மாற்றம் என்பது மாறாதது; இங்கே தோழமைதேடி...

Feb 23, 2011

இணையதள அரசியலில் ஜனநாயகமும், அயோக்கியத்தனங்களும். : ரகுமான் ஜான்.

மோசமானவர்களெல்லாம் வேசம் போடுகிறார்கள்!


//புலிமரணித்த பின்விடிவுக்கு வந்த ரட்சகர்களாகத் தம்மை வெளிப்படுத்திய மே 18 இயத்தவர்களோ,இப்போது தேசம் நெட்டில் சுயவிமர்சம் ஒன்றை அவர்கள் தலை ஜான் மூலம் சொல்கிறார்கள்.


புளட் இயக்கம் பற்றி ஜென்னி அடிக்கும் சல்லியில் ஜானுக்கு வேறு பேதிபோகுது.தனக்குக் கெடுவைத்துச் சூனியம் வைத்திருக்கிறதைச் சொல்லித்தீராது பாருங்கோ.


மக்களின் உண்மையான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க முனையும் மனிதர்களை ஏமாற்றுகிறார்களோ?

இண்டைக்கு றயாகரன்,சிறீரங்கன் போன்றவர்களே ஒருத்தரை ஒருத்தர் அடிப்பட்டுப் பிரிந்துள்னர்.இந்தச் சண்டைக்குப் பின்னால் இவர்கள் அம்பலப்படுத்தின ஜான் சுயம்விமர்சனம் செய்றார்.


இந்த மனிதர் தம்மைப் பற்றிய சுயவிமர்சனத்தில் உண்மை எதையும் சொன்னாரா?


கேள்வி தொடரும்.//

இப்போது மத்திய கிழக்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தீவிரமான மாற்றங்களை கூர்ந்து அவதானிக்கும் எவருக்குமே, இந்த மாற்றங்களில் இணையதளங்கள் மற்றும் யு-ரியூப், பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல்கள் ஆற்றிய பாத்திரம் பற்றி கவனிக்கத் தவறியிருக்க மாட்டார்கள். இந்த கிளர்ச்சிக்கு அவசியமான கருத்துரீதியான தயாரிப்புக்களை மேற்கொண்டது மாத்திரமன்றி, இந்த மாற்றத்தை நோக்கிய செயற்பாட்டில் ஈடுபட்டவர்களிடையே (activist) தொடர்பை உருவாக்கி, வலுப்படுத்தி, அவர்களை ஒழுங்கமைப்பது மற்றும் ஒருங்கிணைப்பது போன்ற முக்கியமான பணிகளிலும் இந்த நவீன தொடர்பு சாதனங்கள் மிகவும் முக்கியமான பாத்திரத்தை ஆற்றின. புலிகளின் அழிவைத் தொடர்ந்து எதிர்ப்பரசியலின் எதிர்காலம் குறித்தே கேள்வி எழுப்பியவர்கள் பலருண்டு. இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடுமையான எதேச்சாதிகார ஆட்சி நடைபெற்ற பல நாடுகளில் ஒரு புதிய தலைமுறையானது கிளர்ச்சிக்கான திட்டமிடல், தயாரிப்பு மற்றும் ஒழுங்கமைப்பு போன்ற அனைத்தையும் இந்த நவீன சாதனங்களின் துணையுடன் சிறப்பாக செய்து முடித்திருப்பது மிகவும் உற்சாகமூட்டத்தக்கதாகும்.

இணையத்தள அரசியலானது கொண்டுள்ள இப்படிப்பட்ட புதிய சாத்தியப்பாடுகளைக் (potential) மனதில் கொண்டு பார்க்கும் போது நாம், தமிழ் இணையத் தளங்களில் நடைபெறும் அரசியல் தொடர்பான செயற்பாடுகளை கறாராக மீள்மதிப்பீடு செய்துகொள்வது அவசியமானதாக ஆகிறது. ஜனநாயகம் என்பது மக்களது புரட்சிகர ஆற்றலை (agency) கொண்டவர்கள் என்ற அடிப்படையான மூலக்கோட்பாட்டிலிருந்து பிறப்பதாகும். இந்த கோட்பாடானது வெளிப்படையான தன்மையை (transparancy) முன்னிபந்தனையாக கோருகிறது. கருத்துக்களைப் பறிமாறுபவர்கள், தம்மை வெளிப்படையாக இனம்காட்டி, பகிரங்கமாக விவாதத்தில் ஈடுபடும்பொழுதுதான், அந்தந்த பிரச்சனைகளுடன் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் அந்தந்த கருத்துக்களுக்கு பின்னாலுள்ள நபர்களை, சமூக சக்திகளை சரிவர இனம்கண்டு, அவர்களுடன் தம்மை அடையாளப்படுத்துவது, அணிதிரள்வது சாத்தியப்படும். இப்படிப்பட்ட வெளிப்படையான தன்மை இல்லாதபோது இந்த விவாதங்களினால் உருவாகும் பலன்கள் மிகவும் மட்டுப்படுத்தப் பட்டதாகவே இருக்கும்.

நடைமுறையில் நாம் இவற்றைக் கடைப்பிடிக்கும் பொழுது, விவாதம் நடைபெறும் சூழலின் தன்மையை கவனத்திற் கொண்டே இந்த வழிமுறையை கடைப்பிடிக்க முடியும். அந்த வகையில் இன்றைய தமிழ் சூழலானது, அத்தனை தூரம் பாதுகாப்பானதாக இல்லை என்பது அனைவருக்கும் தெரிகிறது. அதனால் இப்படிப்பட்ட விவாதங்களில் ஈடுபடும் குறிப்பிட்ட சிலருக்காவது கடுமையான பாதுகாப்பு பிரச்சனைகள் ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகளை நாம் மறுத்துவிட முடியாது. இதனைவிட, இன்று மேற்கு நாடுகளில் காணப்படுவதாக கூறப்படும் ஜனநாயகத்தின் உண்மையான இலட்சனம் ஒன்றும் நாமறியாதது அல்ல. ஆதலால் குறிப்பிட்ட கருத்துக்களை பகிரங்கமாக தெரிவிப்பதானது, குறிப்பிட்ட சிலருக்கு பாதுகாப்பு மற்றும் ஏனைய சட்டரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தும் வாய்ப்புக்களையும் நாம் கருத்திற் கொள்ளாமல் இருக்க முடியாது.

இப்படிப்பட்ட நிலையில், குறிப்பிடத்தக்க பிரச்சனை உடையவர்கள், அல்லது அவ்வாறான பிரச்சனைகள் ஏற்படலாம் என்று அஞ்சுபவர்கள், தமது சொந்த பாதுகாப்பு ஒன்றை மட்டுமே கவனத்திற் கொண்டு, சம்பந்தப்பட்ட ஊடகத்தின் நிர்வாகிகளுடைய சம்மதத்துடன் பாதுகாப்பு கருதிய ஏற்பாடுகளை சிற்சில ஏற்படுத்திக் கொள்வது தவிர்க்க முடியாததாகிறது. குறிப்பிட்ட நபர்களது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் கொடுக்க முடியாத மற்றையவர்கள், அவரது அடையாளத்தை பகிரங்கப்படுத்துமாறு கோருவது நியாயமாக இருக்காது என்றே நம்புகிறேன். இந்த குறிப்பிட்ட பாதுகாப்பு பற்றி அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகக் கூடியவர்கள், அல்லது அவ்வாறு கருதப்படக் கூடியவர்கள் மாத்திரம் புனைபெயரில் எழுத நேர்வது இப்போதைக்கு தவிர்க்கப்பட முடியாததாகவே இருக்கிறது. இப்படியான பல்வேறு பிரச்சனைகளுடன் இருப்பவர்கள் எவருமே சொந்த பெயர்களில் எழுத முடியாத நிலையில் நாம் புனைபெயர்களில் எழுதுவதை முற்றிலும் மறுக்க முனைவதானது, யார்யார் இந்த விவாதங்களில் கலந்து கொள்வது அவசியமாக தேவைப்படுகிறதோ, அவர்கள் இந்த விவாதங்களில் கலந்து கொள்ள முடியாத நிலைமையை தோற்றுவித்துவிடும். இதனால் இழப்பு எமது தமிழ் சமூகம் முழுவதற்கும்தானே!

ஆதலால் நாம் இப்படிப்பட்ட பிரச்சனை உள்ள நபர்கள் இணையத்தள ஆசிரியரின் அனுமதியுடன் புனைபெயர்களில் எழுதுவதை அனுமதித்தாக வேண்டியுள்ளது. அதுவும் ஒரே குறிப்பிட்ட புனைபெயரிலேயே சம்பந்தப்பட்ட நபர்கள் எழுதுவதையும் உத்தரவாதப்படுத்திக் கொள்வது நல்லது. ஆனால், இப்படியாக அனுமதிப்பதானது இன்றுள்ள பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொள்ளும் விதத்தில் இணையத்தளம் நடத்துபவர்கள் அதன் வாசகர்களுக்கு வழங்கும், வரம்பிற்குட்பட்ட ஒருவித சலுகையாக மாத்திரம் கருதப்பட வேண்டியதாகும். இப்படியாக எழுதுபவர்கள் கருத்தளவிலான விவாதங்களுடன் தம்மை மட்டுப்படுத்திக் கொள்வதையும், மற்றவரை அவதூறு செய்யும் விதமாக கருத்துக்களை வெளியிட முடியாதவாறும் மட்டுப்படுத்தப்படுவதும் தவிர்க்க முடியாததாக இருக்கும். யாரைப் பற்றியாவது குற்றிச்சாட்டுகளை முன்வைப்பதாயின், அவர் சொந்த பெயரில், போதிய ஆதாரத்துடன் மாத்திரமே இந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்படுவதை உத்தரவாதப்படுத்திக் கொள்வது அவசியமானதாகிறது. இந்த விதமாகவே, இந்த குறிப்பிட்ட சலுகையானது துஸ்பிரயோகம் செய்யப்பட மாட்டாது என்பதும், மக்களது ஜனநாயக உரிமைகளை விரிவுபடுத்துவதை உத்தரவாதப்படுத்திக் கொள்வது என்ற நோக்கில் மாத்திரம் பயன்படுத்தப்படுவதும் உத்தரவாதப்படுத்திக் கொள்ள முடியும்.


எமது சமுதாயத்தின் குறைபாடுகளில் ஒன்று யாதெனில், நாம் வரலாற்று ரீதியாகவே ஒரு ஜனநாயக பாரம்பரியத்தை வளர்த்துக் கொண்டவர்கள் அல்லர் என்பதுதான். முதலாளித்துவ சமூக உறவுகள் நன்கு வளர்ச்சியடையாத, ஒரு ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிக்காத எமது சமுதாயத்தில் இந்த ஜனநாயக அம்சங்கள் இயல்பானவையாக உருவாகிவிட மாட்டாது. அதனால், எமது சமுதாயத்தில் ஜனநாயக பாரம்பரியம் என்று ஒன்று பலமாக என்றுமே இருந்ததில்லை. புலிகள் வைத்திருந்தது இந்த ஜனநாயக மறுப்பின் ஒரு உச்ச வடிவம் மாத்திரமேயாகும். இதனால் இணையத்தளங்கள் வழங்கும் இந்த ஜனநாயக சூழ்நிலைகளில் எவ்வாறு செயற்படுவது என்பதில் பல பிரச்சனைகள் பலருக்கும் எழுகின்றன.

புனைபெயர்களில் எழுதுவதும், எழுதுபவர் யார் என்பது வெளியில் தெரியாது என்ற உத்தரவாதம் கிடைத்தவுடன் பலரும், தாம் பகிரங்க அரங்குகளில் தம்மை அடையாளம் காட்டி செயற்படும் நிலையில் செய்யத் துணியாத, நாகரீகமற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதும் அடிக்கடி அவதானிக்கப்படுவதுண்டு. இதன் மூலமாக இந்த ஜனநாயகபூர்வமான விவாதச் சூழல் வெறுமனே குறிப்பிட்ட சிலர் மீதான சேறடிப்பாகவே மாறிவிடுகிறது என்ற குற்றச்சாட்டு நீண்டுகாலமாவே இருந்து வருகிறது. இதனைவிட குறிப்பிட்ட ஒருவரே பல்வேறு புனைபெயர்களில், சமகாலத்தில், ஒன்றிற்கொன்று முரணான, மாறுபட்ட கருத்துக்களை முன்வைப்பதால் ஒரு ஜனநாயகபூர்வமான விவாதத்திற்கு எந்தவிதமான பலத்தையும் கொடுத்து விடுவதில்லை. மாறாக குழப்பங்களும், சேறடித்தலுமே இதன் மூலமாக உருவாகும்.

ஆதலால் வாசகர்களது பாதுகாப்பு மற்றும் ஜனநாயக உரிமை பற்றிய அக்கறையானது, நடைபெறும் விவாதங்களின் பயனூட்டம் பற்றிய பிரச்சனையில் இருந்து பிரிக்கப்பட முடியாததாக அமைந்து விடுகிறது. இது இல்லாத காரணத்தினால், கடந்த காலத்தில் இப்படிப்பட்ட விவாதங்களில் ஆரம்பத்தில் மிகவும் ஆர்வத்துடன் இத்தகைய விவாதங்களில் ஈடுபட்ட பலரும், இவற்றிலிருந்து முற்றாக ஒதுங்கிக் கொண்டமை வருத்தத்திற்கு உரியதாகும். இன்னும் சிலர், குறிப்பிட்ட இணையத்தளங்களை தடைசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விட்டதும் நாம் மறந்துபோனவை அல்ல.

அதேவேளை புனைபெயர்களில் எழுதுவது என்பது, ஒவ்வொருவருமே தாம் முன்வைக்கும் கருத்துக்களுக்கான பொறுப்பை எடுப்பதில் இருந்தும் விடுவித்துவிட முடியாது என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியமானது அல்லவா? அத்தோடு விமர்சிக்கப்படும் எவருக்கும், தம்மீதான குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் பற்றி பதிலளிப்பதற்கான உரிமையை நாம் மறுத்துவிட முடியாது. அவ்வாறு செய்வது ஜனநாயகமாகாது. புனைபெயர்களில், அதுவும் வேறு வேறு பெயர்களில், ஒன்றிற்கொன்று முரணான தகவல்களை வைத்துச் செல்லும்போது, இந்த பதில் சொல்வதற்கான உரிமையை எவ்வாறு நாம் அர்த்தமுள்ள விதத்தில் செயற்படுத்த முடியும் என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகிறது. ஆகவே புனைபெயரை பயன்படுத்துவது என்பது எப்போதும் சமூகத்தின் விரிவான ஜனநாயகம் என்ற வரம்பிற்கு உற்பட்ட ஒரு வரையறுக்கப்பட்ட சலுகையாக கருதப்படும் நிலையிலும், மிகவும் கவனமாக பயன்படுத்தப்படும் பொழுதுமே, நாம் இந்த ஜனநாயகத்தின் நோக்கத்தை நிறைவு செய்ய முடியும். இல்லையேல் சலசலப்பு மிகவும் கூடிய ஒரு சந்தை போன்ற சூழலை, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பேணுவதில் நாம் வெற்றி பெறலாம். ஆனால் இது சமூகத்தின் கருத்துப்பலம், மற்றும் ஜனநாயகத்தின் வளர்ச்சி என்ற நோக்கில் வெறும் வெற்று ஆரவாரமாகவே இது முடிந்துவிடும் அபாயம் இருக்கிறது.

ஒருவர், தனது சொந்த பாதுகாப்பு கருதி தனது கருத்துக்களை புனைபெயரில் வெளியிடுவது பெரிதும் பிரச்சனையில்லாத விடயமாக பலருக்கும் படலாம். ஆனால், பகிரங்கமாக செயற்படும் நபர்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை, அதுவும் எந்தவிதமான ஆதாரங்களும் இன்றி இவ்வாறு முன்வைக்கையில் பல பிரச்சனைகள் எழுகின்றன அல்லவா? தமது பாதுகாப்பு பற்றி கவலைப்படும் ஒருவருக்கு, பகிரங்கமாக செயற்படும் நபர்களது பாதுகாப்பு மற்றும் கௌரவம் பற்றிய கவலைகள் அறவே இல்லாமல் போய்விட முடியாது அல்லவா?

இன்று இணையத்தளங்களில் நடைபெறும் கருத்துப் பரிமாற்றங்களை ஒட்டுமொத்தமாக எடுத்துப் பார்க்கும் எவருக்குமே இந்த கருத்தாடல்கள் நடைபெறும் முறைமை அத்தனை ஆரோக்கியமாக இல்லை என்பது தெரியும். தமிழ் சூழலில் இந்த பகிரங்கமாக கருத்துப் பரிமாறும் உரிமை நீண்டகாலமாக மறுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த பிரச்சனைகள் ஒருவித ‘இளம்பருவக் கோளாறாக’ கருதப்படவும் கூடும். ஆனால் பாதுகாப்பு என்ற ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு எவராவது இந்த சலுகையை துஸ்பிரயோகம் செய்ய முனையும் போது அதன் விளைவுகள் பாரதூரமாக அமைவதையும் காண முடிகிறது.

ஒரு சட்டரீதியான பத்திரிகையில் யாராவது ஒருவர், இன்னொருவரை அவதூறு செய்வதாக காணப்பட்டால், அதற்கு பரிகாரம் தேடும் விதமாக, பாதிக்கப்பட்டோர் சட்டத்தின் உதவியை நாட முடியும். இப்படியான பிரச்சனைகள் வராமல் இருப்பதற்காக பெரிய நிறுவனங்களால் நடாத்தப்படும் பத்திரிகை மற்றும் சஞ்சிகைகளில் தமக்கு கிடைக்கும் தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கென பொறிமுறைகளை ஏற்பாடு செய்துள்ளார்கள். தகவல்களை சரிபார்ப்பவர் (fact checker) என்றொரு தொழிற் பிரிவினரை தனியாக உருவாக்கியுள்ளனர். ஆனால் இன்றைய தமிழ் இணையத் தளங்களில் நிலைமை அப்படியாக இல்லை. இணையத் தளங்களை நடத்துபவர்களும் கூட இதனை ஒரு இலாப நோக்கற்ற முறையில் தமது சொந்த வளங்களை, உழைப்பை, நேரத்தை செலவிட்டு செய்வதனால் இவர்களிடத்தில் நாம் இப்படிப்பட்ட ஒரு கறாரான தொழில் நேர்த்தியையும் (Professionalism) எதிர்பார்க்க முடியாது என்பதுதான் இன்றுள்ள நிலைமையாகும். ஆனால் இப்படிப்பட்ட பற்றாக்குறைகள் எந்த இணையத்தளத்தையும் இந்த தார்மீக கடப்பாடுகளில் இருந்து விடுவித்துவிட முடியுமா என்பது கேள்விக்குரியதே!

இப்படிப்பட்ட குறைபாடுகள், வரையறுக்கப்பட்ட தன்மைகள் (limitation) இருப்பது என்பது இந்த தளங்களில் எழுத முனையும் எவரையும், ஒரு ஜனநாயகபூர்வமான சூழலை பேணுவது தொடர்பாக ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டிய அடிப்படையான பொறுப்புணர்வுகளில் இருந்து விடுவித்துவிட முடியாது. இதனை பேணும் விதத்தில் இந்த இணைய தளங்களின் வாசகர்கள் தமக்கென ஒரு பொதுவான அறநெறியை உருவாக்கி பின்பற்றுவதும், அது மீறப்படுகையில் அதனை கண்டிப்பதும் கட்டாயமாக கடைப்பிடிக்கப்பட வேண்டிய தற்காப்புப் பொறிமுறைகளாக அமையமுடியும்.

பொது ஊடகங்கள் என்பவை நாம் சுவாசிக்கும் காற்று, அருந்தும் நீர் போன்று அனைவருக்கும் பொதுவான, அனைவரையும் பாதிக்கக்கூடிய மிகவும் அடிப்படையான பொதுச் சொத்துக்கள். இதில் எவருமே கண்டபடி அசிங்கங்களை கொட்டிவிட்டு, மாசுபடுத்திவிட்டு செல்வதை யாருமே அனுமதிக்க முடியாது. ஏனெனில் இந்த பொதுச் சொத்துக்களை பயன்படுத்தும் இன்னும் பலரது உரிமையை குறிப்பிட்ட சிலர், தமது தனிப்பட்ட குறைபாடுகள், கவனயீனம் மற்றும் பொறுப்புணர்வின்மை காரணமாக பாழ்படுத்திவிட அனுமதிப்பது என்பது பொது நலத்திற்க எதிரானதாக அர்த்தப்படும். அந்த குறிப்பிட்ட ஊடகத்தை பயன்படுத்தும் அனைவருக்குமே, அந்த ஊடகங்கள் மாசுபடுத்தப்படாமல் பாதுகாத்துக் கொள்ளும் கடப்பாடு இருக்கிறது. இது வெறுமனே பாதிக்கப்படும் தனிப்பட்ட ஒருவரது பிரச்சனை கிடையாது. பொது ஊடகங்கள் என்று வந்துவிட்டாலே அது பொதுப்பிரச்சனையாகி விடுகிறது.

பொது ஊடகங்களை நடத்தும் சிலரிடமும், இந்த ஊடகங்களில் கருத்துக்களை தெரிவிக்க முனையும், அதன் வாசகர்களிடத்திலும் கூட, இந்த ஊடகம் தொடர்பான சரியான புரிதலும், பொறுப்புனர்வும் இருப்பதில்லை. இதனால் அநாவசியமான பிரச்சனைகள் இந்த தளங்களில் உருவாகின்றன. பல சந்தர்ப்பங்களில் இப்படிப்பட்ட நபர்களை சாதாரணமாக புறக்கணித்துவிட்டு செல்வதே, கண்டு கொள்ளாமல் விடுவதே (ignore பண்ணுவதே) போதிய தண்டனையாக இருப்பதுண்டு. ஒரு குழந்தை பெற்றோரின் கவனத்தைப் பெறுவதற்காக அடாத்தாக செயற்பட முனைகையில், அந்த செயற்பாடுகளை பெரிது படுத்துவதே, அப்படிப்பட்ட பழக்கத்தை ஊக்குவிக்கலாம் என்றவகையில், அந்த செயற்பாடுகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடும்படி உளவியலாளர்கள் ஆலோசனை வழங்குவதில்லையா! அப்படிப்பட்டதுதான் இதுவும்.

ஆனால் இன்னும் சில சந்தர்ப்பங்களில் விடயங்கள் இப்படியாக எளிமையானதாகவும், நேரடியானதாகவும் இருப்பதில்லை. தமது பாதுகாப்பை பேணிக்கொள்ள வழங்கப்பட்டுள்ள இந்த சலுகைளை முழுக்க முழுக்க துஸ்பிரயோகம் செய்து அடுத்தவருக்கு இடையூறுகளை, காயங்களை, அசௌகரியங்களை, ஆபத்துக்களை ஏற்படுத்தவது என்ற எண்ணத்துடன் குறிப்பிட்ட சக்திகள் இதனை ஒரு கருவியாக எடுத்துக் கொள்ள முற்படும் போது, பாதிக்கப்பட்ட நபர்கள் தம்மை தற்காத்துக் கொள்ளும் உரிமையை கொண்டிருப்பதுடன், இப்படிப்பட்ட அத்துமீறல்களை தடுத்து நிறுத்துவது ஜனநாயகத்தில் அக்கறையுள்ள அனைவரதும் கடப்பாடாகவும் அமைந்துவிடுகிறது. இந்த விடயங்களில் வாசகர்கள் காட்டும் உண்மையான அக்கறையே, எதிர்காலத்தில் நாம் ஒரு ஆரோக்கியமான ஜனநாயக சூழலை கொண்டிருக்கப் போகிறோமா, எமக்கிடையில் அவசியமாக நடைபெற்றாக வேண்டிய ஜனநாயகபூர்வமான கருத்தாடல்களை நடத்துவதற்காக சூழலை நாம் பேணிப் பாதுகாத்துக் கொள்ளப் போகிறோமா? என்பதற்காக உரைகல்லாகும்.

இப்போதுள்ள சர்ச்சைகள்:

பொது வாழ்க்கை என்று வந்தபின்னர் ஒருவர் சிறிய சலசலப்புக்களைக் கண்டு அஞ்ச முடியாது. காய்க்கின்ற மரத்திற்குத்தான் கல்லெறி என்பார்கள். அதுபோலவே, பொதுப்பணியில் ஈடுபடும்போது பல்வேறு விதமான விமர்சனங்கள், விவாதங்கள், ஏன் சர்ச்சைகளும் எழுவது தவிர்க்க முடியாததாகிறது. இவையெல்லாம் கூட ஒருவித தொழில்சார்ந்த இன்னல்கள் (occupational hazard) என்றும் கருதப்படலாம். இவற்றையெல்லாம் தைரியமாக முகம் கொடுத்து முறியடித்துச் செல்வதன் மூலமாகவே நாம் செய்ய முனையும் இலக்குகளை நோக்கி உறுதியாக முன்னேற முடியும்.

விவாதங்களும், சர்ச்சைகளும் உண்மையான போராளிகளுக்கு கிடைத்த வாய்ப்புக்களாகும். இவற்றின் மூலமாக அவர்கள் தமது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்திக் கொள்ளவும், தேவைப்பட்டால் கற்றுக்கொள்ளவும், பலரை வென்றெடுக்வும் முடிகிறது. எதிர்தரப்பாரை அம்பலப்படுத்தி ஓரம் கட்டுவதும் இதன் மூலமாக நடந்தேறுகிறது. மக்கள்தான் உண்மையான புரட்சிகர சக்திகள் என்பது உண்மையானால், எமது போராட்டத்தின் வெற்றியானது மக்கள் இந்த விவாதங்களில் கலந்து கொள்ளவும், நடைபெறும் வாதப் பிரதிவாதங்களை கூர்ந்து அவதானிக்கவும் வாய்ப்பைப் பெற்றிருப்பது அவசியமானது. இந்த விவாதங்களினூடாக மக்கள் கற்றுக் கொள்வார்கள். போராளிகளுக்கும் கற்றுக் கொடுப்பார்கள். இதுதான் ஜனநாயகத்தின் சாராம்சமாகும். ஆதலால், விவாதங்களும் சர்ச்கைகளும் என்றும் என்னை சலிப்புறச் செய்ததில்லை.

ஆனால் அண்மைக்காலமாக தேசம்நெற்றில் நடைபெறும் சர்ச்சைகள் அப்படியானவையாக எனக்குப் படவில்லை. இந்த விவாதத்தின் நோக்கம் என்ன என்ற கேள்வி என்முன் எழுகிறது. குறிப்பிட்ட சில நபர்கள் அசிங்கம் செய்வது என்ற எண்ணத்துடனேயே களத்தில் இறங்கியுள்ளார்கள். இவர்களுக்கு பொது அரங்கிற்கான கண்ணியம், கருத்துக்களில் நேர்மை, உண்மையை தேடுவதில் ஆழ்ந்த ஈடுபாடு போன்ற எதுவுமே இருப்பதாக தெரியவில்லை. அப்படியிருக்க இவர்களுடன் விவாதிப்பதால் என்ன நன்மை ஏற்பட்டுவிடப் போகிறது என்று எனது உள்மனம் எச்சரிக்கை செய்து கொண்டே இருக்கிறது. ஆனால் வெறுமனே இவர்களை புறக்கணித்துவிட்டு செல்லும் நிலைமை இங்கில்லை என்று தெரிகிறது. இவர்கள் வேண்டும் என்றே அசிங்கத்தை கொண்டுவந்து பொது அரங்கில் கொட்டிவிட்டு சென்றுள்ளார்கள். அருவெறுப்பாக இருக்கிறது என்பதற்காக அனைவரும் ஒதுங்கியே சென்றுவிட்டால் அந்த பொதுத்தளமானது எவரும் பயன்படுத்த முடியாததாக ஆகிப்போகிறது அல்லவா? அசிங்கத்தை கொட்டியவர்களது நோக்கமும் அதுதானே! ஆகவே இங்கு யாராவது அந்த அசிங்கத்தை அள்ளியெறிய முன்வர வேண்டும். அப்படியாக செய்வது அந்த கணத்தில் சங்கடமானதாக இருந்தாலும் கூட, அந்த அசிங்கங்களை அகற்றிய பின்னர் அனைவருமே அந்த பொது வெளியை சுதந்திரமாக பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் அல்லவா?

இங்குள்ள பிரச்சனையும் அதுவேதான்! இப்படியெல்லாம் அசிங்கப்படுத்துவதனால், அல்லது எம்மை ஆபத்திற்கு உள்ளாக்கிவிட தம்மால் முடியும் என்று எச்சரிப்பதனால் சிலர் மற்றவர்களை பொது அரங்கில் இருந்து அகற்றிவிட முயல்கிறார்கள். இதற்கு இடம் கொடுப்பதன் மூலமாக நாமும் இவர்களது ஜனநாயகவிரோத செயற்பாடுகளுக்கு மௌனமாக ஒத்துழைப்பு வழங்குவதாகவே அர்த்தப்படும். இப்படிப்பட்ட சர்ச்கைகளை பார்ப்பது யாருக்காவது மன உளைவுகளைத் தரக்கூடுமாயின் நான் முதலிலேயே அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

நாம் கனவான்களாகவே எப்போதும் இருக்க முனைந்தால் ரௌடிகள்தான் தெருக்களை ஆட்சி செய்வார்கள். எமது போரட்டத்தில் ஒருதடவை ரௌடியிசம் ஆட்சி செய்தது போதும். இதற்குமேல் அதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருப்போம். தேவைப்பட்டால் நாம் இந்த ரௌடியிசத்தை புரட்சிகர வன்முறை கொண்டு முகம்கொடுக்க தயாராக இருக்க வேண்டும். அதன் மூலம்தான் நாம் சுதந்திர காற்றை அனுபவிப்பதற்கு தகுதியானவர்களாக எம்மை ஆக்கிக் கொள்ள முடியும். நாம் எப்போது திருப்பி அடிக்க முனைகிறோமோ, அப்போதுதான் இந்த அரசியல் ரௌடியிசமும் முடிவுக்கு கொண்டுவரப்படும். அதனால் எதிர்த்துப் போராடுவதைத் தவிர வேறு வழிகள் இருப்பதாகப் படவில்லை.

நாம் முதலில் எமது தேசம் இன்றுள்ள நிலைமையை மனதில் இருத்திக் கொள்வோம். ஈழத் தமிழர் ஒரு யுத்தத்தில் முற்றாக தோற்கடிக்கப்பட்டு உள்ளார்கள். யுத்தத்தில் ஏற்பட்ட தோல்வியைவிட, ஈழத்தமிழர் தமது அரசியல் தலைமையை முற்றாக இழந்து, அரசியல்ரீதியாக அநாதையாக ஆக்கப்பட்டு இருப்துதான் மிகவும் பெரிய பாதிப்பைத் தருவதாக இருக்கிறது. யுத்தத்தில் நிகழ்த்தப்பட்ட போர்க்கால் குற்றங்கள் பற்றி எந்தவித விசாரணைகளும் நடத்தப்படவில்லை. அரசியல் கைதிகள் ஆயிரக்கணக்கில் சிறைகளில் வாடுகிறார்கள். இவர்களில் பலர் சட்டவிரோதமான வழிமுறைகளில் அழித்தொழிக்கப்படுகிறார்கள். யுத்தத்தினால் அகதிகளான மக்களது வாழ்க்கையோ சொல்லும் தரமன்று. அமைதி திரும்பியதாக கூறப்பட்டாலும், அது மயான அமைதிதான் என்பதை நாம் அன்றாடம் காண்கிறோம்.

அரசியல் தீர்வு என்ற விடயமே மறக்கப்பட்டதாக ஆகிவிட்டது. இதற்குள் சமூக அக்கறை கொண்டவர்கள் மத்தியில் உள்ள பணிகளோ மலைப்பூட்டும் அளவிற்கு பெரியனவாக உள்ளன. போர்க்குற்றம் தொடர்பான விடயங்களைக் கவனிப்பதா? யுத்தத்தால் அகதிகளாக ஆக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதா? இயற்கையின் அனர்த்தத்திற்கு உள்ளானவர்களை காப்பதா? அநாதைகளாக ஆக்கப்பட்ட, அங்கவீனமாக ஆக்கப்பட்ட, கவனிப்பார் யாருமற்றவர்களான வயோதிபர்கள் இப்படி யாரை கவனிப்பது? இப்படிப்பட்ட உடனடியான பிரச்சனைகள் ஒருபுறம் இருக்க, மக்களது நீண்டகால நலன்கள் பற்றிய கண்ணோட்டத்தில் செய்தாக வேண்டிய அரசியல் பணிகள் வேறு அப்படியே கிடக்கின்றன. தேசிய பிரச்சனைகளுக்கு நீண்டகால நோக்கில் தீர்வுகாண அவசியமான கோட்பாட்டு, அரசியல், அமைப்புத்துறை பற்றிய விடயங்கள் இன்னமும் பெரிதும் தொடங்கப்படாமலேயே இருக்கின்றன. இவற்றை நாம் வெற்றிகரமாக செய்து முடிப்பதன் மூலமாகவே நீண்டகாலத்தில் மக்களுக்கு உண்மையான சமாதானத்தை கொண்டு வருவது சாத்தியப்படும்.

இப்படியாக ஆயிரமாயிரம் பணிகள் எம்முன் குவிந்துள்ளன. இவற்றில் ஏதாவது ஒன்றையாவது செய்ய முனையும் ஒவ்வொருவரும் வளங்களின் பற்றாக்குறை காரணமாக, தாம் விரும்பியவாறு செய்ய முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். நம்பிக்கை வறட்சி, தோல்வி மனோபாவம், சலிப்பு போன்றவற்றை தமக்குள் எதிர்த்து போராடிக்கொண்டுதான் இந்த பணிகளை செய்தாக வேண்டியுள்ளது. எதிரியின் சார்பாக அடிவருடும் கூட்டத்திற்கு உதவுவதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் மக்கள் சார்பில் செயலாற்ற முனைபவர்கள் எல்லாவிதமான தடைகளையும் எதிர்த்தே போராடியாக வேண்டியுள்ளது.

இதற்கிடையில் குறுங்குழுவாதிகளும், அரசியல் கோமாளிகளும் செய்யும் சேட்டைகள் இன்னொரு புறம். எல்லாவிதமான ஆரோக்கியமான பணிகளுக்கும் இடையூறு செய்வதையே தொழிலாகக் கொண்டுள்ளார்கள். இவற்றிலும் கூட குறுங்குழுவாதிகளை நாம் வெறுப்பது கிடையாது. அவர்கள் என்னதான் கோமாளித்தனம் பண்ணினாலும், அவர்கள் தாம் சரியென நம்பும் ஒரு கருத்திற்காக விசுவாசமாக, பகிரங்கமாக தம்மை இனம்காட்டி, தமது கருத்துக்களை வெளிப்படையாக முன்வைத்து செயற்படுகிறார்கள். அவர்களது சட்டியில் இருப்பதுதான் அவர்களது அகப்பையில் வருகிறது. கையில் இருக்கிற ஒருசில உருப்படிகளை வைத்து அவர்கள்தான் எத்தனை காலத்திற்கு செப்படிவித்தை செய்ய முடியும். அதுக்கு அவர்களை நாம் குறைகூற முடியாதுதானே.

ஆனால் இந்த அரசியல் ரௌடிகளோ அப்படியாக அல்ல. இவர்கள் தம்மை இனம்காட்டுவதும் கிடையாது. இவர்களுக்கென ஒரு மக்கள் சார்ந்த ஒரு திட்டவட்டமான அரசியலும் கிடையாது. அடுத்தவரை சுரண்டி சேர்த்த அல்லது அரசாங்கம் வழங்கும் பணத்தை வைத்துக் கொண்டு, மாற்றை நோக்கி செய்யப்படும் பணிகளை குழப்பியடிப்பதொன்றே தமது தொழிலாகக் கொண்டு செயற்படுகிறார்கள். அதற்காக இவர்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளும் அசிங்கமானவையாகும். இவர்கள், அரசியலின் அறநெறிகளையோ, விவாதத்திற்கு உரிய கண்ணியங்களையோ அறவே மதிப்பது கிடையாது. மக்கள், போராளிகள், மறைந்த தியாகிகள் போன்றோரை மதிப்பதும் கிடையாது. தமது நடைமுறைகளில் கூட இவர்களுக்கு தயவு தாட்சண்யம் கிடையாது. அத்தனை விதமான ஆள்மாறாட்டங்கள், மோசடிகள், அயோக்கியத்தனங்கள், திருகுதாளங்கள் போன்ற எதனையும், சற்றேனும் தயக்கமின்றி பயன்படுத்த இவர்கள் தயங்குவதில்லை. இவர்களது நோக்கமெல்லாம் மக்களையும், அவர்களது போராட்டத்தையும், போராளிகளையும் அசிங்கப்படுத்துவது ஒன்றேயாகும். ஆதலால் இந்த அரசியல் மோசடியாளர்களது அயோக்கியத்தனம் மன்னிக்கப்பட முடியாதவையாகும். இவர்களிடம் கொஞ்சமேனும் இரக்கம் காட்டுவது, இவர்களுக்கெதிரான போராட்ட வழிமுறைகளில் கண்ணியத்தை கடைப்பிடிப்பது என்பது சாத்தியமற்றதாகும். ஆதலால் இப்படிப்பட்ட சிலரை அம்பலப்படுத்தும் நோக்கத்துடனும், அவர்கள் அள்ளித்தெளித்துள்ள அசிங்கங்களை ஓரளவு சுத்தப்படுத்தும் நோக்கத்துடனுமே இந்த பத்தியை எழுதுகிறேன். இந்த போக்கிரிகளுக்காக இவ்வளவு நேரம் செலவளிப்பது தேவையானதுதானா? என்ற கேள்வி கேட்கவே செய்கிறது. சரி தொடர்ந்து வாருங்கள் இந்த நேரம் பயனுள்ளதாக அமைகிறதா என்று முடிவில் கண்டு கொள்வோம்.

Kannady_Chandranகண்ணாடிச் சந்திரன்:

கண்ணாடிச் சந்திரன் தனது குறிப்புக்களில் வரிக்குவரி எனது பெயரை குறிப்பிட்டு எழுதியிருந்தார். அதனை மேலோட்டமாக வாசித்த யாருமே ஏதோ நானும் அவரும் இப்பொழுதும் மிகவும் நெருக்கமான நட்பில் இருப்பதாக கருதிக் கொண்டிருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. ஏனெனில் அவர் தனக்கும், எனக்கும் இடையில் உள்ள உறவின் தற்போதய நிலைமை பற்றியும் எதுவும் குறிப்பிடுவதை வேண்டுமென்றே தவிர்த்துள்ளார். கடந்த ஒன்றரை வருட காலமாக அவர் செய்துவரும் அயோக்கியத் தனத்தையும் யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற எண்ணத்தில்தான் இந்த மாதிரியெல்லாம் எழுதத் துணிகிறார். எனது நண்பர் நல்லையா தயாபரன் (இதுதான் கண்ணாடிச் சந்திரனின் சொந்தப் பெயர்) என்னைப் பற்றி ரகு என்ற பெயரில் அசிங்கப்படுத்திக் கொண்டே, தனது இயக்கப் பெயரில் இவ்வாறு நட்பு பற்றி எழுதுவதுதான் இன்னமும் அயோக்கியத்தனமானது. இவர் தேசம்நெற் வாசகர்களை முட்டாள்களாக கருதிக் கொண்டு தனது சாகசங்களை செய்யத் தொடங்குகிறார். இவரது இந்த அயோக்கியத்தனம் தேசம்நெற்றில் தான் தொடங்கியது என்பதல்ல. கடந்த ஒன்றரை வருடங்களாக வேறு வேறு தளங்களில் செய்துகொண்டுதான் இருக்கிறார்.

அவ்வாறே, எனக்கும் தயாபரனுக்கும் இடையில் நட்பு உருவாகி சுமார் முப்பத்தைந்து வருடங்களில், இவர் எனது முதுகில் குத்துவதுதில் இதுவொன்றும் முதல் தடவையும் அல்ல.

முதல் சம்பவம் 1978 இல் கைதடியில் நடைபெற்ற சாதிக்கலவரத்துடன் தொடர்புடையது. நான் இவர்களுடைய வீட்டிற்கு எல்லாம் சென்று பழகியிருந்தவன் ஆதலால், இவர்களது குடும்பத்திலும், வீட்டிலும் கடைப்பிடிக்கப்படும் சாதிய நடைமுறைகளை நன்கு அறிந்தவன். இதனால், கைதடியில் சாதிக்கலவரம் நடைபெற்றபோது, இந்த கலவரம் தொடர்பாக எனது கவலையை, கோபத்தை பகிர்ந்து கொள்ள முயன்றபோது, என்னை கண்டபடி, அவனே, இவனே என்று திட்டி, எனது சமூக பின்னணி பற்றியெல்லாம் இழுத்து, நீயாரடா இதனை கேட்பதற்கு? என்ற வகையில் ஒரு பதில் கடிதம் அனுப்பியதுடன் அந்த நட்பு முறிந்தது.

பின்பு 1982 பெப்ருவரி மாதத்தில் இவர் ஒருநாள் திடீரென் எனது வீட்டு வாசலில் வந்து நின்றார். முன்பு நடந்தவைக்கு மன்னிப்பு கேட்டார். தான் எனது அரசியல் நடவடிக்கைகள் பற்றி அடிக்கடி கேள்விப்பட்டு வருவதாகவும், அது குறித்து மிகவும் பெருமைப்பட்டதாகவும் கூறினார். தன்னையும் எமது நடவடிக்கைகளுடன் இணைத்துக் கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டார். இப்படித்தான் கழகத்துடனான இவரது தொடர்பு ஆரம்பமானது.

1983 இன் பிற்பகுதியில் நான் அமைப்பு பணிகள் காரணமாக வேறு இடமொன்றிற்கு செல்ல நேர்ந்து விட்டதால் சரியாக ஒரு வருடம் கழித்தே சந்திரனையும், கேசவனையும் சந்திக்க முடிந்தது. அப்போது கழகத்தினுள் பிரச்சனைகள் மிகவும் உச்ச கட்டத்தில் இருந்தன. சந்ததியார் ஏற்கனவே இயக்கத்தில் இருந்து ஒதுங்கி விட்டிருந்தார். வதைமுகாம்கள் உற்பட பல்வேறு பிரச்சனைகள் கழகத்தினுள் உருவாகி அமைப்பையே உலுக்கியெடுத்துக் கொண்டிருந்தன. போராட்டத்தின், மக்களின், போராளிகளின், அமைப்பின் எதிர்காலம், மற்றும் தனிப்பட எமது உயிர்ப்பாதுகாப்பு போன்ற பல பிரச்சனைகளின் மத்தியில் இதனை எவ்வாறு முகம் கொடுப்பது என்று இரகசியமாக விவாதித்துக் கொண்டிருந்தோம்.

கழகத்தினுள் நெருக்கடிகள் இந்தளவுக்கு தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், தளத்தில் இருந்த கேசவன் இந்த நிலைமைகளை கருத்திற்கொண்டு சற்று நிதானமாகவும், கவனமாகவும் செயற்பட்டிருக்க முடியாதா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த கேசவன், தளத்தில் தான் பெரும்பாலும் அன்றாட நடவடிக்கைகள் தொடர்பான பிரச்சனைகளிலேயே அதிகளவில் மூழ்கியிருந்ததால், அப்போது அமைப்பினுள் நடைபெற்றுவந்த பிரச்சனைகள் தொடர்பாக ஒரு முழுமையாக பார்வையை பெறுவது சாத்தியமற்றதாக இருந்ததாக குறிப்பிட்டார். அத்துடன் அவர் இன்னொரு விடயத்தையும் குறிப்பிட்டார். அதாவது, சந்திரனுக்கும் தனக்கும் இடையிலான உறவு ஒருவிதமான சிக்கலானதாக இருந்ததாகவும், பல சந்தர்ப்பங்களில் சந்திரன் சில முடிவுகளை உடனடியாக எடுத்தாக வேண்டும் என்று அதீதமான அழுத்தத்தை கொடுத்ததாக தான் உணர்ந்ததாகவும் குறிப்பிட்டார். தளத்தில் மிகவும் கடுமையாக உழைக்கும் ஒரு தோழர் என்றவகையில் தான் அப்போது அவரது கருத்துக்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்த போதிலும், பின்னர் திரும்பிப் பார்க்கையில், தான் சுதந்திரமாக வேறு முடிவுகளை எடுக்க முடியாதவாறு சந்திரன் தன்னை நிர்ப்பந்திருப்பதை தான் அப்போது உணர்வதாக குறிப்பிட்டார்.

பின்னர் தீப்பொறியாக நாம் செயற்பட்ட காலங்களில் சந்திரன் மூலமாக இப்படிப்பட்ட ஒரு நெருக்குதல்கள் எனக்கு ஏற்படக் கூடாது என்பதில் சற்று விழிப்பாகவே இருந்தேன். தீப்பொறி அமைப்பினுள் சந்திரன் தன்னிச்சையாகவும், சகதோழர்களது பரஸ்பர கண்காணிப்பிற்கு அப்பாற்பட்ட வகையிலும் செயற்பட நான் அனுமதித்ததில்லை. இதுதான் பின்னைய முரண்பாடுகளுக்கு காரணமானது. பரஸ்பரம் தோழமையுடன் கூடிய கண்காணிப்பில் சகதோழர்கள் ஈடுபடுவதை இவர் சகித்துக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை. ஆதலால் தன்னுடைய புத்திசாலித்தனம், ஆற்றல்கள் போன்றவற்றை நான் மதிப்பதாக இல்லை என்ற வகையில் விமர்சனங்களை முன்வைத்தார். இதன் பின்னர் சக அங்கத்தவர்கள் மத்தியில் முதுகுக்குப் பின்னாக என் தொடர்பான விமர்சனங்களை முன்வைப்பதை வழக்கமாக இவர் கொண்டிருக்கிறார். இது அப்போது எனக்கு அறவே தெரியாது. ஆனால் இவரது குட்டுகள் வெளிச்சத்திற்கு வந்து இவர் அமைப்பை விட்டு ஓடிய பின்புதான் இந்த விபரங்கள் சக தோழர்களால் எனக்கு தெரிவிக்கப்பட்டன.



நான் கனடா வந்த போது இவரை சந்திப்பதற்கு எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஆனால் சில காலத்தின் பின் தானாக என்னுடன் தொடர்பு கொண்டார். சந்திக்க விரும்புவதாக கூறினார். சந்தித்தேன். அந்த சந்திப்பில் அவர் தீப்பொறி அமைப்பை விட்டு திடீரென வெளியேற நேரிட்டது குறித்து கேட்டேன். அதற்கு, அப்போது தான் மனரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், ஆதலால் தான் தவறான ஒரு செயற்பாட்டை செய்துவிட்டதாகவும் கூறி மன்னிப்பு கோரினார். சம்மாட்டியின் பணம் தொடர்பாகவும் கேட்டேன். அதற்கு அவர் சம்மாட்டியின் பிள்ளைகள் பற்றி குற்றப்பட்டியலை அடுக்கினார். அவர்களே அந்த பணத்தை எடுத்து செலவளித்துவிட்டதாக குறிப்பிட்டார்.

பின்னர் 2009 மே 18 இற்குப் பிறகு நான் மீண்டும் செயற்பட தொடங்கியபோதுதான் இவர் அடுத்த தடவையாக முதுகில் குத்தினார். காரணம் எளிமையானது. எமது போராட்டத்தில் தோன்றிய நெருக்கடிகள், சிக்கலான சமூக, பொருளாதார, அரசியல், சித்தாந்த, மற்றும் அமைப்புத்துறை சார்ந்த பல காரணிகளின் இணைவால் உருவானவை என்பதை புரிந்துகொள்ள முடியாத இவர்கள், அதனை மிகையாக எளிமைப்படுத்திய விதத்தில் புரிந்து கொண்டார்கள். நெருக்கடிகளுக்கான காரணிகளை வெறுமனே தனிநபர்களில் கண்டார்கள்.

இதனால் போராட்டத்தில் தோன்றிய நெருக்கடிகளுக்கான காரணங்களை இவர்கள் பிரபாகரன் என்ற தனிநபரினதும், புலிகள் என்ற அமைப்பினதும் தவறுகளாக மாத்திரம் புரிந்து கொண்டதன் விளைவுதான் இந்த புலிக்காய்ச்சலாகும். ஆனால் இந்தவிதமான புரிதலானது, எமது போராட்டத்தில் தோன்றிய அனேகமாக எல்லா அமைப்புக்களும் இந்தவிதமாகவே சென்று முடிந்ததேன் என்ற கேள்விக்கு விடைகாணும் திறனற்றது. கூடவே இவர்கள் புலிகளை பாசிஸ்ட்டுகள் என்று முத்திரை குத்தவும், மேற்கொண்டு பாசிஸ்ட்டுகளுக்கு எதிராக ஏனைய அனைவருடனும் கூட்டுச் சேர்வது என்று எளிமைப்படுத்தப்பட்ட சூத்திரத்திற்கும் இட்டுச் செல்கிறது. இதுதான் இன்றுவரை இந்திய, சிறீலங்கா அரசுகளின் ஆதரவாளர்களாக, கைக்கூலிகளாக செயற்படும் ஒவ்வொருவரதும் நியாயமாக இருக்கிறது.

அத்துடன் சிங்கள தேசியவாதத்திற்கும், சிங்கள தேசத்தின் பல்வேறு சமூக சக்திகளுக்கும் இடையிலான சிக்கலான உறவுகளை அறவே புரிந்து கொள்ள முடியாதவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். இதனையும் மறுபடியும் தனிநபர் சார்ந்த பிரச்சனையாகவே குறுக்கி புரிந்து கொண்டுள்ளார்கள். இதனால் ஆட்சியில் இருக்கும் மகிந்தா இன்றைய பிரச்சனைக்கு தீர்வு காண்பார் என்று நம்பத்தலைப்பட்டு உள்ளார்கள். அப்படியானால் முன்னர் சந்திரிக்காவுக்கு என்ன நடந்தது என்பது குறித்தோ, பண்டா - செல்வா, பண்டா - டட்லி ஒப்பந்தங்களுக்கு என்ன நடைபெற்றது என்பது குறித்தோ விளக்கும் திறன் அற்றவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். அத்தோடு புலிகள் அமைப்பை அழித்து பின்னரும் மகிந்தாவினால் ஒரு தீர்வு திட்டத்தை முன்வைக்க முடியாமல் இருப்பதேன் என்பதையும் இவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. மாறாக, மகிந்தவை நம்புங்கள் என்று ஏதோ யேகோவா சாட்சிக்காரர்கள் போல ஒரே வாசகத்தைத்தான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

சிறீலங்கா அரசின் அடிவருடிகளான மனோரஞ்சன் கோஸ்டியுடன் இணைந்து செயற்படும் இவர்களது அரசியலானது எமது தேசம் சார்ந்த அரசியலுக்கு நேரெதிரானது. இதனால் எம்மை எதிர்த்து சந்திரன் செயற்பட்டார். இவர் உண்மையிலேயே ஆற்றல் மிக்கவராக இருந்தால் எம்மை எதிர்த்து பகிரங்கமாகவும், ஜனநாயகபூர்வமாகவும் செயற்பட்டிருக்க முடியும். ஆனால் முகங்களை மறைத்து அவதூறு செய்யும் வழியை தேர்ந்தெடுத்தார்.

இப்போதுங்கூட நான் மகிந்த சார்பு அரசியலை செய்பவர்களை வெறுக்கவில்லை. அவர்கள் தங்கள் தரப்பு கருத்துக்களை பகிரங்கமாக முன்வைக்கட்டும். நாம் எமது கருத்துக்களை முன்வைப்போம். கருத்துக்கள் முட்டி மோதட்டும். இந்த விவாதங்களின் ஊடாக நாமும், அவர்களும், மக்களும் பல்வேறு படிப்பினைகளை பெறுவோம். இறுதியில் மக்கள் சரியான கருத்துக்கள் எதுவென்பதை தாங்கள் தீர்மானிப்பார்கள்தானே? நாம் கூட அரசியல் தீர்வாக இப்போது தமிழ் மக்கள் தமது எதிர்காலம் பற்றிய சொந்த முடிவை எடுக்க வேண்டும் என்றுதானே வலியுறுத்துகிறோம். சிங்கள தேசத்துடன் இணைந்து வாழ்வதா, அல்லது பிரிந்து போவதா என்பதை தமிழ் மக்கள் தீர்மானிக்கும் உரிமையைக் கொண்டுள்ளார்கள்.

இந்த சுயநிர்ணய உரிமையானது ஒவ்வொரு தேசத்திற்கும் உள்ள, அந்நியப்படுத்தப்பட முடியாத உரிமையாகும். இதனை ஒரு சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாக நாம் தீர்மானித்துக் கொள்ளமுடியும். இன்று இல்லாவிட்டாலும் சில காலம் கழிந்தாவது தமிழ் மக்கள் தமது உரிமைகளை இவ்வாறு நிலைநாட்டியே தீர்வார்கள் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். இது தொடர்பாக மாற்றுக் கருத்துள்ளவர்கள் சுதந்திரமாக தமது கருத்துக்களை தெரிவிக்கவும் பிரச்சாரம் செய்யவும் அனுமதிப்பதுதானே உண்மையான ஜனநாயகம் ஆகும். ஆகவே இவர்கள் தமது கருத்தை பகிரங்கமாக பிரச்சாரம் செய்வதற்கான உரிமையை நாம் கட்டாயமாக வலியுறுத்த வேண்டும். ஆனால் இவர்கள் ஏன் இந்த மோசடியான பாதையை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதுதான் இங்குள்ள பிரச்சனையாகும்.

மாற்றுக் கருத்துக்களைக் கொண்டவர்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் விமர்சித்துக் கொள்வதும், காரசாரமான விவாதங்களில் ஈடுபடுவது ஒன்றும் தவறான செயற்பாடு அல்ல. எனெனில் இப்படிப்பட்ட நேரடியான விவாதங்களின் மூலமாக மாத்திரமே நாம் சரியான கருத்துக்களை உருவாக்கிக் கொள்வதும், அந்த கருத்துக்களின் அடிப்படையில் பொதுவான கொள்கையின் வழியில் பலரும் ஒன்று சேர்ந்து செயற்படுவதும் சாத்தியமாகும். ஆதலால், சரியான அரசியலை கண்டுகொள்வதற்கு இப்படிப்பட்ட விவாதங்கள் முன்னிபந்தனையானவை! இந்த நோக்கத்தை நாம் அடைய வேண்டுமானால் இந்த விவாதங்கள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும், தோழமை உணர்வுடனும் நடத்தப்பட வேண்டியது முக்கியமானதாகும்.

இந்த விவாதம் முழுவதும் சரியான அரசியலை தேடுவது என்ற அக்கறையுடனும், தோழமைபூர்வமான உணர்வுடனும் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானதாகிறது. காழ்ப்புணர்ச்சிகள், போட்டுக் கொடுப்பது, அவதூறு செய்வது, மோசடி, பித்தலாட்டங்கள் போன்றவற்றிற்கு இங்கு அறவே இடமிருக்க முடியாது. இப்படியாக அல்லாமல், விவாதங்கள் என்ற பெயரில் புனைபெயர்களுக்கு பின்னால் மறைந்து கொண்டு அவதூறுகளையும், இழிவுபடுத்தலையும் மேற்கொள்வார்களானால் இவர்களது நோக்கம் என்ன என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகிறது.

இங்கு சந்திரனும், அவரது சகாவான நேசனும் ஒருபோதும் தங்களை இனம்காட்டியதும் கிடையாது. தாங்கள் முன்னெடுக்கும் அரசியல் இதுதான் என்று பகிரங்கமான கூறியதும் கிடையாது. இதனால் விவாதங்கள் என்பவை உண்மையாக நடைபெறவே இல்லை. நேரடியானதும், பகிரங்கமானதும், அரசியல் ரீதியானதும், கண்ணியமானதும் ஆன விவாதங்களுக்கும் பதிலாக இவர்கள் சேறடிப்பது, போட்டுக் கொடுப்பது, பொய்சொல்வது போன்ற தமது வழமையான அங்கிடுதட்டி வழிமுறைகளில் சந்திரன் தனது கைவரிசையைத் தொடங்கினார். வேறு வேறு இணையத் தளங்களில், பல்வேறு புனைபெயர்களில் சந்திரன், என்னைப் பற்றி, கண்டபடியெல்லாம் அசிங்கங்களை கொட்டித் தீர்த்தார். எனது பெயரில், தானே பின்னூட்டங்களை இட்டார். இவை பெரும்பாலும் நாம் வெளிப்படையாக முன்வைக்கும் கருத்துக்களுக்கு மாறானதாகவும், மிகவும் அற்பத்தனமானதாகவும் இருந்தன். இது பலர் மத்தியில் அநாவசியமான குழப்பங்களை தோற்றுவித்தது.

உதாரணமாக ஒரு விடயத்தை பார்ப்போம். நாம் மே 18 இயக்கம் சார்பாக போர்க்குற்றங்கள் தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி வருகிறோம். இது தொடர்பாக சில செயலூக்கமான முன்னெடுப்புக்களை தொடங்க விரும்பினாலுங்கூட, இந்த வகையான செயற்பாடுகள் அதிக பொருட்செலவையும், கணிசமான மனித வள தேவையையும் கொண்டிருப்பதனால் அதனை செய்ய முடியாது சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் அலைவரிசை நான்கில் (Channel 4) சிறீலங்கா அரசின் போர்க் குற்றங்கள் தொடர்பான வீடியோக் காட்சிகள் வெளியாகின. பல்வேறு இணையத்தளங்கள் இந்த காட்சிகள் வெளியாகி இருந்தன. இந்த காட்சிகளை வெளியிட்ட இணையத்தளங்களில் ஒன்றான அதிரடி இணையத்தளத்தில், இந்த காட்சியின் கீழ் இந்த கண்ணாடி சந்திரன் பின்னூட்டம் விட்டிருந்தார். தனது சொந்த பெயரிலோ இயக்கப் பெயரிலோ அல்லாமல் எனது சொந்த பெயரை இதில் பயன்படுத்துகிறார். இது எந்தவிதமான குழப்பங்களை ஏற்படுத்துகிறது என்பதை கீழே தரப்பட்டுள்ள குறிப்பை பார்த்தால் தெரியும்.

._._._._._.

-http://jananayagam.blogspot.com/2009/08/blog-post.html
வளர்மதி
தேசம் நெற் - றில் ரகுமான் ஜானின் உரையை வாசிக்க நேர்ந்து அங்கு பதிவிட்டுள்ள பின்னூட்டம். வெளியிடப்படுமா பதில் கிட்டுமா என்ற சந்தேகத்தில் ஒரு எச்சரிக்கைக்காக இங்கு ஏற்றி வைக்கிறேன்.

இப்பதிவிற்கு தொடர்பில்லாதது என்ற போதிலும் விஷயத்தின் முக்கியத்துவம் கருதி திரு. ரகுமான் ஜானிடம் ஒரு விடயத்தை தெளிவுபடுத்த வேண்டி பகிர்ந்து கொள்கிறேன்.

எனது வலைப்பக்கத்தில் சமீபத்தில் வெளியான படுகொலைகள் குறித்த வீடியோவை பதிவில் ஏற்றியிருந்தேன் (http://vinaiaanathogai.blogspot.com/2009/08/blog-post_26.html). அதில் அந்த வீடியோ குறித்து தெரிவித்திருப்பதாக கீழ்க்கண்ட பின்னூட்டம் வெளியிடப்பட்டிருந்தது. அது பின்வருமாறு:

அதை வெளியிட விருப்பம் இல்லாதிருந்தும் இப்படி மோசமாக கருத்துரைப்பவர்களை எதிர்கொள்ளவாவது வேண்டும் என்பதன் பொருட்டு வெளியிட்டேன். மற்றொரு நண்பர் அதற்கு எதிர்வினை புரிந்ததும் எனது கருத்தையும் பதிந்தேன். எனது கருத்து பதிந்து 10 நிமிடங்களுக்குள்ளாக மீண்டும் அதே பின்னூட்டத்தை இம்முறை சுகன் அனுப்பினார்.

அது பின்வருமாறு:

sugan said…
ரகுமான் ஜான் says: 28 August 2009 at 2:30
புலிகள் தாடி வைப்பதில்லை எனவே வீடியோவில் கொல்லப்படுவது புலிகள் அல்ல.
சம்பவம் நடந்த இடம் துணுக்காய். துணுக்காய் மல்லாவி வாசிகளுக்கு நன்கு தெரிந்த இடம். கொலை செய்பவரின் தலைமயிர் அவர் இராணுவத்தை சேர்ந்தவரல்ல என்பதை தெளிவாகிறது..
இரண்டாவதாக கொலை செய்யப்படுபவர் புளட்டை சேர்ந்த புலிகளால் பிடிக்கப்பட்டிருந்த பாரூக் என்பதை பாரூக்கை தெரிந்தவர்களுக்கு நன்கு புரியும்.

துணுக்காய் வதை முகாமில் புலிகளின் பிடியில் இருந்த அத்தனை மாற்று இயக்க மாற்று கருத்து கொண்ட அனைவரும் கடந்த ஜனவரியில் துனுக்காயை விட்டு புலிகள் பின் வாங்கும் பொது சுட்டு கொல்லப்பட்டது அனைவருக்கும் நன்கு தெரிந்த விடயம்.

._._._._._.

ரகுமான் ஜானின் பெயரில் இக்கருத்து தெரிவிக்கப்பட்டு இருந்ததால் அதை அவர் தெரிவித்திருக்கும் பட்சத்தில் எங்கு இருக்கக்கூடும் என்று இயன்ற அளவில் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை.

உயிர்ப்பு குழுவினருடன் ஒரு கட்டத்தில் எனக்கு நேரடியான தொடர்பு இருந்தது. அதை ரகுமான் ஜானும் அறிந்திருக்கலாம். நீண்ட விவாதங்களும் பகிர்தல்களும் அத்தோழர்கள் என்னுடன் நிகழ்த்தியதும் அறிந்திருக்கலாம். பின்னர் தமிழகத்தில் இருந்து அவர்கள் கிளம்பிச் சென்ற பிறகு அவர்கள் செய்துவிட்டுச் சென்ற காரியம் பெருத்த அதிர்ச்சி அளித்தது. அதைப் பற்றி இங்கு பகிர்ந்துகொள்ள விருப்பம் இல்லை. இயலவும் இயலாது. குறைந்தது சம்பந்தப்பட்ட உயிர்ப்பு தோழர்கள் காரணத்தை அறிந்திருப்பீர்கள் என்றும் நினைக்கிறேன்.

தற்சமயம் இங்கு கேட்டுக்கொள்ள விழைவது ஒன்று மட்டுமே. மேலே தந்திருக்கும் எனது வலைப்பக்கத்தில் இருந்தான பின்னூட்டங்களில் குறிப்பிட்டு இருப்பதைப் போன்று ரகுமான் ஜான்தான் அக்கருத்தை தெரிவித்திருந்தாரா என்பதை அவரோ தேசம்நெற் ஆசிரியர் குழுவோ தெளிவுபடுத்த வேண்டுகிறேன். அக்கருத்தை அவர் கூறி இருப்பாரேயானால் எங்கு என்பது பற்றிய விவரத்தை அறிந்த வேறு எவரேனும்கூட தெரியப்படுத்தி உதவலாம்.

பொறுப்புமிக்க கருத்துக்களை இங்கு பகிர்ந்துள்ள ரகுமான் ஜானே இதைத் தெளிவுபடுத்தினால் நல்லது.

நன்றிகள்.
வளர்மதி …
August 29, 2009 2:24 PM
._._._._._.

ஏன் இந்த தேவையில்லாத குழப்பங்கள். இந்த தகவல் முதன்முதலாக வந்தபோது எனக்கு அது பற்றி தெரிந்திருக்கவில்லை. அதனால் வளர்மதியின் கருத்திற்கு பதில் தெரிவிக்க முடியவில்லை. அண்மையில்தான் இந்த விடயம் எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனை சந்திரன் திட்டமிட்டே உருவாக்குகிறார். தமது அரசியலை வெளிப்படையாக முன்வைத்து செயற்பட முடியாதவர்கள் அடுத்தவர் பெயரில் மோசடியில் இறங்குகிறார்.

அடுத்ததாக, நிதர்சனம்நெற் இணையத் தளத்தில் சந்திரன் மீண்டும் எனது பெயரில் எழுதுகிறார்…

._._._._._.
ரகுமான் ஜான்
September 10th, 2009 at 14:22

மக்களை இதயபூர்வமாக நேசிக்கும் தென்னிலங்கையின் ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே என்பது உலகறிந்த உண்மை. சுதந்திர இலங்கையின் வரலாற்றில் தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாஷைகளைப் புரிந்து கொண்டு, அரசியல் தீர்வொன்றின் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இதயசுத்தியுடன் செயற்பட்ட, செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒரே தலைவர் இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் என்பதை மனச்சாட்சியுள்ள எவரும் மறுக்க மாட்டார்கள். தமிழ் மக்கள் சமத்துவமான உரிமைகளுடன் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமென்பதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியான கொள்கை கொண்டவர். அர்ப்பணிப்பான செயற்பாடுகளை வெளிக்காட்டுபவர். அந்த வகையில் கடந்த மூன்றாண்டு கால ஜனாதிபதியின் அரசாங்கத்தின் கீழும், அதற்கு முந்திய காலகட்டங்களில் தனிப்பட்ட ரீதியில் மஹிந்த ராஜபக்ஷ எனும் மனிதாபிமானியாலும் தமிழ் மக்களுக்கு ஆற்றப்பட்ட சேவைகளை சற்று சீர்தூக்கிப் பார்ப்பது சாலப் பொருந்தும்….
._._._._._.

இப்படி சந்திரன் செய்வதன் நோக்கம் என்ன? மகிந்தாவுக்கு சாமரை வீசுவது என்று முடிவு செய்தால் அதனை வெளிப்படையாகவும், பகிரங்கமாகவும் செய்வதுதானே? அப்படி செய்வதில் பாதுகாப்பு பிரச்சனைகள் என்று எதுவுமே கிடையாதே! அப்படியிருக்க எனது பெயரை பயன்படுத்துவது என்பது அப்பட்டமான மோசடி அன்றி வேறென்ன? சாதாரணமாக அன்றாட நடைமுறையில் அப்பளம் விற்கும் சாதாரண வியாபாரிகூட, தனது நிறுவனத்தின் பெயரை அடுத்தவர் பயன்படுத்த அனுமதிப்பதில்லை. தேவைப்பட்டால் சட்டத்தின் உதவியைக்கூட இவர்கள் நாடுகிறார்கள். இப்படியான அப்பட்டமான மோசடி, பித்தலாட்டம், ஆள்மாறாட்டம் போன்றவற்றை செய்யும் சந்திரனும் நேசனும், மக்களின் நலன்கள் பற்றியும், உண்மை, நாணயம் பற்றியும் பேசினால் இதனை எவ்வாறு எடுத்துக் கொள்வது?

கடந்த ஒன்றரை வருடங்களாக நாம் ‘மே 18 இயக்கம்’ என்ற பெயருடன் பகிரங்கமாகவே இயங்கி வருகிறோம். வியூகம் என்ற சஞ்சிகையின் இரண்டு இதழ்கள் வெளிவந்து விட்டன. ஆயினும் எம்மிடம் ஒரு முறையான இணையத்தளம் கிடையாது. அப்படிப்பட்ட ஒன்றை அமைப்பதற்கு, அதனை முறையாக பராமறிப்பதற்கு போதிய ஆளணி வளங்கள் இன்மையே காரணம். ஆனாலும் எமது பெயர்களில் குறைந்தபட்சம் நான்கு வலைத்தளங்கள் இயங்குகின்றன என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? கீழே உள்ளவற்றை நீங்கள் பாருங்கள்.

-http://may18iyakkam.wordpress.com/

-http://viyooham.blogspot.com/

-http://may15to18mulivaykkal.blogspot.com

-http://may18iyakkam.blogspot.com

குறைந்தபட்சம் இவற்றில் இரண்டு வலைப் பக்கங்களுடனாவது கண்ணாடிச் சந்திரனுக்கு நேரடியாக தொடர்பிருப்பதாக நாம் உறுதியாக நம்புகிறோம். இந்த வலைத்தளங்கள் முழுக்க முழுக்க எம்மைப்பற்றி அவதூறு செய்வதற்கு என்றே அமைக்கப்பட்டவையாகும். வாசகர்கள் தாராளமாக இந்த வலைப் பக்கங்களுக்கு சென்று பார்க்கலாம். இவற்றில் கூறப்பட்டு இருப்பவற்றில் மிகப் பெரும்பான்மையானவை அப்பட்டமான பொய்கள். இவற்றை வாசகர்கள் பார்ப்பதால் நாம் இவர்களை அரசியல் ரௌடிகள் என்று ஏன் அழைக்கிறோம் என்பதையும், இவர்கள் எவ்வளவு தூரம் எமது போராட்டத்தை சேதப்படுத்துகிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ளமுடியும். இப்படிப்பட்ட அரசியல் பித்தலாட்டங்களில் செலவிடப்படும் சக்தியில் ஒரு சிறிய பங்கில், எமது மக்களுக்கு தேவையான விடயங்கள் பலவற்றை செய்து முடிக்க முடியும். இவர்கள் தாம் நாசமறுப்பது மாத்திரமன்றி, குறிப்பான அரசியல் பணிகளை செய்பவர்களையும் வம்புக்கு இழுப்பதன் மூலம் மக்களுக்கு உண்டாகும் இழப்புக்கள் இரண்டு மடங்கானவை என்பது புரிந்து கொள்ளத்தக்கதாகும்.

சந்திரன் இதனை ஏன் செய்கிறார் என்று நான் பலதடவை யோசித்துப் பார்ப்பதுண்டு. இதனை வெறுமனே மனவிகாரமாக பார்ப்பதா அல்லது இதன் பின்னாலுள்ள அரசியல், சமூக கண்ணோட்டம், வர்க்க குணாம்சம் பற்றியெல்லாம் சிந்தித்துப் பார்க்கிறேன். இதனை ஒருவித மத்தியதர வர்க்க நோயாகவும் பார்க்க வேண்டியுள்ளது. தொழிலாளர் வர்க்கம் போலன்றி, குட்டிமுதலாளிய வர்க்கமானது தனது தனித்திறமைகளை அடிப்படையாக முன்வைத்தே தனது வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்கிறது. மிகவும் பலமான மூலதன அமைப்பின் முன்னால், தனியாக நின்றால் தான் ஏதுமற்றவராகி விடுவார் என்பதை உணரும் தொழிலாளிகள் அதிகளவு அமைப்புணர்வும், வர்க்க உணர்வும் பெற்றவர்களாக இருக்கிறார்கள். ஆனால் குட்டி முதலாளி வர்க்க பின்னணியைக் கொண்டவர்கள் தமது தனித்திறமையை அதிகமாக தூக்கிப் பிடிப்பதனால் தாபன உணர்வு குறைந்தவர்களாகவும், எப்போதும் தம்மை முதன்மைப்படுத்தும் தன்முனைப்பு (egoistic) பண்புடையவர்களாகவும் இருக்கிறார்கள்.

இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், அவர்கள் தமது திறமையை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் வெளிப்படுத்தி மற்றவர்களை வென்றெடுக்க முனையாமல், தன்னிச்சையாகவும், மற்றவரது முதுகுக்குப்பின்னாலும் செயற்படுவதிலேயே தமது திறமையெல்லாவற்றையும் பயன்படுத்துகிறார்கள் என்பதில்தான் இதன் முரண்நகை வெளிப்படுகிறது. தாம் புத்திசாலிகள் என்று மற்றவருக்கு நிரூபிப்பதற்கே அதிகம் முனைப்பு காட்டுகிறார்கள். இவர்கள் தம்மைப்பற்றி என்ன நினைத்துக் கொள்கிறார்கள் என்பது முக்கியமானதல்ல. ஆனால் இவர்கள் மற்றவர்கள் எல்லோரையும், குறிப்பாக சகதோழர்களையும், மக்களையும் முட்டாள்களாக நினைத்துக் கொண்டு செயற்படும் போதுதான் பிரச்சனைகள் தோன்றுகின்றன. இவர்கள் செய்யும் சிறுபிள்ளைத்தனமான உருப்படிகள் ஒன்றிரண்டும் அடுத்தவர்களுக்கு பிடிபட்டதும் அதனை முகம் கொடுக்க முடியாமல் ஓடுகிறார்கள். பின்பு போன இடத்திலும் கை சும்மா இருக்காது. மீண்டும் அதே சேட்டையை தொடங்குகிறார்கள்.

இவர்கள் உண்மையிலேயே ஆற்றல் மிக்கவர்களாக இருந்தால், சமூகத்தின் முக்கியமான பிரச்சனைகளுக்கு அடிப்படையான காரணங்களை முதலில் கண்டு கொள்பவர்களாகவும், அதனை அடுத்தவர்களுக்கு விளக்கி அனைவரையும் வென்றெடுக்கக் கூடியவர்களாகவும் இருப்பர். எதிர்தரப்பாரும் மதிக்கத்தக்க திட்டங்களை முன்வைத்து, அனைவரையும் வென்றெடுத்து வழிகாட்ட முனைவார்கள். இதன் மூலமாக அனைவரும் மதிக்கத்தக்க தலைவர்களாக மிளிர்வார்கள். இவர்களுக்கு ஜனநாயகம் என்பது அருவெறுப்பான ஒரு விடயமாக இருக்காது. மாறாக, பலரையும் வென்றெடுக்க உதவும் ஒரு அருமையான சாதனமாக தோற்றமளிக்கும். ஆனால் இந்தவிதமான ஜனநாயகபூர்வமான வழிமுறைகளை விடுத்து இவர்கள் எப்போதும் குறுக்கு வழிகளையே நாடுகிறார்கள் என்றால், இவர்கள் தம்மைப்பற்றி கட்டமைத்துக் கொள்ளும் விம்பங்கள் மற்றும் ஒளிவட்டங்கள் பற்றிய கேள்வி எழுப்பப்படுவது தவிர்க்க முடியாததாகிறது. இவர்கள் சொல்லிக் கொள்ளும் குறிப்பிடத்தக்க திறமைகள் எதுவும் இவர்களிடத்தில் இல்லாமையால்தான் இவர்கள் எப்போதும் திரைமறைவாக இருந்துகொண்டு, பிறரது முதுகுக்குப் பின்னால் செயற்படவும், நம்பியவர்களை மோசடி செய்யவும் முனைகிறார்கள். இதுவே இவர்களது போலிப் புலமையை தோலுரித்துக் காட்டிவிடுகிறது.

முடிவாக, கண்ணாடி சந்திரனே ரகு என்ற பெயரில் எழுதியது என்பதும், கழகத்திற்கு வண்டி வாங்கிக் கொடுத்தது பொய்யென்பதும் உறுதிப்படுத்துகிறேன். இவர் சுந்தரத்தை கண்டது கூட கிடையாது. அத்துடன் சம்மாட்டி விடயத்தில் இவர் மோசடி செய்துள்ளதாகவே நான் நம்புகிறேன். கழகத்தினரால் இவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் சரியானவை என்றில்லாவிட்டாலுங்கூட, இவரது தன்னிச்சையான போக்கு பல பிரச்சனைகளுக்கு வழிவகுத்ததுடன், கழகத்தினுள் செயற்பட்ட முற்போக்கு சக்திகளுக்கு அநாவசியமான சிக்கல்களை உருவாகின என்பதுதான் உண்மை.

அத்தோடு இவர் கழகத்தின் தள இராணுவ செயற்பாடுகளுக்கு பொறுப்பாக இருந்த காலத்தில் பலர் சமூகவிரோதிகள் என்ற பெயரில் பலர் கொல்லப்பட்டார்கள். அப்படிக் கொல்லப்பட்டவர்கள் வறுமையில், வயிற்றுப் பசியின் காரணமாக திருடியவர்கள். இவர்கள் தவிர்க்க முடியாதபடி சமூத்தின் விழிம்புநிலையை சேர்ந்தவர்களாக, தலித்துக்களாக இருந்தார்கள் என்பதும் உண்மையானது. இந்த சம்பவம் நடைபெற்றபோது, கழகம் தலித்துக்களுக்கு எதிராக செயற்படுவதாகவே சிறீலங்கா அரசானது அப்போது பிரச்சாரம் செய்தது. கொட்டடி பகுதியிலும் கழகத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மக்களால் அப்போது நடத்தப்பட்டன. இந்த அரசியலை சரிவர கட்டுடைக்காமல் வெறுமனே தலைமை சொன்னதையே தான் செய்ததாக சந்திரன் கூறுவது இவரது அரசியல் கத்துக்குட்டித்தனத்தையே காட்டுகிறது.

அன்று பசிக்காக திருடியவரைக் கொன்ற இவர், இன்று பெரிய மோசடியாளராக உருவாகியிருக்கிறார். சமூகம் இப்படிப்பட்டவர்களை எவ்வாறு தண்டிக்கப்போகிறது? புலிகள் மக்களது பணத்தை மோசடி செய்துவிட்டதாகவும், அதனை குறிப்பிட்ட மக்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் வாதிடும் நாம், சந்திரன் தான் மோசடி செய்த பணத்தை சம்மாட்டியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோருவதில் தப்பில்லை என்று நினைக்கிறேன்.

Nesanநேசன்:

இப்போது நேசன் பற்றிய விடயத்திற்கு வருவோம். நேசனுடன் இப்படியாக ஒரு பகிரங்க அரங்கில் விவாதிக்க வேண்டும் என்று நான் நீண்ட நாட்களாக விரும்பியதுண்டு. எமக்குள் மனம்விட்டு பேசி அரசியல் முரண்பாடுகளுக்கு ஒரு அமைப்பினுள் தீர்வு காண முடியாதபட்சத்தில், முதுகிற்கு பின்னால் பலவிதமான அசிங்கங்களை செய்வதைவிட இப்படி பகிரங்கமாக பேசி பிரச்சனைகளை தீர்க்க முடியுமா என்று முயன்று பார்ப்பதில் தப்பில்லைதானே? ஜனநாயகம் என்பதன் அடிப்படையே மக்கள் ஒவ்வொருவரும் சரியான மற்றும் தவறான விடயங்களை பகுத்தாராய்ந்து, சரியான முடிவுகளை எடுக்கக் கூடியவர்கள் என்ற மக்களது அடிப்படையான ஆற்றலில் நம்பிக்கை வைக்கும் ஒரு செயல்முறைதானே. ஆகவே இங்கு அவருடன் பகிரங்கமாக பேசித்தான் பார்ப்போமே!

தீப்பொறி அமைப்பினுள் நாம் அவரது கருத்துக்களை வேண்டுமென்றே நிராகரித்து வந்ததாக ஒரு குறைப்பாட்டை முன்பு தீப்பொறி அமைப்பில் இருந்தபோது தொடர்ந்து கூறிவந்த இவர், இங்கு அவற்றை ஒரு பொது அரங்கில் வைத்து தீர்வுகாண முயலலாமே!

நான் நேசனை நோக்கி பின்வரும் கேள்விகளை எழுப்ப விரும்புகிறேன்.

1. கேசவனை (சொந்தப்பெயர் சூசப்பிள்ளை நோபட்–புதியதோர் உலகம் ஆசிரியர் கோவிந்தன்) யாழ்பாணம் அனுப்புவது என்பது தீப்பொறியின் மத்தியகுழு எடுத்த முடிவு என்ற வகையில் அந்த குழுவில் இடம்பெற்ற அத்தனை பேருமே அந்த முடிவுக்கு கூட்டாக பொறுப்பானவர்கள். ஆனால் இந்த முடிவுக்கு இட்டுச் செல்லும் வகையில் அமைப்பினுள் அதீதமாக நெருக்குதல்களை கொடுத்தவர் என்றவகையில் உங்களது பங்கு அதிகமானது. கூட்டுப் பொறுப்பு என்றவகையில், நாம் ஒருபோதும் உங்களை அப்படி விமர்சித்தது கிடையாது. இப்போது பொறுப்புகளை பங்கு போடவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அன்று நீங்கள் மண்ணுக்கும், தோழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு தலைமை கொழும்பில் சொகுசாக இருப்பதாக (வாசகர்கள் கவனிக்க இது 1990 மேயில் எமது தோழர்களான தர்மலிங்கம், சண்முகநாதன் ஆகியோர் பிடிபட்டு, மிஞ்சியவர்கள் கொழும்பிற்கு தப்பிவந்து சேர்ந்த பின்பு, 1991 முற்பகுதியில் நேசன் கூறிய கூற்றுக்கள்) குற்றஞ்சாட்டி சர்ச்சைகளை அமைப்பினுள் தொடர்ந்து ஏற்படுத்தி, கேசவனை யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவது என்ற முடிவை குழு எடுத்ததில் பிரதான பாத்திரம் வகித்தது குறித்து என்ன சொல்ல முனைகிறீர்கள்?

2. இதனைவிட இன்னும் இரண்டு குறிப்பான விடயங்கள் தொடர்பாக நீங்கள் விசமத்தனமாக பிரச்சாரங்களில் ஈடுபடுவது எனக்குத் தெரியும். முதலாவது, கேசவனுடைய கைது தொடர்பானது. தோழர் கேசவனை நானே புலிகளுக்கு காட்டிக் கொடுத்ததாக நீங்கள் விசமப்பிரச்சாரம் செய்து வருகிறீர்கள் என்பதை என்னால் நிரூபிக்க முடியும். எங்கே நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை முன்வையுங்கள் பார்க்கலாம். வாசகர்கள் அவற்றை பரிசீலித்து தாமாக முடிவுகளை மேற்கொள்ளட்டுமே.

3. இரண்டாவது, நான் புலிகளின் உளவாளியாகவே கழகத்தினுள் நுழைந்ததாகவும், அங்கே பிரச்சனைகளை உருவாக்கி கழகத்தை சீரழிப்பதே எனது நோக்கமாக இருந்ததாகவும், இந்த நோக்கில் சந்ததியார் போன்ற நல்ல தோழர்களது இழப்பிற்கு காரணமாக அமைந்ததாகவும் ஒரு கதையை உலாவ விட்டு வருகிறீர்கள் என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. எங்கே உங்களது குற்றச்சாட்டுகளை நிரூபியுங்கள் பார்க்கலாம்!

4. கிட்டுவுக்கு கல்லெறிந்தது பற்றிய பிரச்சனையும் தீப்பொறி அமைப்பின் மத்தியகுழு எடுத்த முடிவு. அந்த குழுவில் நீங்களும் அங்கத்துவம் வகித்தீர்கள். அவ்வாறே அந்த நடவடிக்கையில் நாமிருவருமே நேரடியாக பங்குபற்றவில்லை. ஆகவே இந்த சம்பவத்தில் எமது இருவரது பாத்திரங்களும் சமமானதாகவே இருந்தது. தாக்குதலில் நேரடியாக கலந்துகொண்ட சிலர் பின்னர் புலிகளினால் வேறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட நிலையில் கொல்லப்பட்டார்கள். இன்னும் சிலர் உயிருடன் இருக்கிறார்கள். புலிகளால் கைது செய்யப்பட்ட தர்மலிங்கமோ, சண்முகநாதனோ மிக மோசமான சித்திரவதைகளை அனுபவித்தபோதிலும் இறுதிவரை இந்த விடயம் தொடர்பாக மூச்சுக்கூட விடவில்லை.

அவ்வாறே பின்னர் கைதான கேசவனும் கூட அத்தனை சித்திரவதைகளையும் மீறி இது தொடர்பாக எதுவுமே கூறவில்லை. கேசவனிடம் கவிஞர் புதுவை இரத்தினதுரை நேரில் சென்று, தலைவருடன் நேரில் பேசிவிட்டு புலிகள் அமைப்புடன் சேர்ந்து வேலைசெய்யும் படியும், இல்லாவிட்டால் அநியாயமாக இறக்க நேரும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால் இப்படிப்பட்ட நிலைமைகளிலுங்கூட இந்த தோழர்கள் தமது உயிர்களை தியாகம் செய்தார்களே அன்றி யாரையும் காட்டிக் கொடுக்கவில்லை.

அன்று அவர்கள் வாய்திறந்திருந்தால் இன்று நீங்களும் நானும் உயிருடனேயே இருந்திருக்க மாட்டோம். அந்தவகையில் நாம் இன்று வாழும் இந்த வாழ்க்கையானது அந்த தியாகிகள் போட்ட பிச்சைதான். அவர்கள் தமது மரணத்தின் தருவாயிலுங்கூட, புலிகளிடம் தோற்காமல் அமைப்பு இரகசியங்களை பாதுகாத்தார்கள். எல்லாம் ஏன், நீங்கள் அடிக்கடி குற்றஞ்சாட்டும் இளங்கோ கூட பின்னர் புலிகளுடன் சேர்ந்து வேலை செய்த காலத்தில் கூட இந்த தகவல் புலிகளுக்கு இறுதிவரை தெரியாமலேயே இருந்தது.

இப்போது இந்த இரகசியத்தை பகிரங்கப்படுத்தி பலருக்கு ஆபத்துக்களை ஏற்படுத்துவதுடன், அந்த செயற்பாட்டில் உங்களுக்கு உள்ள முக்கிய பங்கை அப்படியே மறைத்துவிட்டு எனது பெயரில் போடுவதை எவ்வாறு உங்களால் நியாயப்படுத்த முடிகிறது. நீங்கள் புலிகளுக்கு என்னை காட்டி கொடுத்துள்ளதாக நான் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டுகிறேன். எங்கே உங்களிடம் நியாயம் இருந்தால் அதனை முன்வையுங்கள் பார்க்கலாம்.

5. சந்திரன் மற்றும் உங்களது நடவடிக்கைகள் பற்றிய விமர்சனங்கள் எழுந்ததும் நீங்கள் ஓடிப்போய் மறைந்த தோழர்களை இழுத்துக் கொண்டு வருகிறீர்கள். முதலில் அப்படிப்பட்ட ஒரு வாதத்தை வைப்பதற்குக் கூட உங்களுக்கு தகுதி கிடையாது என்பதனை நினைவூட்ட விரும்புகிறேன். 2009, மே 18 இன் பின்னர் நீங்கள், உங்களது தாயாரின் அந்திரட்டி கிரிகைகளின் பிராம்ரனில் (கனடாவில்) நடைபெற்ற போது சிங்கக்கொடி போட்ட ரீ சேட் அணிந்து வந்திருந்தீர்கள். அதுவும் நீங்கள் மே 18 இற்கு பின்னர், தாயாரின் மரண வீட்டிற்கு இலங்கை சென்று வந்தவர், அங்கு எந்தவிதமான பிரச்சனைகளும் கிடையாது. மகிந்தா பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு கண்டுவிட்டார் என்று கூறிக்கொண்டுதான் இதனைச் செய்தீர்கள்.

இது உங்களது நண்பர்கள் பலரது கண்டிப்புக்கு உள்ளானது. அப்போது போரில் இறந்து போன மக்கள், போராளிகள், முகாம்களில் மந்தைகள் போல அடைத்து வைக்கப்பட்டு இருந்த மக்கள்திரள், சிறையில் வாடிய போராளிகள் போன்றவர்களை மறந்தா போனீர்கள்? மறைந்துபோன எமது போராளிகள் மற்றும் இலட்சக்கணக்கான மக்கள் பற்றியும் இந்த கரிசனை அப்போது ஏன் வரவில்லையா? சந்திரன் இவ்வளவுகாலமும் இத்தனை அசிங்கங்களையும் செய்யும் போது அதற்கு செயலூக்கத்துடன் ஒத்துழைத்து, அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கும் போது இந்த அக்கறை எங்கு போனது. குறைந்தபட்சம் உங்களுக்கு உயிர்பிச்சை தந்த அந்த தியாகிகளை அவமதிக்கும் விதத்தில் இந்த இரகசியங்களை வெளியிடுவதைக்கூட நீங்கள் தடுக்க முனையவில்லை.

இப்போது நாம் சந்திரன் மீது விமர்சனங்களை முன்வைக்கும்போது மாத்திரம் மறைந்த போராளிகளின் நினைவு திடீரென்று வருகிறதோ? மறைந்த தோழர்களதும், மக்களதும் இழப்புகள் என்பவை மகத்தானவை என்பதிலும், எமது ஒவ்வொரு நடவடிக்கையின் போதும் அவற்றை களங்கப்படுத்தி விடக்கூடாது என்பதிலும் எமக்கு சற்றும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் நீங்கள் மகிந்தாவுடன் கூத்தடிக்கும் போதும், எமது போராட்டத்தையும், அதன் போராளிகளையும் அசிங்கப்படுத்தும் போதும் பேசமால் இருந்துவிட்டு, உங்கள் மீதான விமர்சனங்கள் என்று வரும்போது மாத்திரம் இவற்றை தூக்கிப்பிடிக்க முனைவது, நீங்கள் மறைந்து போராளிகளைக்கூட கவசமாக பயன்படுத்த முனைவதாகவே தென்படுகிறது. இதுவரையில் பல்வேறு இயக்கங்கள், மக்களையும், சாதாரண போராளிகளையும்தான் கேடயங்களாக பாவித்ததாகத்தான் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால் மறைந்த போராளிகளையும், இறந்துபோன மக்களையும் கேடயமாக பாவித்த முதல் நபர் நீங்கள்தான் என்பதில் நேசன் நீங்கள் பெருமை கொள்ளுங்கள்!!

6. தவறான புள்ளியில் தொடங்குவதாக குறிப்பிட்டுள்ளீர்கள். சரி ஒரு தடவை எந்த புள்ளியில் தொடங்கி நாம் இங்கு வந்து நிற்கிறோம் என்று பார்த்துக் கொள்வோமே! உண்மையில் இந்த பிரச்சனை நிலாவுடைய கட்டுரையின் பின்னூட்டங்களுடன் தொடங்குகிறது. அதில் ரீட்டாவின் பாலியல் வல்லுறவு தொடர்பாக தீப்பொறி அமைப்பைச் சேர்ந்த உங்களதும், பாண்டியினதும் பெயர்கள் அடிபட்டபோது, அமைப்பின் களங்கத்தை துடைக்கும் நோக்கத்துடனும், அமைப்பின் முன்னைய தோழர்கள் நீங்கள் அநாவசியமாக அசிங்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்ற வகையிலுமே எம்மைச் சேர்ந்த ஒருவர் ராம் என்ற பெயரில் பின்னூட்டம் விட்டார். அதில் ரீட்டா விவகாரத்திற்கும் தீப்பொறி அமைப்பிற்கும், அதன் அங்கத்தவர்களான நேசன், பாண்டி ஆகியோருக்கும் சம்பந்தம் கிடையாது என்பது எமது தரப்பு கருத்தாக இருந்தது. இந்த பின்னூட்டத்தின் பின்புதான் ரகு அரங்கத்திற்கு வந்தார். அவர் ராமின் கருத்தை ஆதரித்ததுடன் தொடங்கி பத்தும் பலதும் பேசித்தான் கிட்டுவிற்கு கல்எறிந்து விடயத்தை தேவையில்லாமல் இழுத்து இந்த ஆரோக்கியமான விவாதத்தை சாக்கடையாக்கினார்.

இப்போது நீங்கள் ரகு என்கிற சந்திரனின் தரப்பில் வந்து நின்றுகொண்டு, விவாதம் தவறான புள்ளியில் தொடங்கியதாக கூறுகிறீர்கள். சரி, அந்த சரியான புள்ளி என்பது என்ன? ரீட்டா விவகாரத்தில் உங்கள் மீது வைக்கப்பட்ட குற்றச் சாட்டுகளை நாம் மறுக்க முனைந்தது தவறு என்கிறீர்களா? அல்லது சந்திரன் சேற்றை இறைத்ததை நியாயப்படுத்த முனைகிறீர்களா? அல்லது ரீட்டா விவகாரத்தில் நீங்கள் உங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க விரும்புகிறீர்களா? நீங்கள் ஏதோ ஒரு உயர்ந்த மட்டத்தில் விவாதத்தை நடத்துபவர் போன்று பாவனை பண்ண முனைவது என்னவோ உண்மைதான். ஆனால் அந்த சாக்கடைக்குள் இருந்து கொண்டு இந்த மாதிரி பீலா விடுவதுதான் நகைக்கத்தக்கதாக இருக்கிறது. நிறுத்துங்கள் இந்த கத்துக்குட்டித்தனத்தை!

7. சரி நேசன் வந்ததுதான் வந்தீர்கள் கண்ணாடி சந்திரன் தொடர்பான பிரச்சனைகளில் உங்களது நிலைப்பாடுகள் என்னவென்பதையாவது சொல்லிவிட்டுப் போக வேண்டாமா? அவர் கழகத்திற்கு படகு வாங்கியது, சுந்தரத்திற்கு அட்வைஸ் பண்ணியது, ஐயருக்கும் வழிகாட்டியது, சம்மாட்டியை மோசடி செய்தது, மகிந்த அடிவருடித்தனம் … என்று ஒரு பெரிய பட்டியல் இருக்கிறதே. இவற்றை மறுக்கவும் கூட இல்லையா? அப்படியானால் அவற்றை நீங்கள் ஏற்றுக் கொண்டதாக நாம் முடிவு செய்யலாமா? எவ்வளவு காலத்திற்குத்தான் நீங்கள் சந்திரனுக்கு தலையையும், சம்மாட்டிக்கு வாலையும் காட்டிக் கொண்டு திரியப் போகிறீர்கள். ஒரு கணப்பொழுதாவது உண்மையாக இருக்கப் பாருங்கள்.

P Rayaharanஇரயாகரன் உடன் சில வார்த்தைகள்:

இரயாகரன் உடைய அரசியல் வங்குரோத்துத்தனம் பற்றி நாம் பெரிதாக எதனை புதிதாக கூறப்போகிறோம். அதுதான் வலை உலகம் முழுவதும் அறிந்த இரகசியமாயிற்றே. இங்குள்ள பிரச்சனை அதுவல்ல. இந்த சந்திரன் மற்றும் நேசனுடன் இந்த இரயாகரன் பண்ணும் கூட்டு வியாபாரம் பற்றிய விடயம் தொடர்பாக மாத்திரம் நாங்கள் பேசுவோம்.

எமக்கெதிராக இந்த சந்திரனும், நேசனும் அவிழ்த்துவிட்ட சில்லரை உருப்படிகளுக்கெல்லாம் இந்த இரயாகரன்தான் மொத்த வியாபாரி. முதலில் நாங்கள் கேசவனை காட்டிக் கொடுத்ததாக கூறினார்கள். இத்தனைக்கும் இவர்களுடன் எங்களுக்கு நேரடியான தொடர்பு இருந்து வந்தது. இரயாகரன்னும், சீலனும் எம்மைச் சேர்ந்தவர்களுடன் தொடர்ந்தும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். கேசவன் தொடர்பான பொய்களை நேசன் வெளியிட்டதும், அது தொடர்பாக எம்முடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளாமலேயே அவற்றை ஊதிப்பெருக்க வைத்தார்கள். இது தொடர்பாக லண்டனில் உள்ள எமது தோழர்கள் சீலனுடன் பேசியபோது நேசன்தான் தமக்கு இந்த தகவல்களை வழங்கியதாக அவர் கூறினார். சிறீரங்கன் தனது வளைத்தளத்தில் கேசவன் கைதின் முடிச்சு அவிழ்க்கப்பட வேண்டும் என்று கூறுகிறார். இப்போதுதான் நேசன் பகிரங்கமாக வந்திருக்கிறாரே. அவரிடம் உண்மையை கேட்டு தெரிந்து கொள்வதுதானே. இதனைவிட நாம் முன்பு மக்கள் கட்சியாக செயற்பட்டபோது பலரை உளவு பார்த்ததாக, காட்டிக் கொடுத்ததாக குற்றஞ் சாட்டுகின்றார்கள். எங்கே ஆதாரங்களை முன்வைக்கட்டுமே.

இதனைவிட வேடிக்கையான இன்னொரு விடயமும் இருக்கிறது. ப்ராவோ அமைப்பைச் சேர்ந்த அன்ரனியை நாம் காட்டிக் கொடுத்ததாக இவர்கள் பலகாலமாகவே குற்றஞ்சாட்டி வந்திருக்கிறார்கள். இங்கு நாம் அது பற்றியும் சிறிது பேசித்தான் ஆகவேண்டி இருக்கிறது. அன்ரனி முதலில் இலங்கைக்கு சென்றபோது எமது தோழர் ஒருவருடன் தொடர்பு கொண்டு அவருக்கு உதவி செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டதே இந்த இரயாகரன்தான். அதற்கேற்ப அன்ரனிக்கு தங்குமிடம், பாதுகாப்பு. போக்குவரத்து உதவிகள் என்று பலவற்றையும் எமது தோழர் செய்து கொடுத்தார். போதாக்குறைக்கு தலைமறைவாக இருந்ததாக சொல்லப்பட்ட அன்ரனிக்கு ஒரு கலியாணம் வேறு தேவைப்பட்டது. அதற்கு சாட்சிக் கையெடுத்து போட்டதும் கூட நமது தோழர்தான். மணப்பெண் வேறு யாருமல்ல. முன்னாள் புலிகள் இயக்க போராளி ஒருவர். இதில் நாங்கள் புலிக்கு காட்டிக் கொடுப்பதற்கு என்ன இருக்கிறது.

இதற்கிடையில் அன்ரனியுடன் சேர்ந்து ஏதோ ஒரு புரொஜெக்ட்டுக்காக இரயாகரன் கோஸ்டி ஒரு குறிப்பிட்ட தொகை பணத்தையும் அன்ரனியிடம் கொடுத்துள்ளார்கள். இந்த பணத்துடன் அன்ரனி இவர்களுக்கும் தலைமறைவானார். ஆனால் அவர் தொடர்புகளை துண்டிப்பதற்கு முன்பு அன்ரனி இவர்களிடம், தனக்கு தீப்பொறி அமைப்பினால் ஆபத்து இருப்பதாகவும், நாம் அவரை புலிகள் அமைப்பிற்கு காட்டிக் கொடுக்கும் சாத்தியப்பாடு பற்றி தான் பயப்படுவதாகவும் கூறியுள்ளார். இதற்கு பின்னர்தான் அவர் இவர்களுடனான அத்தனை தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டுள்ளார். இந்த இடைக்கால்த்தில் நாம் அன்ரனியை காட்டிக் கொடுத்துவிட்டதாக இவர்கள் எல்லா இடங்களிலும் பிரச்சாரம் செய்தார்கள்.

அண்மையில் சம்பந்தப்பட்ட எமது தோழர் இவர்களுடன் தொடர்பு கொண்டு இந்த பிரச்சனை பற்றி விளக்கியுள்ளார். அப்போதுதான் அன்ரனி மோசடி செய்தது இவர்களுக்கு தெரிய வந்துள்ளது. (இதுபோல அன்ரனி பலரிடமும் பல்வேறு காரணங்களுக்காக பணம் வாங்கியிருப்பதாக அறிகிறோம்.) அப்போது தாம் அன்ரனி கூறியதை உண்மையென நம்பியே இப்படியான தவறை செய்துவிட்டதாக கூறிய இவர்கள் அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்கள். ஆனால் பிரச்சனை பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னர், அந்த தவறுக்கான மன்னிப்பை பகிரங்கமாக கேட்பதே முறையாக இருக்கும் என்று என்று அந்த தோழர் குறிப்பிட்டுள்ளார். எங்கே இரயாகரன்னும், சீலனும் என்ன சொல்கிறார்கள் என்று நாம் பார்க்கலாமா?

இதனைவிட இன்னொரு வேடிக்கையான விடயம் என்னவென்றால், முன்னர் ஒரு தடவை இரயாகரன் அசோக்குடன் சர்ச்சைப்பட்ட போது தேவையில்லாமல் என்னை சம்பந்தப்படுத்தி அச்சுறுத்தியதாகும். அப்போது அசோக்கிற்கு தமிழரங்கம் ஈ மெயில் முகவரியில் இருந்து ஒரு மெயில் அனுப்பப்பட்டது. அதில், ”நீ பேசாமல் இருக்காவிட்டால் உனது நண்பன் ஜானை அம்பலப்படுத்துவோம்” என்று எழுத்ப்பட்டிருந்தது. இது தொடர்பாக தேசம்நெற்றில் கட்டுரையொன்றும் இடம் பெற்றது வாசகர்களுக்கு ஞாபகம் இருக்கலாம். (இரயாகரன் சார்! எனக்கொரு உண்மை தெரிந்தாக வேணும் : த ஜெயபாலன்) இந்த குற்றச்சாட்டுக்கு, அந்த மெயில் தமது முகவரியில் இருந்த வந்தது என்ற வகையில் இரயாகரன் தானே தார்மீக பொறுப்பு எடுத்திருக்க வேண்டும். மாறாக, ஜெயபாலன் மோசடி செய்ததாக கூறினார். நான் மீண்டும் கூறுகிறேன் அது அசோக்கிற்கு வந்த மெயில்தான் என்று. எங்கே இரயாகரன் ஏதாவது பொதுவான மத்தியஸ்த்துவத்தில் இதனை முகம் கொடுக்க தயாராக இருக்கிறாரா? இப்படியாக இரயாகரன் ஒருபோதும் தர்க்கரீதியாக விடயங்களை அனுகாமல், செந்திலின் ரெட்டை வாழைப்பழம் போன்று கதைகளை பேசிக்கொண்டிருப்பார். உதாரணமாக, தனது சொந்த வீடு பற்றிய பிரச்சனை வந்துபோது, ‘வங்கியின் வீட்டை தனது வீடு என்று சொல்வதாக’ குறிப்பிட்டதை நினைவுப்படுத்திக் கொள்ளலாம். இவர்கள் உலகத்தில் வேறு யாருக்குமே சுயமாக சிந்திக்க முடியாது என்று நினைத்துக் கொண்டுதான் கதை விடுகிறார்கள். இவையெல்லாம் ஏதாவது ஒரு புள்ளியில் நிறுத்தப்பட்டுத்தானே ஆகவேண்டியிருக்கும் என்பதை உணர்கிறார்களில்லை.

முடிவாக:

பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் உண்மையிலேயே ஒருவித துறவு மனப்பான்மையுடன் இந்த துறையில் ஈடுபட வேண்டும். தமது குறுகிய நலன்கள், அற்பத்தனமான தன்முனைப்புகள், குறுக்குவழிகளில் முன்னுக்கு வரமுனைவது போன்ற அற்பத்தனமான வழிமுறைகளை கைவிட்டு, தாம் படைக்க விரும்புவதாக கூறும் ஒரு புரட்சிகர சமுதாயத்தின் முன்னோடிகள் என்ற விதத்தில், அந்த புரட்சிகர விழுமியங்களை தமது சொந்த வாழ்க்கையில் சுவீகரித்துக்கொள்ள, சமுதாயத்தின் சிறந்த முன்மாதிரியாக செயற்பட முன்வர வேண்டும்.

புரட்சி என்பது மக்களது உண்மையான விடுதலை என்று கருதும் எவருமே மக்களது முதுகிற்கு பின்னால் இதனை செய்து முடித்துவிட முடியும் என்று கனவிலும் கருதமாட்டார்கள். மக்கள் பிரக்ஞை பெற்று, தமது அடிமைத்தனத்தை இனம் கண்டு, அதற்கெதிராக போராடுவதன் மூலமாக தாமே தம்மை விடுவித்துக் கொள்வார்கள். இப்படியாக மக்களது புரட்சிகர ஆற்றலில் உண்மையிலேயே நம்பிக்கை கொண்ட எவருமே நேர்மையாகவும், வெளிப்படையாகவும், மக்களுக்கு பதில் சொல்லும் பொறுப்புடனும்தான் செயற்பட முடியும். அவ்வாறு அல்லாமல், மக்களுக்கு மேல் அதிகாரம் செய்ய முனைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை எமது போராட்ட வரலாற்றில் மட்டுமல்லாது, இன்று மத்திய கிழக்கில் ஒவ்வொரு தினமும் வெளிப்படையாகவே நாம் காண்கிறோம்.

இத்தனை இழப்புகளுக்கு பின்னரும் அவற்றில் இருந்து எந்தவிதமான படிப்பினைகளும் பெறாமல் மீண்டும் மக்களின் முதுகில் சவாரி செய்ய முனைபவர்கள் அயோக்கியர்களாகவோ, அல்லது முட்டாள்களாகவோ இருக்க முடியும். இதில் இவர்கள் எந்த வகை என்பதை நாம் விரைவில் இவர்களது பதில்களில் இருந்து கண்டுகொள்வோம்.

http://thesamnet.co.uk/?p=24255

No comments:

Post a Comment