தமிழ்நாட்டில் இருந்துகொண்டு ஐயர் புலித் தலைவரோடு தனக்குப்பட்ட அனுபவத்தை எழுதுகிறார்.உந்த மனுசன் பேசுறது பச்சையான உண்மை.உதில எவருக்கும் சந்தேகம் இல்லை.ஐயர் ஐயா எங்கட அரசியலுக்கு முன்னோடி.உவர் இண்டைக்கு உயிரோட இருக்கிறது உண்மைக்கு ஓரளவு நன்மை.ஐயர் புலிப்போராட்டத்தில தலைவர் பிரபாவோடு மத்திய குழுவுக்க இருந்தவர்.உண்மை பேசுகிறார்.நடந்ததை அப்பிடியே சொல்லுற நேர்மை ஐயருக்கு உண்டு.அதிலதான் றயாகுறுக்க நிண்டு கட்டுரை போடுகிறார்.தமிழரங்கம் வாசிக்கேக்க றயாவின்ர அவசரம் தனிநபர் தாக்குதலுக்குள்ள வரப்போகுது.நக்கிறது,நக்கிறதெண்டு வேற எழுதி வாசிக்கிறதையே அலுப்புத்தட்டிற வேலை ஆக்கிப்போடுறார் றயா.
றயாகரண் ஐயர் எழுதிற வரலாற்றச் செய்திகளைப்பற்றித் தனது ஆவேசத்தை வெளிக்காட்றார். இங்க போய் பாருங்க.இன்டைக்கு எங்கட பிரச்சனை ஒருவரை அவரின்ட அறிவோடும் பாமரத்தனத்துடனும் பேசவிடுதலை மறுப்பது.எவரையும் அவரின்ற அனுபவத்தோடும்,அவருக்கு உள்ள உலகப் புரிதலோட பேசவிடவேண்டும்.
ஐயர், தான்கொண்ட அனுபவத்தோடு பேசவதற்குக் குறுக்கே எவரும் நிற்க முடியாது.உது என்ன எழுத்தெண்டாலும் உதிலிருந்து ஆய்வுகள் பின்னால் எழும். ஐயரிடம் இண்டைக்கு எதையும் கோருவது அவரின்ர அனுபவவெளிக்குள்ளே எங்கட அனுபவங்களைப் புகுப்பதில முடியும்.
ஐயர் தனது இயல்போடு எழுதவேண்டும்.உதுக்கு றயாகரன் "இல்லை உப்படிததான் எழுது"என்று மூஞ்சியைப் பொத்தி அடிப்பது தேவையா?மறுபரிசீலனை செய்யக்கூட முடியாத எழுத்துக்களுக்குள் றயாகரன் சஞ்சரிக்கிறாரோ தெரியவில்லை.எத்தனையோமுறை உவருடைய எழுத்து நடையை-மொழியைப் பற்றி விவாதித்து முடிச்சிட்டம்.உவர் உதுபற்றிக் கணக்கு எடுக்கமுடியாதவரா இருக்கிறார்.தனக்குப் புரிந்ததை ஒருவர் எழுதுவதற்கு றயாவின் அவசரம் குறுக்க நிக்குது.
அப்பாவிப் போராளிகள் வரலாற்றாளர் நிலையிலிருந்து எழுதுவது அவசியமா?அப்ப உது ஐயரின்ட உள்ளத்தையும், கடந்தகாலத் தகவல்களையும் அதன் அறிவுக்குட்பட நிலையிலிருந்து சொல்பவர்கள் மூலமாகவும் நிகழவேண்டும் அல்லவா?ஐயர் என்ன அரசியல்,வரலாற்று ஆசிரியனா?
ஐயரை அவருடைய புரிதலோடு எழுத அனுமதிப்பது அவசியம்.உதிலுள்ள உண்மைகளை இனங்காண ஆய்வுகள் பின்னாகச் செய்யவேண்டியது.ஐயரிடம் அவருக்கு அனுபவப்படாத புலப்படாத "இன்றைய-அன்றைய" அரசியலைப் பேசச் சொல்வது அவசியமா?அவர் தனது அனுபவவெளியிலிருந்து சுதந்திரமாக நமது அரசியல் வாழ்வைச் சொல்வது பல உண்மைகளை வரலாற்றில் தொகுப்பதற்கு அவசியம்.
தமிழீழ சமுதாயத்தின்ர அரசியலை அன்று உள்வாங்கிக்கொள்ளா அரசியலை இன்றைய புரிதலோடு சொல்வது அவசியமில்லை.உப்படிப் புரிஞ்சுதான் பேசவேண்டும் என்றால் அங்கே ஐயரின் அனுபவத்தை மறுப்பதாகும்.தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அவருக்குள்ள அனுபவங்களை அவராகவே எழுதப்படவேண்டும்.அரை ஒரு ஊடகமாக்கிக்கொண்டு "உதைத்தான்-உப்பிடித்தான் செய்" எண்டிறது வரலாற்றில நிகழ்ந்ததுக்கு தாங்கள் தாங்கள் அனுபவித்ததை ஐயரைக் கொண்டு எழுதிறதாக இருக்கும்.உந்த ஆபத்தைச் சுட்டிக் காட்டுகிறேன்.அவரை அவராகவே பேசவிடவேண்டும்.
உதுக்குள்ள றயா வந்த குறுக்க நிற்கவேனுமா?
புதியதோர் உலகம் – PUTHIYATHOR ULAGAM
15 years ago