச்சினை பற்றி விரிவாக எடுத்துரைத்தார் அடுத்த நாள் சென்னைக்கு புறப்பட்டு விட்டார். இப்போது அவரைப் பற்றிய தகவல் அறிய முடியவில்லை. மிக அருமையான மனிதர்.

எமது இயக்கத்துக்கு பல உதவிகள் புரிந்த புத்தளம் டாக்டர் இலியாஸ் சென்னையில் இருந்து டெல்லி வந்தார். அவருக்கு வேண்டிய உதவிகளை செய்யும்படி சென்னை அலுவலகத்தில் இருந்து கூறினார்கள்.தேவையான வைத்திய கருவிகளை வாங்கி கொடுத்தேன். அவர்வாங்கிய முக்கிய கருவிகள் முஸ்லிம் இளைஞர்களுக்கு சுன்னத் செய்வதற்கான கருவிகள். அவர் இரண்டு முறை டெல்லி வந்து போனார். ஒவ்வொரு முறையும் ஆகக்கூடியது இரண்டு மூன்று நாள் தான் இருப்பார்.

பேச்சுவார்த்தைக்கு டெல்லி வந்தபோது வாசுதேவா என்னிடம் தனிப்பட்ட முறையில் இயக்கத்தில் சில பிரச்சினைகள் நடந்து கொண்டிருப்பதாக கூறினார். சந்ததியார் எமது கழகத்தை உடைக்க முயற்சி செய்வதாக கூறினார்.அங்கு ஒரே குழப்பமாக இருப்பதாகக் கூறினார். பெருசு இடம் (உமா) இதைப் பற்றி கேட்க வேண்டாம் என கூறினார். உண்மையில் நான் அதைப் பெரிது படுத்தவில்லை.டெல்லி வேலைகள் உற்சாகமாகவும் பரபரப்பாகும் இருந்தபடியால் நான் அதில் தான் கவனம் செலுத்தினேன் என்பது உண்மை. இதுவும் பாரதூரமானது இருந்தால் செயலதிபர் உமா என்னிடம் கூறுவார் தானே என நினைத்தேன்.

இவர்கள் பேச்சுவார்த்தைக்கு டெல்லிக்கு வரும்முன்பே சந்ததியாரை பிடித்து கொலை செய்த விடயம். டேவிட் ஐயா காவல்துறையில் புகார் செய்து அந்த விடயம் பரபரப்பாகி பத்திரிகையில் வந்த பிறகுதான் டில்லியில் எனக்கு தெரிந்தது. பத்திரிகைகளில் நமது இயக்கம் சார்பாக சந்ததியாரைபற்றி பல அவதூறான செய்திகளை செயலதிபர் உமாமகேஸ்வரன் கூறியிருந்தார்.ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்து ஓடிவிட்டார் என்ற பல கதைகள். கொலைசெய்யப்பட்டார் என்றும் செய்திகளும் வந்தன. இந்திய உளவு அதிகாரிகள் ரா, IBஅதிகாரிகள் இந்த விடயம் பற்றி தங்களுக்கு விபரம் வேண்டும் என்றார்கள்.

நான் தொலைபேசி மூலம் செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் இதைப் பற்றிக் கூறி விபரம் கேட்டபோது உடனடியாக என்னை சென்னை வர சொன்னார். 85 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் என நினைக்கிறேன் ரயிலில் சென்னைக்கு சென்றேன். எமது நிர்வாகப் பொறுப்பில் இருந்த மாதவன் அண்ணா வீட்டில் தங்கிக் கொண்டு, எமது செயலதிபர் உமாவை சந்தித்தேன்.

செயலதிபர் உமாமகேஸ்வரன் டெல்லியில் அதிகாரிகள் பத்திரிகையாளர்களிடம் சந்ததியார் பற்றி கூறும்போது, சந்ததியார் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பயிற்சி பெறும்தோழர்களிடம் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை கூறி, இந்தியாவுக்கு எதிராக எமது இயக்கத்தை திசை திருப்ப பார்ப்பதாகவும், வங்கம் தந்த பாடம்மொழிப்பெயர்ப்பு புத்தகத்தை தமிழில் அச்சடித்துஇயக்கத் தோழர்களுக்கு .இலங்கையிலுள்ள தோழர்களுக்கும் பொதுமக்களுக்கும்அனுப்புவதாகவும்,இந்தியாவுக்கு எதிரான தீவிரப் பிரச்சாரம் செய்வதாகவும் அதோடு அவருக்கு போதைப் பொருள் விற்பனை செய்யும் இலங்கையைச் சேர்ந்த ராதா என்ற பெண்ணுடன் தொடர்பு உள்ளது என்றும் கூறச் சொன்னார்.பத்திரிகையாளர்களிடம் கூறும் போது மட்டும் ராதா என்ற பெண்ணுடன் தலைமறைவாகி விட்டதாக கூறச் சொன்னார். இந்திய உளவு அதிகாரி களிடம் கூறும் போது மட்டும் சந்ததியார் இந்திய எதிர்ப்பில் இந்தியாவுக்கு எதிராகவேலை செய்வதால் சந்ததியாருக்கு மரண தண்டனைவழங்கப்பட்டது என்று கூறச் சொன்னார்.

உடனடியாக அன்றே என்னை டெல்லிக்கு கிளம்பச் சொன்னார். நானும் அன்றே கிளம்ப ஆயத்தம் ஆனேன்.பின்பு நான் எனக்கு நெருக்கமான மாதவன் மற்றும் இரண்டு தோழர்களை சந்தித்துப் பேசியபோது அவர்கள் சுற்றிப் பார்த்து விட்டு ரகசியமாக இயக்கம்முன்பு போல் இல்லை. முகாம்களில் எமது தோழர்களை யேசந்தேகப்பட்டு கொலைகள் செய்வதாகவும் , இதற்காகமூர்த்தி என்பவர் தலைமையில்ஒரு குரூப் செயல்படுவதாகவும் அதற்கு கந்தசாமி தலைமை தாங்குவதாக கூறி. கவலைப்பட்டார்கள். யாரும் யாரையும் நம்பி கதைக்க வேண்டாம் எல்லோரையும் எல்லோரும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறார்கள்.தாங்களும் விதியே என்று மனது உடைந்து வேலை செய்கிறோம் ஒரு சந்தோசமும் இல்லை என்றார்கள். நானும் பலவித யோசனைகளுடன் டெல்லி புறப்பட்டு விட்டேன். நான் சென்னை வந்த நேரம் சென்னையில் பெரும் புயலடித்து இருந்தது ஆந்திராவில் ரயில் தண்டவாளங்கள் அடித்துச் செல்லப்பட்டன. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.இரவு 8 மணிக்கு டெல்லி போகும் GT எக்ஸ்பிரஸ் என்ற ரயில் சுற்றுப் பாதையில்டெல்லி போகும் என்று கூறிவிட்டார்கள். 64 பேர் பயணம் செய்யும் ஒரு பெட்டியில் இரண்டு பேர்தான் இருந்தோம். அதே மாதிரிதான் மற்ற பெட்டிகளில் பயணிகள்இருந்தார்கள்.40மணி நேரத்தில் டெல்லி போகும் வழமையான ரயில்,ரயில் தாமதமாக தாமதம் மட்டும் 72 மணி நேரம் கிட்டத்தட்ட அஞ்சு நாள் பயணம். வாழ்க்கையே வெறுத்துவிட்டது. மாலை 6 மணி போல் எனது இருப்பிடத்துக்கு சென்றேன். பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் இரண்டு நாளாக தொலைபேசி விடாமல்அடித்துக் கொண்டிருந்தது என்று கூற நான் விபரம் கூறினேன். பின்பு தொலைபேசி அடிக்க எடுத்துப் பேசினேன். சென்னை அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அவர்களிடமும் இப்பதான் டெல்லி வந்தேன் தாமதத்திற்கான காரணத்தையும் கூறினேன்.அவர்கள் செயலதிபர் உமாமகேஸ்வரன் 6 மணி விமானத்தில் டெல்லி வருவதாகவும் அவரை போய் கூட்டி வரும் படி கூறினார்கள்.நான் உடனடியாக கைகளை கழுவி உடுப்புகளை மாற்றி விட்டு முதலில் போய் இருவருக்கும் சாப்பாடு வாங்கி வைத்துவிட்டு, எனது ஸ்கூட்டரில் ஏர்போர்ட் போய் இரவு 10 மணி போல் செயல் அதிபரை கூட்டி வந்தேன். அவரும் என்னிடம் எனது பயண விவரங்களை கேட்டு விட்டு,நீர் ரயில் டிக்கெட்டை கேன்சல் பண்ணிவிட்டு வந்து சொல்லி இருந்தால் ஃப்லைட் டிக்கெட் போட்டு தந்திருப்பேன் என்றார்.

அடுத்த நாள் காலை இந்திய உளவுத் துறை அதிகாரியை பார்த்து பேச, ரா அதிகாரிசந்ததியாரை பற்றி செயலதிபர் உமாமகேஸ்வரன் கூறியகாரணங்களை எல்லாம் கேட்டுவிட்டு, நீங்கள் உங்கள் இயக்க பிரச்சினைகளைஉங்கள் நாட்டில் போய் பார்த்திருக்க வேண்டும். உங்கள் இயக்கத்தை பற்றி வரும் ரிப்போர்ட்டுகள் நன்றாக இல்லை முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டார்.பின்பு ஐபி அதிகாரிகள் சந்தித்து போது அவர்கள் மிகக் கடுமையாக கண்டித்தார்கள்.தமிழ்நாட்டில் கொலை செய்ததை மரண தண்டனை கொடுத்ததாக பெருமையாக கூறுகிறீர்கள்.இந்திய சட்ட ஒழுங்கிற்கு இது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.சந்ததியார் இந்தியாவுக்கு எதிராக நின்றால் அவரை இயக்கத்தை விட்டு விலகி இருக்கலாம்.இப்படி எத்தனை பேரை கொலை செய்யப் போகிறீர்கள். தமிழ்நாடு பொலிஸார்நெருக்கமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் உங்களுக்கு நெருக்கடி கொடுத்தால் இந்த கொலை போன்ற விஷயங்களுக்கு இந்திய அரசு உங்களுக்கு உதவிக்கு வராது கடுமையாக கூறிவிட்டார்கள்.

அவர்கள் போன பின்பு கொஞ்சம் யோசித்த எமது செயலதிபர் உமா மகேஸ்வரன், எல்லோரையும்கூட்டிக்கொண்டு இலங்கைக்குப் போக வேண்டியதுதான்.இவர்கள் யார் எங்கள் இயக்க விடயங்களில் தலையிட இவர்களுக்கும்ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்றார்.

அடுத்த நாள் மீண்டும் ஒரு குழப்ப முயற்சியில்ஈடுபட்டோம்.

தொடரும்.



பகுதி35

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்

பேச்சுவார்த்தைகள் தொடர்பாக ரொமேஷ் பண்டாரி இலங்கைக்குப் போய்ஜெயவர்த்தனா உடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. இந்திய அரசு வெளியுறவுத்துறை எல்லா முக்கியவிடுதலை இயக்கங்களுக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும்உத்தியோக பூர்வமாக முதல் அழைப்பை டெல்லி வரும்படி கூறியது. அக்டோபர் 6ஆம் தேதி 1985ஆம் ஆண்டு. ஒரு நாளைக்கு முன்பாகவேஎல்லோரும் டெல்லி வந்து விட்டார்கள் தமிழர் விடுதலைக் கூட்டணி .உட்பட ஒரே ஓட்டலில் தங்க வைக்கப்பட்டார்கள். எமது இயக்கம் சார்பாக அரசியல் துறை செயலர் வாசுதேவா, கனகராஜா, செயலதிபர் உமாமகேஸ்வரன் சென்னையிலிருந்து வந்திருந்தார்கள். வழமைபோல் செயலதிபர் உமாமகேஸ்வரன் எமது டெல்லி அலுவலகத்திலேயே வந்து தங்கிவிட்டார்.

அதே நேரம் சென்னைக்கு தமிழ் விடுதலை இயக்கங்களை சந்திக்க வந்த விஜய குமாரதுங்க, சந்திரிக்கா அவர்கள் கட்சி செயலாளர் ஓசி அபயகுணவர்தன போன்றவர்கள். புதுடில்லி க்கும் வந்து ஜன்பத் ஓட்டலில் தங்கியிருந்தார்கள். அவர்கள் செயலதிபர் உமா மகேஸ்வரனை சந்திக்க விரும்புவதாக தகவல் கொடுத்தார்கள். 10:00 மணி போல்செயலதிபர் உமா மகேஸ்வரனும் ,கனகராஜ் வும், நானும் அவர்களைப் போய் சந்தித்தோம். எமது சந்திப்பு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடந்தது.சொல்லி செயலதிபர் உமா மகேஸ்வரன் விடைபெற்றார்.

நானும் செயலதிபர் உமா மகேஸ்வரனும் நீண்ட நேரம் வாசுதேவா கனகராஜ் ஆகியோர் ஓட்டலில்தான் நேரம் செலவழிப்போம். இம் முறை எல்லா இயக்கங்களும் மிக மகிழ்ச்சியாக ஒருத்தருடன் ஒருத்தர் பேசிக்கொண்டோம்.நாங்கள் இருக்கும் இடத்துக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி அமிர்தலிங்கம் அவர்கள் மட்டும் வரமாட்டார் கள். அந்த ஓட்டலில் நாங்கள் இருந்தஅறைகளுக்கு பக்கத்தில் ஒருவரவேற்பறை இருந்தது. அதில் தான் நாங்கள் சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தோம். இதை இப்போது நான் எழுதும் போது கூட யாரும் நம்ப மாட்டார்கள். லண்டனிலிருந்து அப்போது ஈபிஆர்எல்எப் சேர்ந்த யோக சங்கரியும் வந்திருந்தார்.யோக சங்கரியும் அவருக்கு அடுத்ததாக நானும் அதில் நல்ல குண்டாக இருந்தோம். பிரபாகரன் பொத்தம் பொதுவாக சிரித்துக்கொண்டு இவர்கள் இருவரையும் பேச்சுவார்த்தைக்கு, இந்திய அதிகாரிகளிடம் ஓ காட்டக் கூடாது. ஏனெனில் நாங்கள் அவர்களிடம்இயக்கங்களிடம் பணக்கஷ்டம் சாப்பாடு கஷ்டம் என்று கூறி உதவி கேட்டால் அவர்கள் இவர்களை பார்த்து விட்டு நாங்கள் பொய் சொல்வதாக நினைப்பார்கள். உதவி செய்ய மாட்டார்கள் எனக்கூற எல்லோருக்கும் ஒரே சிரிப்பு. நானும் யோக சங்கரியும் உடனடியாக எங்களைப் பார்த்தால் தான் கட்டாயம் உதவி செய்வார்கள். காரணம் எங்களைப் பார்த்தால் மிக வசதியான செட்டியார் மாதிரி இருப்பதால் பணத்தை நாங்கள் சிக்கனமாக செலவு செய்வோம் என நம்புவார்கள் என கூற, ஒரே சிரிப்புதான்.

செயலதிபர் உமா மகேஸ்வரனும் ஈரோஸ் ரட்ணசபதியும் ஓரிடத்தில் இருந்து கதைக்க, வாசு தேவா,கனகராஜா மற்ற தலைவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். நான் செயலதிபர் உமாவிடம் கேட்டுவிட்டு,பிரபாகரன் திலகர் இருந்த இடத்துக்குப் போய் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். பிரபாகரனும் , திலகரும் மிக நன்றாகப் பேசினார்கள். பற்றியும் சண்டைக் காட்சிகளைப் பற்றியும். நாங்கள் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட ஈரோஸ் பாலகுமார் அமைதியாக வந்து இருந்து நாங்கள் என்ன பேசுகிறோம் என்று கண்காணித்தபடி இருந்ததார்.நாங்கள் உப்பு சப்பில்லாத எம்ஜிஆரை பற்றி கதைப்பதைஅறிந்து அவரும் எங்களுடன் கலந்து கொண்டார்.. உண்மையில் அந்த நேரம் யாரும் நல்ல முயற்சி எடுத்திருந்தார்கள் இயக்கங்கள் நல்ல ஒற்றுமை ஏற்பட்டு இருக்கும்.எல்லோரும் கலகலப்பாக பேச்சுவார்த்தையை பற்றி எந்த கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஆனால் திம்பு பேச்சு வார்த்தைக்கு முன்பு எல்லோரும் மிகத் தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு இருந்ததை பார்த்தவன் நான்.

இரவுச் சாப்பாடு எல்லோரும் ஒற்றுமையாகரெஸ்டாரன்ட் போய் சாப்பிடுவோம்.நாங்கள் சாப்பிட்டு போகும் வரை எத்தனை மணியாக இருந்தாலும் அமிர்தலிங்கம் குழுவினர் சாப்பிட வர மாட்டார்கள். நாங்கள் ரூமுக்கு வந்த பின்பு. செயலதிபர் உமா மகேஸ்வரன் எங்களிடம் இப்ப போய் ரெஸ்டாரண்ட்டில் அமிர்தலிங்கத்தை போய் பார்க்கச் சொல்லுவார். நான் கனகராஜா வாசுதேவா மூவரும் போய்தேடினால், அவர்கள் மூவரும் ஒரு மூலை டேபிளில் அமர்ந்து ரகசியமாக குளித்துக் கொண்டிருப்பார்கள். எங்களைப் பார்த்தவுடன் திகைத்து போய் வாசுதேவ் இரகசியமாக கூப்பிட்டு உமா மகேஸ்வரன் அல்லது மற்ற தலைவர்கள் யாரும் இங்கு நிற்கிறார்கள் என பயந்து போய் கேட்பார்கள். நாங்கள் இல்லை என்றதும், சந்தோசமாய் கூறினார் அவர்கள் பார்த்தார்கள் என்றால் போட்டோவும் எடுத்து தங்கள் இயக்க வெளியீடுகளில் போட்டு எங்களை ஒரே பாடாய் படுத்தி விடுவார்கள். நீங்கள் யாரும் போய் சொல்லி விடாதீர்கள். நாங்கள் போய் செயலதிபர் உமாவுடன் கூறினால், அவர் எங்களிடம் மற்றவர்களிடம் இதைக் கூற வேண்டாம் என கூறினார். அமிர்தலிங்கம் ஆட்கள்குளிர் தாங்க குடிக்கிறார்கள் என்றார்.

அடுத்தநாள் பகல் 2 மணி போல் இந்திய வெளியுறவு செயலக பேச்சுவார்த்தை கூட்ட அரங்கில்இந்திய வெளியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.உடனடியாக டெல்லி தூர்தர்ஷன் டெலிவிஷனில் இருந்து வீடியோ எடுத்து படங்கள் எடுத்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை முதல்முறையாக வெளி உலகுக்கு தெரியப்படுத்தினார்கள். இது இலங்கை அரசுக்கு எச்சரிக்கை மணி போல் பட்டது.

அந்தப் பேச்சுவார்த்தையில் அமிர்தலிங்கம், செயலதிபர்உமா மகேஸ்வரன், ரத்ன சபாபதி ஆகியோர்தான் கூடுதலாக கருத்துக்கள் சொன்னார்கள். ரொமேஷ் பண்டாரி அதை திலகர் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பார். சில வேளைகளில் நேர்எதிராக இருந்த செயலதிபர் உமா மகேஸ்வரன் பிரபாகரன் கூறுவதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கூறியதும் நடந்தது. பத்மநாபா வும் கேட்டதுக்கு பதில், ஆனால் ஸ்ரீ சபாரத்தினம் ஒரு புன் சிரிப்பு தான். அவருடன் வந்த சார்ல்ஸ் சில கருத்துக்களைக் கூறினார். சார்ல்ஸ் இப்ப லண்டனில் இருப்பதாக அறிகிறேன். ரொமேஷ் பண்டாரி எங்களுடன் பேசி விட்டு உடனடியாக நேரடி தொலைபேசி மூலம் இலங்கை அரசுடனும் பேசுவர். அவர்களின் கருத்தை எங்களிடம் கூறுவர்.இந்தக் கூட்டம் மிகவும் கலகலப்பாக சிரிப்புமாக முடிந்தது.ஒரு தீர்வும் கிடைக்கவில்லை ஆனால் இயக்கங்களின் கருத்துகள் கேட்கப்பட்டு இலங்கை அரசுக்கு தெரிவிக்கப்பட்டது.

ஆறு மணி போல் கூட்டம் முடிந்தது.கூட்டம் முடியும் நேரத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் பா .சிதம்பரம் எம்பி, ரங்கராஜன் குமாரமங்கலம் எம்பி ஆகியோர் வந்து தங்களைஅறிமுகப்படுத்திக் கொண்டு கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள்.பா சிதம்பரமும் ரங்கராஜன் குமாரமங்கலம் எனக்கு முன்பே அறியும் அறிமுகமானவர்கள் என்பதால்என்னைச் சுகம்விசாரித்து பேசிக்கொண்டிருக்கும் போது சிதம்பரம் ரங்கராஜன் இடம் இவரைத் தெரியுமா என்று கேட்க, ரங்கராஜன் காலையில் எழும்பி கதவை திறந்தால் இவன் முகத்தில்தான் முழிக்கிறேன் என்று கூறி, தனதுஎதிர் வீட்டில் தான் நான் இருப்பதாக கூறினார். இம்முறை பேச்சுவார்த்தையில் எல்லோரும் மிக மகிழ்ச்சியாக இருந்தோம்.

அடுத்த நாள் காலையில் எல்லோருக்கும் சென்னைக்கு விமானம். செயலதிபர் உமாமகேஸ்வரன் மட்டும் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு டெல்லியில் 2 நாள் இருந்து சில சந்திப்புகளை நடத்தி விட்டு சென்னை சென்றார்.

திம்பு பேச்சு வார்த்தைக்கு பின்புசந்திப்பு ....

போராளிகள் குழுக்களையும் , தமிழ் தலைவர்களையும் முதன் முறையாக இந்தியா அதிகாரப்பூர்வமாக உலகத்துக்குக் காட்டிஒன்றிணைத்த நேரம்.

இங்கே பேச்சுவார்த்தையில்உள்ளோர் பெயர்கள் : ரொமேஷ் பண்டாரி (forign secretary) - குர்தீப் சகாதேவ் (Asst.forign secretary) - சம்பந்தன் (TULF) சிவசிதம்பரம் (TULF) - அமிர்தலிங்கம் (TULF) - உமாமகேஸ்வரன் (PLOTE) - வாசுதேவா (PLOTE) - வெற்றிச்செல்வன் (PLOTE) - கனகராஜா (PLOTE) - யோகி (LTTE) - லோரன்ஸ் திலகர் (LTTE) - பிரபாகரன் (LTTE) - ரட்ணசபாபதி (EROS)- பாலகுமார் (EROS)- - றொபர்ட் (TELO) - சிறீ சபாரட்னம் (TELO) - ? - ? - பத்மநாபா (EPRLF) - கேதீசுவரன் (EPRLF) - சாந்தன் (EPRLF) ( இவர்களில் அநேகர் இன்று உயிரோடு இல்லை)

1985 ல் தமிழீழ விடுதலை இயக்கத் தலைமைகளும் தமிழ் அரசியல் தலைமையும் இணைந்து டில்லியில் ரொமேஷ் பண்டாரி அவர்களை சந்தித்த ஒரு பொன்னான நினைவு இது...

https://m.facebook.com/story.php?story_fbid=2792923404059427&id=100000253836437

தொடரும்.





பகுதி 34

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்

திம்பு முதல் சுற்று பேச்சுவார்த்தை முடிந்தவுடன் செயலதிபர் உமாமகேஸ்வரன் டெல்லி வந்த வந்தபோது நாங்கள் இருவரும் பெரியவர் ஜி பார்த்தசாரதி அவர்களை சந்திக்கச் சென்றோம். எங்களை வரவேற்று பேசிய அவரிடம் செயலதிபர் உமா மகேஸ்வரன் திம்பு பேச்சுவார்த்தை பற்றிய செய்தியைப் சொல்லத் தொடங்கிய உடன், ஜி பார்த்தசாரதி அவர்கள் கையைக் காட்டி நிப்பாட்டி விட்டு ,தான் இப்போது இலங்கை பிரச்சனை மற்றும் வெளிநாட்டு ஆலோசனைக் குழு வில் இருந்தும் ஒதுங்கி விட்டதாகவும், அதனால்தான் எந்தஆலோசனை யும் கொடுக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் இனிமேல் தன்னை வந்து சந்திக்க வேண்டாம் என பக்குவமாகக் கூறிவிட்டார். நாங்களும் அவர் எங்களுக்கு செய்த உதவிகளுக்கு நன்றி கூறி விடைபெற்றோம். G.பார்த்தசாரதி இடம் கூடுதலாக உதவி பெற்றது நாங்கள் தான்.அவரை கூடுதலாக சந்தித்ததும் நான் மட்டும்தான் என நினைக்கிறேன்.

பின்பு இருவரும் வெளியுறவு செயலாளர் ரொமேஷ் பண்டாரி அவரின் வீட்டில் சந்தித்தோம். இலங்கை தமிழ்பிரச்சினைக்கு எப்படியும்ஒரு தீர்வு காணலாம் எனக் கூறினார். நாங்கள் உட்பட எல்லா இயக்க தலைவர்களும், இலங்கைப் பிரச்சினைக்கு பொறுப்பான ரா உளவுத்துறைஇணைச்செயலாளர் நெருங்கிய தொடர்பில் இருந்தாலும், எமது செயலதிபர் ரா அமைப்பின் தலைவரை கிரிஷ் சந்திர சக்சேனா அவர்களை சந்திக்க விரும்பினார். தனது விருப்பத்தை ரொமேஷ் பண்டாரி இடம்தெரிவித்தபோது அவரும் உடனடியாக அவரை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்தார். ரா உளவு அமைப்பின் தலைவரை அவரின் வீட்டில் செயலதிபர் உமா மகேஸ்வரனும் நானும் சந்தித்தோம். 87 ஆம் ஆண்டு வரை குறைந்தது ஏழு அல்லது எட்டு தரம் சந்தித்திருப்போம். எங்கள் சந்திப்பின்போது நாங்கள் தேய்ந்து போன ரெக்கார்டை மாதிரி அதாவது நாங்கள் தான் இந்தியாவுக்கு மிக நெருக்கமானவர்கள். மற்ற இயக்கங்கள் இந்தியாவுக்கு எதிரான சக்திகளோடு தமிழ்நாட்டில் சேர்ந்து இயங்குகிறார்கள். இலங்கை அரசுக்கு கூட தகவல்கள் பரிமாறுகிறார்கள் என்று கூறினார் (# மேலே மற்ற இயக்கங்களைப் பற்றி கூறிய அவ்வளவு குற்றச்சாட்டுகளையும் எங்கள் புளொட் தான் செய்ததுஉமாமகேஸ்வரன் முதல் காரணம் என்று பின்பு தெரிய வந்தது#) ரா தலைவரும் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு சிரித்துக் கொண்டு இருப்பார். எமது செயலதிபர் ஆயுதமும் பயிற்சியும் எங்களுக்குகூடுதலாக வேண்டும் கூறும்போது இணைச்செயலாளர் அல்லது சென்னை ரா அமைப்பின் DIG சந்தித்துப் பேசும் படி கூறுவர்.

இரண்டாவது திம்பு பேச்சுவார்த்தை ஆரம்பித்தது ஆகஸ்ட் மாதம்12 ஆம் தேதி ஆரம்பித்தது.பேச்சுவார்த்தையில் கலவரம் ஏற்பட்டு இரண்டு நாளில் முடிந்தது. முதல் பேச்சுவார்த்தைக்கு போனவர்களில் டெலோ இயக்கம் மோகனை எடுத்துவிட்டு நடேசன் சத்தியேந்திராஎன்பவரை லண்டனில் இருந்து அழைத்து தங்கள் பிரதிநிதியாக அனுப்பினார்கள்.சத்தியேந்திரா குறித்து மற்ற இயக்கங்களில் சலசலப்பு ஏற்பட்டது. சத்தியேந்திர ஜனாதிபதி ஜெயவர்த்தனா அவருக்குமிக நெருங்கியவர்.. அதோடு முன்பு JRஅமைச்சின் தொழில்துறை அமைச்சர்செயலாளராக இருந்தவர் என நினைக்கிறேன். சத்தியேந்திர வந்தது டெலோ அமைப்பின் ஆலோசகர் தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் தான் அழைத்து வந்தது. என பேசிக்கொண்டார்கள். அப்போது எல்லா இயக்கமும் குறிப்பாக பிளாட், சந்திரகாசன் CIAஏஜன்ட் என பகிரங்கமாக குறிப்பிடுவோம்.நாங்கள் சத்தியேந்திரா வந்ததை சிஐஏ பேச்சுவார்த்தையை குழப்ப தனது ஏஜென்டுகளை அனுப்பியுள்ள என பகிரங்கமாகவே கூறினோம். இதே காலகட்டத்தில் முக்கியமான ஒரு ஒரு செய்தியைக் கூற வேண்டும். ரா உளவு இயக்கத்தின் தமிழ்நாடு பொறுப்பாளர் இலங்கை விடுதலை இயக்கங்களை நேரடியாக கையாண்டவர் D IG உன்னி கிருஷ்ணன். இவர் பின்னாளில் இந்திய மத்திய உளவுத்துறை IB கண்காணிக்கப்பட்டு அமெரிக்க ஏஜென்டாக செயல்பட்டதைஆதாரத்துடன் கண்டுபிடித்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். உன்னி கிருஷ்ணன் சந்திரகாசன் னுக்கு மிக நெருக்கமாக இருந்தவர்.

திம்புவில் பேச்சுவார்த்தை பற்றி நான் கேள்விப்பட்டது, இலங்கை அரசாங்கம் பிரதிநிதிகள்பிரதிநிதிகள் குழப்பக் கூடிய விதத்தில் பேசியதாகவும், அதற்கு தீ வைப்பது போல் சத்தியேந்திர மிகக் கடுமையாக பேசி நிலைமையை மோசமாக்கும் தகவல்கள் வந்தன. உடனடியாக இந்திய வெளியுறவு செயலாளர் ரமேஷ்பண்டாரி திம்பு போய்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு நிலைமையின் சூட்டை தனித்து சகஜ நிலைக்கு கொண்டு வரும் போது, சத்தியேந்திர ரொமேஷ் பண்டாரி இன் பேச்சில் குற்றம் கண்டுபிடித்து,இந்திய அதிகாரிகளின் மேல் பிரச்சினையைத் திசை திருப்பி தான் வந்த வேலையை சுலபமாக முடித்துக் கொண்டார்.

பேச்சுவார்த்தை குழம்பியதுஎல்லா இயக்கங்களுக்கும் சந்தோசம். ஆனால் சித்தார்த்தன் சத்தியேந்திரா தவற்றைச் சுட்டிக் காட்டியுள்ளார். ரொமேஷ் பண்டாரி பேசியதில் எந்தக் குற்றமும் இருக்கவில்லை என்ற உண்மையை துணிச்சலுடன் கூறினார். பின்பு சித்தார்த்தன் இப்படிக் கூறியது எமது செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு பிடிக்கவில்லை. அவர் கூறினார் இவர்கள் அடி படட்டும். நல்லது. அமிர்தலிங்கத்தை வைத்து இந்தியா எடுக்கும் தீர்வுத் திட்டத்துக்கு நாங்கள் ஆதரிக்க கூடாது என்று கூறினார்.

எல்லா உண்மைகளையும் மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கடுங்கோபத்தில் இருந்தார். இலங்கை அரசுவிடுதலை இயக்கங்கள் தான் பேச்சுவார்த்தையே உடைத்தன என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்கள். உடனடியாக இந்திய அரசு அன்டன் பாலசிங்கம், சந்திரஹாசன், மூவரையும் லண்டனுக்கு நாடு கடத்தினார்கள்.இதை திமுக தலைவர்கள் எதிர்த்தார்கள் குறிப்பாக வை கோபால்சாமி பாராளுமன்றத்தில் இதைப் பற்றி பேசி எதிர்ப்பு தெரிவித்தார். இதே நேரம் சித்தாத்தன் இந்திய அரசுக்கு ஆதரவாக பேசிய பேச்சால் ஏற்பட்ட நிலைமை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள எமது செயலதிபர் உமாமகேஸ்வரன் டில்லி வந்தார். நாங்கள் ரொமேஷ் பண்டாரி சந்தித்தோம். அவர்கவலைப்பட்டார். தனது பதவிக்காலத்தில் இச்சம்பவம் ஒரு கரும்புள்ளி என கூறி வருத்தப்பட்டார். சித்தார்த்தன் மட்டும் உண்மையை கூறி இருக்காவிட்டால் உண்மை வெளியில் வந்து இருக்காது தன்னை குற்றவாளியாக குறிப்பிட்டு இருப்பார்கள் என்று கூறி சித்தார்த்தன் எமது இயக்கத்திற்கும் நன்றி கூறினார். இந்திய அரசு ஜெயவர்த்தனா வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட போவதாகவும் கூறினார்.

நாங்கள் எப்பவும் வை கோபால்சாமி எம் பி யுடன் நல்ல தொடர்பில் இருப்போம்.வீட்டுக்குப் போய் பேசிக்கொண்டிருக்கும் போது,மூவரையும் நாடுகடத்தியது பற்றி பேச்சு வந்தபோது செயலதிபர் வைகோவிடம் நீங்கள் நாடு கடத்தப்பட்ட மூவருக்குஆதரவாகஆதரவாக பேசி இருக்கக் கூடாது என கூறினார் அதோடு அவர்கள் சிஐஏ ஏஜெண்டுகள் எனவும் கூறினார். வைகோ அவர்கள் உமாவின்பேச்சைஏற்றுக்கொள்ளவில்லை.இருக்கட்டும் தமிழ் நாட்டில் அடைக்கலம் தேடி வந்தவர்களை மத்திய அரசு நாடு கடத்த நாங்கள் அனுமதித்தால், நாளை உங்கள் எல்லோரையும் ஒவ்வொரு காரணம் சொல்லி நாடு கடத்துவார்கள். அப்பொழுது இன்னொருஇயக்கம் உங்களை சிஐஏ ஏஜென்ட் என்று கூறும். தமிழ்நாட்டில் எதிர்ப்பு இருந்தால்தான் மத்திய அரசு தமிழ் இயக்கங்கள் மேல் கை வைக்காது எனக் கூறினார்.

வழக்கம் போல் நாங்கள்பத்திரிகையாளர்கள் வெளிநாட்டுத் தூதுவர் ஆலயங்கள் சந்தித்துவிட்டு செயலதிபர் சென்னை திரும்பினார்.

செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி ஒரு அதிர்ச்சியான செய்தி இலங்கையில் இருந்து வந்தது தமிழர் விடுதலைக் கூட்டணி எம்பிக்கள் ஆன திரு தர்மலிங்கம் அவர்களையும் ஆலாலசுந்தரம் அவர்களையும் தமிழ் விடுதலை இயக்கம் ஒன்று சுட்டுக் கொன்றுவிட்டதாக. திரு தர்மலிங்கம் நமது இயக்க திம்புவில் கலந்துகொண்ட சித்தார்த்தனின் அப்பா என்பது குறிப்பிடத்தக்கது.உடனடியாக எல்லா இயக்கங்களும் விடுதலைப் புலிகள் மேல் சந்தேகப்பட்டு அறிக்கையும் கொடுத்தார்கள். விடுதலைப் புலிகள் மறுத்தார்கள். சித்தார்த்தன் தன்னை சந்தித்து அனுதாபம் தெரிவித்துஎல்லோரிடமும் இந்தக் கொலையைபிரபாகரன் செய்திருக்க மாட்டார். தனது அப்பாவிற்கும் பிரபாகரனுக்கும் உள்ள உறவு மிக நெருக்கமானது என்று கூறினார்.

விடுதலைப் புலிகள் telo தான் இக் கொலைகளை செய்ததாகஉறுதிப்படுத்தினார்கள். அதோடு வேகமாக ஒரு கதை பரவியது இந்த கொலையை தமிழர் விடுதலைக் கூட்டணியை பயமுறுத்துவதற்காக இந்திய ரா உளவுத்துறை TELO இயக்கத்தைவைத்து கொலை செய்ததாக, இந்தக்கதை இன்றுவரை பேசப்படுகிறது.. அந்தக் காலகட்டத்தில் எங்களுக்குகிடைத்த சில செய்திகளை நாங்கள் மறைத்து விட்டு இந்திய உளவு ரா தான் தர்மலிங்கம், ஆலாலசுந்தரர் கொன்றதாக ரகசியமாக இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பரப்ப தொடங்கினோம். தமிழர் விடுதலைக் கூட்டணி

குழுவினர் இந்திய அரசுக்கு மிகநம்பிக்கையாக இருந்தார்கள். அதோடு இந்திய அரசு இந்திரா காந்திமுதல் ராஜீவ் காந்தி வரை அமிர்தலிங்கத்தின் தலைமையில் ஓர் அரசியல் தீர்வைஏற்படுத்திக் கொடுக்க முயற்சி செய்தார்கள். இதை தமிழ் இயக்கங்களும்விரும்பவில்லை ,இலங்கை அரசாங்கமும்விரும்பவில்லை. இந்திய உளவுத்துறை ரா தலைவர் முதல் மற்றவர்கள் வரை பிரதம மந்திரிக்கு எதிராக செயல்பட மாட்டார்கள். கே ஜி பி CIA. Pakistan உளவுத்துறை போல் தன்னிச்சையாக செயல்பட்டதாக தெரியவில்லை. சித்தார்த்தன் ரொமேஷ் பண்டாரி ஆதரவாக உண்மைபேசியது பிடிக்காமல் பழிவாங்கும் நடவடிக்கையாக கூட இருக்கலாம். இது இந்தியநாட்டின் கிட்டத்தட்ட மானத்தை காப்பாற்றிய போல். இலங்கை அரசுக்கு மறைமுகமான ஆதரவான சந்திரகாசன் இன் சத்தியேந்திரா வின் ஏற்பாட்டில் நடந்து இருக்கலாம். இல்லாவிட்டால் தமிழ்நாட்டு ரா உளவு அதிகாரி அமெரிக்க சிஐஏ ஏஜென்ட் உன்னிகிருஷ்ணன்மூலம் இந்த கொலைகளை சிஐஏ செய்திருக்கலாம். காரணம்இதன் மூலம் அமிர்தலிங்கத்தை பயமுறுத்தி இந்திய தீர்வுத் திட்டத்துக்கு ஒத்துவராமல் செய்வது, அடுத்தது இந்திய ரா அமைப்புக்கு டெலோ நெருக்கம் என்ற பெயர் இருந்தது.ரெலோ இயக்கத்தை வைத்து இந்த கொலையை செய்தால் ரா அமைப்பு தான் இந்த கொலையை செய்தது என்று கருத்து பரப்பப்பட்டு பிரச்சாரம் செய்தால் இந்திய ரா அமைப்பின் பெயர் சர்வதேச ரீதியில் இலங்கை தமிழர்களால் பரப்பப்பட்டு ரா அமைப்புக்கு கெட்ட பெயர் வரும். இந்தக் கொலைகளைசிஐஏ தனது ஏஜன்ட் உன்னிகிருஷ்ணன் வைத்து செய்திருக்கலாம் என்று டெல்லி பத்திரிகையாளர்கள் மூலம் அறியப்பட்டது.

இதைப் பற்றி நமது செயலதிபர் உமாமகேஸ்வரன் விடம் கேட்டபோது அவர் யாரிடமும் விவாதிக்க வேண்டாம். கேட்டால் teloஇயக்கம் மூலம் ரா தான் செய்தது என்று தகவல் உண்மையான தான் என்று கூறச் சொன்னார்.

திம்பு பேச்சுவார்த்தையில் நடந்த முழு உண்மைகளையும்முதலமைச்சர் வரதராஜ பெருமாளும் சித்தார்த்தன் எம்பிஅவர்களும் தான். உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்இவர்கள் நேரடியாக நடந்த உண்மை சம்பவங்களை கூறினால் பல தெளிவு பிறக்கும். திம்பு பேச்சுவார்த்தையில் இவர்கள் இருவரும் கலந்து கொண்டவர்கள்.

தொடரும்



பகுதி 33

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்

திரும்பவும் இயக்கத் தலைவர்கள்,தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள் டெல்லி அழைக்கப்பட்டிருந்தார்கள். இம்முறை செயலதிபர் உமாமகேஸ்வரன் வாசுதேவா வையும் அழைத்து வந்திருந்தார். எல்லா இயக்கங்களுக்கும் ஒரு ஹோட்டல். உமாமகேஸ்வரன் வழமைபோல் என்னோடுதான் தங்கினார்.அமிர்தலிங்கம் சிவசிதம்பரம் சம்பந்தன் வேறு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். ராஜீவ் காந்தி அரசின் புதிய வெளியுறவு செயலாளர்ரொமேஷ் பண்டாரி ரகசியமாக இயக்கங்களை தனியாகவும்தமிழர் விடுதலைக் கூட்டணி தனியாகவும் சந்தித்துப் பேசினார். சந்திப்புகள் தனியார் ஓய்வு விடுதியில் நடந்தன.

இந்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை தமிழ் இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண பிரதமர் ராஜீவ் காந்தி விரும்புவதாகவும் அதற்கு இயக்கங்களின் கருத்துக்களையும் கேட்டுக்கொண்டார். அதே மாதிரி தமிழர் விடுதலைக் கூட்டணி அமிர்தலிங்கம் ஆட்கள் லோடும்அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாக அறிந்தோம்..

திரும்பவும் 85 ஆம் ஆண்டு மே மாதம் என நினைக்கிறேன் இயக்கங்கள் எல்லாம் அழைக்கப்பட்டு இந்திய வெளிநாட்டு உளவுத்துறை ரா அதிகாரிகளும், சந்தித்து சமகால நிலைமைகளை பற்றி கதைத்தார்கள்.இயக்கத்தில் கூடுதலாக வாசுதேவா கலந்து கொண்டார். ரா அதிகாரிகளுடன் பேசும்போது எல்லா இயக்கமும் தங்களுக்கு கூடுதலாக ஆயுதங்கள் தரவேண்டும் பயிற்சிகள் தர வேண்டும். தங்களால் பெரிய மாற்றங்கள் கொண்டுவர முடியும். உறுதிபடக் கூறினார் கள்.தனிப்பட்ட முறையில் அதிகாரிகளை சந்தித்துப் பேசினார்கள். வழமை போல் ஒவ்வொரு இயக்கமும் தாங்கள் தான் இந்தியாவுக்கு நம்பிக்கையானவர்கள் தங்களால் இலங்கையில் மாற்றம் கொண்டு வர முடியும் என்று கூறி மற்ற இயக்கங்களை போட்டுக் கொடுத்தார்கள். ஈரோஸ் இயக்கம் கூடுதலாக புளொட் இயக்கமும் செயலதிபர் உமா மகேஸ்வரனும் இலங்கை அரசோடு ரகசிய தொடர்பு இருப்பதாக கூடுதலாக போட்டுக் கொடுத்தார்கள்.

டெல்லியில் ரகசியபேச்சுவார்த்தையில் டில்லியில்இயக்கங்கள் இருக்கும் போது வல்வெட்டித்துறையில் சில விடுதலைப்புலிஇளைஞர்களை கைகளை கட்டி சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்றதாக செய்திகள் வந்தன. பிரபாகரனின் முகத்தில் சிரிப்பை பார்க்க முடியவில்லை. அடுத்த நாள் ரொமேஷ் பண்டாரி எங்களை சந்தித்தபோது அவர் தமிழ் விடுதலை இயக்கங்கள் எதிர்பார்க்கும் தீர்வுகளை பற்றிப் பேசவே ஜெயவர்த்தனா அரசு மறுப்பதாக கூறினார் அதேநேரம் இந்திய அரசு முடிந்தளவு அரசியல் பிரயோகம் செய்து ஒரு தீர்வு கொண்டுவர முயற்சிகள் செய்யும் எனக் கூறினார். அப்போது பிரபாகரன் திடீரென தன்னால் இலங்கை அரசை ஒரு தீர்வுத் திட்டத்துக்கு கொண்டுவர பேச்சுவார்த்தைக்கு வரச்செய்ய முடியும் என கூறினார். இதைக் கேட்டவுடன் எல்லோரும் திகைத்து விட்டார்கள்.ரொமேஷ் பண்டாரி பிரபாகரன் பார்த்து எப்படி முடியும் எப்படி முடியும் என்று கேட்டார்.பிரபாகரன் தன்னால் முடியும் பொறுத்திருந்து பார்க்க சொன்னார்,திலகர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறினார். மற்றஎல்லா இயக்கத் தலைவர்களும் பிரபாகரனே ஒரு ஏளன சிரிப்புடன் பார்த்தார்கள். கூட்டம் முடிந்து வரும்போது ஹோட்டலில் வைத்து, ஐந்து இயக்கங்களும் ஒருவருடன் ஒருவர் பேசாமல் தங்கள் தங்கள் அறைகளுக்கு போய் விட்டார்கள்.நானும் செயலதிபர் உமா மகேஸ்வரனும் வாசுதேவா ரூமில் இருந்து கதைத்துக் கொண்டிருந்தநேரம் எமது ரூமுக்கு ஈரோஸ் ரத்ன சபாபதி வந்தார். எல்லோரும் பிரபாகரன்இலங்கை அரசை பணிய வைக்க முடியும் என்று கூறியதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். செயலதிபர் உமா மகேஸ்வரன் பிரபாகரன் ஒரு மடையன் நடைமுறை சாத்தியமில்லாத செய்திகளைக் கூறுவதே அவனின் பழக்கம் என்று கூறி, 83 ஆம் ஆண்டு நடந்த ஒரு தகவலையும் கூறினார். இருந்து ஜாமினில் இருந்து விலகிப் தப்பிபோவதைப் பற்றி தமிழ்நாட்டு மந்திரி காளிமுத்து விடம் கூறி, புலவர் புலமைப்பித்தன் மூலம் தனக்கும் தான் தப்பி போதை பற்றி செய்தி அனுப்பியதாக கூறி, அப்போதுகாளிமுத்து பிரபாகரனும் நீங்கள் தப்பி போவதால் இந்திய அரசின் பகையையும் சேர்த்து கொள்ள போகிறீர்கள் எனக்கூற பிரபாகரன் இந்திய அரசையும் தேவையானால் எதிர்க்கதயாராக இருப்பதாக கூறியுள்ளார்இந்த செய்தியை புலமைப்பித்தன் பிரபாகரன் எப்படிப்பட்ட நெஞ்சுரம் கொண்டவர் என பாராட்டியதாக கூறினார். அப்போது தான் புலமைப்பித்தன் இடம் வார்த்தைகளில் எது வேண்டுமானாலும் வீரமாக. கூறலாம்.அமெரிக்க படை இந்தியப்படை பிரிட்டிஷ் படையை கூட எதிர்க்க தயார் எனவாய்ச்சவடால் விடலாம் என்று தான் கூறியதாக கூறினார். நடைமுறை சாத்தியம் என்று ஒன்று இருக்கிறது என்றார். செயலதிபர் உமாமகேஸ்வரன் மேலே கூறிய விடயம் உண்மை. புலமைப்பித்தன் வரச்சொல்லி செயலதிபர் போன போது கூட நானும் மாறனும் போயிருந்தோம்.

இப்போது இதை எழுதும் போது,பிரபாகரன் அன்று கூறிய படி பிற்காலத்தில் இந்தியப் படையை தைரியமாக எதிர்த்து நின்றது உண்மை.

டெல்லியில் சம்பவம் நடந்து ஒரு வாரம் பத்து நாட்களில் அனுராதபுரத்தில் , வில்பத்து காட்டில் சிங்கள மக்கள் புத்த பிக்குகள் நூற்றுக்கணக்கானோர்படுகொலை செய்யப்பட்டனர்.இப்படுகொலையை விடுதலைப் புலிகள் உட்பட எல்லா இயக்கங்களும் மறுத்தன. ஆனால் இதுவிடுதலைப் புலிகளால் இது செய்யப்பட்டது . இலங்கை அரசு திகைத்து நின்றது. அதன் பின்பு இலங்கை அரசு இந்திய அரசோடு தான் பேச்சுவார்த்தைக்கு வர தயார் என அறிவித்தது. இது பிரபாகரனின் சாதனை. உடனடியாக திம்புவில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சென்னையிலும் டெல்லியிலும் ஏற்பாடுகள் நடக்க தொடங்கி னர்கள்.

ராஜீவ் காந்தி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும். இந்த இலங்கை தமிழின போராட்டம் முடிவு பெற வேண்டும் என்று விரும்பியதாக டெல்லி பத்திரிகையாளர்கள் மூலம் அறியக்கூடியதாக இருந்தது. இலங்கை அரசு இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைய வேண்டும் அதுவும் இலங்கை தமிழ் குழுக்களே பேச்சுவார்த்தையை தோல்வியடைய செய்ய வேண்டும் என்று நினைத்தது. தமிழ் இயக்கங்கள்இந்தப் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால் அமிர்தலிங்கம் முன்னணிக்கு வந்து விடுவார் என்று நினைத்தனர். அதே நேரம்பேச்சுவார்த்தை யை எதிர்த்தால் இந்தியாவை பகைக்கவேண்டி வரும். அதோடு பேச்சுவார்த்தையில் தங்களால் உடைந்துவிட்டது என்று காட்டாமல் இலங்கை அரசாங்கமே பேச்சுவார்த்தையில் பின் வாங்க வேண்டும்,இலங்கை அரசு ஒரு காலமும் ஒப்பந்தம் மூலம் இலங்கை தமிழருக்கு எந்த உரிமையும் கொடுக்காது எனஉலகத்துக்கு காட்ட வேண்டும் என நினைத்தார்கள். ஆனால் அமிர்தலிங்கம் குழுவினர் இந்தியாவையும் பகைக்கக் கூடாது, தமிழ் விடுதலை இயக்கங்களையும் பகைக்கவைக்க கூடாது என்ற நிலையில் இருந்தார்கள்.

டெல்லி பத்திரிகை நண்பர்களில் எமக்கு மிக நெருங்கியவர் ஆக பிடிஐ செய்தி ஸ்தாபனத்தின் தலைமை நிருபர் தமிழர் சந்திரசேகரன் இருந்தார்.எப்படியும் ஒரு பேட்டி எடுத்து போட்டு விடுவர். பிடிஐ செய்திகள் உடனுக்குடன் உலகம் முழுக்க பரவிவிடும். அதே மாதிரி சித்தார்த்தன் வந்து இருக்கும் பொழுது எல்லாம் வந்து மிக நீண்ட நேரம் பேசுவார். அவர் மூலம் நாங்கள்செய்திகளை இந்தியஅரசின் இலங்கை நிலைப்பாடு இலங்கை அரசின் நிலைப்பாடு மற்றஇயக்கங்களின் நிலைப்பாடுகளபற்றி அவர் மூலம் நட்பு ரீதியாக நாங்கள் அறியக்கூடியதாக இருக்கும்.

1985 ஆம் ஆண்டு ஜூலை மாதம்6 தொடக்கம் 13 ஆம் திகதிவரை நடந்த முதல் சுற்று பேச்சு வார்த்தைக்கு போக சித்தாத்தன் ஆட்கள் டெல்லி வந்தபோது சித்தார்த்தனை சந்தித்த பிடி ஐ நிருபர் சந்திரசேகர் தினசரி மீட்டிங் முடிந்த பின்பு நடந்த செய்திகளை எனக்கு போன் செய்து கூறமுடியுமா எனக்கேட்டார். ஆனால் இந்திய உளவுத்துறை தினசரி மீட்டிங் முடிந்த பின்பு ஒவ்வொருஇயக்கத் செய்திகளைக் கூற ஒரு ஹாட்லைன் தொலைபேசி ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்கள். இரவு 8 மணிக்கு தான் பேசுவார்கள். சித்தார்த்தன் வாசுதேவாசென்னைக்கு செயலதிபர் உமாவுடன் பேசிவிட்டு, டெல்லிக்கு எனது தொலைபேசி எண்ணுக்கு ம் சித்தார்த்தன்போன் பேசுவார். அப்போது பிடிஐ நிருபர் சந்திரசேகர்என்னுடன் இருந்து அன்று நடந்த கூட்டத்தின் விபரங்களை அறிந்து அடுத்தநாள் வெளியிட்டு விடுவார். இந்திய அரசு திம்பு பேச்சுவார்த்தை பற்றி ஒருஅறிக்கை கூட நிருபர்களுக்கு கொடுப்பதில்லை.உளவுத் துறை அதிகாரிகளுக்கு பெரிய சந்தேகம்.

எப்படி செய்தி லீக் ஆகிறது என்று, எல்லோரினதும் சந்தேகங்களும் ஈரோஸ் இயக்கத்தின் மேல் தான் இருந்தன. நாங்கள் தப்பிவிட்டோம்.

திம்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்கள் இலங்கை அரசின் சார்பில் இலங்கை ஜனாதிபதியின் சகோதரர் h.w. ஜெயவர்தனா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் அமிர்தலிங்கம் சிவசிதம்பரம் சம்பந்தன், தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் அண்டன், மற்றும் திலகர், ஈபிஆர்எல்எஃப் சார்பில் வரதராஜ பெருமாள், கேதீஸ்வரன், ஈரோஸ் சார்பில் ராஜீவ் சங்கர், ரத்ன சபாபதி, telo சார்பில் சார்ல்ஸ், மோகன் புளொட் சார்பில் வாசுதேவா, சித்தார்த்தன் கலந்து கொண்டார்கள்.

முதலாவது சுற்று பேச்சுவார்த்தை ஒரு முடிவுக்கும் வராமல் இழுபறியாக இருந்த தாக சித்தார்த்தன் கூறினார். இந்திய அரசு மிக நம்பிக்கையாக இருந்தது. மிகத் தீவிரமாகவும் இருந்தது பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிக்க.

தொடரும்.



பகுதி 32

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களு

1985ஆண்டு டெல்லியில் இலங்கையிலுள்ள விடுதலை இயக்கங்களுக்கும் இந்திய அரசுக்கும் முக்கிய சந்திப்புகள் நடந்தன. முதலில் அதைப் பற்றி பார்ப்போம்.இந்திரா காந்தி மறைவுக்குப் பின் ராஜீவ் காந்தி பிரதமராக வந்து இரண்டொரு மாதங்களில் எல்லா விடுதலை இயக்கத் தலைவர்களுக்கும் டெல்லி வரும்படி அழைப்பு வந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி அழைப்பு வரவில்லை. விடுதலைப் புலிகளின் சார்பில் பிரபாகரன், திலகர், ஈபிஆர்எல்எஃப் சார்பில் பத்மநாபா, கேதீஸ்வரன் ஈரோஸ் சார்பில் பாலகுமார், ரத்ன சபாபதி, டெலோ சார்பில் ஸ்ரீ சபாரத்தினம் கூட வந்த பெயர் நினைவில் இல்லை, புளொட்சார்பில் செயலதிபர் உமாமகேஸ்வரன் மட்டும் வந்தார், டெல்லியில் அவருடன் நானும் சேர்ந்து கொண்டேன். எல்லா விடுதலை இயக்கங்களுக்கும் ஒரே ஓட்டலில் தங்கும் இடம் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்கள். ஹோட்டல் தாசப்பிரகாஷ் என நினைக்கிறேன். செயலதிபர் உமா தனக்கு ரூம் வேண்டாம் என்று கூறி விட்டு என்னோடு வந்து தங்கிவிட்டார். அடுத்த நாள் காலை 10 மணிக்கு ஹோட்டல் தாசப்பிரகாஷ்வரச்சொன்னார்கள்.

காலையில் நாங்கள் அங்கு போனபோது எல்லா இயக்கத்தவர்களும் தயாராக வரவேற்பறையில்இருந்தார்கள் இந்திய அதிகாரிகள் தனித்தனி கார்களில் எங்களைக் கூட்டிக்கொண்டு பெரியவர் ஜி பார்த்தசாரதி அவர்களின் வீட்டுக்கு அழைத்துப் போனார்கள்.ஜிபி அவர்களும் அவர்களின் செயலாளர் அய்யாசாமி அவர்களும் எல்லோரையும்வரவேற்றார்கள். இதுதான் எல்லா இயக்கமும் சேர்ந்து ஒரு இந்திய அதிகாரிகளை சந்தித்த முதல் நேரம். பெரியவர் ஜி பார்த்தசாரதி எல்லா தமிழில் விடுதலை இயக்கத் தலைவர்களுக்கும் தெளிவாக ஒரு செய்தியைச் சொன்னார். அதை ஏற்றுக் கொண்டிருந்தால் இன்று இந்த நிலைமை வந்திருக்காது.

நாளை நீங்கள் இந்திய அதிகாரிகளையும் மத்திய அமைச்சரையும் சந்திக்கும்போது அவர்கள் உங்களுக்கு பயிற்சியும் ஆயுதமும் கொடுப்பது தனிநாடு எடுப்பதற்கு என்ற ரீதியில் கூறுவார்கள். ஆனால் உண்மையில் அது அல்ல காரணம். இலங்கை இந்தியாவின் நட்பு நாடாக இல்லை அமெரிக்காவின் நட்பு வளையத்தில் உள்ளது. திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் போன்றவை அமெரிக்க அரசு பெற்றுக்கொண்டாள். இந்திய பாதுகாப்புக்கு அது அச்சுறுத்தலாக இருக்கும் என்பது உண்மை. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் தொடங்கியபோது பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் ஒரு முடிவெடுத்துஅந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தோம். அதாவது இலங்கை அரசை பணிய செய்வதற்கு ,அதாவது ஜெயவர்தனா அரசை நெருக்கடிக்குள்ளாகிஇந்தியாவுக்கும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும் ஒரு நல்ல தீர்வு திட்டம் ஏற்படுத்தித் தர முடிவு செய்தோம். அதன்படி இந்தியாவின் வந்து குவிந்துள்ள 4பெரிய விடுதலை இயக்கங்களுக்கும் பயிற்சியும் ஆதரவு கொடுத்து இலங்கைக்கு அனுப்பி, இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கும்போது, இந்தியா மறுபுறம் அரசியல் ரீதியான நெருக்கடிகள் கொடுத்துநல்ல தீர்வை பெற்றுத் தர முடிவு செய்துள்ளோம். உங்களுக்கு பயிற்சியும் ஆயுதமும் கொடுப்பது தனிநாடு எடுப்பதற்காக என்று கூறினாலும் நீங்கள் அதை நம்ப வேண்டாம்.என்பதை நீங்கள் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவில்தனித்தமிழ்நாடு கேட்டு போராட்டங்கள் நடந்தன.இப்ப அந்தப் போராட்டங்கள் இல்லை என்றாலும் நீறு பூத்த நெருப்பாக தனித்தமிழ்நாடு ஆர்வம் உள்ளது இலங்கையில் தனித் தமிழ் ஈழம் இந்தியா எடுப்பதற்கு உதவி செய்தாள் இங்கும் பழையபடி தனித்தமிழ்நாடு போராட்டம் தலைதூக்கும் என்பது இந்திய ஆட்சியாளர்களுக்கு தெரியும். உங்களுக்கு இப்போது வெளிநாட்டு தொடர்புகள் ஒரு போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தக்கூடிய தகுதிகள் எல்லாம் இருப்பதாக நினைக்கிறேன். இந்திய பயிற்சி , மற்றும்ஆயுதங்களை எடுத்துக் கொண்டு நீங்கள்நீங்கள் நாட்டுக்கு உங்கள்ஊர்களுக்குத் திரும்ப வேண்டும்.அங்கு நீங்கள் மக்கள் மத்தியில் வேலை செய்யுங்கள் மக்களுக்கு பாதுகாப்பாக இருங்கள். ஒவ்வொரு இயக்கங்களும் உங்களுக்குள் முரண்படாமல் உங்களுக்கு அதாவது ஒவ்வொரு இயக்கங்களும் தாங்கள் பாதுகாப்பாக இயங்க கூடிய இடங்களை தெரிவு செய்து அங்கு இயங்குங்கள். இங்கு பயிற்சி பெற்ற உங்கள் ஆட்களைக் கொண்டு நீங்கள் இலங்கையில் வைத்தே கூடுதலாகப் மற்றவர்களுக்கு பயிற்சி கொடுங்கள். இந்தியாவுக்கு அழைத்து வந்து பயிற்சி கொடுப்பதை நிறுத்துங்கள் அது உங்களுக்குப் பொருளாதார ரீதியிலும் கஷ்டத்தை கொடுக்கும்.இங்குள்ள மக்களோடு காலப்போக்கில் முரண்பட்டு பாரதூரமான விளைவுகளைக் கூட ஏற்படுத்தலாம் இங்கு. தமிழ்நாடு அரசாங்கம், தமிழ் நாட்டு அதிகாரிகள்எங்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைபாதுகாப்பது தங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று.

நாங்கள் அமிர்தலிங்கம் மூலம் பெற்றுத் தரும் நல்ல ஒரு தீர்வை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும் கடந்தகால ஒப்பந்தங்களைப் போல் இலங்கை அரசு இந்த ஒப்பந்தத்தையும் மீறிதமிழருக்கு எதிராக நடந்தால் என்ன செய்வதென்று,இந்தியா பார்த்துக் கொண்டிருக்காது, முன்னாள்பிரதம மந்திரி இந்திரா காந்தி இதில் உறுதியாக இருந்தார்.அப்படியும் இலங்கை அரசு தமிழருக்கு எதிரான நிலையை எடுத்தால்.பெரிய போராட்டத்தை அங்கிருந்தே நடத்துங்கள்.உங்களுக்குத்தான் இந்தியாவில் பெற்ற பயிற்சியும் ஆயுதங்களும் அனுபவமும் இருக்கிறது. அதோடு வெளிநாட்டு ஆதரவுகளையும் திரட்டக் கூடிய அனுபவம் வந்துவிட்டது. அப்போது இந்தியாவின் மனநிலைகள் கூட மாற்றம் ஏற்படலாம் தமிழ் ஈழத்தைகூட ஆதரித்து அங்கீகரிக்க லாம். எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் நம்பிக்கையோடு இருங்கள். நாளை உங்களுக்கு இந்திய அதிகாரிகள் தமிழீழம் பற்றி கொடுக்கும் வாக்குகளை நம்ப வேண்டாம்.என்று பல புத்திமதிகளை கூறி எங்களை அனுப்பி விட்டார்.

. வெளியில் வந்த தலைவர்கள் எல்லோரும் குழம்பிப் போயிருந்தார்கள். எல்லோரும் திரும்ப ஹோட்டலுக்குப் போய் அங்கிருந்த தனிமையான ஒரு ரிசப்ஷன் அறையில் செயலதிபர் உட்பட நாங்கள் எல்லோரும் இதைப்பற்றி ஒற்றுமையாக கதைக்கதொடங்கினார்கள். அதாவது யாரும் அமிர்தலிங்கம் தலைமையில்ஒரு தீர்வு வருவதை விரும்பவில்லை.எல்லோரும் அமிர்தலிங்கத்தின் தலைமையில் ஏற்படும் தீர்வை எப்படியும் தடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.செயலதிபர் உமா மகேஸ்வரனும் ஈரோஸ் ரத்ன சபாபதி நீண்ட நேரம் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். பின்பு நடனசபாபதி எல்லோருக்கும் பொதுவாகஅமிர்தலிங்கத்துக்கு எதிரான முடிவை நாங்கள் வெளியில் காட்டிக் கொண்டால் அது எமக்கு எதிராக திரும்பி விடும். என்று கூறி முடிக்க, பிரபாகரன் ,செயலதிபர் உமாமகேஸ்வரன் இருவரும்வெளிப்படையாகவே இதை செயல்படுத்த விடக்கூடாது என்று கூறினார்கள்.அமிர்தலிங்கத்தை இந்திய அரசு வளர்த்து விடும் என்ற பயத்தில் முதல்முறையாக அமிர்தலிங்கத்தின் மேல் இயக்கங்கள் தங்கள் வெறுப்பை வளர்த்துக் கொண்ட பெரிய சந்தர்ப்பம் என நினைக்கிறேன்.அடுத்த நாள் காலை அதிகாரிகள் எங்களை எல்லாம் வசந்த் விகார் என்ற இடத்தில் இருந்த

பெரிய ஒரு கெஸ்ட் ஹவுசுக்கு அழைத்துப் போனார்கள்.அங்கு எங்களை சந்திக்க ராஜீவ் காந்தியின் நண்பரும் இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இணை அமைச்சர் அருண் நேரு அவர்கள் வந்தார்.அவர் வருவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அதிகாரதொனியில் எல்லோரையும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.பொதுவாக இயக்கத் தலைவர்கள் இடம் அவர்கள் அவர்கள் இயக்கங்கள் பற்றியும் அறிந்து கொண்டுஇந்தியா உங்களுக்கு தனிநாடு பெற,பயிற்சியும் ஆயுதமும் கொடுக்கிறது நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதிகாரத் தொனியில் மிக நல்ல முறையில் பேசினார். பின்பு அவருடன் வந்த ஒரு IBஉளவுத்துறை சேர்ந்த அதிகாரியைக் கூப்பிட்டு ஏதோ பேசினார்.எங்களைப் பார்த்து கொஞ்சம் கடுமையான தொனியில் தமிழ்நாட்டிலிருந்து எங்களுக்கு வரும் உங்களை இயக்கங்களைப் பற்றிய செய்திகள் நன்றாக இல்லை. நீங்கள் இந்திய அரசுக்கு ,தமிழ்நாட்டு அரசுக்கு எதிரான உள்ளூர் அமைப்புகள் இயக்கங்கள் ஆகியவற்றோடு சேர்ந்து இயங்குவதாக அவர்களை ஊக்கப்படுத்தி இந்திய அரசுக்கு எதிராகஆயுத, அரசியல் பயிற்சிகள் கொடுப்பதாக கவலை தரும் செய்திகள் இருக்கின்றன மத்திய உளவுத்துறை,தமிழ்நாடு உளவுத் துறை போன்றவை நமக்கு ரிப்போர்ட் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் உங்கள் நாட்டு பிரச்சினைக்காக இங்கு வந்தீர்கள் இங்கு வந்து உங்கள் நோக்கத்தை பார்த்துக் கொள்வதை விட்டு இந்திய அரசுக்கு எதிரான சக்திகளோடு சேர்ந்து இயங்குவதை நாங்கள் அனுமதிக்க முடியாது. எங்களுக்கு எங்கள் உள்நாட்டு பாதுகாப்பு முக்கியம். தொடர்ந்து இந்த தவறை செய்யாமல் நீங்கள் இங்கு வந்த நோக்கத்தை மட்டும் பாருங்கள் என்று கடுமையாகக் கூறினார்.உடன் எல்லா இயக்கங்களும் நாங்கள் அந்த தவறுகளை செய்யவில்லை இலங்கையிலிருந்து சிறுசிறு தமிழ் குழுக்கள் அவர்கள்தான் தங்கள் வளர்ச்சிக்காக இந்தியாவுக்கு எதிரான அமைப்புகளோடு சேர்ந்து இயங்குவது ஆக சத்தியம் செய்யாத குறையாக.கூறினார்கள் நான் நேரடி சாட்சியாக இருந்தேன். பயிற்சிக்கு வந்த இளைஞர்களை கொலைகள்செய்ததாகவும்,தமிழ்நாட்டு மக்களிடம் கொள்ளை அடிப்பது , மாபியா கும்பலுடன் தொடர்பு வைத்திருப்பது,குற்றச்சாட்டுகளை கூறி திரும்பவும் எச்சரித்தார்அருண் நேரு வொடு மீட்டிங் முடிந்து வந்த பின்பு ஒரு இயக்கங்களும் சரியாக ஒருத்தருக்கு ஒருத்தர் முகம் கொடுத்து பேசவில்லை. அன்று இரவு எல்லோருக்கும் சென்னைக்கு பயணம் செய்ய விமான டிக்கெட் கொடுத்தார்கள்.நானும் செயலதிபர் உமா மகேஸ்வரனும் சில பத்திரிகை நண்பர்களை சந்தித்துவிட்டு எமது அறைக்கு திரும்பியபோது, முன்பே பழக்கமான IB உளவுத்துறை அதிகாரிகள் வந்து செயலதிபர் உமா வோடு, பேசினார்கள். நாங்கள் நாங்கள் அவர்களிடம் மற்ற இயக்கங்கள் எல்டிடி உட்படயார் யார் இந்திய அரசுக்கு எதிராக செயல்படும் அமைப்புகளோடு தொடர்பு இருப்பதை விலாவாரியாக கூறினோம். போட்டுக் கொடுத்தோம் அந்த அதிகாரிகள் சிரித்துக்கொண்டு இதையேதான் மற்ற இயக்க தலைவர்களும் தனித்தனியே ரகசியமாக ஒவ்வொரு இயக்கத் தொடர்பு கொள்ளும் பற்றி விலாவாரியாக எங்களிடம் இன்றுகூறினார்கள்.எங்களுக்கு தமிழ்நாடு உளவுத்துறை விபரமான ரிப்போர்ட்அனுப்பி உள்ளது தயவு செய்து இனியாவது,பிரச்சினைகளின் விபரீதத்தை புரிந்து கொண்டு செயல்படுங்கள் என்று புத்திமதி கூறினார்கள். இந்த இரு அதிகாரிகளும் தான் முதன் முதலில்சென்னை மத்திய சிறையில் செயலதிபர் உமா மகேஸ்வரன் னையும், பிரபாகரனையும் சந்தித்து முதல் ரிப்போர்ட் இந்திய அரசுக்கு கொடுத்தவர்கள்.

தொடரும் .



பகுதி 31

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்

ரங்கராஜன் குமாரமங்கலத்தின் ஒதுக்கப்பட்ட வீடு நாங்கள் இருந்தஎல் கனேசன் MP இன் நேர் எதிர் வீடு. எனக்கும் அவருக்குமான தொடர்பு மிக நெருக்கமாக இருந்தது. அவர் வீட்டில் இருக்கும் போது இருவரும் எமது பிரச்சினைகள் பற்றி விபரமாக கேட்டு அறிந்துகொள்வார்.அவர் ஒரு தொழிற்சங்கவாதி என்றபடியால் எந்த நேரமும் அவரைச் சுற்றி ஒரு பெரிய சகல இன தொழிற்சங்கவாதி களும் இருப்பார்கள்.ஈழ விடுதலை இயக்கங்களில் எனக்கு மட்டும் தான் அவரை சந்தித்து பழகும் வாய்ப்பு கிடைத்தது.எமது விடுதலைப் போராட்டத்திற்கு எமது இயக்கம் அவரைசரியான முறையில் பயன்படுத்த வில்லை என்ற குறை எனக்கு உண்டு. அவர் புதிய வெளிநாட்டு செயலாளரை சந்திக்க வேண்டுமானால் அவரை அறிமுகப் படுத்துகிறேன் என்றார்.

l நானும் செயலதிபர் உமா விடம் இதுபற்றி தொலைபேசி மூலம் கூறியபோது நல்ல விடயம் விரைவில் தான் டெல்லி வருவதாக கூறினார்.

இன்னொரு புதிய எம்பி அண்ணா திமுகவை சேர்ந்தவர் பெரியகுளம் தொகுதி திரு கம்பம் செல்வேந்திரன். அவர் புளட் பிரதிநிதி டெல்லியில் இருப்பதாக கேள்விப்பட்டு என்னை சந்திக்க விரும்பினார். அவரும் நாங்கள் இருந்த நோர்த் அவென்யூ தான் வீடு. அவரைப் போய் பார்த்தபோது அப்போது கிட்டத்தட்ட அவருக்கும் என் வயது தான் இருக்கும் என நினைக்கிறேன். எனக்கு ரொம்ப மதிப்பு கொடுத்து வரவேற்று பேசினார். தேனி முகாம் பற்றியும், பல தோழர்களின் பெயர்களை கூறியும் விசாரித்தார். உண்மை யில்அவர் கூறிய பெயர்களில் உள்ள தோழர்களே எனக்கு தெரியாது. நான் உங்களுக்கு எப்படி அவர்களை எல்லாம் தெரியும் என்றேன். அவர் கூறினார் தான் முழு நேரமும் தேனி முகாமில்தான் இருந்திருப்பதாக, எல்லாத் தேனி முகாம்தோழர்களும் நெருக்கமானவர்கள் என்று கூறினார். எனக்கு பெரிய ஆச்சரியம்.செயலதிபர் உமாமகேஸ்வரன் டெல்லி வந்தபோது கம்பம் செல்வேந்திரன் எம்பி வீட்டுக்கு அழைத்துபோனேன். செயலதிபர் உமாவைப் பார்த்து மிகவும் சந்தோசப்பட்டார். அவர் எம்பியாக இருந்தும் செயலதிபர் உமாமுன்னால் உட்காரவில்லை கைகளை கட்டியபடியே பேசினார்.நான்தான் அவரைப் பற்றிய விபரங்களையும் தேனி முகாமில் அவர் நெருக்கம் என்றும் செயலதிபர் உமாவிடம்விளக்கம் கூறினேன். செல்வேந்திரன் எம்பியைரொம்ப நேரம் சங்கடப்படுத்தாமல் செயலதிபர் விடைபெற்றார்.

ரங்கராஜன் குமாரமங்கலம் எம்பி தான் கூறிய படிஇந்திய வெளிவிவகார செயலாளர் ரமேஷ் பண்டாரி அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்தார். நானும் செயலதிபர் உமா மகேஸ்வரனும் போய் சவுத் பிளாக் எனப்படும் புகழ்பெற்ற இந்திய அரசகட்டிடங்களில் இருந்த இந்திய வெளிவிவகார அமைச்சு அலுவலகத்தில் முதல் முறையாக செயலாளர் ரமேஷ் பண்டாரி யைசந்தித்தோம். அவர் கூடவே துணைச் செயலாளர் இருந்தார். அவரை நான் முன்பே பலமுறை சந்தித்திருக்கிறேன்.ரொமேஷ் பண்டாரி சந்தித்த முதல் போராளித் தலைவர் செயலதிபர் உமாமகேஸ்வரன் தான். அவரிடம் பேசும்போது நாங்கள் என்றும் இந்தியாவுக்கு விசுவாசமாக இருப்போம்.இலங்கை அரசை பணிய வைக்க இந்தியா எங்கள் அமைப்புக்கு பயிற்சியும் ஆயுதங்களும் கூடுதலாகதரவேண்டும், என்றும் மற்ற எல்லா இயக்கங்களும் இந்தியாக்கு விரோதமாக செயல்படுவதாகவும் போட்டுக் கொடுத்தோம். நாங்கள் கூறியவாரே விடுதலைப் புலிகள் , ஈபிஆர்எல்எப் டெலோ, மற்றும் ஈரோஸ் தனித் தனியாக சந்திக்கும் போது இதே மாதிரிதான் போட்டுக் கொடுத்தார்கள். ஈரோஸ் மட்டும் கூடுதலாக போட்டுக் கொடுத்தார் கள். இது எப்படி உனக்கு தெரியும் என்று கேட்பீர்கள். அங்கு வேலை செய்யும் தமிழ் அதிகாரிகள்,அவர்கள் மட்டுமல்ல மட்டும் முக்கியமான அமைச்சுக்களில் வேலை செய்த தமிழர்கள் கூட என்னோடும் மற்ற இந்தியன் நண்பர்களோடும் நெருக்கமான நட்பை பேணியவர்கள் அதோடு அவர்கள் எம்பி மாரின், வீடுகளில், குவாட்டஸ் இல் வாடகைக்கு இருப்பவர்கள்.அவர்கள் மூலம் இந்த செய்திகள் எங்களுக்கு வரும்.அவர்கள் என்னிடம் என்னப்பா உங்க தலைவர் மார்,ஒருத்தர ஒருத்தர் குறை சொல்லியே இந்தியாவிடம் உதவி கேட்கிறார்கள். நல்லா விளங்கிடும் உங்க விடுதலைப் போராட்டம். எனக் கூறுவார்கள். நான் டெல்லியில் இருந்த இடம் அப்படி எல்லா செய்திகளும் அறியக்கூடியதாக இருந்தது.

ஈபிஆர்எல்எப் காங்கிரஸின் எம் பி இரா. அன்பரசு வீட்டில் தங்கியிருந்தார்கள். அங்கு அவர்கள் அரசியல் வேலை செய்ததை விட, எம்பி மூலம் ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் வேலையில் செய்ததாக அறிந்தேன். அதோடு கூட்டாக தொழில் செய்வதாகவும் செய்திகள் வந்தன. ஈரோஸ் நேரு என்பவர் வெளிஇடத்தில் தங்கியிருந்தார். அவரின் வேலைகள் எல்லா இடங்களிலும் போய் மற்ற இயக்கங்களையும் குறை சொல்லுவது மட்டுமே.நாங்கள் எங்கள் அறிக்கைகள் பிரசுரங்கள் மூலம் மற்றவர்களை விட நாங்க சிறந்தவர்கள் என்று மறைமுகமாக அறிவிப்போம்.இந்திய அரசு அதிகாரிகளிடம் மற்ற இயக்கங்களைப் பற்றி மோசமாக அதாவது எங்களைத் தவிரமற்ற இயக்கங்கள் இந்தியாவுக்கு எதிராக வேலை செய்கிறார்கள் போட்டு கொடுப்போம் இதைத்தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை நாங்களும் மற்ற இயக்கங்களும் செய்த வேலை. ஆனால் வெளியில் இந்திய எதிர்ப்பார்கள் என்றும் கட்டிக் கொள்வோம். விடுதலைப் புலிகள் உட்பட.

இதே ஆண்டு லண்டன் சீனிவாசன் மூலம் ஹாங்காங், ஆயுதங்கள் வாங்கப்பட்டு சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு ஆயுதங்கள் கன்டெய்னர் மூலம் வந்தன. அந்த ஆயுதங்கள் எங்கள் தவறால் சுங்கத்துறை யால் பிடிபட்டன. ஆனால் செயலதிபர் உமா மகேஸ்வரன் தனது தவறை மறைத்துமுகாம் தோழர்களிடம் தனக்கு எதிராக இந்தியா வேலை செய்வதாகவும் அந்த ஆயுதங்களை இந்திய ரா உளவுத்துறை பிடித்துவிட்டதாகவும் கதை சொன் னார். பின்தள மாநாட்டில் தனது தவறுக்காகஅதற்காக மன்னிப்பும் கேட்டார்.இது சம்பந்தமாக இன்றும் உண்மை அறியாமல் தங்களுக்கு தோன்றியபடி பதிவுகளை விட்டு வருகிறார்கள். இது சம்பந்தமாக நான் போட்ட பதிவை இத்துடன் இணைக்கிறேன்.

1984 ஆண்டு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆயுதம் இறக்குமதி செய்த விடயம் சம்பந்தமாக பலவித வதந்திகள் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஏன் உமா மகேஸ்வரன் கூட தான் செய்த தவறு தெரியக்கூடாது என்று 86ஆம் ஆண்டு இயக்கத் தோழர்கள் இடம் உண்மையை மறைத்து இந்திய அரசாங்கம் தான் ஆயுதங்களை பிடித்தது என்று பொய் கூறினார். பின்பு பின்தள மாநாட்டின்போது மன்னிப்பு கேட்டார்.

. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் லண்டன் கிளை உறுப்பினர் யாழ்ப்பாணம் திருநெல்வேலியை சேர்ந்த கதிரவேற்பிள்ளை சீனிவாசன் இயக்கத்திற்கு ஆயுதம் வாங்க 1984 ஆண்டு முயற்சிகள் செய்தார். அவருக்கு உதவி செய்ய மிக ரகசியமாக டெல்லியில் நானும்,சென்னையில் ரமேஷ் என்கிற நிலா நேசம் என்பவரும் (தற்போது கனடாவில் இருக்கிரார்) இந்த ஆயுதம் சம்பந்தமாக உமா மகேஸ்வரனுக்கு நேரடி தொடர்பாளராக நியமிக்கப் பட்டோம். சீனிவாசன் ஹொங்கொங் போய் ஏற்பாடுகள் செய்ய, சென்னையில் இருந்து டெல்லி வழியாக ரமேஷ் ஹொங்கொங் அனுப்பப் பட்டார். சில வேலைகளை முடித்துவிட்டு ரமேஷ் ஒரு வாரத்தில் திரும்பி விட்டார்.

சீனிவாசனுக்கு ஹாங்காங்கில் பணப் பற்றாக்குறை ஏற்பட்டபோது,ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தனது 10 வயது மகளை பணத்தை எடுத்து வர ஏற்பாடு செய்தார் இது தெரிந்து அங்கிருந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழக. தற்போதைய தலைவர் சித்தார்த்தன் சீனிவாசனை கடுமையாக கண்டித்து வேறு வழியில் பணத்தை அனுப்பியுள்ளார்.சீனாவிலிருந்து வந்த ஆயுதங்களை இந்தியாவில் ஆந்திராவுக்கு போகும் பழைய பேப்பர்கள் என பதிவு செய்து அனுப்பி அந்தக் அந்தக் கொள்கலனை ஏற்றி வந்த கப்பல் சிங்கப்பூரிலிருந்து அந்த கொள்கலன் சென்னைக்குப் போகும் கப்பலில் மாற்றப்படவேண்டும் சீனிவாசன் சிங்கப்பூரில் வேலை செய்த தனக்குத் தெரிந்த பல இளைஞர்களை அழைத்துசீன கொள்கலனில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய சிங்கப்பூர் கொள்கலனில் மாற்றி மாற்றியபோது ஆயுதங்களோடு இருந்த சீனமொழி பத்திரிகைகளை அகற்றிவிட்டு சிங்கப்பூரில் இருந்த ஆங்கில பழைய பத்திரிகைகளை வாங்கி அடுக்கி ஆயுதங்களை மறைத்துள்ளார்.

தலைவர் உமா மகேஸ்வரனுக்கு எல்லா விபரங்களும் அனுப்பப்பட்டு உமா மகேஸ்வரனும் சென்னையில் அந்தக் கொள் கலனைவெளியில் எடுக்க ஆந்திராவைச் சேர்ந்த சென்னையில் தொழில்செய்யும் அண்ணாநகரில் இருந்த கன்டைனர் கிளியரன்ஸ் ஏஜென்ட் இடம் பத்தாயிரம் ரூபா கொடுத்து இந்த பழைய பேப்பர்கள் வருவதாகவும் ஆந்திராவில் உள்ள பேப்பர் மில்லில் செல்வதாகவும் கூறி ஏற்பாடு செய்துள்ளார். ஏஜென்ட் கஷ்டம் அதிகாரிகளுக்கு எல்லாம் காசு கொடுத்து திறக்காமல் வெளியில் கொண்டு வரக் கூடியவர். அந்த ஏஜன்ட் முதலில் போய் சாதாரணமாக கொள்கலனை திறந்துபார்த்துள்ளார். மறைவாக இருந்த ஆயுதங்களை பார்த்து விட்டார்.பயந்துபோய் கொள்கலனை மூடி விட்டு வந்தவர். உமாவிடம் சண்டை பிடித்துள்ளார். கூடுதல் காசு கேட்டுள்ளார்.

அந்த ஏஜென்ட் சரிகட்ட உமா மகேஸ்வரன் தனது சகோதரியின் கணவர் ராஜ் துறையையும், வாமத்தேவன் அனுப்பியுள்ளார். இதைக் கேள்விப்பட்டு சென்னையில் இருந்த சித்தாத்தன் அவர்களை திருப்பி

அழைத்துவிட்டு அந்தப் பொறுப்பை பரந்தன் ராஜன் இடம் கொடுக்கும் படி கூறியுள்ளார். ராஜன் காசு கூட குறைய பேசி கச்சிதமாக கண்டனரே எடுத்து விடுவார் என சித்தார்த்தன் கூறி இருக்கிறார் ஆனால் உமா மகேஸ்வரன் ஒரு காசு கூடமேலதிகமாக செலவழிக்காமல் வாமணலேயும், ராஜதுரை எடுப்பார்கள் என நம்பிக்கையாக கூறியுள்ளார். ஏஜென்ட் இடம் போன ராஜதுரை வாமணும் முதலில் ஏஜென்ட் மிரட்டியுள்ளார் கள். ஏஜென்ட் கூடுதல் பணத்துக்கு பிடிவாதமாக இருந்துள்ளார் . உடன்வாமன் கைத்துப்பாக்கியை எடுத்து ஏஜன்ட் இன் வாயில் வைத்து ரெண்டு நாளில் கண்டனர் எடுத்துத் தர வேண்டும் இல்லாவிட்டால் சுட்டு கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.

ஏஜென்ட் பயப்படவில்லை உடன் சுங்க இலாகா அதிகாரிகள் இடம் கன்டெய்னரில் ஆயுதங்கள் இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் ஏஜென்ட் உமா மகேஸ்வரனை காட்டிக் கொடுக்கவில்லை. அக்காலக்கட்டங்களில் விடுதலை இயக்கங்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த பொலீஸ் ஐஜி மோகனதாஸ் அறிவித்துள்ளார்கள். கஸ்டம்ஸ் கூறியது ஆந்திராவிலுள்ள நக்சலைட்டுகள் அக்கு சீனாவில் இருந்து ஆயுதம் வந்துள்ளதா க. ஆனால் மோகனதாஸ் மோப்பம் பிடித்து ஆயுதம் வந்துள்ளதாக பத்திரிகைகளுக்கு செய்தியும் கொடுத்து உமா மகேஸ்வரனை நெருங்கிய சமயம், உமா உடனடியாக சென்னையிலிருந்து சித்தாத்தன் டெல்லிக்கு அனுப்பினார் நானும் சித்தார்த்தனும் போய் ஜி பார்த்தசாரதி அவர்களை பார்த்தோம் அவர் எங்களை ரொம்ப திட்டினார்.அவர் கேட்ட கேள்விகளுக்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. உமா ஏன் இப்படி முட்டாளாக இருக்கிறார். மிக ரகசியமாக முடிக்கவேண்டிய வேலையை ஏஜென்ட் துப்பாக்கியை காட்டி மிரட்ட வேண்டுமா? அதோடு மோகனதாஸ் இயக்கங்களுக்கு எதிராக கடுமையாக இருப்பதாகவும் எம்ஜிஆர் கூடமோகனதாஸ்சிலவேளை கட்டுப்படுத்த முடியாது இருப்பதாகவும் கூறினார்.

.. இந்த விபரங்கள் பத்திரிகையில் வந்த படியால் இந்த ஆயுதங்களை எடுக்க மத்திய அரசால் உதவி செய்ய முடியாது என்று கூறினார் காரணம் பத்திரிகைகளும் இலங்கை உட்பட இலங்கைக்கு ஆதரவான நாடுகள் இந்தியாவின் மேல் எதிரான பிரச்சாரங்கள் செய்யக்கூடும்.அதோடு எந்த காரணம் கொண்டும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (பிளாட்)இந்த ஆயுதங்கள் வந்தன என்று யாரிடமும் கூற வேண்டாம் மறுத்து விடுங்கள். காரணம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தான் என்று செய்தி பரவினால் தமிழ்நாடு பொலிஸார் கட்டாய நடவடிக்கை எடுப்பார்கள். இந்த அவ்வளவு தான் நடந்தது உண்மை எங்கள் இயக்கம் செய்த தவறால் தான் ஆயுதங்கள் பிடிபட்டனர்.

. பின்பு சென்னை வந்த சீனிவாசன் உமாமகேஸ்வரன் இடம் மிகவும் சண்டை பிடித்தார் தன் உயிரைப் பணயம் வைத்து கொண்டு வந்த ஆயுதங்களை கிளியர் பண்ண எடுக்க முடியாதா நீ எல்லாம் ஒரு தலைவன் உனக்கு ஒரு இயக்கம் என முகத்துக்கு நேராக கேட்டுவிட்டுஇயக்கத்தை விட்டு விலகிப் போய்விட்டார்

தொடரும்.



பகுதி 30

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்

85 ஆம் ஆண்டு பலவித அனுபவங்களை தந்த ஆண்டு. எமது இயக்கத்தின் முழுநேர விடுதலைப் போராளிகளாக வேலை செய்ய,லண்டனில் இருந்து அங்கு வேலை செய்த தோழர்கள் வசந்தன் ,பரதன் போன்றவர்கள் டெல்லி வழியாக சென்னை வந்தார் கள். இதில் செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் கேட்டு பரதனே இரண்டு மாதம் கிட்ட டெல்லியில் எனக்கு உதவியாக வேலை செய்ய கேட்க பரதனை திரும்ப டெல்லி அனுப்பி வைத்தார். டெல்லி வந்த பரதனும் பெயர் மாறி சாரங்கன் என்ற இயக்கப் பேரோடு ,எங்கள் தொடர்பில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களையும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் அதோடு எங்கள் தொடர்புகளில் இருந்த வெளிநாட்டு தூதரக அதிகாரிகளையும். பத்திரிகையாளர்களையும் , லண்டன் சித்தார்த்தன் உடன் சேர்ந்தும், என்னுடன் சேர்ந்தும் சந்தித்தார். இது பற்றிய டெல்லி கிளைக்கு பரதன் கைப்பட எழுதிகொடுத்த சில குறிப்புகள். என்னிடம் இன்னும் உள்ளன. அந்த நேரம் சீனிவாசனின் ஆயுதக் கொள்வனவு சம்பந்தமாக ஹொங்கொங் போக சென்னையிலிருந்து ரமேஷ் அல்லதுதிருஞானம் டெல்லி வந்திருந்தார்.

பரதன் லண்டனில் இருந்து டெல்லி வரும்போது அவரை வரவேற்று கூட்டி வர நானும் ரமேஷும் தான் போயிருந்தோம். ஜெர்மனியிலிருந்து ஒன்றுபட்ட புலிகளின் ஜெர்மன் அமைப்பாளர் முன்பு இருந்தவர், தற்போது எமது இயக்கத்துக்கு ஜெர்மனி நாட்டுக்குபொறுப்பாக இருந்தபரமதேவா டெல்லி வந்து சென்னை போனார். நாங்கள் இருந்த எல் கணேசன் எம்பி வீட்டுக்கு, கீழ் வீட்டில் இருந்த நமது நெருங்கிய நண்பர் சம்பத் வேங்கா எம்பியின் மகன் தனது வீட்டில் அவரை தங்க வைத்துக்கொண்டார்.venga எம் பி சென்னை போகும்போது இலவசமாகரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் பரமதேவா அவர்களையும்கூட்டிக்கொண்டு போனார்.venga mp அந்த காலத்தில் அறிஞர் அண்ணாவிக்குநெருங்கியவர். அண்ணாவுக்குப் பின் கட்சியில் ஒதுக்கப்பட்டு விட்டார். பின்பு கலைஞர் திமுக ராஜ்யசபா எம்பி ஆக்கினார்.1978 முதல் 1984 ஏப்ரல் வரை ராஜ்யசபா எம்பியாக இருந்தார்.

டெல்லியில் எமக்குஎல்லா வழிகளிலும் உதவி செய்த நண்பர்களை பற்றி தனிப்பதிவு களாக போடஉள்ளேன். நன்றி மறப்பது நன்றன்று.

பரமதேவா வரும்போது ஒன்றுபட்டு விடுதலைப் புலிகள் காலத்தில் பிரபாகரன் கரிகாலன் என்ற பெயரில் ஜெர்மன் கிளைக்கு எழுதிய பல கடிதங்களை கொண்டு வந்திருந்தார். அதில்உமா மகேஸ்வரனை பற்றியும் அவரின் தவறான நடவடிக்கைகளை பற்றியும் எழுதியிருந்தார். அதோடு லண்டன் கிருஷ்ணன் நிதி மோசடி செய்வதாகவும்விடுதலைப்புலி அமைப்புக்கு சேகரித்த சொத்துக்கள் அவர் தனிப்பட்ட முறையில் பாதிப்பதாகவும் பல கடிதங்கள் இருந்தன.

சித்தார்த்தனும் லண்டனில் இருந்து டெல்லி வந்தார்.நானும் சித்தார்த்தனும் காலத்தை விரயம் செய்யாமல் புதிய எம்பிகளை முடிந்தளவு சந்திக்க தொடங்கினோம் திமுகவின் டி ஆர் பாலு எம்பி, ஆந்திரா தெலுங்கு தேச கட்சி என்டி ராமராவ் இன் நெருங்கிய நண்பர் உபேந்திரா எம் பி, அதிமுக ஜக்கையன் எம் பி, கோவை காங்கிரஸின் பி குப்புசாமி எம்பிமற்றும் பலரை சந்தித்தோம் பெயர்கள் நினைவில் இல்லை நினைவில் வரும் போது எழுதுவேன். வீடு ஒதுக்கப்படும் வரை தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த குறிப்பாக சிதம்பரம் எம்பி சந்தித்து எமது போராட்டம் எமது வரலாறு எல்லாவற்றையும் எங்களுக்கு சாதகமான முறையில் அவரிடம் கூறுவோம். அவர் குறிப்புகள் எடுத்துக் கொள்வார் அடுத்த நாள் வரச் சொல்லுவார். அவரிடம் நாங்கள் மறைத்த விஷயங்களை தகுந்த புள்ளி விபரங்களுடன்எங்களிடம் கூறி எங்களை வாயடைக்கச் செய்ய குறிப்பாக மலையகத் இந்தியதமிழருக்கு வடக்குத் தமிழ் தலைவர்கள் செய்த துரோகங்கள் அவமானங்கள் பற்றியெல்லாம் பேசுவார்.பத்து பதினைந்து நாள் தொடர்ந்து சந்தித்திருப்போம் அவர் பாராளுமன்ற நூல் நிலையத்தில் போய் இலங்கை பற்றிய செய்திகள் ஆவணங்களை படித்து எங்களைவிட சிறப்பாக கூறுவர். எமது இயக்க வரலாறு அதுவரை வந்த இயக்கங்களின் மறுபக்கங்கள் சிதம்பரத்துக்கு அத்துபடி. அன்றிலிருந்து நானும் சித்தார்த்தனும்முடிவு பண்ணினோம்எங்களை புத்திசாலிகளாக நினைத்துக்கொண்டு மற்றவர்களிடம் எமக்கு மட்டும் சாதகமான செய்திகளை கூறி பிரச்சாரம் செய்யக்கூடாது என்று மட்டும்.

எல். கணேசன் எம்பி வீட்டில் வந்து தங்கிசெல்லும்பல தமிழ்நாட்டு தொழிற்சங்கவாதிகள் என்னை புதிதாக வந்துள்ள காங்கிரஸ் எம்பி ரங்கராஜன் குமாரமங்கலத்தை சந்தித்து நட்பை வளர்த்துக் கொள்ள சொன்னார்கள். நானும் அவருடன் சென்னையில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது தான்வரும்போது சந்திப்பதாகவும், தனது மனைவி மாமியார் வீடு டெல்லியில் இருப்பதாக கூறி விலாசமும் கொடுத்தார். அவரின் மனைவி ஒரு பஞ்சாபி. ரங்கராஜன் குமாரமங்களத்தை டெல்லியில் சந்தித்தேன் அவருக்கும் சிறுவயது தான் வித்தியாசமான கலகலப்பான அரசியல்வாதி தோளில் கை போட்டு தான் பேசுவார். இவரின் அப்பா மோகன் குமாரமங்கலம் இந்திரா காந்தியுடன் லண்டனில் படித்தவர். இடதுசாரி சிந்தனை உள்ளவர். திமுகவிலிருந்து எம்ஜிஆர் பிரிக்க மத்திய மந்திரியாக இருந்த இவரைத்தான் இந்திராகாந்தி பயன்படுத்தியதாக கூறுவார்கள். ரங்கராஜன் குமாரமங்கலத்தின் அம்மா வங்காளி. தீவிர இடதுசாரி ரங்கராஜன் குமாரமங்கலத்தின் பெரியப்பா இந்திய ராணுவ தலைமைத் தளபதியாக இருந்தவர்.ஒரு புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று ரங்கராஜன் குமாரமங்கலத்தின் கூற முடியாது. அவர் எல்லோரிடமும் மிக எளிமையாகத் தான் பழகுவார். பிற்காலத்தில் டெல்லியில் வெளிநாட்டுக்குப் போக வந்து கள்ள பாஸ்போர்ட்கள், கள்ள விசா காரணமாக பல இலங்கைத் தமிழ் பெண்கள் குழந்தைகள் ஆண்களை ஜெயிலிலிருந்து பிணையில் வெளியில் எடுக்க இவரது பதவியும் இவரின் மனைவி கிட்டி குமாரமங்கலம் ஒரு அட்வகேட் எனக்கு மிகவும் துணையாக இருந்தார்கள். திகார் ஜெயிலில் இருக்கும் அப்பாவி இலங்கைத் தமிழர்களை விடுவிக்கும்படி நான் கேட்டுக் கொண்டதன் படி லோக்சபாவில் பாராளுமன்றத்தில் பேசினார். அவர் பேசிய குறிப்புகளை கீழே இணைக்கிறேன் இன்னும் தொடர்கிறேன்.ரங்கராஜன் குமாரமங்கலம் ராஜீவ் காந்தியின் சிறுவயதிலிருந்து குடும்ப நண்பராக இருந்தவர் கள்.

மோகன் குமாரமங்கலம்: லண்டனில் பிறந்த தமிழகத் தலைவர்

By .ரங்காசாரி

Published: 02 Apr, 19 10:20 amModified: 02 Apr, 19 10:20 am

முற்போக்குச் சிந்தனையாளர்; அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்; தமிழ்நாட்டின் அரசுத் தலைமை வழக்கறிஞராக இருந்தவர்; இந்திரா காந்தி அமைச்சரவையில் உருக்கு, சுரங்கத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் என பல சிறப்புகளைக் கொண்டவர் - மோகன் குமாரமங்கலம். சேலம் மாவட்டம் குமாரமங்கலத்தின் ஜமீன்தாரும் அன்றைய சென்னை மாகாண முதல்வருமான ப.சுப்பராயன் - ராதாபாய் இணையரின் மகனாக லண்டனில் பிறந்தவர் மோகன் குமாரமங்கலம். முழுப் பெயர் சுரேந்திர மோகன் குமாரமங்கலம்.

தரைப் படைத் தலைமை தளபதியாகப் பணியாற்றிய பி.பி. குமாரமங்கலம், கோபால் குமாரமங்கலம் ஆகியோர் இவரது அண்ணன்கள். பார்வதி கிருஷ்ணன் தங்கை. மோகன் குமாரமங்கலம், லண்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவர். சட்ட வல்லுநர். கம்யூனிசத்தால் ஈர்க்கப்பட்ட அவர், 1939-ல் இந்தியா திரும்பியதும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். 1941-ல் தேச விரோத துண்டறிக்கைகளை விநியோகித்ததாக பி. ராமமூர்த்தி, சி.எஸ். சுப்ரமணியம், ஆர். உம‘மதறாஸ் சத வழக்கில் கைது செய்யப்பட்டார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு விவசாயிகள் கிளர்ச்சி, சென்னை மாகாணத்தில் தீவிரம் அடைந்தது. பிற கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் மோகனும் கைதானார்.

பிறகு காங்கிரஸில் சேர்ந்தார். காங்கிரஸ் பிளவுபட்டபோது இந்திரா காந்திக்கு ஆதரவாகச் செயல்பட்டார். 1971 மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கனிம வளங்களை அரசுடமையாக்குவதில் முக்கியப் பங்காற்றியது, உருக்குத் தொழில் வளர்ச்சிக்கு உதவியது என அவரது சாதனைப் பட்டியல் நீளமானது. 1973 மே 30-ல் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். இவரது மகன் ரங்கராஜன் குமாரமங்கலம் பின்னாளில் நரசிம்மராவ், வாஜ்பாய் அரசுகளில் அமைச்சராகப் பதவி வகித்தவர். மகள் லலிதா குமாரமங்கலம் பாஜக-வில் இருக்கிறார். தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக இருந்தவர் அவர். ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகனுக்கும் ‘மோகன் குமாரமங்கலம்’ என்றே பெயர். அவர் இப்போது காங்கிரஸில் இருக்கிறார

தொடரும்




பகுதி 29

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்

(நான் எனது முகநூலில்எனது அனுபவங்களை எழுதுவது வெளிநாட்டில் இருக்கும் பல தமிழீழ மக்கள் விடுதலைக் கழக உறுப்பினர்கள் அதாவது இயக்கத்தை விட்டு விலகியவர்கள் ஒதுங்கி இருப்பவர்கள்தாங்கள் நான் எனது அனுபவங்கள் எழுதுவது தவறு என்றும் எழுதக் கூடாது என்றும் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்திகளை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.நான் யாரையும் எனது முகநூலைபார்க்க படிக்க சொல்லவில்லை. விருப்பமில்லாத நபர்கள் என்னை தடை செய்து விட்டு போகட்டும். நான் எனது அனுபவங்கள் பதிவாக இருக்கட்டும் என்று மட்டும்தான் போடுகிறேன் ஒழிய. யாரும் லைக் போட வேண்டும் என்ற கருத்து சொல்ல வேண்டும் என்றோ போடவில்லை என்பதை திரும்பவும் தெரிவித்துக் கொள்கிறேன்)

எனது 27வது பதிவில் ஆலடி அருணா எம்பியின் வீடு பற்றி எழுதி இருந்தேன். அதில் நண்பர் பரதன் அந்தவீட்டில் இருந்த கேரளா குடும்பத்தில் இருந்த பெண்களை மூன்று பெண் குட்டிகள் பற்றி குறிப்பிடவில்லை என்ன கவலைப்பட்டு இருந்தார். பின்பு அந்த பின்னூட்டத்தை எடுத்துவிட்டார். இதைப்பற்றி இதில் குறிப்பிடுகிறேன். ஆலடி அருணா MPஎனக்கு வீடு கொடுக்கும் போது, கூறினார் பக்கத்தில் பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள், சுற்றியிருக்கும் வீடுகள் எல்லாம் இந்திய எம்பி மார்களின் வீடுகள் அங்கும் பெண் பிள்ளைகள் இருப்பார்கள். உங்களால் எந்த ஒரு கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது. எனக்கு மட்டுமல்ல, ஈழப் போராளிகளுக்கு அது கெட்ட பெயராக அமைந்து விடும். ஆனால் உங்களால் எந்த ஒரு கெட்ட பேரும் வராது என நம்புகிறேன் சிறு கெட்டபேர் வந்தாலும் துரத்தி விடுவேன் என கூறினார்.

எமது செயலதிபர் உமா மகேஸ்வரன் அடிக்கடி டெல்லி வந்து போவார். அவர் எப்போதும் என்னோடு ஆலடி அருணா வீட்டில்தான் தங்குவார். மாலை நேரங்களில் பக்கத்தில் வாடகைக்கு இருக்கும் கேரளா குடும்பத்தில் பெண்கள் கல்லூரி விட்டு வந்து பின்பக்கம் பேட்மின்டன் விளையாடுவார்கள். எங்கள் செயலதிபர் உமா மகேஸ்வரனும் அவர்களோடு போய் விளையாட முயற்சி செய்வார். அவர்கள்ஒன்றும் பேசாமல் வீட்டுக்குள்போய் விடுவார்கள். குளிர் காலத்தில் வெயில் பார்க்க வெளியில் வந்து கதிரை போட்டு இருப்பார்கள். எமது செயலதிபர் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு கதிரையும் எடுத்துப் போட்டு வெளியில் போய் இருப்பார். எனக்குத் ரொம்ப தர்மசங்கடமாக இருக்கும்.பலமுறை ஆலடி அருணா எம்பி கூறிய வார்த்தைகளே அவருக்கு கூறி இருக்கிறேன். என்னை அலட்சியமாக பார்ப்பார். இந்த செய்திகளை எழுத விரும்பவில்லை ஆனால் பரதன் தனது பின்னூட்டம் மூலம் எழுதவைத்துவிட்டார்.

ஷெர்லி கந்தப்பா ஜெர்மன் மனைவி மோனிகா உடன் வளர்ப்பு பிள்ளைகளுடனும் டெல்லி வந்து ஜெர்மனி போனார்கள். டெல்லியில் இருக்கும் போது இருவரும் சில வெளிநாட்டு தூதரகங்களை சந்தித்தோம். எமது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இலங்கைஅரசின் கைகளில் விழுந்து குறிப்பாக உமா மகேஸ்வரன் அத்துலத் முதலியின் கைகளில் சரணடைந்து விடுதலையையும் எமது இயக்கத்தையும் அழிததக்கு முழு காரணமும் இந்த ஷெர்லி கந்தப்பா தான் என முக்கியமான தோழர்களுக்குதெரியும். இதுபற்றி பின்பு விவரமாக எழுதுகிறேன்.

இந்திரா காந்தி இறந்த பின்பு ராஜா நித்யன் டெல்லி வந்து இருவரும்தொடர்ச்சியாக பத்திரிகையாளர்கள் வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து எமது பிரச்சினைகளை விளக்கினோம்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் திருகோணமலை தளபதி மறைந்த ஜெயச்சந்திரன், மட்டும் விடுதலைப் புலிகளின்பிரபாகரனின் நெருங்கிய நண்பர் சார்லஸ் அன்டனி ஆகியோரின் அரசியல் குரு இடதுசாரி சிந்தனை உள்ளபயஸ் மாஸ்டர் லெசோத்தோ நாட்டில் இருந்து இந்தியா வந்து செயலதிபர் உமாமகேஸ்வரன் , சந்ததியார் சந்திக்க சந்ததியார் அவரை டெல்லிக்கு அனுப்பி பயஸ் மாஸ்டரின்தொடர்புகளை சந்திக்கச் சொன்னார்.அக்காலகட்டத்தில் பயஸ் மாஸ்டர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் விடுதலை இயக்கத்தின் ரகசிய வேலைகளை செய்து வந்தார் என அறிந்தேன். அவரோடு போய் ANC ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் விடுதலை இயக்கம், சுவப்போ நம்பி பியா விடுதலை இயக்கம் சந்தித்துப் பேசினோம். இரண்டு விடுதலை இயக்கங்களும் எங்களோடு மிக நன்றாக தொடர்பில் இருந்தார்கள் ANC இந்திய பிரதிநிதி திரு முல்லா மிக அருமையான அவர் எங்களுக்கு நல்ல புத்திமதிகளை கூறுவர். என்னோடு தங்கியிருந்த சைமன் என்ற தோழருக்கு அவரை மிகவும் பிடிக்கும். பயஸ் மாஸ்டர் இரண்டுதரம் இந்தியா வந்தார். சந்ததியார் இன் கொலையின் பின்பு மனம் வெறுத்து எங்கள்இயக்கத்தோடு இருந்த தொடர்பை விட்டு விட்டார். என்னோடு தனிப்பட்ட முறையில் இன்று வரையில் தொடர்பில் இருக்கிறார்.

84 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய லோக்சபா பொதுத்தேர்தல் நடந்தது. இந்திரா காங்கிரஸ் அமோக வெற்றிப்பெற்றது. தமிழ்நாட்டிலிருந்து புதிய எம்பிக்கள் வந்தார்கள். இதேநேரம் செயலதிபர் உமாமகேசுவரன் மூன்று, நான்கு வருடங்களின் பின் தளத்துக்கு அதாவது இலங்கைக்குச் சென்றார். அவரது இந்தப் பயணம் எமது வளர்ச்சியை விட, இயக்க அழிவுக்கு வழி கோலியது என்பதுதான் உண்மை. சுழிபுரத்தில் ஆறு விடுதலைப்புலிஇயக்கத் சிறுவர்களை கொலைசெய்து ,கடற்கரையில் புதைத்து விட்டார்கள் என நினைக்கிறேன். அந்த நேரம்செயலதிபர் உமா மகேஸ்வரன் சுழிபுரத்தில் அல்லதுவட்டுக்கோட்டையில் இருந்திருக்கிறார். அவர் அதைத் தடுத்து இருக்கலாம். அதைவிட மோசம் அதை மறைக்க நாங்கள் விட்ட அறிக்கைகள். எனக்கு டெல்லியில் கூற, அப்படி ஒரு விஷயம் நடக்கவில்லை மீது விடுதலைப்புலிகளின் சூழ்ச்சி என்று பிரச்சாரம் செய்ய அறிக்கை அனுப்பினார்கள்.நானும் அதை நம்பி பிரச்சாரம் செய்து பின்பு உண்மை வெளிவர அசிங்கப்பட்டது உண்மை.

செயலதிபர் இலங்கை பயணம்பத்திரிக்கைகளில் வந்து

இந்திய அதிகாரிகள் குறிப்பாக ஜி பார்த்தசாரதி என்னை கூப்பிட்டு விசாரித்தார் செயலதிபர் உமா மகேஸ்வரனை டெல்லி வரச் சொன்னார்.

அவர் உமாமகேஸ்வரன் இடம் ரொம்பவே வருத்தப்பட்டார். இந்தியாவிலும் இந்திராகாந்தி இல்லாத நேரம் ஒரு குழப்பநிலை இருக்கும்போது நீங்கள் அங்கு போய் இருந்தது தவறு ஏதாவது நடந்திருந்தால் அல்லதுஉங்களை இலங்கை அரசு கைது செய்து இருந்தால் இங்கே இருக்கும் ஆயிரக்கணக்கான இயக்கத் தோழர்களின் நிலைமை என்ன? இந்தியாவுக்கும் கெட்ட பெயர் தானே வரும். இந்திய தேர்தல் முடிந்த பின்பு எங்களிடம் சொல்லிவிட்டு நீங்கள் போயிருக்கலாம். அங்கு போயும் கொலை பிரச்சனை என்று கேள்விப்பட்டோம் அது உங்கள் நாட்டில் இருந்த பிரச்சினை என்பதால் அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை ஆனால் இந்திய பத்திரிகைகளில் இந்த செய்தி பெரிதாக அடிப்பட்டால் மக்கள் மத்தியில் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு மதிப்பு இருக்காது என கூறினார்.செயலதிபர் உம் இனிமேல் படியான தவறு நடக்காது என கூறி விட்டு வெளியில் வந்து அந்த ஆள் கிடக்கிறார் என்று சொன்னார்.

டெல்லியில் நமது வேலைகள் வழமைபோல் நல்ல முறையில் நடந்து கொண்டிருந்தன வாழப்பாடி ராமமூர்த்தி எம் பி அவர்கள் டெல்லியில் புகழ்பெற்ற பேராசிரியர்கள் கணவன் மனைவி சாலை இளந்திரையன் சாலினி இளந்திரையன் இருவரையும் சந்திக்க ஏற்பாடு செய்தார் இவர்கள் டெல்லி யுனிவர்சிட்டியில் தமிழ் பேராசிரியராக இருந்தார்கள் அவர்கள் டெல்லியில் பலதரப்பட்ட தமிழ் மாணவர்கள் மத்திய அரசு தமிழ் அதிகாரிகள், தமிழ் அறிஞர்கள் போன்றவர்களே எனக்கு அறிமுகப்படுத்தி விட்டார்கள். டெல்லி ஐஐடி ஜேஎன்யூ யூனிவர்சிட்டி தமிழ் மாணவர்கள் டெல்லி யுனிவர்சிட்டி தமிழ் மாணவர்கள் எமது ஈழ விடுதலை போராட்டத்துக்கு மிக ஆதரவாக இருந்தார்கள். ஆனால் அவர்கள் தனிப்பட்ட முறையில் எந்த ஒரு விடுதலை இயக்கத்தையும் ஆதரிக்கவில்லை. எங்களிடம் இலங்கை அரசின் வன்முறைபடங்களை வாங்கி பலமுறை யுனிவர்சிட்டி ஐஐடி இடங்களில் கண்காட்சி வைத்தார்கள் பணம் சேகரித்து எங்களிடம்கொடுத்தார்கள். அடுத்தடுத்த வருடங்களில் எல்லாவிடுதலை இயக்கங்களின் உண்மை முகங்கள் தெரியதொடங்கின.கொலை போதை மருந்து கடத்தல் சகோதரர் படுகொலை தமிழ்நாட்டில் தமிழ்நாட்டு மக்களிடம் கொள்ளை அடிப்பது போன்ற எல்லா செய்திகளும் அந்த மாணவர்கள் ஊருக்கு போய்வரும் போது அறிந்து மற்றவர்களிடமும் கூறி எமது இயக்கங்களின் ஈழ விடுதலையை இது ஒரு விடுதலைப் போராட்டமே இல்லை என்று நேரடியாக எங்களிடம் கூறினார்கள் எங்களையும் வரவேண்டாம் என்று கூறிவிட்டார்கள். ஒரு சிலர் தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டினார்.

ராஜீவ் காந்தி புதிய அரசின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்கும் படலமும் அதிகாரிகளை சந்திக்கும் நானும் சித்தார்த்தனும் தீவிரமாக இறங்கினோம்

கீழே உள்ள படங்கள் கலாநிதி சாலை இளந்திரையன் சாலினி இளந்திரையன், மற்றும் ஷெர்லி கந்தப்பா.

தொடரும்


பகுதி 28

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்

84 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த சில சம்பவங்களை எனக்கு அறியக் கூடியதாக இருந்தது. உமாமகேஸ்வரன் , எம்ஜிஆர் இடையே கருத்து வேறுபாடுகள் கடுமையாக இருந்தன. தமிழ்நாட்டுஉளவுத்துறை அதிகாரி மோகனதாஸ் ஒரு காரணம் என டெல்லியில் வைத்து மத்திய உளவுத் துறை அதிகாரிகளுடன் அவர் பேசும்போது நானும் இருந்தேன். எம்ஜிஆர் உமாமகேஸ்வரன் உடன்நெருக்கமாக இருந்த காலத்தில் ரெலோ இயக்கத்தை மிகக் கடுமையாக விமர்சிப்பாராம். டெலோ இயக்கம் உங்களுக்கு எப்பவும் இடைஞ்சலாக தான் இருக்கும். அதைக் கட்டுப்படுத்தி வைக்க பலமுறை சொல்லியிருக்கிறார். உமா மகேஸ்வரனும் சிரித்து சமாளித்து வந்திருக்கிறார். ஆனால் உளவுத்துறை மோகனதாஸ் மிரட்டும் தொனியில் teloமேல் எப்ப நடவடிக்கை எடுப்பீர்கள் என கேட்டது உமா மகேஸ்வரனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி விட்டது. உமாநேரடியாக எம்ஜிஆரிடம் இந்த அதிகாரி இருக்கும்போது நான் உங்களுடன் பேசுவதற்கு தயாராக இல்லை, அதோடு telo அமைப்போடு எங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்று கூறி விட்டு வெளியில் வந்து விட்டாராம். எம்ஜிஆருக்கு telo கலைஞருக்கு ஆதரவாக நின்றது பெரிய பிரச்சனை.இதன்பின்பு தமிழ்நாட்டில் நமக்கு பலவித இடைஞ்சல்கள் ஏற்பட்டது உண்மை. அதே நேரம் எம்ஜிஆர் மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கா போனது எமக்கு ஒரு ஆறுதலாக இருந்தது

அதேநேரம் எங்களுக்கு உதவி செய்த எம்ஜிஆர் அமைச்சரவையில் சக்தி வாய்ந்த அமைச்சர்S.D. சோமசுந்தரம்., ஜெயலலிதாவுடன் கட்சியில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து ஆட்சியில் ஊழல் கூடி விட்டது என எம்ஜிஆரை பிரச்சினை பண்ண தொடங்கி னார். அப்போது தமிழ்நாடு முழுக்க அமைச்சர் சோமசுந்தர த்துக்கு நல்ல ஒரு பெயர் இருந்தது. அதை நம்பி எம்ஜிஆர் எதிர்த்துக் கொண்டு சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் ஒரு கட்சியை ஆரம்பித்தார். இதற்கு தூபம் போட்டு அமைச்சர் சோம சுந்தரத்தை கனவுலகில் வாழச் செய்து அவரின் அரசியல் வாழ்வு பாதிக்கப் பட உமா மகேஸ்வரனும் ஒரு முக்கிய காரணம்.சிகிச்சை முடிந்து வந்த எம் ஜி ஆர் பல கூட்டங்களில் சோமசுந்தரம் உமா மகேஸ்வரன் இடம்பணம் வாங்கி கட்சி ஆரம்பித்ததாக கூறியது பத்திரிகைகளிலும் வந்தது.84 டிசம்பர் மாத தமிழ்நாடு தேர்தல் முடிந்த போது சோமசுந்தரம் மக்களால் ஒதுக்கப் பட்டு விட்டார். இதன் பின்பு மோகனதாஸ் உளவுத்துறை அதிகாரிபாலசிங்கத்தின் உதவியோடு பிரபாகரனை எம்ஜிஆரிடம் சேர்த்தார். எம்ஜிஆர் கலைஞர் TELO எதிராக பிரபாகரனை வளர்த்தார் என்பதுதான் உண்மை அதனால் தான் கலைஞர் தனது பிறந்தநாளுக்கு கொடுத்த கிடைத்த பணத்தை எல்லா இயக்கங்களுக்கும் பிரித்துக் கொடுத்த போது முதலமைச்சர் எம் ஜி ஆரைதிருப்திப்படுத்த விடுதலைப் புலிகள் பணத்தை வாங்க வில்லை.அதற்காகவே விடுதலைப் புலிகளுக்கும் கோடி கோடியாக பணத்தை எம்ஜிஆர் கொடுத்தார்.

நாங்கள் டெல்லியில் எந்தவித செலவும் இல்லாமல் ஒரே நேரத்தில் பல பேர் வந்து தங்கிச் செல்லவும் , பத்திரிகையாளர்களை சந்திக்கும் இடமாகவும் எங்கள் சொந்த வீடு மாதிரி எல் கனேசன் எம்பியின் வீட்டை நாங்கள் பயன்படுத்தினோம். அவர் எந்த ஒரு தடையும் சொல்லவில்லை. இந்த ஒரு இயக்கத்துக்கும் கிடைக்காத வாய்ப்பு. எல் கனேசன் எம்பி பழகக் கிடைத்த வாய்ப்பு நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர் வீட்டில் நாங்கள் இருப்பது பற்றி சக mp மார் தலைவர் கலைஞர் ஒன்றும் சொல்ல மாட்டாரா என்று கேட்கும்போது,தலைவர் கலைஞர் ஒன்றும் சொல்லமாட்டார் விடுதலைப் போராளிகளுக்கு உதவி செய்வதைப் பற்றி, அதேநேரம் போராளிகளும் எங்களுக்கு கெட்ட பெயர் தர மாட்டார்கள் என்று நம்பிக்கையோடு கூறுவர்

எல் கனேசன் எம்பி அவர்கள் பாராளமன்றம் கூட்டத்தொடர் நடக்கும்போது , டெல்லி வந்தால்நான் நல்ல உணவு சாப்பிட வேண்டும் என்று என்னை பகல் உணவுக்காக புகழ்பெற்றபாராளுமன்ற உணவகத்துக்கு ம், இல்லாவிட்டால் கரோல் பாக் என்ற இடத்தில் இருக்கும் தென்னிந்திய உணவகத்துக்கு ம் அழைத்துச் சென்று நீ விரும்பியதை ஆர்டர்செய்து சாப்பிடப் பா என்று உண்மையான அப்பா போன்ற பாசத்தோடு கூறுவார். அப்போது அது ஒரு பெரிய விடயமாக தோன்றவில்லை. இப்போது நினைக்கும் போது அவரின் பாசமும் அன்பும் புரிகிறது. சில வேளைகளில் அங்கிருக்கும் தமிழ் கடையிலிருந்து பகலுணவு வரும், நான் சாப்பிட்டு இருந்தாலும், தனக்கு மட்டும் வரும் உணவில் இருக்கும் வறுத்த மீன் குழம்பு மீன் போன்றவை தான் சாப்பிடாமல் எனக்கு சாப்பிடக் கொடுப் பார். அந்தக் காலத்தில் எங்களிடமிருந்து எந்தவிதப் பயனையும் எதிர்பாராமல் அவர்கள் உண்மையான அன்போடு உதவி செய்தார்கள். ஆனால் நாங்கள் அவர்களுக்கு கஷ்டத்தை தான் கொடுத்து இருக்கிறோம்.

என் கணேசன் எம்பி அவர்கள் சிறந்த ஆங்கிலப் புலமை கொண்டவர். தனக்கு சரியெனப் பட்டதை செய்பவர். எந்த நேரமும் புத்தகங்களைத்தான் வாசித்துக் கொண்டிருப்பார். அதோடு அவர் அடிக்கடி பான் பீடா எனப்படும் வெற்றிலை போடுவார்.இவரின் பணிந்து போகாத குணம் கட்சியில் இவரின் வளர்ச்சியை தடுத்தது என எனது கருத்து.1965 ஆண்டு மாணவர் தலைவராக இருந்த இவரின் தலைமையில்தான் வைகோ,நடராஜன் போன்றவர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியவர்கள். இந்தப் போராட்டத்துக்கு பின்பு தான் திமுக தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தது.

லண்டனில் இருந்து வந்த சீனிவாசன், கணேசன் எம்பி யோடு நன்றாக பழகினார். லண்டன் ஜெர்மனி பிரான்ஸ் போன்ற நாடுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் ஆதரவை பெறுவதற்காக கணேசன் எம்பியை லண்டனுக்கு கூட்டிப்போக முடிவு செய்தார். அங்கு பொதுக்கூட்டங்களை நடத்தி மக்கள் ஆதரவையும் பொருளாதார உதவிகளையும் பெறலாம்என கணக்கு போட்டார். எல் கனேசன் எம்பி இடம் கேட்டபோது முதலில் மறுத்து விட்டார். பின்பு உமாமகேஸ்வரன் அவருடன் கதைத்து சம்மதத்தைப் பெற்றார். தஞ்சாவூர் மாவட்டத்தில் அண்ணா திமுக எஸ்டி சோமசுந்தரம் ஆதரவும்,திமுக-வில் கணேசன் எம்பியின் ஆதரவும் எமக்கு மிக பக்கபலமாக இருந்தன.ஆனால் அதை நாங்கள் சரியாக பயன்படுத்தவில்லை என நினைக்கிறேன். இப்பொழுது பலர் முகநூலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் காசு பணத்துக்காக ஈழபோராட்டத்தை ஆதரிக்கிறார்கள் போன்ற செய்திகளை எழுதி வருகிறார்கள்.1990பின்பு தான் அதுவும் விடுதலைப் புலி இயக்கம்தமிழ்நாட்டில் தனதுஆதரவைப் பெருக்கிக் கொள்ள காசு கொடுத்து புதிய புதிய ஆதரவாளர்களை உருவாக்கியது அவர்கள் மூலம் தமிழ்நாடு அரசுக்கும் இந்திய அரசுக்கும் எதிரான விமர்சனங்களை வைத்து பொதுக் கூட்டங்களை தமிழ்நாட்டில் இப்படியான கூட்டங்கள்சாதாரண மக்களிடம் எங்களுக்கு ஈழமக்களுக்கு இருந்த உண்மையான அன்பான ஆதரவை இழக்க வைத்தது. பெரும்பான்மையான தமிழ்நாட்டு மக்கள் இந்திய விரோத பிரச்சாரங்களை ஏற்கவில்லை என்பதே உண்மை. கீழே உள்ள படத்தில் கணேசன் எம்பி அவர்கள் லண்டன் போகும் முன்பு டெல்லி விமான நிலையத்தில் எடுத்த படம் டெல்லி திமுக ஆதரவாளர்கள் மாலை போட்டு வழி அனுப்பி வைத்தார்கள்.

தொடரும்.



பகுதி 27

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்

84 ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் என நினைக்கிறேன் டெல்லி வந்த கவிஞர்ஜெயபாலன் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேல் டெல்லியில் நின்றார். அவர் தான் செய்த வேலைகள் சம்பந்தமான ரிப்போர்ட்டை எனக்கு கொடுக்க மாட்டார் நேரடியாக உமா மகேஸ்வரனுக்கு தான் அனுப்புவார். அவர் ஒரு மிகப்பெரிய ஆயுத ஆயுதம் வாங்க கூடிய ஒரு தொடர்பை டெல்லியில் பெற்றிருக்கிறார். தொடர்பு பற்றிய விபரங்களை உமா மகேஸ்வரனுக்கு அனுப்ப, அந்த தொடர்பை தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி , ஜெயபாலனை ஒதுக்கிவிட்டு, ஷெர்லி கந்தப்பா இடம்கொடுத்ததாகவும், கந்தப்பா தவறாகக் கையாண்டு தொடர்பு நமக்கு கிடைக்காமல் போய் விட்டதாகவும் அறிந்தேன். இந்த செய்தி நான் அறிந்தது தான். ஆனால் கந்தப்பா டெல்லி வந்து என்னோடு தங்கி இருந்தது உண்மை.இதுபற்றி ஜெயபாலன் கூறினால் தான் இது உண்மையா பொய்யா என்று தெரியவரும். ஜெயபாலன் கடைசி வரை தமிழீழ மக்கள் விடுதலைக் கழக அங்கத்தவராக இருக்கவில்லை.அவருக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து எல்லா இயக்கங்களிலும் தலைவர்களிடமும் நல்ல தொடர்பு இருந்தது. இது உமா மகேஸ்வரனுக்கு ம்நன்றாக தெரியும். உமாமகேஸ்வரன் மற்ற இயக்க தலைவர்களின் நிலை கருத்துக்கள் பற்றி ஜெயபாலன் இடம் விவாதிப்பதை , பேசுவதைபல முறை பார்த்திருக்கிறேன்.எங்கள் பல முன்னணி தோழர்கள் மற்ற இயக்கங்களோடு ஜெயபாலன் தொடர்பு வைத்திருப்பதை பற்றி உமாமகேஸ்வரன் இடம் கூறி அவனை நம்ப வேண்டாம், ஜெயபாலன் ஆல்இயக்கத்துக்கு ஆபத்து. பலமுறை கூறியும், உமா பொருட்படுத்தவில்லை. எனக்குத் தெரியக் கூடியதாக ஜெய பாலனின் அறிவும் சிந்தனைகளும் ஒரு கிணற்றுக்குள் அடங்க கூடியதுஅல்ல. அவர் ஒரு காட்டாற்று வெள்ளம் போன்றவர். அன்று அவரோடு நான் எல்லாம் பழகும்போது அவரை விட நான் திறமையானவன் பெரியவன் என்ற நினைப்பு இருந்தது. பிற்காலங்களில் ஜெயபாலனின் கட்டுரைகள் கவிதைகள் படித்த போதும் சில தமிழ்நாட்டு அறிஞர்கள் ஜெயபாலனை பற்றி கூறும்போது தான் அவரைப் பற்றிய மதிப்பு கூடியது அதற்காகத்தான் அவரை பற்றி இந்த அளவுக்கு எழுதுகிறேன்.

நான் டெல்லியில் கழுத்தில் ஆப்ரேஷன் செய்து இருந்தபோது வலதுபக்க உமிழ்நீர் சுரப்பிகள் கட்டியாகி மாணிக்கக்கல் போன்ற தோற்றத்தை கொடுத்தது அதைத்தான் ஆப்ரேஷன் செய்துஎடுத்தார்கள். அதை ஜெயபாலன் வெற்றி கழுத்தில் மாணிக்கக் கற்களை மறைத்து வைத்து கடத்துகிறான் என எல்லோரிடமும் சொல்லி ஏன் இந்தி டாக்டரிடம் கூடி சொல்லி சிரித்ததும் மறக்க முடியாது.

விடுதலைப்புலிபொட்டம்மா னை எமது தோழர்கள் கடத்தி வைத்திருந்த போது, ஜெயபாலன் வந்து எமது கேகே நகர்சென்னை அலுவலகத்தில் வைத்து உமாமகேஸ்வரன் இடம் தவறு செய்கிறீர்கள் பிரச்சினை கூடிவிடும் என்று கூறி சண்டை பிடித்ததாகவும்சென்னை அலுவலகப் பொறுப்பாளர் பொட்டம்மான் கைது பற்றி எனக்கு கூறியபோது கூறினார். உமாமகேஸ்வரன் டெல்லி வரும் போது நானும் ஜெயபாலனை பற்றி குறை கூறி அவரிடம் பேசியபோது உமா அதைஏற்றுக்கொள்ளவில்லை..அவர் என்னிடம் கூறிய வார்த்தைகள் ஜெயபாலன் பார்க்க கதைக்க பைத்தியக்காரன் போல் இருந்தாலும் அவன் சொல்லும் பல விடயங்கள் சரியாகத்தான் இருந்திருக்கின்றன. அவனை பயன்படுத்தலாம் என்றால் அவன் கட்டுப்படுத்தி வைப்பது கஷ்டம் என்றார். சந்ததியாரைநாங்கள் கொலை செய்த பின்பு ஜெயபாலன் கொஞ்சம் கொஞ்சமாக எமது இயக்கத்தைவிட்டு ஒதுங்கி விட்டதாக அறிந்தேன்.

டெல்லியில் வேலைகளும் வெளிநாட்டுப் பயிற்சி எடுக்க போய் வரும் தோழர்களின் எண்ணிக்கை அதிகரித்ததும் பத்திரிகையாளர்கள் தொடர்புகள் கூடி விட்டதாலும் எமக்கான தனி இடம் தேவைப்பட்டது. அப்போது அண்ணா திமுக பாராளுமன்ற குழுத் தலைவர் மோகனரங்கம் விரைவில் ஆலடி அருணா ராஜ்யசபா எம்பியாக வருவதாகவும் எஸ்டி சோமசுந்தரம் மூலம் அவரிடம் வீடுஎடுக்கும் படியும் கூறினார். எஸ்டி சோமசுந்தரம் ஐயா கூறியபடி ராஜ்யசபா எம்பியாக வந்த ஆலடி அருணா தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த போது அவரை சந்தித்தேன் அவர் மிக நல்ல மனிதர் தனக்கு வீடு ஒதுக்கிய உடன் தருவதாக கூறினார். அதன்படி அவருக்கு பங்களா டைப் வீடு ஒதுக்கினார்கள். அவர் எமக்கு ஒரு பெரிய ரூம் அட்டாச் பாத்ரூம் உள்ளதை கொடுத்தார். அதற்குபக்கத்தில் தான் டெல்லியிஇன் மிகப்பெரிய சீக்கிய குருத்வாரா இருந்தது. எமது புதிய இடத்தை டெல்லி பத்திரிகையாளர்கள், இந்திய உளவுத்துறை அதிகாரிகள் மட்டும் சந்திக்கும் இடமாக இருக்க வேண்டும் எனவும் அமைப்பில் வந்து போகும் தோழர்களை தங்க வைக்க வேண்டாம் எனவும் கூறினார். உமாமகேஸ்வரன் லண்டன் கிருஷ்ணன் சித்தார்த்தன் மட்டுமே தங்கினார்கள். பின்பு PLO பவன் மூன்று மாதம் தங்க வைக்கப் பட்டிருந்தார். அதைப்பற்றி பின்பு விளக்கமாக எழுதுவேன். எமது புதிய அறையின் பின்புறம் ஏன் பெரிய புல்வெளி. நடுவில் ஒரு பெரிய மாமரம்.தினசரி அரசு ஊழியர்கள் வந்து துப்பரவு செய்து பராமரிப்பார்கள் நமது பக்கத்து அறை ஒரு பக்கம் ஆலடி அருணா எம்பி வசிப்பிடம். மறுபக்கம் கேரளாவின் பெரிய கம்பெனியின் டெல்லி கிளையின் பெரிய அதிகாரி மாதவன் நம்பியார் என்பவர் குடும்பத்துடன் தங்கியிருந்தார் அவர் அந்த காலத்தில் இந்திய ஹாக்கி டீமில் விளையாடி இருக்கிறார் என நினைக்கிறேன். பின்பக்கத்தில் உள்ள பணியாளர்விடுதியில் ராஜன் என்ற கேரளா காரர்குடும்பத்துடன் தங்கியிருந்தார்.இவர் பக்கத்தில் இருந்த டெல்லி காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்துக்கு பக்கத்தில் தேனீர் கடை நடத்தி வந்தார். பிற்காலத்தில் நல்ல உதவிகள் செய்தார். அவர் கடையில் கொடுக்கும் தேனீர் சாப்பாடு களுக்கு பணம் வாங்க மாட்டார்.காரணம் கேட்டால் கூறுவர் நீ ஊருக்கு போய் சண்டை பிடித்து தனிநாடுகிடைத்த பின்பு பெரிய ஆளாய் வருவாய் அப்போது தான்கஷ்டத்தில் இருந்தால் உதவி செய் போதும் என்று கூறினார். அவர் நினைத்தது எதுவும் நடக்கவில்லை.

L. கணேசன் எம்பி ராஜ்யசபா எம்பி பதவி காலம் ஆறு ஆண்டுகள். 86 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை நாங்கள் எல் கனேசன் எம்பியின் வீட்டை பாவித்தோம்.அது முடிந்த பின்பு 88ஆண்டு கடைசி வரை ஆலடி அருணா எம்பியின் வீட்டைத்தான் பாவித்தோம். அந்த விலாசத்தில் விசிட்டிங் கார்டு அடித்து பயன்படுத்தினோம். கீழே உள்ள படங்கள் புது அலுவலகம் அதாவது ஆலடி அருணாவின் எம் பி வீட்டில் எடுத்தது.

தொடரும்



பகுதி 26

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும

84 ஆம் ஆண்டு சென்னையிலிருந்து எமது தோழர் கவிஞர் ஜெயபாலன் டெல்லிக்கு அனுப்பி வைக்கப் பட்டார் மிகவும் திறமைசாலி கெட்டிக்காரர். சிறந்த கவிஞர் என்பதால் அவரை கட்டுப்படுத்தி வைப்பதும் கடினம். உமாமகேஸ்வரன் அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்து அவரை அனுப்பி இருப்பதாக ஜெயபாலன் நினைத்தாலும், மறைமுகமாக அவரை கட்டுப்படுத்தி வைக்கும்படி முக்கியமானவர்களை சந்திக்க விடவேண்டாம் எனவும் எனக்கு தொலைபேசி வாயிலாக அறிவித்தார். அருமையான நண்பர் ஜெயபாலன் கோபம் சட்டு சட்டென்று வரும். அவருக்கு செலவுக்கு காசு கொடுப்பதில்தான் இருவருக்கும் பிரச்சனை. ஆனால் ஜெயபாலன் காலையில் வெளியே புறப்பட்டால் பல முக்கிய நபர்கள் விடுதலை இயக்கங்களை சந்தித்துவிட்டு தான் வருவார்.இவர் எமக்கு அறிமுகப்படுத்திய முக்கியமானவர்கள் டெல்லி இந்துஸ்தான் டைம்ஸ் ஆசிரியர் திரு . பட்னீஸ், அவரின் மனைவி ஊர்மிளா பட்னிஸ். ஊர்மிலா பட்டினியூஸ் டெல்லி ஜவகர்லால் நேரு யூனிவர் சிட்டியில் சவுத் ஏசியா பற்றிய படிப்புக்கும் பொறுப்பாக இருந்தார் என நினைக்கிறேன். அதோடு இந்திய வெளியுறவு கொள்கை வகுப்பாளர்களும் இருந்த குழுவிலும் இருந்தார். அன்று இந்திய அரசின் அரசியல் சட்ட ஆலோசகர், அரசியல் சட்ட வரைவாளர் ஒரு தமிழர் அவரின் பெயரை மறந்துவிட்டேன் தாமோதரம் பிள்ளை என நினைக்கிறேன். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை வரைந்தவர். ஜெயபாலன்84 ஆம் ஆண் டேஇவரிடம் நட்பை வளர்த்துக்கொண்டார். ஆனால் உமா மகேஸ்வரன் தொடர்ந்து அவரை சந்திப்பதை தவிர்க்கும் படி கேட்டுக்கொண்டார். டெல்லியில் ஸ்டீபன் கல்லூரியில் உலக நாட்டு விடுதலை இயக்கங்களின் மாநாடு நடைபெற்றது. ஜெயபாலன் எப்படியோ இதை அறிந்து அதில் கலந்து கொண்டு நல்ல தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார். அதில் பல தென்னமெரிக்க விடுதலை இயக்கங்களின் சங்கமம்.என்னையும் ஒரு நாள் கூட்டிக்கொண்டு போய் அவர்களிடம் அறிமுகப்படுத்தி பங்கு பெற செய்த போதுதான் ஜெயபாலனின் கவிதைகள் ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது தெரியவந்தது. அவரின் ஜெயபாலனின் தொடர்புகள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் நல்ல முறையில் பயன்படுத்தவில்லை என்பது உண்மை. பின்புதான் நான் கேள்விப்பட்டேன்.சென்னையிலிருந்து ஜெயபால னைஅப்புறப்படுத்துவதற்காக தான் ஜெய பாலன்டெல்லிக்கு அனுப்பப்பட்டதாகவும், உமா மகேஸ்வரனைசுற்றியிருந்த ஒரு அறிவு ஜீவிகள் என்ற அறிவற்ற கூட்டம் ஜெயபாலன் வளர்வதை விரும்பவில்லை என அறிந்தேன். ஜெயபாலன் இடமும்ஒரு பிடிவாதம் இருந்தது. சில வேளைகளில் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சாதிப்பார். நான் டெல்லி கபூர் வைத்தியசாலையில் தொண்டையில் ஆபரேஷன் செய்வதற்காக சேர்ந்து இருந்த போது மூன்று நாளும் என்னை கூட இருந்து பார்த்துக் கொண்டவர் ஜெயபாலன் தான். அடிக்கடி சென்னையில் இருந்து எமது தலைவர் ஜெயபாலன் பற்றிஎச்சரிக்கை செய்தபடி இருப்பார். அது என் மனதில் படிந்துஜெயபாலனின் செய்கைகளே கட்டுப்படுத்துவதிலேயே இருந்தேன். நல்லகாலம் ஜெயபாலனை மொக்கு மூர்த்தியிடம் அனுப்பவில்லை. ஜெயபாலன் இருக்கும் போதும் இன்னொரு தோழர் ஐயம் எனக்கு உதவியாக அனுப்பி வைத்தார் அவர் பெயர் சங்கர். அமைதியான அருமையான தோழர். நான் எம்பிக்களை சந்திக்கப் போகும் போது கூட வருவார்.இந்த வருடம்தான் சென்னை விமான நிலையம் மீனம்பாக்கம் குண்டுவெடிப்பு நடந்தது அது பற்றிய முன்பு பதிவு போட்டு இருந்தேன்இப்பவும் கீழே தருகிறேன்.

#மீனம்பாக்கம்_விமானநிலைய_குண்டுவெடிப்பும்_எனக்குத் தெரிந்தபின்னனியும்

மண்1984 ஆம் ஆண்டு சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய குண்டுவெடிப்பு நடந்து இரண்டாம் நாள் டில்லியில் நான் தங்கியிருந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் L. கணேசன்வீட்டுக்கு மாலை 5 மணி போல் சென்னையிலிருந்து இரண்டு இலங்கை தமிழர்கள் இந்த வந்தனர் அவர்கள் என்னிடம் முன்னாள் காலஞ்சென்ற யாழ்ப்பாணம் எம் பி யோகேஸ்வரன் அவர்கள் கொடுத்த ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்தார்கள். அதில் யோகேஸ்வரன் எம்பி அவர்கள் இருவரையும் வை கோபால்சாமி எம்பி இடம் அறிமுகப்படுத்தி அவர்கள் சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கஇடம்எடுத்துக் கொடுக்க முடியுமா ?எனஎழுதியிருந்தார். அந்த சமயத்தில் டெல்லியில் வைகோ, நானிருந்த வீட்டு எம் பி எல் கணேசன் அவர்களோ டெல்லியில் இல்லை.

அந்த சமயத்தில் வெளியிலிருந்து வந்த டெல்லிதமிழ் நண்பர்கள் உங்களை கீழே தமிழ்நாடு போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள், எனக் கூறினார்கள். அப்போது அந்த இரண்டு இலங்கை தமிழ் இளைஞர்களும் போலீசார் தங்களை தேடித்தான் வந்திருக்கிறார்கள் என பதறினார்கள். அப்போதுதான் அவர்கள்உண்மையை கூறினார்கள் ஒருத்தர் பெயர் தபேந்திரன், மற்றவர் பெயர் சரவணபவன் இவர் சென்னை விமான பயிற்சி நிலையத்தில் விமான பயிற்சி பெறுவதாகவும் குண்டு வெடித்த சம்பவத்தில் தாங்கள்தான் இரண்டு சூட்கேஸ்களை விமான நிலையத்தில் கொண்டுபோய் வைத்ததாகவும் கூறினார்கள் தங்களை தமிழ்நாடு உளவுத்துறை தொடர்ந்து வருவதாகும் அவர்கள்தான் யோகேஸ்வரன் எம்பி இடம் விபரங்கள் கூறிஇன்று டெல்லி வந்துள்ளதாகவும் கூறினார்கள். நான் உடன் அவர்களை வேறு வழியாக வெளியில் அனுப்பி விட்டேன்.

பின்பு திமுக பாராளுமன்ற குழு தலைவர் சிடி தண்டபாணி அவர்களிடம் தொலைபேசியில் நிலைமைகளை கூறினேன். அவர் வீட்டுக்கு வெளியில் போய் போலீசாருடன் பேச வேண்டாம் கைது செய்து விடுவார்கள் அதனால் எம்பி வீட்டுக்குள் இருந்து அவர்களிடம் பேசுங்கள் எம்பி வீட்டுக்குள் வந்தால் உங்களை கைது செய்ய முடியாது என கூறினார். நான் இந்த போலீஸ் அதிகாரிகளை வீட்டுக்குள் அழைத்து விசாரித்தேன். வந்த போலீஸ் அதிகாரி தமிழ்நாடு கியூ பிரான்ச் எஸ்பி திரு பட் அவர்களும் அதிகாரிகள் தாங்கள் சென்னையிலிருந்து அவர்களைதொடர்ந்து வருவதாகவும் யோகேஸ்வரன் தான் அவர்கள்என்னிடம் போவதாக கூறியதாகவும் கூறினார்கள் நான் நான் உடன் இவர்களை எனக்குத் தெரியாது எனவும் யோகேஸ்வரன் மற்றும்தான் என்னிடம் அனுப்பியதாகவும் கூறி யோகேஸ்வரன் அனுப்பிய கடிதத்தை காட்டினேன். அவர்கள் திரும்ப வந்தால் தங்களுக்கு அறிவிக்கும்படி தொலைபேசி இலக்கத்தையும் அல்லது லோக்கல் போலீஸ் இடம்ஒப்படைக்கும்படி கொஞ்சம் மிரட்டலாக கூறி விட்டுச் சென்றார்கள்.

நான் உடனடியாக சென்னையிலிருக்கும் நமது தலைவர் உமாமகேஸ்வரன் இடம் இது பற்றி கூறினேன். அவரும் இது சம்பந்தமாக முன்னாள் இலங்கை சுங்க இலாகா உயரதிகாரி கரவெட்டி யைச் சேர்ந்த விக்னேஷ் ராஜா வையும் கைது செய்யப்பட்டுள்ளார் என கூறினார் விக்னேஷ் ராஜா உமா மகேஸ்வரனுக்கு ம், எனக்கும் மிக நெருங்கிய நண்பர். அடுத்தடுத்த நாட்களில் இது சம்பந்தமாக சில விபரங்கள் எனக்கு கிடைத்தன. விக்னேஷ் ராஜா சுங்க அதிகாரி என்ற முறையில் சென்னையில் இருந்த சுங்க அதிகாரிகளோடு நல்ல தொடர்பில் இருந்துள்ளார். இதைப் பயன்படுத்தி பனாகொடைமகேஸ்வரனும் விக்னேஸ்வரனுடன் போய் சென்னை சுங்க அதிகாரிகள் இடம் நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

இரண்டு சுங்க அதிகாரிகளிடம் த லா 15 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். சில கடத்தல் சாமான்கள் இருப்பதாக காரணம்கூறியுள்ளார். ரெண்டு சூட்கேஸ் களையும் செக் பண்ணாமல் இருக்க. இரண்டு சூட்கேஸ்களை கொண்டு போனவர்கள் தவேந்திரன் விமானம் ஓட்டும் பயிற்சி பெறும் சரவணபவன். போர்டிங் பாஸ் கிழித்துவிட்டு சூட்கேஸ்கள் சுங்க பகுதிக்கு போனபின்பு திரும்ப வெளியில் வந்து விட்டார்கள். அந்த காலத்தில் மீனம்பாக்கம் ஏர்போர்ட் மிகவும் சிறியது வெளியிலிருந்து பார்த்தால் சுங்க பகுதி வரை தெரியும். மகேஸ்வரனின் ஐடியா கொழும்பு போகும் லங்கா விமானம் ஒரு மணி நேரம் கொழும்பில் இருந்து விட்டு பின்பு லண்டன் செல்லும்,கொழும்பில் நிற்கும் நேரத்தில் வெடிக்கக்கூடிய மாதிரி சூட்கேஸ்களில் குண்டை செட் பண்ணி அனுப்பியிருந்தார். ஆனால் சுங்க அதிகாரிகளின் கெட்ட நோக்கம் 30000 ரூபா லஞ்சம்தரக்கூடிய அளவுக்கு இருந்தாள் சூட்கேஸ்களில் இலட்சக்கணக்கான பெறுமதியான தங்கம் இருக்கும் என நினைத்து அந்த இரண்டு சூட்கேஸ் எல்லாம் தனியாக விமானத்தில் ஏற்றாமல் எடுத்து வைத்து விட்டார்கள். இதைகவனித்துக்கொண்டிருந்த மகேஸ்வரனும் நண்பர்களும் பொது தொலைபேசி வழியாக சுங்க அதிகாரிகளுக்கு குண்டு இருக்கும் உண்மையை கூறியுள்ளார்கள். அவர்கள் நம்பவில்லை. பின்பு ஏர்போர்ட் மேனேஜருக்கும் போலீசாருக்கும் தகவல் கூறியுள்ளார்கள். ஆனால் காலம் கடந்து விட்டது குண்டு வெடித்து மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து சென்னை வழியாக இலங்கை போகும் சிங்களத் தொழிலாளர்கள் முப்பது பேர் கிட்ட இறந்துவிட்டார்கள். சுங்க அதிகாரிகளும் செத்துவிட்டார்கள் சுங்க அதிகாரிகளின் பைகளில் பதினையாயிரம் பணம் இருந்திருக்கிறது இது செய்தியாகும் பத்திரிகைகளில் வந்தது.

இந்த சம்பவங்கள் நடந்து சில மாதங்களில் எனக்கு மாதம் திகதி நினைவில் இல்லை விக்னேஷ்வர் ராஜாவின் அப்பா என நினைக்கிறேன் லண்டனில் காலமானார் இவர்தான் மூத்தவர் என்றபடியால் இறுதி கடமைகள் செய்ய ஜாமீனில் லண்டன் செல்ல விரும்பினார் ஜாமீன் கிடைக்கவில்லை அவர் உமாமகேஸ்வரனுக்கு மேற்படி ஜாமீன் விஷயமாக தகவல் அனுப்பினார் உமா மகேஸ்வரனும் தமிழக சட்ட அமைச்சர் பொன்னையன் உடன் பேச அவர் தான் ஏற்பாடு செய்ய உதவி செய்வதாகவும் ஆனால் மத்திய அரசு தடுக்கக் கூடாது எனவும் கூறி அதற்கும் நாங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கூறினார். உமா மகேஸ்வரனும் டெல்லி வந்து நானும் அவரும் திரு ஜி பார்த்தசாரதி அவர்களை போய்ப் பார்ப்போம் அவர் கடுமையாக திட்டினார் பின்பு நாங்கள் விக்னேஸ்வரனும் இந்த குண்டு வெடிப்புக்கும் எந்த நேரடி சம்பந்தமும் இல்லை என கூறி விபரங்களை கூறினோம் விக்னேஸ்வரனும் சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கும் இருந்த நட்பை பனாகொடை மகேஸ்வரன் விக்னேஸ்வரன் ராஜாவுக்கு தெரியாமல் பயன்படுத்திக்கொண்ட விபரத்தையும்கூறினோம் பின்பு பார்த்தசாரதி தான்மத்திய அரசு அதிகாரிகளுடன் பேசி ஏற்பாடு செய்வதாகவும் ஒருமாத ஜாமீன் முடியாஇந்தியா திரும்ப வேண்டும் எனவும் கூறினார்.

பின்பு ஒரு மாத ஜாமீனில் வெளிவந்து, விக்னேஷ் ராஜா மதுரையில் தங்கியிருந்த தனது மனைவியுடன் லண்டன் போய்விட்டார். அந்த நேரம் இந்தியாவில் இந்திரா காந்தியின்மறைவும் அரசியல் சூழ்நிலைகள் மாறி இருந்தாலும் விக்னேஷ் ராஜா முடிந்து இந்தியா வரவில்லை. அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியானை ஓபன் வாரன்ட் பிறப்பித்து பத்திரிகையிலும் வந்து லண்டன் இந்திய எம்பசி மூலம் இந்தியா கொண்டுவர முயற்சி செய்தார்கள்.விக்னேஷ் ஒரு ராஜா தனது முயற்சி மூலம் லண்டன் நீதிமன்றம் மூலம் தான் கைது செய்து இந்தியா கொண்டு வர படுவதை தடுத்துக் கொண்டார். விக்னேஸ்வரன் ராஜா ஜாமீன் அல்லது தப்பியதால் சென்னையில் பனாகோடமகேஸ்வரன் உட்பட மற்றவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை இது பனாகொடை மகேஸ்வரன் விக்னேஸ்வரன் மேல் கடுங்கோபத்தில் இருந்தார். விக்னேஸ்வரனை இந்தியா கொண்டுவர கடைசி முயற்சியாக பனாகொடை மகேஸ்வரன் தனது நண்பர்கள் மூலம் சேலத்தில் படித்துக் கொண்டிருந்த விக்னேஸ்வரன் இரு மகன்களையும் கடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொண்டார்.

இதை அறிந்த இரு மகன்களும் தலைமறைவாக இருந்தார்கள். விக்னேஸ்வரன் அவர்கள் உமா மகேஸ்வரனை தொடர்புகொண்டு விவரத்தை கூற உமா என்னிடம் அவர்களை லண்டன் அனுப்பும் பொறுப்பை ஒப்படைத்தார். சேலம் சட்டக்கல்லூரி மாணவர்களாய் இருந்த இருவரும் பின்பு என்னை தொடர்புகொண்டு டெல்லி வந்தார்கள் ஒரு வாரத்தில் நான் அவர்களை லண்டன் அனுப்பு ஒழுங்கு செய்து அனுப்பி வைத்தேன்.

(இதில் ஒரு சுவாரசியமான கதையும் உண்டு. விக்னேஸ்வரனின் மூத்தமகன் கிட்டத்தட்ட இருபது வயசு இருக்கும் அவர்தான் காதலித்த மதுரை பெண்ணையும் கூட அழைத்து வந்துவிட்டார் அந்தப் பெண்ணின் வீட்டார் ஒரு பக்கம் அவர்களை தேடுவதாக தகவல் இவர்களுடன் அந்த பெண்ணையும் லண்டன் அனுப்பி வைத்தேன்)

இங்கு ஜாமீன் கிடைக்காமல் பனா கொடை மகேஸ்வரனும் நண்பர்களும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் சிறையில் இருந்து இருந்திருக்கிறார்கள்.. பின்பு அவருக்கு ஜாமீன் கிடைத்து பலர் தலைமறைவாக சரவணபவான் சென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவராக படித்தார். 90 ஆம் ஆண்டுக்குப் பின்பு சரவணபவன் என்னோடு நல்ல தொடர்பில் இருந்தார் அவர் ஒரு சினிமாவில் கதாநாயகனாக நடித்தார். ஒரு புத்தகம் மாத இதழாக வெளியிட்டார் பெயர் மறந்து விட்டேன். தன் மேலுள்ள வழக்கில் ஜாமின் ரத்து செய்யப்படாமல் இருக்க சென்னை மருத்துவக்கல்லூரி சரித்திரத்தில் மிக நீண்ட காலம் படித்து மருத்துவராகி இருப்பவர் இவர் தான் என நினைக்கிறேன் இவரின் மருத்துபடிப்புமுழுவிபரம் பத்திரிகையில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் இதற்கிடையில் லண்டனில் இருந்த விக்னேஷ் ராஜா தனக்கு மேலுள்ள மற்றவர்களுக்கும் உள்ள வழக்கை நடத்த எனக்கு பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்த கடிதத்தின் நகலும் கீழே தந்துள்ளேன். அதை நீதிமன்றம் ஏற்கவில்லை

இதுதான் சென்னை விமான நிலைய குண்டுவெடிப்பில் எனக்குத்தெரிந்த ஒரு பகுதி.



பகுதி 25

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்

நான் எழுதும் சம்பவங்கள் உண்மையானது . அவை நடந்த காலகட்டங்கள் மாதங்கள் ஆண்டுகள் எனக்கு மறந்து விட்டன.நினைவுகளை வரிசைப்படுத்தும் போது மாதங்கள் ஆண்டுகள் குழப்பமாக இருக்கின்றது. தயவு செய்து இதைப் படிக்கும் தோழர்கள் ஆண்டுகள் மாதங்கள் சரியாக சொன்னால் நான்திருத்திக் கொள்வேன்.

1984 ஆண்டு ஆரம்பம் முதல் பல தோழர்களின் வரவு டெல்லியில் இருந்தது. பெரிய செந்தில் கொஞ்சம் பணத்துடன் ஆயுதம் வாங்குவதற்காக என்று கூறி உமாமகேஸ்வரன் அனுப்பியிருந்தார். நல்ல தோழர். ஆனால் தான் ஒரு போராளி என்று என் கர்வம் கொண்டவர். டெல்லியில் இருந்த எமக்கு உதவி செய்யும் இந்திய நண்பர்களிடம் அவர் பேசுவது எல்லாம் வெற்று பெருமை கதைகள் தான்.அங்கிருந்த இந்திய நண்பர்கள் பெரிய படிப்பு படித்தவர்கள் என்பதை மறந்து கதை சொல்வார்.

பெரிய செந்திலுக்கு இந்தி தெரியாது. டெல்லி அதன் சுற்றுவட்டார மாநிலங்களில் நாட்டுத் துப்பாக்கி கள்ளத்துப்பாக்கி தான் வாங்க முடியும். ஒரு விடுதலை இயக்கத்திற்கு நாட்டுத்துப்பாக்கி போதுமா? உமாமகேஸ்வரன் தனக்கு விசுவாசமான அதுவும் தன்னைபெரிய ஐயா என்று அழைப்பவர்களை நம்பியோ அல்லது விரும்பியோ அவர்களுக்கு தகுதியற்ற கழக வேலைகளை கொடுத்து அதை கண்காணிக்காமல் விட்டதும் பெரிய தவறு. நாங்கள் டெல்லியில் கூடஎமது செலவைக் கட்டுப்படுத்தி நாக்கு ருசியை கட்டுப்படுத்தி செலவழித்து வந்தோம். ஆனால் செந்தில் போன்றவர்கள் கணக்கு வழக்கு பார்க்காமல் செலவழிப்பார்கள். அதெல்லாம் ஆயுதம் வாங்க ஓடித்திரிந்த கணக்கில் வந்துவிடும். இதேநேரம் வாமதேவன் இரு தோழர்களுடன் டெல்லி வந்து ஓட்டலில் தங்கியிருந்தார். காரணம் அந்த நேரம் டெல்லி வந்திருந்த ஈபிஆர்எல்எஃப் தலைவர் பத்மநாபா, மற்றும் டக்ளஸ் தேவானந்தா இருவரையும் போடுவதற்கு. மட்டக்கிளப்பு சிறை உடைப்புக்கு ஈபிஆர்எல்எஃப் உரிமை கோரியதால் அதற்காக தண்டனை எனக் கூறினார்கள். இவர்கள் டெல்லி வந்ததை அறிந்த இந்திய உளவுத்துறை IB கடுமையாக என்னைஎச்சரித்ததால், நான் உமாமகேஸ்வரன் இடம்தொலைபேசி மூலம் கூறியதை அடுத்து வாமதேவன் , மற்றும்தோழர்களை உடன் சென்னைக்கு வரச் சொன்னார்.

லண்டனிலிருந்து சீனிவாசன் டெல்லி வந்து சென்னை போனார்.கழக வேலைகள் என்று கூறி லண்டனிலிருந்து வந்தவர்களில் சீனிவாசன் மட்டும் தான் உண்மையாக விடுதலைக்காக கழகத்துக்கு வேலை செய்தவர். இவர் கழகத்துக்கும் ஆயுதம் வாங்க முயற்சிகள் செய்து, ஆரம்ப கட்ட பணம் சேகரிப்பு வேலைகளை தொடங்கினார். அது சம்பந்தமாக இரண்டு தோழர்களை இந்திய அனுப்பியிருந்த அவர்கள் ராஜா நித்தியன், அடுத்தவர் கப்பலில்கேப்டனாக இருந்தவர். பெயர்மறந்துவிட்டேன். அவரை நாங்கள் கூப்பிடுவது கப்பல் என்று. அவர்களை பணம் சேகரிப்புக்காக சீனிவாசன் சிங்கப்பூர் ஹாங்காங் தாய்லாந்து என வழி நடத்தியவர். ராஜா நித்தியன் 1979ஆண்டு ஒன்றுபட்ட விடுதலைப் புலிகள் அமைப்பில் பயிற்சி பெற இந்தியா வந்து இருந்தபோது புலிகள் இயக்கம் உடைந்த நேரம்இவர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு கடைசியில் செஞ்சி ராமச்சந்திரன் எம்எல்ஏ இவர்களை பாதுகாத்து அனுப்பியதாக கூறினார்.1984ஆண்டு கடைசி பகுதியில் வந்து டெல்லியில் ஒரு மாதம் தங்கியிருந்து எனக்கு உதவியாக ஒரு மாதம் இருந்தார். கப்பல் வரும்போது சிறு பாவ ஃபுல் ரேடியோகொண்டு வந்திருந்தார். அந்த டிஜிட்டல் ரேடியோவில் பாட்டு கேட்பதோடு, போலீஸ் ராணுவம் பாவிக்கும் வயர்லெஸ் செய்திகளையும் கேட்கக்கூடியதாக இருந்தது. அன்று அது எமக்குபுதுமையாக இருந்தது.

1984 ஆண்டு ஜெயலலிதா ராஜ்யசபா எம்பியாக தெரிவாகியிருந்தார். எம்ஜிஆர் சுகயீனம் காரணமாகஅமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நேரம். அதிமுக கட்சியில் ஜெயலலிதாவுக்கு மிகுந்த நெருக்கடி. அப்போது எனக்கு உதவி செய்த கோபி செட்டிபாளையம் mpசின்னசாமி அவர்கள் ஜெயலலிதாவின்தீவிர ஆதரவாளர். ஜெயலலிதாவின் சென்னையில் இருந்த தீவிர ஆதரவாளர் மந்திரியாக இருந்த திருநாவுக்கரசு அவர்கள், சென்னையில் நடக்கும் செய்திகளை தொலைபேசி மூலம் சின்னசாமி MP அவர்களுக்குத்தான் செய்தி வரும் அவர் ஜெயலலிதாவிடம் போய் கூறுவர். ஜெயலலிதா ஆதரவாளர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக தகவல் வந்தவுடன், சின்னச்சாமி எம்பி அவர்கள் எல் கனேசன் திமுகஎம்பியின் தொலைபேசி ஊடாக என் மூலம் தகவல்களைப் பெற்று ஜெயலலிதாவிடம் கொடுப்பர். சில வேளைகளில் ஜெயலலிதாவின்தீவிர ஆதரவாளர் சேலம் கண்ணன் எம்பியின் வீட்டுக்குப் போய் சின்னச்சாமி எம்பி தரும் செய்திகளை கொடுத்திருக்கிறேன். அப்போது டெல்லியில் இருந்த நானும் எனது இந்திய நண்பர்களும் சேர்ந்து செய்த இந்த உதவிகள் எமக்கு விளையாட்டாக இருந்தது. பிற்காலத்தில் தமிழ்நாட்டில் நடந்த அரசியல் மாற்றங்களுக்கு நாங்களும் சிறு துரும்பாக பயன் பட்டு இருக்கிறோம்

தொடரும்






பகுதி 24

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்

உமாமகேஸ்வரன் சென்னைக்கு போகும் முன் என்னிடம் சித்தார்த்தன் சென்னை வந்து திரும்ப லண்டன் போகும் போது எமது தொடர்புள்ள முக்கியமான இந்திய ஆட்களை அறிமுகப்படுத்த சொன்னார். சித்தார்த்தனை அவர்களிடம் அறிமுகப்படுத்தும் போது, தமிழர் விடுதலைக் கூட்டணி இருபத்தைந்து ஆண்டுகால இலங்கைபாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் மகன் லண்டனில் எமது இயக்கத்துக்கு வேலை செய்பவர் என அறிமுகப்படுத்த சொன்னார்.அப்படி அறிமுகப்படுத்தினால் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் மகன் மார்களும் பிளாட் இயக்கத்தைஆதரிப்பதாக ஒரு இமேஜ் வரும் என கூறினார்.

நானும் எமது தொடர்பில் இருந்த இந்திய உளவுத்துறை அதிகாரிகள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் G பார்த்தசாரதி போன்றவர்களை அறிமுகம் செய்தேன். ஜி பார்த்தசாரதி தர்மலிங்கம் mpஅவர்களை தெரியும் என்று கூறினார்.

சித்தார்த்தன் லண்டன் போய் திரும்ப வந்து போகும் போது, ((வெளிநாட்டில் எமக்காக வேலை செய்யும் பலர் இயக்க வேலைகளை காரணம் காட்டிஇயக்கத்துக்கு சேர்த்த காசில் பல நாடுகளுக்கும், இந்தியா விற்கும் உல்லாசப்பயணம் வந்து போவது வாடிக்கை இதை உமா மகேஸ்வரனும் கேள்வி கேட்கவில்லை.காரணம் இவர்கள்தான் உமா மகேஸ்வரனுக்கு தனிப்பட்ட சுவிஸ் பேங்க் அக்கவுண்ட் பணம் போடுபவர்கள். சந்ததியார் பல கேள்விகளை கேட்ட படியால் இவர்களுக்கு சந்ததியாரை பிடிக்காது)) .அப்பொழுது இந்திய காங்கிரஸ் கட்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கருப்பையா மூப்பனார் பாராளுமன்ற உறுப்பினருக்கு அகில இந்திய ரீதியில் மிகவும் செல்வாக்கு அவர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் கூட. 1984 ஆண்டு செப்டெம்பர் மாதம் என நினைக்கிறேன். அன்று இரவு சித்தருக்கு லண்டனுக்கு விமானம்.மாலை ஐந்து மணி போல் நானும் சித்தரும் கருப்பையா மூப்பனார் சந்திக்க காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் போனோம். எங்களுக்கு ஒரு நப்பாசை அங்கு இந்திராகாந்தி இருந்தாலும் சந்திக்கலாம் என, நாங்கள் போன போது இந்திரா காந்தி இருக்கவில்லை மூப்பனாரும் இருக்கவில்லை.அங்கிருந்தவர்கள் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ராஜீவ் காந்தி ஃப்ரீயாக இருப்பதாகவும் வேண்டுமானால் சந்திக்க கூறினார்கள். ஆனால் சித்தார்த் தரும் ,நானும் எங்களுக்குள் கதைத்தோம் இந்த பேயனை போய் பார்ப்பதில் என்ன பிரயோசனம். ராஜீவ் காந்திக்கு என்ன விளங்கப் போகிறது. என்று கதைத்து விட்டு நாங்கள் திரும்பி விட்டோம். 2 மாதத்தில் இந்திரா காந்தியின் மறைவுக்குப் பின் ராஜீவ் காந்தி பிரதமரானார்.அதன் பின்பு சித்தார்த்தர் வரும்போது எப்பவும் கவலைப்படுவார் அப்போ போய் சந்தித்து இருந்தால் நாங்கள் தான் இலங்கைத் தமிழர்களில் முதலில் சந்தித்த வர்களாக இருந்திருப்போம். தனிப்பட்ட முறையில் ஒரு தொடர்பும் இருந்திருக்கும். அன்று நாங்கள் விட்ட தவறை நினைத்து வருந்துவோம். சந்தர்ப்பம் ஒருமுறைதான் கதவைத் தட்டும் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

1984 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் வாரத்திலஉமா மகேஸ்வரன் மொரிசியஸ் நாட்டுக்குச் சென்றார். மொரிஷியஸ் நாட்டு தமிழ்ச் சங்கம் அவருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்திருந்தது.ஆனால் எங்கள் பிரச்சாரம் மொரிஷியஸ் நாட்டு அரசாங்கமே உமா மகேஸ்வரனை அழைத்தது என்று. உண்மை தெரியாமல் பல பேர் தவறாக இன்றும் எழுதுகிறார்கள். இந்தப் பயணத்துக்குஅடித்தளம் இட்டவர் காந்தளகம்சச்சிதானந்தன் அவர்கள்.இதே செயல்படுத்தியவர் லண்டனை சேர்ந்த லண்டன் முரசு ஆசிரியர் சதானந்தன் என்பவர்.

மொரிஷியஸ் நாட்டு வரவேற்பில் முக்கிய பங்காற்றியவர் மொரிஷியஸ்தமிழ்ச் சங்கத்தின் திருமதி ராதா பொன்னுசாமி இவர் மொரிசியஸ் நாட்டின் முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர்என்பவர், அதோடு மொரிஷியஸ் நாட்டு கல்வி அமைச்சர் பரசுராம்.பரசுராம் முயற்சியால் மொரிஷியஸ் பிரதம மந்திரி அனுருத் ஜெகநாத், மொரிஷியஸ் நாட்டுஜனாதிபதி ராம் கூலம் ஆகியோரை உமா மகேஸ்வரனும் அவரது குழுவில் இருந்த நமது இயக்கத் தோழர்கள் டேவிட் ஐயா, சித்தார்த்தன், லண்டன் கிருஷ்ணன் மற்றும் லண்டன் முரசு சதானந்தன் ஆகியோர் சந்தித்தார்கள்.

மொரீசியஸ் நாடு இந்த காலகட்டத்தில்,இப்போதும் கூட இந்தியாவின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. மொரிசியஸ் பயணத்துக்கான அழைப்பு கிடைத்த போது, டமஸ்கஸ் ஊடாக லெபனான்போவதற்காக டெல்லி வந்திருந்தார். அப்போது பாஸ்போர்ட் செய்வதற்காக கோர்ட், டை கட்டி போட்டோ எடுத்தோம். கீழே உள்ள படம் அப்போது எடுததுதான். தான் திரும்பப் பம்பாய் வருவதாகவும் அப்போது அங்கு வேறுபாஸ்போர்ட் செய்து எடுத்து வந்து சந்திக்கும்படி யும், அதோடு மொரிஷியஸ் பயணம் பற்றிய விபரங்களையும்அவரது பாஸ்போர்ட் பற்றிய விபரங்களையும் ஜி பார்த்தசாரதி அவர்களிடம் கூறவும் சொன்னார். நான் ஜி பார்த்தசாரதி அவர்களிடம் விபரத்தை கூறியபோது அவர் வாழ்த்துக் கூறி, வெளி நாடுகளின் ஆதரவைப் பெறுவது நல்ல விடயம் என்றார். உண்மையில் இந்தியா இலங்கை பிரச்சனை வெளி நாடுகளிலும் பரவ வேண்டும் என விரும்பியது. இந்திய ஆதரித்த படியால் தான் உமா மகேஸ்வரனை மொரீசியஸ் பிரதம மந்திரி ஜனாதிபதி சந்தித்தார்கள் என்பதுதான் உண்மை.(இப்போதும் சிலர் எழுதுகிறார்கள் இந்தியா எதிர்த்த தாகவும் ஆனால் உமா மகேஸ்வரனுக்கு மொரிஷியஸ் நாட்டு அரசாங்கம் வரவேற்பு அளித்தது என்று)

நான் குறிப்பிட்ட நாளில் பம்பாய் போய், மான்சரோவர் ஹோட்டலில் தங்க அதே ஓட்டலில் உமா மகேஸ்வரனும் வந்து தங்கினார்.பம்பாயில் இருந்த இலங்கை தமிழ் இளைஞர்கள் எங்களுக்கு பலவித உதவிகள் செய்தார்கள். சென்னையிலிருந்து டேவிட் ஐயா சித்தார்த்தனும் என நினைக்கிறேன் மும்பை வந்தார்கள். விடியற்காலையில் மும்பையிலிருந்து மட்டும்தான் மொரிசியசு விமானம் இருந்தது, அவர்கள் மொரிஷியஸ் பயணமானார்கள். உமாமகேஸ்வரன் லெபனானில் இருந்து கொண்டு வந்திருந்த பல பொருட்களை சென்னையில் கொடுப்பதற்காக நான் சென்னை பயணம் செய்ய முயன்றபோது, எந்த ரயில் டிக்கெட்டும் கிடைக்கவில்லை,கடைசியில் பெங்களூருக்கும் மும்பையில் இருந்து பஸ் டிக்கெட் கிடைத்தது. கிட்டத்தட்ட முப்பது மணி நேர பஸ் பயணம். நான் பெங்களூர் வந்த போது பெங்களூரில் காவேரி பிரச்சனை சம்பந்தமாக தமிழருக்கு எதிராக பெரிய கலவரம்.அங்கிருந்து எந்த ஒரு பஸ்ஸும் தமிழ்நாட்டுக்கு ஓடவில்லை. கிட்டத்தட்ட மூன்று நாள் அங்கு தங்கியிருந்து,கலவரம் ஓரளவு அடங்க தமிழ்நாட்டுக்கு சில பஸ்கள் விட்டார்கள் அதில் நான் சென்னை வந்து சேர்ந்தேன். சென்னையில் 2 நாள் இருந்து விட்டு திரும்ப புதுடில்லி போய்ச் சேர்ந்தேன்.

தொடரும்.



பகுதி 23

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்

84 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லண்டனிலிருந்து சித்தார்த்தன் டெல்லி விமான நிலையம் மூலம் இந்தியா வந்தார். அதேநேரம் உமா மகேஸ்வரனும், காந்தளகம் சச்சிதானந்தன் ஐயாஉம் டெல்லிவந்தார்கள் இவர்கள் எல்லோரும் எல் கனேசன் எம்பியின் வீட்டில் தான் தங்கினார்கள்.சச்சிதானந்தன் ஐயா தனக்குத் தெரிந்த வெளிநாட்டு தூதரகங்களை அறிமுகப்படுத்தஉமா மகேஸ்வரனைஅழைத்து வந்திருந்தார்.இது சம்பந்தமாக நான் முன்பு போட்ட ஒரு பதிவை இதோடு தொடர்ச்சியாக போடுகிறேன்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் சார்பாக நான் தில்லியில் பொறுப்பாளராக இருந்தபோது

1984 ஜனவரி 27. உமாமகேசுவரன் சென்னையில் இருந்து விமானத்தில் வந்தார். வரும்பொழுது ஐ.நா சபை ஆலோசகர், மறவன்புலவு க. சச்சிதானந்தனையும் அழைத்து வந்தார். திமுக தஞ்சாவூர் நாஉ எல். கணேசன் இல்லத்தில் இருவரும் தங்கினர்.

அப்பொழுதுதான் முதல் முதலாக இலண்டனில் இருந்து சித்தார்த்தன் தில்லிக்கு வந்திருந்தார்.

மறவன்புலவு க. சச்சிதானந்தன் தில்லியில் உள்ள தூதரகங்களுக்கு எம் மூவரையும் அழைத்துச் சென்றார். அவருக்குத் தூதரகங்கள் பலவற்றில் நண்பர்கள் இருந்தனர்.

மொரிசியசுத் தூதரகத்தில் மூத்த அலுவலர் பொன்னுசாமிதமிழர். மறவன்புலவு க. சச்சிதானந்தனின் நண்பர். அவருக்கு அறிமுகமானோம். உமா மகேசுவரன், சித்தார்த்தன், டேவிட் ஐயா, கிருட்டிணண்,லண்டண்முரசு சதானந்தன்யாவரும் சில மாதங்களின் பின்னர் மொரிசியசு செல்வதற்கு இந்தச் சந்திப்பு உதவியது. மொரிசியசில் பிரதமர் முதலாக அனைத்துத் தலைவர்களையும் சந்தித்து வந்தார்கள். நிதியும் பெற்று வந்தார்கள் அங்குள்ள தமிழர்களின் ஆதரவையும் பெற்று வந்தோம். இன்று வரை மொரிசியசு அரசும் அங்குள்ள தமிழ் மக்களும் ஈழத் தமிழருக்கு ஆதரவுக் குரல் கொடுப்பதற்குத் தொடக்கப் புள்ளி தில்லித் தூதரகச் சந்திப்பே.

தில்லியில் தெற்கு ஏமன் நாட்டுத் தூதரகத்துக்கும் சென்றோம். தெற்கு ஏமன் அரசு அழைத்து ஏற்கனவே தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் சம்பந்தன், சந்திரகாசன் இருவரும் சென்று வந்தனர். ஒரு வாரம் தங்கி அங்கு குடியரசுத் தலைவர் முதலானோரைச் சநதித்து வந்திருந்தனர். மறவன்புலவு க. சச்சிதானந்தன் இந்தச் சந்திப்புகளை ஒழுங்கு செய்ததால், உமா மகேசுவரனும் தெற்கு ஏமன் செல்ல விரும்பினார்.

தூதரகச் சந்திப்புகளின் பின்னர் தில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சுக்கு உமாமகேசுவரன், சித்தார்த்தன், நான், மறவன்புலவு க. சச்சிதானந்தன் நால்வரும் சென்றோம்.

இலங்கை, மாலைதீவு, வங்காளதேசம் என மூன்று நாடுகளுக்கும் பொறுப்பான உதவிச் செயலாளர் மீரா சங்கர். பிரதமர் இந்திரா காந்திக்கு நெருக்கமானவர். உரிய ஆலோசனைகளை நேரடியாகப் பிரதமருக்குக் கூறுபவர். இலங்கை தொடர்பான தகவல்களைத் தன் விரல் நுனியில் வைத்திருப்பவர். அச்சுவேலிக்கும் ஆவரங்காலுக்கும் இடையே உள்ள தொலைவு எவ்வளவு எனக் கேட்டால் உடனே சொல்வார். அவரை நான் பல மாதங்களாகச் சந்தித்து வருபவன். எனவே இவர்கள் மூவரையும் அவரிடம் அழைத்துச் சென்றேன்.

மூவரையும் அவர்களுக்கு அறிமுகம் செய்தேன். முதலில் உமா மகேசுவரன் பேசினார்.

போராளிக் குழுக்களுள் நாங்களே பெரிய இயக்கமாக உள்ளோம். இந்தியாவுக்கு நம்பிக்கையாய் இருப்போம். தமிழீழ விடுதலைக் கழகத்துக்கு ஆயுதங்கள் தாருங்கள், நிதி தாருங்கள். இவ்வாறு உமா மகேசுவரன் மீரா சங்கரிடம் கேட்டார். மீரா சங்கரும் அவர் கூறியதை மிக கவனமாகக்கேட்டார்.

பின்னர் மறவன்புலவு க. சச்சிதானந்தனின் கருத்தைக் கேட்டார் மீரா சங்கர்.

400 ஆண்டுகளாக ஆயுதங்களை அறியாதவர் நாங்கள். போர்த்துக்கேயரிடம் தோற்றபின் எம்மக்கள் ஆயுதங்களைத் தொடவே இல்லை. உழவும் தச்சும் கம்மாலையும் அவர்களுக்கு ஆயுதங்கள் எனினும் புத்தகங்களையே சார்ந்த அறிவையே மிகப் பெரிய ஆயுதமாகக் கொள்பவர்கள்.

அவர்களிடம் போருக்கான ஆயுதம் கொடுத்தால் விளைவுகள் வேறாக இருக்கும். அதுவும் ஈழத் தமிழ் இளைஞர்கள் வீறு கொண்டவர்கள். சீக்கியர்கள் எப்பொழுதும் கிர்பானுடன் இருப்பவர்கள் எனினும் வன்முறை அவர்கள் வாழ்வல்ல. ஆனால் ஈழத் தமிழர்கள் அத்தகையவர்களல்ல. ஆயுதங்களைக் கொடுத்தால் தமக்குள் மோதுவார்கள். வேலி எல்லைகளுக்காக நீதிமன்ற வழக்குக்குப் போகும் மனப்பாங்குச் சமூகம் நாங்கள். சிறிய சிக்கல்களைப் பெரிய மோதல்களாக்குவோம். ஆயுதம் கொடுத்தால் இவர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு தாங்களே அழிந்துவிடுவர்கள்.

ஏற்கனவே பஞ்சாப்பில் இந்தியாவுக்குக் கசப்பான அநுபவங்கள். ஈழத்தைத் தாண்டித் தமிழ்நாட்டிலும் ஈழத்து இளைஞர் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம். தமிழ்நாடும் பஞ்சாப்பாக மாறிவிடக் கூடும். எனவே ஆயுதங்களைக் கொடுக்காதீர்கள்.

இவ்வாறு சொன்னார் மறவன்புலவு க. சச்சிதானந்தன்.

மீராசாங்கர் திகைப்புடன் கேட்டார், இவர்களுக்கு முன்னாலேயே இப்படிக் கூறுகிறீர்களே?

உடனே சச்சி அண்ணா, தம்பிமார் என்னிலே கோபப்படமாட்டார்கள். அவர்களடம் தொடர்ந்து இதையே கூறி வருகிறேன் அவர்களும் இதைப்பற்றிச் சிந்திக்கவேண்டி வரும் எனக் கூறினார்.

என்னதான் தீர்வுக்கு வழி எனக் கேட்டார் மீரா சங்கர்.

இந்தியாவுக்குத் தெரியாத வழிகள் இல்லை. புலமையும் ஆற்றுலும் நிறைந்தவர்கள் நீங்கள். அமெரிக்காவின் கென்னடி கியூபாவின் காஸ்ரோவை வழிக்குக் கொண்டுவர என்ன செய்தார் என்பதை அறியாதவரல்ல நீங்கள். இலங்கையைச் சுற்றிய வளையத்தில் உங்களைக் கேட்காமல் யார் போக முடியும்? பொருளாதாதரத் தடைகளே இலங்கையை வழிக்குக் கொண்டுவரும். கத்தியின்றி இரத்தமின்றிக் கென்னடி காரியத்தை முடித்தாரல்லவா? இந்தியவுக்குத் தெரியாத வழிகளா? என்றார் மறவன்புலவு க. சச்சிதானந்தன்.

பின்னாட்களில் சித்தார்த்தன் இலண்டனில் இருந்து இந்தியா வருவதற்குப் பலமுறை விசா ஒழுங்கு செய்து கொடுத்தவர் .மீரா சங்கரே. சித்தாத்தர் இலங்கை பாஸ்போர்ட்டில் பல வருடங்களாகலண்டன் மாணவர் விசாவில் இருப்பவர்.அவருக்கு லேசில் இந்திய விசா கொடுக்க மாட்டார்கள் அவர் எனக்கு அறிவிக்க நான் போய்மீரா சங்கரிடம் சித்தார்த்துடன் விபரம் கூறி விசாவுக்கு உதவி செய்யும் படி கேட்பேன் அவரும் உடனடியாக ஏற்பாடு செய்து கொடுப்பார்.அண்மையில் அமெரிக்காவில் இந்திய தூதுவராக இருந்தவர் மீரா சங்கர்.

சென்னையிலிருந்து இந்திய பயிற்சிகள் எடுக்க எமது இயக்கமும் மற்றிய இயக்கங்களும் தமது இயக்கத் தோழர்களை அனுப்புவது நடந்து கொண்டிருந்தது. இது சம்பந்தமான செய்திகளும் எனக்கு கிடைத்துக் கொண்டிருந்தன. இதேநேரம் நாங்களும் லெபனானில் நடைபெற்ற PFLP பயிற்சிக்கு எமது தோழர்களை அனுப்பிக் கொண்டிருந்தோம். 1985 ஆம் ஆண்டு வரை டெல்லி ஊடாக கிட்டத்தட்ட அறுபது தோழர்களை அனுப்பியுள்ளேன். முதல் முறை கஷ்டப் பட்டது போல் பிறகு கஷ்டப் பட வில்லை. 10 பேர், ஐந்து பேர் எனபிரித்து தான் அனுப்பியுள்ளோம். லண்டனிலிருந்து நியூடெல்லி டமாஸ்கஸ் ( சிரியா) லண்டன்/டமாஸ்கஸ், டெல்லி சிரியன் ஏர் லைன்ஸ்ரிட்டர்ன் டிக்கெட் வரும்..எத்தனை டிக்கெட் வருதோ அதற்கான தோழர்களை சென்னையிலிருந்து அனுப்புவார்கள். அவர்கள் டெல்லி வந்த பின்பு அவர்களது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்து இலங்கை கள்ள பாஸ்போர்ட் செய்து அவர்களை அனுப்புவோம். டெல்லியில் இருந்த ஒரு இலங்கை நண்பர் அவர் எமக்கு தேவையான பாஸ்போர்ட் சேவை தேவைகளை ஒரு ஒரு ரூபாய் கூட வாங்காமல் இலவசமாகவே செய்து கொடுத்தார். பணம் கொடுத்தாலும் வாங்க மாட்டார்.அவர் கூறுவார் எங்களது ஈழப்போராட்டத்தில் இதன் மூலம் தனது சிறு உதவியும் சேரட்டும் என்று. இவரின் உதவியும் மற்றும் பலரின் உதவியும் எமது வெளிநாட்டு பயிற்சி எடுப்பதற்கு உதவி புரிந்தன என்றால் மிகையாகாது.

நாங்கள் கள்ள பாஸ்போர்ட்டில் தோழர்களே அனுப்புவதாலும்,அவர்கள் அதே பாஸ்போர்ட்டில் திரும்ப வரும்போதும் டெல்லி ஏர்போர்ட்டில் பிரச்சினையில் இருக்கக்கூடாது என்பதற்காக, நான் முதல் நாளே போய் ஜி பார்த்தசாரதி அய்யாவிடம் போய் உண்மையான விபரத்தைக் கூறி,அவர்கள் பயிற்சிக்கு போகும்போதும் பயிற்சி முடிந்து வரும் போதும் ஏர்போர்ட்டில் பிரச்சினை வராமல் இருக்க உதவி கேப்பேன். அவரும் சிரித்துக் கொண்டே உங்களால் ரொம்ப பிரச்சனை என திட்டி டெல்லி ஏர்போர்ட் முதன்மை இமிகிரேஷன் அதிகாரியுடன் பேசி என்னை போய் அவரை சந்திக்க சொல்வார்.எதுவும் பாஸ்போர்ட் பிரச்சனை வந்தால் முதன்மை இமிக்ரேஷன் அதிகாரி உடனடியாக உதவி செய்வார். அதை இன்று நினைக்க மிகவும் மலைப்பாகவும் அதிசயமாகவும் இருக்கிறது. இப்படியெல்லாம் எங்களுக்கு உதவிகள் கிடைத்ததா என்று.

தொடரும்.



பகுதி 22

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும

பாராளுமன்றம் கூட்டம் தொடங்கும் போது ராஜ்யசபாவில் எல் கணேசன் எம்பியும்,வை கோபால்சாமி எம்பியும் திமுக சார்பில் இலங்கை பிரச்சினை பற்றி பேச நோட்டீஸ் கொடுத்து விடுவார்கள். இலங்கைப் பிரச்சினை பற்றி பேசும் நாளன்று என்னையும் பாராளுமன்றம் அழைத்துப் போவார்கள். அப்படிப் போகும்போது எல். கணேசன் எம் பிஅவர்கள் வேறு பல பாராளுமன்ற உறுப்பினர்களையும் அறிமுகப்படுத்தி விடுவார். நான் டெல்லியில் இருந்த 1988 ஆண்டு ஒக்டோபர் மாதம்வரை இந்திய பாராளுமன்றத்தில் இலங்கை பிரச்சினை சம்பந்தமாக நடைபெறும் விவாத நேரங்களில் லோக்சபாவின் சரி, ராஜ்யசபாவில் சரி தமிழ்நாட்டுஎம்பிக்கள்என்னையும் , பார்வையாளராககட்டாயம் அழைத்து போய் இருக்கிறார்கள்.

1984 ஆண்டு நடந்த முக்கிய நிகழ்வு இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் மரணம். எனது நினைவுகளை ஓரளவு முடிந்தளவு வரிசைப் படுத்தி எழுதி வருகிறேன் அந்த வரிசைபடுத்தலை இன்று நிறுத்திவிட்டு இன்றைய திகதியில் முக்கியத்துவத்தை கருத்திற் கொண்டு நாம் முன்பு போட்ட பதிவை இத்துடன் இணைத்து விடுகிறேன்.

மறைந்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தில் எனது நேரடி நினைவுகள்

1984 ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி டெல்லியின் அன்று காலை பொழுது வழமைபோல் விடிந்தது. அந்தக் காலகட்டத்தில் டெல்லியில் என்னோடு சங்கர் என்ற தோழரும், கவிஞர் ஜெயபாலனும் தங்கி இருந்தனர் என நினைக்கிறேன். நாங்கள் தங்கியிருந்த இந்திய பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு L.கணேசன் அவர்களின் வீட்டிலிருந்து நான் தினமணி பத்திரிகை வாங்குவதற்காக காலை 10 மணிக்குகன்னாட் பிளேஸ்இடத்துக்குப் போய் இருந்தேன், அங்கு கடைகளை அடைத்து கொண்டும் மக்கள் பரபரப்பாக போய்க் கொண்டிருந்தார்கள்.என்ன விடயம் என்று விசாரித்தபோது பிரதம மந்திரி இந்திரா காந்தியை சுட்டு விட்டார்கள் என்று கூறினார்கள்.

ஒருவராலும் நம்ப முடியவில்லை நான் திரும்ப வீட்டுக்கு வந்த எல்லோரிடமும் கூறினேன் ரேடியோ தொலைக் காட்சியிலோ எந்த செய்திகளும் வரவில்லை. ஆனால் டெல்லி முழுக்க பரபரப்பாக இருந்தது. நான் தொலைபேசி மூலம் சென்னையில் இருந்த எமது தலைவர் உமாமகேஸ்வரன் இக்கு விடயத்தை கூறினேன் அவர் நம்பவில்லை.ஒரு மணி நேரம் கழித்து உமாமகேஸ்வரன் சென்னையிலும் பரபரப்பாக இருக்கிறது விஷயம் உண்மையாக இருக்கும் போல் தெரிகிறது. தான் மாலை விமானத்தில் டெல்லி வருவதாக கூறி என்னை ஏர்போர்ட்டுக்கு வரச் சொன்னார்.

டில்லியில் விஷயம் ஓரளவு கசிந்து இந்திரா காந்தி அம்மையார் மறைந்து விட்ட செய்தி அதிகாரபூர்வ வெளி வராவிட்டாலும்அவர் மறைந்த செய்து எல்லா இடமும் பரவிவிட்டது. டெல்லியில் எல்லா இடமும் சீக்கியமக்களை.,அடித்து உதைத்து கொலையும் செய்யத் தொடங்கிவிட்டார்கள் நாங்கள் இருந்த மிக பாதுகாப்பான பாராளுமன்ற உறுப்பினரும் குடியிருப்பில் வாடகைக்கு தங்கியிருந்த சீக்கிய குடும்பங்களையும் அடிக்கத் தொடங்கினார்கள். மணி நேரம் வரை அங்கு தங்கி இருந்த பல தமிழ் குடும்பங்கள் தமிழ் எம் பி மார் பல சீக்கிய குடும்பங்களுக்கு அடைக்கலம் கொடுத்து உணவு கொடுத்தார்கள்.

எல்லா இடமும் சீக்கிய குடும்பங்கள் பட்டபாடு சொல்லி மாளாது. 1977 ஆம் ஆண்டு 1981 ஆம் ஆண்டு நடந்த கலவரங்களின் போதுசிங்கள பகுதிகளில் தமிழ் மக்கள் பட்ட கஷ்டங்களை நான் நேரடியாகப் பார்த்தேன், அனுபவித்தேன். டெல்லியில் இந்தக் கலவரங்களை பார்க்கும் போது அதே நினைவுதான் வந்தது. இரவு 9 மணி போல் ஸ்கூட்டரில் டெல்லி பாலம் விமான நிலையம் போய் உமா மகேஸ்வரனை அழைத்து வந்தேன்.இருவரும் எப்படியாவது இந்திரா காந்தி அம்மையாருக்கு அஞ்சலி செலுத்துவது என முடிவு செய்து, ஜியி பார்த்தசாரதிக்கு போன் செய்தோம். அவர்தான் மிக பிஸியாக இருப்பதாகக் கூறி, அஞ்சலி செலுத்த விஐபி வரிசையில் வருவது கஷ்டம் என கூறினார்.பின்பு மனம் மாறி தனது செயலாளர் அய்யாசாமி போய்ப் பார்க்கும்படி கூறினார்.நாங்கள் இருவரும் ஜி பார்த்தசாரதி ஐயாவின் செயலாளர் அய்யாசாமி போய் பார்த்தோம் அவர் முன்பே எங்களுக்கு மிக நெருக்கமாக அறிமுகமானவர்.

அவர் இரவு 11 மணி போல் எங்களை அழைத்துக் கொண்டு போய் அதிகாரிகளிடம் கூறி விஐபி வரிசையில் எங்களை விட்டார்.நாங்கள் விஐபி வரிசையில் போய் அஞ்சலி செலுத்திவிட்டு வர முடிய காலை நாலு நாலரை மணி ஆகிவிட்டது. மனம் மிக வெறுமையாய் இருந்தது. உமாஅண்ணாவும் நானும் தூங்காமல் அடுத்து என்ன நடக்கும் எங்கள்போராட்டம் எந்த வழியில் போகும் என பல கதைகளைக் கதைத்து கொண்டே தூங்கி விட்டோம். அன்று பகல் சாப்பாட்டுக்கு மிக கஷ்டப்பட்டோம். டெல்லியில் கலவரங்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இரவு உமா மகேஸ்வரன் சென்னை பயணம்.

தொடரும்





பகுதி 21

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும

டெல்லியில் எனது வேலைகளை ஆரம்பித்து விட்டேன். முக்கியமாக தமிழ்நாட்டு எம்பி சந்திப்பதையும், டெல்லிப் பத்திரிகையாளர்களையும் சந்தித்து நட்பை வளர்த்துக் கொண்டேன பிடிஐ செய்தி நிறுவனத்தின் டெல்லி செய்தியாளர் சந்திரசேகர் எனது மிக நெருங்கிய நண்பராக விளங்கினார்.

இந்திய வெளிவிவகார இலாகாவில் பங்களாதேஷ் இலங்கை மாலத்தீவு பொறுப்பாளர துணைச் செயலாளர் திருமதி மீரா சங்கர் என்பவரை சந்தித்து தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டேன். இவர் பிற்காலத்தில் இந்தியாவின் அமெரிக்க தூதுவராக இருந்தார்.

எம்பி களில் குறிப்பிடத்தக்கவர் வாழப்பாடி ராமமூர்த்தி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், எங்கள் மீதும் போராட்டத்தின் மீதும் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமாயின், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தொழிற்சங்க தலைவராக இருந்தபடியால் பண்டிகை காலங்களில் குறிப்பாக தீபாவளி போன்ற தினங்களில், கட்சிக்காரர்கள் மற்றவர்கள் இவரிடம் கொண்டு வந்து இனிப்பு வகைகள் உலர் திராட்சை போன்ற பழவகைகள் பெட்டி பெட்டியாக கொடுத்து இருப்பார்கள்.அதை எடுத்து வைத்து என்னைக் கூப்பிட்டு அனுப்பி என்னிடம்கொடுப்பார். அதற்கு அவர் கூறும் காரணம் குடும்பத்தை விட்டு தாயை விட்டு ஒரு போராட்டத்துக்காக இவ்வளவு தூரம் வந்திருக்கும் உங்களுக்கு செய்வது எனக்கு தனக்கு ஒரு மன திருப்தி என்று கூறுகிறார். 1987 ஆம் ஆண்டுஇலங்கை இந்திய ஒப்பந்தம் பின்பு இன்றைய இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர் வீட்டில் தங்கியிருந்தார்

83 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் என நினைக்கிறேன் சென்னையிலிருந்து உமாமகேஸ்வரன் தொலைபேசி மூலம் தானும் ஓய்வு பெற்ற இலங்கை சுங்கத் துறை அதிகாரி விக்னேஸ்வரர் ராஜாவும் வெளிவந்து தமிழ்நாடு இல்லத்தில் திகதியை குறிப்பிட்டு வந்து தங்கப் போவதாகவும், இந்திய பிரதமர் இந்திரா காந்தியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது எனஅவர் கூறினார்.

லண்டனில் இருந்து வந்த சக்திதாசன் சென்னை போய் வந்து அப்போது லண்டன் போக என்னோடு தங்கியிருந்தார். உமாமகேஸ்வரன் டெல்லிக்கு வந்தவுடன் காலையில் போய் நானும் சக்திதாசன் அவர்களும் அவர்களை தமிழ்நாடு இல்லத்தில் சந்தித்து அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தோம். மாலை ஆறு முப்பது மணிக்கு இந்திய பிரதமர் இந்திரா காந்தியுடன் சந்திப்பு நடக்க இருந்தது. நானும் சக்திதாசன் போய் விலைகூடிய மலர் கொத்து வாங்கிவந்து உமாமகேஸ்வரன் இடம்கொடுத்தோம்.

அவர்கள் போய் பிரதம மந்திரியை சந்தித்து விட்டு வரும் வரை காத்திருந்தோம். அவர்கள் வந்த பின்பு முழு விபரங்களையும் அறிந்தோம் பதினைந்து நிமிட சந்திப்பு. உமா மகேஸ்வரன் பேசியதை இந்திரா காந்தி அம்மையார் கவனமாகக் கேட்டு கொண்டாராம். அதோடு இலங்கையில்நடக்கும் விஷயங்கள் மிகவும் கவலையளிப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவும் உன்னிப்பாக கவனிக்கிறது என்று கூறினாராம். சந்தடி சாக்கில் உமா மகேஸ்வரனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்,(பிளாட்) தான் பெரிய இயக்கம். நாங்கள் என்றும் இந்திய நாட்டுக்கு உதவியாக செயல்படுவோம்.எங்களுக்கு கூடிய அளவு பயிற்சியும் ஆயுதமும் தேவை எனக் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பை ஏற்பாடு செய்து கொடுத்தவர் தமிழக முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர். எம்ஜிஆருக்கும் இந்திரா காந்தியின் முதன்மைச் செயலாளர் அலெக்சாண்டர் ருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. அப்போது எம்ஜிஆர் உமா மகேஸ்வரன் கலைஞர் ஆதரவு நிலை எடுக்க கூடாது என்பதற்காக வே உமா மகேஸ்வரனை தன் பக்கமே வைத்திருக்க பிரதம மந்திரியின் சந்திப்பை ஏற்படுத்தி கொடுத்ததாக அறியக்கூடியதாக இருந்தது.

இந்திரா காந்தியை சந்தித்தவர்களில் அமிர்தலிங்கத்தை தவிர ஆயுதக்குழுக்களின் தலைவர்களில் உமா மகேஸ்வரன்மட்டுமே இந்த வாய்ப்பு கிடைத்ததாக அறியக்கூடியதாக இருந்தது. பிற்காலத்தில் IB உளவுத்துறைஉயரதிகாரிகள் பேசும்போது இப்படியான வாய்ப்பை எல்லாம் பெற்ற உங்கள் உங்கள் இயக்கமும் தலைவரும் எப்படி எல்லாம் சிதறி, கடைசியில் இலங்கை பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் வலையில் எப்படி விழுந்தார். எனக்கூறி கவலைப்பட்டார்கள்.

தொடரும்.




பகுதி 20

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்

நான் சிறையில் இருந்த நேரத்தில்

இந்திய பாராளுமன்றம் கூடியபோது 1/12/1983 ராஜ்யசபாவில் என்னை உடனடியாக விடுதலை செய்யும்படி வை கோபால்சாமி காரசாரமாக பேசியுள்ளார். அவருக்கு ஆதரவாக M.கல்யாணசுந்தரம் எம் பி யும்பேசியுள்ளார். இலங்கை ஜனாதிபதி ஜெயவர்தனா இலங்கை போன பின்பு, எனது டெல்லி நண்பர்கள், நவரட்ணம் எம் பி ,யோகேஸ்வரன் எம்பி வக்கீலை பிடித்து என்னை ஜாமீனில் எடுத்தார்கள். 5000 ரூபாய் ஆள் பிணை. வங்கியில் வேலை செய்த எனது இந்திய நண்பர் வெற்றிச்செல்வன் தனது தகுந்த விபரங்களைக் கொடுத்து ,எனக்காக பிணை நின்றார். ஒரு பலனையும்எதிர்பாராமல் பயப்படாமல் அந்த காலத்தில் இவர்செய்த உதவி பெரியது.

இரவு 8 மணிக்கு போல் தான் என்னை. சிறையிலிருந்து வெளியில் விடுதலை செய்தார்கள்.என்னை வரவேற்க யோகேஸ்வரன் எம்பி மாவை சேனாதிராஜா மற்றும் டில்லி நண்பர்கள் சித்தார்த்தன் சம்பத் போன்றவர்கள் வந்திருந்தார்கள். மாவை சேனாதிராஜா எனக்கு ஒரு மாலையும் போட்டார். கையோடு ஒரு கேமராவும் கொண்டுவந்து மாலையோடு நின்ற என்னோடு தனித்தனியாகவும் யோகேஸ்வரன் மாவை சேனாதி சேர்ந்தும் பல போட்டோக்கள் எடுத்துக் கொண்டார்கள். பின்பு இவர்கள் இந்தப் படங்களை தங்கள் பிரச்சாரத்துக்காக பயன்படுத்திக் கொண்டதாக அறிந்தேன். இலங்கைப் பத்திரிகைகளில் இவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணி இலங்கை விடுதலை இயக்கங்களுடன் மிக நெருங்கிய உறவில் நிற்பதாக வும்,விடுதலை இயக்கங்களுக்கு உதவிகள் செய்வதாகவும் இப்படத்தின் மூலம் விளம்பரப் படுத்திக் கொண்டார்கள்.

பின்பு அவர்கள் என்னை எல் கனேசன் எம்பியின் வீட்டில் விட்டு விட்டு போய்விட்டார்கள். நானும் இதோ வீர சாகசம் செய்த மாதிரி நினைத்துக் கொண்டு, சென்னையில் இருந்த உமா மகேஸ்வரன் இடம் சிறையில் இருந்து வந்து விட்டேன் எனக் கூறினேன். அவரும் சரி சரி அடுத்த வேலைகளை அதாவது சந்திக்க வேண்டியவர்களைசந்திக்க அடுத்த லெபனான் பயிற்சி குழுவை அனுப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யும்படி கூறினார். உடன் எனக்கு டெல்லி பிரதிநிதி என போட்டோ அடையாள அட்டை அனுப்புவதாகவும் கூறினார். அதோடு தனது விசிட்டிங் கார்டில் எனது பெயரை போட்டு அனுப்புவதாகவும் கூறினார்.

நான் ஜெயிலுக்குப் போயிட்டு வந்த பின்பு தமிழ்நாட்டு எல்லா எம்பிக்களும் என்னை சந்திக்க விரும்பினார்கள். சரியாக முகம் கொடுத்து பேசாத முரசொலி மாறன் எம்பி அதன் பிறகு தனது வீட்டுக்கு வரச்சொல்லி அடிக்கடி இலங்கை பிரச்சினைகள் பற்றிய விபரங்கள் எல்லாம் கேப்பார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வாழப்பாடி ராமமூர்த்தி திமுக பாராளுமன்ற குழு தலைவர் தண்டபாணி எம்பி அண்ணா திமுக ராஜ்யசபா எம்பிக்கள் குழு தலைவர் மோகனசுந்தரம்மற்றும் பல எம்பிக்கள் நினைவில் வரும் போது அவர்களின் பெயர்களை கட்டாயம் குறிப்பிடுவேன். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கருப்பையா மூப்பனார், திண்டிவனம் ராமமூர்த்தி போன்றவர்கள் என்னை சந்தித்து இலங்கை நிலவரம் அறிய ஆர்வம் காட்டியவர்கள். பின்பு நான் ஜி. பார்த்தசாரதி இடம் அவர் செய்த உதவிக்குநன்றி சொன்னேன். அவரும் பிரச்சினைகள் வரக்கூடிய வேலைகளை இனிமேல் செய்யாதே. அன்று எம்பஸ்ஸி உள்ளுக்குள் உன்னை கைது செய்திருந்தால் எங்களால் எதுவும் செய்திருக்க முடியாது எனக்கூறி இன்னும் சில அறிவுரைகளையும் கூறினார்.

எனது வழக்கு இழுத்துக் கொண்டு போக கூடாது என்பதற்காக, காரணம் எனக்கு பிணை நின்ற வங்கி ஊழியர் வெற்றிச்செல்வன் பாதிக்கப்படக்கூடாது. வை கோபால்சாமி உள்துறை அமைச்சரிடம் வழக்கை வாபஸ் வாங்கும்படி பலமுறை கூறியும் நடக்கவில்லை. கோபால சாமியின் நண்பர் உள்துறை இணை அமைச்சர் பல முயற்சிகள் எடுத்த, பின்பு எங்கள் லண்டன்சித்தார்த்தன், சென்னையிலிருந்து டெல்லி வந்து, அவரும் டெல்லி நண்பர் சம்பத்தும் சேர்ந்து சிறந்த அட்வகேட் ஒருவரை பிடித்து வெற்றிகரமாக வழக்கைமுடித்து விட்டார்கள். இந்த கைது விவகாரம் டெல்லியில் எனது இயக்க சந்திப்புகளுக்கு மிகப்பெரும் துணையாக இருந்தது என்பதும் மறுக்க முடியாது.

தொடரும்.

நான் 1983இல் கைது செய்யப்பட்ட போது என்னை விடுதலை செய்யும்படி இந்திய பாராளுமன்றத்தில் வைகோ எம்.பி, கலியாணசுந்தரம் எம்.பி யும் பேசியது225 Re. release of [1 DEC. 1983 ] Tamil Youth 226

Amendment) Rules, 1983. [Placed

in Library. See No. LT—7186/83 for

(i) and (ii) ].

SHRI V. GOPALSAMY (Tamil

Nadu): Sir, I have a submission to

make.

MR. CHAIRMAN: Just a minute.

There are other matters now.

REFERENCE To THE DEMAND FOR

THE RELEASE OF THE TAMn,

YOUTH ARRESTED WHILE DISTRIBUTING

PAMPHLETS IN DELHI

SHRI V. GOPALSAMY (Tamil

Nadu): Sir, I want to make a submission.

A Tamil youth Vetriselvan who

was distributing some pamphlets

against the atrocities, tiie crime of

genoside committed by the present

regime in Sri Lanka has been arrested

and he has been manhandled and

assaulted by the police. What is the

crime he has committed? Is it a crime

to distribute pamphlets in this country?

Are we living in a democracy

or under a dictatorship? (Interruptions)

. You have given a red-carpet

welcome to the butcher of Tamils, Mr.

Jayewardene, here. On the other

hand, a Tamil youth, who wanted to

distribute some pamphlets, has been

arrested and assaulted. Sir, if Mr.

Jayewardene, were to land in Britain,

the MPs. there would have shown him

black flags. But you have given a

red-carpet welcome herel But, Sir,

a Tamil youth has been arrested and

assaulted. He has not committed any

cognizable offence. (Interruptions).

\ It is a very serious matter and thishas

caused serious concern and resentment

in the minds of the Tamils. I

I would, therefore, request the Govern-

1 ment to release him immediately and

227 Calling Attention [RAJYA. SABHA] to a matter of <&#

, Urgent Public Importance

[Shri V. Gopalsamy]

also to make a statement. This is a

very serious matter.

(Mr. Deputy Chairman in the Chair)

MR. DEPUTY CHAIRMAN: All

right. We now go t0 the Calling-

Attention Motion.

REFERENCE TO THE DEMAND OF

SATEMENT ON THE DISCUSSION

HELD WITH THE SRI LANKA

PRESEDENT

SHRI M. KALYANASUNDARAM

(Tamil Nadu): Sir, apart from joining

my friend, Mr. Gopalsamy, in

demanding the release of the arrested

person, may I make a request to

the Government through you that the

External Affairs Minister should

make statement? 1 am making this

request because important discussions

have been held with President

Jayewardene. Whatever may

be our attitude to his visit here, the

discussions have taken place even at

the highest level, wilh the Prime

Minister, on the Sri Lanka Tamils

issue. We have been raising this very

often. So, Sir, may I make a request

to the Government through you that

the External Affairs Minister should

make a statement on the outcome of

the discussions that were held here

so that the country may know what

attitude we should take further.

LEAVE OF ABSENCE TO SHRI

SADASHIV BAGAITKAR—(Contd.)

THE DEMAND FOR THE RELEASE

OF THE TAMIL YOUTH ARRESTED

WHILE DISTRIBUTING PAMPHLET IN

DELHI—(Contd.)

it is no crime. They should be released.

That is one thing. The

second thing is that a statement

should be made. (Interruptions). .

They should be released. (Interruptions).

SHRI V. GOPALSAMY: Sir, he

should be released. (Interruptions).

SHRI JAGDISH PRASAD

MATHUR: That is what I have said

just now. (Interruptions).

SHRI V. GOPALSAMY: You are

playing with fire. Don't play with

fire. (Interruptions).

MR. DEPUTY CHAIRMAN; We

shall now go to the Calling-Attention

Motion.

CALLING ATTENTION TO A MATTER

OF URGENT PUBLIC

IMPORTANCE

மாவை சேனாதிராஜா உடன் அடுத்த படம் டெல்லி நண்பர் சித்தார்த்தன்

அடுத்த படம் யோகேஸ்வரன் எம்பி

அடுத்து லண்டன் சித்தார்த்தன்

என்னது வழக்கு FIR முன்பக்கம் மட்டும்

வழக்கு முடிக்கப்படும் நோட்டீஸ்

எனது அடையாள அட்டை







பகுதி 19

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்

நான் போலீஸ் நிலையத்தில் இருக்கும் போது,நான் தங்கியிருந்த எல் கணேசன் எம் பி யின் வீட்டுக்கு இன்ஸ்பெக்டர் போன் பண்ணி எனது டெல்லி நண்பர் சித்தார்த்தன் இடம் நான் கைது செய்யப்பட்ட விபரத்தை கூறி என்னையும் பேசச் சொன்னார். நானும் ஒரு பிரச்சினையும் இல்லை யோசிக்க வேண்டாம் என கூறினேன். சித்தார்த்தன் தான்அடுத்த நாள் காலையில் வந்து பார்ப்பதாக சொன்னார்.

இரவு முழுக்க தூங்க முடியாத படி சரியான குளிர், யோசனை. காலையில் 5 மணிக்கு சுடச்சுட டீ கொடுத்தார்கள். காலை7:00மணிபோல் டெல்லி நண்பர்கள் சித்தார்த்தன், சம்பத், பேங்க் வெற்றிச்செல்வன் அவர்களுடன் கூட ஒருத்தரும் என்னைப் பார்க்க வந்திருந்தார்கள்.

கூட வந்திருந்தவர் அண்ணா திமுகவை சேர்ந்த கோபிசெட்டிபாளையம் பாராளுமன்ற உறுப்பினர் திரு சின்னசாமி அவர் வக்கீலும் கூட. அந்த மாநாடு நடக்கும் நேரத்தில் பார்லிமென்ட் இல்லாததால் எங்களுக்கு வேண்டிய எல் கனேசன் ,வைகோ , கல்யாணசுந்தரம்போன்ற எம்பிக்கள் எல்லாம்ஒரு ஊருக்குப் போய் இருந்திருக்கிறார் கள். அண்ணா திமுக வின் முதல் எம்பி மாயத்தேவர் இவர் பின்பு திமுகவுக்கு மாறிவிட்டார். இவர் டெல்லியில் இருந்தபடியால் இவரிடம் போய் சித்தார்த்த நண்பர்கள் விஷயத்தை சொல்லி போலீஸ் நிலையம் வரச் சொல்லியிருக்கிறார்கள். அவர் தனக்கு ஏர்போர்ட், பாராளுமன்றம், தனது எம்பி குவாட்டர்ஸ் இம்மூன்றும் தான் தெரியும் என்று கூறி வர மறுத்து விட்டாராம். முன்பு முதன்முறை எல் கணேசன் எம்பி உடன் டெல்லி வந்தபோது திமுக பாராளுமன்ற அறையில் இவரை சந்தித்திருக்கிறேன் அப்பொழுது அவர் என்னிடம் இலங்கையில் ஒரு 10 ஆயிரம் தமிழர்கள் இருப்பார்களா என கேட்டார். நான் இல்லை 35 லட்சம் தமிழர்கள் இருப்பதாக கூறினேன். அவருடன் இந்தியாவிலிருந்து போனவர்கள் தானே என்றார்.நான் இல்லை என்று கூறி அங்கு நடக்கிற எனபிரச்சினை கொலைகளைப் பற்றி விபரமாக கூறினேன். எல்லாத்தையும் கேட்டுட்டு கடைசியாக ஒரு வார்த்தை சொன்னார். அப்ப நாங்க பப்ளிக் மீட்டிங்ல தமிழனை கொல்கிறான் ,வெட்டுகிரான் என்று பேசுவதெல்லாம் உண்மைதான் போல என்று கூற, பக்கத்தில் இருந்த மற்ற எம்பி கள் பேசாமா சும்மா இருங்க என்று கூறிஅவரை தடுத்து விட்டார்கள். கழுத்தில் ஒரு கர்ச்சீப் போட்டு இருப்பார். கால் சட்டைப் பையில் விஸ்கி பாட்டில் இருக்கும் நடந்து போகும்போது பெரிய மரங்களுக்குப் பின்னால் நின்று குடித்துவிட்டு தான் போவார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கின் விபரத்தை அவர்களிடம் விலக்கிவிட்டு மாநாடு முடியத்தான் ஜாமீன்எடுக்கலாம் என்று கூறினார். அவர்களும் எனக்கு டீயும், காலைச் சாப்பாடு வாங்கி கொடுத்துவிட்டு போனார்கள். டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டுக்கு கொண்டு போவதற்கு வாகனத்தை எதிர்பார்த்திருந்தார்கள். மாநாட்டு பாதுகாப்புக்காக வாகனங்கள் போனதால் வாகனம் கிடைக்கவில்லை. உடனே எனது, கையிலும் காலிலும் சங்கிலி வைத்துப் பூட்டி ஒரு போலீஸ்காரர் தனது கையில் சங்கிலியைப் போட்டுக் கொண்டார்

துப்பாக்கி ஏந்திய நாலு போலீஸ்காரர் பாதுகாப்பில் நடந்து போய் கோர்ட்டுக்கு பஸ்ஸில் போனோம். எல்லாம் மக்களும் எனது கோலத்தை பெரும் பயங்கரவாதி போல என்று பயத்துடன் பார்த்தார்கள். எனது வழக்குபின்னேரம் 3 மணிக்கு நடந்தது . 15 நாள் ரிமாண்ட்பண்ணிவிட்டார்கள். பகல் உணவு ரெண்டு சப்பாத்தி. இரவு சாப்பாட்டுக்கு நான்கு சப்பாத்தி கிழங்கு கறி பார்சல் கட்டி தந்தார்கள். மாலை ஆறு மணி போல் வரிசையாக ஐந்துக்கு மேற்பட்ட பெரிய பஸ்களில் நான் உட்பட எல்லா குற்றவாளிகளையும் ஏற்றிக்கொண்டு, ஆசியாவின் மிகப் பெரிய சிறைச்சாலை திகார் ஜெயிலுக்கு கொண்டு போனார்கள், இரவு எட்டு மணியாகிவிட்டது புதிதாகவந்தவர்களை டாக்டர் செக் பண்ணி, அதன் பின்பு போர்த்திக் கொள்ள ஒரு நாத்தம் புடிச்ச ஒருகம்பளி போர்வையும் கொடுத்து வெளிநாட்டு கைதிகள் தங்கியுள்ள சிறையில் என்னை அடைத்தார்கள்.

.. அன்றைய தேதி 24/11/1983. நான் அடைக்கப்பட்டிருந்த வெளிநாட்டினர் சிறையில் இலங்கை கொழும்பு தமிழர், சிங்களவர், பல வெளிநாட்டவர் உட்பட, அதில் முக்கியமானது ஆப்கான் புரட்சிப் படையை சேர்ந்தவர்கள். அவர்கள் அங்கு தனி ராஜ்ஜியமே நடத்திக் கொண்டிருந்தார்கள். அன்று காலை பத்திரிகைகளில் என்னை பற்றிய செய்திகள் வந்து இருந்தபடியால்,என்னை அந்த ஆப்கான் விடுதலை வீரர்கள் மரியாதையாக நன்றாக நடத்தினார்கள். ஜெயிலர் கள் கூட அவர்களுக்குப் பயம். கிட்டத்தட்ட 10 பேர் இருந்தார் கள். அவர்கள் அங்கேயே சமைத்து சாப்பிடுவார்கள் தினசரி அவர்களுக்கு வெளியிலிருந்து இறைச்சி வரும்.முதல் இரண்டு நாட்கள் எனக்கும் கொடுத்தார்கள் பின்பு நான் சிறை நிர்வாகம் கொடுக்கும் உணவு சாப்பிட்டேன். இந்த ஆப்கான் காரர்கள் வெள்ளைக்காரர்களை தான் தங்களது வேலைக்காரராக வைத்திருந்தார் கள். டாய்லெட்கழுவுவது.சமையல் எடுபுடி அவர்களுக்கு கை கால் பிடித்து விடுவது எல்லாம் வெள்ளைக்காரர்கள் தான். ஆப்கான் காரர்கள்தாங்கள்சாப்பிட்டு மிச்சம் இருக்கும் இறைச்சிகளை அவர்களுக்கு கொடுப்பார்கள். எமது சிறைக்குள்ளேயே சிகரெட், அபின் போன்ற பொருட்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கும். நான் சிறையில் இருக்கும்போது V.N நவரட்ணம், யோகேஸ்வரன் ஆகியோர் இரண்டு தரம் வந்து என்னை பார்த்தார்கள். நவரட்ணம் யோகேஸ்வரன் தங்களது இலங்கைஎம்பி என்ற விசிட்டிங் கார்டை கொடுத்து சீப் ஜெயில்லரிடம் நன்றாக பேசி விட்டுப் போயிருக்கிறார்கள். அவர்கள் போகும்போது நவரட்ணம் எம் பி தனது மூக்கு கண்ணாடியை அங்கு மறந்து விட்டுப் போயிருக்கிறார்

பின்பு அதைப் பார்த்த ஜெயில இலங்கை என் பசிக்கு போன் செய்து இப்படி இலங்கை எம்பிகள் இங்கு வந்தார்கள் போகும்போது கண்ணாடியை மறந்து விட்டு விட்டு போயிருக்கார் அவர்களிடம் கூறும்படி கூறியிருக்கிறார். இவர்களின் பெயரை கேட்ட இலங்கை என் பசி காரர்கள் ஜெயிலர் இடம் அப்படி யாரும் எம்பி இல்லை அவர்கள் உங்களை ஏமாற்றி இருக்கிறார்கள் என்று கூறி போனை வைத்து விட்டார்களாம். அடுத்த முறை அவர்கள் என்னை பார்க்க வரும்போது ஜெயிலர் முழு விபரங்களையும் விசாரித்திருக்கிறார். அவர்கள் இலங்கைப் பிரச்சினை பற்றிய விபரங்கள் தாங்கள் இந்திராகாந்தியின் விருந்தினராக டெல்லியில் தங்கியிருப்பது போன்ற விபரங்களை கூறியிருக்கிறார்கள். ஜெயில் அதிகாரி அவர்களே மிகச் சிறப்பாக கவனித்து தேனீர் எல்லாம் வாங்கிக் கொடுத்து வழி அனுப்பி இருக்கிறார். அவர்கள் என்னோடு பேசும் போதும் எனக்கும் ஒரு கதிரை ஏற்பாடு செய்து கொடுத்தார். பின்பு அடிக்கடி ரவுண்ட்ஸ் வரும்போது என்னை தனியாக கூப்பிட்டு சுகம் விசாரிப்பார்.

ஒரு வாரம் ஜெயிலில் இருந்தேன். முதல் இரண்டு நாட்கள் கஷ்டமாக இருந்தது. பழகிவிட்டது. மாநாடு முடிந்து JR ஜெயவர்தன இலங்கை போகும்வரை எனக்கு ஜாமீன் கிடைக்காது என தெரியும்.

29ஆம் தேதி மாநாடு முடிந்தாலும், ஜாமீன் கிடைக்க வேண்டும் .ஆதலால் இன்னும் இரண்டு மூன்று நாள்செல்லும் என நினைத்தேன்.

தொடரும்.

முதல் படம் திகார் ஜெயில்

இரட்டை விரலை காட்டுபவர் பழைய எம் பிதிண்டுக்கல் மாயத்தேவர

கோபிசெட்டிபாளையம் பழைய எம்பி திரு சின்னசாமி அவர்கள் மற்றது நான்.


பகுதி 18

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்

1983 ஆண்டுநவம்பர் 23ஆம் தேதி காலை 11 மணி போல், இந்தியஅரசு கொடுத்த காரில் சாவகச்சேரிஎம் பி நவரட்ணம் அவர்களும் , யாழ்ப்பான எம் பி யோகேஸ்வரன் அவர்களும் நான் இருந்த நோர்த் அவென்யூ L. கணேசன் எம்பி வீட்டுக்கு வந்து என்னை கூட்டிக்கொண்டு போனார்கள்.

மூவரும் சிரித்துப் பேசிக்கொண்டு சந்தோசமாக எல்லா வெளிநாட்டு தூதுவரலயங்களுக்கும்கொடுத்தோம் அப்படி போய் வரவேற்பறையில் கொடுக்கும் போது என்னோடு நவரத்னம் எம்பி அல்லது யோகேஸ்வரனின் வந்துதாங்கள் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று கூறி புத்தகங்கள் கொடுக்க உதவி செய்வார்கள் .பல இடங்களில் இவர்கள் வந்தது எனக்கு உதவியாக இருந்தது. நாங்க திரும்ப தமிழ்நாடு இல்லத்திற்கு வரும்போது கிட்டத்தட்ட பகல்ஒன்றரை மணி இருக்கும். அவர்களுடன் அங்கேயே சாப்பிட்டுவிட்டு நான் கிளம்பும்போது, அவர்கள்இருவரும் என்னிடம முக்கியமான இடத்துக்கு கொடுக்க வில்லை என்றார்கள். எல்லா இடத்துக்கும் கொடுத்து விட்டேனே என்று கூற அவர்கள் இல்லை இலங்கை ஹைகமிஷனுக்கு கொடுக்கவில்லைஎன்றார்கள். நான் வேண்டாம் அண்ணா பிரச்சினையாகிவிடும் என்று கூறினேன். என்னை தனியாக போய் கொடுக்கச் சொன்னார்கள் தாங்கள் வந்தால் தான் பிரச்சனை என்றும், ஜே ஆர் ஜெயவர்தனா வுக்கு தனக்கு இவ்வளவு எதிர்ப்பு இருக்கும் என்று தெரியவரும் என்று என்னை உசுப்பேத்தி விட்டார்கள். நானும் சரி என்றேன். விதி விளையாடுகிறது என்று அப்போது தெரியவில்லை தமிழ்நாடு இல்லத்தில் இருந்து இலங்கை தூதுவராலயம் பத்து நிமிட நடை தூரத்தில் தான் இருந்தது.

நான் நான் அப்படியே வீட்டுக்கு போவதாக கூறிவிட்டு ,என்னிடம் மிச்சமிருந்த 4 புத்தக கவர்களையும் எடுத்துக் கொண்டு கிளம்பினேன். அங்கு எங்களை கண்காணித்துக் கொண்டிருந்த IB அதிகாரி என்னோடு கதைத்துக் கொண்டு வந்தார்.என்னிடம் இருந்த புத்தகங்களை எல்லாம் பார்த்துவிட்டு, இந்த நேரம் நீங்கள் இலங்கை எம்ப்பசி போய் கொடுப்பது நல்லதல்ல, நீங்கள் தபால் மூலம் அனுப்புங்கள் என்று அறிவுரை கூறினார். விதி யாரை விட்டது.பிரச்சினை ஒன்றும் வராது ரிஷப்ஷனில் கொடுத்துவிட்டு வந்து விடுவேன் என்று கூறினேன். அவர் தனக்கும் ஒரு செட் புத்தகங்கள் கேட்க அவரிடம் இரண்டுசெட் புத்தகங்களை கொடுத்தேன். இலங்கை எம் பசிக்கு 50 மீட்டர் முன்னாலேயே அவர் இருந்துவிட்டார். நான் உடன் திரும்பி வரும்வரை தான் காத்திருப்பதாகச் சொன்னார். அன்று அந்த அதிகாரி காத்திருந்த படியால் தான், இன்று நான் உயிரோடு இருக்கிறேன் என நினைக்கிறேன்

எம்பஸ்ஸி வாசலில் வெளி கேட் டில் நின்ற பாதுகாவலரிடம் புத்தகங்கள் ரிஷப்சனில் கொடுக்க வேண்டும் என்று கூறினேன், அவர் போன் செய்து ரிசப்ஷனில் கேட்டுவிட்டு என்னைஉள்ளுக்குள் அனுப்பினார். வாசலுக்கும் ரிசப்ஷனுக்கு ம் ஒரு முப்பது மீட்டர் இடைவெளி இருக்கும். ரிசப்ஷனில் இரண்டு ஒட்டிய புத்தகக் கவர்கள்களையும்கொடுத்தபோது, ரிசப்சனில் இருந்தபெண்மணி இந்தக் கவர்களில்என்ன இருக்கிறது எனகேக்க புத்தகங்கள் என கூறினேன் யார் கொடுத்தது என கேக்க நான்பதில் கூற தடுமாறியது,அவருக்கு சந்தேகத்தை கொடுத்தது உடன் கவரைப் பிரித்துப் பார்க்க உள்ளே இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான படங்களுடன் கூடிய பிளாட் இயக்கபெயருடன் கூடிய புத்தகங்கள்.அந்தப் பெண்மணி உடனடியாக கொட்டியா கொட்டியா என்று கத்த தொடங்கி விட்டாள். நான் நடுங்கி விட்டேன். அப்பொழுது அங்கு இருந்த J.R ஜெயவர்தன விக்குபாதுகாப்பாக வந்த ஆறேழு இலங்கைபோலீஸ் பாதுகாப்பு அதிகாரிகள் ஓடிவந்து என்னை பிடித்து அடிக்கத் தொடங்கி விட்டார்கள்.அந்த நேரத்தில் என் உயிரை காப்பாற்றிக் கொள்ள எப்படித்தான் அந்த வேகம் வந்ததோ தெரியாது எல்லோரையும் தள்ளிவிட்டு கதவை திறந்துவிட்டு வாசலுக்கு ஓடினேன்.எனக்குப் பின்னால் அங்கு வேலை செய்த என்று கிட்டத்தட்ட ஒரு பத்து பதினைந்து பேர் ஓடி வர தொடங்கினார்கள் வெளிகேட்டில் பாதுகாப்புக்காக நின்ற அலுவலர் என்னை கட்டிப்பிடிக்க அவரை தள்ளிவிட்டு , எம்பஸ்ஸியை விட்டு ரோட்டுக்கு ஓடி வந்துவிட்டேன்.

சாணக்கிய புரி என்ற மிகப் பாதுகாப்பான இடத்தில் தெருவில் ஓடிக்கொண்டிருந்தேன் பின்னால் துரத்துகிறார்கள் நான் வெடிகுண்டு வீசிவிட்டு ஓடுவதாக கத்துகிறார்கள் அப்பொழுது அங்கு மாநாட்டுக்காக பாதுகாப்புக்காக நின்ற போலீஸ்காரர்கள் துப்பாக்கிய என்னை நோக்கி திருப்பி, அவர்கள் துப்பாக்கியை லோடு செய்யும் சத்தம் கேட்டது. நான் அவர்களுக்குப் பக்கத்தில் போய் கையை தூக்கிக்கொண்டு முழங்காலில் இருந்துசரணடைந்தேன்.

என்னை துரத்திக் கொண்டு வந்தவர்கள் நான் கைக்குண்டு வீசிவிட்டு ஓடுவதாகநான் சரணடைந்த போலீசாரிடம் கூறிவிட்டு என்னை அடித்து தரதரவென்று இழுத்துக்கொண்டு போனார்கள்.

எம்பஸ்ஸி உள்ளுக்குள் வைத்து அடித்து அடித்து விசாரிக்கத் தொடங்கினார்கள். அதே நேரம் வெளியில் எனக்காக காத்திருந்த IB அதிகாரி நிலைமையை உணர்ந்த அதோடு மட்டுமில்லாமல்,அவருக்கு நான் கையில் வெடிகுண்டு எதுவும் வைத்திருக்கவில்லை என்ற உண்மை யும்தெரியும். அவர் உடனடியாக தமிழ்நாடு இல்லம் போய் யோகேஸ்வரன், நவரட்ணம் ஆகியோருடன் விபரத்தைக் கூறி அமிர்தலிங்கம் நடந்த விபரத்தைக் கூறி விட்டு, தனது உள்துறை அமைச்சகம் போய் அவர்களது IB உயர் அதிகாரிகளிடமும் முழு விபரமும் கூறியுள்ளார். அமிர்தலிங்கம் ஜிபார்த்தசாரதி இடம் உடனடியாக இந்த தகவலை கூறியுள்ளார். IB ஐபி மூலம் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது என்று இந்திரா காந்தியின் செயலாளர் அலெக்சாண்டருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.காரணம் இந்த மாநாட்டின் முதல் நாளிலே இப்படி ஒரு பாதுகாப்பு குறைபாடுஅசம்பாவிதம் நடந்து விட்டது என்று.

உடனடியாக அந்த ஏரியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சவுத் அவென்யூ பொலிஸ் நிலையத்திலிருந்து எம்பஸ்சிவந்து விசாரித்தார். அப்பொழுது இருந்த நடைமுறை , இப்பவும் இருக்கலாம் தூதுவரால சுற்றுச் சுவருக்குள் அசம்பாவிதம் எதுவும் நடந்தால் ,பிடித்தால், இலங்கைக்கு கொண்டு போகலாம் இந்திய சட்டம் அதை தடுக்காது. அவர்கள் என்னை இலங்கை கொண்டு போக ஆயத்தங்கள் செய்து வீடியோக்கள் போட்டோக்கள் எல்லாம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். போலீஸ் அதிகாரி என்னிடம் ரகசியமாக உன்னை இலங்கைக்கு கொண்டு போகப் போகிறார்கள் பாக்கெட்டில் ரகசிய போன் நம்பர்கள் எதுக்கும் இருந்தாள் தன்னிடம் கொடுத்துவிடும் படி நானும் கண்ணை காட்ட,என்ன செக் பண்ணுவது போல் எனது பேர்ஸ் மற்றும் சில முக்கிய பொருட்களை அவர் எடுத்து ஒளித்து வைத்து விட்டார்.

திடீரென பாதுகாப்பு படைகள் புடைசூழ உயரதிகாரி உள்ளே வந்தார்,அங்கிருந்த இந்திய போலீஸ் அதிகாரிகள் அவருக்கு சல்யூட் அடித்து மரியாதை செய்தார்கள் அவர் அங்கிருந்த இலங்கை அதிகாரிகளிடம் தான் இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு படையின் சீப் செக்யூரிட்டி அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார். என்ன நடந்தது என விசாரித்தார் அவரிடம் அவர்கள் வெடிகுண்டு கதையைச் சொல்லவில்லை புத்தகங்கள் கொடுத்ததாக கூறினார்கள். அதற்காக ஏன்இவரை அடித்தீர்கள் ஏன் கைது செய்தீர்கள் அவர்களிடம் சரமாரியாக கேள்விகள் கேட்டார். அவர்கள் இவர் புலிப் பயங்கரவாதி விரைவில் இலங்கைகொண்டு போக போகிறோம் என கூறினார்கள். அப்போது அவர் இவரைஎங்கே பிடித்தீர்கள் என கேக்க, அவர்கள் எம் பேசியில் உள்ளே என்றார்கள்,அந்த அதிகாரி நான்விசாரித்துவிட்டு தான் வருகிறேன். ரோட்டில் இந்தியன் போலீசார் தான் இவர் சரணடைய கைது செய்ததாக தகவல் இருக்கிறது. என்று கூறிவிட்டு என்னை ரோட்டில் கைது செய்த போலீஸ்காரர்களை வரவழைத்து அவர்களுக்கு முன் விசாரித்துவிட்டு, அங்கு இருந்த அந்த ஏரியா போலீஸ் அதிகாரியை கூப்பிட்டு சத்தம் போட்டர். என்னை கைது செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போயிருக்க வேண்டும் என்று, அதோடு பெண்ணை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துப் போய்FIR போட்டு விசாரிக்கும்படி, என்னை இன்ஸ்பெக்டர் கூட்டிப் போகும் வரை, அந்த அதிகாரி தனது படையினருடன் அங்கிருந்தார். அவருடன் இலங்கை அதிகாரிகள் கடும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள் அவர் அதை பொருட்படுத்தவில்லை.

என்னை கைது செய்த சவுத் அவென்யூபோலீஸ் அதிகாரி தனது அலுவலகம் போய் என்னை கதிரையில் இருக்கச் சொல்லி என் மேசையில் அடித்த காயங்களுக்கு மருந்து தடவ சொல்லி மருந்து கொடுத்தார். நல்ல ஒரு ஏலக்காய்-டீயும் வாங்கிக் கொடுத்தசிரித்து சிரித்து எல்லா விபரங்களையும் கேட்டு பதிவு செய்து கொண்டார்.நான் கொடுத்த புத்தகங்களின் ஒரு கவரை எடுத்து வந்திருந்தார் அதை பிரித்துப் பார்த்து இலங்கை அரசால் கொலை செய்யப்பட்டவர்களின் படங்களை எல்லாம் பார்த்து ரொம்ப கவலைப் பட்டார். நான் பிடிபட்ட நேரம் பகல் ரெண்டு மணி இருக்கும் போலீஸ் நிலையம் கொண்டு வந்த நேரம் மாலை ஆறு மணி இருக்கும். இரவு 8 மணி போல் டெல்லி போலீஸ் கமிஷனர் வந்தார். எனது வாக்குமூலம் எல்லாம் பார்த்தார். எம்பஸ்ஸி காரர் கொடுத்த வாக்குமூலம் கொண்டுவந்து புத்தகம் கொடுத்ததாக மட்டும் இருந்தது. போலீஸ் கமிஷனர் இது பாரதூரமான குற்றம் ஒன்றுமில்லை என்னை தேவையான விபரங்களை எடுத்துவிட்டு என்னை விடுதலை செய்யும்படி கூறினார்.

ஆனால் வெளியில் நின்று இலங்கை இலங்கை அதிகாரிகள் உடனடியாக இலங்கை என் பசிக்கு அறிவித்திருக்கிறார்கள் போல, இலங்கை எம்பசி முதன்மைச் செயலாளர் வந்து, டெல்லி போலீஸ் கமிஷனரிடம் இலங்கை ஜனாதிபதி JR ஜெயவர்தனா மாநாட்டுக்காக டெல்லியில் நிற்பதால் அவருக்கு என்னால் உயிர் ஆபத்து இருப்பதாக எழுத்து மூலம் புகார் கொடுத்தார்கள். போலீஸ் கமிஷனரும் என்னிடம் வந்து என்ன என்னை கைது செய்ததற்கு உண்மையான ஒரு ஆதாரமும் இல்லை என்றும், ஆனால் அவர்கள் புகார் கொடுத்திருப்பதால் எம்பஸ்ஸிஎன்ற படியால் அதை அலட்சியப்படுத்த முடியாது. அதனால் என்னை கைது செய்து மாநாடு முடியும் வரை சிறையில் வைப்பதாக கூறி விட்டு போய்விட்டார்.காவல் நிலைய அதிகாரி அன்றிரவு நான் அங்க படுப்பதற்கு ஒழுங்குகள் செய்து சாப்பாடு வாங்கிக் கொடுத்து நான் ஓடிவிடாமல் இருக்க துப்பாக்கி காவலர்களையும் வைத்துவிட்டார்.

தொடரும்






பகுதி 14

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்

சில நண்பர்கள் இந்த பதிவுகளால் என்ன பயன். உங்கள் பெருமையை தான் நாங்கள் வாசிக்க வேண்டுமா என கேட்கிறார் கள். எனது முகநூலில் எனது கடந்த கால வாழ்வில் நடந்த சம்பவங்களை நான் பதிவு செய்வது ஏன் உங்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது பிடிக்காவிட்டால் வாசிக்காமல் விடுங்கள் அல்லதுஎன் முகநூல் பக்கமே வர வேண்டாம். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்பதுஆயிரக்கணக்கான கரையான்கள் போன்ற தோழர்கள் புற்று எடுத்து கட்டியது இன்று கஸ்டப்பட்டு கட்டிய கரையான்கள் போன்ற தோழர்கள் இல்லை ஆனால் இன்று நாகப்பாம்பு குடிகொண்டுள்ளது இது எல்லா இயக்கங்களுக்கும் பொருந்தும்.

நான் சென்னையில் இருந்து புறப்பட்டு மூன்றாம் நாள் காலையில் புதுடில்லி போய்ச் சேர்ந்தேன். எல் கனேசன் எம்பி இன்எம்பி விடுதி இருக்கும் நோர்த் அவென்யு இருபக்கமும் இந்திய பாராளுமன்ற லோக்சபா, ராஜ்யசபா எம்பி களின் ஒரு பகுதியினரின் அடுக்குமாடி குடியிருப்பாகஆகும். அவர்களின் கார் விட கராஜ் விடுதிகளின் பின்பக்கம் இருக்கும் அநேகமா எல்லா கார் கராஜ் வாடகைக்கு விடப்பட்டு சாப்பாட்டுக் கடைகள் மற்றும் மக்கள் குடியிருப்பாக மாறி இருக்கும். நோர்த் அவென்யூ முடிவில் இந்திய ஜனாதிபதி மாளிகையும் மறுமுனையில் மிகப்பெரிய ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரியும் இருக்கிறது. விடுதிகளுக்கு முன்னாள் மிகப்பெரிய புல்வெளியும் இருக்கிறது.

186 நோர்த் அவென்யூ தான் எல் கனேசன் எம்பி வீடு. அங்கு அவரது உறவினர் சித்தார்த்தன் தங்கியிருந்தார் அவருக்கும் எங்கள்வயசு தான் இருக்கும். சித்தார்த்தன் அங்கு வந்து போகும் எங்கள் இயக்க தோழர்கள் எல்லோருக்கும்மிகமிக உதவி செய்தவர். அதோடு கீழ் வீட்டில் இருந்த வெங்கா எம்பியின் மகன் சம்பத் டெல்லி யுனிவர்சிட்டியில் படித்துக் கொண்டிருந்தவர் எமக்கு மிக உதவி செய்தவர். இவர் தற்போது மதுராந்தகம் என்ற இடத்தில் வக்கீலாக இருக்கிறார். இப்பஇரண்டு கண்ணும் தெரியாது. பக்கத்தில் இருந்த இன்னொரு எம்பியின் மச்சான் செல்வகணபதி டெல்லி ஜவஹர்லால்யுனிவர்சிட்டியில் படித்தவர். இவர் பின்னாட்களில் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். இவர்களோடு தங்கியிருந்த சம்பத், முருகேசன் போன்றவர்கள் டெல்லியில் நாங்கள் இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி கண்காட்சி வைக்க டெல்லி ஐஐடி ஜவர்கலால் நேரு யுனிவர்சிட்டி, டில்லி யுனிவர்சிட்டி போன்றவற்றில் வைக்க உதவி செய்தார்கள். இவர்களில் சம்பத் இந்திய ராணுவத்தில் சேர்ந்து இந்திய அமைதிப் படையில் சேர்ந்து பிரிகேடியர் ஆக திருகோணமலைக்கு பொறுப்பாக இருந்தார் என கேள்விப்பட்டேன். அவர் பின்பு எமது இந்திய நண்பர்களிடம்தாங்கள் முன்பு கற்பனை செய்து இருந்த இலங்கை தமிழ் விடுதலை இயக்கங்கள் பற்றிய கனவு, திருகோணமலையில் தமிழ் இயக்க தலைவர்கள் நடந்து கொண்ட முறை மிக மோசமாக இருந்தது என்றும்,அமைதிப் படை அதிகாரிகளுடன் சேர்ந்து குடிப்பதிலும் விருந்திலும் தான் பொழுதை கழித்தார்கள் என்றும் கூறியுள்ளார். நான் சந்திக்க கேட்டேன் மறுத்து விட்டார்.மேற்கூறிய அவர்களே விட இன்னும் பலர் எமக்கு உதவி புரிந்தார்கள். அந்த காலத்தில் தமிழ் விடுதலை இயக்கங்களுக்கு உதவி புரிந்தவர்கள்உதவி செய்தவர்கள் யாரும் பணம் பொருள் தேவைக்காக எங்களுக்குஉதவி செய்யவில்லை. என்பதை முக்கியமாக பதிவு செய்ய விரும்புகிறேன்.

நான் காலைடெல்லி வந்தவுடன், எமது ரோட்டோர கடையில் காலை உணவு உப்புமா ,சாம்பார், டி ரெண்டு ரூபா முடியும். கடை நடத்தியவர் கேரளாவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர். டெல்லி வந்த எமது அனைத்து தோழர்களும் உமாமகேஸ்வரன் சித்தார்த்தன் உட்பட யாவரும் காலை உணவும் டீயும் அங்குதான். கையேந்தி பவன். அங்கு ஒரு சிறப்பு நாங்கள் சாப்பிடும் போது தமிழ்நாட்டைச் சேர்ந்த பல எம்பி களும் காலை உணவு உப்புமா ,வடை சாப்பிட வருவார்கள்.

அது PLO லெபனான் பயிற்சிக்கு அவர்களது விமான டிக்கெட்டை எடுத்துக்கொண்டு, Connaught place என்ற இடத்தில் இருந்த சிரியன் விமான அலுவலகம் போய், டெல்லி ,டமஸ்கஸ் ,லண்டன்ஒருவழிப்பாதை டிக்கெட்டை கொடுக்க அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை , இருவழி பாதை டிக்கெட் இருந்தால் திகதி புக் பண்ணி தருவதாக கூறினார்கள். எங்கள் திட்டம் லண்டனுக்கு போகடிக்கெட் புக் செய்து டமஸ்கஸில் விமானம் மாறும்போது, வெளியில் சிரியாநாட்டுக்குள் உள்ளிடுவது.

பின்பு நான் போய் மாணிக்கம் தாசன் கூறிய திலக் என்பவரை சந்தித்தேன். மாணிக்கம் தாசன் பெயரை கேட்டவுடன் எல்லா உதவியும் செய்து தருவதாக கூறினார். காரணம் மாணிக்கம் தாசன் 70 80 ஆம் ஆண்டுகளில் டெல்லியில் சிட்டி லொட்ஜ் என்ற இடத்தில் தங்கியிருந்த போது சிங்கள பையன்களுக்கும்அங்கிருந்த தமிழ் பையன்களுக்கும்சண்டை வந்தபோது மாணிக்கம் தாசன் லோக்கல் துப்பாக்கி வாங்கி சுட்டுஅவர்களுக்கு பெரிய பிரச்சினையாக வந்ததாக கூறினார். தமிழீழ விடுதலைப் புலிகள் உமா ,பிரபா உடைந்தபின்பு செல்லக்கிளி இங்கு திலக்கொடுதான் வந்து டெல்லியில் தங்கி இருந்திருக்கிறார்.1983 நவம்பர்மாதம் தீபாவளி நேரம் K.P என்று அழைக்கப்படும்பத்மநாபன் முதன்முறையாக இந்த திலக்கோடு தான் தங்கி இருந்து., தனது முதல் போதைப்பொருள் வியாபாரத்தை விடுதலைப் புலிகளுக்காகஆரம்பித்தார். பின்பு K.P மும்பை போய் விட்டார். டெல்லி மும்பை பாகிஸ்தானில் கராச்சி லாகூர் போன்ற இடங்களில் இலங்கை தமிழ் சிங்கள இளைஞர்கள் ஈரான் ஊடாக வெளிநாட்டுக்குப் ஐரோப்பாவுக்குபோக வந்து ஈரானில் மத ஆட்சி வந்தபிறகு பாகிஸ்தான் ஈரான் எல்லை மூடப்பட்டதால் பல இளைஞர்கள் இந்த நாடுகளில் தங்கி விட்டார்கள். மும்பை ஈரான் போய்விட்டாள் லண்டன் வரை பஸ்ஸில் போக கூடிய வசதி இருந்தால்தான்.

நான் சென்னைக்கு எம்எல்ஏ ஹாஸ்டல் எமது அலுவலகம் மூலம்உமா மகேஸ்வரனுக்கு விமான டிக்கெட் பிரச்சினை பற்றி கூறினேன். அவரும் விபரத்தை கேட்டுவிட்டு அன்று சாயங்காலம் தொலைபேசி மூலம் மாணிக்கம் தாசன் இரண்டு நாளில் ரயில் மூலம் டெல்லிக்கு வருவார்.இருவரும் கலந்து பேசி என்ன செய்யலாம் என்று உடன் முடிவு எடுத்து அறிவிக்கும் படி கூறினார்.

தொடரும்.






பகுதி 13

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்

83 கலவரத்திற்கு பின்பு நினைவில் வந்த மூன்று முக்கிய நிகழ்ச்சிகள் பதியப்பட வேண்டும். உமாமகேஸ்வரன்மேல் இருந்த வழக்கை முடிப்பதற்கு சாட்சிகளை கலைப்பதற்கு முயற்சி செய்தது ,அது மாறனும் கணபதியும ஈடுபட்டார்கள் திமுகவைச் சேர்ந்த மணவை தம்பி இவரிடம் உமா தனது கைத்துப்பாக்கியை கொடுத்து பழுது பார்த்ததை காவல்துறை கண்டுபிடித்து அரசு சாட்சியாக சேர்த்தது.உமா கும்மிடிப்பூண்டியில் சுட்ட வரையும் அவரது உறவினர்களையும் லோக்கல் அரசியல்வாதிகள் மூலம் சாட்சியை விலைக்கு வாங்கியது. அப்ப இருந்த எமக்கு சாதகமான நிலையில் இது பெரிய காரியமாக இருக்கவில்லை.

வவுனியா எஸ்பி ஹேரத் என நினைக்கிறேன். இவரை அவரதுஅலுவலக மேஜையிஇல் குண்டு வைத்து கொலை செய்த அம்பிகை பாகன், எங்களது நடேசன் அன்னையும் முதன்முதலாக யோகேஸ்வரன் எம்பி இடம் ஒரு கடிதம் வாங்கிக் கொண்டு உமா மகேஸ்வரனை சந்திக்க எம்எல்ஏ ஹாஸ்டல் வந்தார்கள். மாதவன் அண்ணாவுக்கு அம்பிகைபாகன் முதலிலேயே தெரியும் என்பதால் உணவு வாங்கிக் கொடுத்து உமாவைசந்திக்க வைத்து, பின்பு முகாம்அனுப்பப்பட்டார்கள்.

இங்கு படித்துக்கொண்டிருந்த இலங்கை மாணவர்களை வசந்தி திருஞானம், குணசீலன்,ஜெயசீலன் போன்ற பலரை அவர்கள் படிப்பை கெடுத்து இயக்க வேலைகளுக்கு அனுப்பியதால், இந்திய பயிற்சிக்கு அனுப்ப ஏற்பாடு செய்ததால், இவர்களுக்குப் பாதுகாவலனாக குறிப்பாக வசந்திக்கு ,ராஜ்மோகன் என்பவர்,இவர் முன்பு மட்டக்களப்பில் கழுகு படைஎன்ற பெயரில் இயங்கியவர் என நினைக்கிறேன். இவர் அடிக்கடி எம்எல்ஏ ஹாஸ்டல் அலுவலகத்துக்கு வந்து, எங்களோடும்,உமாவோடும்பல மணி நேரம் கதைத்துகொண்டிருப்பார். ஆனால் பின்பு படிக்கும் மாணவர் களைஇயக்க வேலைகளில்நிரந்தரமாக ஈடுபடுத்தியதால், உமாமகேஸ்வரன் ஓடு கடும் சண்டை பிடித்தார்.படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் அப்பா அம்மா கடும் கஷ்டத்தில் பணம் அனுப்புவதாகவும் அவர்கள் படிப்பை கெடுத்து அவர்களின் வாழ்க்கையை நாசமாக்க வேண்டாமென ராஜ்மோகன் கூறி , சண்டை பிடித்தார். சண்டை கூடிஇருவரும் கண்ணியக் குறைவான வார்த்தைகளால் திட்டிக் கொண்டார்கள். இவர்கள் சண்டை பிடிக்கும் போது நாங்கள் வெளியில் வந்து விட்டோம். பின்பு நான் டெல்லி போன பின்பு கேள்விப்பட்டேன் சிறையில் தப்பிவந்த வாம தேவனை கொண்டு, அவரை கொலை செய்து எரித்து விட்டதாக. ராஜ் மோகன்கொலைதான்தமிழ்நாட்டில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் செய்த முதல் கொலை.

இரண்டொரு நாளில் மட்டக்களப்பு சிறையிலிருந்து தப்பிய தோழர்கள் ஒரு பகுதியினர் என நினைக்கிறேன்பழைய எம்எல்ஏ ஹாஸ்டல் வந்திருந்தார்கள். அவர்களின் வரவு பரபரப்பாக இருந்தது பரந்தன் ராஜன் அவர்களும், அற்புதமும் காயம்பட்டு இருந்தபடியால் மேலே ரூமுக்கு வரவில்லை. மாணிக்கம் தாசன் மேலே வந்தார். இவர்கள் யாரும் எனக்கு பழக்கம் இல்லை.கந்தசாமி மாறன் பழைய கதைகளைச் சொல்லும்போது மாணிக்கம் தாசன் பற்றியும்,பரந்தன் ராஜன் அவர்களைப் பற்றியும் ராஜனின் கார் ஓட்டும் திறமை பற்றியும் என்னிடம் கூறி இருந்தபடியால் அவர்களை ஒருவித பிரமிப்போடு பார்த்தேன், என்பதே உண்மை. பின்பு காயம் பட்டவர்களை சென்னை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்தார்கள். அற்புதத்தை பற்றிய சில செய்திகள் வந்தன எந்த கை விலங்கையும் உடனடியாக திறந்து விடக் கூடிய திறமை இருந்ததென்று, இவரின் இந்த திறமையை ஜெயிலில் வீடியோ எடுத்ததாகவும் கதைகள் வந்திருந்தன.உண்மை பொய் தெரியாது.

லண்டனிலிருந்து ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்தது.டாக்டர் ஜார்ஜ் அப்பாஸ் என்பவரின் தலைமையில் இயங்கிய PFLP என்னும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தோடு எமக்குலண்டன் கிளை மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது.இதன் மூலம் பயிற்சிக்கு எமது தோழர்களை அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும் அறிய முடிந்தது. எமது லண்டன் கிளை பொறுப்பாளர் கிருஷ்ணன் எட்டு பேருக்கான என நினைக்கிறேன் விமான டிக்கெட்டுகளை அனுப்பியிருந்தார் அந்தக் டிக்கெட் டெல்லி டமஸ்கஸ் (சிரியா) வரையான ஒருவழிப்பாதை டிக்கெட். கண்ணன் சந்ததியார் உமாமகேஸ்வரன் மூவரும் மிக நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார்கள். இடைக்கிடை மாணிக்கம் தாசனையும்அழைத்து பேசுவார்கள். அடுத்த நாள்உமா மகேஸ்வரன் சந்ததியார் என்னை அழைத்து உடனடியாக டெல்லிக்கு போக தயாராகும் படி கூறினார்கள் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. PLOபயிற்சி பற்றிஅறிந்திருந்த நான் என்னையும் பயிற்சிக்கு அனுப்பப் போகிறார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் டெல்லி போய் முதல் பட்ச் 8 பேரோ அல்லது10 பேரா நினைவில்இல்லை.,டெல்லி வந்து தங்குவதற்கும் விமான டிக்கெட் புக் பண்ணி தேதியை அறிவிக்கும் படியும் கூறினார்கள். இதில் ஒரு பிரச்சனை வந்தது. பெயர் போட்டு வந்த டிக்கெட்டுகளுக்கு அந்தப் பெயரில் இலங்கைபாஸ்போர்ட் தயாரிக்கவேண்டும். நான் முழித்துக் கொண்டிருக்கும் போது, மாணிக்கம் தாசன் வந்து இது ஒரு சின்ன விஷயம் யோசிக்காதே, நீ டெல்லி போய் , டெல்லி ரயில்வே ஸ்டேஷனுக்கு முன்னால் இருக்கும் பாகர்கஞ் ஏரியாவில் உள்ள ஹோட்டல் நவரங் தங்கியிருக்கும் கொழும்பு தமிழர் திலக் சந்தித்து தனது பெயரை சொல்லி உதவி கேட்கும் படி

கூறினார். உமா மகேஸ்வரனும் தன்னிடமிருந்த பாஸ்போர்ட்டுகள் , எனது பாஸ்போர்ட் உட்படவெளிநாட்டு பயிற்சிக்கு வந்தவர்களின் பாஸ்போர்ட்டுகள் எல்லாவற்றையும் ஒரு சிறு மூட்டையாக என்னிடம் கொடுத்தார் விமான டிக்கெட்டுகளையும் என்னிடம் கொடுத்து டெல்லியில் எங்கு போய் தங்க போகிறாய் என கேட்டார். நானும் முதல் முறை டெல்லி போனபோது தங்கிய,எல் .கனேசன் எம்பி வீட்டில் தங்கலாம் என கூறினேன். அவர் அங்கு தங்கசம்மதிப்பாரா? இல்லாவிட்டால் குறைந்த வாடகை விடுதியில் தங்கும் படியும் கூறினார்.

நாங்கள் இருந்த எம்எல்ஏ விடுதியின் உள்ளே இருந்த ஒரு அறையில் தான் L.கணேசன் அண்ணா தங்கியிருந்தார். நான் அவரிடம் விபரம் கூறி தங்குவதற்கு அனுமதி கேட்டேன். டெல்லி போவதற்கான காரணத்தையும் கூறினேன். அவர் உடனடியாக சம்மதம் கூறி, பயிற்சிக்கு போகும்தோழர்களையும் அங்கேயே தங்க வைக்கும் படியும் கூறினார்.அங்கு தங்குவதற்கு தனது உறவினர் பையன் சித்தாத்தன் தான் கூறியதாக கூறினால் உதவி செய்வார் எனவும் கூறினார். அங்கிருந்த சில திமுக கட்சிக்காரர்கள் தலைவர் கலைஞரிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு செய்யலாம் தானே என்று கேட்டார்கள். இலங்கை தமிழருக்கு இந்த நேரத்தில் நாங்கள் செய்ய வேண்டிய உதவிகளில் ஒன்றுதான் இது. இதற்காக தலைவர் கலைஞர் வருத்தப்பட மாட்டார் சந்தோசம்தான் படுவார். தான் போய் கலைஞரிடம் இதைப்பற்றி பேசும்போது அங்கிருக்கும் சிலர் இலங்கை தமிழருக்கு வீடுகொடுத்தாள் வெடிகுண்டு துப்பாக்கி என்று பிரச்சனை வந்தால் திமுக விக்குகெட்ட பெயர் என்று தலைவரிடம் போட்டுக் கொடுப்பார்கள். அதெல்லாம் தேவையில்லை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார்

டெல்லியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய மத்திய அரசு அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் மற்றும் வெளிநாட்டு தூதுவர் அதிகாரிகள் போன்றவற்றை சந்தித்து கழக பெயரை நான் முன்னிறுத்த பிள்ளையார் சுழி போட்டு உதவி செய்தவர் எல் கணேசன் எம்பி அவர்கள்தான். எந்த ஒரு உதவியும் எங்களிடமிருந்து அவர் எதிர்பார்க்கவில்லை.ஆனால் அவரிடமிருந்து நாங்கள் பல உதவிகள் குறிப்பாக எமது தோழர்கள் வந்து போய் தங்குவதற்கும் அவரது அரசு தொலைபேசியை நாங்கள் பார்த்ததற்கும் அதில்தான் எல்லா வெளிநாட்டு அழைப்புகளை ஏற்படுத்தி பேசுவோம் அந்த காலத்தில் அவருக்கு எங்களால்வந்த தொலைபேசி பில் கூட நாங்க கட்டவில்லை

எல் கனேசன் அண்ணாவைப் பற்றி பின்பு விரிவாக எழுதுகிறேன் அவர் இலங்கைத் தமிழருக்கான போராட்டத்திற்குதான் உதவி செய்தார். தனிப்பட்ட ஒரு இயக்கத்துக்காக செய்யவில்லை . நானும் அடுத்த நாள் டெல்லி போக ஏற்பாடுகள் செய்தேன்.அப்போது இன்றுடன் எனது சென்னை வாழ்க்கை முடிகிறது என்று எனக்கு தெரியவில்லை.

தொடரும்





பகுதி 12

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்

நான் இருந்த சென்னை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. நடந்த சம்பவங்கள் மாதங்கள் நினைவில் இல்லை. உமாமகேஸ்வரன் எம்ஜிஆரை சந்திக்கப் போகும்போது ஒருமுறை அவரிடம் என்னையும் அழைத்து போகும்படிஉரிமையோடு கேட்டேன். காரணம் நான் சிறு வயதில் இருந்து எம்ஜிஆர் ரசிகர். இன்று வரை.யும்தான். எம்ஜிஆரை பொதுக்கூட்டங்களில் பக்கத்திலிருந்து பார்த்திருக்கிறேன். பக்கத்திலிருந்து பேச ஆசை. உமா வுடன் எம்ஜிஆரை பார்க்க ராமாவரம் தோட்டத்துக்கு போன போது பக்கத்தில் எம்ஜிஆரை பார்த்தேன். அவர் உமாவை கூட்டிக்கொண்டு தனி அறைக்கு போய் விட்டார்.

உமாவோடு நல்ல தொடர்பில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா பாராளுமன்ற உறுப்பினர் திரு எம் கல்யாணசுந்தரம் அவர்கள் உமாவை தான் டில்லி போகப் போவதாகவும் தன்னுடன் டெல்லிவந்தால் ஜி பார்த்தசாரதி அவர்களைசந்தித்து பேச ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். ஆனால் இங்கு பயிற்சிகள் முகாம்கள் போன்ற பல வேலைகள் இருந்தபடியால் உமா மகேஸ்வரன்தயங்கினார். ஆனாலும் இந்த சந்தர்ப்பத்தை இழக்கவிரும்பவில்லை. தனது டெல்லி வரமுடியாத நிலையை கூறி வேறு யாரையாவது அனுப்பி விடவாஎன்று கேட்டார். அவரும் சரி என்று சொல்லி விட்டார் போல.

உமாவும், சந்ததியார் உடன் கதைத்து, டெல்லி அனுப்ப என்னை முடிவு செய்தார்கள். சந்ததியாரும் வெற்றியும்முன்பு திமுக எம்பி குழுவுடன் டெல்லி போய் போய் வந்த அனுபவம் இருக்கும் என கூறினார்.இவர்களின் இந்த முடிவு எனது வாழ்க்கையையே மாற்றிவிட்டது.

நானும், திரு கல்யாண சுந்தரம் எம் பியுடன் டெல்லி போய் எம்பி களுக்கான அவரதுவீட்டில் தங்கினேன். அடுத்த நாள் ஜி பார்த்தசாரதியை போய் சந்தித்தோம். அப்பொழுது ஜி பார்த்தசாரதி இந்திய நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை வகுப்பு குழுவின் தலைவராக இருந்தார். இந்திரா காந்திக்கு மிக நெருக்கமானவர். ஜூலை மாத கலவரத்தின்போதுஇலங்கைக்கு ஜி பார்த்தசாரதியை தான் இந்திராகாந்தி அனுப்பினார். அடுத்து வந்த ராஜீவ் காந்தி காலத்தில் ஜி.பார்த்தசாரதியை இலங்கைபேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள ஜேஆர் அனுமதிக்கவில்லை இதை ராஜீவ் காந்தியும் ஏற்றுக்கொண்டார். இலங்கை பிரச்சினை தடம்புரண்டது க்கு இதுவும் ஒரு காரணம்.

என்னை ஜி பார்த்தசாரதி இடம் அறிமுகப்படுத்திவிட்டு கல்யாணசுந்தரம் எம்பி தனது வேலையை பார்க்க போய் விட்டார். பார்த்தசாரதி அவர்கள் முதலில் எனது தனிப்பட்ட வாழ்க்கை முறை குடும்ப உறவுகள் படிப்பு போன்றவற்றை முதலில் விசாரித்தார். பின்பு உமா மகேஸ்வரன் பிளாட் மற்ற இயக்கங்கள் பற்றி எல்லா மேலோட்டமாக என்னுடன் கேட்டார். அவர் என்னை ஒரு சிறுவனாகவே பார்த்தார். அப்பொழுது எனது வயது24. உமா மகேஸ்வரன் டெல்லி வரும்போது முடிந்தால் தன்னை வந்து சந்திக்கும்படி கூறினார். ஜிபி செயலாளர் அய்யாசாமி அவர்கள் மிக நன்றாக பேசி, தேநீர்எல்லாம் கொடுத்து உபசரித்தார். அந்த நேரத்தில் இந்தியாவின் உச்சகட்ட செல்வாக்கில் இருந்த ஜி பார்த்தசாரதி அவர்கள் சந்தித்தது எனக்கு ஒரு கனவு போலவே இருந்தது. அவர் எனக்கு விடை கொடுத்தபோது ,உமாவை டெல்லிவரும்போது இந்து பத்திரிகையின் டெல்லி எடிட்டர் ஜிகே ரெட்டி ஐயும் சந்திக்கச் சொன்னார். .

நான் திரும்ப வரும்போது நோர்த் அவன்யு வந்து எல் கணேசன் எம்பி விடுதிக்கும் போய் அங்கிருந்த எம்பியின் உறவுக்கார நண்பரும் முன்பு போனபோது உதவி செய்த வருமான ,பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சித்தார்த்தனை சந்தித்தேன். இனிமேல் டெல்லி வந்தாள் இங்கு தான் தங்க வேண்டும் என்று உரிமையுடன்கூறினார். நான் திரு, கல்யாணசுந்தரம்அவர்களின் வீட்டுக்கு திரும்பும்போது வழியில் ,இருந்த இந்து அலுவலகத்துக்கும் போய் இந்து பத்திரிகை டெல்லி ஆசிரியர்ஜிகே ரெட்டி அவர்களைபார்த்தேன் .மிக அருமையான மனிதர். இவரும்இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை வகுப்புகுழுவில் ஒருவர். பல புத்திமதி களைகூறினார். நானும் நன்றி கூறி விடை பெற்றேன். திரு கல்யாண சுந்தரம் அவர்களின் உதவிக்கு நன்றி கூறி அவர் புக் பண்ணி தந்த ரயில் டிக்கெட்டில் அன்றே சென்னை திரும்பினேன்.

சென்னை பரபரப்பாக இயங்கிக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் எமது இயக்கம் எல்லா இயக்கங்களையும் விட சிறந்த முறையில் இயங்க தொடங்கி இருந்தது உண்மை. மாறன் இந்திய உளவு பயிற்சிக்கு அனுப்பப்பட்டதாக அறிந்தேன். மாறன் மிகச் சிறந்த போராளி.தமிழ்நாட்டில் ரகசியமாக இருந்த காலகட்டத்திலும் அதன் பிறகும் மாறன் மிககடுமையாக உழைத்தார். தோழர்களை சந்திப்பது அவர்களுக்கு தேவையான பணம், பொருட்களை உடனுக்குடன் கொடுப்பது பலநாட்கள் தூக்கம் இல்லாமல் ஓடியதை நான் பார்த்திருக்கிறேன்.அவருக்கு உதவியாக இதே மாதிரி கந்தசாமியும் அவருக்கு உதவியாக இருந்தார். மாறன், கந்தசாமி எல்லாம். கிளிநொச்சி வங்கிக் கொள்ளை,ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையத் தாக்குதல் போன்றவற்றில் ஈடு பட்ட மூத்த தோழர்கள். மாறனின் அண்ணா ஒரு இஞ்சினியர் அவரும் ஆரம்பகாலத்தில் விடுதலைக்கு உதவிய ர்களில் ஒருவர் என கேள்விப்பட்டேன்.. மாறன் புதிய உளவுபயிற்சியை முடித்துக் கொண்டு 83 ஆம் ஆண்டு கடைசியில் இலங்கை போய்ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு பூசா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 87 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்பு விடுதலை செய்யப்பட்டார்.89 ஆண்டு உமா பிளாட்தோழர்களுக்கு எதிராக இருந்த போது தோழர்களுக்காக மிகக் கடுமையாக உமா இடம் வாதாடிய தாக கேள்விப்பட்டேன். பின்பு வவுனியா அரச போக்குவரத்து சபை மேலாளராக இருந்த போது சக நெருங்கிய தோழர் மாணிக்கம் தாசன் நெருக்குதல் காரணமாகஅவர் தற்கொலை செய்து கொண்டார்.ஆனால் கொலை செய்யப்பட்டு தற்கொலையா கட்டப்பட்டதாக உள்ளிருந்து செய்திகள் வந்தன இதைப்பற்றி பின்பு விரிவாக எழுதுவேன். மாறனின் உண்மையான பெயர் தேவதாசன்.

ஜெர்மனி எமது அமைப்பாளர் பரமதேவா ஜெர்மனியிலிருந்து பல தோழர்களை இந்தியாவுக்கு அந்த காலகட்டத்தில் அனுப்பியிருந்தார். அதில் ஒருவர் எனது நெருங்கிய நண்பராக இருந்த நந்தகுமார் இவர் ரேடியோ சிலோன் -மயில்வாகனன் தாரின் தங்கை மகன் . இந்திய பயிற்சியை முடித்துக் கொண்டு சில தோழர்கள் ஓடும் ஆயுதங்களோடும் படகில் மட்டக்களப்பு போகும்போது விமான குண்டு வீச்சில் படகில்வைத்தே கொல்லப்பட்டார்கள் .பரமதேவாஒன்றுபட்ட தமிழிலவிடுதலைப்புலிகளின் ஜெர்மன் கிளை பொறுப்பாளர் .பின்பு பிளாட் இயக்கத்துக்காகவேலை செய்தவர். மட்டக்களப்பு சிறையை உடைத்து எமது தோழர்களும் மற்றைய இயக்கத் தோழர்களும் தப்பி விட்டதாக செய்திகள் வந்தன. எல்லோருக்கும் மகிழ்ச்சி. அடுத்த நாள் தமிழ்நாட்டு கரையோரம் வந்துவிடுவார்கள் என செய்திகள் வந்தன. இதே நேரம் ஈபிஆர்எல்எஃப் தோழர்கள் தாங்கள் தான் மட்டக்களப்பு சிறையை உடைத்து என பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார்கள். நாங்கள் இரவோடு இரவாக மட்டக்களப்பு சிறை உடைப்பு பற்றி போஸ்டர் அடித்து எங்கள் இயக்கம் உரிமை கோரி பெரிய பெரிய போஸ்டர்களாக இரவு சென்னையில் நானும், சட்டக்கல்லூரி மாணவர் தமிழ்மணி, இன்னும் இரண்டு தோழர்கள் அவர்களின் பெயர் தெரியவில்லை மறந்துவிட்டேன். விடிய விடிய போஸ்டர்ஒட்டினோம்.அப்போது சென்னையில் விடிய விடிய தெருவில் மக்கள் நடமாட்டம் ஆகத்தான் இருக்கும் காரணம் தண்ணீர் கஷ்டம் குடங்களோடுபெண்கள் ஆண்கள் சிறுவர்கள் எல்லோரும் தண்ணீர் லாரி க்காக காத்திருப்பார்கள். அவர்கள் போஸ்டர் வாசித்து விட்டு விபரங்கள் கேட்டு அறிந்து, எங்களை வாழ்த்தி திறந்து இருக்கும்டீக்கடைகளில் எங்களுக்கு நடு இரவு சாமத்தில் டீ எல்லாம் வாங்கித் தந்து தங்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள். மறக்க முடியாத நாட்கள்.

இவற்றைபதிவு செய்த போது சரியான தேதி மாதங்களை குறிப்பிட முடியாது உள்ளது நினைவிலில்லை பிற்காலத்தில்இப்படி எழுத போயிண்டி வரும் என்ன அந்த காலத்தில் நினைக்கவில்லை. இப்போதுகூட பல சம்பவங்கள் நினைவில் இல்லை நேரில் வரும்போது அந்த சம்பவங்களையும் பதிவில் இட யோசித்துள்ளேன்.

தொடரும்.






பகுதி 11

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்

சில சம்பவங்கள் முன்பின் இருந்தாலும் சில முக்கிய விடயங்களையும் இதில் குறிப்பிட வேண்டியுள்ளது. உமா மகேஸ்வரனும், இரா ஜனார்த்தனம் உம் நேருக்கு நேர் சந்தித்தால் ஜனார்த்தனம் தலையை குனிந்து கொண்டு ஒதுங்கி போவதும், உமாமகேஸ்வரன் எங்களிடம் கள்ளன் போகிறான் என சத்தமாக சொல்லுவதும் வாடிக்கை. என்னைப் பொறுத்தளவில்ஜனார்த்தனம் ஒரு பெரிய ஆள் என நினைத்திருந்தேன். மாறன் ஏன் உமா கோபப்படுகிறார் என்ற விளக்கத்தைக் கூறினார்.

திரு அமிர்தலிங்கம் ஜெயவர்தன இடம்அரசியல் சமரசம் செய்து மாவட்ட சபையை பெற்றது பின்பு கோப்பாய் எம்பி கதிரவேற்பிள்ளை அவர்களுக்கும் அமிர்தலிங்கம் அவர்களுக்கும் கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கதிரவேற்பிள்ளை திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் மற்றும் அமெரிக்க, இலங்கை ரகசிய தொடர்புகள் சம்பந்தமான தமிழர் விடுதலைக் கூட்டணி யால் தயாரிக்கப்பட்ட ரகசிய கோப்புகளை எடுத்துக்கொண்டு இந்தியா வந்துடெல்லியில் இந்திய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் இடம் கொடுக்கப் போவதாக கூறி 1981 மார்ச் மாதம்என நினைக்கிறேன். இங்கு சென்னை வந்து அவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இதைக் கேள்விப்பட்ட அமிர்தலிங்கம் ஜனார்த்தனன் மூலம்தமிழ் கதிரவேற்பிள்ளை உடலை இலங்கை அனுப்புவதோடு அவரது உடமைகள் எல்லாம் மிக கவனமாக உடலோடு அனுப்பி வைக்கும்படியும் கூறுகிறார்.தமிழ்நாட்டில் பெரியார் திடலில்

அவரது கதிர்வேல் பிள்ளையின் உடலை வைத்து அஞ்சலி செலுத்த ஏற்பாடு நடைபெற்றதாகவும் ஜனார்த்தனம் தனது செல்வாக்கை பயன்படுத்தி அதற்கு பல இடைஞ்சல்கள் செய்ததாகவும் கூறப்படுகிறது இதனால்தான் உமா மகேஸ்வரன் ஜனார்த்தனன் மேல் கடுங்கோபத்தில் இருந்த சம்பவத்துக்கு காரணத்தை விளக்கினார்.

எமது பழைய எம்எல்ஏ ஹாஸ்டல் அலுவலகத்துக்கு லங்கா ராணி அருளர் அடிக்கடி வந்துபேசுவார். இவர்கள் உமா இடம்பேசும்போது நான் மாதவன் அண்ணா சந்ததியர் போன்றோர்களும் இருப்போம். அருளர் விடுதலைப்புலிகளுக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திற்கும் உள்ள சில பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பேச நடு நிலையாக வந்து இருந்தார். முக்கியமான பிரச்சனை என்னவென்றால் அந்த காலகட்டத்தில் சுந்தரம் புலி படைப்பிரிவு. காத்தான் புலி படைப்பிரிவு என்ற பெயர்களில் எமது சிறுசிறு தாக்குதல்களை மேற்கூறிய பெயர்களில் உரிமை கொண்டாடி வந்தோம் இது பிரபாகரனுக்கு பெரும் தலையிடியை கொடுத்தது வந்தது போல. வேறு பல பிரச்சினைகளை சந்ததியாரும் , உமா மகேஸ்வரனும் அருளர் இடம் விவாதித்துகொண்டிருப்பார்கள். இந்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட ஒரு மாதம் நடந்தது. பேச்சுவார்த்தையின் முடிவில் இனிமேல் நாங்கள் விடுதலை புலி என்ற பெயரை பாவிப்பதில்லை என்று உறுதிமொழி கொடுத்தார்கள் சந்ததியாரும் உமா மகேஸ்வரனும்.

எமது இடத்துக்கு ஈரோஸ் ஐயர் பாலாவும் அடிக்கடி வந்து போவார். நாகராஜா. ஐயர் எல்லோரும் வருவார்கள் பழைய கதைகளை கூறுவார்கள். நாகராஜா ஆரம்பகாலத்தில் படுக்கையில் வைத்து சக நண்பர்களை பிரபாகரன்சுட்ட கதைகள் எல்லாம்கூறுவார். PLO வில் பயிற்சி எடுத்த விடுதலைப்புலி ஆரம்பகால உறுப்பினர் விச்சு என்ற விஸ்வேஸ்வரன் அடிக்கடி வருவார் அவர் உமா மகேஸ்வரனும் சிறுசிறு பயணங்களை மேற்கொண்டு வெளியூர்களுக்கும் போய் வருவார்கள்.அதே மாதிரி நாக ராஜா உடன் உமா பயணங்கள் போய் வருவார். அதோடு நாகராசா விடம்பணம் கடன் வாங்குவதும் உண்டு. எமதுஅறைக்கு நாகராஜா வந்தால், எமக்குசந்தோசம் காரணம் பகலுணவு மீன் இறைச்சி எல்லாம் வாங்கித் தருவார்.இப்படியான நேரங்களில் தான் நாங்கள் நல்ல உணவு சாப்பிட முடியும் இல்லாவிட்டால் அந்த10 ரூபாதான். விடுதலைப்புலிகள் அமைப்பை விட்டு விலகி உமா மகேஸ்வரன் சென்னையில் தங்கியிருந்து கஷ்டப்பட்ட போது ஐநாவில் வேலை செய்த காந்தளகம் சச்சிதானந்தம் ஐயா உமா மகேஸ்வரனுக்கு வருமானம் கிடைக்க காந்தளகம் புத்தகங்களை விற்பதற்குஉதவி செய்தார். சென்னையில் இருந்த தன்னோடு படித்த பச்சையப்பா கல்லூரி பேராசிரியருமான பிரித்திவிராஜ் என்பவரின் செனாய் நகர்வீட்டில் காந்தளகம் புத்தகங்கள் இருந்தன. பேராசிரியர் பிரித்திவிராஜ் அமைந்தகரையில் தனது தோட்ட வீட்டில் உமாமகேஸ்வரன் மறைந்து வாழ உதவி செய்துள்ளார் .மிக ரகசியமான இடம். அமைந்தகரையில் கிளினிக் வைத்திருந்த பேராசிரியர் மூ வரதராஜனின் மகன்தான் உமா மகேஸ்வரனுக்கு இலவச வைத்தியம் செய்பவர் பிற்காலத்தில் நாங்களும் போய் இலவசமாய் மருந்து எடுத்து இருக்கிறோம் அவரின் பெயர் மறந்து விட்டேன்.

ஜூலை கலவரம் நடந்து கொஞ்ச நாட்களில் இலங்கையிலிருந்து காந்தளகம் சச்சிதானந்த ஐயா கலவர நேரம் பாதிக்கப்பட்டு சென்னை ப்ளு டைமன்ட் ஓட்டலில் வந்து தங்கியிருந்தார் அங்குதான் தந்தை செல்வாவின் மகன்சந்திரகாசன் நும் தங்கியிருந்தார். காந்தளகம் சச்சிதானந்தம் தனது அறைஇல் பிரஸ் மீட்டிங் ஏற்பாடு செய்திருந்த போது உமா மகேஸ்வரன் அதற்கு அழைத்தார் உமாவின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு அது. கூட என்னையும் அழைத்துப் போய் இருந்தார். பிரஸ்மீட் முடிவில் சச்சிதானந்தம் ,உமா இடம் கூறிய ஒரு செய்தியை உமா பத்திரிகையாளர்களிடம் கூறச் சொல்லி அதாவது மொரிசியஸ் அரசாங்கம் ஈழப் பிரச்சினையில் தமிழருக்கு ஆதரவாக இருப்பதான செய்தி. இந்த செய்தி அடுத்த நாள் பத்திரிகையில் சச்சிதானந்தம் ஐயா, உமாமகேஸ்வரன் பேட்டி களோடு, எனது பேட்டியும் வந்திருந்தது. எனது போய்ட்டு இருக்கு விடுதலைப்புலி வெற்றிச்செல்வன் கூறுகிறார் என்று இருந்தது. அடுத்த நாள் காலையில் பத்திரிகையை வாசித்த சந்ததியார் என்னை அழைத்து கடுமையாக ஏசினார் முதலாவது நான் பேட்டிகொடுத்தது தவறு என்றும், அதைவிடத் தவறு விடுதலைப்புலி வெற்றிச்செல்வன் என்று கூறியது என்றும் திட்டினார்.நல்ல காலம் அந்த நேரம் உமா மகேஸ்வரன் அங்கு வந்து தான்தான் பேட்டி கொடுக்க சொன்னதாகவும், இங்கு உள்ள பத்திரிகைகள் இலங்கை போராளிகள் பற்றி எழுதும்போது எந்த இயக்கமாக இருந்தாலும் விடுதலைப் புலிகள்தான் என்று எழுதுகிறார்கள் இதில் வெற்றியின் தவறு ஒன்றும் இல்லை என்று கூறினார். ஆனாலும் சந்ததியார் கீழே விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்ற கதை போல், உமாவையும் இடித்துரைப்பது போல், பேட்டி கொடுக்கும் முன்பு விடுதலைப்புலிகளுக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்ற இயக்கங்களுக்கும் உள்ள வேறுபாடுகளை முதலில் அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும் என்று கூறினார். உமாவும் சிரித்துக்கொண்டு நீங்களே இந்த முயற்சியை எடுக்கலாம் தானே என்று கூறினார்.

இலங்கையிலிருந்து பெருமளவு இளைஞர்கள் சிறுவர்கள் இந்தியாவில் பயிற்சிக்காக அனுப்பப்பட்டார்கள். இங்கு வந்த பெரும்பான்மையானவர்கள் 3 மாத பயிற்சி ,திரும்பும்போது ஆயுதத்தோடு போவோம்என்ற நம்பிக்கையில்தான் வந்தவர்கள். சில பேர் இங்கு சினிமா நடிகர் நடிகைகளை பார்க்கலாம் என்ற கனவில் வந்தவர்களும் இருந்தார்கள். டெலோ இயக்கம் உமா மகேஸ்வரன் இயக்கத்துக்கு என்று ஏமாற்றி ஆள் சேர்த்த கதையும் உண்டு. வந்தவர்கள் ஸ்ரீ சபா ரத்னத்தைபார்த்து இவரா உமாமகேஸ்வரன் என்று கேட்டு தாங்கள் பார்த்த படத்துக்கும் நேரில் பார்ப்பதற்கும்வித்தியாசமாக இருக்கிறார் என்று கூறியும்இருக்கிறார்கள்.

இன்னொரு மிக முக்கிய சம்பவத்தையும் கூறவேண்டும் இயக்கத் தலைமைகள் எல்லாம் மறைத்த சம்பவம். பங்களாதேஷ் அகதிகள் இந்தியாவுக்கு கூடுதலாக வந்து இந்தியா நேரடியாக பங்களாதேசில் தலையிட்டு பிரித்து கொடுத்தது போல், இங்கும் இலங்கை அகதிகள் பெருமளவு வந்தாள் இயக்கங்களுக்கு பெருமளவு பயிற்சியும் ஆயுதமும் கிடைக்கும் என்ற கனவில் எல்லா இயக்கங்களும் பெருமளவு பொதுமக்களை மூன்று மாதத்தில் திரும்பி வந்து விடலாம் அகதிகள் கூடினால் இந்தியா தலையிடும் தமிழீழம் கிடைத்து விடும் என்று கூறி பொதுமக்களை தங்கள் தங்கள் இயக்க படகுகள் மூலம் கூட்டி வந்தார்கள். அதோடு இதை பணம் சேகரிப்பதற்கான வழியாகவும் கையாண்டார்கள் பணம் வாங்கிக்கொண்டு இயக்க, வெளி படகுகளில் அப்பாவி இலங்கைத் தமிழர்களை இந்தியா கொண்டு வந்து சேர்த்து இருபது முப்பது வருடங்கள் அவர்களின் வாழ்க்கையை சீரழித்து அதில் இந்த விடுதலை இயக்கங்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

தொடரும்.




பகுதி10

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்

காலகட்டத்தில் பல முக்கிய சம்பவங்கள் நடக்கத் தொடங்கி விட்டன. இந்திய அதிகாரிகள் ஆயுதபயிற்சிகள் ஏற்பாடு செய்து தருவதாக உமா விடம் கூறியதால் தளத்தில் வேலை செய்த தோழர்களுக்கு விபரம்அறிவிக்கப்பட்டுஇந்தியாவுக்கு., பயிற்சிக்காக தோழர்கள் அனுப்பப்பட்டார்கள். எமது கழக நிர்வாகம் தூங்க,சாப்பிட நேரமில்லாமல் ஓடி திரிந்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் எம்ஜிஆர் அடிக்கடி தனது ராமாபுரம் தோட்டத்துக்கு உமா மகேஸ்வரனை அழைத்துப் பேசுவார்.காரணம் கலைஞருடன் நெருக்கமாக கூடாது என்ற நோக்கத்தோடு தான்.ஆனால் தஞ்சாவூரில் சேர்ந்த அதிமுக மந்திரி எஸ்டி சோமசுந்தரம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனது ஆதரவாளர்களை எங்களுக்கும் முகாம்போட சகல உதவிகளும் செய்யச் சொல்லி எமக்கு மிக மிக உதவி செய்தார். அதோடு சென்னையில் இருந்த தனது அதிகாரபூர்வ அரசு வீட்டில் சென்னை வந்த எமது தோழர்களை தங்கவும் வைத்து இருந்தார்

எம்ஜிஆர் கலைஞருக்கு எதிராக ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார். அதாவது இந்தியாவிலிருந்து கலைஞர் ஆட்சியில் குட்டிமணியை நாடு கடத்தாமல் இருந்தால் குட்டிமணி வெலிக்கடை சிறையில் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார் என்று. உடன் அரசு ஆதரவு பற்றிய பத்திரிகைகள், எம்ஜிஆர் ஆதரவுத் தலைவர்கள் கலைஞர் கருணாநிதியை துரோகி எனவசை பாடத் தொடங்கினார்கள்.உண்மையில் அது நடந்தது 1972 ஆம் ஆண்டு அல்லது 1974ஆம் ஆண்டு என நினைக்கிறேன். அப்போது பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மத்திய அரசால் இலங்கைக்கு அனுப்பப் பட்டார்.அப்போது குட்டிமணியை இலங்கையில் கூட கடத்தல்காரர் என்ற அளவில்தான் சிலருக்குத் தெரிந்திருந்தது. பலபேருக்கு குட்டிமணி என்ற பெயர் கூட தெரியாது.

இந்தநிலையில் கலைஞருக்கு நெருக்கமான தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் டெலோ இயக்கத்தின் இரட்டைதலைவர்களான ஸ்ரீ சபாரத்தினம் மற்றும் ராசுபிள்ளை ஆகியோரை கலைஞரிடம் அழைத்துப்போய் கலைஞருக்கு ஆதரவாக அறிக்கை விட வைத்தார். அதில் குட்டிமணி அந்த காலத்தில் தன்னை ஒரு விடுதலை இயக்கப் போராளி என்று பகிரங்கமாய் தெரிவதை விரும்பவில்லை என்றும் அதனால்தான் இந்தியாவில் தன் கைது செய்யப்படும் போது தன்னை ஒரு கடத்தல்காரன் ஆக காட்டிக் கொண்டார் என்றும் அறிக்கையில் இருந்தத. அதோடு கலைஞருக்கு ஆதரவாக குட்டிமணியின் மனைவியின் கடிதத்தையும் பத்திரிகைகளில் வெளியிட்டார்கள் அன்றிலிருந்து எம்ஜிஆருக்கு சிறி சபாரத்தினம் telo இயக்கமும் எதிரியாகி விட்டனர்.எம்ஜிஆரை தவறான வழியில் இட்டுச் சென்றது உளவுத்துறை ஐஜி திரு . மோகனதாஸ் அவர்கள். மத்திய அரசு மத்திய உளவுத் துறைகளால் IB மற்றும் ரா மட்டுமே தமிழ்நாட்டில் இலங்கை சம்பந்தப்பட்ட வேலைகளை தொடர்புகளை கையாண்டன. தமிழ்நாட்டு போலீசாருக்கு உளவுத்துறைக்கு அனுமதி இருக்கவில்லை. இது தமிழ்நாட்டு மிகப் ஃபுல்லான அதிகாரி மோகன்தாஸ் மிக கோபமாக இருந்தார்அதனால்தான் எம்ஜிஆரை தவறாக வழி நடத்துவதாக நடுநிலையான அண்ணா திமுக மந்திரிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் நாங்கள் அவர்களுடன் பேசும்போதுகருத்துகளைச் சொன்னார்கள்.

ரா, சந்திரஹாசன் மூலம் ஈபிஆர்எல்எஃப், telo, ஈரோஸ் அமைப்புகளை பயிற்சிக்காக தொடர்பு கொண்டு பயிற்சி கொடுக்கத் தொடங்கினார்கள். இந்திய பயிற்சிகள் நடக்கப் போவதை அறிந்த எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் திடீரென மதுரை மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த தனது மகன் பகீரதன்தலைமையில் ஒரு விடுதலை இயக்கத்தை உருவாக்கி பெயர் கூட tena என நினைக்கிறேன். இதற்கு அமிர்தலிங்கத்தை திசைதிருப்பி வைத்தவர் திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் என பேசிக்கொண்டார்கள். ஆனால் அமிர்தலிங்கம் எடுத்தமுயற்சி நடக்கவில்லை. விடுதலைப்புலி பிரபாகரன் தன்னைத்தான் அமிர்தலிங்கம் பரிந்துரைப்பார் என நினைத்து வைத்திருந்தவர். அமிர்தலிங்கத்தின்புது இயக்கத்தைப் பற்றி அறிந்த பிரபாகரன் இதுவரை மிக மிக நெருக்கமாக அமிர்தலிங்கத்தை தோடு நெருக்கமாக இருந்தவர்பின்பு அமிர்தலிங்கத்தை எதிரியாக பாவிக்க தொடங்கினார். இந்த விடயங்கள் எல்லாம் அப்போது இயக்க தோழர்களோடு பரிமாறப்பட்ட விஷயங்கள். நெடுமாறன் முயற்சியால் விடுதலைப்புலிகளுக்கும் இந்திய அதிகாரிகளுடன் நெருக்கம் ஏற்பட்டது ஆயுதப் பயிற்சியும்பெற்றார்கள்.

சம்பவங்கள் முன்பின் இருந்தாலும் சம்பவங்களை பதிவு செய்ய விரும்புகிறேன்.

இலங்கையிலிருந்து அமிர்தலிங்கம் விமானத்தில் வரும்போது மாறுவேடத்தில் பெண் போல் வேடமிட்டு வந்ததாக பல செய்திகள் அப்போது பத்திரிகைகளில் வந்தன உண்மையில் அப்படி வந்ததாக தெரியவில்லை.சென்னை வந்தவுடன் எம்ஜிஆர் அப்பொழுது தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினராக இருந்த இரா ஜனார்த்தனம் அவர்களை விமான நிலையம் அனுப்பி அமிர்தலிங்கம் கலைஞரிடம் போகாமல் தன்னை மட்டும் சந்திக்க ஏற்பாடு செய்துகொண்டார். ஜனார்த்தனம் எதை கூறி பயமுறுத்தி இருந்தாரோதெரியாது. அமிர்தலிங்கம் கலைஞரை சந்திக்க முதலில் பயந்தார் பின்பு பலமுறை சந்தித்தார்.

இந்தப் செய்திகள் தெரிந்த பல தோழர்கள் இன்னும் இருக்கிறார்கள் இதற்கு மேலும் பல செய்திகளை கழக செய்திகள் மற்ற இயக்க செய்திகள் நேரடியாக தெரிந்த தோழர்கள் மௌனமாக இருப்பது சரியல்ல நீங்களும் உங்கள்நேரடி பங்களிப்பைப் பற்றி எழுதினால் வருங்காலத்தில் பலர் இங்கு நடந்த உண்மையான செய்திகளை படிக்க உதவியாக இருக்கும். நான் எழுதுவது எனது சொந்த நேரடிஅனுபவங்களை என்றபடியால். நான் கேள்விப்பட்ட பல விடயங்களை எழுத வில்லை. தயவுசெய்து ஆரம்பகால எமது இயக்கத் தோழர் பார்த்திபன், பெரிய மென்டிஸ்கணபதி ஆர் ஆர்போன்றோர் 83ஆண்டு கலவரத்துக்குமுன்புமுன்பு நடந்த அவர்களின் பங்களிப்பைப் பற்றி எழுதினால் நானும் அறிய ஆவலாக இருக்கிறேன். உங்கள அவர்களுக்கும் பல முக்கிய தகவல்கள் தெரியும். அவர்கள் வெளிநாட்டில் இருப்பதாக அறியக்கூடியதாக உள்ளது பல உண்மைகள் தெரிந்த பல தோழர்கள் உங்களுக்குத் தெரிந்த உண்மைகளை செய்திகளை ஒரு பதிவாக போட்டாள் எல்லோருக்கும் நல்லது அறியக்கூடியதாக இருக்கும்

தொடரும்





பகுதி 9

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்

நான் டெல்லியிலிருந்து வந்திறங்கிய போது இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழ்நாடு கொந்தளிப்பாக இருந்தது ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள். சிறையிலிருந்து விடுதலையாகி இருந்தார்கள் உமா மகேஸ்வரன் கண்ணன் நிரஞ்சன் மூவரும். மாலையில் உமாமகேஸ்வரன் வந்து என்னை சந்தித்து டெல்லியில் நடந்த விபரங்களை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டார். பின்பு என்னை கூட்டிக்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் எல் கணேசனை சந்திக்கச் சென்றோம். அவர் பழைய எம்எல்ஏ ஹாஸ்டலில் தான் தங்கி இருந்தார். உமா அண்ணாஅவரிடம் நன்றி கூறி, பழைய நண்பரான செஞ்சி ராமச்சந்திரன் சந்தித்து பேசினார். செஞ்சி ராமச்சந்திரனுக்கு முன்னாள் விடுதலைப்புலிகள் யாரையும் பிரபாகரன், உமாமகேஸ்வரன் யாரையும் முகம் கொடுத்து பேசுவதற்கு விருப்பம் இல்லை. பிற்காலத்தில் அவரை சந்தித்து பேசும்போது கூறினார் ஆரம்ப காலத்தில் தாங்கள் நல்ல உதவி செய்ததாகவும் இவர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டும் கொலை செய்து கொண்டும் இருப்பது தாங்கள் எதிர்பார்க்காதது நிகழ்வு என்றும், தான் பிரபாகரனிடம் ஒற்றுமை பற்றி பேசும்போது பிரபாகரன் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் வரும்போது பாலசிங்கம் தான் பிரபாகரனைக் குழப்பியது. இதெல்லாம் தங்களுக்கு மன வருத்தம் என்றும் கூறினார்

எல் கணேசன் அண்ணா கலைஞரை சந்தித்து நன்றி கூறி, இன்றுள்ள நிலைமையில் கலைஞரின் ஆலோசனையை பெறசொன்னார். உமா தனியா போய் கலைஞரை சந்தித்து உரையாடினார். கலைஞரை சந்தித்த செய்திபத்திரிகையில் வரவும். எம்ஜிஆருக்கு எரிச்சலைக் கொடுத்தது. எம்ஜிஆர்எமக்கு ஆதரவான நிலையை எடுக்க காரணம் இந்திராகாந்தி அம்மையார் இலங்கைப் பிரச்சினையில் தீவிரமாக இறங்கி விட்டதுதான். இக்காலகட்டத்தில்தான் 83 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வாரமே இந்திய வெளிநாட்டு உளவுத்துறை RAW அதிகாரிகள் முதன்முறையாக களத்தில் இறக்கி விடப்பட்டு இயக்கத் தலைவர்களை ரகசியமாக சந்திக்கத் தொடங்கினார்கள்.

இப்போது மாதிரி அப்போது தொலைபேசி வசதிகள் இல்லாத காரணத்தால் தகவல் தொடர்புக்காக நல்ல ஒரு இடம் எங்களுக்கு தேவைப்பட்டது. உடனடியாக உமா அண்ணா என்னை கூட்டிக்கொண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் மதிப்புக்குரிய பெரியவர் ராசாராம் அவர்களை போய் சந்தித்தோம். அவரும் எங்களை அன்போடு வரவேற்று உபசரித்தார். தன்னால் ஏதாவது உதவி வேண்டுமா எனக் கேட்ட பொழுது உமா அண்ணா பழைய சட்டமன்ற விடுதியில் (பழைய எம்எல்ஏ ஹாஸ்டல்) எமக்கு அலுவலகம் அமைக்க ஒரு அறை தர முடியுமா என கேட்டார். அவரும் உடனடியாக எமக்கு ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்தார்.(சபாநாயகரின் கட்டுப்பாட்டில்தான் சட்டசபை உறுப்பினர் உறுதி எல்லாம் உள்ளன)

முதலாம் மாடியில் 84 நம்பர் ரூம் எமது இயக்கத்துக்காக ஒதுக்கி தரப்பட்டது.. எல்லா வசதிகளும் நமக்குத்தான் முதல் கிடைத்தது ஆனால் அதை கடைசியில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு உடைத்து விட்டோம். வேறு எந்த ஒரு இயக்கத்துக்கும் ஒரு அரசு விடுதி கிடைக்கவில்லை.இனி நான் எழுதும் செய்திகள் வரிசை முன்பின்னாக இருக்கலாம் நினைவில் இல்லை நடந்த சம்பவங்கள் பதிய வேண்டிய தேவை உள்ளது.

எம்எல்ஏ விடுதி எமது அலுவலக அறையாக மாற்றப்பட்டது.அதன் முதல் பொறுப்பாளராக நான்நியமிக்கப்பட்டு, அங்கேயே தங்கியும் இருந்தேன்திருவல்லிக்கேணியில் இருந்த எமது இரகசிய இடத்தில்மாதவன் அண்ணா அங்குதான்தங்கி இருந்தார்முக்கிய ஆவணங்கள் அங்குதான் இருந்தன

இந்திய ரா அதிகாரிகள் தகவல் தொடர்பும் எம்எல்ஏ ஹாஸ்டல் அலுவலகம் ஊடாகவே நடந்தன. சீலிடப்பட்ட கவர்கள் ரகசியமாக என்னிடம் கொடுக்கப்படும் நான் அதை உமா அண்ணாவிடம் கொடுத்துவிடு வேன். உமா கொடுக்கும்கடிதங்கள் செய்திகளையும் ராஅதிகாரிகள் வரும்போது அவர்களிடம் கொடுத்து விடுவேன்.

மாதவன் அண்ணாவும் காலையில் வந்து விடுவார். அங்கு IB அதிகாரிகள் வந்து உமா அண்ணாவை சந்திப்பதோடு ,என்னோடு , மாதவன் அண்ணா ஓடும் நீண்ட நேரம் அந்த நேரம் இலங்கையில் நடக்கும் செய்திகளை கேட்டு. கொள்வார்கள். தமிழ்நாடு உளவுத்துறை கியூ பிராஞ்ச் அதிகாரி கள் எங்களை சந்திக்க வருபவர்களை விசாரிப்பதும் எங்களை முறைத்துப் பார்ப்பது மாறி இருப்பார்கள்.

பழைய எம்எல்ஏ ஹாஸ்டல் முதல் தளத்தில் பழ நெடுமாறன் ஐயாவின் கட்சி அலுவலகம் இருந்தது. நெடுமாறன் ஐயா எங்களைப் பார்த்து சிரித்தாள் நாங்கள் சிரித்து விட்டு போய் விடுவோம் ஒரு நாளும் அவரோடு போய் கதைப்பதில்லை காரணம் அவர் பிரபாகரனுக்கு மதுரையில் உதவி செய்வதால். அந்த நேரம் நெடுமாறன் ஐயாவும் இலங்கை அரசுக்கு எதிராக படகில் இலங்கைக்குப் போய் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக அதிரடி அறிவிப்பு செய்து, போராட போனபோது ராமேஸ்வரத்தில் என நினைக்கிறேன் அவர் போகும் படகை எம்ஜிஆர் அரசு பெரியஓட்டை போட்டு, படகு நகராத படிசெய்துவிட்டார்கள். நெடுமாறன் அய்யாவின் போராட்டத்தில் கலந்துகொள்ள சொல்லின் செல்வர் குமரி ஆனந்தன் போய் கலந்து கொண்டார். தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடந்து கொண்டிருந்தன. சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த தமிழ்மணி சென்னையில் ஒரு பெரிய மாணவர் போராட்டத்தை நடத்தினார்.

இப்படியான போராட்டங்கள் தமிழ்நாடு எம்ஜிஆர் அரசுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது, எம்ஜிஆர் விரும்பவில்லை. இந்தப் போராட்டங்களில் முன்னிலை நின்றவை, எம்ஜிஆர் அரசுக்கு எதிரான கட்சிகள் குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம். கலைஞர் தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் பெரிய போராட்டத்தை அறிவித்தார். இரண்டு நாளில் அந்தப் போராட்டம் நடக்க விருந்தது. எம்ஜிஆர் ஆதரவு பத்திரிகையான சுதேசமித்திரன் என நினைக்கிறேன் அதன் ஆசிரியர் ஜெபமணி என்பவர் வந்து உமா மகேஸ்வரனை சந்தித்து சும்மா பேசிக் கொண்டிருந்தார். அவரது பத்திரிகை மாலை பத்திரிகை.அன்று மாலையில் சுதேசமித்திரன் பத்திரிகை தலைப்புச் செய்தி விடுதலைப்புலி உமா மகேஸ்வரன் கருணாநிதிக்கு கடும் கண்டனம். ரயில் மறியல் போராட்டம் தேவையற்றது. கருணாநிதி எமக்கு ஆக்கபூர்வமான வழியில் ஆதரவு தர வேண்டும், இச் செய்தி வந்தவுடன் எல் கனேசன் அண்ணாஎங்களை வரச் சொல்லி என்னப்பா உமா இப்படி பேட்டி கொடுத்திருக்கிறார் என கடுமையாக கேட்டார். நாங்கள் இச்செய்திதவறு என்று கூறிவிட்டு, உமா அண்ணாவுக்குசெய்தி பற்றி அறிவித்தோம். உடனடியாக உமா அண்ணா வந்து எல். கணேசன்அண்ணாவையும் சந்தித்துவிட்டு,உடனடியாக என்னையும் கந்தசாமியும் கூட்டிக்கொண்டு கலைஞரிடம் நேரில் போய் இது பொய் செய்தி பத்திரிகை ஆசிரியர் என்னை வந்து சந்தித்தது உண்மை ஆனால் ரயில் மறியல் ஐ பற்றி இருவரும் பேசவில்லை. இந்தச் செய்தி வேணும் என்று போடப்பட்டது என்று கூறினார். கலைஞர் கருணாநிதி அமைதியாக எனக்கு தெரியும் இன்னும் எந்தெந்த வழிகளில் உங்களை சம்பந்தப்படுத்தி எனக்கு எதிராக செய்திகளை போடுவார்கள்.நாங்கள் நடத்தும் போராட்டங்களை நசுக்குவதற்கு எம்ஜிஆர் பல முறைகளை கையாண்டு வருகிறார் அதுவும் எனக்கு தெரியும். நீங்கள் மத்திய அரசு இப்போது எடுத்துள்ள புதிய ஆதரவு நிலையை விரைவாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் எனஆலோசனை கூறினார்.

.. .உமா மகேஸ்வரனுக்கு மனம் ஆறவில்லை வெளியில் வந்து சுதேசமித்திரன் ஆசிரியர் ஜெபமணி யைசுட போகிறேன் என ஆவேசப்பட்டார்.கந்தசாமியும் நானும் அவரை சமாதானப்படுத்தி கந்தசாமி தான் போய் பத்திரிகை ஆசிரியர் ஜெபமணி யை எச்சரிக்கை செய்து மறுப்பு செய்தி போட சொல்வதாககூறினார்.ராயப்பேட்டையில் இருந்த பத்திரிகை அலுவலகத்திற்குநானும் கந்தசாமியும் போனோம். ஆசிரியர் ஜெபமணி திமிராகப் பேசினார் கந்தசாமி கைத்துப்பாக்கியை எடுத்து மேசையில் வைத்துவிட்டு நாளை மாலை பத்திரிகையில் மறுப்பு செய்தி வராவிட்டால்நாளை இதே நேரம் வருவேன் விளைவுகள் விபரீதமாக இருக்கும் எச்சரிக்கை செய்துவிட்டு வந்தோம்.அதே நேரம் மற்ற பத்திரிகை அலுவலகங்களுக்கும் போய் இச்செய்தியின் மறுப்பறிக்கை எமது கடிதத் தலைப்பில் கொடுத்தோம்.அடுத்தநாள் சுதேசமித்திரன் பத்திரிகையில் முன்பக்கத்தில் ஆனால் சிறிதாக மறுப்பறிக்கை கொடுத்து மன்னிப்பு கேட்டிருந்தார். திமுக நடத்திய ரயில் மறியல் போராட்டம் மிக வெற்றிகரமாக நடந்தது. மத்திய அரசு தமிழ்நாட்டில் அன்று ரயில்களை இயக்க வில்லை.

தொடரும்





பகுதி 8

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங் கள்.

1983ஆண்டு ஜூலை மாதம் இனக்கலவரத்தில் சென்னை டெல்லியில் நடந்த நிகழ்ச்சிகள்

1983 ஆண்டு மார்சில் பிரபாகரனும் ராகவனும் நிபந்தனை அடிப்படையிலான பிணையில் விடுவிக்கப் பட்ட பொழுது மதுரையில் இருந்து இலங்கைக்கு தப்பிச் சென்றார்கள் .அதனால் ஏப்ரல் மாதக் இறுதியில் உமாமகேஸ்வரன் ,கண்ணன் என்ற சோதிஸ்வரன், நிரஞ்சன் என்ற சிவனேஸ்வரன் மூவரையும் சென்னை போலீசார் கைது செய்து சென்னை சென்ட்ரல் ஜெயிலில் அடைத்தார்கள்.

எம்ஜிஆர் ஆட்சியில் இவர்கள் கைது செய்யப்பட்டதோடு இலங்கை போலீசாரோடு தமிழ்நாட்டு டிஜிபி மோகனதாஸ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தப் பதற்ற சூழலில் பல உள்ளூர் தலைவர்களின் ஆலோசனைப்படி ஜூலை மாதம் சந்ததியர் கலைஞர் கருணாநிதியை சந்தித்த பொழுது அவரின் ஆலோசனைப்படி, பின்பு என்னையும் கூட்டிக்கொண்டு செஞ்சி ராமச்சந்திரன் எம்எல்ஏ சந்தித்தோம்.

அவர்தஞ்சாவூரைச் சேர்ந்த டெல்லி ராஜ்யசபா எம்பி ஆன L.கணேசன் அவர்களை எமக்குஅறிமுகப்படுத்தினார். அவர் தான் 22 ஆம் தேதி ஜூலை மாசம் டெல்லி போவதாகவும் தனக்கு முழு விபரங்களையும் கூறி உதவி செய்ய ஒருவரை தன்னோடு அனுப்பும்படி கூறினார். சந்ததியார் என்னைத்தான் அனுப்பினார

23ஆம் தேதி காலை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் நான், L.கணேசன் எம்பி, செஞ்சி ராமச்சந்திரன் எம்எல்ஏ, திமுக திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் டெல்லி

பயணமானோம்.

24ஆம் தேதி மாலை டெல்லியில் இறங்கியவுடன், இல் கணேசனின்டெல்லி வீட்டுக்குப்போய் விட்டு, உடன் கணேசன் எம்பி எங்களைக் கூட்டிக்கொண்டு பாராளுமன்ற திமுக அலுவலகத்திற்கு போனோம். அங்கு பல திமுக எம்பிக்கள் இருந்தார்கள் குறிப்பாக முரசொலி மாறன், வை. கோபாலசாமி, மாயத்தேவர் தி மு க பாராளமன்ற குழுத் தலைவர் அண்ணன் C.T தண்டபாணி இவர்களோடு என்னை அறிமுகப்படுத்திவிட்டு எல் கணேசன் அண்ணா இவர்களோடு தமிழ்நாட்டு அரசாங்கம் செய்யும் சதி பற்றி ஆலோசனை நடத்தி அடுத்தநாள் பாராளுமன்றத்தில் இதுபற்றி பேச ஏற்பாடு நடத்தினார்

அதோடு பிரதம மந்திரி இந்திரா காந்தியை சந்தித்து உமா மகேஸ்வரன் உட்பட மூவரையும் இலங்கைக்கு நாடு கடத்தக் கூடாது என ஒரு மனு தயாரித்து கொடுப்பதற்கு ஏற்பாடு செய்தார்.

அடுத்த நாள் விடியும் போது நிலைமையே வேறு, வெலிக்கடை சிறையில் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட விபரம் பரபரப்பாக இருந்தது. உடனடியாக என் கணேசன் என்னையும் செஞ்சி ராமச்சந்திரன் கூட்டிக்கொண்டு மற்றவர்களையும் உடன் பாராளுமன்ற திமுக அலுவலகத்துக்கு வரும்படி கூறி அங்கு ஆலோசனையில் ஈடு பட்டார். உடனடியாக பாராளுமன்றத்தில் இலங்கை இனப் படுகொலையையும் சேர்த்து பேசவும் பிரதம மந்திரி இந்திரா காந்தி அம்மையாரை சந்தித்து இனப்படுகொலையை தடுத்து நிறுத்தும்படி கேட்கவும் அவர்கள் முடிவு செய்தார்கள்.

அன்று நடந்த பாராளுமன்றக் கூட்டத்தின் போதும் ராஜ்யசபா அமர்வில் என்னையும் கூட்டிக்கொண்டு போய் பார்வையாளர்கள் இடத்தில் என்னை வை கோபால்சாமி அண்ணா அமர்த்தினார் பாராளுமன்றத்தில் கணேசன் வை கோபால்சாமி மிக உணர்ச்சி வசமாக பேசினார்கள் காங்கிரஸ் எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, பிரதம மந்திரி இந்திரா காந்தி அம்மையார் எழுந்து தனது கட்சிக்காரர்களை அமைதியாக இருக்கும்படி கூறி இவர்களின் பேச்சை உன்னிப்பாக கவனித்தார். பின்பு அவர் பதிலளிக்கும்போது முதல்முறையாக இலங்கையில் நடப்பதுஇனக்கலவரம் இல்லை, இனப்படுகொலை என பகிரங்கமாக பாராளுமன்றத்தில் கூறினார்

பின்பு 88ஆம் ஆண்டு வரை பல எம்பி மார் என்னை இலங்கை விவாதம் நடக்கும்போது பாராளுமன்றத்துக்கு ராஜ்ய சபா லோக் சபா பார்வையாளர் அரங்கில் கூட்டிக் கொண்டு போவார்கள் பாராளுமன்றத்தில் பேசுவதற்கு என்னிடம் தான் கூடுதலாக அவ்வப்போது நடக்கும் இலங்கை சம்பந்தப்பட்ட செய்திகளை குறிப்பு எடுத்துக் கொள்வார்கள்

தமிழ்நாட்டு திமுக எம்பிக்கள் இலங்கை விடயமாக பரபரப்பாக இருந்த போது ,27ஆம் திகதி காலை அந்த அதிர்ச்சி செய்தி வந்தது

திரும்பவும் வெலிக்கடைச் சிறையில் படுகொலை இந்திய பாராளுமன்றமே இலங்கைப் பிரச்சினையில் பரபரப்பாக இருந்தது வேறு எந்த விடயங்களும் பாராளுமன்றத்தில் எடுக்கவில்லை

.கலைஞரின் வேண்டுகோளின்படி டெல்லியில் மிகப் பிரம்மாண்ட எதிர்ப்பு ஊர்வலம்இலங்கை தூதுவர் ஆலயத்திற்கு முன்பாகநடத்த முடிவு செய்தனர்

இரவோடிரவாக கணேசனின் உறவினர் பையன் நான் மற்றும் சில தமிழ் இளைஞர்கள் சேர்ந்து விடிய விடிய கருப்பு , சிவப்புதுணி வாங்கி கையாலேயே திமுக கொடி தயாரித்து கிட்டத்தட்ட 150 கொடிகள்.அடுத்த நாள் மிக பிரம்மாண்டமான ஊர்வலம் டெல்லி வாழ் தமிழர்கள் எல்லாப் பகுதியிலிருந்தும் வந்தார்கள்

டெல்லி வாழ் மக்களே ஆச்சரியப்படும் அளவுக்கு ,நோர்த் அவென்யூ எம்பி மார் குடியிருப்பில் இருந்து கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தூரம் அளவிலிருந்த சாணக்கிய puri என்ற இடத்தில் இருக்கும் இலங்கை தூதுவராலயத்திற்கு ஊர்வலமாக எதிர்ப்பு கோஷங்களோடு போனோம்

நாம் அங்கும் போகும் போது எமக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியின் டெல்லிகிளையினர்இலங்கை அரசின் தூதுவராலயத்தின்முன்பாக மிகப் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தனர் எம் பசியின் வெளியில் உள்ள கேட்டை உடைக்கும்அளவுக்குப் போய்விட்டார்கள்.

நான் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி சென்னை வந்தபோது தான் ,முதல் நாள் 31ஆம் திகதி எம்ஜிஆர் அவசர அவசரமாக உமா மகேஸ்வரனையும்.தோழர்களையும் விடுதலை செய்தார்.

விடுதலை செய்த உடன் உமா மகேஸ்வரன்கலைஞரிடம் போகாமல் இருக்க, தனது மந்திரி சபையில் இருந்த காளிமுத்து வையும் அவரின் தம்பியையும்அனுப்பி ஜெயிலில் இருந்து நேரடியாக உமாமகேஸ்வரனை தனது தோட்டத்துக்கு கூட்டி வரச் செய்து கட்டிப்பிடித்து கவலைப்பட்டு தான் இலங்கை தமிழருக்கு ஆதரவாக இருப்பதாக சொன்னார். பல மாதங்கள் உமாமகேஸ்வரன் இடம் மிக நெருக்கமாக இருந்தவர் தான் எம்ஜிஆர் .

எம்ஜிஆர் உமா மகேஸ்வரன் கூட்டை திட்டமிட்டு பிரித்தவர்டிஜிபி மோகனதாஸ்.

மேலே கூறிய சம்பவங்களுக்கு பின்பு டெல்லியில் ஏற்பட்ட தொடர்புகளால் நான் டெல்லியில் எல் கணேசன் எம்பி வீட்டிலும் பின்னர் ஆலடி அருணா எம்பி வீட்டிலும் தமிழீழ மக்கள் விடுதலை கழக டில்லி அலுவலகத்தைத் திறந்து 1988 ஆம் ஆண்டு வரை சிறப்பாக செயல்பட முடிந்தது.

கீழே உள்ள இரு படங்களும் திமுக எம்பிக்கள் டெல்லியில் நடத்திய போராட்டங்களின் போது எடுத்தது

தொடரும்





பகுதி 7

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்

சந்ததியார் மாறன் போன்றவர்கள் சிறையில் இருப்பவர்களை மீட்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் செல்வாக்கான தலைவர்களை போய் பார்ப்பதும் வருவதுமாக இருந்தார்கள். புலவர் புலமைப்பித்தன் எம்ஜிஆருக்கு மிக மிக நெருங்கிய வராக, இருந்தாலும் அவர் முகுந்தன் மற்றவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பினால் தான் தனது சட்ட மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்ஜிஆர் அரசுக்கு எதிராக போராடுவேன் என கூறினார். எம்ஜிஆர் அரசின் மந்திரியாக இருந்த காளிமுத்து ஒரு படி மேலே போய், சிறையில் இருப்பவர்களை விமானத்தில் திருப்பி அனுப்பினால் தான் பறந்து போய் தடுப்பேன் எனக் கூறியதோடு அதை ஒரு கவிதையாகவும் படித்து பத்திரிகைகளுக்கு கொடுத்திருந்தார்.

அடுத்து என்ன நடக்குமோ என்ற மனநிலையோடு நாங்கள் எங்கள் வேலைகளைத் தொடர்ந்து செய்தோம். இக்காலகட்டத்தில் தமிழ்நாட்டின் சிறந்த தமிழ் அறிஞர் அருளி அவர்கள்பிறர் தொந்தரவு இல்லாமல் தமிழ் ஆராய்ச்சி புத்தகத்தை எழுத எங்களோடு வந்து தங்கியிருந்தார். அவர் தமிழ்ச் சொற்கள் பிற வெளிநாட்டு மொழிகளோடு எப்படி அடிப்படையாக இருந்தது என்று எழுதும்போது எங்களுக்கும் விளங்கப்படுத்தினார். சந்ததியார் , மொழி ஆராய்ச்சி பற்றி அருளியோடு நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருப்பார்.

..நாங்கள் எமது அலுவலகத்தில் நாங்களே சமைப்பதற்கு உரிய வேலைகளைப் பார்க்கத் தொடங்கினோம் அருளிஅண்ணாவும்உதவி செய்தார். பகல் உணவு மட்டும் தயார் செய்தோம். சோறு, பருப்பு கறி அல்லது மாட்டு இறைச்சி இதுதான் நாங்கள் சமைத்து சாப்பிடுவது.சந்ததியாருக்கு நாங்கள் பருப்பு கறி சமைத்து இருந்தாள் இருந்து பகல்சாப்பிட்டு விட்டுத்தான் போவார். சாப்பாட்டில் உப்பு புளி இல்லாவிட்டாலும் எங்களைஎங்களை பாராட்டி சாப்பாடு நன்றாக இருக்கிறது என்று அவர் சாப்பிடும் நாட்களில் கூறித் தான் செல்வார். அவர் அப்படிச் சொல்வது எமக்கு சந்தோஷத்தை கொடுக்கும். மாறன் ,கந்தசாமி சிலவேளைகளில் என்ன அடிக்கடி காலையில் வந்து மாட்டு இறைச்சி வாங்கி தந்து போவார்கள்.வேலைகளையும் முடித்துவிட்டு வந்து பகல்சாப்பிட்டு விட்டுத்தான் போவார் கள்.

தமிழ்நாடு காவல்துறை எங்களை கண்காணித்துக் கொண்டிருந்தாலும் எங்களுக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்கவில்லை ஆனால் உளவுத்துறை டிஜிபி மோகனதாஸ் உமா மகேஸ்வரன் மற்றும் தோழர்களை இலங்கைக்கு பிடித்துக் கொடுப்பது பற்றியே தீவிரமாக இருந்தார். அதே நேரம் மத்திய உளவுத்துறை IB உயர் அதிகாரிகள் இருவரும் எங்களை வந்து சந்தித்து நிலைமைகளை செய்திகள் சேகரித்து செல்வார்கள். அவர்கள் எங்களிடம் உளவுத்துறை என்று கூறாமல் மத்திய உள்துறை அமைச்சகம் என்றுதான் கூறுவார்கள் உண்மையும் அதுதான். மத்திய உள்துறையின் கையில்தான் IB இயங்கியது. நாங்கள் இவர்களின் முக்கியத்துவம் அறியாமல் இவர்களை அலட்சியமாக தான் நடத்தினோம். ஆனால் இந்த இரண்டு தமிழ் அதிகாரிகளும் மிகமிக நேர்மையானவர்கள். இவர்களின் ஆரம்ப கால அறிக்கைதான் இந்திரா காந்திக்கு போன முதல் ரிப்போர்ட். ஆனால் நாங்கள் தமிழ்நாடு காவல்துறை உளவுத்துறைக்கு மிக பயந்தோம்.

சிறையில் இருப்பவர்கள்இலங்கைக்கு நாடு கடத்த படுவார்கள் என்ற வதந்திகள் பரவிக் கொண்டிருந்த நேரம். சந்ததியார் இடம் மாறன் ,கந்தசாமி பல ஆலோசனை செய்து முகுந்தனை மட்டுமாவது வழக்குக்காக திருவள்ளூர் கோர்ட்டுக்கு கொண்டுபோகும் போது அல்லது திரும்ப வரும்போது தாக்குதல் நடத்தி மீட்பது என ரகசிய திட்டம் போட்டார்கள். இதைபற்றி கேள்விப்பட்ட கணபதிஎதிர்த்தார் காரணம் அவர்தான் வழக்கமாகப் கோர்ட்டுக்குப் போய் வருவது அது எல்லோருக்கும் தெரியும்.

மாறன் என்னை கூட்டிக்கொண்டு போய் பல நாட்கள் சென்னை மத்திய சிறைச்சாலையின் வெளியில் பார்வையாளர்கள் இருக்கும் இடத்தில் நிறுத்தி விடுவார். எனது வேலை சிறைக்காவலர்கள் மாறும் நேரத்தை தினசரி பதிவு செய்வது எத்தனை பேர் கைதிகளை எந்த வாகனத்தில்கூட்டிப் போகிறார் கள் எத்தனை போலீசார் போகிறார்கள் என்பது போன்ற தரவுகளை எடுக்கச் சொன்னார்கள். உண்மையில் அன்று அது எனக்கு மிகப் பெரிய சாகசம் போல் தோன்றியது. இன்று நினைக்கும் போது அது எவ்வளவு பெரிய சிறுபிள்ளைத்தனம் என்று நினைக்கத் தோன்றுகிறது. என்ன காரணமோ இந்த திட்டம் கைவிடப்பட்டு சந்ததியார் விடா முயற்சியாக அரசியல் வாதிகளை சந்திக்கும் ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்.

நான் மாறன் கந்தசாமி மாதவன் அண்ணா மத்திய ஜெயிலுக்கு உமா மகேஸ்வரன் மற்றவர்களை பார்க்க போய் வருவோம். தினசரி மாறன் அல்லது கந்தசாமி போய் வருவார்கள் சில வேலைகளைப் பற்றி கதைப்பது ஆயின் என்னை அல்லதுமாதவன் அன்னையை வரச்சொல்லி நாங்கள் செய்ய வேண்டிய வேலைகளையும் பற்றி பேசுவார். சந்ததியார் இந்தியாவந்த பின்பு முதன்முறையாக உமா மகேஸ்வரனைசந்திக்க போகும்போது நானும் கூட போனேன். நாங்கள் அவர்களை சிறையில் சந்திக்கும் போது என்னை தள்ளிப்போய் நிரஞ்சன்உடன் பேசிகொண்டு இருக்கும் படி கூறினார். நிரஞ்சன் என்னிடம் ரகசியமாக பெரியவருக்கும் தனக்கும் உள்ளே சரியான சண்டை எனவும் சண்டையை கண்ணன் தனக்கு எதிராக தூண்டி விடுவதாகவும் கூறி கவலைப் பட்டார்.

அதேநேரம் சந்ததியார் உமாமகேஸ்வரன் இடம் வாங்கி கட்டிக் கொண்டிருந்தார். இரண்டு விஷயங்கள் சம்பந்தமாக, முதலாவது இறைகுமாரன் உமைகுமரன் கொலை, வவுனியாவில் வைத்து விமானப்படை வீரர்கள் மீது தாக்குதல். எமது இயக்க முக்கிய தளமாக இருக்கும் வவுனியாவில் வைத்து தாக்குதல் விமானப்படை வீரர்கள் மீது செய்யும்போது வவுனியாவில் எமது செயற்பாடுகள் எல்லாம் அழிந்து விடும். என்று கடுமையாக சந்ததியார உடன் வாக்குவாதம் செய்தார். நாங்கள் இருவரும் பலவித மன குழப்பத்தில் வீடு திரும்பினோம்.

எங்களிடம்பல நண்பர்கள்கலைஞரை நேரடியாக சந்தித்து இதைப் பற்றி பேசும் படி கூறினார் சந்ததியார்கலைஞரை சந்தித்தார். இதன் பின்பு நடந்த செய்திகளை நான் முன்பே ஒரு பதிவு போட்டுள்ளேன் . அதைப் பின்பு எட்டாவது பதிவாக போடுவேன்

தொடரும்.





பகுதி 6.

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்

நான் தொடரை எழுதும் போது முகமறியா சில தோழர்கள் நான் என்னை முன்னிலைப்படுத்தி எழுதுவதாக வசை பாடினார்கள். அவர்களது கருத்துக்களை எடுத்து விட்டேன், நான் நேரடியாக சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை தான் எழுதுகிறேன். நான் கேள்விப்பட்ட செய்திகளை இத்தொடரில் எழுதமாட்டேன் நான் கேள்விப்பட்ட செய்திகள் நிகழ்ச்சிகளைபின்பு எழுதுவேன்.

எமது தலைவர்கள் கைது செய்யப்பட்ட பின்பு சந்ததியார் வந்து இங்கு அரசியல் வேலைகளில் ஈடுபட்டார். நான் எனது நாலாவது பதிவில் குறிப்பிட்டது போல் சந்ததியாரைபற்றிய தகவல்கள் இந்தப் பதிவில் தான் வரவேண்டும். சந்ததியார் தனது கட்டுப்பாட்டில் என்னையும் மாதவன் அண்ணாவையும் வைத்திருந்தார். சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய அரசியல்வாதிகளை பார்க்கப் போகும்போது என்னைஅல்லது மாதவன் அண்ணாவை கூட்டிப் போவார். ஒரு நாள் சந்ததியார் இலங்கையில் இருந்த விமானத்தில் வந்த ஜான் மாஸ்டரை கூட்டி வந்தார் எங்களிடம் இதான் மாஸ்டரை காட்டிமருத்துவக்கல்லூரி மாணவர் கழகத்தின் முக்கிய ஒருவர் எனக் கூறினார். நாங்கள் சந்தோஷப்பட்ட அளவுக்கு ஜான் மாஸ்டர் எங்களுடன் பழகவில்லை. எங்களை முட்டாள் போராளிகள் மாதிரிதான் பார்த்தார்.

ஆனால் சந்ததியார் அப்படி அல்ல. தவறு என்றால் கடுமையாக கண்டிப்பாய் இருப்பார். சில வேலைகளை நாங்கள் திறமையாக செய்யும்போது எங்களை மிக மகிழ்ச்சியாக தட்டிக் கொடுப்பார். சந்ததியார் உடன்பழகும்போது எச்சரிக்கையாக இருப்போம். துரையப்பா கொலை வழக்கில் சந்ததியார் சிறை சென்று மீண்டு வந்த பின்பு 78ஆம் ஆண்டு காலங்களில் மானிப்பாய் நவாலியில் அவரும் இன்பமும் சேர்ந்து இரவு ரகசிய வகுப்புகள் எடுப்பார்கள். நான் கலந்து கொண்டிருக்கிறேன். அந்த வகுப்புகளில் எமது தோழர் பார்த்திபனும் கலந்து கொண்டதை நானும்பார்த்திருக்கிறேன். பார்த்திபன் உம்மானிப்பாய்இந்துக்கல்லூரி மாணவன் தான்.

அக்கால கட்டங்களில் வழக்கு சம்பந்தமான எல்லா வேலைகளையும் எமது தோழர் கணபதி என்கிற விக்கி பார்த்துக் கொண்டார். நிரஞ்சன் கண்ணன் எக்மோர் கோர்ட்டிலும், உமா மகேஸ்வரன் வழக்கு திருவள்ளூர் கோர்ட்டில் நடந்தது. அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு நடத்தியவர் புகழ்பெற்ற இடதுசாரி சிந்தனைகள் உள்ள வழக்கறிஞர் என் டி வானமாமலை அவர்கள். வழக்கு நடக்கும்போது எங்களிடம் இருந்து ஒரு பைசா பணமும் பெற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திருவள்ளூர் போகும்போது தோழர் கணபதி காரை ஏற்பாடு செய்து கூட்டிக்கொண்டு போய் வருவார் கணபதி போக நேரம் ஆகிவிட்டால் தனது காரிலேயே போய்விடுகிறார் அதற்காக எங்களிடம் காசு கூட கேட்பதில்லை. எம் ஜி ஆர் எம் ஆர் ராதா சுடப்பட்ட வழக்கில் எம் ஆர் ராதா வுக்கு ஆதரவாகஆஜராகி வழக்குநடத்தியவர். இவரைப் போன்றவர்கள் மிக அபூர்வமான மனிதர்கள். வேறு பல அரசியல்வழக்கறிஞர்கள் உமா பிரபா வழக்கில் உதவி செய்வதாக கூறிபணம் பார்த்த விடயமும் உண்டு.

ஓரத நாட்டைச் சேர்ந்த இளவழகன், ராமசாமி , தமிழ்மணிபோன்றவர்களும் எம்மோடு ஓடி திரிந்தார்கள். பாவலேறு பெருஞ்சித்திரனார் ஐயா தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களை சந்தித்து கைது செய்யப்பட்டவர்களை இலங்கைக்கு நாடு கடத்தக் கூடாது என கேட்டு ஆதரவு திரட்டினார். தஞ்சாவூரை சேர்ந்த இரா.இரத்தினகிரி கால்நடை மருத்துவரும், திராவிடர் கழக பகுத்தறிவாளர்சங்கத் தலைவருமாக இருந்தவர். சந்ததி யாரையும் என்னையும் அழைத்துப் போய் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி இடம்அறிமுகப்படுத்தினார் அப்போது திராவிடர் கழக வருடாந்த மாநாடு நடக்க இருந்தது 1983 ஆண்டு மே மாதம் ஆக இருக்கலாம் என நினைக்கிறேன்.

அந்த மாநாட்டில் இவர்களை விடுதலை செய்யதீர்மானம் நிறைவேற்றுவதாக பெரியவர் வீரமணி அய்யா கூறினார் அதோடு மாநாடு ஊர்வலத்திலும் மாநாட்டிலும் வைக்க, பிடிக்க அட்டைகள் தயாரித்து தரும்படி சொன்னார். மாறனும் உடனடியாக உமா மகேஸ்வரன், கண்ணன், நிரஞ்சன் விடுதலை செய். விடுதலைப் புலிகளை விடுதலை செய். நாடு கடத்தாதே விடுதலைப் போராளிகளை. இந்திய அரசே தமிழ் ஈழத்தை ஆதரிக்க வேண்டும். போன்ற வாசகங்கள் அடங்கிய நூற்றுக்கணக்கான அட்டைகளை கொடுக்க நாங்களும் அதை திராவிடர் கழகத் தோழர்களிடம் கொடுத்தோம்கொடுத்தோம். மாநாட்டுக்கு கலந்துகொள்ள வந்த கோவைராமகிருஷ்ணன் என்ற இளைஞரை எமது வீட்டுக்கு அழைத்து வந்து ரத்தினகிரி அறிமுகம் செய்து வைத்த அந்த இளைஞர் ராமகிருஷ்ணன் மிக ஆர்வமாக இலங்கை அரசுக்கு எதிரான போட்டோக்கள் செய்திகள் இருந்தால் கேட்டார் ஆனால் சந்ததியார் தட்டிக் கழித்து விட்டார் பின்பு தருவதாக. பின்புசந்ததியார் இடம் காரணம் நான் கேட்டபோது,இவர்களை எல்லாம் நாங்கள் ஆதரிக்க கூடாது எங்கள் படங்களை வைத்து இவர்கள் கண்காட்சிகள் வைத்து பணம் சம்பாதித்துக் கொள்வார்கள் எனக் கூறினார். நாங்கள் தவறவிட்ட அந்த சந்தர்ப்பத்தை விடுதலை புலிகள் குறிப்பாக பேபி சுப்பிரமணியம் பயன்படுத்திக்கொண்ட ராமகிருஷ்ணன் சுற்றிச் சுழன்று தமிழ்நாடு முழுக்க விடுதலைப்புலிகளை ஆதரித்தும் பணமும் சேகரித்தும் கொடுத்தார் ..அவர் தனது திறமையால் விடுதலைப்புலிகளுக்கு நினைத்துபார்க்க முடியாதஉதவிகளைச் செய்து கொடுத்தார். இன்றும்அவர் ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டங்களை நடத்துவார். பெரியார் திடலில் முதன்முதலில் பேபி சுப்பிரமணியத்தை (பிற்காலத்தில் இவர் இளங்குமரன் விடுதலைப்புலிகளின் கல்வி பொறுப்பாளராக இருந்தார் என நினைக்கிறேன்)தூர இருந்து மாறன் காட்டினார். ஒரு பையுடன் வந்த பேபி சுப்ரமணியம் தனியாக ஒரு இடத்துக்குப் போய் தான் போட்டிருந்த பேன்ட் சட்டையை கழட்டி மடித்து பையில் வைத்து விட்டு பையிலிருந்து ஒரு கசங்கிய அழுக்கான வேட்டி, சட்டையைஎடுத்துஅணிந்துகொண்டு திராவிடர் கழக தலைவர்களை சந்திக்க போவார்.

திராவிடர் கழக மாநாடு நடக்கும் நாள் பெரியார் திடலில் நானும் கந்தசாமியும் எமது புத்தகங்கள், இலங்கை அரசுக்கு எதிரான புத்தகங்கள், காந்தளகம் வெளியீடுகள் போன்றவற்றை விற்பனைக்கு வைத்தோம். நமக்கு அருகில், இன்று திராவிடர் கழக வழக்கறிஞர் அணி தலைவராக இருக்கும் திருமதி அருள்மொழி என்பவர் சிறுமியாக அவரின்தாயுடன்திராவிடர் கழகம் பெரியார் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார் ரத்தினகிரி அவர்களிடம் விற்பனையில் எங்களுக்கு உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டார். பகல் 2 மணிக்கு போல் ஊர்வலம் தொடங்கியது எமதுநூற்றுக்கணக்கான அட்டைகள் பொதுமக்களை ஆச்சரியத்துடன் பார்க்க வைத்தன மத்திய மாநில உளவுத் துறை அதிகாரிகள் போட்டோ எடுத்து குறிப்புகள் எடுத்தார்கள். சென்னை மெரினா பீச்சில் மிகப் பெரிய மாநாடு நடக்க இருந்தது. ஆனால் ஊர்வலம் மெரினா கடற்கரையைநெருங்கியதும் பெரியமழை பிடித்துக் கொண்டது மழையில் நனைந்து கொண்டே எல்லோரும் திரும்ப பெரியார் திடலுக்கு ஓடினோம் அங்கு இரவு 12 மணி வரை மாநாடு நடந்தது நமக்கு ஆதரவான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடரும்






பகுதி 5

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்

சென்னையில் எனதும் மாதவன் அண்ணாவின் வினதும்வேலைகள் கூடிக்கொண்டு போய் குடிகொண்டிருந்தன கடிதத் தொடர்புகள் எங்கள் வெளியீடுகள் போன்ற பல வேலைகள். நாங்கள் எமது இறந்த தோழர்களின் நினைவாக சுந்தரம் , ஊர்மிளா தேவி, காத்தான் கிருஷ்ணகுமார் போன்றவர்களின் நினைவுத் தபால்தலைகளை சிவகாசியில் அச்சடித்து பார்சல் சென்னைக்கு வரும் வழியில் மணப்பாறை வருவாய்த்துறை செக்போஸ்டில் பிடித்துவிட்டார்கள்.

உமா மகேஸ்வரன் எமது பயிற்சியாளர் சேகரை கூப்பிட்டு இரண்டு நாளில் மதுரை போகும் போது என்னையும் கூட்டிக்கொண்டு போய் மணப்பாறை விஷயத்தை கவனிக்க சொன்னார் சேகரும்நானும் மதுரை போய் சேகர் மதுரையில் தனது உறவுக்காரர் இன் மொத்த விற்பனைக் கடையில் என்னைத் தங்க வைத்தார் சேகர் முத்திரை பார்சல் பிடிப்பட்ட காரணத்தை அறிந்து வந்து கூறினார் வரி கட்டாததால் பிடிபட்டதாக ,பின்பு நான் மட்டும் மணப்பாறை போய் செக்போஸ்ட் அலுவலகத்தில் விவரம் கோரி வரி விபரங்கள் கேட்டுகொண்டிருக்கும்போது. தூரத்தில் இருந்து என்னை கவனித்துக் கொண்டிருந்த ஒருவர் என்ன விஷயம் என விபரம் கேட்டார்.பின்பு நீங்கள் சிலோன் ஆ என கேட்டார். நான் மறுத்துவிட்டு பின்பு உண்மையை ஒத்துக் கொண்டேன் நீங்கள் விடுதலைப் புலிகளா எனக்கேட்க நான் ஆம் என்றேன்.அக்காலத்தில் எல்லா இயக்கங்களையும் விடுதலைபுலிகள் என்றே கூறுவார்கள்.

நான் துணிந்து ஒரு பொய்யை கூறினேன் வருவாய்த்துறை அமைச்சர் எஸ் டி சோமசுந்தரம் தான் அனுப்பினார் என்று. உடனடியாக என்னோடு பேசிக் கொண்டிருந்த நபர் வருவாய் துறை அதிகாரிகளிடம் போய் ,ரகசியம் பேசிவிட்டு வரி கட்டாமல் முத்திரைத்தாள் வெளியில் எடுப்பதற்கு உரிய ஆவணங்களை எனது கையில் கொடுத்தார் அடுத்து வரும் லாரியில் சென்னைக்கு

அனுப்பி விடுவதாகவும் சென்னையில் பெற்றுக் கொள்ளும்படியும் கூறினார் பின்பு என்னோடு பேசிக் கொண்டிருந்த நபர் என்னைக் கூட்டிக்கொண்டு போய் தேநீர் சாப்பாடு எல்லாம் வாங்கிக் கொடுத்து சென்னை போகும் பஸ்ஸில் அனுப்பி வைத்தார் பஸ் புறப்படும் முன் தன்னை யாரென்று அறிமுகப்படுத்தினர் அவர் மணப்பாறை கியூ பிரான்ச் இன்ஸ்பெக்டர். அவருக்கு நன்றி கூறி சென்னை புறப்பட்டு வந்தேன்.

சென்னையில் எங்களுக்கு ஒரு நாளைக்கு பத்து ரூபா படி, ஒரு மாதத்துக்கு 300 ரூபாய் சாப்பாட்டு செலவுக்கு தந்துவிடுவார்கள். நானும் மாதவன் அண்ணாவும் காலை உணவு சின்னபிரெட் ஐம்பது காசு, தேநீர் 25 காசு. கடலை மிட்டாய் 10 காசு நமக்கு காலை உணவு ஒரு ரூபாய்க்குள் முடிந்துவிடும். மதியம் எப்பவும் சைவ அளவு சாப்பாடு தான் அளவுச் சாப்பாடு ஒரு ரூபாய் 50 காசு நாங்கள் சர்வர் நண்பரை நன்றாக பழகிக்கொண்டு, அவரிடம் சாம்பார் திரும்பத் திரும்பக் பெறுவோம் கடை முதலாளிக்கு தெரிந்தால் திட்டுவார் இப்படியாக மதிய உணவை முடித்துக்கொண்டு வெளியில் வந்து கடலைமிட்டாய் வாழை பழம் சாப்பிடுவோம்.இரவு உணவு பக்கத்தில் இருக்கும் முனியாண்டி விலாஸ் க்கு போ அளவுச் சாப்பாடு அங்கு மீன் குழம்பு மட்டன் குழம்பு கோழி குழம்பு கிடைக்கும் வெறும்குழம்பும் மட்டும்தான். அளவு சாப்பாடு விலை ஒரு ரூபாய் 75 காசு.அங்கு மீன் மட்டும் வாங்க சாப்பிட ஆசை இருந்தாலும் வாங்கி சாப்பிட காசு பத்தாது. மீன் கோழி மட்டன் எல்லாம் ஐந்து ரூபாய் தான் இருக்கும். சிலவேளைகளில் நமது உணவு செலவு கூடிவிட்டால் ( பத்து ரூபாய்க்கு) நானும் மாதவன் அண்ணாவும் போய் சைக்கிள் ரிக்ஷாகாரன் சாப்பிடும் கதம்ப சாப்பாடு வாங்கி சாப்பிடுவோம் சாப்பாடு என்பது சாப்பாட்டு கூடை காரர்கள் அலுவலகங்களில் வேலை செய்யும் ஆட்களுக்கு அவரவர் வீடுகளிலிருந்து சாப்பாடு வாங்கிக் கொடுத்துவிட்டு திரும்பி சாப்பாட்டு கேரியரை எடுத்து வரும்போது நிச்சயம் மிச்சம் இருக்கும் உணவு வகைகளை ஒன்றாகப் பிசைந்து மிக பெரிய ஒரு கைப்பிடி அளவு தரும் உணவுதான் கதம்ப சாப்பாடு விலை 50 காசு..

எமது வீட்டில் வைத்து உமா மகேஸ்வரனுக்கு நிரஞ்சன்னுக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது வளர்ந்து பிற்காலத்தில் நிரஞ்சன்கொலை செய்யும் அளவுக்கு போய்விட்டது. அது சம்பந்தமாக தொடர்கள் முடிந்த பின்பு எழுதுவேன்.

எமது வேலைகள் சுமூகமாகப் போய்க் கொண்டிருக்கும் வேளையில் ஜாமீனில் வெளிவந்திருக்கும்தமது தலைவர்களை ஜாமீனை ரத்து செய்து திரும்ப கைது செய்வதற்காக எம்ஜிஆர் அரசு ,மோகனதாஸ் உளவுத்துறை தலைவர் முயற்சி செய்வதாக தகவல்கள் வந்தன.

ஒரு நாள் புலவர் புலமைபித்தன் இடம் ஒரு செய்தியை எமது பத்திரிகை ஆசிரியர் மறைமலையான் அவர்கள் கொண்டு வந்தார் அவசரமாக உமா மகேஸ்வரனை ,மாறனை. சந்திக்க வேண்டுமென மிகஅவசரமும் கூட என, மாறன் வந்த பின்பு மாறன் என்னையும் கூட்டிக்கொண்டு புலவர் புலமைப்பித்தன் வீட்டை போனபோது, மிக பதட்டத்தோடு, மதுரையில் இருந்து பிரபாகரன் அமைச்சர் காளிமுத்து மூலம் ரகசியசெய்தி அனுப்பி இருப்பதாக. தங்கள் ஜாமீன் ரத்து செய்து திரும்ப கைது செய்யும் முன் தானும் ராகவனும் இலங்கைக்கு தப்பி செல்வதாகவும் உமாமகேஸ்வரன் யும் நண்பர்களையும் உடன் தப்பிப் போகும் படியும் செய்தி அனுப்பியிருந்தார். நாங்களும் நன்றி கூறி வந்து உமா மகேஸ்வரன் இடம்விபரத்தை கூறினோம். உமா பிரபாகரனை நம்ப முடியாது எங்களை தப்பிப் போக சொல்லிவிட்டு தான் போக மாட்டான் அப்படி செய்தால் எங்களுக்கு தான் பிரச்சனை பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார். பிரபாகரன் தப்பிப் போன செய்தி இரண்டு நாளில் எனக்கு கிடைத்தது. உடனடியாக நாங்களும் பரபரப்பாக அடுத்தகட்ட நிலைக்கு வேலைகளைத் தொடங்கினோம் உமா மகேஸ்வரன் அமைந்தகரையில் மிக ரகசியமாக தங்கியிருந்தார் வீட்டிலிருந்து இடம் மாறினார் மாறன் என்னை முதல் முறையாக அந்த இடத்துக்கு கூட்டிக்கொண்டு போய் அங்கிருந்த முக்கிய பொருட்கள் ஆவணங்கள் டைப்ரைட்டர் ரேடியோ போன்றவற்றை என்னிடம் ஒப்படைத்தார். நான் எமது ரகசிய அலுவலகம் என நினைத்த இடத்தில் அப்பொருட்களை கொண்டுவந்து வைத்தேன். உமா மகேஸ்வரன் தலைமறைவாக முடிவு செய்தார் எமது அலுவலகம் வந்து பணம் நாங்கள் செய்ய வேண்டிய வேலைகள் என்பவர் குறித்துக் கொடுத்த அதே நேரம் மாறன் கந்தசாமி பெரிய செந்தில செங்கல்பட்டு முகாம் வேலைகள் எப்படி எப்படி செய்ய வேண்டும் என நாங்கள் ஒருவருக்கொருவர் தேவையேற்படின் எப்படி தொடர்பு கொள்ள வேண்டும்கூறினார்.

இரவு அம்பாசடர் காரில் கந்தசாமி யோடு வந்து என்னையும் காரில் ஏற்றிக்கொண்டு இரவு 11 மணி போல் கலைஞர் கருணாநிதியை சந்திக்க கோபாலபுரம் வீட்டுக்கு சென்றோம். அங்கு கலைஞர் எல்லா விபரங்களையும் கேட்டு விட்டு தப்பி ஓடுவது தவறு என்றும் அது உங்களை இந்தியாவில் ஒரு குற்றவாளி போல் காட்டும் நீங்கள் பிற்காலத்தில் இந்தியாவில் உங்கள் போராட்டத்தை தொடர முடியாது உங்களை திரும்ப கைது செய்தால் பயப்பட வேண்டாம் நாங்கள் உங்களுக்கு துணையாக நின்று போராட்டம் நடத்துவோம் உங்களை அவ்வளவு எளிதில் இலங்கைக்கு ஒப்படைக்க முடியாது நாங்கள் மத்திய அரசோடும் அதைப்பற்றி பேசுகிறோம் என எங்களுக்கு தைரியம் சொன்னார்.

உமா மகேஸ்வரன் தலைமறைவாக எண்ணத்தைக் கைவிட்டு எமது வேலைகளை எச்சரிக்கையாக செய்தோம். ஆனால் அடுத்த நாள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு உமா கண்ணன் நிரஞ்சன் கையெழுத்துப் போட போகும் போது அவர்கள் ஜாமின் ரத்து செய்யப்பட்டு

கைது செய்யப்பட்டார்கள். மாறன் உடனடியாக எங்களுக்கு செய்தியை பரிமாறிவிட்டு, மிகத் திறமையாக எங்களை எங்களுக்குரியவேலைகளை ஒழுங்குபடுத்தினார. ஆனாலும் நாங்கள் திகிலோடு ஒரு வித பயத்தோடு தான் இருந்தோம்.

தொடரும்.




பகுதி 4


1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்

நான் சென்னையில் வந்து இறங்கியதும் தமிழ் மன்னன் பழைய எம்எல்ஏ ஹாஸ்டல் சென்றார். நான் நான் தங்கியிருந்த லாட்ஜ் க்குப் போனேன். வாசலிலேயே என்ன பார்த்துவிட்ட லாட்ஜ் மேனேஜர் கண்ணாலேயே திரும்பிப் போகும்படி சைகை காட்டினார்.எனக்கு ஒன்றும் புரியவில்லை .வெளியில் வந்து பக்கத்தில் இருந்த டீக்கடையில் நின்றேன். டீ குடிப்பது போல் வெளியில் வந்த லாட்ஜ்மேனேஜர் என்னிடம் கடந்த மூன்று நாட்களாக தமிழ்நாட்டு உளவுத்துறை அதிகாரிகள் என்னைப்பற்றி விசாரித்ததாகவும் ஒரு அதிகாரி 24 .மணி நேரமும் என்னை பிடிப்பதற்காக லாட்ஜ்அலுவலகத்தில் வந்து அமர்ந்து இருப்பதாகவும் கூறி வரவேண்டாம் எனபோகச் சொன்னார்.

நான் உடனடியாக தமிழ் மன்னன் இடமும், பாவலர் அய்யா பெருஞ்சித்திரனார் தென்மொழி அச்சகஅலுவலகம் போய்ஐயாவிடம் மாறன் ,கந்தசாமி வந்தால் தகவல் சொல்லும்படியும், நான் பழைய எம்எல்ஏ ஹாஸ்டல் இருக்கும் இடத்தில் உள்ள ஆலமர இயற்கை விநாயகர் கோயில் பக்கத்தில் இருப்பதாகவும் கூறினேன்.

மாலையில் மாறன் தமிழ்மணி என்பவருடன் வந்தார். தமிழ் மணி எனக்கு தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து தருவார் தகவல்கள் முக்கிய செய்திகள் தமிழ்மணி மூலம் வரும் எனவும் கூறினார். (தமிழ் மணியை பற்றி கூற வேண்டும் இவர் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் சென்னை சட்டக் கல்லூரியில் அப்போது படித்துக் கொண்டிருந்தார் இளவழகன் ராமசாமி போன்றவர்களின் உறவினர் எமது ஈழ விடுதலைக்காக உதவி புரிந்தார் அவரைப் பற்றி ஒரு சம்பவம் ஒரு முக்கிய தகவலை கொடுப்பதற்காக புரசைவாக்கத்தில் அவர் தங்கியிருந்த விடுதியிலிருந்து எமது மறைமுக அலுவலகம் அமைந்திருந்த திருவல்லிக்கேணி கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் தூரம் இருக்கும் கையில் பஸ்ஸுக்கு காசு இல்லாமல் நடந்தே வந்தார் வேர்க்க விருவிருக்க இப்போது தமிழ்மணி சென்னையில் வக்கீலாக இருக்கிறார்.)

என்னை கூட்டிக்கொண்டு போய் சென்னை மாநிலக் கல்லூரி இன்விக்டோரியாஆண்கள் விடுதி இல் தங்கிப் படித்துக் கொண்டிருந்த மன்னார்குடியை சேர்ந்த பாண்டி தென்னவன் என்றமாணவனிடம் என்னைஅறிமுகப்படுத்தினார். அக்காலகட்டங்களில் இலங்கை பிரச்சனை பெரிதாக இல்லை உமா பிரபா சுடப்பட்ட பிரச்சனை ஓரளவு விளங்கியவர்கள். தமிழ்மணி பாண்டி தென்னவன் இடம்விபரம் கூறி என்னை கவனமாக பார்த்துக் கொள்ள சொன்னார். அவரும் யாருக்கும் தெரியாமல் அவரது ஹாஸ்டல் ரூமில் என்னைத் தங்க வைத்துக் கொண்டு அவரது மிக நெருங்கிய நண்பர்களிடம் மட்டும் என்னை பற்றிய விபரங்களைக் கூற அவர்களும் என்னை கவனமாக பார்த்துக் கொண்டார்கள். மற்ற மாணவர்கள் கேட்டால் ஊரிலிருந்து தங்கள் உறவினர் பையன் வந்திருப்பதாகக் கூறினார்கள். எனக்கு உணவு வாங்கி வருவதிலிருந்து ஒரு படத்துக்கும் கூட்டிப் போனார்கள் டி ராஜேந்தர் நடித்த உயிருள்ளவரை உஷா படம்.(இன்று பாண்டி தென்னவன் தஞ்சாவூரில் வக்கீலாக இருப்பதாக அறிந்தேன் தொடர்பு இல்லை)

கிட்டத்தட்ட இருபது நாட்கள் அங்கு தலைமறைவாக இருந்தேன். பின்பு உமா மகேஸ்வரனும் , மாறனும் வந்து வேலைகளுக்காக நிர்வாக வசதிக்காக ஒரு தலைமறைவு அலுவலகம் போட ஒரு வீடுதேடச் சொன்னார்கள். அப்போது நாங்கள் எடுத்த தலைமறைவு வீடுதான் 28CNKரோடு திருவல்லிக்கேணி.தமிழ்நாடு போலீஸ்உளவுத்துறைக்கு கண்ணில் மண் தூவி விட்டோமென்று சந்தோஷத்தோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் இந்திய அலுவலகம் செயல்படத் தொடங்கியது.நானும் மாதவன் அண்ணனும் சேர்ந்து நிர்வாக வேலைகளை செய்தோம். பாவலரேறு பெருஞ் சித்தனார் ஐயாவின் தென்மொழி அச்சகமும் ,ஐயாவின் வீடும் நமக்கு மிக அருகாமையில் இருந்ததால் எமது தோழர்களுடன் தகவல் தொடர்புக்கு எளிதாக இருந்தது.

83ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்உமாமகேஸ்வரன் எனது பெயரை வெற்றிச்செல்வன் மாற்றினார். அந்தப் பேரோடு எனது இயக்க வேலைகள் தொடர்ந்தன. எனக்கு சென்னையின் வடசென்னை தென் சென்னை போன்ற எல்லா இடங்களையும் சைக்கிளில் போய்வர அறிமுகம் செய்தவர் குரு பாவலரேறு ஐயாவின் மகனும் எனது நண்பருமான பொழிலன் தான். உமா மகேஸ்வரன் நாங்கள் அச்சிட்ட மக்கள் பாதை மலர்கிறது என்ற பத்திரிகையை சென்னை கடைகளுக்கு விற்பனை செய்துபோடுவதற்கு பொழிலன் இடம் உதவி கேட்டார். பொழிலன் தென்மொழி வெளியீடுகளான தமில்நிலம்

தமிழ்ச்சிட்டு தென்மொழி பத்திரிகை களை கடைகளுக்கு போடபோகும் போது, நானும் ஒரு வாடகை சைக்கிளை எடுத்துக்கொண்டு எமது புத்தகங்களை சைக்கிளில் கட்டி காலை மணி எட்டு மணி போல் முதலில் வடசென்னை பக்கம் போவோம். நாங்கள் சைக்கிளை எடுத்து புறப்படும் போது பெருஞ்சித்தனார் அய்யா வாசலில் வந்து தனது மகனைபார்த்து, தம்பியை மிகக்கவனமாக கூட்டிக்கொண்டு போ, தனியே விட்டு விடாதே என்று கூறும்போதுஅவருக்கு எங்கள் மேல் இருந்த அன்பும் பாசமும் தான். இதில் சிறப்பு என்னவென்றால் என்னை விட வயதில் சிறியவர் பொழிலன். இருவரும் முதல்நாள் வடசென்னை கடைகள் அடுத்த நாள் தென் சென்னைகடைகள் என போய் வருவோம். காலையில் போனால் மாலை ஏழு மணியாகும் வர. கையில் காசு இருந்தாலும் செலவழித்து சாப்பிட உரிமை இல்லை அதே நேரம் மனமும் நமக்கு இல்லை. அம்பது காசு எலுமிச்சை சர்பத் மட்டும் குடிப்போம்.

இக்காலகட்டங்களில் எமது முதல் செங்கல்பட்டு முகாம் ரகசியமாக இயங்கத் தொடங்கியது சந்ததியார் ஜான் மாஸ்டர். வந்து போவார்கள். கண்ணன் என்ற சோ திஸ் வரணும் நிரஞ்சன் என்ற சிவனேஸ்வரன்ன்வெளியூரில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீன் ரத்து செய்யப்பட்டு இவர்களும் சென்னை வந்துவிட்டார்கள் நிரஞ்சன் என்னோடு தங்க வைக்கப்பட்டார். கந்தசாமியும், மாறனும் தான் மிக மிக மிக ஓய்வு இன்றி வெளியூர் உள்ளூர் என்று பயணப்பட்டு கொண்டு திரிவார்கள். சந்ததியார் ரகசியமாக என்னிடமும் மாதவன் அண்ணாவிடம் மாறனும், கந்தனும் என்ன செய்கிறார்கள் எங்கு போய் வருகிறார்கள் என கேட்பார். நாங்கள் எமக்கு தெரியாது என கூறுவோம். சந்ததியார் நாங்கள் பொய்கூறுவதாக நினைத்து எங்களிடம் கோபப்படுவார். உண்மையில் எங்களுக்கு தெரியாது

இளவழகன் ராமசாமி சாமி தவுடன் தமிழ்மணி எமதுபத்திரிகை ஆசிரியர் மறைமலையான் போன்றவர்கள் அடிக்கடி வந்து போய் வருவார்கள் உமா. மகேஸ்வரனும் அடிக்கடி ரகசியமாக வந்து போவர்

தமிழ்நாடு மேலவை துணைத் தலைவரும் கவிஞருமான புலவர் புலமைப்பித்தன் அடிக்கடி உமா மகேஸ்வரனை தனது வீட்டுக்கு கூப்பிடுவார். உமா என்னையும் கந்தசாமி யையும் சேர்த்துக் கூட்டி போவார். காரணம் காலை சாப்பாடாக இருந்தாள் என்ன பகல் சாப்பாடாக இருந்தால் என்ன, இரவு சாப்பாடாக இருந்தால் என்ன மீன் இறைச்சி கோழி என பல வகை உணவு வகைகளுடன் சாப்பாடு கட்டாயம் சாப்பிடணும் என்று கூறி வற்புறுத்தி சாப்பிட வைப்பார் இதற்கு பயந்து தான் உமா எங்களைக் கூட்டிக்கொண்டு போய் விட்டுவிடுவர். உமா தனக்கு வேலை இருப்பதாக கூறி போய்விடுவார். புலவர் புலமைப்பித்தன் கவலைப்பட்டாலும், புலவரும் குடும்பமும் மிக மிக அன்போடு உணவு பரிமாறுவார்கள். ஒருமுறை அவர் வீட்டு விசேஷத்துக்கு அழைத்து இருந்தார். மாறன் நான் உமா போயிருந்தோம். எப்போது சென்னைக்கு வழக்குதவணைக்காக வந்திருந்த பிரபாகரன் அவருடன் கூட பேபி சுப்ரமணியம் ராகவனும் என நினைக்கிறேன் அங்கு வந்தார்கள். அவர்கள் வந்து தங்குவதற்கு மொட்டை மாடியில் ஒரு அழகான குடிசை போட்டு வைத்திருந்தார். பிரபாகரன் குழுவினர் மொட்டை மாடிக்கு போய் விட்டார்கள். நாங்கள் அங்கு நிலைமை சரியில்லை என்று கூறிபுலவரிடம் சொல்லிக் கொண்டு எமது இடத்துக்கு திரும்புவதற்கு முயற்சி செய்தபோது புலவர் புலமைபித்தன் எங்களை விடவில்லைமிகவும் கவலைப்பட்டார், உமாமட்டும் தனக்கு வேலை இருப்பதாகச் சொல்லி போக அவருக்கு பாதுகாப்பாக மாறனும் போய், பின்பு கந்தசாமியை அழைத்துக்கொண்டு வந்தார். கந்தன் ஆயுதத்தோடு வந்து இருந்தார். அந்த அசைவ விருந்தை சாப்பிட முடியாமல் சாப்பிட்டோம். மாறன் கூறியபடி பிரபாகரன் ஆட்கள்போகும் வரை அங்கு இருந்தோம். நாங்கள் உரிமையோடு இருந்தது புலவருக்கும் மிக சந்தோசம். பின்பு தான் எனக்கு தெரிந்தது கந்தசாமி பிரபாகரன் போகும்போது ரோட்டில்வைத்து அவரை போடுவதற்கு முயற்சி செய்யப்போவதாக. எனக்கு ஆர்வமும் மிக பயமாக இருந்தது. ஆனால் என்ன காரணமோ மாறனும் கந்தசாமியும் அந்தத் திட்டத்தை கைவிட்டார்கள்.

நாங்கள் ரகசிய அறை அலுவலகம் என்று நினைத்திருந்த வீட்டுக்கு முன்னால் புதிதாக ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி அமர்ந்திருப்பார் அவருடன் நாங்களும் வேலைகளை கொடுப்போம். கிட்டத்தட்ட அந்த இடத்தை நாங்கள்மூன்று வருடங்கள் வைத்திருந்தோம். 1988 ஆம் ஆண்டு நான் டெல்லிஅலுவலகத்தை மூடிவிட்டு சென்னை வந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழக இந்திய பிரதிநிதியாக பொறுப்பேற்ற போது மரியாதை நிமித்தம் தமிழ்நாடுஉளவுத்துறை ஐஜி சந்திக்கச் சென்றபோதுஅங்கு ஒருவர் வந்து என்னை சுகம் விசாரித்து விட்டு என்னை தெரிகிறதா என்று கேட்டார். நான் மறந்துவிட்டேன் தெரியவில்லை என்று கூறினேன்.அப்போதுதான் அவர் கூறினார் நான் தான் உங்கள் திருவல்லிக்கேணி அலுவலகம் முன்பு செருப்பு தைக்கும் தொழிலாளி என்று. அப்போதுதான் தெரியும் அப்போதே எங்களைகண்காணிக்க தமிழ்நாடு உளவுத்துறை ஏற்பாடு செய்திருந்தது என்று. ஆனால் நாங்கள் அது ரகசிய இடம் என்று நினைத்திருந்தோம்

உமாமகேஸ்வரன் மற்றும்மற்றவர்களின் வழக்குகளை அப்போது தோழர் கணபதி என்ற விக்கி என்ற விக்னேஷ் வரன்பார்த்து கொண்டார் அதைப் பற்றி பின்பு எழுதுகிறேன். உமது தமிழகத்தின் குரல் வானொலி இயங்க முழு மூச்சாக வேலை செய்த டெக்னிக்கல் வேலை முழுவதும் தோழர் பார்த்திபன் தான் பொறுப்பு ஜூலை கலவரத்துக்கு முன் நடந்த பல சுவாரசியமான விடயங்கள் அவருக்கு தெரியும் அவரும் தனது பங்களிப்பை பற்றியும் தனக்குத் தெரிந்த விடயங்களை எழுதினால் பல செய்திகள் எமக்கு அறியக்கூடியதாக இருக்கும்.இந்த பதிவை படித்தால் கட்டாயம் பழைய செய்திகளை எழுத வேண்டும் என வேண்டுகிறேன்.

தொடரும்.

.



பகுதி 3

ஈழ விடுதலை இயக்கங்களும் இந்திய தொடர்புகள் எனதுநேரடிப் பங்களிப்பும் அறிந்த செய்திகளும்

நான் டெல்லி போவதற்கு ஆயத்தப்படுத்திக் கொண்டு வந்த வேலை என்னோடு தமிழ் மன்னனும், எமது தமிழீழ விடுதலை அணி தலைவர்ஈழவேந்தன் உம் கூட வருவதாக மாறன் கூறி மூவருக்கும் சென்னையிலிருந்து டெல்லி போகும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பதிவு செய்த ரயில் டிக்கெட்டுகளை தந்தார் காலையில் ஏழு மணிக்கு புறப்பட்ட ரயிலில்நாங்கள் மூவரும் போனோம் ரயிலில் ஈழ வேந்தனுக்கு ம் தமிழ் மன்னனுக்கும் சரியான சண்டை.அமெரிக்காவில் வருடாவருடம் டாக்டர் பஞ்சாட்சரம் தலைமையில் தமிழ் ஈழ விடுதலை மாநாடுநடத்துவார்கள். மாநாட்டின் முடிவில் அடுத்த பொங்கலுக்கு அல்லது தீபாவளிக்கு அல்லது புதுவருஷத்துக்கு தமிழீழம் கிடைக்கும் என்று கூறி மாநாட்டை முடிப்பார்கள் இந்த மாநாட்டுக்கு இலங்கை தமிழருக்கு சம்பந்தமில்லாத பெரிய அரசியல் வாதிகளை கூப்பிட்டு கௌரவிப்பார்கள் .இதற்குத்தான் தமிழ் மன்னன் உண்மையில் இலங்கை போராளிகளோடு சேர்ந்து நாங்கள்தான் உழைக்கிறோம் எங்களையெல்லாம் கூப்பிடக் கூடாதா. நாங்களெல்லாம் அமெரிக்கா பார்க்க கூடாதா என ஈழவேந்தன் இடம்சண்டை பிடித்தார். தமிழ் மன்னன் தூசண வார்த்தைகளால் ஏசினர் ஈழவேந்தன் கூனிக் குறுகிப் போனார்.

அடுத்தநாள் மாலை ஐந்து மணி போல் எமது ரயில் புதுடெல்லியைச் சென்றடைந்தது. தமிழ் மன்னன் புதுடில்லி நோர்த்அவென்யூ என்ற இடத்தில் இந்திய பாராளுமன்ற எம்பிக்கள் கார் விடஒதுக்கப்பட்ட இடத்தில் உணவகம் நடத்தி வரும் நாராயணன் என்பவரோடு தங்குவதற்கு போன போது என்னையும் தன்னுடன் வரும்படி கூறினார் .ஆனால் ஈழவேந்தன் வை .கோபால்சாமி எம் பி யைதனக்கு நன்றாக தெரியும் என்றும் அவருக்குரியஎம்பி குவாட்டர் சில் தங்கலாம் என என்னையும் அழைத்துக்கொண்டு வை .கோபால்சாமி வீட்டுக்கு போனார். அங்கு நமக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வைகோ எம்பி நாங்கள் வந்த நோக்கம் என்ன என்று கேட்டார். ஈழவேந்தன் என்னைஅறிமுகப்படுத்திவிட்டு, நான் டெல்லி வந்த நோக்கத்தையும் கூறி மூன்று நாள் அங்கு தங்குவதற்கு அனுமதி கேட்டார். உடன் கோபமடைந்த வைகோ எங்களை உடனடியாக வேறு இடம் பார்க்கச் சொன்னார் .கடுமையான குளிர் நேரம் இருட்டி விட்டது ஈழவேந்தன் கெஞ்சிக் கூத்தாடி இரவு மட்டும் தங்குவதற்கு அனுமதி கேட்டு வெற்றிபெற்றார் அடுத்த நாள் காலையில்தான் எழும்பும்போது நாங்கள் அங்கு இருக்க கூடாது என்றும் கூறினார். வைகோ அண்ணாவின் கோபத்துக்குக் காரணம் அவரும் அமெரிக்க மாநாட்டுக்கு தனக்கு ஏன் அழைப்பு இல்லை தேவையற்ற நபர்களுக்கு எல்லாம்அழைப்பு அனுப்பி இருக்கிறார்கள்.உதவி என்றால் மட்டும் என்னிடம் வந்து விடுங்கள் என்று கூறினார். ஈழவேந்தன் தனக்கும் அமெரிக்க மாநாட்டு காரர்களுக்கும் சம்பந்தம் இல்லை., என விளங்கப் படுத்தியும் வைகோசமாதானம் அடையவில்லை. பிற்காலத்தில் வைகோ அண்ணா எனக்கு மிக நெருங்கிய வராக இருந்தது பிற்கால கதை.

அடுத்த நாள் காலையிலேயே நாங்கள் எழும்பி வைகோவின் நண்பரும் உதவியாளரும் மான ஜார்ஜ்இடம் சொல்லி விட்டு வெளியில் வந்து ஈழவேந்தன் தனக்குத் தெரிந்த காந்தி பீஸ் பவுண்டேஷன் எனும் அமைப்பின் தங்கும் இடத்துக்கு சென்றார் நான் புத்தக கட்டுகளுடன் தமிழ் மன்னனை தேடிச் சென்றேன். என்னை பார்த்த தமிழ் மன்னனும் அவரின் நண்பர் நாராயணனும் கட்டிப்பிடித்து தம்பி நாங்கள் இருக்கிறோம் உனக்கு உதவி செய்ய ,தெரியாத இடம் என்று பயப்படாதே என்று கூறி,உடனடியாக காலைக்கடன்களை முடித்து குளிக்க நாராயணன் பொதுக் குளியலறைகழிவறைக்கு அழைத்து சென்று உதவி செய்தார். சுடச்சுட காலை உணவு தந்தார். தான் வறுமையில் இருந்தாலும், அவர் செய்த உதவிகள் மறக்க முடியாதவை பிற்காலத்தில் குடித்து குடித்து இறந்து விட்டார்.

உடனடியாக நானும் தமிழ் மன்னனும் டெல்லி தொலைபேசி புத்தகத்தை எடுத்து டெல்லியில் இருந்து அனைத்து எம்பஸ்ஸி தூதர் வெளிநாட்டு தூதரகங்களுக்கு விலாசம் எடுத்து இலங்கை அரசுக்கு எதிரான நான் கொண்டு வந்த புத்தகங்களை பார்சல் செய்து தபாலில் போட்டேன். அதே மாதிரி அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பினோம்.

அன்று மாலை விமானத்தில் வந்த பத்திரிகையாளர் ஹரி டெல்லி பிரஸ் கிளப்பில் ஒரு மீட்டிங் நிறுத்தினார் அங்கும் புத்தகங்களைக் கொடுத்து ,அக்காலகட்டத்தில் இலங்கை பிரச்சனை பெரிதாக அதிகம் பேருக்குதெரியவில்லை நாங்கள் முதன்முறையாக டெல்லி பத்திரிகையாளர்களுக்கு இலங்கையில்இருக்கும் பிரச்சனைகளை விளங்கபடுத்தினோம். இதே நேரம் என்னிடம் பல புத்தகங்களை வாங்கிச் சென்ற ஈழவேந்தன் புத்தகங்களில் தனது தமிழீழ விடுதலை அணி என்ற விசிட்டிங் கார்டை வைத்து பத்திரிகை அலுவலகங்களில் கொடுத்துச் சென்றுள்ளார். அடுத்த நாள் பத்திரிகைகளில் தமிழீழ விடுதலையை அணித்தலைவர் ஈழவேந்தன் இலங்கை அரசுக்கு எதிராக பிரசுரங்கள் விநியோகித்து உள்ளதாக போட்டார்கள். இதனால் மூன்று மாத விசாவில் இந்தியா வந்த ஈழவேந்தன் திரும்ப இலங்கை போகமுடியாமல் இந்தியாவில் தலைமறைவாகி விட்டது அது ஒரு செய்தி.

எமது வேலைகளை முடித்துவிட்டு நானும் தமிழ் மன்னனும் ரயிலில்சென்னை நோக்கி பயணமானோம்.

சென்னையில் எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

தொடரும்.




பகுதி2.


எனக்குத் தெரிந்த அளவு ஈழவிடுதலை இயக்கங்களும் இந்திய தொடர்பு

ஜூலை 83 கலவரத்துக்கு முன் குறிப்பாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தமிழ்நாட்டு தொடர்புகள்அதிகரித்திருந்தன. தஞ்சாவூர் ஓரத நாட்டைச்சேர்ந்த இளவழகன், ராமசாமி, தஞ்சாவூரைச் சேர்ந்த சென்னையில் வசிக்கும் பத்திரிகையாசிரியர் எழுத்தாளர் மறைமலையான் அவர்களும் இவர்கள் மூலம் தமிழ்நாட்டு அமைச்சர் தஞ்சாவூரைச் சேர்ந்த எஸ் டி சோமசுந்தரம், தமிழ்நாடுசட்ட மேலவை துணைத் தலைவர் சினிமா பாடலாசிரியர் கவிஞர் புலமைப்பித்தன், பாவலரேறு பெருஞ்சித்திரனார் தொடர்புகள் மூலம் பலர் அறிமுகமானார்கள் நினைவில் நிற்கும் பெயர்கள் பாண்டிச்சேரியைச் சேர்ந்த அபிமன்யு என்கிற அபி, சீசர் ( எமது இயக்க மத்தியகுழு உறுப்பினர்) ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி சேகர் மாஸ்டர் போன்ற பலர் உதவி செய்தார்கள். இதில் இளவழகன் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நாங்கள் வாங்கிய பிரின்டிங் பிரஸ் பாவாணர் அச்சகம் உரிமை அவர் பெயரில் இருந்தது. அங்க மேனேஜராகவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஐயர் சம்பளத்துக்காக வேலை செய்தார். ஐயா மறைமலையான்ஆசிரியராக கொண்டு நாங்கள் வெளியிட்ட மக்கள் பாதை மலர்கிறது என்ற மாதப் பத்திரிகை எமது பாவானர் அச்சகத்தில் தான் அச்சிடப்பட்டது. நான்தான் அப்பத்திரிகையின் பொறுப்பாளராகவும், கிட்டத்தட்ட மாதா மாதம்5000 புத்தகங்கள் வெளிநாட்டுக்கு பார்சல் செய்து அனுப்பும் வேலையும் நான்தான் செய்தேன். மாறன், சங்கிலி கந்தசாமி போன்றவர்கள் சில வேலைகளில் உதவி செய்வார்கள். பின்பு எனது பொறுப்பை மாதவன் அண்ணா ஏற்றார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செய்திப் பரிமாற்றங்கள் எல்லாம் மிக ரகசியமாக பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஐயாவின் தென்மொழி அச்சகத்தின் ஊடாகவே நடக்கும். அடிக்கடி போலீசாரின் அத்துமீறல்களை ஐயா அவர்களும் அவர்கள் குடும்பத்தாரும் எங்களால் மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார்கள். காவல்துறையினர் தென்மொழி அச்சகத்தை தலைகீழாகப் புரட்டி விட்டு போன பின்பும் ஒரு மணி நேரத்தில் எமது தகவல் பரிமாற்றங்கள் நடக்கும். ஆதரவு கருத்துக்களை தொடர்ந்து எழுதுவதால் ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் காவல்துறையினரால் மிகவும் மோசமாக நடத்தப்பட்ட காலமும் உண்டு.

1982 ஆண்டு கடைசிப் பகுதியில் சென்னை பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதி ரூம் நம்பர் 11 நான் சென்றபோதுஇந்த ரூம் சட்டமன்ற உறுப்பினர் இரா ஜனார்த்தன் அவர்களுக்கு உரியது. அக்காலத்தில் அங்குஇலங்கை விடுதலை போராளிகள் தான் தங்கியிருந்தார்கள். அப்போது அங்கு மாணவர் பேரவை ஆரம்பித்தஅவர்களில் ஒருவரான

ஜீவா என்றழைக்கப்படும் ஜீவ ராஜா தங்கி இருந்தார். எந்த நேரமும் குடிவெறியில் தான் இருந்தார். அங்கு என்னை சந்தித்த தமிழ் மன்னன் திமுகவைச் சேர்ந்தவர், உமா மகேஸ்வரனை சந்திக்க ஏற்பாடு செய்தார் முதலில் என்ன சந்தித்தவர் மாறன். மாறன் என்னை சந்திக்க வந்த நேரத்தில் அங்கு ராகவனும் பிரபாகரனும் வழக்குத் தவணைக்காக வந்து இருந்தார்கள். நான் ராகவன் முதலில் அங்குசந்தித்தபோது மானிப்பாய் இந்துக் கல்லூரியில் எனக்கு சீனியர் என்ற முறையில் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். இதை பார்த்த மாறன் முதலில் என்னை சந்தேகப் பட்டார். தமிழ் மன்னன் தான்விளங்கப்படுத்தினார். ராகவன் இந்த சம்பவத்தை மறந்து இருக்கலாம். மாறன் தூர கூட்டிக்கொண்டு போய் என்னை பிரபாகரனையும் ராகவனின் காட்டி அவர்களோடு பேச வேண்டாம்கவனமாக இருக்கவும். எனக்கூறினார் பிரபாகரனைப் பற்றி குறிப்பிடும்போது பெயர் சொல்லாமல் முட்டை கண்ணன் என கூறுவர். இரண்டு நாட்களின் பின் உமாமகேஸ்வரன் என்னை சந்தித்த போது அவர் வேட்டி கட்டியிருந்தார். அவரை முதன் முதலில் சந்தித்த போது மிக மகிழ்ச்சியாக இருந்தது. அவரோடு வேலை செய்த எனது மிகநெருங்கிய உறவினர்கள் பெயரைச் சொன்ன போது சந்தோஷப்பட்டார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழக அதற்காக வேலை செய்யும்படியும், அது இவர்களைத் தவிர மற்றவர்கள் தலைமறைவு காலம் ஆகையால் தலைமறைவாக இருக்கும்படியும் மாறன் வந்துஅடிக்கடி சந்திப்பதாகவும் தேவையான பணத்தை மாறனிடம் கொடுப்பதாகவும்கூறிச் சென்றார்.

மாறன் நான் தங்கியிருந்த மவுண்ட் ரோட் ராமச்சந்திரன் லொட்ஜ் வந்து என்னை சந்தித்து உணவுக்கும் லாஜிக்கும் பணம் கொடுத்து சில ரகசியமான வேலைகளையும் கொடுத்து செல்வார்.

ஒருநாள் உமா மகேஸ்வரனும் மாறனும் வந்து, கழக கடிதத் தலைப்புகளும் பல வெளிநாட்டு முகவரிகளும் கொடுத்து, முன்பு ஒன்றாய் இருந்த விடுதலைப்புலிகள் அமைப்புக்கு வேலை செய்த ஜெர்மனி பரமதேவா,, பிரான்ஸ் ஏரம்பு, லண்டன் கிருஷ்ணன் கிருஷ்ணன் ஊடாக சித்தார்த்தன் போன்றவர்களுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வளர்ச்சி பற்றியும் அவர்களை எமக்கு வேலை செய்யும் படியும் கடிதங்கள் எழுதினோம்.அதன் பின்புதான் வெளிநாட்டுக் கிளைகள் எமக்காக இயங்கத் தொடங்கின.

1983 மார்ச் மாதம் என நினைக்கிறேன், நூற்றுக்கணக்கான இலங்கை அரசுக்கு எதிரான ஆங்கில பிரசுரங்கள் புத்தகங்கள் நான் இருந்த அறையில் ஒளித்து வைத்தார்கள். டெல்லியில் பொதுநலவாய நாடுகளின் கூட்டம் நடைபெறப் போவதாகவும் அங்குபோய் எல்லா நாடுகளின் தலைவர்களுக்கும் கிடைக்கும்படி இந்த புத்தகங்களை வெளிநாட்டு தூதரகங்களுக்குகொடுக்கும்படியும்., அங்கு எமது சார்பாக பத்திரிகையாளர் மயிலாப்பூரைச் சேர்ந்த ஹரி என்பவர் ஏற்பாடு செய்யும் பிரஸ்மீட்டில் புத்தகங்களை கொடுக்கும்படியும் அதோடு இலங்கை பிரச்சனை சம்பந்தமாக நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஹரிகு உதவும் படியும் கூறினார்.

தொடரும்.




பகுதி 1


எனக்குத் நேரடியாதெரிந்த ஈழ தமிழ்விடுதலை இயக்கங்களும் இந்திய தொடர்புகளும் டெல்லியில் பேச்சுவார்த்தைகளின் போதுஅது எல்லா கூட்டங்களிலும் பங்குபெற்று என்ற முறையில் எனக்கு தெரிந்த உண்மைகள் நினைவில் உள்ள வரை பதிவாக போட யோசித்துள்ளேன். விடுதலைஇயக்கங்கள் எல்லாம் டெல்லியில் பேசுவது ஒரு மாதிரி சென்னையில் வந்து அறிக்கை விடுவது இயக்கத் தோழர்களிடம்கூறுவது வேறு மாதிரி. தங்களை இந்திய எதிர்ப்பாளர்கள் போலவும், உத்தமர்கள் போல் காட்டிக் கொண்டதும் இன்று வரை வெளியில் வரவில்லை. எல்லாஈழவிடுதலை தலைவர்களும் அவர்கள் விட்டஅறிக்கைகளுக்கும்அவர்கள் நடந்து கொண்ட விதத்துக்கும் உள்ள வித்தியாசத்தை இன்று வரை பலர் அறியவில்லை.அவர்கள் பொது வழியில் தங்களை உத்தமர்களாக காட்டிக்கொள்ள விட்ட அறிக்கைகள் தான் இன்றும் பலர் அவர்கள் மிகத் திறமையானவர்கள் சிந்தனையாளர்கள் சிறந்த தலைவர்கள் என எழுதி வருகிறார்கள் 1982கடைசியிலிருந்து 1987 ஒப்பந்தம் வரைஎனக்குத் தெரிந்த சம்பவங்களை மட்டும் தான் நான் எழுதுகிறேன். அதிலும் பல செய்திகள் கோர்வையாக இருக்காது. இந்தப்பதிவு இந்தியாவுக்கு ஆதரவான பதிவு அல்ல.உண்மையில் நடந்த சம்பவங்களை பதிவிட விரும்பிய படியால் எழுதுகிறேன்.

1982 முதல் 1987 ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் வரை தமிழ்நாடு அரசு இந்திய அரசு இலங்கை விடுதலை இயக்கங்களோடு இருந்த தொடர்புகள் பற்றி எனக்குத் தெரிந்த சில விடயங்களும் நான் நேரடியாக பங்கு பற்றி அறிந்த விடயங்கள் இங்கு பதிவாக போட எண்ணியுள்ளேன்.நான் திம்புவில் நடந்த பேச்சுவார்த்தை தவிர மற்ற எல்லா டெல்லி பேச்சுவார்த்தை களிலும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் சார்பாக கலந்து கொண்டிருக்கிறேன். தனிப்பட்ட முறையில் உமாமகேஸ்வரன் உடன் இந்திய அதிகாரிகள் அரசியல்வாதிகள் வெளிநாட்டு தூதுவர்கள் , வெளிநாட்டு விடுதலை இயக்க பிரதிநிதிகள் பத்திரிகை ஆசிரியர்கள் நிருபர்கள் போன்றவர்களின் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அதோடு காலத்துக்கு காலம் சித்தார்த்தன், பரதன், ராஜா நித்தியன், கவிஞர் ஜெயபாலன்,ஷிர்லி கந்தப்பா, அண்டன் பயர்ஸ் (சுமதி தென்னாப்பிரிக்கா) தோழர் சைமன் (ரவி), தோழர் சங்கர், லண்டன் சீனிவாசன் போன்றவர்கள் புதுடில்லி வரும்போது, எமக்குரிய தொடர்புகளை தலைமை கட்டளைப்படி, தேவைக்கு ஏற்றபடி சில குறிப்பிட்ட நபர்களை சந்தித்து, இலங்கை பிரச்சனை பற்றியும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழக நிலைப்பாடு பற்றியும் விபரம் கூற ஒழுங்குகள் செய்து கொடுப்பேன். முடிந்தளவு நானும் அவர்களோடு கலந்து கொள்வேன்.

1982 ஆண்டு பாண்டி பஜார் உமா, பிரபா துப்பாக்கிச் சண்டையின் பின்பு சென்னை மத்திய சிறைச்சாலையில் அவர்களை ரகசியமாக இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த உளவுத்துறையான IB (இன்டலிஜென்ஸ் பீரோ) இன் இரண்டு தமிழ் அதிகாரிகள் போய் அவர்களிடம் இலங்கை சம்பந்தமான முழு விபரங்கள் இவர்கள் போராட்டங்கள் பற்றிய விபரங்கள் எல்லாம் கேட்டு, உடனடியாக டெல்லிக்கு அனுப்பினார்கள் ஐபி இயக்குனர் மிகவும் சக்தி வாய்ந்தவர் தினசரி காலையில் இந்திய பிரதம மந்திரியை சந்தித்து உள்நாட்டில் நடக்கும் சகலவிதமான ஒவ்வொரு மாநிலத்தில் நடக்கும் விடயங்களையும் பிரதம மந்திரி இடம் விரிவாக கூறுவார்.

இது இன்று வரை நடக்கும் விடயம். இந்திய உளவுத்துறை களைப் பற்றி கூற வேண்டுமானால், முதலில் வருவது ஐபி, அடுத்து ரா, ராணுவ உளவுத்துறை MI, கடற்படை உளவுத்துறை போன்றவை இலங்கை விஷயத்தில் தொடர்பில் இருந்தனர். மாநில அளவில் அதாவது தமிழ்நாடு q கியூ பிரான்ச், மற்றும் IS அமைப்பினர். பாண்டி பஜார் சம்பவத்தின்போது தமிழ்நாடு உளவுப்பிரிவு இயக்குனர்மோகனதாஸ் உமா, பிரபா மற்றவர்களையும் இலங்கையிடம் பிடித்து கொடுப்பதற்கு முயற்சி செய்தார் அக்காலத்தில் இலங்கை பொலிஸ்மா அதிபர் ருத்ரா ராஜசிங்கம் அடிக்கடி தமிழ்நாடு வந்து மோகனதாஸ் சந்தித்து செல்வார். எம்ஜிஆர் நினைப்பதை செய்து காட்டுபவர் மோகனதாஸ். மோகனதாஸ் என்ன செய்தாலும் எம்ஜிஆர் தடுக்க மாட்டார்.

ஐபி ரிப்போர்ட்டை அடுத்தும், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் குறிப்பாக கருணாநிதி அழுத்தத்தை அடுத்து இந்திரா காந்தி நேரடியாக எம்ஜிஆருடன் பேசி, மோகனதாஸ் ருத்ரா ராஜசிங்கம் எண்ணத்தை தடுத்தார். இதையடுத்து இந்திய வெளிநாட்டு உளவுத்துறை ரா களம் இறக்கப்பட்டது. எம்ஜிஆர் மத்திய அரசை எதிர்க்க முடியாமல் பேசாமல் இருந்தார். ஆனால் மோகனதாஸ் தனது அதிகாரத்தை வைத்து பல இடைஞ்சல்களை செய்தார். கலைஞர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, உமா மகேஸ்வரனும், பிரபாகரனும் போய் சென்னை மெரினா கடற்கரையில் நடு இரவில் கலைஞரை சந்தித்து தங்கள் போராட்டம் போராட்டவரலாறுகளை கூறியுள்ளார் . அதற்கு முன்பே ஒரு இலங்கைத் தமிழர் பெயர் ராஜரத்தினம் என நினைக்கிறேன்போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு தமிழக பல தலைவர்களை சந்தித்துள்ளார். விடுதலைப் புலிகள் ஒன்றாய் இருந்த காலத்தில் பல தமிழக அரசியல்வாதிகள், அரசியல் சாராத தலைவர்கள் பொதுமக்கள் என பல பெயர்கள் உண்டு அவர்களிடம் உதவி பெற்ற விடுதலைப் புலிகள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் போன்ற அமைப்புகள் அவர்களை மறந்தே போய்விட்டனர்.

கா சுப்பு

செஞ்சி ராமச்சந்திரன் தஞ்சாவூர் எம்பி எல் கணேசன் அண்ணா ,வை கோபால்சாமி அண்ணா, எம்பி யாக இருந்த ஆலடி அருணா அண்ணா,தமிழ்நாடு சட்ட மேலவை துணைத் தலைவர் கவிஞர் புலமைப்பித்தன்

மணவை தம்பி

தமிழ் மன்னன்

தமிழ் மன்னன் பிரபாகரனும், உமா மகேஸ்வரனும் பிரிந்த பின்பும் இருவருக்கும்இவர் பல உதவிகளை செய்துள்ளார். ராகவனுக்கு இவரை மிக நன்றாக தெரியும் என நினைக்கிறேன் திமுக கல்லுடைக்கும் தொழிலாளர் சங்கத் தலைவர். கலைஞர் பயப்படும் ஒரே ஆள்.

இரா ஜனார்த்தனம் பல உதவிகள் செய்தாலும், விடுதலை போராளிகளை தனது சொந்த வளர்ச்சிக்கும் பயன்படுத்திக் கொண்டவர் ஒரு முஸ்லீம் அன்பர் இலங்கை விடுதலை போராளிகள் வந்து தங்கிச் செல்ல தனது வீட்டை கொடுத்திருந்தார் அவர் தனதாக்கிக் கொண்டவர்.

ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் இவர் பாண்டிச்சேரி காலத்திலிருந்து விடுதலை புலிகளுக்கும் உமா மகேஸ்வரனுக்கு உதவி புரிந்தவர். ஐயாவின் ஒரே நோக்கம் ஆரம்பத்தில் இருந்து அவர் சாகும்வரை இலங்கைத் தமிழருக்கு ஒரு தமிழ் ஈழம்வேண்டும் என்பதே. இலங்கை தமிழ் போராளிகளால் எந்த ஒரு பயனும், புகழும்பெறாமல் முடிந்தளவு அவரும் அவரின் குடும்பமும் பல உதவிகளை செய்து உள்ளார்கள். கடைசி காலத்தில் நான் அவரை பார்க்கும் போதெல்லாம் எங்கள் போராட்டம் இப்படித் திசைமாறிப் எதிரியிடம் போய் நிற்கிறது எனகண்ணீர் விட்டு அழுதார். உமா மகேஸ்வரனின் மாற்றம்தான் அவரை மிக அதிர்ச்சி அடைய வைத்தது.eprlf இயக்கத்துக்கு தோழர் அரணமுறுவல் பல உதவிகள் செய்தபோதும், மற்ற இயக்கங்கள் உதவிகள் கேட்டாலும் ஓடி வந்து உதவி செய்யக் கூடியவர். தமிழ்நாட்டில் இலங்கை தமிழ் விடுதலை இயக்கங்கள் ரகசியமாக இருந்த காலத்தில் மேற் கூறியவர்கள் அரசாங்கத்துக்கு பயப்படாமல் உதவிகள் செய்தவர்கள். பல பெயர்கள் விடுபட்டுப் போயிருக்கலாம் அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். ராகவன் போன்றவர்கள் கட்டாயம் அந்த காலத்தில் உதவி செய்தவர்கள் பெயர்களை பதிவாக போட வேண்டும் அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் அதுதான்.

தொடரும்.

நன்றி: வெற்றிச் செல்வன்


No comments:

Post a Comment