மாற்றம் என்பது மாறாதது; இங்கே தோழமைதேடி...

Mar 7, 2010

பாவம் சோபாசக்தி

1. ஷோபாசக்தி on March 4, 2010 11:01 pm
http://thesamnet.co.uk/?p=19365
கட்டுரையை மறுபிரசுரம் செய்ததற்கு நன்றி. அநேகமாக ‘உள்ளுக்க வரவிட்டு அடிக்கப் போறிங்க’ என்று நினைக்கிறேன்…செய்யுங்க! வாழ்த்துகள்!!

ஷோபாசக்தி




2. indiani on March 4, 2010 11:14 pm

உங்கள் பக்கத்து நியாயத்தை எதிர்பார்த்தோம் இன்று விளங்கிக்கொள்கிறோம் அந்த கடற்கரையில் ஏன் அலை அடித்தது என்று.
3. Muththu on March 4, 2010 11:38 pm

சோபாசக்தி ‘உள்ளுக்கு வர விட்டு அடிக்கப் போறிங்க’ என்று நீங்கள் சொல்ற அனுபவமே தனி. இது புலி சொல்ற மாதிரி ரீல் விடுற அடியில்ல.’உள்ளுக்கு வரவிட்டு அடிக்கிறம்’ ‘உள்ளுக்கு வரவிட்டு அடிக்கிறம்’ என்று முள்ளிவாய்காலில ஒதுங்கின மாதிரி தேசம்நெற்றுக்கு முள்ளிவாய்கால் கட்ட கனபேர் வெளிக்கிட்டவை. ஒன்டும் சரிவரேல்ல. இப்ப நீங்கள் வேற உள்ளுக்கு விட்டு அடிக்கப் போறீங்க என்று சொல்றதைப் பார்த்தா ஆருக்கோ முள்ளிவாய்க்கால் வெட்டியாச்சுப் போல கிடக்கு. பொறுத்திருந்து ஆருக்கு என்று பார்ப்பம்.
4. tholar balan on March 5, 2010 12:56 am

தன் மீது ஆதாரம் இல்லாத அவதூறை யமுனா தேசம் இனியொரு என்பன எழுதுவதாக குறிப்பிடும் சோபாசக்தி அவர்கள் என்ன ஆதாரத்தின் அடிப்படையில் கால்மாக்ஸ் தன் வேலைக்காரியுடன் தகாத உறவு வைத்து பிள்ளை பெற்றுக்கொண்டார் என்று எழுதியுள்ளார்? இதற்கான ஆதாரத்தை சோபாசக்தி முன்வைக்க முடியுமா?

தினத்தந்தி போன்ற நம்பகத்தன்மையற்ற பத்திரிகைச் செய்தியை ஆராயாமல் எழுதியதாக குற்றம் சாட்டும் சோபாசக்தி கால்மாக்ஸ் மீதான தனது குற்றச்சாட்டுக்கு நிச்சயம் நம்பகத்தன்மையான ஆதாரத்தை முன்வைப்பார் என நம்புகிறேன்.

சோபாசக்தி மீது குற்றம் சாட்டியிருப்பவர்கள் யமுனா தேசம் மற்றும் இனியொரு போன்றவையேயொழிய கால்மாக்ஸ் அல்ல. அப்படியிருக்க சோபாசக்தி எதற்காக மாபெரும் ஆசான் கால் மாக்ஸ் மீது அவதூறு பொழியவேண்டும்?
5. thalaphathy on March 5, 2010 7:49 am

தோழர் பாலன்!
நீங்கள் உங்கள் கண்ணை மூடிக்கொண்டதால் மட்டும் உலகமெல்லாம் இருட்டில்தான் இருக்கிறது என்பது பொருளாகாது. நெற்றில் தேடுங்கள் உங்கள் அறிவுக்கண் சிறிதாவது திறக்கும். உங்கள் கேள்விக்கான விடை இதோ:

1850:
Herausgeber der “Neuen Rheinischen Zeitung. Politisch-ökonomische Revue” (Hamburg-New York).
Beginn der Beziehung mit seiner Haushälterin Helena Demuth (1823-1890), mit der er einen gemeinsamen Sohn hat.

Thanks: http://www.dhm.de/lemo/html/biografien/MarxKarl/index.html
6. ஷோபாசக்தி on March 5, 2010 11:31 am

//சோபாசக்தி கால்மாக்ஸ் மீதான தனது குற்றச்சாட்டுக்கு நிச்சயம் நம்பகத்தன்மையான ஆதாரத்தை முன்வைப்பார் என நம்புகிறேன்/

தோழர் பாலன்! உங்கள் நம்பிக்கையை நான் வீணடிக்கமாட்டேன். ‘சாம்பிளுக்கு’ இந்த ஆதாரத்தைப் பொறுமையுடன் படியுங்கள். இதைப் போன்று ஏராளமான ஆதாரங்கள் கொட்டிக்கிடக்கின்றன.!

“The story of ‘Marx’s illegitimate son’”
http://marxmyths.org/terrell-carver/article.htm
7. பொடிப்பயல் on March 5, 2010 12:22 pm

நான் சடுதியாகத் தீபக்கின் முகத்தில் தாக்கிவிட்டு //

பிரபாகரனும் இதைத்தான் செய்தார்.. என்ன அது பெரும் பதற்றம்.. சோபாக்கு சிறு பதற்றம்..
8. ஷோபாசக்தி on March 5, 2010 1:24 pm

தோழர் பாலன்! நீங்கள் ஏற்கனவே ஹெலன் டெமூத் குறித்து ஏதும் அறியாதவராயிருந்தால் நான் முதலில் அனுப்பிய சுட்டியிலுள்ள கட்டுரை உங்களிற்கு உதவி செய்யாது என்றுதான் நினைக்கிறேன். குறைந்தபட்சம் இவ்வாறான ஒரு ‘பிரச்சினை’ இருக்கிறது என்பதையாவது நீங்கள் அறிந்துகொள்ள ஒருவேளை அந்தக் கட்டுரை உதவலாம். பஞ்சியைப் பாராமல் கொஞ்சம் இணையத்தில் தேடிப்பாருங்கள். யமுனா கூட ஷீலா ரோபொத்தத்தை ஆதாரம் காட்டி ஹெலன் டெமூத் குறித்து ஏதோ ஒரு சிறுபத்திரிகையில் எழுதியதியிருந்ததாக நினைவு. முடிந்தால் அவரிடம் கேட்டுப்பாருங்கள்
9. ஷோபாசக்தி on March 5, 2010 3:00 pm

//பிரபாகரனும் இதைத்தான் செய்தார்.. என்ன அது பெரும் பதற்றம்.. சோபாக்கு சிறு பதற்றம்..//

தம்பி பொடிப்பயல்! பிரபாகரன் மட்டும்தான் சடுதியில் தாக்குவாரா? நீங்கள் லண்டன் வீதியிலோ பாரிஸ் வீதியிலோ இரவில் தனியாக நடந்துபோகும் போது வழிப்பறி செய்பவர்கள் உங்களை மடக்கினால் என்ன செய்வீர்கள்? சடுதியில் தாக்க மாட்டீர்களா?
10. NANTHA on March 5, 2010 6:48 pm

திரைப்படங்கள் யதார்த்தத்தை வெளிக்கொணரும் ஒரு சாதனமாகவும் மக்களின் சிந்தனைகளுக்கு (சரி/பிழை) ஒரு வடிகாலாகவும் இன்று மாறியுள்ளன.

தமிழ் படங்கள் என்றால் எனக்கு எப்போதுமே ஓர் அலர்ஜி. தமிழ் நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வை அல்லது பிரச்சனைகளை தமிழ் படங்களில் காண முடிவதில்லை. சமூகத்தின் “பங்களிப்பு” பற்றி தமிழ் படங்களில் காண்பது கஷ்டம்.

ஷோபாசக்தி இந்தியாவிலுள்ள தமிழ் அகதிகளின் வாழ்வு பற்றி ஓர் படம் எடுக்க முயற்சித்துள்ளார் என்றே எண்ணுகிறேன். இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளின் முகாம் நிலைமைகள் பற்றி யாரும் இதுவரையில் அலட்டிக் கொண்டதில்லை. ஆனால் “இடம் பெயர்ந்து” வன்னியில் முள்ளு வேலிகளுக்குப் பின்னால் தமிழர்கள் நின்றபொழுது வெளிநாடுகளில் படு பயங்கர ஆர்ப்பாட்டங்களும், அறிக்கைகளும் வெளி வந்தன. அந்த “அக்கறை” பற்றி சிறு ஆய்வு செய்த பொழுது அந்த முகாம்களில் “பொது மக்கள்” மாத்திரமல்ல பல புலிக் கொலைகாரர்களும் “பொதுமக்கள்” வேஷத்தில் ஒளிந்திருந்தார்கள் என்ற உண்மையும் தெரிய வந்தது. அதனால்த்தான் வெளி நாட்டு புலிகள் “வன்னி பொது மக்கள்” சித்திரவதை முகாம்களில் வாடுகிறார்கள் என்று குதித்தார்கள்.

மலையாள படங்கள் பல (சில தமிழ் படங்கள் போன்றவை) பல சமூக பிரச்சனைகளையும் கம்யூனிஸ்டுகளின் போராட்ட காலத்து சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன.

மோகன் லால், முரளி, கீதா நடித்த “லால் சலாம்”, லால், சித்தீக் நடித்த “gulmohar”, லால், ப்ரிதிராஜ் நடித்த “தலைப்பாவு” போன்ற படங்கள் எனக்கு பிடித்த படங்கள்.

தமிழ் நாட்டு யதார்த்த நிலைமைகளை திரைப்படம் மூலம் வெளிக்கொணர சக்திக்கு தடைகளே அதிகம் என்று நினைக்கிறேன்,
11. tholar balan on March 5, 2010 6:58 pm

மதிப்புக்குரிய சோபாசக்தி அவர்களுக்கு! தங்கள் பதில் எனக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.உங்களைப்பற்றி தினத்தந்தியில் வந்த செய்தியை ஆராயாமல் தேசம் இனியொரு என்பன பிரசுரித்துவிட்டன என்று கூறும் நீங்கள் கால்மாக்ஸ் பற்றி எழுதும்போது நிச்சயம் தகுந்த ஆதாரத்துடன் எழுதியிருப்பீர்கள் என நம்பினேன்.எனவேதான் ஆதாரத்தை முன்வையுங்கள் என்று கேட்டேன்.ஆனால் நீங்களோ “பஞ்சியைப்பாராமல் நெட்டில் தேடிப்பாருங்கள் அல்லது யமுனாவிடம் கேட்டுப்பாருங்கள்” என்று பதில் தந்துள்ளீர்கள்.ஆக இதன் மூலம் தங்களிடம் ஆதாரம் இல்லை என்றே எண்ணத்தோன்றுகிறது.சரி ;நீங்கள் கூறுவது போன்று யமுனாவிடம் கேட்டு அவரின் கருத்தை ஏற்றுக்கொள்வதாயின் அவர் உங்களைப்பற்றி தெரிவிக்கும் கருத்துக்களையும் நான் சரி என்று ஏற்றுக்கொள்ள வேண்டிவருமல்லவா? அல்லது நீங்கள் குறிப்பிட்டபடி பஞ்சியைப்பாராமல் நெட்டில் தேடினாலும் அதில் உள்ள கருத்துக்களை அப்படியே எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?ஏனெனில் ஒரு சாதாரண சோபாசக்தியின் செய்தியையே முதலாளித்துவ பத்திரிகையான தினத்தந்தி திரித்து வெளியிடுகின்றதாயின் இந்த முதலாளித்துவத்தையே அழிக்கின்ற தத்துவத்தை எழுதிய தத்துவவியலாளர் குறித்து முதலாளித்துவம் எப்படி நேர்மையாக உண்மையான செய்திகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கமுடியும்?எனவேதான் உங்களிடம் நம்பகமான ஆதாரத்தை முன்வைக்கும்படி கேட்டேன்.

சோபாசக்தி ;தயவுசெய்து நான் உங்களை சங்கடப்படுத்துவதற்காக இவ்வாறு கேட்பதாக எண்ணவேண்டாம்.உண்மையிலே இந்த விடயம் குறித்து நீண்ட நாட்களாக நம்பகமான ஆதாரத்திற்காக நான் முயன்று கொண்டிருக்கிறேன்.அதனால்தான் நீங்கள் இந்த விடயம் குறித்து எழுதியவுடன் உங்களிடம் இதுபற்றி நம்பகமான ஆதாரம் இருக்கக்கூடும் என எண்ணினேன்.

லண்டனில் கால்மாக்ஸ் கல்லறை உள்ள மயானத்தில் அவரின் கல்லறையைப் பராமரிக்கும் அறக்கட்டளை சார்பாக ஒரு பிரசுரம் விற்கப்படுகிறது.அதில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனைப்படித்த நான் அந்த அறக்கட்டளையுடன் தொடர்புகொண்டு இது பற்றி மேலும் விபரங்கள் அறிய முயன்றேன்.ஆனால் எனது முயற்சி இதுவரை வெற்றி பெறவில்லை.எனினும் இது பற்றி 90 களில் எஸ்.வி.ராஜதுரை தமிழ்பரப்பில் எழுதியதும் அதற்கு இந்திய புரட்சியாளர்கள் பதில் அளித்ததும் அறிந்துள்ளேன்.ஆனால் எஸ.வி.ராஜதுரை அவர்களும் இதற்குரிய நம்பகமான ஆதாரத்தை முன்வைக்கவில்லை என்றே அறிய வருகிறது.
12. சாந்தன் on March 5, 2010 7:07 pm

//..நான் விடுதலைபுலிகளின் விமர்சனமற்ற ஆதரவாளன் இல்லை என்று யமுனா சொல்வதின் மறுவளமான அர்த்தம் அவர் விமர்சனபூர்வமான புலிகளின் ஆதரவாளர் என்பதுதானே!…///

நான் புலிகளை 100% எதிர்க்கிறேன் அதேபோல் அரசை 110% எதிர்க்கிறேன்!
13. தமிழ்வாதம் on March 5, 2010 8:44 pm

தங்கள் தவறுகளை மறைப்பதற்காகவே, சிலர் இணையச் செய்திகளை கல்வெட்டாக மாற்றி, ஆதாரம் காட்டி, அவதாரம் எடுக்கிறார்கள்.
14. msri on March 5, 2010 9:40 pm

சோபாசக்தி கார்ல் மாக்ஸ்பற்றி சொலகின்றார்! சோபாசக்திபற்றி தமிழிச்சியிடம் கேட்டால் கதைகதையாக சொல்வார்! பெண்கள் படுக்கை அறைக்குள் கமரா பொருத்தம் அதிகாரம் உங்கள் வசமிருந்தால் நீங்கள் அதையும் செயவீர்கள் என்கின்றார் சோபா. படுக்கை அறைக்குள் நடப்பது என்ன என்பதையே கவிதையாக்கியுள்ளார் உங்கள் தோழி பிறகேன் கமரா?
15. பல்லி on March 5, 2010 9:57 pm

//நான் புலிகளை 100% எதிர்க்கிறேன் அதேபோல் அரசை 110% எதிர்க்கிறேன்//
பல்லி முற்பாதியில் சாந்தனுடன் கூடி செல்கிறேன்;
பிற்பாதியில் அரசை விமர்சிக்கிறேன்;
16. சாந்தன் on March 5, 2010 11:33 pm

/…நான் புலிகளை 100% எதிர்க்கிறேன் அதேபோல் அரசை 110% எதிர்க்கிறேன்…/

பல்லி,
இதைச் சொன்னது நானல்ல சோபாசக்தி! யமுனாவின் வாதத்தில் ’மறுவளம்’ தேடும் சோபா தனது 100%, 110% எதிர்ப்பினை விளக்கினால் நலம்!
17. ஷோபாசக்தி on March 6, 2010 1:01 am

தோழர் பாலன்! எந்த ஆதாரத்தை நீங்கள் நம்புவீர்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்பதுதான் பிரச்சினை. எடுத்துக்காட்டாக நீங்கள் இணையத்தில் சொடுக்கினால் ஹெலன் டெமூத் கார்ல் மார்க்ஸின் காதலி என ஒருதொகைக் கட்டுரைகளும் அதுகுறித்த புத்தகங்கள் நாடகம் சினிமா குறித்த விபரங்களும் கிடைக்கும். ( அதே போல அவர் காதலி என்பதை மறுத்த ஆயிரக்கணக்கான கட்டுரைகளும் இணையத்தில் கிடைக்கின்றன).

ஹெலன் டெமூத்தின் குழந்தைக்கு தந்தை இல்லாதது மார்க்ஸ் இறந்தவுடன் ஹெலன் டெமூத் ஏங்கெல்ஸிடம் அடைக்கலம் புகுந்தது ஹெலன் இறந்தபோது ஜென்னி ஏற்கனவே கோரியிருந்தவாறு மார்க்ஸின் குடும்பக் கல்லறையில் அவர் புதைக்கப்பட்டது 1898ல் தற்கொலை செய்துகொண்ட மார்க்ஸின் மகள் எலியனோருக்கும் ஹெலனின் மகன் ஃபிரடரிக் டெமூத்துக்கும் நடந்த நீண்ட கடித உரையாடல்கள் என எல்லாவற்றையும் ஆய்வு செய்து எழுதப்பட்ட கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கின்றன.ஒரு சொடுக்கில் ஆதாரம் எனச் சுட்டிகளை வரிசையாகக் கொடுக்க முடியும். ஆனால் நீங்கள் நம்ப வேண்டுமே! முதலாளித்துவ எழுத்தாளர்களின் சதி என நீங்கள் புறக்கணித்துவிட்டுப் போகவும் வாய்ப்புள்ளதல்வா!

அதனால்தான் உங்களையே தேடிப் பார்த்துப் படிக்கச் சொன்னேன். தவிரவும் யமுனாவும் அதுகுறித்து எழுதியிருந்ததால் அவரிடம் மேலதிக தகவல்கள் கிடைக்கலாம் எனச் சொல்லியிருந்தேன்.

நீங்கள் “சங்கடப்படுத்துவதாக நினைக்க வேண்டாம்” என எழுதியிருந்தார்கள். இந்த ஆதாரம்/ ஆதாரமின்மை குறித்து உங்களோடு உரையாடுவதில் சங்கடம் ஏதுமில்லை. ஆனால் நமது பேராசான் கார்ல் மார்க்ஸ் மீது நான் வீம்புக்கு பழி சுமத்துகிறேன் என்ற தொனியில் நீங்கள் என்னை அணுகுவது உண்மையிலேயே மிகுந்த சங்கடமாயுள்ளது.

மிக்க அன்புடன்
ஷோபா
18. ஷோபாசக்தி on March 6, 2010 1:39 am

msri
//சோபாசக்திபற்றி தமிழிச்சியிடம் கேட்டால் கதைகதையாக சொல்வார்! // அப்படியா! அந்தக் கதைகளினால் என் மீது உங்களிற்கு ஏதாவது விமரிசனம் உண்டா? இருந்தால் சொல்லுங்கள் என் விளக்கத்தைச் சொல்கிறேன். நம்மிடம் ஒளிவு மறைவெல்லாம் கிடையாது.

//படுக்கை அறைக்குள் நடப்பது என்ன என்பதையே கவிதையாக்கியுள்ளார் ?// மைக்கல் ஏஞ்சலோவின் நிர்வாண ஓவியத்தை நீண்ட நேரமாகப் பார்த்துக்கொண்டிருந்த ஒருவன் ‘இவ்வளத்தைக் கீறத் தெரிஞ்சவனுக்கு ஒரு ஜட்டி கீறத் தெரியலயே’ என்று கவலையுற்றானாம்.

ஏன் தோழரே படுக்கை அறைக்குள் நடப்பது என்ன என்பதை எழுதினால் தவறா? காமத்துப் பாலையும் ஆண்டாள் பாசுரங்களையும் எத்தனையோ நுhற்றாண்டுகளிற்கு முன்பே தந்த செம்மொழியல்லவா நம்மொழி! கவிதையைப் படிச்சால் அனுபவிக்க வேணும்.. சும்மா சின்னப் பிள்ளையள் மாதிரி வெட்கப்படக்கூடாது.
19. tamizachi on March 6, 2010 8:49 am

///ஏற்கனவே இந்த இராமேஸ்வரம் பிரச்சனை குறித்து இனியொரு தேசம் வினவு தமிழக அரசியல் நம் தேசம் போன்ற இணையத்தளங்களும் வேறு சில சப்புச் சவர் இணையத்தளங்களும் ஏராளமாகவே எழுதியிருந்தன. மறுபிரசுரங்களும் நிகழ்ந்தன.///

இக்கட்டுரையில் எம்மைப்பற்றிய மறைமுகத் தாக்குதல் உள்ளதால் நேரடியாக விளக்கம் அளிக்க தீர்மானித்திருக்கிறேன். நேசம் நெற்றுக்கு பின்னுட்டம் செய்யக்கூடாதென்று நினைத்திருந்தேன். இம்முறை பின்னுட்டங்கள் மட்டுறுத்தப்படாமல் நேர்மையான முறையில் விமர்சனத்தை முன்வைக்கும் என்று நம்புறுகிறேன்.

இக்கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ள சப்புச் சவர் இணையத்தளங்களுள் எம்முடைய இணையதளமும் ஒன்று என்பதாலும் மறுபிரசுரங்கள் செய்யப்பட்ட கட்டுரைகளில் எமது கட்டுரையும் ஒன்று என்பதாலும் நேரடியாக விவாதிப்பது நல்லதென்பதால் விவாதத்திற்கு வந்திருக்கிறோம். எம்தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் :

ஆண்குறி அரசியல் வெறிக்குள் பெண்குறி!
tamizachi.com/index.php?page=date&date=2010-01-14

பெண்ணிய இலக்கியம் ஆபத்தான அபத்தங்களை நோக்கி…
tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1722

வாசகர் கடிதங்களில் ஒரு வாசகர் லீனா கவிதை குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்ததை தோழர் இரயாகரன் தளத்தில் பிரசுரித்திருந்தார். வினவு பின்னுட்டத்தில் குறிப்பிட்டது.
tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1824

“நிரம்பவும் கபடமாகத்தான் பேசுகிறார் தமிழ்நதி” என்று புள்ளைப்பூச்சியைப் பார்த்து கேள்வி கேட்க தெரிந்த கட்டுரையாளருக்கு “தமிழச்சி நிரம்பவும் ரெளடித்தனமாகத்தான் அடிக்கிறார்” என்று ஏன் பேசத் தெரியவில்லை.

ஜாக்கிரதை…

மீண்டும் தொடங்கினால் இழுத்து வச்சி அறுத்துவேன்…
20. tholar balan on March 6, 2010 9:50 am

Shobashakthi, I have read the link you attached. Nowhere in the article does it mention that there is concrete proof that there was a liason between Marx and the house servant. Even the conclusion reiterates this point.

I’m not sure if you have read this article yourself or if you mentioned it to me, believing it to be about one thing. Yet, the points covered in the article seems to reaffirm my statements. So, I’m hoping that you will be reading this article once again and be changing your opinion accordingly.

Alternatively, if you wish to continue to stand firm by your intial comments/opinions then I ask that you bring forth the relevant proof. But please read the resources before putting them forward.
21. DEMOCRACY on March 6, 2010 9:57 am

/அவர் சொல்வது பொய்யென எனக்குத் தெரியும். கமெரா யூனிட் குறித்த அனைத்துத் தொடர்பு இலக்கங்களும் அவரிடமிருக்கும். அவரின் கையில் கைத்தொலைபேசி இருந்தது. எப்படியாவது ஃ புட்டேஜைக் காப்பாற்ற வேண்டுமென்ற பதற்றத்திலிருந்த நான் சடுதியாகத் தீபக்கின் முகத்தில் தாக்கிவிட்டு அவரின் கைத்தொலைபேசியைப் பிடுங்கிவிட்டேன். அதற்குப் பின்பு ஓடிப்போனவர்களோடு பேசி காலையில் ஃபுட்டேஜ் சென்னையில் திரும்பப் பெறப்பட்டது./– ஷோபா!
“இலாபகரமாகத்தான் முகத்தில் பஞ்ச் வைத்திருக்கிறீர்கள்”!. ஊதியமே பெறாமல் கதைவசனம் எழுதிய டாக்டர் கலைஞரான உங்களுக்கு இருக்கும் அக்கறை, படத்திற்கு முதலீடு செய்தவர்களுக்கு ஏன் இல்லை. நீங்கள் இவ்வளவு தியாகம் செய்யும் அளவுக்கு படத்தின் விஷயங்கள் மக்களுக்கு? பயன்படுமா?, பார்க்கத்தான் வேண்டும்?.

இலங்கையின் மொத்த ஜனத்தொகை, இரண்டுகோடி என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டின் ஜனத்தொகை நாலுகோடி. ஐம்பது இலட்சம்கூட இல்லாத இலங்கைத்தமிழர் பிரச்சனையுடன் நீங்கள், நூறு கோடி இந்திய பிரச்சனையில் நுழைக்கிறீர்கள்!. இதற்கு, சென்னை மாநிலக்கல்லூரி அ.மார்க்ஸை துணைக்கழைக்கிறீர்கள்!. மார்க்ஸ், ஸ்டாலின் என்று பெயர் வைத்துக் கொள்பவர்களெல்லாம் “நகல் போலிகள்”. மாநிலக்கல்லூரியில்தான் தமிழக துணைமுதல்வர் ஸ்டாலினும் கல்வி பயின்றார். தற்போது தி.மு.க.வின் “தலித்திய தளபதிகளின்” கோட்டையாக (இடஒதுக்கீட்டின் துணையுடன்)இருக்கிறது?. நான் கூறும் இந்த “ஜோக்” உங்களுக்குப் புரியாது, காலம் பதில் சொல்லும்!.

/நான் தீபக்கைத் தாக்கியதை ஒப்புக்கொண்டேன். எனக்குத் தண்டப் பணமாக ரூபா 1700 விதிக்கப்பட்டது. இனியொரு இணையத்தளம் எழுதியது போல மேலிடத்து சிபாரிசுகளின் அடிப்படையில் நான் காப்பாற்றப்படவில்லை. எல்லாம் ‘சட்டப்படி’ தான் நடந்து முடிந்தன./–இதிலிருந்து நீங்கள் ஒரு “குழந்தைப்” போராளி என்று தெரிகிறது!. இதை விட மூர்க்கமாக இந்தியாவிற்குள் நாங்கள் போராடி அலுத்துவிட்டோம்!. கோடம்பாக்கத்தில் விழுந்து புரண்டவன் நான். இதில் இலங்கையரின் பங்களிப்புப் பற்றி, “எல்லீஸ் ஆர் டங்கன்” - கலைஞர் கருணாநிதி காலத்தில் பெரும் பங்கு ஆற்றிய இலங்கையில் வாழ்ந்த வாழ்ந்துக் கொண்டிருக்கிற? ஏ.கே.சாமி? அவர்களை கேளுங்கள் பார்ப்போம்!. யமுனா ராஜேந்திரனைவிட உங்களுக்கு சினிமாத்துறைப் பற்றி அனுபவம் இருக்கும் என்று தோன்றவில்லை!.

வே.பிரபாகரன் அவர்கள் (உடனே புலி, கிலி என்று மொழுமொழுவென்று பிடித்துக்கொள்ள வேண்டாம், வரலாற்றில் சில சொற்களை சரியாக பதிய வேண்டுமென்ற இந்திய “பிரஸ்பெக்டிவ்” இது), கோடம்பாக்கத்தின் மூலம் சாதிக்கமுடியும் என்று நம்பியிருந்தால், இயக்கம் துவங்கியிருக்க மாட்டார்!, எம்.ஜி.ஆரிடம் சிபாரிசு கடிதம் பெற்று, “வேஷம் கேட்டு வாங்கியிருப்பார்”!.

/ஆனால் நீங்கள் எப்படி யமுனா? ஈழத்தில் யுத்தத்தால் கொல்லப்பட்ட மக்களின் பெயராலும் அகதிகளாக உலகெங்கும் அலையும் ஈழத்து ஏதிலிகளின் பெயராலும் உங்கள் இருப்பைக் காப்பாற்றியவரல்லாவா நீங்கள். ஈழத்தையே இன்றுவரை நீங்கள் கண்ணால் கண்டிராதபோதும் ஈழத்திலிருந்து துன்பமும் துயரமும் அடைந்தேன் என்று பொய்யுரைத்து அந்த யுத்தத்தையும் இரத்தத்தையும் கண்ணீரையும் சாட்சிகளாக்கி நோகாமல் ‘ஈழத்து அகதி’ என்று கள்ள ‘சேர்ட்டிபிகட்’ முடித்து இலண்டனில் அரசியல் தஞ்சம் பெற்றவரல்லவா நீங்கள்! நீங்களா எங்களைப் பார்த்து போலிகள் என்றும் இருப்புக்காக அலைபவர்களென்றும் தூற்றுவது? நீங்களா எங்களைப் பார்த்து புலி எதிர்ப்பு அரசியலால் பிழைப்பவர்கள் என்று எழுதுவது? உங்களிற்கு கடுகளவேனும் மனச்சாட்சியிருந்தால் இதற்குப் பதில் சொல்லுங்கள்./–
1985 - 1987 வரை இலங்கைத்தமிழர் தொடர்பிருந்த பலர், இந்த நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டது உண்மை!. இதில் வியாபார தொடர்பிருந்த “முஸ்லீம்களும்” அடங்கும். பின்னாளில் எல்லாம் வியாபாரமாகிவிட்டது என்பது வேறு விஷயம்!. இலங்கைத் தமிழரது ஆழ்மனதின் “இருட்டுப் பகுதியிலிருந்து” வந்த இந்த வரிகளை புரிந்து கொள்ளக்கூடிய நிலையிலிருக்கும் “விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் இருக்கும்” மனிதர்களுக்கு தற்போது நாற்பது வயதிலிருந்து ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். 1987 ல் (இந்திய இராணுவம் நுழைந்தபிறகு) உள்ள இந்திய, தமிழக இளைஞர்களுக்கு,இவைகள் பற்றி ஒன்றுமே தெரியாது!. தகவல் தொழில் நுட்பம், மற்றும் ஆராய்ச்சி மாணவர்களாக தற்போது பெருமளவில் வெளிநாடுகளில் குவிந்திருக்கும் இந்திய இளைஞர்களின் “இலங்கைத் தமிழர்களின்” மீதான புரிதல் என்பது, எழுதுவதற்கு உகந்ததாக இல்லை!. இதற்கு காரணம் இலங்கைத் தமிழர் “அரசியல் பிரச்சனையில்” “லாஜிக் கெட்டுப் போய்” தனிநபர்களின் வியாபரத்தனமாக மாறிய பிறகு, உண்மையிலேயே,”/ பண்ணைகளிலும் அதற்கு வெளியிலும் என்னோடு வாழ்ந்த போராளிகள் ஒடுக்கு முறைக்கு எதிராக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். இன்று மறுபடி பின்னோக்கிப் பார்க்கும் போது ஆயிரம் தவறுகள், குறைபாடுகளைக் கண்டுகொள்ள இயலுமாயுள்ளது. எது எவ்வாறாயினும் சுயநலமின்றி தான் சார்ந்த சமூகத்தின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதற்காக தமது இளமைக் காலத்தை அர்ப்பணித்தவர்கள். தமது வீடுகளின் கொல்லைப்புறத்தால் பேரினவாதப் பிசாசு மிரட்டிய போது தெருவிற்கு வந்து நெஞ்சு நிமிர்த்தி குரல் கொடுத்தவர்கள்.
அவர்கள் வரித்துக்கொண்ட வழியுமி புரிந்து கொண்ட சமூகமும் தவறானதாக இருக்கலாம். ஆனாலும் தேவைப்பட்ட போராட்டம் ஒன்றின் முன்னோடிகள். சாதி ஒடுக்குமுறை, சமூக ஒடுக்குமுறை, பிரதேசவாதம் போன்ற எதுவுமே இவர்களைக் கட்டுப்படுத்தியதில்லை./- இது உண்மை!

அதாவது அரசியல் தளம் இல்லை. கொல்லைப் புரத்திற்கு, வீட்டுக்குள் வெள்ளம் புகுந்த பிறகுதான் கண்விழித்தார்கள்!, புறச்சூழலின் அழுத்தத்தால். இந்த “புறச்சூழல்” புலம்பெயர்ந்த நாடுகளில் விலகிவிடவே மீண்டும் “முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டார்கள்”!. இதில் இரண்டு இருக்கிறது “இனப்பிரச்சனை? அடுத்து சமுதாயப்பிரச்சனை”. இனப்பிரச்சனைக்கான “புறச்சூழல்” விலகும் போது, ”சமுதாயப்பிரச்சனை” மீண்டும் ஆக்கிரமித்துக் கொள்கிறது, என்பதும் உண்மை!. “இந்த வரிகளை யாரும் நினைவுப் படுத்த முயலும் போது “முரண்பாடுகள்” ஏற்ப்படுகின்றன!.
22. மாயா on March 6, 2010 11:20 am

சோபா சக்தி , தாக்கியதை ஒப்புக் கொண்டதாகவும் , அதற்கு தண்டப் பணம் கட்டப்பட்டதாகவும் எழுதியுள்ளீர்கள். அதில் லீனா இயக்குனர் என்று வேறு குறிப்பிடுகிறீர்கள். சினிமா பின்னணியில் உள்ளவர்கள் , ஒரு தொழிலாளியையோ அல்லது கலைஞரையோ என்ன பிரச்சனை வரினும் தாக்க முடியாது. இதற்கென புகார் செய்வதற்கு சினிமா சங்கங்கள் அல்லது யூனியன்கள் இருக்கின்றன. அவற்றில புகார் செய்ய வேண்டும். ஒரு கலைஞன் புகார் செய்தால் , அந்தப் படம் வெளிவராமல் தடுக்கும் உரிமை , அடிப்படையாக வேலை செய்யும் துணை நடிகனுக்கோ அல்லது லைட் போய்ககோ கூட இருக்கிறது. அப்படி முன்னர் நடந்துள்ளது. ஆனானப்பட்ட MGR போன்ற நடிகர்கள் கூட ஒரு அடிமட்ட வேலையாளைக் கூட சினிமாவுக்காக , அந்த பின்னணியில் தாக்கியதில்லை. MGR , ஒரு வேலையாள் உண்ணாமல், தனியாக சாப்பிடாத உயர் பண்பைக் கொண்டவர்.

அந்தவகையில் , உங்கள் எழுத்துகளால், தவறுகளை நியாயப்படுத்த எழுதுகிறீர்கள். தவறான முன்னுதாரனமாக இவை எவருக்கும் ஆகக் கூடாது.
23. ஷோபாசக்தி on March 6, 2010 12:48 pm

மாயா நீங்கள் சொல்வதை முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன். நடந்த சம்பவத்தை ஆளாளுக்கு விருப்பப்படி திரித்தும் உருப்பெருக்கியும் கொலை முயற்சி/ ஊதியம் வழங்க மறுத்தது என்றெல்லாம் எழுதியதாலேயே நான் உண்மையில் என்ன நடந்தது என்பதைச் சொல்லியிருக்கிறேனே தவிர தீபக்கைத் தாக்கியதை நான் நியாயப்படுத்த முயற்சிக்கவில்லை. நன்றி.
24. ஷோபாசக்தி on March 6, 2010 12:59 pm

//மீண்டும் தொடங்கினால் இழுத்து வச்சி அறுத்துருவேன்//

பரவாயில்லீங்க..மறுபடியும் நான் ஒட்ட வைச்சுக்குவேன்..
25. msri on March 6, 2010 1:00 pm

கவிதையைப் படித்தால் அனுபவிக்கவேணும்> சும்மா சின்னப்பிள்ளைகள் ஆட்டம் என்கின்றார் சோபா! சோபாசக்தி! பாலியல் மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று! இதை மனிதகுலம் நாளாந்தம் அனுபவிததுக் கொண்டுதான் இருக்கின்றார்கள்! இந்த அனுபவிப்பிற்கு உங்களின் இந்த “முற்போக்குக் கவிதைகள்” தேவையில்லை! அதற்கு பல மஞசல் மசாலைகள் உண்டு! தாங்களும் தங்களைப் போன்ற “தலித்திய செயற்பாட்டாளர்களின்” பிரதான வேலை, ஏகப்பட்ட அடக்கியொடுக்கப்பட்ட தலித் மக்களும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினைகளும் உதுவல்ல! தோழரே படுக்கை அறை பரிவர்த்தனங்களை> அனுபவிப்புக்களை> உச்சகட்டங்களை அந்தந்த நேரகாலங்களில் பகுதியாகச் செய்யுங்கள்! இதைத்தான் உலகின் சகல ஜீவராசிகளும் செய்கின்றன! தாங்கள் ஓர் “தலித்திய செயற்பாட்டாளராக” உலாவருகின்றீர்கள் தங்களின் பிரதான வேலை எதுவோ? இதுதானா?
26. Gopalan on March 6, 2010 1:05 pm

1. தனிமனித முரண்பாடுகளே மாபெரும் தத்துவ விவாதமாக இருக்கும் நிலையை காட்டுகின்றது. இவ்வாறான விமர்சன விவாதங்களுக்கும் வர்க்கப் போராட்டத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? (யமுனா - சோபா அன் கோ)
2. தனிமனித பலவீனத்தை மறைப்பதற்கு தோழர் - தலைவர்- ஆசான் என போற்றப்படும் மார்க்ஸ் இங்கு வலிந்திலுக்கப்பட்டுள்ளார். இவ்வாறு முன்னர் இலக்கியச் சந்திப்பு கழியாட்டக்காரர்கள் மார்க்சின் வாழ்வை சாட்சியாகக் காட்டியுள்ளார்கள். மார்க்ஸ் தூற்றுபவர்கள் மார்க்சீய விரோதிகளே அன்றி வேறுயாருமல்ல. அவருடைய வாழ்வின் ஏன் ஜென்னியின் வாழ்வின் பல சோக அத்தியாயங்கள் எவ்வாறு இருந்தது என்பதை கூலிக்கு மாரடித்த மார்க்ஸ்காலத்து உளவாளியின் பகுப்பாய்வு தன்மை கூட மார்க்சை ஏற்றுக் கொள்பவர்களிடம் இல்லையென்பதை அறியலாம். (தோழர் பாலனுடன் உடன்பாடு உண்டு)
3. ஏகாதிபத்திய சமூகத்தில் வாழ்ந்து கொண்டு இங்குள்ள வாழ்க்கை முறையின் அளவீட்டின் அடிப்படையில் தெருவில் படுத்துறங்கும் மக்கள்ளைப் பற்றி மதிப்பீடு செய்வதான எண்ணும் சிந்தனையை இங்கு பார்க்கலாம். நீங்கள் வாழும் தேசத்தின் வாழ்வியல் சிந்தனை வேறு அங்கு வாழும் மக்களின் பொருளாதார வளம் வேறு; வாழ்க்கை முறை வேறு; மேற்குலக கண்ணாடி போட்டுக் கொண்டு அல்லது வளர்முகநாடுகளின் மேட்டுக்குடி கண்ணாடியைப் போட்டுக் கொண்டு கட்டுடைப்புச் செய்வது பெரும்பான்மை மக்களின் வாழ்நிலையை பிரதிபலிப்பதாக இருப்பதில்லை என்பதை மறுக்கின்றது போக்கு.
4. செக்ஸ்; உடறுறவு -வாதம் (உடலரசியல்) என்பதே முதன்மைக் உலகக் கண்ணோட்டமாக இருக்கின்ற அணுகுமுறை வர்க்கச் சிந்தனையை மழுங்கடிக்கின்றது. இது தனியே வெறும் யோனி – ஆண்;குறி (குண்டலினி- லிங்கம்) இவற்றிற்கிடையோன பிரச்சனையே முதன்மையானது என்று சுட்டி நிற்கின்றது.
5.கோணேஸ்வரி பற்றி தமிழச்சி எழுதியுள்ளதை வாசகர்கள் வாசிப்பது தகும்.
27. BC on March 6, 2010 2:10 pm

இந்த வினவு புலி ஆதரவாளர்களை தன்பக்கம் எடுப்கதற்காக எதுவும் எழுதும். இலங்கை பிரச்சனை பற்றி தீவிர புலி ஆதரவாளரை கனடா வாழ் வசதியான அகதியை கொண்டு கட்டுரை எழுதுவிக்கிறது.
கால்மாக்ஸ் தன் வேலைக்காரியுடன் தகாத உறவு வைத்து பிள்ளை பெற்றுக்கொண்டார் என்பது எனக்கு இதுவரை தெரியாது. கால்மாக்ஸ் பற்றிய இந்த விடயங்கள் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். பலருக்கு தெரியாது என்று நினைக்கிறேன். மாக்ஸ்சியமோ அல்லது மதமோ புனிதப்படுத்தி தமிழர் தலையில்கட்ட வேண்டாம்.
28. ஷோபாசக்தி on March 6, 2010 2:38 pm

msri
//கவிதையைப் படித்தால் அனுபவிக்கவேணும்//

இந்தக் கவிதை அனுபவம் - கவித்துவ அனுபவம் என்றெல்லாம் சொல்கிறார்களே அதைத்தான் நான் சொன்னேன். நீங்கள் அனுபவிப்பது என்றவுடன் அதை கலவி என்று பொருட்படுத்திக் கொண்டு விட்டீர்கள். மாத்தி யோசிங்க msri!
29. ஷோபாசக்தி on March 6, 2010 2:51 pm

தோழர் கோபாலன்! வர்க்கப் போராட்டமே முதன்மையானது மற்றையவை அனைத்தும் (பெண்கள் விடுதலை - சாதிய விடுதலை- இனவிடுதலை.. ) அதற்குக் கீழானவை என்ற மரபு மார்க்ஸியத்தை நான் ஏற்றுக் கொள்வதற்கில்லை. எல்லா விடுதலை கோரிய போராட்டங்களும் ஒன்றையொன்று ஊடும் பாவுமாகப் பாதிப்பவை ஒன்றுக்கொன்று துணைநிற்பவை என்ற எளிய உண்மையை நான் கண்டடைந்து நீண்ட நாட்களாகிவிட்டன. எனினும் தங்கள் கருத்துகளிற்கு நன்றி.
30. DEMOCRACY on March 6, 2010 3:36 pm

/மீண்டும் தொடங்கினால் இழுத்து வச்சி அறுத்துருவேன்/
பரவாயில்லீங்க..மறுபடியும் நான் ஒட்ட வைச்சுக்குவேன்..
/– ஷோபா!.
இவருடைய அதிகபட்ச இலட்சியம், தோலை ஒட்டவைக்க கூடிய “பசையை” கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக்குள் அடங்கிவிட்டதாக நினைக்கிறேன்!.
நடிகை “ரஞ்சிதா” மேட்டரை அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இவைகளெல்லாம் 1950 களிலேயே கோடம்பாக்கத்தில் முடிந்துவிட்ட விஷயங்கள். வேண்டுமென்றால், “தென்னாப்பிரிக்க” “குட்டி பத்மினியிடம்” கேட்டு தெரிந்துக் கொள்ளவும்!. நீங்கள் போராட்டத்தில் மட்டும் 30 வருடங்கள் பின்தங்கி போகவில்லை, சிந்தனையிலும்தான்!. உங்களின் “ஒரு கோப்பையில் தண்ணீர் கோட்பாடு”, “காமசூத்திரத்தில், பின்னுக்குவிடும்” “பின்நவீனத்தைப் பார்த்து” 1990 களில் துவங்கிய மேற்குலகமே அதிர்ந்துவிட்டது. “While pornography specifically oriented toward alternative culture did not arise until the 1990s” “Depictions of a sexual nature are as old as civilization (and possibly older, in the form of venus figurines and rock art), but the concept of pornography as understood today did not exist until the Victorian era.” “Revenues of the adult industry in the United States have been difficult to determine. In 1970, a Federal study estimated that the total retail value of all the hard-core porn in the United States was no more than $10 million.

In 1998, Forrester Research published a report on the online “adult content” industry estimating $750 million to $1 billion in annual revenue. As an unsourced aside, the Forrester study speculated on an industry-wide aggregate figure of $8–10 billion, which was repeated out of context in many news stories,[6] after being published in Eric Schlosser’s book on the American underground economy. Studies in 2001 put the total (including video, pay-per-view, Internet and magazines) between $2.6 billion and $3.9 billion.

A significant amount of pornographic video is shot in the San Fernando Valley, which has been a pioneering region for producing adult films since the 1970s, and has since become home for various models, actors/actresses, production companies, and other assorted businesses involved in the production and distribution of pornography.
The porn industry has been considered influential in deciding format wars in media, including being a factor in the VHS vs. Betamax format war (the videotape format war) and in the Blu-ray vs. HD DVD format war (the high-def format war).”"டைனஸார்கள்” அழிந்தததை ஆராய்ச்சி செய்பவர்கள்கூட, எல்லவற்றிற்கும் ஒரு “தென்னிந்திய”(டெக்கான்) சங்கிலி பிணைப்பு இருப்பதாக கூறுகிறார்கள்!. “அன்பில்லாத முத்தம்” பற்றி டாக்டர் ராதாகிருஷ்ணன் காலத்திலேயே(1950 கள்) ஐரோப்பாவில் ஆராய்ந்துவிட்டனர். வாழ்வில் திருப்தியுடன் சாகும் மனிதனை அடையாளம் காட்ட முடியுமா?. அதற்குதானே “பாரடைஸ்” என்ற கானல்நீர் உள்ளது!. பசியும், குறையும் உடையவன்தானே “முதல் பாவம் செய்த” மனிதன்!. பசிக்கும் சகமனிதனுக்கு, தன் உணவில் பகிர்ந்தளிப்பவன் எத்துணைப் பேர்(உடனே “பிரட் ஃபார் ஹங்கர்” என்ற என்.ஜி.ஓ.வைக் காட்ட வேண்டாம்!). தனிமனித ஆசை அபிலாஷைகளைப் பற்றி நீங்கள் கூறுவது சரி!. மனித உயிர் ஒவ்வொன்றிற்கும் “ஒரு பெயர்” உள்ளது, “கடவுள்” என்றால், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருப்பவன் என்பது “இந்துத்துவம்?”. எல்லோருடைய ஆசைகளும் (மாயை)நிறைவேற்ற சரிப்பட்டு வருமா?. “முடிவில்லாத கதை(அன் என்டிங் ஸ்டோரி)” என்ற திரைப்படத்தைப் பாருங்கள் புரியும்!. “தனிமனிதனுக்கு உணவில்லை என்றால், ஜெகத்தினை அழித்திடுவோம்” என்றுதான் மகாக்கவி பாரதி சொன்னார்,” “தனிமனிதனுக்கு ரஞ்சிதா இல்லையென்றால்” என்று கூறவில்லை!.

No comments:

Post a Comment